Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவங்களை எழுதிய   அனைவருக்கும் நன்றிகள்

இப்போது ஜெர்மனியில் ஜான்சன் ஜான்சன் தடுப்பூசி 60 வயதுக்கு உட்பட்டவர்களும்  தங்கள் வைத்தியர்களின் அறிவுறுத்தல் மற்றும் விளக்கங்களுடன்   விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் .

வேறு தேவைக்காக வைத்தியரிடம் தொடர்பு கொண்டபோது...... தடுப்பூசியைப் பற்றிக் கதைக்க..... வேண்டுமென்றால் நாளை வா

ஜான்சன் ஜான்சன் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

ஆம் என்று கூறி விட்டேன் ஒன்றையும் யோசிக்காமல் ...

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்தத் திரியில் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்:

1. வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்படும் சகல தடுப்பூசிகளுக்கும் பக்க விளைவுகள் பலரில் இருக்கும். ஆனால் 48 மணி நேரங்கள் தாண்டியும் கடுமையான பக்க விளைவுகள் இருந்தால் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். என்ன வகையான பக்க விளைவுகள் தொடர்கின்றன என்பதைப் பொறுத்து உங்களை வழி நடத்துவர்.

2. அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய இரு தடுப்பூசிகளிலும் மேலதிகமாக ஒரு பக்க விளைவு (அனேகமாக 50 வயதுக்குட்பட்டோரில், அனேகமாக பெண்களில்) குருதிக் கட்டி உருவாதல்: இது ஒரு மில்லியனில் 4 பேருக்கு வரக் கூடும். இது உருவாகும் காலம் ஊசி போட்ட நாளில் இருந்து 5 முதல் 21 நாட்களாக இருக்கும். எனவே, இந்தக் கால இடைவெளியில் தலை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைத் தொடர்பு கொள்வது உசிதம். ஏனெனில், வந்திருப்பது VITT என்ற தடுப்பூசிப் பக்க விளைவா என்று கண்டறியும் பரிசோதனைகள் இருக்கின்றன. இதை முற்றாகக் குணமாக்கும் மருந்துகளும் இருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மோகன் said:

நேற்று இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்கு. இதுவரை ஒரு தொந்தரவும் இல்லை 🤣

சிரிக்கிற விடயமல்ல  ராசா  இது

ஆட்கொல்லி  நோய்😢

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, மோகன் said:

நேற்று இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்கு. இதுவரை ஒரு தொந்தரவும் இல்லை 🤣

மொடோனா போட்டிருந்தால் தலையை பிக்கிற படம் மறுபடியும் போட வேண்டி வந்திருக்கும் தப்பீட்டீங்க.😄👋

33 minutes ago, விசுகு said:

சிரிக்கிற விடயமல்ல  ராசா  இது

ஆட்கொல்லி  நோய்😢

ஒரு தொந்தரவும் இதுவரை இல்லை என்பதற்காக வே அதனை இணைத்தேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் ஆலோசனையை அரசாங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் நிலைப்பாடு குறித்து தங்களுக்கு தெரிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெல குணவர்தனவிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு சுமார் 60 இலட்சம் டோஸ் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்ட்ரா செனக்கா மற்றும் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளின் கலவையானது குறிப்பிடத்தக்க வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என ஜேர்மனியின் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1222652

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று( 18/6-வெள்ளிக்கிழமை) இரண்டாவது Pfizer ஊசியும் போட்டாயிற்று.. தொந்தரவு என சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை😅 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்று.......பார்க்கலாம்.....!   😁 

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

சற்று முன் இரண்டாவது pfizer ஊசியும் போட்டாயிற்று.......பார்க்கலாம்.....!   😁 

12 மணிநேரத்தின் பின் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

3 minutes ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

இன்று எனது மச்சான் இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது ஊசி போடவுள்ளதாகவும் மாறிப் போடப் போகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அங்கலாய்த்தார்.

