Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன்

  • ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) 
  • பிபிசி நியூஸ்
 
யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர் ஒருவர்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர்.

யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. 

இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். யுக்ரேனில் உள்ள ரஷ்ய படையினருக்கு பொருள்களை விநியோகம் செய்வதற்கான முக்கிய மையமாக இந்த நகரம் விளங்கி வந்துள்ளது. 

அருகில் உள்ள இஸ்யும் நகரில் இருந்து தங்கள் படையினர் பின்வாங்கியிருப்பதாகவும் திரும்ப ஒன்று சேரும் நடவடிக்கைக்காகவே இப்படிச் செய்திருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மூன்றாவதாக, டானட்ஸ்க் போர் முனையில் தங்கள் படைகளை வலுப்படுத்துவதற்காக பாலாகியா என்ற இன்னொரு நகரில் இருந்தும் தங்கள் படைகள் பின்வாங்கியிருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. 

தற்போது தாங்கள் முன்னேறிய இடங்களை யுக்ரேன் படைகள் தக்க வைத்துக்கொண்டால், கடந்த ஏப்ரலில் யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகில் இருந்து ரஷ்யா பின்வாங்கியதற்குப் பிறகு யுக்ரேனுக்கு கிடைத்த மிக முக்கிய முன்னேற்றமாக இது இருக்கும்.

இந்த மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த புதிய பதில் தாக்குதல்களின் மூலம் ரஷ்யாவிடம் இருந்து தங்கள் நாட்டின் 2,000 சதுர கி.மீ. பரப்பை விடுவித்திருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்ட வீடியோ உரையில் குறிப்பிட்டார். 

பிடிபட்ட ரஷ்ய வண்டி ஒன்றுடன் யுக்ரேன் சிப்பாய் ஒருவர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பிடிபட்ட ரஷ்ய வண்டி ஒன்றுடன் யுக்ரேன் சிப்பாய் ஒருவர்.

இவற்றில் பாதி பகுதி முந்தைய 48 மணி நேரத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் அவரது உரை குறிப்பிடுகிறது. 

இஸ்யும் பகுதியில் இருந்து பின்வாங்கியிருப்பதாக ரஷ்யா ஒப்புக் கொண்டிருப்பது மிக முக்கியமானது. ஏனெனில், இந்த நகரம் ரஷ்ய படையினருக்கான முக்கியமான ராணுவ மையமாக இருந்து வந்தது. 

"இஸ்யும் - பாலாகியா படைக் குழுக்களை அங்கிருந்து குறைத்து டானெட்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிக்கு அவர்களை மாற்றும் மூன்று நாள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய படையினருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக எதிரியின் மீது வலுவான தாக்குதல் நடத்தப்பட்டது" என்கிறது ரஷ்ய அறிக்கை. 

சிறிது நேரத்தில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் கார்கீவ் பகுதியின் நிர்வாகி, உயிரிழப்பைத் தடுப்பதற்காக இந்தப் பகுதியில் குடியிருப்போர் இடம் பெயர வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்தத் தகவலை ரஷ்ய அரசு நடத்தும் டாஸ் செய்தி முகமை தெரிவித்தது.

spacer.png
 
இந்தப் பகுதியில் இருந்து எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் வருவதற்கு வரிசையில் வரும் மக்களுக்கு வெப்பமூட்டி, உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று, இந்தப் பகுதிக்கு அருகே ரஷ்யாவில் அமைந்துள்ள பெல்கோரோட் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

கீயவ் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் வலிமை யுக்ரேன் ராணுவத்துக்கு உண்டு என்பதைக் காட்டும் அறிகுறியாக யுக்ரேனின் இந்த ராணுவ முன்னேற்றங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளுவதில் ஆர்வம் கொண்ட தங்களது மேற்கத்திய கூட்டாளிகளிடம் இருந்து கூடுதல் ராணுவ உதவிகளைக் கோருவதற்கான வாய்ப்பாகவும் இது யுக்ரேனுக்கு அமைந்துள்ளது. 

மேலதிக மேற்கத்திய ஆயுதங்களின் உதவியோடு, யுக்ரேனிய படைகளால் ரஷ்ய ராணுவத்தைத் தோற்கடிக்க முடியும் என்பதை இந்த சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன என்று யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

என்ன பகிடி விடுறீங்கள்?

