Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

Grüne Partei  ஒரு லீட்டர் பெற்றோலை இரண்டரை ஈரோவுக்கு கொண்டுவரப்போறானாம்....சந்தோசம் தானே 😁

போகவும் வரவும் பெற்றோல் விலையை பாத்துப் பாத்து கொரோனா வாங்கிற திட்டு உங்களுக்கு கேட்கிறேல்ல போல.😊

43 minutes ago, குமாரசாமி said:

Wir Schaffen Das Merkel GIF - Wir Schaffen Das Merkel We Can Do This -  Discover & Share GIFs

ஏன்....மனுசி இருக்கும் மட்டும் உங்களுக்கு என்ன குறை வைச்சது? நாட்டை கட்டுக்குலையாமல் வைச்சிருந்தது தானே 🤣

 

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

37 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு நோஞ்சான் குஞ்சை இறக்கி விட்டுருக்கிறியள்....பாப்பம் என்ன கூத்து நடக்குது எண்டு....😂

Olaf Scholz Spd GIF - Olaf Scholz Scholz Spd - Discover & Share GIFs

 

🌘😊

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, shanthy said:

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

பாவம் மனிசி....:(
கண்டவன் போனவன் வந்தான் வரத்தான் எல்லாரிட்டையும் திட்டு வாங்கி வாங்கி மனிதாபிமானம் என்ன எண்டதை உலகத்துக்கு சொல்லிட்டு   வருத்தத்தோடை  போயிட்டுது

 

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் ஓணாண்டிக்கு போனவெள்ளிக்கிழமை லைற்றா உடம்பு அசதியா இருந்திச்சு.. வலி நிவாரணி எடுத்தன்.. இரவு லைற்றான காய்ச்சல் அடுத்தநாள் சனி புதுவருசம்.. அண்டு பூரா மெல்லிய காய்ச்சலும் உடல் அசெளகரிய பீலிங்கும் லேசான தொண்டை நோவும்.. வலி நிவாரணி சீரான இடைவெளியில் எடுத்துக்கொண்டேன்.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை.. பல்வேறு தானியங்களை   சிவப்பரிசியுடன் மிக்ஸ் பண்ணி வச்சிருக்கன்.. அதைதான் சோறாக்கி சாப்பிடுரனான்) போட்டு ஒரு புடிபுடிச்சன்..உறைப்பில மூக்காலும் வாயாலும் ஒழுகிச்சு.. அதோட போன மெல்லிய காய்ச்சல்தான்.. ஆனா இண்டைக்கு வரை உடம்பு அசதி அப்பப்போ இருக்கு.. சில நேரங்கள்ல சுவாசிக்கேக்க விக்ஸ் ரொபி சாப்பிட்டபின் தொண்டைக்க ஒரு பிரஸ் ஆன கூச்ச பீலிங் இருங்கும்.. அது எப்பாவாச்சும் இருக்கு.. இப்படி இருக்கும் நிலையில் திங்கள் மாலை பிள்ளைக்கு செமகாய்ச்சல்(38.5 வரை போனது). மனைவிக்கு லேசான தடிமனும் உடம்பு அசதியும்.. பிள்ளை கொரோனா தடுப்பூசி எடுக்கவில்லை.. நானும் மனைவியும் 2வது தடுப்பூசி போன ஏழாம் மாசம் எடுத்திருந்தம்.. மனைவியும் பிள்ளையும் சீரான இடைவெளியில் வலிநிவாரணி எடுக்கின்றனர்.. மகனுக்கு நேற்று இரவில் இருந்து காய்ச்சல் விட்டிருக்கு..

இது இப்படி இருக்க எனக்கு சந்தேகம் வந்ததால்நேற்று இரண்டு அண்டிஜென் ரெஸ்ற் எடுத்து பாத்தேன் இரண்டும் கொரோனா பொஸிற்றிவ் என்டு வந்திருக்கு.. இன்று மாலை pcr பரிசோதனை செய்ய உள்ளேன்…

எனக்கோ மனைவிக்கோ சுவை இழப்பும் ஏற்படவில்லை வாசனை உணர்திறனும் போகவில்லை.. எனக்கு ஒண்டரை நாள் காய்ச்சல்தான்.. அதுவும் லேசான காய்ச்சல்.. மனைவிக்கு அதுவும் இல்லை.. வெறும் மிக இலேசான தடிமன் மட்டும்தான்.. காரணம் தடுப்பூசி என்று நினைக்கிறேன்.. 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

நமோடு இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை..

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஓணாண்டி .......!   

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி கவனமாக  இருங்கள்!!

