Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 15:51, கிருபன் said:

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

அப்படி சொல்ல முடியாது ....எங்களுக்கு மற்ற  இயக்கங்களை பிடிக்காது  என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும் , தலைவரை பிடிக்கும் என்பதற்காக  அவர்  செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது .மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .
தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொந்தமான இடங்கள் பறி போவதற்கு கூட அவர் தான் காரணம் .
மற்றைய இயக்கங்களுக்கு தலைவரை மாதிரி ஓர்மம் இல்லை என்பது உண்மை தான் ...ஆனால் , அதை விட உண்மை அவர்களுக்கு இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தது 
உண்மையையாய் தமிழ் மக்கள் மீது அக்கறையால்   போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அதே தமிழ் மக்களுக்காய் நிறுத்தி இருக்கலாம் ...நிறுத்தி இருந்தால் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது .

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 15:58, கிருபன் said:

அப்படி நினைக்கவில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், ஓர்மமும் உள்ள மக்களாக மாற்ற முனைந்தார். ஆனால் தமிழ் மக்களில் பலர் இயல்பிலேயே சுயநலம் பிடித்த, குறுக்குவழிகளில் வாழ்வில் முன்னேறலாம் என்ற சிந்தனையோடு இருந்தவர்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் இருந்ததால் நாட்டில் இருந்து வெளியேறி போராட்டத்தின் பார்வையாளர்களாகவே மாறினோம். 

நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும்  இயக்கத்து போகாமல் ஓடி வந்தவர்களை விட இயக்கத்து போய் கடைசி வரை நின்று விட்டு வந்தவர்கள் பலரும் பொறுக்கிகளாய் தான் இருக்கினம் .
ஒரு நாளும் ஆயுத்தத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ ஒருவரையும் அடக்கி வைத்திருக்க முடியாது 
 
On ‎25‎-‎11‎-‎2021 at 17:12, கிருபன் said:

இப்ப எம்பெட் வீடியோவை நீக்கிவிட்டேன். இணைப்பை அழுத்திப் பாருங்கள். இவ்வளவு அழகான பெண்ணுக்கே இனவாதிகளால் தொல்லை என்பதைத் தாங்ங்கமுடியவில்லை!

அவவை பார்த்தால் சிங்கள பெட்டை மாதிரி இருக்குது ....போய் பிரண்ட் சிங்களவர் ...அவையள் சிங்களத்தில் தான் கதைத்து கொண்டு இருந்திருப்பினம் ..அவவை பார்த்து தமிழா என்று கேட்டது நம்ப கூடியதா இருக்குதா?...டிக்டொக்கில் பிரபல்யமாவதற்காகவும் விட்டு இருக்கலாம் ...இலங்கையில் அப்படி நடக்காது என்று சொல்லவில்லை ...இவக்கு நடந்தது நம்ம முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 19:37, ஈழப்பிரியன் said:

நியூயோர்க் தாக்குதல் நடக்காம இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

சிலவேளை தமிழீழம் பிறந்தும் இருக்கலாம்.

அது எம்மை நாமே ஏமாற்ற சொல்லலாம் ...இந்தியா இருக்கும் வரை தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது ...அமெரிக்காவோ , மற்ற உலக நாடுகளோ இந்தியாவை, இலங்கையை  பகைத்து கொண்டு எங்களுக்கு தமிழீழம் எடுத்து தராது ...எடுத்து தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 18:46, Kandiah57 said:

பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது   காலத்தை கடத்தவும்.  அந்தக் காலத்தில்  இராணுவத்தை தயார் செய்யவும் மாறாக தீர்வு வழங்கவல்ல. ...இது தலைவருக்கு நன்றாகவே தெரியும்     அவர்களிடம். தீர்வு இருந்தால் ஏன் மற்றவர்களால் பெற முடியவில்லை  ?அல்லது ஏன் அந்தத் தீர்வை அமுல் செய்யவில்லை  இலங்கை அரசியலில் அறிவு அற்றவர்களும். தலைவரைப்பற்றி  நன்றாக தெரியதவர்களும் தான் அவரை குறை சொல்லுகிறார்கள் 

ஆம் இராணுவமும்,  அரசும் தம்மை பலப்படுத்த யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியது ...ஏன் புலிகளுக்கு அது தெரியாமல் இருந்ததா ?....1}ஏன் அவர்கள் தங்களை பலப்படுத்தவில்லை ?2} பேச்சு வார்த்தைக்கு போனால் இப்படி நடக்கும் என்று தெரிந்தால் ஏன் பேச்சு  வார்த்தைக்கு  போனார்கள்?...சிங்களவர்களை மொக்கன் ,மோடன்  என்று நினைத்தார்களா?

