Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை..

முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம்

"என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது"

"பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா"

"ஐயோ கடவுளே  இன்றைக்கு நல்லூர் தேர் ,

ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர்  கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன்  முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார்.

கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல்  மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம்.

நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் .

மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று எனசொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம்.

இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி  தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார்

"தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்"

"ஒம் அம்மா"

அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை...

இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள்.

நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில்  புயையிரத நிலையத்தில்  பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர்  நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால்  நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது

பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன்  எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான்.

நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள்  வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து  துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன்,

வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால்  வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு  தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார்.

"என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் "

"இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் "

" கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்"

" ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே"

" அங்க நான் போகவில்லை"

"சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்"

"முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு  வந்தேன்"

முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் .

"டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது  இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...."

தெகிவள பயின்டா....

சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன்.

வெளிநாட்டிலயே  வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் .

நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார்.

என்னை கண்டவுடன்.

" இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது"

"அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்"

" என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்"

முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று

புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ  மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு

முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக  வீடு திரும்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 புத்தனின் சிறுகதைகள் வாசித்து நீண்ட நாட்களாகி விட்டது. பதிந்ததில் மகிழ்ச்சி   . 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார்

புத்தனின் முத்திரை!😜

அடிக்கடி கிறுக்குங்கள் புத்தரே😀

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் முருகன் மச்சம் சாப்பிடுகிறவர்களையும் பெரிசாய் கண்டு கொள்கிறதில்லை.....என்ன இந்த மனிசிமார்தான் அப்பப்ப மறக்காமல் நக்கல் அடிப்பினம்......நீண்ட நாட்களின்பின் சிறப்பான கிறுக்கல் புத்ஸ்.   நன்றி .....!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருகன் புத்தனை கைவிட்டாலும் சிட்னி முருகனை புத்தன்  கைவிடார்....😷

கதையும் கதை சொன்ன விதமும் அழகு.....தொடருங்கள் புத்தன்.👍

புத்தன்,

உங்கள் இந்த சிறுகதையை யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

புத்தன்,

உங்கள் இந்த சிறுகதையை யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தவா?

எனக்கு பிரச்சனை இல்லை ...நகர்த்துங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு என்று தனிப்பட்ட ஒரு எழுத்து நடை எப்போதும் உண்டு...!

அதே நேரம் சிட்னி முருகனுடன் ஒரு தனகலும் கட்டாயம் இருக்கும்!

கன காலம் முருகனைக் காணவில்லை..! புத்தன் நினைவு படுத்தலுக்கு நன்றி..!

சிட்னி முருகனுக்குக் கப்பறாளை பூசை செய்யும் உவமானத்தை மிகவும் ரசித்தேன்!

முருகன் நிச்சயம் சிங்களவனல்ல! வசதியாக வாழத் தெரிந்த ஒரு மறத் தமிழன்...!

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 04:04, putthan said:

52 minutes ago, புங்கையூரன் said:

புத்தனுக்கு என்று தனிப்பட்ட ஒரு எழுத்து நடை எப்போதும் உண்டு...!

அதே நேரம் சிட்னி முருகனுடன் ஒரு தனகலும் கட்டாயம் இருக்கும்!

கன காலம் முருகனைக் காணவில்லை..! புத்தன் நினைவு படுத்தலுக்கு நன்றி..!

சிட்னி முருகனுக்குக் கப்பறாளை பூசை செய்யும் உவமானத்தை மிகவும் ரசித்தேன்!

முருகன் நிச்சயம் சிங்களவனல்ல! வசதியாக வாழத் தெரிந்த ஒரு மறத் தமிழன்...

தோழர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..💐

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை கிளறிய, நல்ல கதை புத்தன். 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் சிறுகதைகள் வாசித்து நீண்ட நாட்களாகி விட்டது. பதிந்ததில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2022 at 14:34, putthan said:

இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது"

கொழும்புகாரர் வந்த மாதிரி அவுசிலிருந்து நீங்களும் போய் படம் காட்டேலாமல் போட்டுதென்ற கவலை தெரியுது.
பரவாயில்லை முருகன் எங்கே போயிடப் போறார்.
“புத்தா சீ யூ நெக்ஸ் இயர்” என்று சொன்னவர் கேட்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் நகைச்சுவை ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல குசும்பான கதை😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 10:00, நிலாமதி said:

 புத்தனின் சிறுகதைகள் வாசித்து நீண்ட நாட்களாகி விட்டது. பதிந்ததில் மகிழ்ச்சி   . 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி நிலாமதி 

On 19/2/2022 at 20:08, கிருபன் said:

புத்தனின் முத்திரை!😜

அடிக்கடி கிறுக்குங்கள் புத்தரே😀

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி கிருபன் ...கிறுக்குவதே எனது பொழுது போக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 20:47, suvy said:

இப்போதெல்லாம் முருகன் மச்சம் சாப்பிடுகிறவர்களையும் பெரிசாய் கண்டு கொள்கிறதில்லை.....என்ன இந்த மனிசிமார்தான் அப்பப்ப மறக்காமல் நக்கல் அடிப்பினம்......நீண்ட நாட்களின்பின் சிறப்பான கிறுக்கல் புத்ஸ்.   நன்றி .....!  👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி 

அவர் மாறினாலும் உந்த மனிசிமார் மாறினம் இல்லை...அவரின்ட ஏஜன்ட்மார் (ஐயர்மார்) கொஞசம் கொஞ்சமாக மாறி வருயினம் .....அவையள் மாறினால் எங்கன்ட மனிசிமாறும் மாற சந்தர்ப்பம் உண்டு 

On 19/2/2022 at 21:16, குமாரசாமி said:

முருகன் புத்தனை கைவிட்டாலும் சிட்னி முருகனை புத்தன்  கைவிடார்....😷

கதையும் கதை சொன்ன விதமும் அழகு.....தொடருங்கள் புத்தன்.👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்மிக்க நன்றி கு.சா...அவனில்லாமல் சிட்னி புத்தன் இல்லை😅
நானும் அழகு என்று மனிசி இடக்கிட சொல்லுறவ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2022 at 12:04, புங்கையூரன் said:

புத்தனுக்கு என்று தனிப்பட்ட ஒரு எழுத்து நடை எப்போதும் உண்டு...!

அதே நேரம் சிட்னி முருகனுடன் ஒரு தனகலும் கட்டாயம் இருக்கும்!

கன காலம் முருகனைக் காணவில்லை..! புத்தன் நினைவு படுத்தலுக்கு நன்றி..!

சிட்னி முருகனுக்குக் கப்பறாளை பூசை செய்யும் உவமானத்தை மிகவும் ரசித்தேன்!

முருகன் நிச்சயம் சிங்களவனல்ல! வசதியாக வாழத் தெரிந்த ஒரு மறத் தமிழன்...!

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி புங்கை அண்ணா அவன் வசதியா வாழத் தெரிந்தவன் மட்டுமல்ல பக்தர்களையும் வசதியாக‌ வாழவைக்கும் சூரன் 

On 20/2/2022 at 12:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..💐

நன்றி தோழரே வருகைக்கும் வரவேற்ப்புக்கும்

On 21/2/2022 at 05:09, தமிழ் சிறி said:

பழைய நினைவுகளை கிளறிய, நல்ல கதை புத்தன். 👍🏽

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிறி

On 21/2/2022 at 11:28, பெருமாள் said:

புத்தனின் சிறுகதைகள் வாசித்து நீண்ட நாட்களாகி விட்டது. பதிந்ததில் மகிழ்ச்சி.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2022 at 12:08, ஈழப்பிரியன் said:

கொழும்புகாரர் வந்த மாதிரி அவுசிலிருந்து நீங்களும் போய் படம் காட்டேலாமல் போட்டுதென்ற கவலை தெரியுது.
பரவாயில்லை முருகன் எங்கே போயிடப் போறார்.
“புத்தா சீ யூ நெக்ஸ் இயர்” என்று சொன்னவர் கேட்டதோ?

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ... இந்தியாவுக்கு போய் கொஞ்சம் சொப்பிங் செய்து போட்டு முருகனிட்ட வார ஊர்சனத்துக்கு கலர் காட்டலாம் என்றால் ,கொரனா  முட்டுக்கட்டை போடுது

On 24/2/2022 at 08:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புத்தனின் நகைச்சுவை ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல குசும்பான கதை😀

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ... சுமே

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் போல சிட்னி முருகனோட தான்.ஒரே முருகனை ரொய் ஆக்காமல் வேற ஏதாவது ஒன்றை எடுத்து வாங்கோ .✍😃👋

  • கருத்துக்கள உறவுகள்

On 20/2/2022 at 02:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.

