Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்! - சமல் ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்!

சமல் ராஜபக்சவின் ஆலோசனை இது!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு போன்றவற்றை உண்டனர் என்று நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார்.

எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசிப்பயறு , கௌப்பி போன்ற பயிர்கள் இருக்கின்றன. இவற்றை உணவுக்காக எடுப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். – என்று மேலும் தெரிவித்தார்.

https://newuthayan.com/அரிசிக்குத்-தட்டுப்பாடா/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மாத்தையா மரவள்ளிக்கிழங்கு பாசிப்பயறுக்கு நாங்கள் எங்கை போறது. உங்கடை சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தில் சிறிது எடுத்து உதவலாமே?அது சரி உங்க்டை வீட்ட்டிலை இண்டைக்கு என்ன சாப்பாடு மரவள்ளிக்கிழங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனுக்கு மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதில் பிரச்சனையே இல்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனுக்கு மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதில் பிரச்சனையே இல்லை 😁

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, Kapithan said:

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

சொர்க்கம் ஐயா அது......இதை பலர் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கிழங்கும்  60 ரூபா போகுதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ஏராளன் said:

மரவள்ளிக் கிழங்கும்  60 ரூபா போகுதே!

நோர்மலாய் கிலோ கிழங்கு என்ன விலை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

46 minutes ago, குமாரசாமி said:

சொர்க்கம் ஐயா அது......இதை பலர் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

சாமியாரே! மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடும்போது ஆகா... அதை என்னவென்று சொல்வீர்கள் ஐயா.😋

2 hours ago, Kapithan said:

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

முருங்கையிலை போட்டு அவிப்பதை இன்றுதான் இதைக் கேள்விப்படுகின்றேன். 

ஒரு மாதத்தில் ஒருக்காலாவது வார இறுதி நாட்களில் காலைச் சாப்பாட்டாக அவித்த மரவள்ளியும், பச்சை மிளகாய் சம்பலும் சாப்பிடுவதுண்டு.

மரவள்ளிக் கிழங்கை அலுமினியத்தாளால் சுற்றி, BBQ செய்து சாப்பிடும் போதும் நன்றாக இருக்கும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

சாமியாரே! மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடும்போது ஆகா... அதை என்னவென்று சொல்வீர்கள் ஐயா.😋

அதெல்லாம் ஒரு காலம் ஐயா.....இனி உதெல்லாம் எங்கை....? :(

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதெல்லாம் ஒரு காலம் ஐயா.....இனி உதெல்லாம் எங்கை....? :(

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாக நினைவு. சரியோ தெரியாது. 

ஆனால் ஆடு மாடு இலையை சாப்பிட்டு தொண்டை அடைத்து இறப்பதாகவும் கதை. 

மரவள்ளித் தோல் சிப்ஸ் எப்படி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாக நினைவு. சரியோ தெரியாது. 

ஆனால் ஆடு மாடு இலையை சாப்பிட்டு தொண்டை அடைத்து இறப்பதாகவும் கதை. 

மரவள்ளித் தோல் சிப்ஸ் எப்படி ?

 மரவள்ளி இலையை வறுத்து சாப்பிட்டதாக நான் இது வரைக்கும் அறியவில்லை.ஆடு மாடுகளுக்கு போட்டதுமில்லை. மரவள்ளி கிழங்கிலையே மிக அவதானமாக இருக்க வேண்டும். நஞ்சு ஊறிய கிழங்குகளும் உண்டு.

மரவள்ளி கிழங்கு சிப்ஸ் ஜேர்மனியில் தான் ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஒரு ஆபிரிக்க விழா ஒன்றில்....ஆனால் சாப்பிட்டு பார்க்கவில்லை.

Maniok Pommes

ஜேர்மனியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மரவள்ளி கிழங்கை இப்படியும் செய்து ரசித்து ருசித்து சாப்பிடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உது அந்த மாரி இருக்கும். Mogo chips. கென்யா வழி இந்தியர்கள் மூலம் லண்டனில் சில தமிழ் உணவகங்களிலும் உண்டு. நம்ம பெருமாள் @பெருமாள்முந்தி இதை பற்றி கதைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்!

அப்போ மரவள்ளியை மஹிந்த குடும்பம் சாப்பிட ஆரம்பிச்ச்சாச்சா?