On ‎25‎-‎11‎-‎2021 at 21:25, nunavilan said:

டக்ளசின் காரைநகர் அடியோடு அவருக்கு தெரிந்து விட்டது .  இது வேலைக்கு ஆகாது என.😃

தலைவர் செயல் வீரராக இருந்தார். அதனால் புகழ் தேடி வந்திருக்கலாம்.

எம்மக்களை வைத்து போராட்டம் நடாத்த அவர் ஒருவரால் தான் முடிந்தது. முடியும்.

உண்மை ...மக்களை ஒன்றிணைக்க தலைவரால் மட்டும் தான் முடிந்தது ...அதே மக்களை அழிவுக்கு இட்டு செல்லவும் தலைவரால் மட்டுமே முடிந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அப்படி சொல்ல முடியாது ....எங்களுக்கு மற்ற  இயக்கங்களை பிடிக்காது  என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும் , தலைவரை பிடிக்கும் என்பதற்காக  அவர்  செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது .மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .
தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொந்தமான இடங்கள் பறி போவதற்கு கூட அவர் தான் காரணம் .
மற்றைய இயக்கங்களுக்கு தலைவரை மாதிரி ஓர்மம் இல்லை என்பது உண்மை தான் ...ஆனால் , அதை விட உண்மை அவர்களுக்கு இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தது 
உண்மையையாய் தமிழ் மக்கள் மீது அக்கறையால்   போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அதே தமிழ் மக்களுக்காய் நிறுத்தி இருக்கலாம் ...நிறுத்தி இருந்தால் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது .

அக்கா தன்ர அண்ணர் புத்திசாலி எண்டு சொல்லுறா....😂

1 hour ago, ரதி said:

1) நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும்  இயக்கத்து போகாமல் ஓடி வந்தவர்களை விட இயக்கத்து போய் கடைசி வரை நின்று விட்டு வந்தவர்கள் பலரும் பொறுக்கிகளாய் தான் இருக்கினம் .
ஒரு நாளும் ஆயுத்தத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ ஒருவரையும் அடக்கி வைத்திருக்க முடியாது 
 
2) அவவை பார்த்தால் சிங்கள பெட்டை மாதிரி இருக்குது ....போய் பிரண்ட் சிங்களவர் ...அவையள் சிங்களத்தில் தான் கதைத்து கொண்டு இருந்திருப்பினம் ..அவவை பார்த்து தமிழா என்று கேட்டது நம்ப கூடியதா இருக்குதா?...டிக்டொக்கில் பிரபல்யமாவதற்காகவும் விட்டு இருக்கலாம் ...இலங்கையில் அப்படி நடக்காது என்று சொல்லவில்லை ...இவக்கு நடந்தது நம்ம முடியவில்லை 

1) கொண்ணரத் தவிர மிச்ச போராளிகள் எல்லாம் பொறுக்கிகள் எண்டு சொல்ல வாறா.... 

பொறாமை அப்பட்டமாகத் தெரிகிறது

2) 🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 17:24, கிருபன் said:

சுமந்திரன் சிங்களவர்களுக்குச் சார்பாக அமெரிக்காவுடன் கதைக்கப் போகவில்லை. மகிந்தவுடன் சந்தித்தால் அவர் சொல்வதைக் கேட்டார் என்று அர்த்தமா? 

சுமந்திரனும், சாணக்கியனும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளின் வேலைத்திட்டத்துடன் இயங்குகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழரின் அபிப்பிராயத்தை கேட்பது என்பதைவிட புலம்பெயர் தமிழர்களின் சிந்தனையை நாடிபிடிப்பதும், புலம்பெயர் தமிழர்களுக்கு மேற்குநாடுகளாலும், இந்தியாவாலும் கோடுகாட்டப்படும் தீர்வுக்கு ஆதரவைத் திரட்டுவதும் இவர்களின் பணி என்று கருதுகின்றேன். 

ஆனால் மேற்குநாடுகளும், இந்தியாவும் 13ம் திருத்தத் சட்டத்தில் உள்ள மாகாணசபைகளுக்கான மேலான தீர்வு எதையும் பரிந்துரைத்திருக்கமாட்டார்கள். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுகூட தீர்வுத் திட்டத்தில் இருக்காது. இது இப்படி இருக்க சிங்கள அரசு மாகாணசபையை முற்றாக நீக்கி அல்லது நீர்த்துப்போகச் செய்யும் யாப்பை உருவாக்குவதில் மும்முரமாக நிற்கின்றது.

எனவே, சுமந்திரனை திட்டுபவர்கள் சிங்கள அரசு புதிய யாப்பின்மூலம் தமிழருக்கு கொடுக்கும் "தீர்வையும்" சுமந்திரன்தான் எழுதினார் என்று இப்பவே திட்டத் தயாராவது நல்லது!

