Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 
செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...

Edited by Sasi_varnam
  • கருத்துக்கள உறவுகள்
Posted

image-2024-01-25-210513402.png

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராஜா முதலில் மனைவியை இழந்தார், இப்போ மகளை இழந்துள்ளார்.
இந்தத் துயரை  தாங்கும் சக்தியை, இறைவன் அவருக்கு கொடுக்க வேண்டும்.
ஆழ்ந்த இரங்கல்கள். 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்!

25 JAN, 2024 | 09:27 PM
image
 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) இரவு  காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் 'மயில் போலப் பொண்ணு ஒன்னு' என்ற   பாடலை பாடியதற்காக இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174813

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் ........ என்ன எழுதுவது,என்ன சொல்வதென்று தெரியவில்லை.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பவதாரிணி

பட மூலாதாரம்,X

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு வந்தார் இளையராஜா

இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை நாளை சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா, மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார்.

 

பவதாரிணி பாடிய முக்கியமான பாடல்கள்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பட மூலாதாரம்,X

பவதாரிணி பல முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.

எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல், தாமிரபரணி படத்தின் தாலியே தேவையில்ல பாடல் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி.

அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத் திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1991-ஆம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமணமாலை என்ற இசைத் தொகுப்பில் ஆராவமுதே என்ற பாடலை பவதாரிணி பாடினார்.

அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவருக்கு இரங்கல் தெரிவித்து பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே!” என்று பதிவிட்டுள்ளார்.

 
“பதவாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா. பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். “பின்னணிப் பாடகி பவதாரிணியின் மரைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிரது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று எல்.முருகன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

மேலும், “இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தைரியத்துடன் இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன். இது மிகவும் மனதை உடைக்கும் செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பதவாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா.

பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

 
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பட மூலாதாரம்,X

அவரது மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். “பின்னணிப் பாடகி பவதாரிணியின் மரைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிரது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று எல்.முருகன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

பவதாரிணியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

பவதாரிணியின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

“இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பட மூலாதாரம்,X

மேலும், “இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பட மூலாதாரம்,X

"இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட இலக்கணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர்.

அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c3g3e0yxly2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்.

இளையராஜாவுக்கு மிகவும் கஸ்டமான நேரமிது.

ஒருபக்கம் இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்துள்ளார்.

மறுபக்கம் அதே இடத்தில் மகளின் மரணச் செய்தியும் வருகிறது.

எப்படி கையாளப் போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மெலடி குயின் என்று அழைக்கப்படும் பவதாரணிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. 🙏

 

May be an image of 2 people
Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்.

இப்படியான நோய்களுக்கு சிகிச்சை பெற ஏன் இலங்கை வந்தார்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, குமாரசாமி said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

இப்படியான நோய்களுக்கு சிகிச்சை பெற ஏன் இலங்கை வந்தார்? 

ஆயுர் வேத சிகிச்சைக்கு வந்ததாகவும் ஒரு செய்தி 

  • Thanks 1
Posted

ஆழ்ந்த இரங்கல்கள். அற்புதமான பாடகியை இழந்து விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி  அன்னாரின் குடும்பத்தினருக்கும்  ஆறுதல்களை தெரிவிந்து கொள்கிறேன்  🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

இளையராஜாவுக்கு மிகவும் கஸ்டமான நேரமிது.

ஒருபக்கம் இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்துள்ளார்.

மறுபக்கம் அதே இடத்தில் மகளின் மரணச் செய்தியும் வருகிறது.

எப்படி கையாளப் போகிறார்?

அத்துடன் அவருக்கு இதுதான் வித்துவதுவர் என்று ..........எப்படி சொல்வது என்று தெரியாது 

ஆனால் இங்கு உள்ள  அவர் போல் நூறில் ஒன்றே ar எனும் சூட் எனும் போர்வையில்கிழே =.

ரகுமானுக்குக்காக .

 

Edited by பெருமாள்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்.பவதாரிணி அதிகம் பாடாவிட்டாலும், பல சிறந்த பாடல்களை பதின்ம வயதுக் குரலில் தந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள்

பவதாரிணி

பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது.

1. மஸ்தானா, மஸ்தானா

பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய இந்தப் பாடல்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவருடைய பல பாடல்களோடு ஒப்பிட்டால், இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பான பாடல் இல்லைதான். ஆனால், இந்தப் பாடலில் ஒலித்த பவதாரிணியின் குரல், பாடலை கவனிக்க வைத்தது. அவருடைய குரலில் ஒரு குழந்தைத்தனமும் வசீகரமும் இருந்தது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவாவும் ரோஜாவும் நடித்திருந்தனர்.

