Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.  மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை  ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇

யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉

@மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.  மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை  ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇

யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉

@மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?

இங்கிருந்து ஒருவர் இப்படித்தான் ஆட்களிடம் காசு வாங்கி இதோ ஊரை சோலையாக்கி பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று புறப்பட்டு தனக்கு ஏர்கண்டிசனுடன் வீடு சமைக்க ஆள் துவைக்க ஆள் காவலுக்கு நாய் என்று நாலு வருஷம் வாழ்ந்து விட்டு இங்கே வந்து கிடக்கிறார். நாலு கோடி காலி. 😭

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

நீங்கள் மெசோ அக்காவை மட்டும் கேட்டதனால் அடுத்திருக்கும் பரோபகாரிகள் கொஞ்சம் பணம் சேர்க்கலாம் என்று யோசிக்கிறம்.🖐️.காலப் போக்கில் அறியத் தாருங்கள்....😀✍️

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

ஐயையோ     பத்தாயிரம்  பவண்ஸ்சா????? எங்கே லண்டனிலா  பண்ணை போடப் போகிறீர்கள் ???🤣😂😂. ....காசு கிடைக்கும்  கிடைத்து. பண்ணை போட்டதும். பண்ணையின் முகவரியை அறியத்தரவும்.  நேரில் வந்து பண்ணையை பார்த்து  எனது பங்களிப்புகள் எவ்வளவு  ?? எப்போது  ?? என்று அறிவிக்கிறேன்.     அப்புறம் இனிமேல் புத்தகங்கள் வாசிக்கமாட்டீர்களா   ???

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?

கிருபண்ணை 
பகிடிக்கு சொல்லவில்லை நீங்கள் இறங்குவதென்றால் நானும் இறங்கத் தயார்.
சிங்கை டாலர்களில் தட்டிவிடலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

அதுதான் நானும் யோசித்தேன் யாயினி, சுமே எப்பேர்பட்டவர், இவர்களிடம் சிக்கிவிடுவாரா, மற்ற பதிவுகளுக்கும் காத்திருப்போம்👍

விதி யாரை விட்டது.

10 hours ago, கிருபன் said:

எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.  மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை  ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇

யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉

@மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?

ஸ்பொன்ஸருக்கு ஆட்களைப் பிடிக்கிறதென்றால் தெரியாதவர்களிடம் எல்லோ கேக்கவேண்டும்.நல்லாத் தெரிஞ்சவை நல்ல ஆட்களுக்கே கடன் தரமாட்டினம் 😀

10 hours ago, விசுகு said:

இங்கிருந்து ஒருவர் இப்படித்தான் ஆட்களிடம் காசு வாங்கி இதோ ஊரை சோலையாக்கி பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று புறப்பட்டு தனக்கு ஏர்கண்டிசனுடன் வீடு சமைக்க ஆள் துவைக்க ஆள் காவலுக்கு நாய் என்று நாலு வருஷம் வாழ்ந்து விட்டு இங்கே வந்து கிடக்கிறார். நாலு கோடி காலி. 😭

உப்பிடி ஒன்று இரண்டல்ல. நிறைய.

9 hours ago, யாயினி said:

நீங்கள் மெசோ அக்காவை மட்டும் கேட்டதனால் அடுத்திருக்கும் பரோபகாரிகள் கொஞ்சம் பணம் சேர்க்கலாம் என்று யோசிக்கிறம்.🖐️.காலப் போக்கில் அறியத் தாருங்கள்....😀✍️

ம் வரிசையா வாங்கோ 😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ம் வரிசையா வாங்கோ 😂

நாங்க கோயில்ல போயே வரிவையில நின்று ஒண்ணும் வாங்கிறேல்லயாக்கும்...👋

  • கருத்துக்கள உறவுகள்

உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை எண்டது பழசு. இப்ப ஒரு மைல்.

எனது உறவினர் நல்லூரில காணி வீடு. இவர் வெளில வர, தகப்பன் சாக, மர வேலை செய்ய வார ஒருவரை வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். வீட்டு முன்புறம் இருந்த பூட்டக்கிடந்த கடையினுள் அவர் குடியேறி, கலியாணமும் செய்து பல வருடங்களின் பின் பொம்பிளைப்பிள்ளை ஒன்றைப் பெத்துப் போட்டார். இவர் வீட்ட திருத்துவம் எண்டு போக, அவர் அங்க பிறந்த மகளுக்கு ஒரு பரப்பு தரட்டுமாம். 