இலங்கை பாராளுமன்றத்தில் சத்திய பிராமணம் எடுத்த இருவர்  இலங்கையரசினை மீறி உங்களுக்கு தீர்வு  பெற்றுத் தருவார்கள் ....வானம் பாத்துக்க கொண்டு இருங்கோ.
அவர்கள் இருவரையும் ஒரு மண்ணாங்கட்டி நாடும் அழைக்கவில்லை ...தங்கட சொந்த காசில் வந்து[அல்லது இலங்கையரசு அனுப்பிச்சசுதோ தெரியாது ...வந்து முஸ்லிம்களோடு கதைத்து விட்டு ] முக்குடைபட்டு கொண்டு போயினம் ...உண்மையாய் தமிழர்களோடு கதைத்து ,நாடி பிடித்து பார்க்க வந்திருந்தால் வெளிப்படையாய் கூட்டத்தை கூட்டி பொறுமையாய் மக்களது கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஆம் இராணுவமும்,  அரசும் தம்மை பலப்படுத்த யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியது ...ஏன் புலிகளுக்கு அது தெரியாமல் இருந்ததா ?....1}ஏன் அவர்கள் தங்களை பலப்படுத்தவில்லை ?2} பேச்சு வார்த்தைக்கு போனால் இப்படி நடக்கும் என்று தெரிந்தால் ஏன் பேச்சு  வார்த்தைக்கு  போனார்கள்?...சிங்களவர்களை மொக்கன் ,மோடன்  என்று நினைத்தார்களா?

உண்மை ...மக்களை ஒன்றிணைக்க தலைவரால் மட்டும் தான் முடிந்தது ...அதே மக்களை அழிவுக்கு இட்டு செல்லவும் தலைவரால் மட்டுமே முடிந்தது .

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

மேலே ருல்பென் சொல்ல முனையும் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! இறுதி வரை வன்னிக்குள் இருந்து பின்னர் புனர்வாழ்வும் முடித்து வெளியே வந்த பல மட்டங்களிலும் இருந்த போராளிகள், செயல்பாட்டாளர்கள் பலர் மௌனமாக இருக்கின்றனர். சிலர் எழுத்தாளர்களாக மாறி விட்டனர்.

இந்த எழுத்தாளர்களிலும் இரு வகையினர்: தமிழ்க்கவி வகையினர் உண்மையைச் சொல்ல வெளிக்கிட்டு இன்று "சாகாத படியால் நீங்கள் துரோகிகளே!" என தூற்றல் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் வகை: வெற்றிச் செல்வி, நிலாந்தன் போன்றோர் தமிழ்க்கவி போன்றோர் சொல்லும் தகவல்களை மறுதலிப்பதுமில்லை, ஆதரிப்பதுமில்லை - எனவே இவர்களை தேசிய வீரர்கள் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!

பெரிய நகைச்சுவை இந்த முன்னாள் போராளிகளைத் தூற்றுவதில் முன்னணி வகிப்போர் எப்போதோ புலம் பெயர்ந்து (புலிகளின் பாஸ் என்ன கலர் என்று கூட அறியாமல்!😎) செட்டிலாகி விட்டோர் தான்! அண்மையில் கூட ஒரு யாழ் பரிமாற்றத்தில் ஒரு "தேசிய வீரர்" , இந்திய இராணுவத்தோடு  சண்டையிட்ட சிறி பால் சாத்திரி "ஏன் இயக்கத்தை விட்டு வந்தவராம்?" என்று நக்கலாகக் கேட்டதைப் பார்த்து சிரிப்புத் தான் வந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 
இங்கே எழுதும்  அத்தனை வாய்களும் வெற்றியை   மட்டும் எதிர்பார்த்து காத்திருந்திருந்தவைகளே...
தோற்றவுடன் முந்திக்கொண்டு ஒருவரில் பழி போட்டுவிட்டு ஒப்பாரி வைக்கும்  கூட்டம் எதுக்கும்  உதவாது
நாம  தான்  இனியாவது புரிந்து  விலகி  நடந்து  கொள்ளணுமே  தவிர
இவர்களிடம் மனம்?  சாட்சி??  உண்மை??? தர்மம்??????? என்று????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இலங்கை பாராளுமன்றத்தில் சத்திய பிராமணம் எடுத்த இருவர்  இலங்கையரசினை மீறி உங்களுக்கு தீர்வு  பெற்றுத் தருவார்கள் ....வானம் பாத்துக்க கொண்டு இருங்கோ.
அவர்கள் இருவரையும் ஒரு மண்ணாங்கட்டி நாடும் அழைக்கவில்லை ...தங்கட சொந்த காசில் வந்து[அல்லது இலங்கையரசு அனுப்பிச்சசுதோ தெரியாது ...வந்து முஸ்லிம்களோடு கதைத்து விட்டு ] முக்குடைபட்டு கொண்டு போயினம் ...உண்மையாய் தமிழர்களோடு கதைத்து ,நாடி பிடித்து பார்க்க வந்திருந்தால் வெளிப்படையாய் கூட்டத்தை கூட்டி பொறுமையாய் மக்களது கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பினம்

