Jump to content

எனது பெற்றோர் அகதிகள் நானும் அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் - அகதிகள் புகலிடக் கோரிக்கையாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இலங்கை பெண்

Recommended Posts

9 minutes ago, P.S.பிரபா said:

மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான். 

பலருக்கு ஒன்று புரிவதில்லை.

இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று.

நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.

வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பழைய digital storage media வில் வெறும் binary வடிவில் photo வாகவோ video வாகவோ உறைந்து கிடப்போம்.

எம் வாழ்வு என்பது இவ்வளவு தான்!

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

பலருக்கு ஒன்று புரிவதில்லை. இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று. நான் இன்று மோ

பகிடி

வெள்ளை இன மக்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் எங்களுக்கோ ஆப்பிரிக்கன் மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இங்கே கனடாவுக்கு லட்சக்கணக்கில் உக்ரேனியன் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக 3 வருட

Justin

உழைப்பு என்பது நல்லதொரு வாழ்க்கையைக் கொண்டு போகத்தான் என்பது நிழலி போலவே என்னுடையதும் நம்பிக்கை. இதனால் மணித்துளிகளை "money" ஆக மாற்றிக் கொள்ளாவிட்டால் அது வேஸ்ற் என்று அர்த்தம் கொள்வதில்லை😂. பிள

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

பலருக்கு ஒன்று புரிவதில்லை.

இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று.

நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.

வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பழைய digital storage media வில் வெறும் binary வடிவில் photo வாகவோ video வாகவோ உறைந்து கிடப்போம்.

உண்மை

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, P.S.பிரபா said:

மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான். 

உப்படியான   சிந்தனைகளை  எமது தாய் தந்தையர் உட்பட முன்னோர்களும்  கடைப்பிடித்திருந்தால் எம் இனம் உறவுகள் எல்லாமே அழிந்திருக்கும்.

எமது நாட்டில் கலவரங்கள் இல்லாதிருந்து எம் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ஏனைய அமைதியான நாடுகளில் வாழும் பரம்பரை சொத்துக்களை பாட்டன் பூட்டன் பேரன் என அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது.

மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:
Quote

நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.

UK யில் inheritance tax என்று ஒரு கோதாரி இழவு இருக்கிறது. நீங்கள் வரி கட்டி மிஞ்சின காசுல மோர்ட்கேஜ் கட்டி முடிச்சு, பிள்ளைகளுக்கு எழுதி, பிறகு ஏழு வருசம் உயிரோடே இருந்தால், அவர்களுக்கு வரி இல்லை. 7 வருசத்துக்குள்ள மண்டையை போட்டால், அவர்கள் அந்த வீட்டினை வித்து அல்லது அதன் மீது ஈடு எடுத்து, அரசுக்கு 40% கட்டித் தொலைக்க வேண்டும்.

அதாலை 70/75 தாண்டி கொடுத்தியல் எண்டால், ஒரு ஏழு வருசத்துக்கு, உங்களை வடிவா பார்ப்பினம். இல்லாட்டில் care home தான்.

ஏழு வருசத்துக்கு முன்னம் care home போனாலும், வீட்டினை வித்து, அந்த காசில் care செலவுகளை பாருங்கோ எண்டுவான்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான். 

இல்லையே, எதையும் சாதிக்காதவன் மட்டுமே, பிறந்தேன், வாழ்ந்தேன், கிளம்பிறேன் என்று புலம்பிச்சாவான்.

சாதித்தவன், மனநிறைவோடு போவான்.

வென்றவனையே உலகம் போற்றும், பேசும். தோற்றுப் போனவனை உலகம் கண்டுகொள்ளவதில்லை.

சாதாரண வாழ்வு வாழ்ந்தவனை, நிழலி சொன்னது போல, அவனது குடும்பமே, அதுவும் சொத்து பத்து வைக்காமல் போனால், அந்தியேட்டியே வைக்காது.

நிறைவான வாழ்வு வாழ்ந்தவனை சமூகம் காலாகாலத்துக்கும் போற்றும். 

திருவள்ளுவனை 2000 ஆண்டு கடந்தும் போற்றும் சமூகத்துக்கு அவனது தந்தை, தாய் யாரென்றோ, பெண் கொடுத்த, மாமன், மாமி யாரென்றோ, அன்று ஆண்ட மன்னன் யாரென்றோ தெரியாதே. அவனால் அவனது மனைவி வாசுகியும் எமக்கு தெரிகின்றார்.