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

கடந்த வாரம் என் நண்பனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரனா (ஒமிக்ரோன் ஆகத்தான் இருக்க வேண்டும்)  வந்து போயுள்ளது. உங்களுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளும் அவர்களுக்கும் இருந்தது. நண்பனது மகளுக்கு ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இரண்டாவது அடுத்த மாசம் போட உள்ளனர். அவர் மகளுக்கும் வந்து ஒரு நாளில் காச்சல் போய் விட்டது.

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக 

 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

11 minutes ago, நிழலி said:


 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

ஜயோ சகோதரங்களே நான் கடைக்கு போனது ஞாயித்துக்கிழமை.. ரெஸ்ட் பண்ணினது நேத்து மாலை அதுவும் வீட்டில் எல்லோரும் நோய்வாய்ப்பட்டபின்புதான்.. அதுவரைக்கும் நான் இது சீசனல் ஃபுழு எண்டுதான் நினைச்சு கொண்டிருந்தன்.. ஏனெனில் நான் எந்த நிமிடமும் வீட்டை தவிர வெளியே மாஸ்க் கழட்டுவதில்லை அதைவிட பப்ளிக் ரான்ஸ்போட் பயன்படுத்துவதில்லை அத்தோடு எனது வேலையும் ஆட்களுடன் பழகுவதில்லை.. அதனால் நான் எதிர்பார்க்கவில்லை.. அதைவிட எனக்கு வந்தது மிகமிக மைல்ட்டான சும்மா குளிருக்கு வாறமாதிரி அறிகுறிகள்... கடைக்கு போன்போதும் மாஸ்க் உடந்தான் போனேன்.. இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தால் நான் வெளியே போயிருக்கமாட்டன்.. ஆனாலும் நான் பரிசோதிக்காமல் வெளியே போனது மிகமிகத்தவறுதான்..

எப்படி என்ன சொன்னாலும் நடந்த தவறினால் யாருக்காவது ஏதும் இழப்பு ஏற்பட்டு இருந்தால் ஈடு செய்யமுடியாது.. ஆகையால் எனது அனுபவத்தையும் சம்பவத்தையும் இதில் எழுதியதன் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவெனில் தயவு செய்து என்ன மாதிரி காய்ச்சலோ தடிமனோ இருமலோ எதுவாக இருந்தாலும் நம்ம வீடுகளில் சொல்வதுபோல் அது சூடு போல இருக்கு இல்லாட்டி வெதர் மாறுவதால வந்திருக்கலாம் எண்டு சொல்லிட்டு இருக்காமல் ஒரு சிறு அமவுண்டுதான் அண்டிஜென் டெஸ்ட் கிட்.. தயவு செய்து தடிமனோ மூக்கடைப்போ தொண்டை நோவோ எதுவோ உடல் சூடு எண்டு நினைக்காமல் வாங்கி வந்து வச்சு சுயபரிசோதனை செய்து பாருங்கள்.. அதன் மூலம் நான் விட்ட தவறை நீங்கள் விடமாட்டீர்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார்…. விரைவில் நலம் பெற வேண்டும்.🙏

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கடந்த 29ம் திகதி 2 டோஸ் ஃபைசட் எடுத்து சரியாக 9 மதங்களுக்கு பின் காலை எழுந்தவுடன் வித்தியாசமான ஒரு வலி உடல் முழுவதும் இருந்தது. வழமைபோல் எனக்கு வராது என்னும் மமதையில் பெனடோல் போட்டுவிட்டு இருந்தேன். மாலை 6 மணிபோல் கடும் உடல்வலி, கடுல் காச்சல் 39.5 க்கு மேல், உடல் கட கட வேன ஆட ஆரம்பித்து விட்டது. பற்கள் தந்தியடித்தது, கை நடுங்கியது. மெடிக‌ல் இன்சூரன்ஸ் இருப்பதால் உடனடியாக ஓடினேன் பக்கத்தில் உள்ள சிறந்த்  பிரவேட் கிளினுக்குக்கு. 

உடனடியாக எடுத்தார்கள் அன்டிஜென்ட் டெஸ்ட். பொசிடிவ். பீசீஆர் செய்ய அரசங்க கிளினிக்குக்கு செல்ல அறிவுருத்தினார்கள் இரவு 11 மணியளவில் இருமல்+கடும் காச்சல்+உடல்வலி + மூக்கடைப்பு+ உடல் ந‌டுக்கம் ஆகியவற்றுடன் முன‌ங்கிக்கொண்டு  சென்றேன். என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. பின்பு பீசீஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

விடிய‌ 2 மணியளாவில் வந்து படுத்ததுதான். 4 நாட்கள் அம்பானைக்கு இருமலும் காச்சலுல், உடல்வலி, சளி மூச்சு விட முடியவில்லை. புதுவருட கொண்டாட்டல் எல்லாம் போய் விட்டது. இன்றுடன் ஒருவாரம் ஆகின்றது. இபொழுது சுகமாகிவிடேன். 