இதில இன்னுமொரு பகிடி என்னெண்டா சீமான் இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் அதை மீறி அவரால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையை முகநூலில் எழுதும் பலர் சுமந்திரனின் மிகப்பெரிய ஆதாரவாளர்கள்.. சுமந்திரனும் அதே வழியில் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்தான்.. அட சுமந்திரனிலயாவது கொஞ்சம் உண்மை வெளிப்ப்டையா தெரியாது ஆனா இந்த சைக்கிள் கோஸ்ட்டி இருக்கு***** சனத்தையும் பப்பாவில ஏத்திவிட்டிட்டு அங்கால அரசாங்கத்தில பாளிமெண்டில எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு *****************..

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .

நான் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியங்களை தொடராகப் படித்து வருகின்றேன். அதே மாதிரி வெற்றிச்செல்வனின் தொடரையும் படித்தேன். அரசியல் அறிவு கூடிய புளட்டில் என்ன நடந்தது என்று அறியலாம்!

மற்றைய இயக்கங்களில் நாபா ஒரு புரட்சிகாரன் என்ற பெயர் எடுத்தவர். ஆனால் இந்திய ஒட்டுக்குழுவாக மாறி மண்டையன் குழு கோரத்தாண்டவம் ஆட பார்த்துக்கொண்டிருந்தவர்!

எல்லா இயக்கங்களும்  சிங்களவர்களுடன் சமசரமாகப் போவது சில சலுகைகளுக்கு அப்பால் ஒன்றையும் தராது என்று விளங்கித்தான் இருந்தன. அவர்களால் நீண்ட போராட்டத்தை சரியாக நடாத்தக்கூடிய தலைமைத்துவம் இல்லை. தூர நோக்கும் இல்லை.

விலங்குப் பண்ணை நாவலில் இருந்து ஒரு மேற்கோள்:

“தோழர்களே, கிளர்ச்சி செய்வோம். புரட்சி எப்போது பொங்கும் என்று எனக்குத் தெரியாது. ஒரு வாரத்திலும் வரலாம், சில நூறு வருடங்களிலும் நடக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எப்படி என் காலடியில் இருக்கும் இந்த வைக்கோல் நிஜமோ, அப்படியே நியாயம் கிடைப்பதும் நிஜமாகும். உங்கள் பார்வையை அந்த உண்மையின்மீது வைத்திருங்கள். தோழர்களே, எல்லாவற்றுக்கும் மேலாக இந்தச் செய்தியை உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்குத் தெரிவியுங்கள். இனி வரும் தலைமுறையும் வெற்றி கிட்டும்வரை போராடட்டும்.

தோழர்களே, நினைவு இருக்கட்டும். உங்கள் உறுதி எப்போதும் எதற்காகவும் தடுமாறக்கூடாது. எந்த எதிர்வாதமும் உங்கள் உறுதியைத் திசை திருப்பக்கூடாது. மனிதனுக்கும் நமக்கும் பொதுவான குறிக்கோள் உண்டு என்றோ, அதில் ஒருவர் சுபிட்சம் அடைந்தால் மற்றவரும் சுபிட்சம் அடைவார் என்றோ யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள். அதெல்லாம் சுத்தப் பொய். மனிதன் தன்னைத்தவிர ஏனைய விலங்குகள்மீது எவ்வித அக்கறையும் இல்லாதவன். நம் விலங்கினத்திடம் மிகச் சரியான ஒற்றுமையும் தோழமையும் இருக்கவேண்டும். எல்லா மனிதர்களுமே விரோதிகள்தாம்; எல்லா விலங்கினமும் தோழர்கள்தாம்.’”

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஆம் இராணுவமும்,  அரசும் தம்மை பலப்படுத்த யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியது ...ஏன் புலிகளுக்கு அது தெரியாமல் இருந்ததா ?....1}ஏன் அவர்கள் தங்களை பலப்படுத்தவில்லை ?2} பேச்சு வார்த்தைக்கு போனால் இப்படி நடக்கும் என்று தெரிந்தால் ஏன் பேச்சு  வார்த்தைக்கு  போனார்கள்?...சிங்களவர்களை மொக்கன் ,மோடன்  என்று நினைத்தார்களா?

