Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக இதுவரையில் 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

hishalini.jpg

https://athavannews.com/2021/1232038

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந்த எழுத்துக்களிலிருந்து அர்த்தம் கொள்ள முடியும். சுவரில் இப்படி எழுதுமளவிற்கு மன உளைச்சல் கொண்டிருந்தால் அந்த வேதனையை தன் தாயிடமோ அல்லது வேறுயாரிமோ, ஏதோவொரு வகையில் அந்தச் சிறுபெண் வெளிப்படுத்தியிருப்பாள். இது ரிச்சாட் குடும்பத்தினரையும், ரிச்சாட்டையும் பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிபோலவும் எண்ணத் தோன்றுகிறது.  

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து எங்கள் நாட்டை அனேகமாகப் பேய்களே அரசுசெய்து வருகின்றன. பிணம்தின்னக் கேட்கவா வேண்டும்....!! 😲

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை பார்த்த உடனே… நீங்கள் நினைத்த மாதிரித்தான் நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

செய்தியை பார்த்த உடனே… நீங்கள் நினைத்த மாதிரித்தான் நினைத்தேன்.

நானும் தான் ...எங்களுக்கு தெரியாத புலனாய்வுகளா?😀

  • கருத்துக்கள உறவுகள்

இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை

August 3, 2021

spacer.png

தனக்குத் தெரிந்த வரையில் தன்னுடைய தங்கையான இஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதும் திறமை இல்லை என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரனான திருபிரசாத் தெரிவித்துள்ளார்.

இஷாலினி , அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார் எனவும் தனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை தனது தங்கையிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வல்லமை அவாிடம் இல்லை எனவும் திருபிரசாத் தொிவித்துள்ளாா்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2021/164181

  • கருத்துக்கள உறவுகள்

துருவித் துருவி ஆராய்ந்து மண்ணெண்ணெய், தீப்பிடித்த செருப்பு கண்டு பிடித்தவர்களின் கண்ணில் இது எப்படி மறைந்திருந்து இப்போ வெளிப்பட்டது? அது சரி ஏன் மீண்டும் அவரின் அறையை பரிசோதித்தார்கள்? அவர் என்ன பெரிய  மாட மாளிகையிலா தங்கியிருந்தார் பகுதி பகுதியாக பரிசோதிக்க? பழைய இரும்புக்கட்டில் உள்ள ஒரு அறைச் சுவரில் எழுதி இருந்ததை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மறுபடி எப்படி கண்ணில் பட்டது? நல்ல காவற்துறையும் அவர்களின் கண்டுபிடிப்பும்.  என்ன சுரண்டி வைத்திருந்ததை எல்லாம் அள்ளி இறைத்திருப்பார்கள், சுவரில் சாவுக்கான காரணம் தெரிந்திருக்கு.  அறையை இன்னொருமுறை பரிசோதித்து  தமிழில் கடிதம் கண்டுபிடிப்பார்களாம். ஆங்கிலத்தில் சுவரில் எழுதும் பிள்ளை தன்னை கூட்டிக்கொண்டு போகாவிடில் நான் தற்கொலை செய்வேன் என்று தாயிடம் தொலைபேசியில் கதைக்கும்போது கூறியிருப்பாரே? ஆங்கிலத்தில் அதுவும் தமிழ் உச்சரிப்பில் எழுதும் பிள்ளை, அதை தமிழிலேயே எழுதி இருக்கலாமே? எழுத்தைக்கொண்டு அவர் எழுதவில்லை என்பதை பெற்றோர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி ஒரு சோடிப்பு.  சுவரில் எழுதுவதால் என்ன பயன்?  மண்ணெண்ணெய் எப்படி அறைக்குள் வந்தது என்ற கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாய் அவர்களே வாக்களித்துள்ளனர். அப்போ சொல்லவேண்டியதுதானே அந்தபெண்தான் வாங்கினாள்என்று. அடைபட்டிருந்த பெண்ணிடம் எப்படி மண்ணெண்ணெய், லைற்றர் வந்தது என்கிற கேள்விக்கு பதில் தர வேண்டுமே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இது கொலை. கொழும்பு பகுதியில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலம் அல்லது சிங்கள மொழி மூலமான பாடசாலைகளிலே கல்வி பெறுவதால் இவர்களுக்கு தமிழ் நன்கு பேசத் தெரிந்தாலும் எழுதத்தெரியாது. ஆங்கிலத்தில் தமிழை எழுதத்தெரியும். இலங்கை அரச பெயர்ப்பலகைகளில் முற்றிலும் தவறான தமிழ் அறிவிப்புகளை வெளியிடுபவர்கள் இவர்களே.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

