Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்தார் இசை வாணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...!

சென்னை, 

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் 

சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

https://www.dailythanthi.com/News/State/popular-playback-singer-vani-jayaram-dies-892597

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

1971-ம் வருடப் புத்தாண்டில் வெளிவந்த 'குட்டி' (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற 'பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

இவரது முதல் பாடலே அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 19க்கும் மேற்பட்ட மொழி பாடல்களை பாடி பிரபலமானார்.

1974 ஆம் ஆண்டு தமிழில் "தீர்க்கசுமங்கலி" படத்தில் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற,முத்தான பாடலாக அமைந்தது.

தீர்க்கசுமங்கலி படத்திற்கு முன்பே, இவர், "வீட்டுக்குவந்த மருமகள்", "சொல்லத்தான் நினைக்கிறேன்" முதலான படங்களில் பாடியிருந்தாலும், தீர்க்கசுமங்கலி படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

மாடர்ன், கர்நாடக இசை, கஜல், பாப்நாட்டுப்புறஇசை, உள்ளிட்ட பலவிதமான இசைப்பாடல்களையும் நன்றாகப் பாடக்கூடியவர் பாடகி வாணிஜெயராம்.

இந்தியாவின் முதல் 3டி படமான "மைடியர் குட்டிச்சாத்தான்" படத்தில், இவர் பாடிய "செல்லக்குழந்தைகளே!" பாடலில், இசையிலும்சரி, குரலிலும் சரி, குழந்தைகளின் குதூகலஉணர்வு வழிந்தோடுவதை உணரமுடியும். பழைய "பாலைவனச்சோலை" படத்தில் இவர் பாடிய "மேகமே! மேகமே!" பாடல், இன்றளவும் கேட்பவர்கள் மனதை, நெகிழவைக்கக் கூடியது.

'புனித அந்தோனியார்' படத்தில் 'மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்', பி. சுசீலாவுடன் இணைந்து 'பாத பூஜை' படத்தில் 'கண்ணாடி அம்மா உன் இதயம்', 'அந்தமான் காதலி'யில் 'நினைவாலே சிலை செய்து', 'சினிமாப் பைத்தியம்' படத்தில் 'என் உள்ளம் அழகான வெள்ளித்திரை', 'தங்கப்பதக்க'த்தில் 'தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, 'பாலாபிஷேக'த்தில் 'ஆலமரத்துக் கிளி' எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் 'என்னுள்ளே ஏதோ', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெற்ற 'நானே நானா', 'சிறை' படத்தில் 'நான் பாடிக்கொண்டே இருப்பேன்' , 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் 'கட்டிக் கரும்பே கண்ணா', 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் 'ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்', 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் 'மணமகளே உன் மணவறைக் கோலம்' ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்", "கேள்வியின் நாயகனே", என்று வாணி ஜெயராம் அவர்களின் குரல் இனிமைக்கு, சாட்சிகளாக எத்தனையோ பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.

கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் தமிழ் நாடு வேலூரில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர்.

வாணிஜெயராம் ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, பாரத ஸ்டேட்வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். அவருடைய இசைத்திறமையை அறிந்த கணவர் ஜெயராம்தான், இவரை, முழுநேர பாடகியாக்க முயற்சிமேற்கொண்டார்.

இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடியுள்ளார் வாணிஜெயராம்.

அபூர்வராகங்கள், சங்கராபரணம் (தெலுங்கு), சுவாதிகிரணம்(தெலுங்கு) முதலான படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்றுதேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் வாணிஜெயராம். சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள்:

1975 – தேசிய விருது – சில பாடல்கள் –அபூர்வ ராகங்கள்

1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சங்கராபரணம்

1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" சுவாதி கிரணம்
 
https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/popular-playback-singer-vani-jayaram-passes-away-892607

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Ftamil-cinema%2F938753-popular-playback-singer-vani-jayaram-passed-away-in-chennai.html&h=AT0cPSRmS7dnkid1YHHKg48k5wB58oNDtl-dlGiADSXupngr9iG9YVj0VYUNWbXgy868DybFfaL-0FK1hIpnn1CqSblDHl0sWwcBKlsXpLZRSPAvbAIYRI7wf1hLC4dIiGw

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். ஹிந்தியப் படை ஆக்கிரமிப்புக் கால..  விடுதலை கானங்களில் பாடி இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

"மல்லிகை என் மன்னன் மயங்கும்" புகழ் வாணி ஜெயராமின் இழப்பு தமிழ் இசையுலகின் பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடகி.மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாயின் குரல் என்றும் நிலைக்கும் எம் மனமெங்கினும்... வாழும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஒரு காலத்தில் பொங்கும் பூம்புனல் எப்படா வரும் என எதிர்பார்த்திருந்த காலங்களில் இந்த அம்மாவின் பாட்டுக்களும் உள்ளடங்கும்.