1 hour ago, நிழலி said:

பலருக்கு ஒன்று புரிவதில்லை.

இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று.

நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.

வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பழைய digital storage media வில் வெறும் binary வடிவில் photo வாகவோ video வாகவோ உறைந்து கிடப்போம்.

எம் வாழ்வு என்பது இவ்வளவு தான்!

இது புதிய தத்துவமா என்ன?

இது அதிகமாக புரிந்தவன் கலியாணமே வேண்டாம் என்று சன்னாசி ஆகிறான்.

கலியாணம் கட்டியவனோ, போதுமடா சாமி என்று (உடான்ஸ்சு ) சாமியாகிறார்.

மிக, மிக அதிகமாக புரிந்து கொண்டவனோ, (நிழலியானந்தா) நித்தியானந்தா ஆகிறார்.

இதை புரிந்து கொண்டவன் பிழைத்துக் கொள்கிறான்..

அவ்வளவுதான் வாழ்கை.🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உப்படியான   சிந்தனைகளை  எமது தாய் தந்தையர் உட்பட முன்னோர்களும்  கடைப்பிடித்திருந்தால் எம் இனம் உறவுகள் எல்லாமே அழிந்திருக்கும்.

எமது நாட்டில் கலவரங்கள் இல்லாதிருந்து

Quote

எம் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ஏனைய அமைதியான நாடுகளில் வாழும் பரம்பரை சொத்துக்களை பாட்டன் பூட்டன் பேரன் என அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது.

மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன.

கிழக்கிந்திய கொம்பனி சென்னையில் வாங்கிய சொத்து 5 ஏக்கரில் அதன் பெயரில் அவர்கள் காலத்திலேயே பதியப்பட்டு இருந்தது.

இப்போது 500 கோடி பெறுமதியான அதனை யாரோ ஆட்டையை போடுகிறார்களாம். அந்த கொம்பனி இப்ப இருந்தால், போய் நிண்டு இருக்கலாம்.

***

திரைகடல் ஓடி திரவியம் தேட சென்றவர்களும், மகா தத்துவம் அடித்து விடுகிறார்கள். இவர்கள் பேசாமல் ஊரில் இருந்து இருக்கலாமே என்று தோன்றுகிறது. 🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, P.S.பிரபா said:

மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான்.

நீங்கள் சொன்னது மிகவும் சரியானது.

[நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.]
இந்தியாவில் அப்பா அம்மா மோர்ட்கேஜ் கட்டி  சொந்தமாக்கிய வீட்டை பிள்ளைகள் அவர்கள் இருக்கும் போது பறிப்பதற்கு முயற்சிப்பார்களாம் அப்படி பல நடந்துள்ளதாம்.
இலங்கையிலோ ஆசை பேராசையாகி மற்றவர்களின் சொத்துக்களை மோசடி செய்தும் சொத்துக்கள்  சேர்ப்பது நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உப்படியான   சிந்தனைகளை  எமது தாய் தந்தையர் உட்பட முன்னோர்களும்  கடைப்பிடித்திருந்தால் எம் இனம் உறவுகள் எல்லாமே அழிந்திருக்கும்.

எமது நாட்டில் கலவரங்கள் இல்லாதிருந்து எம் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ஏனைய அமைதியான நாடுகளில் வாழும் பரம்பரை சொத்துக்களை பாட்டன் பூட்டன் பேரன் என அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது.

மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன.

அருமையான கருத்து.

இதை ஆங்கிலத்தில் generational wealth building என்பார்கள்.  இதை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.

நாம் யாருமே வள்ளுவன் போல் வாழ்வாங்கு வாழப்போவலை. வள்ளுவனை அவரின் பணத்தால் அல்ல நினைவுகூறுகிறோம். அவர் ஏற்படுத்திய தாக்கத்தால். பாரதிக்கும் அதுவே.

என்ன பணம் இருந்தாலும் இல்லாட்டிலும் 5 தலைமுறைக்கு அப்பால் சிலரே நினைவில் நிற்பர்.

இனி நாம் அப்படி ஒரு ஆளாக வரமுடியாது.

