Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு (Video) 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நம்ம ஹிருணிக்கா எங்க போனாலும் அங்க நெருப்பு பத்திகிதாமே?

கோட்டாவின் மீரிஹான வீடு…..

ஞானாக்கா வீடு…..

ஜனாதிபதி மாளிகை…..

ரணில் வீடு…..

#ஐயோ பத்திக்கிச்சு

அங்க மட்டுமா எரியுது .......
இங்கு எட்டு பத்து வருசமா எரியுது 

  • Replies 50
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  அணைப்பா தீயை, அணைப்பா! பதறாதீங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு றோயல் கல்லூரிக்கு ராணி இந்த வீட்டை கொடுத்தார் என்றால், மிகவும் வேடிக்கை.

ரணில்  ஐ ராயல் கல்லூரி ஏற்கவில்லை ஏணி நினைக்கிறீரேன். அது,unp, slfp க்கு இடையில் இருந்த அரசியல் ரணிலின் படிப்பில் கைவைக்கும் வரை சென்றது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நம்ம ஹிருணிக்கா எங்க போனாலும் அங்க நெருப்பு பத்திகிதாமே?

கோட்டாவின் மீரிஹான வீடு…..

ஞானாக்கா வீடு…..

ஜனாதிபதி மாளிகை…..

ரணில் வீடு…..

#ஐயோ பத்திக்கிச்சு

 

ஹிருணிக்கா ஒரு தீ  தேவதை ,,,,
நெருப்படா என்னை நெருங்கடா.....

She's on fire,🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது

பிரதமரின், பிரத்தியேக இல்லத்திற்கு... தீ வைத்த சம்பவம்: மூவர் கைது

இதேவேளை பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யா-எல, காலி மற்றும் கல்கிசை பகுதியைச் சேர்ந்த 19, 24 மற்றும் 28 வயதுடையவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 hours ago, satan said:

சுமந்திரனின் பொலிசி அது! அக்கினி அழகாக சொல்வார். நீங்கள் அப்படிக்க என்றால்; இவர் இப்படிக்க.... என்று சுத்துவார். அவர் ரணிலின் தோஸ்து! ஏனையோரின் சொத்துக்கள் எரியும்போது கருத்து சொல்லாதவர், தமிழர் சொத்துக்கள் எரியும்போது, சூறையாடப்படும்போது அனுதாபம் தெரிவிக்க மறந்தவர், இப்போ மட்டும் போதிக்கிறார் என்றால் பாருங்கோவேன்! 

தன் வீடடையும் நினைச்சிருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார் 

நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டைப் பார்வையிடச் சென்ற உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆதரவாளர்கள் சிலரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.

இதேவேளை தீயில் எரிந்த பிரதமரின் வீட்டைப் பார்வையிட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன் இன்று காலை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/எதிர்ப்பினால்-தேரர்-வெளியேறினார்/175-300116

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் வீட்டிற்கு தீ மூட்டிய மூவர் கைது

Published by Vishnu on 2022-07-10 12:47:50

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை அலரிமாளிகையில் இருந்த தீயணைப்பு கருவியை திருடிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துளார்.

இவர்கள் கல்கிஸ்ஸ, ஜாஎல, காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகின்றன.

 

https://www.virakesari.lk/article/131190

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைப்பு : சந்திரிகா கண்டனம் : சர்வதேசம் கவலை தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 09 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளதோடு , நோர்வே மற்றும் ஆப்கானிஸ்தான் என்பன கவலை வெளியிட்டுள்ளன.

09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பு - 5 ஆம் வீதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் வீட்டின் மீது தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினர்.

இதனால் பிரதமரின் இல்ல வளாகத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்த கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து செல்லவில்லை.