ரஸ்ஸியா தனது படைகளை பின்வாங்கவில்லை. மாறாக இன்னொரு புதிய போருக்கு மீள ஒருங்கிணைத்து வருகிறது. அப்படி விட்டுப்போன இடத்திலதான் உக்ரேன் காரன் நிண்டு படம் எடுத்து பிலிம் காட்டுறான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

என்ன பகிடி விடுறீங்கள்?

ரஸ்ஸியா தனது படைகளை பின்வாங்கவில்லை. மாறாக இன்னொரு புதிய போருக்கு மீள ஒருங்கிணைத்து வருகிறது. அப்படி விட்டுப்போன இடத்திலதான் உக்ரேன் காரன் நிண்டு படம் எடுத்து பிலிம் காட்டுறான். 

ஓம். பிபிசியை எப்படி நம்புவது? RT இல் இருந்து உண்மையாக என்ன நடந்தது என்று @Kapithan ஒட்டும்வரை பொறுமைகாக்க வேண்டும்😉

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, ரஞ்சித் said:

என்ன பகிடி விடுறீங்கள்?

ரஸ்ஸியா தனது படைகளை பின்வாங்கவில்லை. மாறாக இன்னொரு புதிய போருக்கு மீள ஒருங்கிணைத்து வருகிறது. அப்படி விட்டுப்போன இடத்திலதான் உக்ரேன் காரன் நிண்டு படம் எடுத்து பிலிம் காட்டுறான். 

51 minutes ago, கிருபன் said:

ஓம். பிபிசியை எப்படி நம்புவது? RT இல் இருந்து உண்மையாக என்ன நடந்தது என்று @Kapithan ஒட்டும்வரை பொறுமைகாக்க வேண்டும்😉

உண்மைதான் ரஷ்ய படிகள் பலத்த சேதத்துடன் பின் வாங்குதாம் 😎

உண்மைதான் ரஷ்ய படைகள் பலத்த சேதத்துடன் பின் வாங்குதாம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இரண்டு பேருக்கு முகம் வெளிச்சிருக்கு.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உண்மைதான் ரஷ்ய படிகள் பலத்த சேதத்துடன் பின் வாங்குதாம் 😎

உண்மைதான் ரஷ்ய படைகள் பலத்த சேதத்துடன் பின் வாங்குதாம் :cool:

https://twitter.com/mrkovalenko/status/1568719355843600385?s=46&t=T2w0VTwRIFxvKdG05_QBdg
 
குசாமியார் ஒருக்கா இந்த டுவீட்டர் இணைப்பைப் பாருங்கோ… இரஸ்ஸியாவின் வீரம் தெரியும். ஆணையிறவை விட்டு SL ஓடினதைவிட மோசமா இல்லயா என்று நீங்களே முடிவெடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragaa said:

Hmm...this page doesn’t exist. Try searching for something else.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

Hmm...this page doesn’t exist. Try searching for something else.

https://twitter.com/mrkovalenko/status/1568719355843600385?s=46&t=kxQvAU126xTp78-XonIbAA

Try this,  it works for me 

கைமாரஸ் அடியின் தாக்கம் தான் அந்த பின்வாங்கல்

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragaa said:

வேலை செய்யவில்லை மீண்டும், எமது நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கலாம், நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, உடையார் said:

வேலை செய்யவில்லை மீண்டும், எமது நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கலாம், நன்றி

எமது நாட்டிலும் வேலை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை இணைத்தவர் அழித்து விட்டதாக ருவிட்டர் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஓம். பிபிசியை எப்படி நம்புவது? RT இல் இருந்து உண்மையாக என்ன நடந்தது என்று @Kapithan ஒட்டும்வரை பொறுமைகாக்க வேண்டும்😉

இதைத்தான் காண்டு (?) என்று தMழக பேச்சு வழக்கில் கூறுவார்கள். 

😉

3 hours ago, ரஞ்சித் said:

என்ன பகிடி விடுறீங்கள்?

ரஸ்ஸியா தனது படைகளை பின்வாங்கவில்லை. மாறாக இன்னொரு புதிய போருக்கு மீள ஒருங்கிணைத்து வருகிறது. அப்படி விட்டுப்போன இடத்திலதான் உக்ரேன் காரன் நிண்டு படம் எடுத்து பிலிம் காட்டுறான். 