ஆகவே முடிந்தளவு, தென்பு இருக்கும் போது உழைத்து கொண்டே இருக்காமல் வாழ்வை வாழவும் வேண்டும்.

அதே போல் நானே உழைத்தேன், நானே  தின்றேன் என்று இருக்கத்தேவையில்லை. எனது பரம்பரை வீடு, என் வாழ்நாளில் 5ம் தலைமுறையின் கைக்கு போவதை நான் பார்ப்பேன் என நினைக்கிறேன். 

அது நான் யார், என் பாட்டன் யார் என்பதை என் பூட்டனுக்கு சொல்லி நிற்கும். சொத்தின் மதிப்புக்கு மேலாக இது கொடுக்கும் அடையாளம் மிக முக்கியம். 

எல்லாம் ஒரு balance தான். 

அரிச்சு பொரிச்சு சாகும் போது எதையும் அனுபவிக்காமலும் சாகத்தேவையில்லை, 

பேரப்பிள்ளைகள் “ என்னத்தத்தான் வாழ்ந்து கிழிச்சானோ” என எண்ணும் வகையில் வெறும் தட்டை விட்டு போகவும் தேவையில்லை.

வரும் 4 ம் தலைமுறைக்கு, 2ம் தலைமுறை நினைவுகூறும் விதமாக இருந்தால் போதும். அதுக்கு மேல் எல்லாரும் வெறும் record on the birth register தான்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம்.

இங்கே பல வெள்ளைகள் குடும்ப வருமானம் 35-40K யில் லாவகமாக வாழ்வதை கண்டுள்ளேன். குறிப்பாக நகருக்கு வெளியே, கிராமங்களில், தோட்டங்களில் வாழ்வோர்.

ஆனால் அவர்களுக்கு family trust அல்லது லீசில் இருக்கும் ஆதனங்கள் மூலம் இன்னுமொரு, வரி சுமை குறைந்த வருமானம் அல்லது இலவச உயர்தர கல்வி போன்ற அனுகூலங்கள் இருக்கும்.

அவர்களோடு நாம் வெளிநாட்டில் இருந்து வந்து முதல் பவுண்டை நாமே உழைத்து வாழும் போது - அதே 35-40 குடும்ப வருமானத்தில் - லண்டன் வாழ்க்கை ஒரு pay check-to-pay check சிறை எனத்தோன்றும்.

இதுதான் சொத்து சேர்ப்பதன் அனுகூலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

UK யில் inheritance tax என்று ஒரு கோதாரி இழவு இருக்கிறது. நீங்கள் வரி கட்டி மிஞ்சின காசுல மோர்ட்கேஜ் கட்டி முடிச்சு, பிள்ளைகளுக்கு எழுதி, பிறகு ஏழு வருசம் உயிரோடே இருந்தால், அவர்களுக்கு வரி இல்லை. 7 வருசத்துக்குள்ள மண்டையை போட்டால், அவர்கள் அந்த வீட்டினை வித்து அல்லது அதன் மீது ஈடு எடுத்து, அரசுக்கு 40% கட்டித் தொலைக்க வேண்டும்.

அதாலை 70/75 தாண்டி கொடுத்தியல் எண்டால், ஒரு ஏழு வருசத்துக்கு, உங்களை வடிவா பார்ப்பினம். இல்லாட்டில் care home தான்.

ஏழு வருசத்துக்கு முன்னம் care home போனாலும், வீட்டினை வித்து, அந்த காசில் care செலவுகளை பாருங்கோ எண்டுவான்கள்

அநேகம் பேருக்கு வீட்டின் equity 325K க்கு கீழதான் இருக்கும். அதுவும் கணவன் மனைவி எனில் இந்த எல்லை இரு மடங்காகும் என நினைக்கிறேன். ஆகவே இப்போதைக்கு எங்கட ஆட்கள் 90% ம் இதை பற்றி யோசிக்க தேவையில்லை என நினைக்கிறேன்.

அத்தோடு வீட்டை buy to let ஆக்கி, கம்பெனி ஆக்கி அதில் பிள்ளைகளை பங்குதாரர் ஆக்கும் ஒரு முறையும் இருக்கு, இன்னும் இதை வடிவாக ஆராயவில்லை.

ஆனால் வைத்து பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே தரும்.

அடுத்த சந்ததி எம்மை போல் இராது.

இலங்கையிலும் இதுவே நிலை.