இங்கு எவருக்கும் மாறிப் போட்டதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

12 மணிநேரத்தின் பின் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இரண்டாவது ஊசி போட்டாச்சுதோ......எப்படி இருக்கு என்று கேட்க மனிசி போனை என்னிடம் தருகுது.......நான் நாளைக்கு காலமை ஆறுமணிக்கு மேலதான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்ல இப்ப மனிசி போனை என்னட்ட தருகுதில்லை........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

இலங்கையிலும் இந்த ஊசி தட்டுப்பாடு நிலவுகிறது சிலருக்கு  ஒரு தடவை ஏற்றியாச்சு அடுத்த ஊசி எப்பவோ தெரியல 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

எனக்கு தெரிந்த.. 25 வயதுடைய ஒருவர், 
முதலாவதாக AstraZeneca வும்  , இரண்டாவதாக Pfizer´ம் போட்டு,
மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.
இதுவரை... அவருக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
சாதாரணமாகவே  உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று எனது மச்சான் இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது ஊசி போடவுள்ளதாகவும் மாறிப் போடப் போகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அங்கலாய்த்தார்.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக ´பைசர்´ தடுப்பூசியை ஏற்றுவது குறித்து தொடர்ந்தும் ஆய்வு

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதத்திற்குள் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 52 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவற்றுள் 22 இலட்சம் தடுப்பூசிகள் இந்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1223746

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழினி said:

தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

தமிழினி, இதை நானும் அறிந்தேன். இதைப் பற்றிய தகவல்கள் இவை:

மொடெர்னா தடுப்பூசியை இன்னொரு வகைத் தடுப்பூசியோடு கலந்து கொடுத்து அதனால் விளைவுகள் திருப்திகரமாக வருகின்றனவா என்பது பற்றிய ஆய்வுகள் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நடந்து வருகின்றன - ஆனால் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
 
பைசரையும் மொடெர்னாவையும் கலப்பது பற்றி என் அபிப்பிராயம் இது (ஆதாரம் கீழே தந்திருக்கிறேன்):

1. இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே வகையானவை (RNA vaccines). வைரசின் ஒரு முக்கிய புரதத்தின் (S-protein) வெவ்வேறு பகுதிகளைக் குறி வைத்து இவை உருவாக்கப் பட்டவை. ஆனால், இவை எங்கள் உடலினுள் உருவாக்கும் அன்ரிபொடி என்று சொல்லப் படும் பிறபொருளெதிரிகள் பல ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன:

"...Moreover, different individuals immunized with the Moderna (mRNA-1273) or Pfizer–BioNTech (BNT162b2) vaccines produce closely related, and nearly identical, antibodies"

https://www.nature.com/articles/s41586-021-03324-6

இதன் அர்த்தம் என்னவெனில், உங்கள் உடலுக்கு இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே மாதிரித் தெரிகின்றன - எனவே கலக்கும் போது உருவாகும் தொற்றிலிருந்தான பாதுகாப்பு இவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொள்ளும் போது இருப்பதைப் போலவே இருக்கும் வாய்ப்புகளே அதிகம் .

2. சாதாரணமாக எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன என்பது அவதானிப்பு. ஆனால், இரத்தக் கட்டி போன்ற ஆபத்தான பின் விளைவுகள் இல்லாமல், உடல் நோ, காய்ச்சல் , தலையிடி ஆகிய கடந்து செல்லும் பக்க விளைவுகளே இவை. இந்த இரு ஊசிகளையும் கலக்கும் போது, இந்த பக்க விளைவுகளின் தீவிரம் கூடலாம் அல்லது அப்படியே மாறாமல் இருக்கலாம் (ஆனால் குறையாது😎!).

ஆகவே, எடுத்துக் கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

12 மணிநேரத்தின் பின் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இன்று எனது மச்சான் இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது ஊசி போடவுள்ளதாகவும் மாறிப் போடப் போகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் அங்கலாய்த்தார்.

இங்கு எவருக்கும் மாறிப் போட்டதாக தெரியவில்லை.

இந்த AZ-பைசர் கலப்பில் ஒரு பிரச்சினையுமில்லை. ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் இப்படிக் கலந்தே கொடுக்கிறார்கள். ஸ்பெயினில் 600 பேர்களில் செய்த ஆய்வின் படி, இந்த இரு தடுப்பூசிகளையும் கலக்கும் போது சிறந்த நோயெதிர்ப்பு உருவாகியதாகத் தகவல் மே மாதம் வெளி வந்தது.

https://www.nature.com/articles/d41586-021-01359-3

இன்னொரு பிரிட்டன் ஆய்வில், காய்ச்சல் போன்ற சாதாரண பக்க விளைவுகள் அதிகரித்தாலும் ஆபத்தான ஒரு பக்க விளைவும் 800 பேர்களில் காணப்படவில்லை.

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)01115-6/fulltext

 பைசர் ஆபத்தான டெல்ரா வைரசில் இருந்தும் பாதுகாக்கிறது, எனவே பாய்ந்து விழுந்து போய் எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்!