ரிசார்ட் தரப்பு ரொம்ப desperate போல தெரிகிறது. ரொம்ப சின்னபுள்ளதனமா பூச் சுத்துறாங்க. நிச்சயம் இதில் பொலீசின் உள்ளடி வேலையுமுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமி சித்திரவதைமூலம் படுகொலை செய்யப்பட்டாள் என்பது அனைவருக்கும் தெளிவாக தோன்றும் ஒன்று.

அதேவேளை என்ன சோடிப்புக்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும்,

குற்றங்களை மறைத்தாலும் மறைக்காவிட்டாலும் ரிசாத்தை நிச்சயம் சிக்கவைத்தே தீர்வார்கள், ஏனென்றால் ரிசாத் இப்போது சிங்களவர்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தேவையில்லாத ஒருவர்.

ஒருவேளை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முதல் இருந்த நிலையில் முஸ்லீம் தலைவர்களும், கட்சிகளும் சிங்கள அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக/விரும்பபடுபவர்களாக இப்போதும் இருந்திருந்தால் நிலமையே தலைகீழ்.

இந்த சிறுமியின் அசம்பாவிதத்தை தற்கொலை என்று சொல்லி எப்போதோ வழக்கை  இழுத்து மூடியிருப்பார்கள்.

இலங்கையில் ஒரு குற்றம் சம்பந்தமான விஷயத்தில் நீ சிங்களவர்களுக்கு வேண்டபடுபவரா இல்லையா என்பதை வைத்தே நீதிதுறை தன் கடமையை ஆற்றுகிறது.

மைத்திரி காலத்தில் வடக்கே இவரும் கிழக்கே ஹிஸ்புல்லா என்ற அவரும் தமிழர் நிலங்களை அபகரிப்பதில், இஸ்லாமியர்கள் பரம்பலை வடகிழக்கில் அதிகரிப்பதில் ஆடிய ஆட்டமென்ன, இப்போ அவர் என்ன செய்கிறார் என்று அயலவருக்கும் தெரியாதென்று நினைக்கிறேன்.

இவர் என்ன ஆகபோறார் என்று இவருக்கே தெரியாது..

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பல வழக்குகளில் எளிதில் தப்பமுடியாத  முற்றுகைகளுக்குள் எப்போதோ நைனாவை கொண்டுவந்துவிட்டார்கள்.

எந்த வடிவிலாவது சிறுமி கொலைக்கு நீதி கிடைத்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் சாக்களில் மகிழ்ந்தவர்கள்

எம் மக்களின் பிணங்களின் மீது   காசு  பார்த்தவர்கள்

தர்மத்தின் எதிரிகளோடு கைகோர்த்தவர்கள்

நிச்சயம்  அழிவர்

அதை நான் எனது கண்ணால் காண்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னண்டால் தமிழ் சினிமாவில் வருவது போல் சின்னப் பிள்ளையே கண்டுபிடிக்கக்கூடிய விடயம். அப்பிடியே அப்பட்டமாக தெரிகிறது காதிலை பூச்சுத்துகிறார்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