இப்பவே மனதளவில் Care home வாழ்வை ஏற்க மனதை தயார்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

.

இப்பவே மனதளவில் Care home வாழ்வை ஏற்க மனதை தயார்படுத்த வேண்டும்.

தல இதைப்பற்றி ஒரு திரி திறந்து எழுதுங்கோ.. இங்க பலருக்கும் உதவியா இருக்கும்..அநேகம்பேர் பென்சன் எடுக்குற விளிம்பில..

Link to comment
Share on other sites

20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தல இதைப்பற்றி ஒரு திரி திறந்து எழுதுங்கோ.. இங்க பலருக்கும் உதவியா இருக்கும்..அநேகம்பேர் பென்சன் எடுக்குற விளிம்பில..

இங்கு விவாதிக்கப்படும் சில விடயங்கள் நான் சுய ஆக்கம் பகுதியில் எழுதியவற்றைத் தொட்டுச் செல்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்பவே மனதளவில் Care home வாழ்வை ஏற்க மனதை தயார்படுத்த வேண்டும்.

மனைவியும் நானும் எம்மைத் தயாராக்கிவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோக்கி யோசித்து குறைந்தது அடுத்த தலைமுறைக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியம் தான் (இல்லா விட்டால் பெற்றோர் என்று இருந்து என்ன பயன்?) . இதை எந்த வடிவத்தில் விட்டுச் செல்வது என்பது கூட நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் சாதாரண பல்கலை இளமாணிப் பட்டப் படிப்பிற்கே தனியாகச் சேர்க்க வேண்டும் அல்லது படிக்கும் பிள்ளை கடன் வாங்க வேண்டும். கனடா, இங்கிலாந்தில் இது வித்தியாசாமாக இருக்குமென நினைக்கிறேன். எனவே, வீடொன்றை வாங்கி அதில் equity இனை உருவாக்கி பின்னர் அதனை வைத்து நிதிப் பலத்தை ஆசியப் பெற்றோர் ஏற்படுத்துகின்றனர். திடீரென்று பெற்றோருக்கு ஏதாவது ஆனால், ஆயுள் காப்புறுதி பிள்ளையைக் காக்கக் கூடியவாறும் இருக்க வேண்டும். இவையெல்லாம் முக்கியம்..

ஆனால்.."பணம் உழைப்பது தான் முற்றிலும் முதன்மை" என்று இருப்போரின் தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் சில சமயங்களில் "அறம்" பின் ஆசனத்திற்குப் போய் விடுகிறது என்பதை அவதானிக்கிறேன். இது அரசுக்குக் கட்டும் வரியில் கோல்மால் செய்யும் சிறு விடயங்களில் தொடங்கி, பின்னர் சட்டத்தின் மறு பக்கத்தில் போய் நிற்கும் நிலைக்கு ஆட்களை இட்டுச் சென்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். இதனை குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் பார்த்து, இது ஓகே என்று நம்பி உள்வாங்கினால், எதைச்சேர்த்து வைத்தும் shallow & cynical generation ஒன்றை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. உ+ம்: நைஜீரியாவின் பெரு நகரங்களின் இளம் சந்ததி!    

Link to comment
Share on other sites

On 27/9/2023 at 18:39, பாலபத்ர ஓணாண்டி said:

இப்ப எனக்கு

*நெற் சலரி - 1500€

*அரச உதவி-1200€

மொத்த மாத வருமானம்-2700€

ஓணாண்டி, நீங்கள் சொல்வது சரி. நீங்கள் ஓய்வூதியம் எடுப்பவராக இருந்தாலும் இதுதான் நிலமை. ஒருவர் ஆயுள் முழுவதும் சாதாரண வேலை செய்து 1200 எடுப்பார். இன்னொருவர் வேலையே செய்யாமல் 900€ வும் எடுத்து இலவச சலுகைகளையும் எடுப்பார்.

இந்த அரச உதவி, ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் எங்கிருந்து வருகின்றன ?  பிரான்சில் ஒருவர் வேலை செய்து அவர் செலுத்தும் வரிகளூடாகவே இவை இன்னொருவருக்குப் போய்ச் சேருகின்றன. ஒருவரின் ஓய்வூதியத்திற்கு தற்சமையம் 3 பேர் வேலை செய்து கட்டும் வரி தேவைப்படுகிறது.

