Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த ஜென்மத்திற்கும் இந்த மனைவி வேண்டாம்: நொந்த கணவர்கள் வெந்த மனதுடன் வேண்டுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஜென்மத்திற்கும் இந்த மனைவி வேண்டாம்: நொந்த கணவர்கள் வெந்த மனதுடன் வேண்டுதல்

25-6.jpg

மஹாராஷ்டிராவில் மனைவிகள் எல்லாம், 7 ஜென்மத்திற்கும் தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டுமென ஆல மரத்தைச் சுற்றி வந்து வழிபட்ட நிலையில், கணவர்கள் சிலர், இனி எந்த ஜென்மத்திற்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து அரச மரத்தை 108 முறை எதிர்திசையில் சுற்றி வழிபட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். கணவனின் வெற்றிக்கு தூண்டுதலாகவும், தோல்வியடையும்போது தோள்கொடுத்து அரவணைத்து தட்டிக்கொடுக்கும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாக கருதலாம். ஆனால், சில கணவன்மார்கள் மனைவி வரமாக அமையாமல், பாரமாக இருப்பதாக நினைக்கின்றனர். கணவனின் அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் சில மனைவிகள் வைத்திருப்பதால் தாங்கள் குடும்பத்திற்காக உழைத்தும் வீட்டிற்கு வந்தால் சுதந்திரம் இல்லாமல் கொடுமையையே அனுபவிப்பதாக பலரும் புலம்புவதும் நடக்கதான் செய்கிறது.

இதன் வெளிப்பாடே சில இடங்களில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் உருவானதாக சில செய்திகளையும் பார்த்திருக்கிறோம். இது ஒருபுறம் இருக்க மனைவிகளோ ‛கணவனே கண்கண்ட தெய்வம்’ என போற்றிப்பாடிவதும் இருக்கிறது. என்னதான் குடும்பத்தில் கணவன் – மனைவி பிரச்னைகள் இருந்தாலும், கணவனே சிறந்தவன் என பல மனைவிமார்களும் சொல்வதும் உண்டு. இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக மஹாராஷ்டிராவில் வினோதமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.

மஹா.,வில் உள்ள அவுரங்காபாத்தில் ‘வட் பூர்ணிமா’ தினம் நேற்று (ஜூன் 14) கொண்டாடப்பட்டது. இந்த நாளில் மனைவிகள் எல்லாம், 7 ஜென்மத்திற்கும் தற்போது உள்ள வாழ்க்கை துணையே கணவராக வர வேண்டுமென ஆலமரத்தைச் சுற்றி வந்து வழிபட்டனர். ஆனால், அதற்கு முந்தைய நாளில் கணவர்கள் சிலர், இனி எந்த ஜென்மத்திற்கும் இதே வாழ்க்கை துணை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து அரச மரத்தை 108 முறை எதிர்திசையில் சுற்றி வழிபட்டுள்ளனர். மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சங்கம் சார்பில் இந்த வினோத வழிபாடை நடத்தியுள்ளனர்.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பாரத் புலாரே கூறுகையில், ‛வட் பூர்ணிமா விழாவில் பெண்கள் ஆலமரத்தை வணங்கி, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும், ஏழு ஜென்மங்களுக்கும் ஒரே கணவனை பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். எனவே அதற்கு முந்தைய நாளில், நாங்கள் இதே வாழ்க்கை துணையை எந்த ஜென்மத்திலும் பெறக்கூடாது என அரச மரத்தை வணங்கினோம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, ஆண்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பும் வகையில் சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், இந்த போராட்டத்தை நடத்தினோம்’ என்றார்.

https://akkinikkunchu.com/?p=212453

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

  • கருத்துக்கள உறவுகள்

காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு.

பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

வருத்தப்படும் கணவர்கள் சங்கம் என்று பெயர் வைத்தால் நல்லது....😁

1 hour ago, ராசவன்னியன் said:

காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு.

பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!