 
பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள்

பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA

2. நதியோடு வீசும் தென்றல்

1995ல் விஜயகாந்த் சங்கீதா நடித்து வெளியான திரைப்படம் அலெக்ஸாண்டர். இந்தப் படத்தில் இருந்த சண்டைக் காட்சிகளின் சத்தத்திற்கு நடுவே ஒலித்த இந்த மெல்லிய, அழகான பாடல், பெரிதாக கவனிக்கப்படவில்லை. "நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா, மலராத பூக்கள் இன்று அதைக் கேட்கக்கூடுமா?" என்ற துவங்கும் இந்தப் பாடலில் உன்னிகிருஷ்ணனும் பவதாரிணியும் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருப்பார்கள். வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகியும் புதிதாக ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை கார்த்திக் ராஜா.

3. ஒரு சின்ன மணிக் குயிலு

1996ல் கட்டப் பஞ்சாயத்து என்று ஒரு படம் வெளியானது. இப்போது பலரும் மறந்துவிட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. பாடலை அருண்மொழியும் பவதாரிணியும் இணைந்து பாடியிருந்தார்கள். கார்த்திக் - கனகா இந்தப் பாடலுக்கு நடித்திருந்தார்கள். படத்தின் பெயர் பலருக்கும் மறந்துவிட்டாலும் பாடல் இன்னமும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

 
பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள்

பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA

4. இது சங்கீதத் திருநாளோ

1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். இளையராஜாவின் இசையில் வெளியான அந்தப் படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெற்றிருந்த "இது சங்கீதத் திருநாளோ" பாடல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இளையராஜாவின் இசையையும் தாண்டி, பவதாரிணியின் குரலும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.

5. என் வீட்டு ஜன்னல் எட்டி

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் இது கவனிக்கத்தக்க ஒரு படமாக அமையவில்லை. ஆனால் பவதாரிணியும் அருண் மொழியும் பாடியிருந்த இந்த ஒரு பாட்டு, படத்தின் பெயரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசென்றது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல் ஹிட்டானது. இப்போதும் எங்கேயாவது இந்தப் பாடல் ஒலிக்கும்போது, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சில நொடிகள் பாடலை ரசித்துச் செல்கிறார்கள்.

 
பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள்

பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA

6. தவிக்கிறேன்.. தவிக்கிறேன்

பிரபுதேவாவும் சிம்ரனும் நடித்து 'டைம்' என்ற திரைப்படம் 1999ல் வெளிவந்தது. கீதா கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்கியிருந்தார். ராதிகா சௌத்ரி, மணிவண்ணன், அம்பிகா, நாசர் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் இருந்தார்கள். ஆனால், படம் யார் நினைவிலும் தங்கவில்லை. ஆனால், இந்தப் படத்தில் இருந்த இந்தப் பாடல், எல்லோர் மனதிலும் தங்கிவிட்டது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலில் பல இடங்களில் பவதாரிணியின் குரல் அட்டகாசம் செய்திருக்கும். வீடியோ காட்சியில்லாமல் பாடலைக் கேட்பது நன்று.

7. மயில் போல பொண்ணு ஒன்னு

2000வது ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 9 பாடல்கள் பாரதியின் பாடல்கள்தான். ஒரு பாடலை புலமைப்பித்தனும் ஒரு பாடலை மு. மேத்தாவும் எழுதியிருந்தனர். மு. மேத்தா எழுதிய இந்தப் பாடலை பவதாரிணி பாடியிருந்தார். ஒரு குழந்தை பாடுவதைப் அமைந்திருக்கும் இந்தப் பாடல், கேட்போரை மயங்கச் செய்தது. "குயில் போல பாட்டு ஒன்னு, கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல" என அந்தப் பாடலில் வரும் வரிகளைப் போலவே, நீண்ட மயக்கத்தைத் தந்த பாடல் அது. இந்தப் பாடல், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணிக்குப் பெற்றுத் தந்தது.

8. தென்றல் வரும் வழியை

2001ல் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், ஹரிஹரனுடன் இணைந்து பவதாரிணி பாடிய மற்றொரு சூப்பர் ஹிட் பாடல். இந்தப் பாடலில் நடுநடுவே வரும் பவதாரிணியின் ஹம்மிங், இந்தப் பாடலில் மற்றும் ஒரு போனஸ்.