போர் இத்துடன் முடிவுபெறும் என்பதுபோல இருக்கிறது தங்களின் கருத்து.. 😀

59 minutes ago, ragaa said:

https://twitter.com/mrkovalenko/status/1568719355843600385?s=46&t=T2w0VTwRIFxvKdG05_QBdg
 
குசாமியார் ஒருக்கா இந்த டுவீட்டர் இணைப்பைப் பாருங்கோ… இரஸ்ஸியாவின் வீரம் தெரியும். ஆணையிறவை விட்டு SL ஓடினதைவிட மோசமா இல்லயா என்று நீங்களே முடிவெடுங்கள்

ஏன் எங்களை இதற்குள் இளுக்Kறீர்கள்? 

இப்போது கோவணம் இல்லாமல் இருப்பது கண்ணுக்குள் தெரியவில்லையா? 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ragaa said:

https://twitter.com/mrkovalenko/status/1568719355843600385?s=46&t=T2w0VTwRIFxvKdG05_QBdg
 
குசாமியார் ஒருக்கா இந்த டுவீட்டர் இணைப்பைப் பாருங்கோ… இரஸ்ஸியாவின் வீரம் தெரியும். ஆணையிறவை விட்டு SL ஓடினதைவிட மோசமா இல்லயா என்று நீங்களே முடிவெடுங்கள்

கோசான் வைச்சிருந்த ஒலிவாங்கியை நீங்கள் தூக்கி விட்டீர்கள். இனி கீழே வைக்கப்படாது 😁

1 hour ago, nunavilan said:

காணொளியை இணைத்தவர் அழித்து விட்டதாக ருவிட்டர் சொல்கிறது.

நுணாவில் தம்பி அவர்களின் குறுகிய சந்தோசத்தை  கெடுக்காதீர்கள்......🤣
அவிங்க பாவமெல்ல 😎

  • கருத்துக்கள உறவுகள்

கோஷன். கடைசியாக சொன்னது நடந்துள்ளது அதாவது ரஷ்யா உக்ரேன் இல் அடி வாங்கும்   ஆனால் அது சாணல் அடி வேண்டும் என்று வந்திருக்க வேண்டும் இப்போது நெருப்பு அடி வேண்டியுள்ளார்கள்  பாவம் மான்புமிகு தலைவர் புடின் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kandiah57 said:

கோஷன். கடைசியாக சொன்னது நடந்துள்ளது அதாவது ரஷ்யா உக்ரேன் இல் அடி வாங்கும்   ஆனால் அது சாணல் அடி வேண்டும் என்று வந்திருக்க வேண்டும் இப்போது நெருப்பு அடி வேண்டியுள்ளார்கள்  பாவம் மான்புமிகு தலைவர் புடின் 😂

கய்யா.....குய்யா.....உய்யா...மய்யா....யா....உஃஊஉ 😎

சண்டையில உக்ரேன் வெற்றி...வெற்றி....வெற்றி.😀

இனி  சாமான் சக்கட்டையள் எல்லாம் விலை குறைஞ்சிடும்,எண்ணை,எரிபொருள் விலை குறைஞ்சிடும்....உலகச்சனத்துக்கு இனி வாழ்க்கை பூரா நிம்மதியான வாழ்க்கை. அரக்கன் ரஷ்யன் ஒளிந்தான்......ரஷ்யா இல்லாத வாழ்க்கை சொர்க்கலோக வாழ்க்கை......😂
அப்பாடா வாழ்க்கை ஒரே ஒளிமயம்....எங்கும் இன்பமயம்🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்: 6 மாத கால போரில் திருப்புமுனை

864712.jpg  

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் முக்கியப் பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது போரின் திருப்புமுனையாகவே கருதப்படுகிறது.

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக் கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பி ஓடினர்.