உங்கள் சமன்பாடு தவறென்று சொல்லவில்லை. நீங்கள் தவறென்று சுட்டிக் காட்டிய சமன்பாட்டிலும் ஏதோ உள்ளபடியால்தானே வேறு பலரும் அதனைப் பின்ன்பற்றுகிறார்கள். தவிர உங்கள் சமன்பாட்டினைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றினால் நாட்டின் பொருளாதாரமும் சிதைந்துவிடும் அல்லவா.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான வெள்ளையள் பெனிபிட்டில் தானே இருக்கினம்...அவையளுக்கு மோகேச்சும் இருக்காது...எடுக்கிற காசை குடித்தே அழிக்க வேண்டியது தான்..
40,45 வயசுக்கு மேல் வேலை செய்ய கூடாது என்று இங்க கொஞ்ச பேர் எழுதுகினம் ...வீட்ல மோட்ட பார்த்து கொண்டு இருந்து வருத்தத்தைத் தேட சொல்லினமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தல இதைப்பற்றி ஒரு திரி திறந்து எழுதுங்கோ.. இங்க பலருக்கும் உதவியா இருக்கும்..அநேகம்பேர் பென்சன் எடுக்குற விளிம்பில..

எழுதலாம் பல அண்மைய அவதானிப்புகள் இருக்கு. ஆனால் 50 வயதுக்கு இந்த பக்கம் நிண்டு இதை எழுதுவது கொஞ்சம் அவசரகுடுக்கைதனமாக தெரிகிறது.

4 hours ago, ஈழப்பிரியன் said:

மனைவியும் நானும் எம்மைத் தயாராக்கிவிட்டோம்.

நன்று. அங்கே உண்மையில் பல நல்ல விடயங்கள் இருக்கு. 

4 hours ago, Justin said:

முன்னோக்கி யோசித்து குறைந்தது அடுத்த தலைமுறைக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பை ஏற்படுத்துவது அவசியம் தான் (இல்லா விட்டால் பெற்றோர் என்று இருந்து என்ன பயன்?) . இதை எந்த வடிவத்தில் விட்டுச் செல்வது என்பது கூட நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் சாதாரண பல்கலை இளமாணிப் பட்டப் படிப்பிற்கே தனியாகச் சேர்க்க வேண்டும் அல்லது படிக்கும் பிள்ளை கடன் வாங்க வேண்டும். கனடா, இங்கிலாந்தில் இது வித்தியாசாமாக இருக்குமென நினைக்கிறேன். எனவே, வீடொன்றை வாங்கி அதில் equity இனை உருவாக்கி பின்னர் அதனை வைத்து நிதிப் பலத்தை ஆசியப் பெற்றோர் ஏற்படுத்துகின்றனர். திடீரென்று பெற்றோருக்கு ஏதாவது ஆனால், ஆயுள் காப்புறுதி பிள்ளையைக் காக்கக் கூடியவாறும் இருக்க வேண்டும். இவையெல்லாம் முக்கியம்..

ஆனால்.."பணம் உழைப்பது தான் முற்றிலும் முதன்மை" என்று இருப்போரின் தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் சில சமயங்களில் "அறம்" பின் ஆசனத்திற்குப் போய் விடுகிறது என்பதை அவதானிக்கிறேன். இது அரசுக்குக் கட்டும் வரியில் கோல்மால் செய்யும் சிறு விடயங்களில் தொடங்கி, பின்னர் சட்டத்தின் மறு பக்கத்தில் போய் நிற்கும் நிலைக்கு ஆட்களை இட்டுச் சென்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். இதனை குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் பார்த்து, இது ஓகே என்று நம்பி உள்வாங்கினால், எதைச்சேர்த்து வைத்தும் shallow & cynical generation ஒன்றை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. உ+ம்: நைஜீரியாவின் பெரு நகரங்களின் இளம் சந்ததி!    

உண்மைதான்.

Tax evasion ற்கும் tax avoidance ற்கும் இடையே நூழிழையில் தொங்குகிறது எம்மீதான பிள்ளைகளினதும், சமூகத்தினதும் மரியாதை.

மேற்கில் வளரும் பல பிள்ளைகள் பெற்றோரை மதிக்காமல் போவது இப்படியான விடயங்களில் hypocrite என பெற்றாரை உணரும் போது என நான் நினைக்கிறேன்.