ஆனானப்பட்ட பணக்காரரான, மனைவி அம்பேரிடம் சாத்து வாங்கிய ஜோன்னி டெப்பை கேட்டால், மேல உள்ள சங்கத்தில் சேருவார். 🤭

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வருத்தப்படும் கணவர்கள் சங்கம் என்று பெயர் வைத்தால் நல்லது....😁

ஆனானப்பட்ட பணக்காரரான, மனைவி அம்பேரிடம் சாத்து வாங்கிய ஜோன்னி டெப்பை கேட்டால், மேல உள்ள சங்கத்தில் சேருவார். 🤭

அவர்தான் ஆரம்பித்தாரோ என்னமோ........!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

கடவுள் பிரசர் குளிசை போடுவார் என நினைக்கிறேன்.😂

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

கடவுள் பிரசர் குளிசை போடுவார் என நினைக்கிறேன்.😂

ஆயக்கிணை தாளமா நஞ்சை எடுத்த குடித்த ஆளப்பா ... அவரும் உதுக்குள்ள நிற்பார் ... 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

ஆயக்கிணை தாளமா நஞ்சை எடுத்த குடித்த ஆளப்பா ... அவரும் உதுக்குள்ள நிற்பார் ... 😁

ஏன் காசி,இராமேஸ்வரம் எல்லாம் எப்பவும் ஹவுஸ் புஃல்  எண்டு யோசிச்சால் மிச்சம் ஓடி விளங்கும் :cool:

bigners.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஏன் காசி,இராமேஸ்வரம் எல்லாம் எப்பவும் ஹவுஸ் புஃல்  எண்டு யோசிச்சால் மிச்சம் ஓடி விளங்கும் :cool:

bigners.jpg

ஏன் ஜயப்பன் 40 நாட்கள் பத்தினி உட்பட தவிர்த்து உபவாசம் என்பதை மறந்தீர்கள் அண்ணா 😜

  • கருத்துக்கள உறவுகள்

வி சேகர் படம் ஒன்றில் வடிவேலு சரளா தம்பதிகள். முதலில் மனைவியை போட்டு விளாசி மிரட்டி வைத்திருப்பார் வடிவேலு, ஒரு சீனில் அப்படியே உல்டாவாகி சரளா வடிவேலுவை போட்டு பிரட்டி எடுப்பார்🤣.

எனக்கு என்னமோ மனைவியிடம் அடிவாங்கும் பலர் இப்படிதான் அடி வாங்க தொடங்கி இருப்பார்கள் என படுகிறது. 

அப்புறம் புருசலட்சணம் ரொம்ப முக்கியம் - தண்ணி அடிச்சு, வேலைக்கு போகாமல், மனைவி சம்பளத்தில் வாழ்ந்தால் மனைவியிடம் மட்டும் அல்ல மாமியாரிடமும் அடி வாங்க வேண்டியும் வரலாம்.

Domestic violence என்பது இருபாலருக்கும் பொதுதான் - இது எனது unconscious bias ஆக இருக்கலாம் - ஆனால் சராசரியாக ஆண்கள் தானா பலமானவர்கள் - அடித்தால் திருப்பி ரெண்டு குடுக்கவா முடியாது?

அப்படி முடியாது என்றால் விட்டு விட்டு போவது. இதற்கு போய் சங்கம் எல்லாம் வச்சு - மரத்தை சுத்தி நடந்து போராட்டம் - கொஞ்சம் நானனென்ன இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..

ஐயனுக்கு அடி பலமோ?

1 hour ago, விசுகு said:

ஏன் ஜயப்பன் 40 நாட்கள் பத்தினி உட்பட தவிர்த்து உபவாசம் என்பதை மறந்தீர்கள் அண்ணா 😜

காசிக்கு போனவன் போனதுதான்.
ஐயப்பனிட்டை போனால் திரும்பி வந்து பழைய பல்லவி எல்லோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஐயனுக்கு அடி பலமோ?

ஜயன் அடிக்கடி காணாமல் போகும் போது தெரியவில்லையா அண்ணா?😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, விசுகு said:

ஜயன் அடிக்கடி காணாமல் போகும் போது தெரியவில்லையா அண்ணா?😂

குருதிப்புனல் கமல் மாதிரி இல்லாவிட்டால் சந்தோசம் 😁

Kuruthipunal (1995) - IMDb

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

குருதிப்புனல் கமல் மாதிரி இல்லாவிட்டால் சந்தோசம் 😁

Kuruthipunal (1995) - IMDb

தொடக்கத்தில.... அடி காயம்.... மோபைல் போனுக்குத்தான்.... இப்ப... நிலைமை எப்படியோ தெரியவில்லை...... அட மனிசன் எத்தனை போன் எண்டு வாங்கிறது.....அதுக்கு நாலு அடிய வாங்கலாமெல்லே....

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

குறைவு. ஆனாலும் வெளியே சொல்வதில்லை என்பதால் மிக மிகக்குறைவாக காட்டப்படுகிறது. 

ஆனால் இவர்கள் வெளியே வந்து தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்வது நல்லது ஏனெனில், வெளியே சொல்லவிடாத ஆண் என்ற கர்வம் வேறு பிரச்சனைகளைத்தான் கொண்டு வருகிறது.. 