இதனையடுத்து பிரதமரின் இல்லத்திற்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதோடு , தீப்பற்றியெறியும் காணொளி பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதன் போது பிரதமர் பிரத்தியேக இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். காரணம் குறித்த வீட்டினை பிரதமர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினாலாகும்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், 'ரணில் விக்ரமசிங்க தனக்குப்பின்னர் தனது இல்லத்தை அரச பாடசாலையொன்றுக்கு வழங்கியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி அந்த இல்லத்திற்குள் பெறுமதியான புத்தகங்களுடன்கூடிய நூலகம் இருப்பதை அவரது நேர்காணல் காணொளிகளில் கண்டிருக்கிறோம். அத்தகைய இல்லத்திற்குத் தீவைப்பதென்பது மிகமோசமான குற்றச்செயலாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பதிவில் , 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதை  வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு மோசமான அரசாங்கத்தை விரட்டி, மக்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலக்கை அடைய போராட்டக்காரர்களுக்கு வன்முறை தேவையில்லை.' என்று குறிப்பிட்டுள்ளார்.

'அறவழிப் போராட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பின்னடையச் செய்யும் வகையிலான தீ வைப்பு, கொள்ளையிடுதல் போன்ற வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம' என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசமும் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் , 'அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பிரதமர்  இல்லம் எரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

எந்தச் சூழலிலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. வன்முறை விரிவடைவதைத் தடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.  போராட்டக்காரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

'வன்முறை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பது  நியாயமற்றது.  இலங்கையில் இதுபோன்று பொது ஒழுங்கை மீறுவது நாட்டின் பிரச்சினைகளை ஆழமாக்குகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை பாதிக்கிறது.  தேசிய ஒற்றுமை மற்றும் சர்வதேச உதவி மூலம் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் ' என ஆப்கானிஸ்தான் தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/131192

  • கருத்துக்கள உறவுகள்

அது அவர்களாக செய்யவில்லை, பெற்ற பயிற்சியது. தமிழரில் தொடங்கியது தொடருது. அப்போ யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை, இப்போதுதான் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அது அவர்களாக செய்யவில்லை, பெற்ற பயிற்சியது. தமிழரில் தொடங்கியது தொடருது. அப்போ யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை, இப்போதுதான் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. 

சரியாக சொன்னீர்கள்.
மற்றவனுக்கு செய்யும் போது... வேடிக்கை பார்த்தவர்கள்.
அது, தனது வீட்டுக்கும் வரும் என்று நினைப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, satan said:

அது அவர்களாக செய்யவில்லை, பெற்ற பயிற்சியது. தமிழரில் தொடங்கியது தொடருது. அப்போ யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை, இப்போதுதான் எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது. 

எரிக்கிறது,அழிக்கிறது எல்லாம் தமிழர் வீடுகள்,தமிழர் சொத்துக்களிலைதானே ரெயினிங் எடுத்தவையள்.

 தன்வினை தன்னைச்சுடும்  ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

அங்க மட்டுமா எரியுது .......
இங்கு எட்டு பத்து வருசமா எரியுது 

😆 உங்க மட்டுமா எரியுது சிட்னியிலயும் எல்லோ எரியுதாம்👇🤣

 

3 hours ago, putthan said:

 

ஹிருணிக்கா ஒரு தீ  தேவதை ,,,,
நெருப்படா என்னை நெருங்கடா.....

She's on fire,🤣

 

4 hours ago, Kadancha said:

கொழும்பு றோயல் கல்லூரிக்கு ராணி இந்த வீட்டை கொடுத்தார் என்றால், மிகவும் வேடிக்கை.

ரணில்  ஐ ராயல் கல்லூரி ஏற்கவில்லை ஏணி நினைக்கிறீரேன். அது,unp, slfp க்கு இடையில் இருந்த அரசியல் ரணிலின் படிப்பில் கைவைக்கும் வரை சென்றது.

இல்லை நீங்கள் சொல்வது சந்திரிக்காவின் மகன் விமுக்திக்கு ரோயல் கல்லூரி அனுமதி மறுக்கப்ப்ட்டதை என நினைக்கிறேன்.