அல்லது அவர்களும் சுற்றுமாத்தில் இறங்கி விடுகிறனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

அநேகமான வெள்ளையள் பெனிபிட்டில் தானே இருக்கினம்...அவையளுக்கு மோகேச்சும் இருக்காது...எடுக்கிற காசை குடித்தே அழிக்க வேண்டியது தான்..
40,45 வயசுக்கு மேல் வேலை செய்ய கூடாது என்று இங்க கொஞ்ச பேர் எழுதுகினம் ...வீட்ல மோட்ட பார்த்து கொண்டு இருந்து வருத்தத்தைத் தேட சொல்லினமோ ?

1. இல்லை அநேக வெள்ளையர் பெனிபிற்றில் இல்லை. எல்லா இனக்குழுக்களிலும் உழைப்போரே அதிகம். ஒரு குறித்த விழுக்காடுதான் பெனிபிட். நாட்டில் 90% மான வெள்ளைகளில் அநேகர் பெனிபிட்டில் இருந்தால் மேலே இணையவன் சொன்னது போல் நாடு படுத்துவிடும்.

4. 40,45 க்கு மேல் ஓடி ஓடி உழைக்கவேண்டிய தேவை இல்லை, எனில் - பேராசை படமால் வாழ்வை அனுபவிக்கலாம் என்றே எழுதுகிறனர். எதோ ஒரு வகை உழைப்பு/ ஈடுபாடு  68 க்கு பின்னும் தேவை இல்லை எண்டால் மண்டை அடித்து விடும்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரச உதவி, ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் எங்கிருந்து வருகின்றன ?

உங்கள் சமன்பாட்டினைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றினால் நாட்டின் பொருளாதாரமும் சிதைந்துவிடும் அல்லவா.]

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2023 at 14:25, goshan_che said:

ஆனால் திரும்பி ஜெர்மனிக்கும் வரமாட்டார்கள்🤣.

இஞ்ச வந்து இருந்து கொண்டு…சா…ஜேர்மனில அப்படி…சா…ஜேர்மனில இப்படி எண்டு எங்கட உயிர வாங்கிறது🤣

போய் தொலையுங்கோ எண்டு பிரெக்சிற் பண்ணி கலைச்சாலும்…செட்டில்ட் ஸ்டேடஸ், பிரி செட்டில்ட் ஸ்டேடஸ் என எதையாவது அப்பிளை பண்ணி இங்கேயே கிடந்து மாளுவார்கள்🤣

யேர்மனியை விட்டு அவர்கள் போனதற்கு வெளியேறியவர்கள் திரும்பி வரமால் இருப்பதற்கு  தமிழர்களின் ஆங்கில மோகம் தவிர்ந்த சரியான ஒரு காரணமும் இருப்தாக தற்போது அறிகிறேன். யேர்மனியின் ஓய்வுதியம் -  பென்சன் திட்டத்தின்படி அவர்கள் எதிர்காலத்தில் அங்கே இருந்தால் பாதிப்படைவார்கள். பொருளாதாரத்தில் முன்னேறிய யேர்மனியைவிட இதர ஐரோப்பிய நாடுகளில் ஓய்வுதியம் பெறுபவர்கள் நல்ல நிலையில் உள்ளனராம்.யுகே, கனடா ,- அவுஸ்ரேலியா இன்னும் நல்லவை. வேலை செய்கின்ற வயதில் பெரிய அளவில் சமுக உதவிகள் செய்கின்ற யேர்மனி தனது பென்சன் எடுக்கின்ற மக்களில் அக்கறை கொள்வது இல்லை. பென்சன் காசு போதாமல் - போதாது அரச உதவி பெறுவதற்கு சென்றால் வேலை செய்கின்ற போது வாங்கிய காரை விற்றுபோட்டு வரும்படி அதிகாரிகள் சொல்வார்களாம். அங்கே உள்ள ஓய்வுதிய திட்டபடி மிகவும் உயர்ந்த சம்பளத்தில் தொடர்ச்சியாக மிக நீண்டகாலம் வேலை செய்தால் மட்டுமே பென்சன் காலத்தில் ஒருஅளவுக்கு சமாளித்து வாழ கூடிய ஓய்வுதியம் அங்கே வருமாம்.

On 28/9/2023 at 15:57, Justin said:

வெளிநாட்டில் இருந்த படி "சே, என்ன வாழ்க்கை, ஊர் போல வருமா?" என்று உச்சுக் கொட்டுவோர் பலரிடமும்!