சொந்தமும் இல்லை, கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

மயிரை கட்டி, மலையை இழுத்தால், வந்தா மலை, வராட்டி மயிர் தான் இழப்பு என்ற ரீதியில் கேட்கிறார்கள்.

இப்படி கோரிக்கைகள் வரும் என பதிலை தயாராக்கிக் கொண்டு போங்கோ என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.  மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை  ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇

யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉

@மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?

இவர் இதுக்கு சரிவர மாட்டார்.
எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பத்தாயிரம் ஆர் குடுப்பினம்.
முதல் அங்கே போய் அப்படி செய்ய வேணும் இப்பிடி செய்ய வேணும் என்று நீங்கள் பெரிய சமூக சேவையாளி போல காட்ட வேண்டும்.  அங்கு இருக்கும் குறைகளை புதிதாக நடப்பது போல கூற வேண்டும்.
ஒரு பெரிய காணி இருக்கு நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம் ஆனால் திருத்த வேண்டும் என்று ஒரு ஐநூறு ஆயிரம் வாங்க வேணும்.
3 மாதத்தில் திருத்திய காணிக்குள் நரி வருது எலி  வருது எண்டு சுத்தி அடைக்க ஆயிரம் இரண்டாயிரம் எண்டு வாங்க வேண்டும்.
பிறகு கொஞ்ச படங்களை போட வேணும் ... பக்கத்து தோட்ட படமென்றாலும் பரவாயில்லை
இதை இன்னும் பெருசாக்க உளவு இயந்திரம் வேணும் சிறிய கிண்டி வேண்டும் என்று ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் வாங்கி
பிறகு அடிச்ச வெளிக்கு பெயிண்ட் அடிக்க வாகன பராமரிப்புக்கென்று புதிதான ஆர்வலர்களிடம் ஒரு ஐநூறு ஆயிரம் வாங்கி
இப்பிடி படிப்படியா 2 வருடத்தில் இருபதாயிரம் முப்பதாயிரம் pounds  ஐ வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே ....

நீங்கள் இதுக்கு சரி வர மாட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பயணக் கட்டுரை சுமே. ஊர் போய்ப் பார்த்து வந்த மாதிரியே இருக்குது. நான் இலங்கை போனால் அங்க இங்க போவதற்கு பொதுப் போக்குவரத்துத் தான் பயன்படுத்துவது. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர் போல அல்லாமல் மக்கள் ஜோதியோடு இரண்டறக் கலந்து விடுவது இலங்கையில் நல்லது! ஆனால் குடும்பமாகப் போனால் அது சாத்தியமில்லை என்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..

எனக்கு அக்காவை நினைக்க அழுகிறதா , சிரிக்கிறதா என்று தெரிய இல்ல...ஏன் எனில் தினமும் முகப் புத்தகத்தில் அனேகவா வந்து போறாவாக்கு சுப்பிறமணி திருமணம் செய்தது மற்றும் பிள்ளை இருக்கு என்பது கூட தெரியாமலா .....போய் கேள்வி கேட்டுட்டு இருந்தவா..நிறைய எழுதினால் யாயினி ரொம்ப மோசம் என்று யாரும் நினைக்காதீங்க..பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர் அந்தப் பிள்ளைகளுக்காவது உருப்படியா ஏதாவது செய்திருக்கலாம்...விட்டுக்காற அண்ணாவை வெருட்டி ,வெருட்டி தன்ட பாடு போலும்....ஆ..🤭

  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிகுதியை காணல அந்த ஸ்கூட்டிய பிரட்டுன கதை வருமா அல்லது வராதா?? 