நான் சொல்ல வந்தது இலங்கை அரசு இதயபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதே...தெரியும்   1....  உலகநாடுகள். இலங்கையை பற்றி அறிய வேண்டும்  என்பதற்குக்கா. அமைதியாக இருந்தார்கள்     2...உலக நாடுகளுக்கும் தமிழரின் ஒரு பகுதியினருக்கும்.  உறுதியாக தெரியப்படுத்துவதற்க்கா   3.. சிங்களவன். மொக்கன் .   மோடன் என்பதில். எதாயினும்.  மற்றம் எற்பட்டுள்ளதா?. இல்லையே    

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொ

எப்போது தெரியும் கிடைக்காது.  என்று....போராடத் தொடங்க முன்னால  ?போராட தொடங்கிய பிற்பாட.? ஓரு சுந்த மாக வீரன் தோல்வி வரும் என்று சொல்லி போரை ஒருபோதும் இடைநடுவில்  விட்டுட்டு வரமாட்டன்  அப்படி வருவது தான்  உண்மையான தோல்வியாகும்.  தலைவர் தோற்கவில்லை   அவரைப் பெறுத்தமட்டில் அவர் வெற்றி பெற்றுயிருக்கிறார். போராட்டம் முடியும் வரை களத்தில் நிற்கும் வீரன்...முடிவு அவனுக்கு சார்பாக வரவிட்டாலும்கூட  வெற்றியாளன் தான் களத்தை விட்டு ஒடிய வீரார்களுக்குத் தான் இது தோல்வியாகும் அவரகள் அதை   இன்றுவரை அனுபவித்துக்கொண்டு   இருக்கிறார்கள்  

போராட முதல் பல இனக்கலவரங்கள்  வந்து அழிவு எற்படவில்லையா.?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

உண்மை ...மக்களை ஒன்றிணைக்க தலைவரால் மட்டும் தான் முடிந்த

பல இயங்கங்கள.....பலதலைவர்கள். ....இருக்கும் போதும் ஏன் இவரின்  கீழே ஒன்றிணைந்தார்கள்.   ?

10 hours ago, ரதி said:

அதே மக்களை அழிவுக்கு இட்டு செல்லவும் தலைவரால் மட்டுமே முடிந்தது .

இப்போது தலைவரும் அவரது குடும்பமும் சௌக்கியமாக வீடுகள்....கார்கள்.....சுற்றுலா...என்று வாழ்கிறார்கள்...மக்கள் மட்அழிந்துவிட்டார்கள்.  இல்லையா  ?

5 minutes ago, Kandiah57 said:

பல இயங்கங்கள.....பலதலைவர்கள். ....இருக்கும் போதும் ஏன் இவரின்  கீழே ஒன்றிணைந்தார்கள்.   ?

இப்போது தலைவரும் அவரது குடும்பமும் சௌக்கியமாக வீடுகள்....கார்கள்.....சுற்றுலா...என்று வாழ்கிறார்கள்...மக்கள் மட்அழிந்துவிட்டார்கள்.  இல்லையா  ?

மட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களன ம. ஆ. சுமந்திரனும் இராசமாணிக்கம் சாணக்கியனும் கனடாவில் கனடியத் தமிழ்க் காங்கிரசின் ஆதரவில் நடாத்திய கூட்டத்தில் கேள்விகள் கேட்க முற்பட்ட இளம் செயற்பாட்டாளர்களில் மூவரான நிருஜன், ஜெயந்தன் மற்றும் கார்த்திக் ஆகியோருடனான தமிழ்நெற்றின் பலகணி நேர்காணல்

On 26/11/2021 at 20:35, Justin said:

புலிகள் இயக்கத்தினுள் தலைமைக்கு விரும்பியதைச் சொல்பவர்கள் மட்டுமே தலைமையின் செவிமடுத்தலுக்கு அருகில் இருக்கலாம்! 

புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த அமைப்புக்களிலோ அல்லது நிறுவனங்களினிலோ முகாமையாளர்களாக உள்ளவர்கள் தங்களுடன் எதிர் முரண் கருத்துள்ளவர்களை அருகில் வைத்தபடி நிர்வாகம் செய்வது முடியாதது. சனனாயக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தில் கூட ஒத்த கருத்துள்ளவர்களை மட்டுமே முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் வைத்திருப்பார்கள்.

விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அதனை நோக்கி தமது உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருந்தவர்களை புலிகள் இயக்கம் பல சந்தர்ப்பங்களில் தட்டிக் கொடுத்து வளர்த்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அது எம்மை நாமே ஏமாற்ற சொல்லலாம் ...இந்தியா இருக்கும் வரை தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது ...அமெரிக்காவோ , மற்ற உலக நாடுகளோ இந்தியாவை, இலங்கையை  பகைத்து கொண்டு எங்களுக்கு தமிழீழம் எடுத்து தராது ...எடுத்து தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை

இந்தவிடயம். எப்போது தொடக்கம்...எப்படி உங்களுக்கு தெரியும்  ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மேலே ருல்பென் சொல்ல முனையும் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! இறுதி வரை வன்னிக்குள் இருந்து பின்னர் புனர்வாழ்வும் முடித்து வெளியே வந்த பல மட்டங்களிலும் இருந்த போராளிகள், செயல்பாட்டாளர்கள் பலர் மௌனமாக இருக்கின்றனர். சிலர் எழுத்தாளர்களாக மாறி விட்டனர்.

இந்த எழுத்தாளர்களிலும் இரு வகையினர்: தமிழ்க்கவி வகையினர் உண்மையைச் சொல்ல வெளிக்கிட்டு இன்று "சாகாத படியால் நீங்கள் துரோகிகளே!" என தூற்றல் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் வகை: வெற்றிச் செல்வி, நிலாந்தன் போன்றோர் தமிழ்க்கவி போன்றோர் சொல்லும் தகவல்களை மறுதலிப்பதுமில்லை, ஆதரிப்பதுமில்லை - எனவே இவர்களை தேசிய வீரர்கள் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!

பெரிய நகைச்சுவை இந்த முன்னாள் போராளிகளைத் தூற்றுவதில் முன்னணி வகிப்போர் எப்போதோ புலம் பெயர்ந்து (புலிகளின் பாஸ் என்ன கலர் என்று கூட அறியாமல்!😎) செட்டிலாகி விட்டோர் தான்! அண்மையில் கூட ஒரு யாழ் பரிமாற்றத்தில் ஒரு "தேசிய வீரர்" , இந்திய இராணுவத்தோடு  சண்டையிட்ட சிறி பால் சாத்திரி "ஏன் இயக்கத்தை விட்டு வந்தவராம்?" என்று நக்கலாகக் கேட்டதைப் பார்த்து சிரிப்புத் தான் வந்தது!

அப்போ நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பின் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி கதைப்பதே இல்லை?? சரியா?? 😎🤪
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மேலே ருல்பென் சொல்ல முனையும் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்!

உண்மை கசக்கும் 😟

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் அதை மீறி அவரால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையை முகநூலில் எழுதும் பலர் சுமந்திரனின் மிகப்பெரிய ஆதாரவாளர்கள்.. சுமந்திரனும் அதே வழியில் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்தான்.

சுமந்திரன் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக பாரளும்மன்றம் சென்று இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர். சீமான் தமிழக மக்களால் தேர்தல்களில்  தோல்வியை கண்டவர் எப்படி இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்தவர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ரதி said:

அப்படி சொல்ல முடியாது ....எங்களுக்கு மற்ற  இயக்கங்களை பிடிக்காது  என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும் , தலைவரை பிடிக்கும் என்பதற்காக  அவர்  செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது .மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .
தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொந்தமான இடங்கள் பறி போவதற்கு கூட அவர் தான் காரணம் .
மற்றைய இயக்கங்களுக்கு தலைவரை மாதிரி ஓர்மம் இல்லை என்பது உண்மை தான் ...ஆனால் , அதை விட உண்மை அவர்களுக்கு இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தது 
உண்மையையாய் தமிழ் மக்கள் மீது அக்கறையால்   போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அதே தமிழ் மக்களுக்காய் நிறுத்தி இருக்கலாம் ...நிறுத்தி இருந்தால் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது .

இப்போதெல்லாம்  ஒரு சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோட்டை கீறுவது வழமையாகி விட்டது. இது  ஈழத்தமிழர் சிலரிடம் உள்ள ஒரு தொற்று நோய்.

சிங்களம் இதுவரை காலமும் செய்த இன அழிப்புகளையும் திட்டமிட்ட இன கொலைகளையும் கிந்தியம் செய்த ஈழ படுகொலைகளையும் மறந்து  தம்மைத்தாமே அண்ணார்ந்து துப்பிய வண்ணம் உள்ளனர்.

புலிகள் காலத்தில் ஏனைய இயக்கங்கள் பொதுமக்களை பாலூட்டி சீராட்டி பாதுகாத்தது போல் இன்றைய சீன்கள் தொடராக ஓடுகின்றது.

"பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்து காட்டினானாம்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுமந்திரன் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக பாரளும்மன்றம் சென்று இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்.

