Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

X-Press-pearl2-696x696.jpg
 18 Views

இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதி பாதுகாப்பாக உள்ளதுடன், அங்கு தற்போது மீன்பிடி பருவநிலையும் உள்ளது. எனவே அங்குள்ள மீன்களை தென்னிலங்கைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என இலங்கை மீன்வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இராசாயணக்கழிவுகள் கலந்துள்ள கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை தவிர்க்குமாறு கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் கடல் உணவுத்துறை பிரிவின் தலைவர் கலாநிதி லங்கா விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=52202

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நல்லவகையான மீன்கள், கடல் உணவுகள் எல்லாம் வெளியே போனபின்பு உள்ளூர் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போக்கூடாது.. 

- கிடைத்திருக்கும் வாய்ப்பைபற்றி பேசவேண்டும்

- எல்லாவற்றையும் விட இவர்களை     ஒன்றினைக்கவேண்டும்.. 

- இவ்வளவு வீதம் ஏற்றுமதி, இவ்வளவு வீதம் உள்ளூர் சந்தைக்கு என விதி இருக்கவேண்டும்

- உள்ளூரில் உள்ள மீனவ சங்கங்களிற்கும் இத்தனை வீதம் ஏற்றுமதி, உள்ளூர் சந்தை என குறிப்பிடவேண்டும். 

- வேறுவகையான அழுத்தங்கள் வந்தால் அதை எப்படி சமாளிக்கவேண்டும் 

- இவற்றையெல்லாம் கவனிக்கவும் வேண்டும்..

நல்லவாய்ப்பை பயன்படுத்தினால் அங்குள்ள மீனவர்கள், அதை சார்ந்து வேறு தொழில்வாய்ப்புகள் என நல்ல பயனை அடையலாம்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுரிலும் மக்கள் கடலுனவு வாங்கப் பயப்பிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருவாடு போட்டு வட இலங்கைக்கு அனுப்பலாம் .....அதற்குறிய அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

இது மேலும் சிங்களவர்களுக்கும் கல்முனை முஸ்லிம்களுக்கும்தான் வழி வகுக்கும் 
எம்மவர்க்கு சரிவராது. வடக்கு கிழக்கு மீனவர்கள் அதிகமாக பயன்படுத்துவது 
சிறிய ரக படகுகளை அவற்றில் அதிக அளவான வலைகள் ... பிடிபட்டால் மீன்கள் ஏற்றமுடியாது 

அதுக்கு வள்ளம் போன்ற தென்னிலங்கை ரக கலன்கள் வேண்டும் 
அது வைத்திருந்தால் அதை கொண்டு வந்து கட்டுவதுக்கு இறங்குதுறை வேண்டும் 

வடபகுத்திக்கு மயிலிட்டியிலும் கொழும்புத்துறையிலும் ஒன்று உண்டு 
அதில் 10-12 வள்ளம் கட்ட முடியும்.

வேறு ஊரில் கொண்டு சென்று கட்டினால் காவலுக்கு ஆள் வேண்டும் 
தங்கள் மீன் வளத்தை அள்ளுகிறார்கள் என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் வள்ளத்தை அறுத்து
கடலில் விட்ட சம்பவங்களும் உண்டு ஆதலால் .... யாரும் வள்ளம் வாங்குவதில்லை. 

இப்போ மொக்குத்தனமாக பேராசை பட்டு இழுவை முறை ஒன்றை நாலு படகுகளை ஒருங்கிணைத்து 
செய்கிறார்கள் அது மொத்த மீன் வளத்தையும் அழித்து விடும்.  எல்லா மீனையும் குஞ்சுகளையும் சேர்த்து 
அள்ளுவது. 

எல்லா கரையோர ஊருக்கும் இறங்கு துறை வேண்டும் 
சென்ற கிழமை இங்கு ஒரு திரி இருந்தது 
யாரோ ஒரு ஊர் மக்கள் திருகோணமலை பக்கம் 
கடந்த 10 வருடமாக கேட்க்கிறோம் தருகிறோம் என்று சொல்கிறார்கள் 
யாரும் இங்கு வருவது கூட இல்லை என்று சொல்லி இருந்தது.

எங்களை சுற்றி கடலும் அதன் வளமும் உண்டு 
பயன்படுத்த அமைச்சர்களுக்கும் அரசுக்கும் தெரியவில்லை.
முல்லைத்தீவில் இருந்து சர்வதேச எல்லை வரை எங்கள் கடல்தான் 

Map of the Sri Lankan Exclusive Economic Zone (EEZ) (Source: Maritime... |  Download Scientific Diagram

  • கருத்துக்கள உறவுகள்

Figure 3: Boat on motion and within border. Blue line indicates the path of the boat and green line indicates direction of nearest harbor

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

சாட்டோட இதுதான் சாட்டென்று தென்னிலங்கையாரை கொண்டுவந்து இறக்கப்போறார் அமைச்சர்.  