21 hours ago, விசுகு said:

இங்கிருந்து ஒருவர் இப்படித்தான் ஆட்களிடம் காசு வாங்கி இதோ ஊரை சோலையாக்கி பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று புறப்பட்டு தனக்கு ஏர்கண்டிசனுடன் வீடு சமைக்க ஆள் துவைக்க ஆள் காவலுக்கு நாய் என்று நாலு வருஷம் வாழ்ந்து விட்டு இங்கே வந்து கிடக்கிறார். நாலு கோடி காலி. 😭

நாலு கோடிக்கு என்ன செஞ்சிருப்பார்

இதற்க்காகவே  இந்த தனி விலகியே நிற்பது ?? இப்பவும் சொல்லுவது இதைத்தான் நீங்கள் நினைப்பது போல ஈழம் - இலங்கை அல்ல  மாறாக பொய் ,பித்தலாட்டம் நிறைந்து காணப்படுகிறது  ஆனால் எல்லோரும் அல்ல சிலருக்கு இப்படி அமைந்து விடுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாத் தெரிஞ்சவை நல்ல ஆட்களுக்கே கடன் தரமாட்டினம்

FAA06646-EE08-4882-A761-56-F8441-D0-E81.

அப்பிடி எண்டால் கிருபன் நல்ல ஆள் இல்லை எண்டு சொல்லுறீங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, யாயினி said:

நாங்க கோயில்ல போயே வரிவையில நின்று ஒண்ணும் வாங்கிறேல்லயாக்கும்...👋

நான் கோயில் பக்கமே எட்டிப் பாக்கிறேல்லை. 😀

19 hours ago, Nathamuni said:

உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை எண்டது பழசு. இப்ப ஒரு மைல்.

எனது உறவினர் நல்லூரில காணி வீடு. இவர் வெளில வர, தகப்பன் சாக, மர வேலை செய்ய வார ஒருவரை வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். வீட்டு முன்புறம் இருந்த பூட்டக்கிடந்த கடையினுள் அவர் குடியேறி, கலியாணமும் செய்து பல வருடங்களின் பின் பொம்பிளைப்பிள்ளை ஒன்றைப் பெத்துப் போட்டார். இவர் வீட்ட திருத்துவம் எண்டு போக, அவர் அங்க பிறந்த மகளுக்கு ஒரு பரப்பு தரட்டுமாம். 

சொந்தமும் இல்லை, கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

மயிரை கட்டி, மலையை இழுத்தால், வந்தா மலை, வராட்டி மயிர் தான் இழப்பு என்ற ரீதியில் கேட்கிறார்கள்.

இப்படி கோரிக்கைகள் வரும் என பதிலை தயாராக்கிக் கொண்டு போங்கோ என்கிறார்.

இப்பிடிப் பல கதைகள்தான். அதற்காக அவர்கள் கூச்சப்படுவதும் இல்லை என்பதே கொடுமை .

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2023 at 21:50, கிருபன் said:

எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது.  மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை  ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇

யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉

@மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?

அந்தாளுக்கு விசர்தான். (பிரபா)

அக்கா, தீடீரெண்டு, ரெயிடு போகேல்ல. சொல்லிப்போட்டுத்தானே போனவ.

நான் எண்டா, இன்னொரு பாமில கைமாத்தா வாங்கி, ஐநூறு, ஆயீரம் கோழியலை காட்டி, 10 மாடுகளை கட்டி, 5 பன்டியள ஓடவிட்டு, 30 ஆடுகள காலுக்க கையுக்க ஓட விட்டு, அத்தாரை கடைக்கண்ணால ஒரு புன்சிரிப்போட பார்க்க வைத்து, அடுத்த புறயக்டுக்கு, £10,000 க்கு அங்கினயே அலுவல் பார்த்திருப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பிடிப் பல கதைகள்தான். அதற்காக அவர்கள் கூச்சப்படுவதும் இல்லை என்பதே கொடுமை .

வெட்கம், மானம் ,ரோசம் எல்லாவற்றையும் விட்டு தான் இப்படியானவர்கள் களத்தில் இறங்குகிறார்கள்.

22 hours ago, Sabesh said:

இவர் இதுக்கு சரிவர மாட்டார்.
எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பத்தாயிரம் ஆர் குடுப்பினம்.
முதல் அங்கே போய் அப்படி செய்ய வேணும் இப்பிடி செய்ய வேணும் என்று நீங்கள் பெரிய சமூக சேவையாளி போல காட்ட வேண்டும்.  அங்கு இருக்கும் குறைகளை புதிதாக நடப்பது போல கூற வேண்டும்.
ஒரு பெரிய காணி இருக்கு நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம் ஆனால் திருத்த வேண்டும் என்று ஒரு ஐநூறு ஆயிரம் வாங்க வேணும்.
3 மாதத்தில் திருத்திய காணிக்குள் நரி வருது எலி  வருது எண்டு சுத்தி அடைக்க ஆயிரம் இரண்டாயிரம் எண்டு வாங்க வேண்டும்.
பிறகு கொஞ்ச படங்களை போட வேணும் ... பக்கத்து தோட்ட படமென்றாலும் பரவாயில்லை
இதை இன்னும் பெருசாக்க உளவு இயந்திரம் வேணும் சிறிய கிண்டி வேண்டும் என்று ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் வாங்கி
பிறகு அடிச்ச வெளிக்கு பெயிண்ட் அடிக்க வாகன பராமரிப்புக்கென்று புதிதான ஆர்வலர்களிடம் ஒரு ஐநூறு ஆயிரம் வாங்கி
இப்பிடி படிப்படியா 2 வருடத்தில் இருபதாயிரம் முப்பதாயிரம் pounds  ஐ வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே ....

நீங்கள் இதுக்கு சரி வர மாட்டீர்கள்

அதானே. ஒரு படிமுறை எல்லாவற்றுக்கும் உண்டு.🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2023 at 13:27, பாலபத்ர ஓணாண்டி said:

சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..

சுள்ளிக்கு மனிசனும் மகளும் எங்க போறது? நாங்கள் காசு குடுத்தது 2019 இல.

23 hours ago, Justin said:

அருமையான பயணக் கட்டுரை சுமே. ஊர் போய்ப் பார்த்து வந்த மாதிரியே இருக்குது. நான் இலங்கை போனால் அங்க இங்க போவதற்கு பொதுப் போக்குவரத்துத் தான் பயன்படுத்துவது. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர் போல அல்லாமல் மக்கள் ஜோதியோடு இரண்டறக் கலந்து விடுவது இலங்கையில் நல்லது! ஆனால் குடும்பமாகப் போனால் அது சாத்தியமில்லை என்பது உண்மை.

நீங்கள் ஆண் பிரச்சனை குறைவு. பெண்கள் நிலை வேறு. நானும் பொது வாகனங்ககளில் போய் பட்டிருக்கிறேன்.

21 hours ago, யாயினி said:

எனக்கு அக்காவை நினைக்க அழுகிறதா , சிரிக்கிறதா என்று தெரிய இல்ல...ஏன் எனில் தினமும் முகப் புத்தகத்தில் அனேகவா வந்து போறாவாக்கு சுப்பிறமணி திருமணம் செய்தது மற்றும் பிள்ளை இருக்கு என்பது கூட தெரியாமலா .....போய் கேள்வி கேட்டுட்டு இருந்தவா..நிறைய எழுதினால் யாயினி ரொம்ப மோசம் என்று யாரும் நினைக்காதீங்க..பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர் அந்தப் பிள்ளைகளுக்காவது உருப்படியா ஏதாவது செய்திருக்கலாம்...விட்டுக்காற அண்ணாவை வெருட்டி ,வெருட்டி தன்ட பாடு போலும்....ஆ..🤭

நீங்களெல்லாம் இப்பிடி எழுதி நான் கேட்க வேண்டிய நிலை. நாம் பண்ணைக்கு பணம் கொடுத்தது2019 இல் 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க மிகுதியை காணல அந்த ஸ்கூட்டிய பிரட்டுன கதை வருமா அல்லது வராதா?? 

ஆனால் எல்லோரும் அல்ல சிலருக்கு இப்படி அமைந்து விடுகிறது 

மிகுதி வரும் தம்பியா பொறுமை அவசியம்.

பலருக்கும் இப்படி அமைந்துவிடுகிறது. சிலர்தான் உண்மையாக நடக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

FAA06646-EE08-4882-A761-56-F8441-D0-E81.

அப்பிடி எண்டால் கிருபன் நல்ல ஆள் இல்லை எண்டு சொல்லுறீங்களோ?

நல்லாக் கொழுவி விடுறியள😂் 

1 hour ago, Nathamuni said:

அந்தாளுக்கு விசர்தான். (பிரபா)

அக்கா, தீடீரெண்டு, ரெயிடு போகேல்ல. சொல்லிப்போட்டுத்தானே போனவ.