 
பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள்

பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA

9. காற்றில் வரும் கீதமே

ஒரு நாள் ஒரு கனவு படத்தில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த இந்தப் பாடல், முதல் முறை கேட்கும்போதே மனதைக் கவரக்கூடிய பாடல். இந்தப் பாடலை அந்தப் படத்தில் இரண்டு இடங்களில் பாடியிருப்பார் பவதாரிணி. ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் போன்றோரும் இணைந்து பாடியிருந்தாலும் பவதாரிணியின் குரல் தனித்து ஒலிக்கும். தான் பாடிய பாடல்களிலேயே தனது தந்தை இளையராஜாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று என பவதாரிணி இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார்.

10. தாலியே தேவையில்லை

2006ல் வெளிவந்த தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற 'தாலியே தேவையில்லை' பாடல் ஒரு சுமாரான பாடல்தான். ஆனால், ஹரிஹரனுடன் இணைந்து ஒலித்த பவதாரிணியின் குரல் அந்தப் பாடலை ஒரு நல்ல உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.

பாடல்களைத் தவிர, பல பாடல்களில் பவதாரிணியின் ஹம்மிங் கவனிக்கத்தக்கதாக இருந்தது. உதாரணமாக, காதலுக்கு மரியாதை படத்தில் 'தாலாட்ட வருவாளா.." பாடலிலும் "முத்தே முத்தமா.." பாடலிலும் "தென்றல் வரும் வழியில்" பாடலிலும் இவரது ஹம்மிங் கவனிக்க வைத்தது. உல்லாசம் படத்தில் வரும் முத்தே முத்தம்மா பாடலைப் பாடியவர் ஸ்வர்ணலதா. ஹம்மிங் மட்டும் பவதாரணி.

பவதாரிணி தனது பெரும்பாலான பாடல்களை ஹரிஹரனுடன் இணைந்தோ, அருண்மொழியுடன் இணைந்தோதான் பாடியிருந்தார். மேலே சொன்ன பாடல்களைத் தவிர, அரவிந்தன் (1997) படத்தில் இடம்பெற்ற "காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்" பாடலும் தேடினேன் வந்தது (1997) "ஆல்ப்ஸ் மலை காற்றுவந்து நெஞ்சில் கூசுதே" பாடலும் கவனிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன.

https://www.bbc.com/tamil/articles/c131l1m512zo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காற்றில் கலந்த கீதமே…!

bhavatharini best songs and moments

பவதாரிணி. திரையிசைப் பின்னணிப் பாடகிகளில் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். இசைஞானி இளையராஜாவின் வாரிசுகளில் ஒருவர். தந்தையை, சகோதரர்களைப் போன்று இசையமைப்பிலும் ஈடுபட்டவர்.

அவ்வப்போது அவரிடம் இருந்து இசை வெளிப்பட்டாலும், அவை அனைத்தும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரம் இடும் வகையில் இருக்கும். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2024 ஜனவரி 25 ஆம் தேதியன்று மரணமடைந்தார் பவதாரிணி.

அந்தத் தகவல் அறிந்ததும் பதைபதைத்த ரசிக மனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்தக் கணத்தில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நம் நினைவுக்குள் வந்துபோனது.

hwiRNXIf-6.jpg

பதின்ம வயதின் சில்லிப்பு

சில பாடல்களைக் கேட்கையில், ‘இதைப் பாடியது அவரா, இவரா’ என்று சில கலைஞர்கள் குறித்த எண்ணங்கள் அலைமோதும். அந்தக் குரலில் தென்படும் தனித்துவத்தைத் தனியாகக் கண்டறிந்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகிவிடும்.

பின்னணி பாடுவதற்கென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வகுக்கப்பட்ட வரையறைகளுக்குள் அந்தக் குரல்கள் அடங்கியிருப்பதும் அதற்கொரு காரணம். அதில் இருந்து விலகிச் சட்டென்று ரசிகர்கள் அடையாளம் காணும் குரல்களில் ஒன்று பவதாரிணியுடையது.

பவதாரிணி பின்னணி பாடகியாக முதன்முறையாக அறிமுகமானது, ராசய்யா படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் வழியாகத்தான். தமிழ் ரசிகர்கள் அவரைக் கண்டறிந்த பாடல் அதுவே. அதற்கு முன்னரே, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் ‘தித்தித்தை தாளம்’ என்ற பாடலை அவர் பாடியிருக்கிறார்.