எனக்கு பீசீஆர் டெஸ்ட் POSITIVE அல்ல, ஆனால் REACTIVE எனெ வந்திருந்தது. அதாவது முன்பு வைரஸ் உடலில் தாக்கியுள்ளது அது எனக்கு தெரியாமல் அப்படியே இருந்துள்ளது. பின்பு நான் சமீபத்தில்  யாருடனோ ஒரு நோயாளியுடன் தொடர்புபடுள்ளேன் அது அது உடனடியாக இப்பொழுது REACTIVE ஆகிடுள்ளது.  

நேற்று இரண்டாவது முறையும் பீசீஆர் செய்தேன் இன்னும் முடிவு வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் குடும்பமும், கொழும்பானும் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. 

கொழும்பானும்… விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏
வயித்தெரிச்சலை… கிளப்புறாங்கள். 😂
எங்களுக்கும் செவிலியர் வந்து வாய்ச்சிருக்கிறானுகள். இரவிலை…நிம்மதியாய் நித்திரை கொள்ள ஏலாமல் கிடக்குது. 🤣
அவிச்ச முட்டை தந்திட்டு… அலுவல் பார்க்க நிக்கிறாங்கள். 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி @colomban நீங்களும் குடும்பத்தினரும் கொவிட்டில் இருந்து மீண்டது பெரும் ஆறுதல்.

சிறிய அறிகுறி காட்டினாலும் LFT எடுங்கள். 

பிகு

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

 

பிகு 2

ஓணாண்டியார் தமிழக செய்திகள் பகுதியில் இணைந்த செய்தியள் கொஞ்சம்  டவுட்டை வர வழைத்தது, பாவம் காய்சல் குணத்தில இணைத்திருக்கிறார்.  கொவிட்டின் அறிகுறியில் brain fog ம் ஒன்றுதானே 🤣 (பகிடி). 

  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பான் நீங்களும் கவனமாக இருங்கள்......! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள்.

வருத்தமெல்லாம் பறந்திருக்குமே?

கவனமாக இருங்கள்.

ஒருமுறை வந்தால் உடம்பை மிகவும் பெலவீனமாக்கிவிடும் என்கிறார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

அவர் போத்தல் வாங்கப் போன இடத்தில்த் தான் இறைச்சி வாங்கினவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலை இனிமேல் சாப்பாட்டுக்கடையளுக்கு சாப்பிட போற ஆக்கள் எத்தினை கொரோனா தடுப்பூசி போட்டாலும்......சாப்பிட போகேக்கை புதுசாய் கொரோனா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு போகோணுமெண்டு சட்டம் வரப்போகுதாம்....

அப்ப என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடும்ப உறுப்பினர்களும் கோவிட்டின் பிடியில் இருந்து பூரண விடுதலை ஆகி இருக்கிறோம்.. அன்பையும் ஆதரவையும் பரிமாறிய அனைத்து உறவுகளுக்கும் எம் குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.. அத்துடன் அண்ணன் கொழும்பானும் கொவிட் பிடியிலிருந்து விலகி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 18:40, goshan_che said:

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

இவங்கள் சொதப்பப் போகிறாங்கள் என்று ஒமிக்கிரான் வரும்போதே தெரிந்துவிட்டதால் பூஸ்டர் போட அனுமதி கிடைத்த மறுநாளே பூஸ்டரும் போட்டு இரண்டு பக்கெட் LFT ரெஸ்ற் கிற்றும் ஓடர்  பண்ணி எடுத்திருந்தேன்.! டிசம்பரில் பார்ட்டிகளுக்குப் போக முன்னரும் பின்னரும் ரெஸ்ற் பண்ண உதவியாக இருந்தது. 

தடிமன், காய்ச்சல் குணங்குறி இருந்தால் உடனே ரெஸ்ற் பண்ணுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

தடுப்பூசி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத்தான் உதவுமே தவிர, தொற்றைப் பெரிதாகத் தடுக்காது. ரெஸ்ரோரன்ற் போகமுதல் ரெஸ்ற் எடுத்தால், தொற்று இருப்பதாகக் காட்டினால் போகாமல் வீட்டில் இருக்கலாம். இதனால் பரப்புவதைக் குறைக்கலாம். 