ரஷ்யப் படைகள் இசியம் பகுதியை தங்களின் தாக்குதலுக்கான லாஜிஸ்டிக் தளமாக பயன்படுத்தினர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் அங்கிருந்து வெளியேறியது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் ரஷ்யப் படைகள் வெளியேறியது குறித்து ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டச் செய்தியில், ரஷ்ய பாதுகாப்புப் படைகள் வலியுறுத்தியதன் பேரிலேயே இசியம் பகுதியில் இருந்து வெளியேறினர். அவர்கள் வேறு பகுதிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிகாரிகள் இசியம் பகுதியை மீட்டதை உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட, ஜெலன்ஸ்கியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான அண்ட்ரை யெர்மாக், தனது ட்விட்டர் பக்கத்தில் இசியம் நகரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அத்துடன் திராட்சைப்பழ இமேஜைப் பகிர்ந்தார். இசியம் என்றால் உக்ரைனிய மொழியில் உலர் திராட்சை என்று அர்த்தம்.

போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ரஷ்யப் படைகள் கீவ் நகரில் இருந்து முதலில் பின்வாங்கியது. தற்போது கார்கிவ் நகரின் இசியம் பகுதியில் இருந்து ஆயுதங்களைக் கூட கைவிட்டு பின்வாங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெறும் போரில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

https://www.hindutamil.in/news/world/864712-russia-loses-key-ukraine-city-may-prove-to-be-war-s-turning-point-1.html

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்:

இதெல்லாம் வெடிக்காத புஸ்வாணம் போன்ற ஆயுதங்கள. பாவம் ரஸ்ய வீரர்கள் எத்தினை நாளைக்குத்தான் இதை வச்சு பாவ்லா காட்டுறது. 😂

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்

அவர்களின் நல்ல முடிவு. புரினின் உக்ரைனை ஆக்கிரமிக்கும் பேராசைக்கு ரஷ்ய வீரர்கள் ஏன் பலியாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் இந்த யுத்தத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.. இந்த யுத்தம் உக்ரனை ஆக்கிமிக்க அல்ல. உக்ரைனை ஆளும் தற்போதைய நவநாசிகளை அழிப்பதும் அகற்றுவதுமே. அதில் ரஷ்சியா வெகுவான வெற்றியைப் பெற்றே இருக்குது. 

புட்டினின் இலக்கு இன்னும் முழுமையா எட்டப்படுகுதா இல்லையா என்பதை எதிர்காலம் சொல்லலாம்.

ஆனால் நிச்சயம் உக்ரைனின் நவநாசிகள் அந்த மக்களேலேயே நிராகரிக்கப்படும் காலம் நெருங்குகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்களின் நல்ல முடிவு. புரினின் உக்ரைனை ஆக்கிரமிக்கும் பேராசைக்கு ரஷ்ய வீரர்கள் ஏன் பலியாக வேண்டும்.

ஆம் மிக சரியான கருத்து புட்டினை பற்றி எங்களை விட ரஷ்யா வீரர்களுக்கு நன்கு தெரியும்   உதாரணமாக உக்ரேனை பிடித்த பிறகு  பின்லாந்து சுவிடன்  போலந்து.....இப்படி புட்டினின். நாடுகளை பிடிக்கும் ஆசை தொடரும்    வாழ வேண்டிய காலத்தில் அந்த இளைஞர்கள் உயிரிழப்பு தேவையா?.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புட்டினின்  மனிதாபிமானத்துடனான யுத்தம் இது. யுத்தம் ஆரம்பித்த நாட்களுடன் கணக்கு பார்த்தால் மிக குறைந்த மனித இழப்புகளே ஏற்பட்டுள்ளது என கூறுகின்றார்கள்.

இதே யுத்தத்தை மேற்குலகு ஆரம்பித்திருந்தால் மிகப்பெரிய சேதங்களையும் நாட்டுக்குள்ளேயே பல பிரிவினைகளை உருவாக்கியிருப்பார்கள்.
இதற்கு ஈராக்,லிபியா,சிரியா மற்றும் ஆசிய/ஆபிரிக்க நாடுகளே சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kandiah57 said:

ஆம் மிக சரியான கருத்து புட்டினை பற்றி எங்களை விட ரஷ்யா வீரர்களுக்கு நன்கு தெரியும்   உதாரணமாக உக்ரேனை பிடித்த பிறகு  பின்லாந்து சுவிடன்  போலந்து.....இப்படி புட்டினின். நாடுகளை பிடிக்கும் ஆசை தொடரும்    வாழ வேண்டிய காலத்தில் அந்த இளைஞர்கள் உயிரிழப்பு தேவையா?.    