எங்காவது போனாலும் தேநீர்கடைகளில் பெரிதாக ஒலிக்கும் சில பாட்டுக்களை கேட்க துவிச்சக்கர வண்டியை ஓரங்கட்டுவோம்.

என் மனதுக்கு இனிய அருமையான பாடல்களை பாடிய இசைக் குயில் வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு என் அஞ்சலி.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது போன்ற பாடல்கள் இன்றும் நான் அடிக்கடி கேட்டு ரசிப்பவை..

தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், வீசும் காற்றே தூது செல்லு, நல்லூர் வீதியில் நடந்தது ஒரு யாகம் போன்ற மறக்க முடியாத தாயக விடுதலைப் பாடல்களை விடுதலைப் புலிகளுக்காக, இந்திய ஏவல் படைகள் தாயகத்தை ஆக்கிரமித்து படுகொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த காலத்தில் வாணி ஜெயராம் அவர்கள் பாடி இருந்தார். 

உங்கள் குரல் எம் நினைவுகளில் என்றும் இசைத்துக் கொண்டு தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்

வாணி ஜெயராம்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

4 பிப்ரவரி 2023, 09:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.

மேகமே... மேகமே, மல்லிகை என் மன்னன் மயங்கும்... உள்ளிட்ட காலத்தை வென்று நெஞ்சில் நிலைத்திருக்கும் பல பாடல்களைப் பாடிய வாணி, 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த வாரம் அவருக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருதை பெறுவதற்கு முன்னர் அவர் காலமானது அவரது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது உடலில், நெற்றியில் காயம் இருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அவரது உடல் தற்போது அரசு ஓமந்தூரார் தோட்ட மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தடயவியல் வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்தனர்.

தமிழ், இந்தி, ஒடிசா, தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள வாணி ஜெயராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்ததாக கூறப்படுகிறது.

பிபிசி தமிழிடம் பேசிய கர்நாடக சங்கீத பாடகி பூஷணி கல்யாணராமன், மிக நீண்ட காலத்திற்கு பிறகு, வாணி ஜெயராமுக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தற்போது அவரது மறைவு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

''தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல மொழிகளில் அவர் பாடல்களைப் பாடியது பெரிய சாதனை. பத்மபூஷன் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டபோது பல கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் நம்மிடம் இப்போது இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது,'' என்றார் அவர்.

1971ல் பாடத் தொடங்கிய வாணி ஜெயராம், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் தீர்க்கசுமங்கலி படத்திற்காக பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று.

தனிமையில் வாழ்ந்தார்

சுந்தரி
 
படக்குறிப்பு,

சுந்தரி, அடுக்கக ஊழியர்

நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்கக குடியிருப்பில் வாழ்ந்து வந்த வாணி ஜெயராம், அந்த வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாகவும், அவர் மிக அரிதாகவே, வெளியில் வருவார் என்றும், அவரது கணவர் சுமார் ஓராண்டு முன்பு இறந்துவிட்டார் என்றும் கூறுகிறார் அந்த அடுக்கக ஊழியர் சுந்தரி.

https://www.bbc.com/tamil/articles/cv23wel7e02o

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !!

vani_jayram.PNG

கட்டுரையாளர்   – ஐங்கரன்விக்கினேஸ்வரா

(ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்த பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார். அவர் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

தமிழில் மல்லிகையாய் மணம்வீசி

எழு சுவரங்களுக்குள் எத்தனையோ பல பாடல்களை பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள், பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

காலம் கடந்தும் வாழ்வார்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வது வயதில் காலமானார். பத்தாயிரம் பாடல்களை பலமொழிகளில் பாடியிருக்கும் அந்தக் குரலிசைக் கலைஞர் காலமானாலும் காலம் கடந்தும் வாழ்வார்.

பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் இசைத்துக் கொண்டே இருக்கும்.

” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.

நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து, எமது தாயக விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது ஈழ மக்களின் மனதை நெருடிக் கொண்டுள்ளது.

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி…காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…என கணீரென ஒலித்த இவரின் குரலிசைஅமைதியின்றி தவிக்கும் அகங்களுக்கு என்றென்றும்.