இங்கிலாந்தில் தினமும் 180, 000 பேருக்கு மேல் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆனால் ஹொஸ்பிற்றலில் அட்மிற் ஆவதில் அதிகம் பேர் தடுப்பூசி எடுக்காதவர்களே. அதிகம் கறுப்பினத்தவர், அராபியர், ஆசியர் வசிக்கும் இலண்டனில் தடுப்பூசி எடுக்காதவர்கள் அதிகம். அதனால் இலண்டனில் தொற்றும் அதிகம். ஹொஸ்பிற்றல் அட்மிஷனும் அதிகம்.  அப்படி இருந்தும் போக்குவரத்து, உணவகம், ஷொப்பிங் எல்லாம் பிஸி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24 மாத அடைவு காலத்தின் பின்.. ஒருவாறு முதல் வெளிநாட்டுப் பயணம் முடிச்சு திரும்பியாச்சு.

விமானத்தில் ஏற வக்சீன் சான்றிதழ் (பல விமான சேவைகள்.. பி சி ஆர் அல்லது அன்ரிஜென் சோதனை சான்றிதழும் கூடக் கேட்கினம்... அதோடு Locator Form நிரப்பிய பின் உறுதிப்படுத்தி வரும்.. QR code உடன் கூடிய சான்றிதழும் அவசியம். சோதனைகளில்.. வீட்டில் செய்வதை காட்ட முடியாது. தேசிய சுகாதார சேவையில் இலவச வசதியையும் பாவிக்க முடியாது. தனியாரிடம் தான் செய்யனும்.).. இறங்கின பின் அன்ரிஜென் சோதனை... அதனை முடிச்சு தான் வெளியில விடுவினம்.

பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய.. Fit to Fly என்று சொல்லி மீண்டும் சோதனை. அது ஒரு அன்ரிஜென். அதற்குப் பிறகு இங்கிலாந்தை அடைந்ததும்.. பி சி ஆர்.

இதற்கிடையில் Locator Form போற நாட்டிலும் நிரப்பனும்.. வாற நாட்டிலும் நிரப்பனும். வக்சீன் சான்றிதழ் இல்லாவிட்டால்.. இதனை நிரப்ப முடியாது. பறக்கவும் முடியாது. 

என்ன நவீன QR code வாசிக்கும் வசதியோடு அலைபேசியும்.. றோமிங்கும் இல்லையோ.. கதை கொஞ்சம் கஸ்டம் தான். 

ஆனால்.. விமானத்துக்குள் அரைவாசி.. மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குதுங்க. பெண்கள் மூஞ்சிக்குப் போட்ட மேக்கப் கலைஞ்சிடும்.. என்று மாஸ்கை கழுத்தில் மாட்டுகிறார்கள். விமானப் பறப்பு முழுக்க மாஸ்க் அணிவது விதிப்பாக இருந்தும்.

கொவிட் கால விமானப் பயணமும்.. பயணத்தின் முன் பின்னான அனுபவங்களும் புதிது. வக்சீன் சான்றிதழ் மிகவும் பயன் கொடுத்தது.

விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இன்றில் இருந்து உள்வரவுக்கான பி சி ஆர் சோதனை.. அன்ரிஜென் சோதனை அளவுக்கு குறைக்கப்படுகிறது. எனி கொரோனாவை கட்டுப்படுத்திறது என்பது நடக்காத காரியம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கங்களை தளர்த்தி.. வக்சீனையும் குத்தி.. கொரோனாவை ஒரு கட்டுக்குள் வைச்சுக் கொள்வது தான் தீர்வாக முடியும். கொரோனா இப்போதைக்கு உலகை விட்டு நீங்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

24 மாத விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

ஐரோப்பிய பட்ஜெட் விமான சேவை நிறுவனங்கள்.. ஒற்றை இலக்க விலையில் ரிக்கெட் விற்கும் போதும்.. இலங்கைக்கு இது பெரிய தொகை.

மேலும்.. இலங்கைக்குள்.. போய் வாற பலர் வந்த பின் கொரோனா வோட தான் இருக்கினம். அங்க சனம் கெடிபிடிக்குப் பயந்து உள்ளுக்க மறைச்சு வைக்கிறதால.. சமூக மட்டத்தில் பரவல் அதிகம். எங்கட ஆக்களைத் தெரியும் தானே வளர்த்த..  பெட்டை நாய் நாலு குட்டி போட்டாலே அடுத்த வீட்டுக்குத் தெரியாமல்.. பெட்டிக்க வைச்சு தொலைவில கொண்டு போய் விடுற ஆக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.