ரணில் தரம் 1-12 ரோயலில்தான் படித்தார். மாணவர் தலைவராகவும் இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் வீடு எரிக்கப்பட்டதற்கும் அதற்குள் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்தற்கும் பலர் கவலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வீடு ரணிலுக்கு வாரிசுக்கள் இல்லாத படியால்  அவர் படித்த றோயல் கல்லூரிக்கு உயில் எழுதிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி விடயத்திற்கு வருவோம். இந்த நாட்டில் நூல்நிலையங்களுக்கும்பாடசாலைகளுக்கும்ஈஆலயங்களுக்கும், nவைத்தியசாலைகளுக்'கும் துpவைப்பது தமிழரின் கலாச்சாரம் கிடையாது. யாழ் நூலகத்திற்கு தீவைத்தவர்களும் ரணிலின் வீட்டுக்குத் தீவைத்தவர்களும்  சிங்களவர்களே அன்றி தமிழர்கள் அல்ல. அவர்களுக்குப் புத்தகங்களின் பெறுமதி தெரியாது.மேலும் யாழ்நூலகத்தையும் ரணிலின் வுpட்டையும் ஓப்பிடுவதே தவறு. யாழ் நூலகத்தில்மீண்டும் பெற முடியாத அரி ஓலைச்சுவடிகள்,ஆறுமுகநாவலர் போண்றோரின் கையெழுத்துப் பிரதிகள் தமிழர்களின் வரலாறு தொடர்பான வரலாற்று ஈவணங்கள் அனைத்தும் திட்டமிட்டு  தீயிட்டுப் பொசுக்கப்பட்டன.ஆதுவும் அமைச்சர்களின் உத்தரவில் அவர்களின் மேற்பார்வையில் தமிழ்களின் வரலாற்றையும் சிதைக்கும் நீண்ட கால நோக்கில் எரித்த அழிக்கப்பட்டன. அப்போது கல்வி அமைச்சராக இருந்து இன்று வரை அனைத்தையும் மௌனமாகக் கடந்து போனவர்தான் இந்த ரணில். அதுமட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளிடமிருந்து கரணாவைப்பிரித்து தமிழர்களைப் பலவீனப்படுத்திய குள்ள நரியும் இதே ரணில்தான்.ராஜபக்சேக்கள் மீதிருந்த போர்க்குற்ற விசாரணைகளை இழுத்தடித்து அவர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல் இன்று வரை அவர்களுக்கு வந்த அரசியல் நெருக்கடிகளிலிலிருந்து அவர்களைக் காப்பாற்றியதும் ரணில்தான்.மாறாக ரணில் வீட்டில் எரிந்த புத்தகங்கள் மீளப்பெற முடியாத அரிய பொக்கிசங்கள் அல்ல.புத்தகங்களை எரிப்பது கண்டிக்கத்தக்கதாயினினும் இச்செயலை; யாழ்நூலகத்தை எரித்தது போல் திட்டமிட்டுச் செய்த செயல் அல்ல பட்டினியால் வயிறெறிந்த மக்கள் ஆத்திரத்தில் செய்த செயல்தான் அது. மேலும் றேபயல் கல்லூரி பஞ்சப்பராரிகள் படிக்கும் பாடசாலையும் அல்ல கோடிக்கணக்கான சொத்துக்களை உடையதும் பணக்கார முதலைகளினதும் அரசியல்வாதிகளுது பிளளைகளும் மட்டும் படிக்கும் கல்லூரி.வடக்கக்கிழக்கில் எத்தனையோ பாடசாலைகள் அடிப்படை வசதிகளற்று இருக்கும் போது இந்த பாடசாலைக்கு என எழுதி வைத்த சொத்து அழிந்து விட்டது என விசனப்படுவது. தேவையற்றது.அதுவும் ஊழல்மிகுந்த அரசியல்வாதியின் வீடு (மத்தியவங்கி பிணைமுறி). மேலும் ராஜபக்சேக்களையும் ரணிலையும் ஒரு சேர எதிர்ப்பது மக்களா அல்லது இதன் பின்னணியில் அரசியல் இயக்கமொன்றின் உறுப்பினர்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகமும் எழுவதை மறுப்பதற்கில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணிலின் இல்லம் தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் !