சுமந்திரன் தேர்தலில் வெற்றி பெற்றவரா?  எப்படி?
அப்ப ஏன் போலிஸ்சு ஆமி சகிதம் சொந்த இடத்துக்கு விஜயம்? 🤪

Bild

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம்  ஒரு சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோட்டை கீறுவது வழமையாகி விட்டது. இது  ஈழத்தமிழர் சிலரிடம் உள்ள ஒரு தொற்று நோய்.

சிங்களம் இதுவரை காலமும் செய்த இன அழிப்புகளையும் திட்டமிட்ட இன கொலைகளையும் கிந்தியம் செய்த ஈழ படுகொலைகளையும் மறந்து  தம்மைத்தாமே அண்ணார்ந்து துப்பிய வண்ணம் உள்ளனர்.

புலிகள் காலத்தில் ஏனைய இயக்கங்கள் பொதுமக்களை பாலூட்டி சீராட்டி பாதுகாத்தது போல் இன்றைய சீன்கள் தொடராக ஓடுகின்றது.

"பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்து காட்டினானாம்"

அண்ணை, மன்னிக்கவேணும். அடிக்கடி உங்களைச் சாட்டிச் சிலபேருக்கு எழுதவேண்டியதாப் போகுது. 

உந்த மாற்றியக்கத்தாக்கள் இருக்கினமெல்லோ, அவையள் போராடி இனிப்பிரியோசனம் இல்லை, அரசோடு இணைஞ்சுதான் தமிழருக்கான தீர்வை எடுக்கலாம் எண்டு அறிவுபூர்வமாச் சிந்திச்சுத்தான் சேர்ந்தவையாம் கண்டியளோ. அதிலையும் உமா (வெற்றிச்செல்வன் போட்டுக் கிழி கிழியெண்டு கிழிக்கிறார் உமாவை, ஒருக்கால் உந்த புத்திசீவிகளைப் போய்ப் பாக்கச் சொல்லுங்கோ), டக்கிளஸ்  எண்டு தொடங்கி , கருணா பிள்ளையான், வியாழேந்திரன் எண்டு பலபேர் அரசோடு இணைஞ்சு தமிழருக்குத் தீர்வை எடுக்கப் போராடினவையாம். என்ன தீர்வெண்டு தெரியுமே? சொல்லுறன் கேளுங்கோ!

அவையின்ர தீர்வுகளின்ர பட்டியலில எனக்குத் தெரிஞ்சது மட்டும்....

1. போராட்டத்தைக் காட்டிக் குடுக்கிறது. இது ஒரு கலையண்ணை. பொடியள் எங்க நிக்கிறாங்கள், எங்க போய் வாறாங்கள் எண்டதில தொடங்கி, தலையாட்டுறது, அவங்களின்ர முகாம் எங்கயிருக்கெண்டு போட்டுக் குடுக்கிறது. பொடியள் எண்ட பேரில அப்பாவிகளைப் போட்டுக்குடுத்துச் சன்மானம் எடுக்கிறது. உப்பிடிக் கனக்கை இருக்கு. அதிலையும் அம்மாணும், அறிவுஜீவிப் பிள்ளையானும் இருக்கினமெல்லோ, அவையள் வேறை லெவெல். புலிகளின்ர குடும்பிமலை முகாமை அழிக்கிறதுக்கு ராணுவத்திற்கு முன்னோடியாப் போய் தாக்குதல் நடத்தப் போட்டி போட்டவையெண்டால் பத்துக்கொள்ளுங்கோ. 

2. உந்த டக்கிளஸ் மாமா இருக்கிறார் எல்லோ, அவர்  விசேஷம். மாநிலத்தில சுயாட்சி, மத்தியில கூட்டாட்சியெண்டு பேசிப்போட்டு தீவகத்திலை காட்டாசி நடத்துறவர். சின்னப் பெண்பிள்ளையளைக் கடத்திக்கொண்டு விபச்சாரத்துக்கு ஈடுபடுத்துறதிலையிருந்து, தீவகத்திலை குடும்பம் குடும்பமாய் சனத்தைக் கொண்டு போட்டவர். அனலை தீவிலையும், மண்டை தீவிலையும் வீடுகளுக்க உள்ளெட்டு கத்தியால வெட்டிக் கொண்டவர் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோ.

3. இப்ப உந்த கருணா - பிள்ளையான், டக்கிளஸ் எண்ட மாற்றியக்கத் தலைவர் மாரின்ர இன்னொரு விஷயத்தையும் சொல்லவேணும். தமிழரின்ர உரிமைக்காகப் போராடின, பேசின அரசியல்வாதிகளுக்கு உவையள் செய்தவேலை தெரியுமே? வேறை என்ன மண்டைதான் ! ரவிராஜ், பராரஜசிங்கம், நடேசன், நிமலராஜன் எண்டு நியாயமான தொகையில போட்டவையள். ஏனென்டால், இந்த எல்லாருமே சனத்தின்ர அவலங்களைப் பேசினதால அரசாங்கத்துக்குப் பிரச்சினையாய் இருந்த ஆக்கள். 