நான் நேற்று முதலாவது பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.ஊசி குத்தியது போல தெரியவில்லை.இன்று காலையில்தான் கையில் சிறிய நோ இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையிலும் இந்த ஊசி தட்டுப்பாடு நிலவுகிறது சிலருக்கு  ஒரு தடவை ஏற்றியாச்சு அடுத்த ஊசி எப்பவோ தெரியல 

செல்வந்த நாடுகளிலேயே தடுப்பூசி தட்டுபாடு நிலவும் போது இலங்கையில் எதிர்பார்க்க கூடியது தானே.
நேற்று 22 எனக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. முதலாவது போன்று இதற்க்கும் கையில் லேசான வலி இருக்கிறது. மருத்துவர் ஒகே சொல்லி போட்டிருந்தால் நான் எந்த ஊசியும் போட்டிருப்பேன், கலந்தும் போட்டிருப்பேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

செல்வந்த நாடுகளிலேயே தடுப்பூசி தட்டுபாடு நிலவும் போது இலங்கையில் எதிர்பார்க்க கூடியது தானே.
நேற்று 22 எனக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது. முதலாவது போன்று இதற்க்கும் கையில் லேசான வலி இருக்கிறது. மருத்துவர் ஒகே சொல்லி போட்டிருந்தால் நான் எந்த ஊசியும் போட்டிருப்பேன், கலந்தும் போட்டிருப்பேன்.

 

இன்னும் வடகிழக்கில் பெரும்பாலனவர்கள் ஊசி போடவில்லை தொற்று அதிகமாகிக்கொண்டு செல்கிறது அதுமட்டுமல்லாமல் வயது போனவர்கள் இறப்பும் தொடர்கிறது அரசும் கொறோனா தொற்றினால் இறப்பு எனவும் அறிவிக்கிறது 

நான் கூட இன்னும் ஊசி போட்டுக்கொள்ளவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது தடுப்பூசியாக மடர்னாவை செலுத்துக்கொண்டார் அங்கலா மேர்க்கெல்

இரண்டாவது, தடுப்பூசியாக... மடர்னாவை செலுத்திக் கொண்டார், அங்கலா மேர்க்கெல்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுகொண்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மடர்னா தடுப்பூசி அவருக்கு இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்பட்டது என ஜேர்மன் அதிபர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் பல இரத்த உறைவு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ஜேர்மனியில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

66 வயதான அங்கலா மேர்க்கெல், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏப்ரல் 16 ஆம் திகதி பெற்றுக்கொண்டார்.

அஸ்ட்ராசெனெகாவை முதல் டோஸாக பயன்படுத்திய ஜேர்மனி உட்பட பல நாடுகள், பைசர்-பயோஎன்டெக் அல்லது மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2021/1224448

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை!

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் செலுத்துகையாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை  வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் அவசர நிலைமைகளின்போது மொடர்னா தடுப்பூசியை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

https://athavannews.com/2021/1225562

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 


அனுபவங்களைப் பகிர்ந்துவரும் அனைவருக்கும் நன்றி. 

நான் இரண்டு ஊசிகளும் முறையே 23.06 மற்றும் 21.07 எனப் போட்டுவிட்டேன். இரண்டும் பின்னேர வேலைநாள். 11:30 போட்டுவிட்டு 14:30க்கு வேலை தொடங்கினேன். சிறிய அளவிலான நோ மட்டும் இருந்தது. மருத்துவர் ஊசிபோடும்போது சொன்னார் இது டெல்டா வைரசிலிருந்தும் பாதுகாப்புத் தருமென்றும், சிலவேளை மூன்றாவதும் போடவேண்டிவருமென்றும் கூறினார். பைஸரின் பையோன்ரெக் போட்டுள்ளேன்.

யூன் 10முதல் இங்கு மருந்தகங்களில் டிஜிரலில் ஊசிபோட்டமைக்கான சான்றாவணத்தை   பெற்றுக்கொள்ளலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. எமக்கு 2ஆவது ஊசிபோட்டபின் எமது மருத்துவர்14நாட்களின்பின்பு மருந்தகங்களில் டிஜிரலில் ஊசிபோட்டமைக்கான சான்றாவணத்தை பெறலாம் என்றார்.

https://www.digitaler-impfnachweis-app.de/யேர்மன் வாழ் தமிழர்களுக்குப் பயன்படலாம் என்று இணைத்துள்ளேன். 

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்தாத 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விட 8.1 மடங்கு அதிகம் என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் மரணமானது, சினோபோர்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களைவிட 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு தடுப்பூசிகளின் முடிவுகளும் டெல்டா மாறுபாட்டிற்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த இறப்புகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1236255

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.