அருமருந்தாகியதே என்று கூறலாம்.

‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..

நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.

தாயக விடுதலைக்கு தோள் கொடுத்தவர்:

தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை

எங்களின் சோதரர் காதில் சொல்லு..

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்

கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,

எத்தனை எத்தனை இங்கு நடந்திட

எங்களின் சோதரர் தூக்கமல்லோ..

இங்கு குயிலினம் பாட மறந்தது..

எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி தாயக விடுதலைக்கு தோள் கொடுத்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மண் ஒருபோதும் மறவாது.

ஈழப் போரின் உச்சக் கட்ட காரங்களான 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “சென்பகமே சென்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தேவேந்திரன்தான் இசையமைத்த “ஈட்டி முனைகள்” என்ற இசைத் தொகுப்பில் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.

1974இல் ‘தீர்க்க சுமங்கலி’

1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது. இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய இலக்கணம் தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

இசை மருந்து விருந்து:

பேசும்போதும் மிக மென்மையாக பேசக்கூடிய அவர் தமிழ் திரைப்படங்களில் அவர் பாடிய பலப் பாடல்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. இசை என்பது ஒரு வித மருந்து. அதை தம் குரல்களால் விருந்தாக படைக்கும் இசை வைத்தியர்கள் வரிசையில் பாடகி

வாணி ஜெயராம் முன்னிலையில் என்றும் நிற்கிறார் என்பதே உண்மை.

பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகி, வாணி ஜெயராம் தனது 78வது வயதில் காலமாகியது பலரையும் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த “பாடும் பறவைகள் வாருங்கள் என்ற பாடலுடன், களத்தில் கேட்கும் கானங்கள் ஒலி நாடாவில் வீசும் காற்றே தூது செல்லு, தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், என்னும் பாடல்கள், பாசறைப் பாடல்கள் ஒலி நாடாவில் பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம், மேகங்கள் இங்கு வாருங்கள், வீரன் மண்ணில் புதையும் போது, போன்ற விடுதலைப் பாடல்களுடன், தலை வாரி பூச் சூடினேன், செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் … போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தாயக விடுதலைக்கு உயிர்க்குரல் கொடுத்தவர் வாணி ஜெயராம்

அவர்களை ஈழத்துக் கலைஞர்கள் கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஒருபோதும் மறவர்.

இசை வாணியின் இதயக்குரலால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிரசித்தி பெற்றன.

இசை வாணியின் மாயக் குரலில் மயங்கிக் கிடந்த காலங்கள் பல. வானலைகளில் தேனென ஒலித்த அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்து தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே உள்ளது.

https://vanakkamlondon.com/stories/featured-story/2023/02/184744/

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி வாணி ஜெயராம் இறப்புக்கான காரணம் வௌியானது!

பாடகி வாணி ஜெயராம் இறப்புக்கான காரணம் வௌியானது!

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்த நிலையில் அது சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர். அது பற்றி தீவிர விசாரணையும் நடைபெற்று வந்தது.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கை வந்திருக்கும் நிலையில் அதில் வாணி ஜெயராம் தலையில் ஏற்பட்ட காயத்தால் தான் இறந்திருக்கிறார் என தெரியவந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

அவரது படுக்கை அறையில் இருக்கும் சின்ன மேசையில் தலை இடித்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர் இறந்திருக்கிறார்.

மேலும் சிசிடிவியை ஆராய்ந்ததில் வேறு யாரும் அவரது வீட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதையும் உறுதி செய்திருக்கும் பொலிசார் வாணி ஜெயராம் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என கூறி இருக்கின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்த  செய்தியை கேட்டது முதல் மனதில் வெறுமை குடிகொண்டதை போல ஒரு உணர்வு.
வாணி அம்மா பாடிய அத்தனை பாடல்களும் மனதுக்கு இதமானதும், நெருக்கமானதுமான பாடல்கள்.
உங்கள் குரல் என்றும் எங்களோடு கலந்திருக்கும் அம்மா.
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது ..
கண்ணீர் அஞ்சலிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !!

vani_jayram.PNG

கட்டுரையாளர்   – ஐங்கரன்விக்கினேஸ்வரா

(ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்த பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார். அவர் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

தமிழில் மல்லிகையாய் மணம்வீசி

எழு சுவரங்களுக்குள் எத்தனையோ பல பாடல்களை பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள், பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

காலம் கடந்தும் வாழ்வார்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வது வயதில் காலமானார். பத்தாயிரம் பாடல்களை பலமொழிகளில் பாடியிருக்கும் அந்தக் குரலிசைக் கலைஞர் காலமானாலும் காலம் கடந்தும் வாழ்வார்.

பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் இசைத்துக் கொண்டே இருக்கும்.

” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.

நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து, எமது தாயக விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது ஈழ மக்களின் மனதை நெருடிக் கொண்டுள்ளது.

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி…காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…என கணீரென ஒலித்த இவரின் குரலிசைஅமைதியின்றி தவிக்கும் அகங்களுக்கு என்றென்றும்.

அருமருந்தாகியதே என்று கூறலாம்.

‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..

நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.

தாயக விடுதலைக்கு தோள் கொடுத்தவர்:

தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை

எங்களின் சோதரர் காதில் சொல்லு..

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்

கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,

எத்தனை எத்தனை இங்கு நடந்திட

எங்களின் சோதரர் தூக்கமல்லோ..

இங்கு குயிலினம் பாட மறந்தது..

எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி தாயக விடுதலைக்கு தோள் கொடுத்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மண் ஒருபோதும் மறவாது.

ஈழப் போரின் உச்சக் கட்ட காரங்களான 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “சென்பகமே சென்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தேவேந்திரன்தான் இசையமைத்த “ஈட்டி முனைகள்” என்ற இசைத் தொகுப்பில் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.

1974இல் ‘தீர்க்க சுமங்கலி’

1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது. இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய இலக்கணம் தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

இசை மருந்து விருந்து:

பேசும்போதும் மிக மென்மையாக பேசக்கூடிய அவர் தமிழ் திரைப்படங்களில் அவர் பாடிய பலப் பாடல்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. இசை என்பது ஒரு வித மருந்து. அதை தம் குரல்களால் விருந்தாக படைக்கும் இசை வைத்தியர்கள் வரிசையில் பாடகி

வாணி ஜெயராம் முன்னிலையில் என்றும் நிற்கிறார் என்பதே உண்மை.

பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகி, வாணி ஜெயராம் தனது 78வது வயதில் காலமாகியது பலரையும் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த “பாடும் பறவைகள் வாருங்கள் என்ற பாடலுடன், களத்தில் கேட்கும் கானங்கள் ஒலி நாடாவில் வீசும் காற்றே தூது செல்லு, தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், என்னும் பாடல்கள், பாசறைப் பாடல்கள் ஒலி நாடாவில் பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம், மேகங்கள் இங்கு வாருங்கள், வீரன் மண்ணில் புதையும் போது, போன்ற விடுதலைப் பாடல்களுடன், தலை வாரி பூச் சூடினேன், செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் … போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தாயக விடுதலைக்கு உயிர்க்குரல் கொடுத்தவர் வாணி ஜெயராம்

அவர்களை ஈழத்துக் கலைஞர்கள் கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஒருபோதும் மறவர்.

இசை வாணியின் இதயக்குரலால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிரசித்தி பெற்றன.

இசை வாணியின் மாயக் குரலில் மயங்கிக் கிடந்த காலங்கள் பல. வானலைகளில் தேனென ஒலித்த அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்து தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே உள்ளது.

https://vanakkamlondon.com/stories/featured-story/2023/02/184744/

இந்த அம்மா இத்தனை ஈழப் பாடல்களை பாடியுள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

என்ன இனிமையான குரல்வளம்..! ❤️

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பலர் உயிருடன் இருக்கும் போது, அவர்களின் நல்ல செயல்கள் வெளியே தெரிவதில்லை.
வாணி ஜெயராம் அம்மா… பல ஈழ விடுதலைப் பாடல்களை பாடியமை,
அவர் மறைந்த பின்பே எனக்கு தெரிகின்றது.
கண்ணீர் அஞ்சலிகள் அம்மா.

  • கருத்துக்கள உறவுகள்

கத்திடக் கேட்டிடும் தூரமெல்லோ!கடல் கை கொண்டு தாவிடும் நீளமல்லோ!!

வீசும் காற்றே தூது செல்லு!  தமிழ்நாட்டில் எழுந்தெரு சேதி சொல்லு!!

ஏழு ஸவரங்களுக்குள் எத்தனை பாடல்! இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி!

ஏழிசை கீதமே! எமக் கொரு ஜீவன் நீ!!
இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல்!!

  • கருத்துக்கள உறவுகள்

இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.