நான் எண்டா, இன்னொரு பாமில கைமாத்தா வாங்கி, ஐநூறு, ஆயீரம் கோழியலை காட்டி, 10 மாடுகளை கட்டி, 5 பன்டியள ஓடவிட்டு, 30 ஆடுகள காலுக்க கையுக்க ஓட விட்டு, அத்தாரை கடைக்கண்ணால ஒரு புன்சிரிப்போட பார்க்க வைத்து, அடுத்த புறயக்டுக்கு, £10,000 க்கு அங்கினயே அலுவல் பார்த்திருப்பன்.

எல்லாரும் நல்லாக் கதை சொல்லலாம். அனுபவப்பட்டாத்தான் தெரியும். பிரபா எங்களுக்கு புறொபோசல்,பிளான் எல்லாம் கூட எழுதித் தந்தார்.

1 hour ago, nunavilan said:

வெட்கம், மானம் ,ரோசம் எல்லாவற்றையும் விட்டு தான் இப்படியானவர்கள் களத்தில் இறங்குகிறார்கள்.

அதானே. ஒரு படிமுறை எல்லாவற்றுக்கும் உண்டு.🙂

😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாக் கொழுவி விடுறியள😂் 

அதென்றால் உண்மைதான்😂, அவரின் ஓவியத்தில் உங்கள் முகம் மிளிர்கின்றது😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்து 

ஓட்டோவில் போகும்போதே ஒரு பெரிய குளம் தெரிகிறது. அதன் பெயர் ஓட்டோக்காரருக்கே தெரியவில்லை என்கிறார். பெரிதாக சன நடமாட்டமே இல்லாத பகுதியாக இருக்கிறது. அக்கராயன் குளமாக இருக்கலாம் என்கிறார் இவர். நீர் நிறைந்துபோய் காணப்படுகிறது. அதில் இறங்கிக் காலை நனைத்துவிட்டு மேலேவந்து மீண்டும் பயணத்தைத் தொடர்கிறோம். இரணைமடுக் குளத்தையும் பார்க்கப் போவோம் என்று கணவர் கூற அங்கே பெரிதாகத்தண்ணீர் இப்ப இல்லை என்கிறார் ஒட்டுனர். பரவாயில்லை போவோம் என்கிறார். போகும் வழிகளில் எல்லாம் காய்ந்துபோய் நிலம் வரண்டுபோய் இருக்கு. வெப்பமும் அதிகமாக இருக்கு. கிட்டப் போக ஏமாற்றமாகவே இருக்கு. அந்த வெயிலில் இறங்கிக் குடை பிடித்துக்கொண்டு ஏற காவலுக்கு இருப்பவர் இப்ப போக ஏலாது என்கிறார். நாம் போக முடியாதவாறு கயிறு கட்டப்பட்டிருக்கு. எரிச்சலுடன் 2003 வந்தபோது வான் கதவுகள் இருக்கும் இடம்வரை சென்றோமே என்கிறேன். இப்ப போக விடுவதில்லை என்கிறார் மீண்டும். மழை பெய்து வான்பாயும்போது தான் திறந்து விடுவார்கள் பார்க்க என்கிறார். எங்கு பார்த்தாலும் வெயிலின் உக்கிரம். 

ஒரு ஐந்து ஏக்கர் காணி வாங்கி ஒரு நல்ல பண்ணையை உருவாக்கிக் காட்டவேண்டும் என்கிறேன். இந்த வெயிலைத் தாங்க ஏலாமல் துடிக்கிறாய். அதில திரும்பவும் பண்ணைக் கதையோ என்று சிரிக்கிறார் மனிசன். அம்மா நீங்க ள் இந்த வெயிலுக்குள்ள இருக்க மாட்டியள் என்று மகள் வேறு சிரிக்கிறாள். ஐந்து சதம் காசும் உனக்குத் தரமாட்டேன் என்கிறார். இப்ப எதுவும் கதைக்கக் கூடாது என்று வாயை மூடிக் கொள்கிறேன். ஓட்டோக்காரரிடம் கேட்க தான் ஒரு நல்ல உணவகத்தைக் காட்டுவதாகக் கூறி கொண்டுசென்று விடுகிறார். மரங்கள் நிறைந்திருக்க ஓலையால் வேய்ந்த ஒரு இடமும் வீடுமாய் பார்க்க வெயிலுக்கு இதமாய் இருக்க நன்றி கூறி அவருக்கு எவ்வளவு ஓட்டோவுக்கு என்கிறோம். பிரபா தான் தருவதாகக் கூறினார் என்கிறார். இல்லை நான் பிரபாவிடம் சொல்கிறேன் என்று அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிர வாருங்கள் என்று சிரிதபடியே இருவர் நிற்கின்றனர். நாம் சென்று ஓரிடத்தில் அமர்கிறோம்.