கடைசியாக நடந்த தமிழ் ஈழ போரில் பங்கு பற்றிய அனைத்து நாடுகளின் இளைய சந்ததிகள் இரத்தமும் சதையுமா குற்றுயிரா இறக்கும் பொழுதுகள் நான் வாழும் காலத்தில் காணனும் இதுவே என் கடைசி ஆசை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, Kandiah57 said:

ஆம் மிக சரியான கருத்து புட்டினை பற்றி எங்களை விட ரஷ்யா வீரர்களுக்கு நன்கு தெரியும்   உதாரணமாக உக்ரேனை பிடித்த பிறகு  பின்லாந்து சுவிடன்  போலந்து.....இப்படி புட்டினின். நாடுகளை பிடிக்கும் ஆசை தொடரும்    வாழ வேண்டிய காலத்தில் அந்த இளைஞர்கள் உயிரிழப்பு தேவையா?.    

உங்கள் ஆசை மேற்குலகு உலக நாடுகளை  அஜாரகத்தின் மூலம் பிடித்தது போல் ரஷ்யா உலகை ஆள ஆசைப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ருஸ்சிங் இராணுவத்தில் ஊழல் பெருகியதே இதன் காரணம். ரஷ்யா படை நவீனமயப்படுத்துதல் என்று ஒதுக்கிய பணம், அதிகாரிகள், கம்பனி தலைமைகளுக்கு ஊழலாக மாறி விட்டது.

மற்றது, ரஷ்யா, பெரிய ஆயுதங்கள் (hyper சோனிக், missiles) என்று செலவு  கூட, இந்த நாய்ச் சண்டைகள் உருவாகும் களங்களுக்கு தேவையான ஆயுதம், வழங்கல், பயிற்சி போன்றவற்ற்ற்றில் கவனக் குறைவால்.

அனால், பொருளாதார தடைகள் இருப்பினும், ரஷ்யா படை சீரமைப்பை செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதன் ஆயுத விருத்தி, மற்றும் உற்பத்தி கட்டமைப்பும் வைத்து இருக்கிறது. 

அதனால்,  இருபகுதிக்கும் இப்போதைய வாய்ப்பு இருப்பது, குறுகிய காலம்.

அனால், கேந்திர கணிப்பில், மேற்கு இழந்து விட்டதாகவே பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது, ரஷ்யாவை, சீன நோக்கி தள்ளியது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போரில் பொதுமக்கள் இழப்புக்கள் சொத்தழிப்புக்களுடன் ஒப்பிடும்போது குறைவானதாகவே படுகிறது. ஈழத்தில் இடம்பெற்ற இனவழிப்பில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது குறைவானதாகவே தெரிகிறது.

இப்படிக் கூறுவதால் ரஸ்ஸிய ராணுவம் மனிதாபிமானம் மிக்கதென்றோ, இந்த ஆக்கிரமிப்பு யுத்தம் தார்மீக அடிப்படையிலானதென்றோ ஆகிவிடாது. ரஸ்ஸிய ராணுவத்தின் மனிதாபிமானம் 2ஆம் உலக யுத்தத்திற்கு முன்பே வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதேபோல, அதனால் ஆக்கிரமிக்கப்பட்ட தேசங்களில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட கட்டுமான அழிப்புக்களும் இன்றுவரை சாட்சிகளாகவே இருக்கின்றன.

மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்புக்களுக்கும், வலிந்த அழிப்புகளுக்கும் சற்றும் குறையாதது ரஸ்ஸிய ஆக்கிரமிப்பும் அழிவுகளும். 

வல்லரசுகளின் பலப்பரீட்சையில் அகப்பட்டுப் பரிதவிக்கும் அப்பாவிகளின் மீதே எமது கவனம் இருக்கவேண்டும். மேற்கின் இரட்டை மனப்பான்மைக்கெதிரான எமது நிலைப்பாடு அப்பாவிகளின் அழிவினை நியாயப்படுத்தும் அளவிற்கு இறங்கிவிட கூடாது.

நுணா, குமாரசாமி, தமிழ்சிறி! உங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அல்லற்படும் மக்களின் அவலங்கள் குறித்தும் ஒருகணம் சிந்தியுங்கள். ஏனென்றால், நாங்களும் ஒரு காலத்தில் இதே அவலங்களை எதிர்கொண்டவர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.