  • கருத்துக்கள உறவுகள்

இழுவைப்படகை பயன்படுத்தி எதுவித கட்டுப்பாடுகளுமின்றி மீன் பிடிக்கும்போது பெரிய மீன்கள் மட்டுமல்லாது சிறிய குஞ்சுமீன்களும் அள்ளியெடுத்து செல்லப்படுவதால் கடலில் மீன்களின் அளவு நாளடைவில் குறைவடையும். இது நாட்டின் மீன்பிடி தொழில் மூலாதாரத்தையே நாசம் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். 

இலங்கை அரசாங்கம் கடல் பிராந்தியத்தில் ரோந்து கப்பல்களில் கடல்காவலர்களை ஈடுபடுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இழுவைப் படகுகளை நிறுத்தி அவற்றில் பயன்படுத்தப்படும் வலைகளின் நூல் இடுக்குவிட்ட அளவுகளை கண்காணிப்பு செய்யவேண்டும். அரசாங்கத்தால் வரையறை செய்யப்பட்ட பருமனான குஞ்சு மீன்கள் தப்பி செல்லும் அளவுக்கு வலைநூல்களின் இடைவெளி அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பதுடன் அதை மீறுபவர்களுக்கு மீன்பிடித்தடை விதிக்கப்பட்டு தண்டமும் அறவிடப்பட வேண்டும்.

கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்க மேலை நாடுகளில் செய்தார்கள் என்று சொல்லிக்கொண்டு  பழைய பஸ்வண்டிகளை நடுக்கடலுக்கு எடுத்து சென்று போட்டால் மட்டும் போதாது. அதே மேலை நாடுகளில் கரையோர காவலர்கள் என்ன பொறுப்புமிக்க பணியை செய்கிறார்கள் என்று தெரிந்து அதுபோலவும் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.

இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

https://vampan.net/30112/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

இல்லயண்ணை ஜாமீன் கிடைச்சால் ஒரு கிலோ வாங்கி சாட்டைக்கு அனுப்பலாம் எண்டு யோசிச்சனான்.

ஏற்கனவே 14 நாள் எண்டாங்கள். இப்ப கரூரில இன்னொரு வழக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! 

அதென்ன யாழ்ப்பாணத்தார்????😪

14 hours ago, Kapithan said:

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

என்ன  சாதி???

புரியவில்லை

மீனவத்தொழிலை  செய்பவர்கள் ஒரு  சங்கமாவதில்  என்ன  சிக்கல்??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

உங்கடைநக்கல்நையாண்டியளைக் கொண்டு போய்க் குப்பையிலை போடுங்கோ. இது என்னுடைய அம்மா, சகோதரர்கள் சொன்னது.

நேற்று கொழும்பில் வசிக்கும் என் அம்மாவுடன் கதைக்கும் போது மரக்கறிகளில் இருந்து எல்லாமே Apartment வாசலில் கொண்டு வந்து விற்கின்றார்கள் என்றும், ஆனால் மீன் காரரை மட்டும் வாசலுக்கு கூட வர விடுவதில்லை என்றும் சொன்னார். ஏதாவது கெமிக்கல் மீனை கொண்டு வந்து அபார்ட்மெண்ட் முழுக்க நோயை பரப்பி விடுவார்கள் என்று எவருமே மீன் வாங்குவதில்லையாம்.

7 hours ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

5 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உலகில் எனக்கு மிகப் பிடித்த இடங்களில் ஒன்று இந்த பாசையூர் மீன் சந்தை. மீன் குழம்பின் வாசனையை வைத்தே என்ன மீன் சமைக்கின்றனர் என்று அறியும் அளவுக்கு மீனை எனக்கு பரிச்சயம் செய்த சந்தை இது. ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் போகும் இடம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

நீங்கள் உங்கள் உறவினர் பற்றி எதுவும் எழுதவில்லை.

எழுதி இருந்தால் அதை நிச்சயம் கடந்து போயிருப்பேன்.

ஆனால் ஒரு பொதுகளத்தில் வந்து ஊரில ஒரு மீனும் இல்லையாம் என்று எழுதினால் நக்கல் பதில்தானே வரும்?

மேலே கொழும்பான் இணைத்த செய்தியை பாருங்கள் ஊரில் மீன் இல்லை என்றால் பாசையூர் மார்கெட்டுக்கு சனம் என்ன வெள்ளி பார்க்கவே போனது?

நீங்கள் எழுதும் கருத்துக்குத்தான் பதில் எழுத முடியும், நீங்கள் யாரை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்பதை நாம் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

45 minutes ago, நிழலி said:

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

இப்போதைய நிலைக்கு தென்னிலங்கைகு ஏற்ற முடியாததால் - ஊரில் நல்ல மலிவாக கிடைப்பதாக தகவல்.

அதனால்தான் மீன் மாக்கெட்டில் சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்து மீன் சந்தை திறக்க அனுமதி இல்லையே? வீதிகளில் வைத்து வியாபாரம் செய்தவர்களையும் வாங்கியவர்களையும் பொலிசார் தாக்கி விரட்டிவிட்டார்கள். கடலுணவுகள் வீதி வீதியாக தனிநபர்கள் விற்பனை செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.