பிரதமரின், வீட்டின் அருகே... மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் : காரணத்தை கண்டறிய விசாரணை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் அமைந்துள்ள பகுதியில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணிக்குப் பின்னர் கொழும்பில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பவம் இடம்பெற்ற போது மின்சாரம் செயலிழந்தமை குறித்து விசாரணை நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

https://athavannews.com/2022/1290569

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் வீட்டையே காப்பாற்ற முடியாத சர்வதேசமும் சமாதான தூதுவர்களும் தமிழர்களை காப்பார்களாம்?? இன்னும் நம்புங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and indoor

பிரதமர் ரணில் வீட்டில்... 
நெருப்பிலிருந்து தப்பிய பொருட்கள், இப்படி காட்சி அளிக்கின்றது.

ரணிலின்... தந்திர அரசியலுக்கு கிடைத்த விலை.

வாழ் நாள் முழுக்க தேடிய சொத்தை... 
இரண்டு மாத பிரதமராக இருந்து.. இழந்தது தான் கண்ட பலன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்ததாகத் தெரிவில்லை.  ரணிலின் அரசியல் போட்டியாளர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரித்திருக்கக் கூடும்.

சிங்கள இராணுவம் எரியும் வீட்டுக்குள் புத்தகங்களை பாதுகாக்க முனையும் வேளை ஏன் தீயணைப்புப் படையை அணுகி தீயை அணைக்க முயலவில்லை..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: புத்தகங்கள் கொளுத்தப்பட்டது குறித்து ரணில் கண்ணீர்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு போராட்டக்காரர்கள் சிலரால் தீக்கு இரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில், கட்சி உறுப்பினர்களிடையே சிறப்பு கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், "சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை ஆனால் தாம் படித்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்," என தெரிவித்தார்.

தான் மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்கள்தான் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த வீட்டை அவர் ஏற்கனவே கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரிக்கு எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில்தான் இந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை சரி செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் , ஐஎம்எஃப் கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான இறுதி கட்ட நடவடிக்கை வரை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோல நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கையின் கடைசி கட்டத்தில்தான் அரசியல் பழிவாங்கல் நிகழ்வாக தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

ரணிலின் வீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரணிலின் வீடு

இந்த நிலையில் நேற்றைய சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவில்லை.

அமைதியை கோரும் ராணுவம்

இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷெவேந்திர சில்வா, நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில் 100 நாட்களை கடந்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்துதான் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62113528

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

அதில் பேசிய அவர், "சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை ஆனால் தாம் படித்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்," என தெரிவித்தார்.

உங்கள் கட்சியைச் சேர்ந்த காமினி திசநாயக்கா தலைமையில் யாழ்.நூலகத்தைக் கொழுத்தியபோது இதே கவலையை வெளியிட்டுக் கண்டித்திருந்தால்  இன்று உங்களது சொந்த நூலகம் காப்பாற்றப்பட்டிருக்கும். விதைத்தைவைகள் அறுக்கப்படுகின்றன. எளியோரை வலியோர் வதைத்தால் வலியோரைத் தெய்வம் தண்டிக்குமாம் என்று எங்கட சின்னப்பிள்ளையாச்சி சொல்லுறவ. அது உங்களுக்குக் கேட்டிருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

அழ வைத்தவர்கள் அழுதான் தீர வேண்டும்.......அழுங்கள் நன்றாக அழுங்கள்.......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண நூலகம் தீவைக்கபட்ட போதும் முற்காலத்தில் தமிழர்கள் வீடுகளை ஸ்ரீலங்கன்ஸ் தீவைத்தபோதும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தெய்வம்  இப்போது  ரணில் வீட்டை எரித்து அவரை தண்டித்துள்ளது 🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாண நூலகம் தீவைக்கபட்ட போதும் முற்காலத்தில் தமிழர்கள் வீடுகளை ஸ்ரீலங்கன்ஸ் தீவைத்தபோதும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தெய்வம்  இப்போது  ரணில் வீட்டை எரித்து அவரை தண்டித்துள்ளது 🤔

தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு இது தெய்வம் வழங்கும் தண்டனையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியாக இருந்தால், முழுத் தென்னிலங்கையும் அல்லவா பற்றியெரிய வேண்டும்? இது சிங்களவர் தமக்குத் தாமே வைத்துக்கொள்ளும் செல்லத் தீ!!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாண நூலகம் தீவைக்கபட்ட போதும் முற்காலத்தில் தமிழர்கள் வீடுகளை ஸ்ரீலங்கன்ஸ் தீவைத்தபோதும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தெய்வம்  இப்போது  ரணில் வீட்டை எரித்து அவரை தண்டித்துள்ளது 🤔

ஒரு வேலையை இழுத்து, இழுத்து செய்வதில், இலங்கை/இந்திய அரச ஊழியர்களுக்கே தெய்வம் டப்ஃ கொடுக்கும் என நினைக்கிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

தான் மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்கள்தான் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

யாழ் நூலகதின் வலியை ரணில் எள்ளி  நகையாடியதாக கேள்விப்பட்டேன்.

அத்துடன் 1983 இல், பாதிக்கப்பட்ட தமிழர் வலி, வேதனை, இழப்பை,  தோட்டம் செயும் சிங்களவர்களின் விளைச்சல்  இழப்பிலும் (அந்த இழப்பும் எதோ ஓர் விதத்தில் தமிழர்களுடன் தொடர்புபடுத்தி) மிகையானதல்ல என்றே ரணில் பகிரங்கமாக சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.

என்றாலும், சந்திகளால் உருவாக்கப்பட்ட (வீட்டு) நூலகம்  அழிந்தது கவலையகத் தான்  இருக்கும்.

நேரடியாக அனுபவித்தது  என்ற முறையில் - இரு சந்ததிகளால் சேர்த்து வைக்கப்பட்டு, மூன்றாவது சந்தியாலும் சேர்க்கப்பட்டு கொண்டிருந்த புத்தகங்களை  கொண்ட  சிறு நூலகம் போன்ற எனது வீட்டு  நூலகம், வீடு குண்டு வைத்து தகர்ப்பட்டது என்பது கேட்டவுடன், முதலில் வலி, வர்ணிக்க முடியாத இழப்பு வேதனை  வந்தது, இந்த புத்தகங்கள் அழிந்தது என்பது மத்தியில், மனதில்  பதிந்த போது.

(குறிப்பு: இந்த புத்தகங்களால் தான், எமது குடும்பத்துக்கும், எனது  அம்மாவின் சகோதரியின் குடும்பத்துக்கும் மிக பெரிய பிரச்னை  உருவாகியது. அம்மாவின் சகோதரியோ அல்லது அவரது கணவரோ புத்தகங்களின் (அறிவுப் மற்றும் பண பெறுமதி அன்றைய நிலையில், 1970க்கு முதல்) பெறுமதி மற்றும் அவற்றை  (அன்றைய நிலையில்) பெறுவதற்கு பட வேண்டிய உழைப்பு, கடினம், தியாகங்கள் போன்றவற்றை சொல்லியும், செவிமடுக்காது தமது பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களாக பாவித்ததை தொடர்ந்து, அவர்களை பிறிம்பாக வேறு வீட்டில் வசிக்கும் படி சொல்ல, அவர்கள் (அம்மாவின் சகோதரி, கணவர்) மறுக்க, பின் அம்மாவும், அப்பாவும் காணி வாங்கி, வீடு கட்டி அவர்களுக்கு  கொடுத்து,    அவர்கள் (அம்மாவின் சகோதரி, கணவர்) வெளியேறினர் (உண்மையில் வெளியேற்றப்பட்டனர்). அம்மா அப்போது அவர்காலை (அம்மாவின் சகோதரி, கணவர்), படித்து இருந்தால் பெறுமதி தெரியும் நீங்கள் (அம்மாவின் சகோதரி, கணவர்) இப்படி புத்தகங்களை விளையாட்டு பொருட்களாக பாவிக்க மாடீர்கள் என்று ஏசிவிட்டார் என்றும், அது அவர்களிடத்தில் பெரிய தாக்கத்தையும் உருவாக்கியதாகவும் கேள்விப்பட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.