உங்களின் அருமையான கதை அந்தநாள் ஞாபகத்தை எனக்குக் கொண்டுவந்தது புத்தரே,

எனது இல்லத்தரசி அன்று என் காதலியாக இருந்ததால் உங்களைப்போல் நல்லூரில் பெண்களுக்குக் கடலைபோடும் எண்ணத்திற்குக்கூட என் இதயம் இடம்தரவில்லையே.😩

  • கருத்துக்கள உறவுகள்

கோவணத்தானை சுரண்டாமல் புத்தனின் கதை இல்லை    வாழ்த்துக்கள் அண்ண

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2022 at 18:39, யாயினி said:

எப்போதும் போல சிட்னி முருகனோட தான்.ஒரே முருகனை ரொய் ஆக்காமல் வேற ஏதாவது ஒன்றை எடுத்து வாங்கோ .✍😃👋

நன்றி யாயினி ,முருகன் இல்லாத உலகமா அவன் இன்றி அணுவும் அசையாதே...

இப்ப தான் கொரனா முடிவடைந்துள்ளது இனி அதிகம் வெளிக்கிட்டு திரியலாம்...கதை கரு கிடைக்கும் என் எதிர் பார்க்கலாம்.

On 25/2/2022 at 22:07, Paanch said:

உங்களின் அருமையான கதை அந்தநாள் ஞாபகத்தை எனக்குக் கொண்டுவந்தது புத்தரே,

எனது இல்லத்தரசி அன்று என் காதலியாக இருந்ததால் உங்களைப்போல் நல்லூரில் பெண்களுக்குக் கடலைபோடும் எண்ணத்திற்குக்கூட என் இதயம் இடம்தரவில்லையே.😩

நன்றி பாஞ்..நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள் முருகன் ...பதின்மவயதில் காதலியை தந்து விட்டார்...எனக்கு கலியாணம் கட்டமட்டும்  காதலியை காட்டவில்லை அதுதான் முருகனோட ஒரு இது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2022 at 04:13, தனிக்காட்டு ராஜா said:

கோவணத்தானை சுரண்டாமல் புத்தனின் கதை இல்லை    வாழ்த்துக்கள் அண்ண

நன்றி ராஜா அவனே எல்லாம்...அவன் ஆட்டிப்படைக்கிறான் நாங்கள் ஆடுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

நன்றி பாஞ்..நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள் முருகன் ...பதின்மவயதில் காதலியை தந்து விட்டார்...எனக்கு கலியாணம் கட்டமட்டும்  காதலியை காட்டவில்லை அதுதான் முருகனோட ஒரு இது

உண்மையைச் சொல்லுங்கள் புத்தரே! உங்கள் பக்தர்களே உண்மையைத் திரிவுபடுத்துபவர்கள் என்று இன்று உலகமும் அறியும். உங்கள் இதயம் ஒருத்தியைக்கூடக் காதலித்தது இல்லையா?? அந்தக் காதலிக்கு உங்கள் காதல் தெரியாதிருந்தது வேறுகதை. 😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2022 at 01:45, Paanch said:

உண்மையைச் சொல்லுங்கள் புத்தரே! உங்கள் பக்தர்களே உண்மையைத் திரிவுபடுத்துபவர்கள் என்று இன்று உலகமும் அறியும். உங்கள் இதயம் ஒருத்தியைக்கூடக் காதலித்தது இல்லையா?? அந்தக் காதலிக்கு உங்கள் காதல் தெரியாதிருந்தது வேறுகதை. 😋

என்ட இதயம் காதலித்தது ஒருத்தியை மட்டுமல்ல ,பல இளம் பெண்களின் இதயத்தை ...ஆனால் ஒரு இதயமும் பதிலுக்கு என்னை காதலிக்கவில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

என்ட இதயம் காதலித்தது ஒருத்தியை மட்டுமல்ல ,பல இளம் பெண்களின் இதயத்தை ...ஆனால் ஒரு இதயமும் பதிலுக்கு என்னை காதலிக்கவில்லை🤣

நீங்கள் ஒரு இதயத்தை காதலித்திருந்தால் அது கைகூடியிருக்கும்......நீங்கள் பல இதயங்களை காதலித்தபடியால் அத்தனையும் உங்களை அண்ணனாக ஏற்றுக் கொண்டு விட்டன போலும்.இது ஒரு வல்லிய சோகமானு ......!   😢  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.