துருவித் துருவி ஆராய்ந்து மண்ணெண்ணெய், தீப்பிடித்த செருப்பு கண்டு பிடித்தவர்களின் கண்ணில் இது எப்படி மறைந்திருந்து இப்போ வெளிப்பட்டது? அது சரி ஏன் மீண்டும் அவரின் அறையை பரிசோதித்தார்கள்? அவர் என்ன பெரிய  மாட மாளிகையிலா தங்கியிருந்தார் பகுதி பகுதியாக பரிசோதிக்க? பழைய இரும்புக்கட்டில் உள்ள ஒரு அறைச் சுவரில் எழுதி இருந்ததை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மறுபடி எப்படி கண்ணில் பட்டது? நல்ல காவற்துறையும் அவர்களின் கண்டுபிடிப்பும்.  என்ன சுரண்டி வைத்திருந்ததை எல்லாம் அள்ளி இறைத்திருப்பார்கள், சுவரில் சாவுக்கான காரணம் தெரிந்திருக்கு.  அறையை இன்னொருமுறை பரிசோதித்து  தமிழில் கடிதம் கண்டுபிடிப்பார்களாம். ஆங்கிலத்தில் சுவரில் எழுதும் பிள்ளை தன்னை கூட்டிக்கொண்டு போகாவிடில் நான் தற்கொலை செய்வேன் என்று தாயிடம் தொலைபேசியில் கதைக்கும்போது கூறியிருப்பாரே? ஆங்கிலத்தில் அதுவும் தமிழ் உச்சரிப்பில் எழுதும் பிள்ளை, அதை தமிழிலேயே எழுதி இருக்கலாமே? எழுத்தைக்கொண்டு அவர் எழுதவில்லை என்பதை பெற்றோர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி ஒரு சோடிப்பு.  சுவரில் எழுதுவதால் என்ன பயன்?  மண்ணெண்ணெய் எப்படி அறைக்குள் வந்தது என்ற கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாய் அவர்களே வாக்களித்துள்ளனர். அப்போ சொல்லவேண்டியதுதானே அந்தபெண்தான் வாங்கினாள்என்று. அடைபட்டிருந்த பெண்ணிடம் எப்படி மண்ணெண்ணெய், லைற்றர் வந்தது என்கிற கேள்விக்கு பதில் தர வேண்டுமே? 

அவரின்  பாடசாலை எழுத்துக்கள்  தற்போதைய சுவர் எழுத்துக்களுடன் ஒப்பிடப்படுகிறதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

தமிழரின் சாக்களில் மகிழ்ந்தவர்கள்

எம் மக்களின் பிணங்களின் மீது   காசு  பார்த்தவர்கள்

தர்மத்தின் எதிரிகளோடு கைகோர்த்தவர்கள்

நிச்சயம்  அழிவர்

அதை நான் எனது கண்ணால் காண்பேன்

விசுகர்! இந்த விடயம் ரிஷாட் தரப்புக்கு சாதகமாகவே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! இந்த விடயம் ரிஷாட் தரப்புக்கு சாதகமாகவே முடியும்.

எவன் மாட்டினாலும் சந்தோசமே அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தமிழரின் சாக்களில் மகிழ்ந்தவர்கள்

எம் மக்களின் பிணங்களின் மீது   காசு  பார்த்தவர்கள்

தர்மத்தின் எதிரிகளோடு கைகோர்த்தவர்கள்

நிச்சயம்  அழிவர்

அதை நான் எனது கண்ணால் காண்பேன்

விசுகு அவர்களே! தப்பித்தவறி சிறீலங்காவுக்குச் சென்றுவிடாதீர்கள் சென்றால் உங்கள் கண்கள்!....ஐயகோ!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சட்டத்தரணிமாரும்,எம்பிமாரும் .....ரிசாட்டு கற்புக்கரசன் போல காட்டுக் கூச்சல் போடுகினம்...பங்கு போட்டவையோ../

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ஹிஷாலினியின் இழப்பு தொடர்பில் ரிஷாட் குடும்பம் மௌனிப்பது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பேசும் பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவரா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

எங்கடை சட்டத்தரணிமாரும்,எம்பிமாரும் .....ரிசாட்டு கற்புக்கரசன் போல காட்டுக் கூச்சல் போடுகினம்

ஹிஷாலினிக்கு வேலைகாரணமாக மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் அதனால் தற்கொலை செய்திருப்பா என்று முடிக்க தான் அவர்களுக்கு விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஹிஷாலினிக்கு வேலைகாரணமாக மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் அதனால் தற்கொலை செய்திருப்பா என்று முடிக்க தான் அவர்களுக்கு விருப்பம்.

Oh My love .. a rare exception I feel like converse in English only.. இல்லாட்டி என்ன பலாயெல்லாம் என்னிண்ட வாய்க்குள்ளால வந்து விழும் என்னு இனி செல்லிக் கொன்னு இல்லிதானே பெரியோருமாரே-  இன்றைய நேயர் விருப்பம்.(ன்று முடிக்க தான் அவர்களுக்கு விருப்பம். 😡)

இதை வாசிக்கும் போது எதாவது கொழ கொழ என்று சத்தம் வந்தால் அஃது இரத்தம் கொதிப்பதால் என அறிவீராக  ...

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎08‎-‎2021 at 03:11, கற்பகதரு said:

இதில் பேசும் பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவரா?

ஆம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.