இளையவர்கள் சேர்ந்து அந்த உணவகத்தை ஆரம்பித்திருப்பதாகக் கூறினார் ஓட்டோக்காரர். சிறிது நேரத்தில் மெனு காட்டைக் கொண்டு வருகிறார் ஒரு 20, 22 மதிக்கத்தக்க பொடியன். மகள் துருவித் துருவி உணவுகள் பற்றிக் கேட்டுவிட நாம் ஓடர் செய்கிறோம். முதலில் பிரெஸ் யூஸ் கொண்டுவரும்படி கூற ஒரு பத்து நிமிடத்தில் அழகிய கண்ணாடிக் குவளைகளில் யூஸ் வருகிறது.சிறிது நேரத்தில் வெறும் தட்டுகளைத் நீருடன் கொண்டுவந்து வைக்க தம்பி ரிசு கொண்டுவாங்கோ என்கிறேன். அம்மா பெடியனை ஏன் பயப்படுத்துகிறீர்கள் என்று சிரிக்கிறாள் மகள். பெடி ரிசு கொண்டுவந்து நீட்ட வாங்கியபடி “தட்டுகளைக் கொண்டுவந்து வைக்கும்போது துடைத்துவிட்டுக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்” என்று சிரித்தபடி கூற ஓம் என்று தலையாட்டிவிட்டு போகிறார். சீ பூட் பிரைட் ரைஸ், மீன் குழம்பு, இறால்ப் பொரியல், மட்டன் புரியாணி என்று எடுத்து கலந்து உண்கிறோம். மிகச் சுவையாகவே இருக்கிறது. வயிறும் மனதும் நிறைந்துபோய் இருக்கிறது. 4400 பில் வர ஐயாயிரம் ரூபாய்களை வைத்துவிட்டு மிகுதியை  டிப்சாக வைத்துவிட்டு வருகிறோம். ஆனால் எமக்கு உணவு பரிமாறிய பையனுக்குப் பதிலாக வேறொருவர் வந்து அதை எடுத்துப் போகிறார். 

தன்னுடன் வளர்ந்தவர்கள் தெரிந்தவர்கள் வீடுகள் இன்னும் இருக்கின்றன. அங்கு சென்றுவிட்டு நாளை செல்வோம் என்கிறார். நீங்கள் தனியாக வந்து உங்களுக்குத் தெரிந்தவர் வீடுகளுக்குச் செல்லுங்கள். நாங்கள் இந்த வெயிலில் வீடுவீடாக வர முடியாது என்று நானும் மகளும் மறுத்துவிட 3.30 ரெயினுக்கு யாழ்ப்பாணம் போகலாம் என முடிவெடுக்கிறோம்.   

நாம் ரெயினை விட்டு இறங்கும்போதே மாலையில் எத்தனைக்கு றெயின் என்று பார்த்துவிட்டு வந்ததனால் அருகில் இருக்கும் தமிழ்க்கவி அக்கா வீட்டிற்குச் சென்றால் அங்கே அவரில்லை. மீண்டும் கோட்டலுக்குச் சென்று ஆடிப்பாடிப் பொதிகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தால் அந்தப் பெண் வரவேற்பறையில் இருக்கிறார். நாங்கள் போகிறோம் என்றதும் 6000 ரூபாய்கள் என்கிறார். நாங்கள் போன் செய்தபோது 5000 ரூபாய்கள் என்றுதானே சொன்னார் கதைத்தவர் என்றபடி அவருக்குப் போன் செய்ய, அவர் போனை அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படிகூறுகிறார். அந்தப் பெண்ணும் கதைத்துவிட்டு 5000 என்கிறார். பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து டிக்கட் எடுப்பதற்கு கவுன்டரில் போய் நின்றால் அவர் உள்ளே உண்டுகொண்டிருக்கிறார். எம்மை திரும்பிப் பார்க்கவுமில்லை. எதுவும் சொல்லவுமில்லை. நான் திரும்பி வந்து இருக்கையில் அமர்கிறேன். மீண்டும் ஒரு பதினைந்து நிமிடம் செல்ல சென்று பார்த்தால் அவரைக் காணவில்லை. இரண்டே முக்கால் ஆகிவிட மீண்டும் போனால் அவர் கண்டும் காணாததுபோல் இருக்க excuse me என்று சொல்லத் திரும்பிப் பார்க்கிறார். 