மரவள்ளிகிழங்கு என்பது உப உணவுபொருள், அரிசிபோன்று உற்பத்தி, இறக்குமதி செய்யப்படும் பிரதான உணவுபொருளல்ல.,

பிரதான உணவுபொருள் தட்டுப்பாடு என்று உப உணவுபொருளை எல்லோரும் சாப்பிட சொன்னால் அந்த உப உணவுபொருளுக்கு தட்டுப்பாடு ஓட்டமெட்டிக்கா வந்துவிடுமே சமல் ஐயா? அரிசிபோல அதனை உடனடியாக மெற்றிக் தொன்னில் இறக்குமதியும் செய்ய முடியாது.

மிக பெரும் போர், பஞ்சம் தலைவிரித்து ஆடும்போதுதான் இதை சாப்பிடாதீர்கள் அதை சாப்பிட்டு சமாளியுங்கள் என்று ஒரு அரசு தன்னோட குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்,

இனபோர் நடந்த காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரபட்டுவிட்டால் ஓரிரு வருடங்களில் இலங்கை பாரிய அபிவிருத்தி கண்டுவிடும், வளர்ச்சியில் சிங்கபூரை எட்டி தொட்டுவிடும் என்று காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமது மக்களுக்கு கப்சா விட்டார்கள், இப்போ என்னடா என்றால் யுத்த காலத்தில்கூட இப்படி பசி பட்டினி உணவு தட்டுப்பாடு  நெருக்கடி ஏற்பட்டதில்லை.

இரண்டு நேரம் சாப்பிடுகிறவர்கள் ஒருவேளை சாப்பிடுங்கள் என்கிறீர்கள், மரவள்ளிகிழங்கை போட்டு தாக்குங்கள் என்கிறீர்கள்... 

எல்லாம் கர்மா, பசி பட்டினி உடனடியாக மாற்றுவழிக்கு மாறுதல் என்பது தமிழர்களுக்கு புதிதல்ல, சிங்களவர்களுக்கு அது சுத்த சூனியம்.கொலையை தவிர வேறு எந்த அரச ஆற்றலும் இல்லாதவர்கள் நீங்கள் என்பதை நாங்கள் எப்போதோ தெரிந்துகொண்டோம், சிங்களவர்கள் இப்போது தெரிந்து கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உது அந்த மாரி இருக்கும். Mogo chips. கென்யா வழி இந்தியர்கள் மூலம் லண்டனில் சில தமிழ் உணவகங்களிலும் உண்டு. நம்ம பெருமாள் @பெருமாள்முந்தி இதை பற்றி கதைத்தவர்.

இங்கு மரவள்ளிக்கிழங்கு என்பது மேல்தட்டு மக்களின் உணவாக வீற்றிருக்கும் பெருமை வட இந்தியர்களையே சேரும் இப்பவும் பூஜா சுவீட் கடைகளில் வீக்கெண்டில் மட்டும் கசவோ சிப்ஸ் சனம் லைனில் நின்று வேண்டி சாப்பிடுதுகள் .

ஆனால் சரவணபவன்களில் ரெயினீர்ஸ் லேன் ஐ விட மற்றைய இடங்களில் Mogo chipsஎன்றால் அப்படி என்றால் என்ன என்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார்.

தங்களின் வசதிக்கேற்ப நோய்களையும், மருந்துகளையும் சொல்கிறார்கள்.  மரவள்ளி கிழங்கு நீரழிவு நோயுள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டுள்ளேன். இரசாயன உரத்தை தடுக்கிறாராம் காரணம் விவசாயிகள் நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதால். அப்போ மரவள்ளிக்கிழங்கு மூன்று வேளையும் சாப்பிடுவதால் நீரழிவு நோயோடு பித்தம் தலைக்கேறி தேரர் மாதிரி அலைய வேண்டியதுதான். காசில்லை என்பதை மறைக்க எத்தனை கண்டுபிடிப்புகள்? ராஜபக்க்ஷா குடும்பத்துக்கு வந்த சோதனையோ....

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நோர்மலாய் கிலோ கிழங்கு என்ன விலை?

சராசரி 30/40 போகும். போன மாதம் நடுவில 80 ரூபாய் வித்தது. இப்ப மரக்கறி விலை, கிழங்கு கொஞ்சம் மலிவு.
தம்பியார் கொஞ்ச காசை போட்டு 500 தடி நட்டவர், கல்லு பூமி. சில தடில கிழங்கே இல்லையாம். 35-40 வியாபாரியள் வாங்குவினம். செலவு காசு வருமோ தெரியல.