அது ஈழதமிழர்களின் பாரம்பரிய காலாச்சாரம் எல்லோ😂

Edited by விளங்க நினைப்பவன்
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மனியை விட்டு அவர்கள் போனதற்கு வெளியேறியவர்கள் திரும்பி வரமால் இருப்பதற்கு  தமிழர்களின் ஆங்கில மோகம் தவிர்ந்த சரியான ஒரு காரணமும் இருப்தாக தற்போது அறிகிறேன். யேர்மனியின் ஓய்வுதியம் -  பென்சன் திட்டத்தின்படி அவர்கள் எதிர்காலத்தில் அங்கே இருந்தால் பாதிப்படைவார்கள். பொருளாதாரத்தில் முன்னேறிய யேர்மனியைவிட இதர ஐரோப்பிய நாடுகளில் ஓய்வுதியம் பெறுபவர்கள் நல்ல நிலையில் உள்ளனராம்.யுகே, கனடா ,- அவுஸ்ரேலியா இன்னும் நல்லவை. வேலை செய்கின்ற வயதில் பெரிய அளவில் சமுக உதவிகள் செய்கின்ற யேர்மனி தனது பென்சன் எடுக்கின்ற மக்களில் அக்கறை கொள்வது இல்லை. பென்சன் காசு போதாமல் - போதாது அரச உதவி பெறுவதற்கு சென்றால் வேலை செய்கின்ற போது வாங்கிய காரை விற்றுபோட்டு வரும்படி அதிகாரிகள் சொல்வார்களாம். அங்கே உள்ள ஓய்வுதிய திட்டபடி மிகவும் உயர்ந்த சம்பளத்தில் தொடர்ச்சியாக மிக நீண்டகாலம் வேலை செய்தால் மட்டுமே பென்சன் காலத்தில் ஒருஅளவுக்கு சமாளித்து வாழ கூடிய ஓய்வுதியம் அங்கே வருமாம்.

அது ஈழதமிழர்களின் பாரம்பரிய காலாச்சாரம் எல்லோ😂

தகவலுக்கு நன்றி. நீங்கள் ஆள் கெட்டிக்காரன். சுழியோடி பல தகவல்களை எடுத்துள்ளீர்கள். இப்போ எனக்கும் விளங்குது ஏன் திரும்பி போறேல்ல எண்டு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மனியை விட்டு அவர்கள் போனதற்கு வெளியேறியவர்கள் திரும்பி வரமால் இருப்பதற்கு  தமிழர்களின் ஆங்கில மோகம் தவிர்ந்த சரியான ஒரு காரணமும் இருப்தாக தற்போது அறிகிறேன். யேர்மனியின் ஓய்வுதியம் -  பென்சன் திட்டத்தின்படி அவர்கள் எதிர்காலத்தில் அங்கே இருந்தால் பாதிப்படைவார்கள். பொருளாதாரத்தில் முன்னேறிய யேர்மனியைவிட இதர ஐரோப்பிய நாடுகளில் ஓய்வுதியம் பெறுபவர்கள் நல்ல நிலையில் உள்ளனராம்.யுகே, கனடா ,- அவுஸ்ரேலியா இன்னும் நல்லவை. வேலை செய்கின்ற வயதில் பெரிய அளவில் சமுக உதவிகள் செய்கின்ற யேர்மனி தனது பென்சன் எடுக்கின்ற மக்களில் அக்கறை கொள்வது இல்லை. பென்சன் காசு போதாமல் - போதாது அரச உதவி பெறுவதற்கு சென்றால் வேலை செய்கின்ற போது வாங்கிய காரை விற்றுபோட்டு வரும்படி அதிகாரிகள் சொல்வார்களாம். அங்கே உள்ள ஓய்வுதிய திட்டபடி மிகவும் உயர்ந்த சம்பளத்தில் தொடர்ச்சியாக மிக நீண்டகாலம் வேலை செய்தால் மட்டுமே பென்சன் காலத்தில் ஒருஅளவுக்கு சமாளித்து வாழ கூடிய ஓய்வுதியம் அங்கே வருமாம்