இப்படி வெளியே வந்து கூறி பிரிந்து போனால் வேறு குடும்பங்களில் பிரச்சனை வராமல் நிம்மதியாக இருப்பார்கள்.. அதைவிடுத்து சமூகத்தில் தங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள், உறவுகள், நண்பர்கள் ஆண் என மதிக்கமாட்டார்கள் என்று மனைவியின் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு வேறு இடங்களில் தங்களது கோபங்களை, இயலாமையை காட்டுவார்கள்.. அவ்வளவுதான்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு.

பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!

இதுவும் காலம் காலமாகச் சொல்லப்படும்.. "புரட்சிக்" கருத்து. 

ஆனால் ஆய்வுகளின் படி... பெண்களே அதிகம்.. verbal abuse இல் ஈடுபடுகிறார்கள். physical abuse இலும் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதே அன்றி குறைந்த பாடில்லை. 

உண்மையான உலகை தரிசிக்காமல்.. பிரச்சனைகளுக்கு முடிவு தேட முடியாது. உண்மை நிலையை மூடி மறைத்து..புரட்சி வசனம் பேசுவதால்... பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர தீர்வு கிட்டாது. 

abuse.png

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

இதுவும் காலம் காலமாகச் சொல்லப்படும்.. "புரட்சிக்" கருத்து. 

ஆனால் ஆய்வுகளின் படி... பெண்களே அதிகம்.. verbal abuse இல் ஈடுபடுகிறார்கள். physical abuse இலும் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதே அன்றி குறைந்த பாடில்லை. 

உண்மையான உலகை தரிசிக்காமல்.. பிரச்சனைகளுக்கு முடிவு தேட முடியாது. உண்மை நிலையை மூடி மறைத்து..புரட்சி வசனம் பேசுவதால்... பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர தீர்வு கிட்டாது. 

abuse.png

இந்த மாதிரி திரிகளில் நான் சீரியஸாக எழுதுவதாக நினைப்பதுண்டு ஆனால் நீங்கள் ஒருபடி மேலே போய் தரவுகளுடன் இணைத்துள்ளீர்கள்..

குடும்ப வன்முறைகள்.. எல்லோரையும் விட இந்த குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவது குழந்தைகளே.. அவர்களுக்கு போக்கிடம் இல்லாமல் foster care, government approved centresல் அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் விபரிக்கமுடியாதவை

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து எத்தனை பிறவிகள் எனக்கு இருந்தாலும் அத்தனை பிறவிகளிலும் என் மனைவியே எனக்குத் துணைவியாக வரவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் பதிந்துவிட்டதால் இந்தப் பதிவிற்கான கருத்தாடலில் பங்குபற்ற நான் வரவில்லை.🙏😌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இதுவும் காலம் காலமாகச் சொல்லப்படும்.. "புரட்சிக்" கருத்து. 

ஆனால் ஆய்வுகளின் படி... பெண்களே அதிகம்.. verbal abuse இல் ஈடுபடுகிறார்கள். physical abuse இலும் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதே அன்றி குறைந்த பாடில்லை. 

உண்மையான உலகை தரிசிக்காமல்.. பிரச்சனைகளுக்கு முடிவு தேட முடியாது. உண்மை நிலையை மூடி மறைத்து..புரட்சி வசனம் பேசுவதால்... பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர தீர்வு கிட்டாது. 

abuse.png

அப்படியே female victims க்கான தரவுகளையும் போட்டிருக்கலாம். நெடுக்ஸ் போடாததால் எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ளமுடிகின்றது😁

https://www.ons.gov.uk/peoplepopulationandcommunity/crimeandjustice/articles/thelastingimpactofviolenceagainstwomenandgirls/2021-11-24

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

அரசமரத்தை சுத்தி போட்டு போனவங்கள் எத்தனைபேர் உயிரோடை இருக்கிறாங்களோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாத்தையும் பாக்க கலியானம் கட்டவே பயமாய் இருக்கு.😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

இதெல்லாத்தையும் பாக்க கலியானம் கட்டவே பயமாய் இருக்கு.😂

பேரனுக்குத்தானே???😜

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

பேரனுக்குத்தானே???😜

விசுகர் நீங்கள் ஒரு ஜீனியஸ் ........!   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்சிங்கங்களின் அவலங்களில் ஒன்று.....🙃
சொந்த சோகம் பெரிய சோகம் 😂

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.