4. அதிலையும் அவை இப்ப எடுக்கிற அரசியல் நிலைப்பாடு இருக்கெல்லோ, ஆகா, சொல்லி வேலையில்லை. தமிழருக்குத் தீர்வை வேண்டித்தாறம் எண்டுட்டு, அரசாங்கத்தோட சேர்ந்து தமிழரின்ர அரசியல் பிரதிநிதித்துவத்தை அழிக்கிறது, பலவீனப்படுத்துறது, தமிழருக்குப் பிரச்சினையில்லை எண்டு சட்டிபிக்கேட் குடுக்கிறதெண்டு சரியான அரசியல் வேலைதான் செய்யினம். இல்லாட்டி அம்மாண், எதுக்காக கிரானில நிக்காமல் அம்பாறை திகாமடுல்லையில நிண்டு வாக்குக் கேக்க வேணும் எண்டு கேக்கிறன்? எல்லாம் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுக் குடுக்கத்தான் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன் ? 

5. பக்கத்து நாட்டுக்காரர் எங்கட ஊரிலை வந்து திரியேக்க உந்த மாற்றியக்கத்தார் எண்டுறவை செய்த வேலை தெரியுமே? அதையேன் கேப்பான்? ஆனால், என்னண்ணை, உந்த த்ரீ ஸ்டாரும், ஈ பீ ஆர் எல் எப்பும், ஈ என் டி எல் எப்பும், புளொட்டும், டெலோவும், ராஸீக்கும், புளொட் மோகனும், மாணிக்கதாசனும் செய்ததெல்லாம் தமிழரின் அரசியல் நலனுக்காகத்தான் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோ. 

இது என்ர சின்ன மூளைக்கு தெரிஞ்ச விஷயம் மட்டும்தான். உங்களுக்கும் கொஞ்சம் தெரியும் தானே? மிச்சத்தை எடுத்து விடுங்கோ. 

ஆனால் ஒண்டண்ணை, இதெல்லாமே உவையள் தமிழருக்குத் தீர்வு வேணுமெண்டு அரசாங்கத்தோட சேந்து செய்யிற நல்ல விஷயங்கள் எண்டு நான் சொன்னால் நீங்களும் நம்பவேணும். அதுசரி, உவையள் அரசாங்கத்தோட சேரத் துவங்கி கிட்டத்தட்ட 35 வருஷமாச்சுது அண்ணை, இன்னும் தீர்வைக் கண்ணில காட்டுறாங்களில்லையண்ணை. உங்களுக்குத்தான் உந்த மாற்றியக்க அனுதாபிகளோட பேச்சுவார்த்தை இருக்கெல்லே, ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோ, குறை நெய்க்காமல் !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஷயம் சொல்லவேணும். உந்த மாற்றியக்கத்தார் தமிழரின்ர நலனில அக்கறை கொண்டுதான் போராட்டத்தைக் கைவிட்டு அரசாங்கத்தோட சேர்ந்து தீர்வுக்கு வேலை செய்யினம் எண்டு நான் சொல்லுறதுக்கும் ஒரு காரணம் இருக்கண்ணை. அப்படிப் பொதுவாச் சொன்னாத்தானே சைக்கிள் காப்பில என்ர அண்ணைமாரையும் நான் நியாயப்படுத்தலாம், என்ன நான் சொல்லுறது? 

10 hours ago, nunavilan said:

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 
இல்லை, நுணா. இதற்கொரு காரணம் இருக்கிறது. அதாவது, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அழிக்கத் துணை நின்றவர்களைச் சரியானவர்கள் என்று நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி, தலைவரையும் , போராட்டத்தையும் தவறென்று வாதிட்டு நிறுவுவதுதான். இதன் பின்னாலுள்ள சூட்சுமமும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

அப்போ நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பின் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி கதைப்பதே இல்லை?? சரியா?? 😎🤪
 
உங்களுக்கு ஒரு கருத்தின் "பின்னணி" என்பதை விளக்குவது கஷ்டம் தான்! தமிழர் யாரும் எந்தக் காலப் பகுதியையும் பற்றிக் கதைக்கலாம் - ஆனால் போராளியாக இருந்து தப்பி வந்தவனை போராடப் போகாமல் வெளியேறி வந்தவன் துரோகி எனும் போது எல்லாத் துவாரங்களாலும் சிரிக்க வேண்டியிருக்கிறது!

(விளங்கியுருக்காதே?😎 - பரவாயில்லை - நகருங்கள்!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.