டிக்கட் எடுக்க வேண்டும் என்கிறேன். இன்னும் நேரம் இருக்கு என்றுவிட்டு தன்  அலுவலைப் பார்க்கிறார். கோபத்துடன் நான் திரும்ப வந்து டிக்கற்றைத் தந்தால் நாங்கள் நின்மதியாய் இருப்பமே என்றபடி அமர்கிறேன். பேமென்டில் இரண்டுமூன்று இளஞர்கள் கதிரையிலும் மேசையிலுமிருந்து சிங்களத்தில் கதைத்துச் சிரித்தபடி இருக்கின்றனர். அவர்கள் அங்கு வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும். தமிழ்ப் பகுதியில் தமிழர்கள் அல்லாதவர் வேலை செய்வது கொடுமையாக இருக்கிறது. நான் கணவரிடம் இதுபற்றிக் கதைத்துக்கொண்டு இருந்தபோது பக்கத்தில் இருந்த ஒருவர் எங்கடை தமிழ்ப் பெடியள் இப்பிடியான வேலையளுக்கு வாறதை விரும்பிறதில்லை. அவங்கள்ளையும் பிழை சொல்ல ஏலாது என்றார். றெயின் வார 15 நிமிடம் இருக்க டிக்கட் வாங்க மீண்டும் போனால் றெயின் ஒன்றரை மணி நேரம் லேட். பரவாயில்லை டிக்கற்றைத் தாருங்கள் என்று கூறி வாங்கிக் கொண்டுவந்து அமர்கிறோம். அதன்பின்தான் அறிவிக்கிறார்கள் பிந்தி றெயின் வரும் என்பதை. 

குறிப்பு 

நான் இப்படியே எழுதிக்கொண்டு போனால் எனக்கும் நேரம் போதாது. உங்களுக்கும் சலிப்பாகிவிடும் என்பதால் முக்கியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன். 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

அதென்றால் உண்மைதான்😂, அவரின் ஓவியத்தில் உங்கள் முகம் மிளிர்கின்றது😂

👌😃

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் ஊர் போகும் ஆசையை உங்களது கட்டுரை ஏற்படுத்துகிறது.. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஸ்டேஷன் வந்து டிக்கட் எடுப்பதற்கு கவுன்டரில் போய் நின்றால் அவர் உள்ளே உண்டுகொண்டிருக்கிறார். எம்மை திரும்பிப் பார்க்கவுமில்லை. எதுவும் சொல்லவுமில்லை. நான் திரும்பி வந்து இருக்கையில் அமர்கிறேன். மீண்டும் ஒரு பதினைந்து நிமிடம் செல்ல சென்று பார்த்தால் அவரைக் காணவில்லை. இரண்டே முக்கால் ஆகிவிட மீண்டும் போனால் அவர் கண்டும் காணாததுபோல் இருக்க excuse me என்று சொல்லத் திரும்பிப் பார்க்கிறார். 

இப்படியானவர்கள் தமிழர்களில் மட்டுமே பார்க்க முடிவது எண்களின் சாபக்கேடு

குறிப்பு 

நான் இப்படியே எழுதிக்கொண்டு போனால் எனக்கும் நேரம் போதாது. உங்களுக்கும் சலிப்பாகிவிடும் என்பதால் முக்கியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன். 

எங்களுக்கு சலிப்பு எதுவும் இல்லை... நீங்கள் விலாவரியாக எழுதுங்கள்.  வாசிக்க ஆர்வமாகவும் பிரயோசனமாகவும் உள்ளது.

எனக்கும் உங்களை, இணையவனை போன்று அங்கு போவது பற்றிய சிந்தனை இருக்கிற படியால் பல விடையங்களை அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குறிப்பு 

நான் இப்படியே எழுதிக்கொண்டு போனால் எனக்கும் நேரம் போதாது. உங்களுக்கும் சலிப்பாகிவிடும் என்பதால் முக்கியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன். 

பகிடி விடாமல் எழுதுங்கோ!

வாசிக்கிறோம் 👍

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.