Edited by ஏராளன்
spell correction

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாக நினைவு. சரியோ தெரியாது. 

ஆனால் ஆடு மாடு இலையை சாப்பிட்டு தொண்டை அடைத்து இறப்பதாகவும் கதை. 

மரவள்ளித் தோல் சிப்ஸ் எப்படி ?

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அதன் இலைக் காம்புகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கோர்த்து மாலை செய்து விளையாடியது ஞாபகத்தில் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கோடு இஞ்சிக் கிழங்கும் சேர்ந்தால் அது நஞ்சாகி மனிதர்களும் இறப்பதாகக் கதை. 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Paanch said:

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அதன் இலைக் காம்புகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கோர்த்து மாலை செய்து விளையாடியது ஞாபகத்தில் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கோடு இஞ்சிக் கிழங்கும் சேர்ந்தால் அது நஞ்சாகி மனிதர்களும் இறப்பதாகக் கதை. 

மரவள்ளிப் புட்டு கேள்விப்பட்டதுண்டா ?

😉

  • கருத்துக்கள உறவுகள்

உங்க அண்ணர் தீபாவளிக்கு லட்டு சாப்பிடும் போது மக்கள் எப்படி மரவள்ளிக்கிழங்கு சாப்பிடச் சொல்ல முடியும்.. மிஸ்டர் சமல்..??!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

மரவள்ளிப் புட்டு கேள்விப்பட்டதுண்டா ?

😉

அம்மா செய்துதந்து நாங்கள் சுவைத்துச் சாப்பிட்டது ஞாபகம் உள்ளது. எப்படி அவர் புட்டுச் செய்தார் என்பது தெரியாது.😋

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீமா அரசாங்கத்திலேயே வாரத்துக்கு இரண்டு நாட்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிடவேண்டும் என்றும் கட்டாயமாக உணவகங்களில் இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள்......!

Maravalli Kilangu Chips or tapioca chips or cassava chips or yucca chips -  YouTube

கிழங்கு பொரியல் சாதாரணமாக வீடுகளில் செய்வதுதான். உறைப்பை குறைத்து மெலிதாக சீவி எடுத்தால் சிப்ஸ்.......அவித்த கிழங்கும் சம்பலும் அந்த உறைப்புடன் சுடச்சுட  தேநீரும் அருமையாக இருக்கும்.......!

சிங்களவர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கும். பின் அவர்கள் வழமைபோல தமிழர்கள் இஸ்லாமியர்களின் வீடுகள் கடைகளை சூறையாடி தங்கள் பஞ்சத்தைப் போக்கிக் கொள்வார்கள்.காலாகாலமாய் அதுதானே நடக்குது......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அம்மா செய்துதந்து நாங்கள் சுவைத்துச் சாப்பிட்டது ஞாபகம் உள்ளது. எப்படி அவர் புட்டுச் செய்தார் என்பது தெரியாது.😋

மரவள்ளியை காயவைத்து தூளாக்கி இடித்து மாவானதன் பின்னர் அதனை நீர்விட்டு சாதாரண பிட்டு அவிக்கின்றது போல அவித்த பின்னர் தேங்காய்ப் பூவுடன் தொட்டு/சேர்த்துச் (குழைத்து அல்ல ) சாப்பிடுவது.

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களது முக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்று.

அது ஒரு கனாக் காலம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மரவள்ளியை காயவைத்து தூளாக்கி இடித்து மாவானதன் பின்னர் அதனை நீர்விட்டு சாதாரண பிட்டு அவிக்கின்றது போல அவித்த பின்னர் தேங்காய்ப் பூவுடன் தொட்டு/சேர்த்துச் (குழைத்து அல்ல ) சாப்பிடுவது.

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களது முக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்று.

அது ஒரு கனாக் காலம்

ஆமாம் ஞாபகம் வருகிறது, தேங்காய்பூவுடன் சீனியும் (தமிழ்நாட்டு வழக்கில் சர்க்கரை) சேர்த்து இனிப்பாக இருக்கும், சாப்பிட்டபின்பு அதிகம் தண்ணீர் குடிக்க அம்மா விடமாட்டார். அது கனாக்காலம் அல்ல, நாங்கள் கடந்துவந்த, மனிதரிடம் மனிதம் மிகுந்திருந்த காலம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.