😂

அதாவது நாங்க மற்றவன் உழைப்பில் வாழ பின் நிற்பதில்லை. இதில் பெருமை வேறு? 😭

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மனியை விட்டு அவர்கள் போனதற்கு வெளியேறியவர்கள் திரும்பி வரமால் இருப்பதற்கு  தமிழர்களின் ஆங்கில மோகம் தவிர்ந்த சரியான ஒரு காரணமும் இருப்தாக தற்போது அறிகிறேன். யேர்மனியின் ஓய்வுதியம் -  பென்சன் திட்டத்தின்படி அவர்கள் எதிர்காலத்தில் அங்கே இருந்தால் பாதிப்படைவார்கள். பொருளாதாரத்தில் முன்னேறிய யேர்மனியைவிட இதர ஐரோப்பிய நாடுகளில் ஓய்வுதியம் பெறுபவர்கள் நல்ல நிலையில் உள்ளனராம்.யுகே, கனடா ,- அவுஸ்ரேலியா இன்னும் நல்லவை. வேலை செய்கின்ற வயதில் பெரிய அளவில் சமுக உதவிகள் செய்கின்ற யேர்மனி தனது பென்சன் எடுக்கின்ற மக்களில் அக்கறை கொள்வது இல்லை. பென்சன் காசு போதாமல் - போதாது அரச உதவி பெறுவதற்கு சென்றால் வேலை செய்கின்ற போது வாங்கிய காரை விற்றுபோட்டு வரும்படி அதிகாரிகள் சொல்வார்களாம். அங்கே உள்ள ஓய்வுதிய திட்டபடி மிகவும் உயர்ந்த சம்பளத்தில் தொடர்ச்சியாக மிக நீண்டகாலம் வேலை செய்தால் மட்டுமே பென்சன் காலத்தில் ஒருஅளவுக்கு சமாளித்து வாழ கூடிய ஓய்வுதியம் அங்கே வருமாம்.

இதே காரணத்தினால் தான், அமெரிக்காவிற் வரக் கிடைத்தாலும் ஈழத்தமிழர்கள் வருவது குறைவு. அப்படி வந்தாலும், கேஸ் நிலுவையில் இருக்கும் போதே வடக்கே கனடாவிற்குப் போய்  அசைலம் எடுத்து விடுவது வழமை. இங்கே இலவசமாக எதுவும் கிடையாமையே காரணம். இப்படி கேஸ் நிலுவையில் இருக்கும் போது கனடா போனோர், மீண்டும் அமெரிக்காவிற்கு வந்தால் (கனேடிய பிரஜையான பின்னர் கூட) அமெரிக்காவின் எல்லைக் காவல் படை அவர்களைக் கைது செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம் ஆட்கள் பிரித்தனினியா போவதுபோல் பிலிப்பின்ஸ் நாட்டவர்களும் இப்படித்தான். அமெரிக்காதான் இவர்களின் இலக்கு, சொர்க்கம். இதற்கு காலனித்துவமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இதே காரணத்தினால் தான், அமெரிக்காவிற் வரக் கிடைத்தாலும் ஈழத்தமிழர்கள் வருவது குறைவு. அப்படி வந்தாலும், கேஸ் நிலுவையில் இருக்கும் போதே வடக்கே கனடாவிற்குப் போய்  அசைலம் எடுத்து விடுவது வழமை. இங்கே இலவசமாக எதுவும் கிடையாமையே காரணம். இப்படி கேஸ் நிலுவையில் இருக்கும் போது கனடா போனோர், மீண்டும் அமெரிக்காவிற்கு வந்தால் (கனேடிய பிரஜையான பின்னர் கூட) அமெரிக்காவின் எல்லைக் காவல் படை அவர்களைக் கைது செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எதிர்காலத்தை பற்றி திட்டம் இட்டு வாழ்வது சரியே. ஆனால் உழைப்புக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும் என்றபோதும் உழைக்காமல் ஓய்வூதிய காலத்தில் உழைக்காத தாங்கள் நன்றாக வாழலாம் என்று நாடு தாவுவது தான் சுயநலத்தின் உச்சம். ஏனெனில் இந்த பணத்தை அரசு அச்சடித்து கொடுப்பது இல்லை. எவனோ ஒருவன் தன்னை உருக்கி உழைத்து கட்டும் வரிப் பணமே. இதில் ஊருக்கு போய் விசுக்கல் வேறு??? யார் பணத்தை யார் விசுக்குவது???

Edited by விசுகு
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.