3-768x553.jpg

இவ்விரு பாடல்களில் ‘தித்தித்தை தாளம்’ பாடலில் அவரது குரலில் ஒரு இளம்பெண்ணின் தொனி தென்படும். ஆனால், ‘மஸ்தானா மஸ்தானா’ தொட்டுப் பல பாடல்களில் பதின்ம வயதின் சில்லிப்பை உணர முடியும் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம். அதுவே, அவரது குரலின் மிக முக்கியமான சிறப்பம்சமாகவும் உள்ளது.

அலெக்சாண்டர் படத்தில் வரும் ‘நதியோரம் வீசும் தென்றல்’, கருவேலம் பூக்கள் படத்தில் இடம்பெற்ற ‘பல்லக்கு வந்திருக்கு’, காதலுக்கு மரியாதையில் உள்ள ‘என்னைத் தாலாட்ட வருவாளா’, ‘இது சங்கீதத் திருநாளோ’, ‘ஓ பேபி பேபி’, அழகியில் வரும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ப்ரெண்ட்ஸ் படத்தின் ‘தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா’ உட்படப் பல பாடல்களில் அந்த சில்லிப்பை உணர முடியும்.

அப்பாடல்களில் பதின்ம வயதுக்குரிய பெண்ணின் துடிப்போடு, அவ்வயது ஆண் மகனின் குரலில் இருக்கும் வன்மையின் சிறு துளியும் நிறைந்திருக்கும். ஆனால், அவற்றைப் பகுத்துப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அப்பாடல்களின் கட்டமைப்பு நம் மனதில் இன்னொரு உலகை விரியச் செய்யும்.

bhavatharini best songs and moments

காற்றில் வரும் கீதமே

’ஒருநாள் ஒரு கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றில் வரும் கீதமே’ பாடல் இளையராஜா பிரியர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்று. மலரினும் மெல்லிய என்ற பதம் சொல்லப்படுமே, அத்தகைய ஒன்றை அப்பாடலில் கேட்கலாம். தன்னை முழுவதுமாகச் செலுத்திக் கலையை வெளிப்படுத்துபவரால் மட்டுமே நிகழ்த்த முடிகிற மாயாஜாலம் அது.

சில பாடல் கச்சேரிகளில் அதனை பவதாரிணி பாடுகிறபோது, அக்குரலில் கொஞ்சம் வெட்கம் தெரியும். அதுவே கூட, அவர் இசையமைப்பிலும் பாடுவதிலும் நிறைய பங்களிக்காமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம். தனது படைப்பைக் கொடுத்துவிட்டு, ரசிகர்களிடம் இருந்து விலகி நிற்கும் விருப்பம் கூட அவரிடம் இருந்திருக்கலாம்.

தந்தை மட்டுமல்லாமல் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்று சகோதரர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் பவதாரிணி. கார்த்திக் ராஜாவின் இசையில் ‘முத்தே முத்தம்மா’, ‘நடனகலாராணி’, ’மடோனா பாடலா நீ’, ‘அடி ரெண்டே காலுல மான்குட்டி’, ‘முட்டைக்குள்ள இருக்கும்போது’ உட்படப் பல பாடல்களைத் தந்திருக்கிறார்.

bhavatharini best songs and moments

அதேபோல, யுவன் இசையில் ‘ஆல் தி பெஸ்ட்’ தொடங்கி ’பூத்தது பூத்தது மனது’, ‘நீ இல்லை என்றால்’, ‘சடுகுடு ஆடாதே’, ‘மெர்க்குரி பூவே’ என்று நிறைய பாடியிருக்கிறார். அப்பாடல்கள் அனைத்தும், அவரது குரலால் தனிக்கவனத்தைப் பெறுவதாக இருக்கும்.

பிற இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியிருக்கிறார். அப்பாடல்களும் கூட திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் ரகத்தில் சேர்பவை. ’மித்ர மை ப்ரெண்ட்’, ‘வெள்ளச்சி’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பு செய்திருக்கிறார்.

அனைத்துக்கும் மேலே, யுவனின் தொடக்க காலத்தில் அவருக்கான இசை வழிகாட்டியாகவும் திகழ்ந்திருக்கிறார். மிக முக்கியமாக, வெகு அரிதாகத் தன் குடும்பத்தினரோடு மேடையில் பார்க்கும் தருணங்கள் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கின்றன.

அப்போதெல்லாம், அவர்களை ஒன்றிணைக்கும் இழையாகவும் அவர் திகழ்ந்ததை உணரலாம். இப்படிப் பவதாரிணியை நினைவூட்டும் விஷயங்கள் நிறைய, அவரது குடும்பத்தினருக்கு, இணைந்து பணியாற்றியவர்களுக்கு, நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் கொட்டிக் கிடக்கும்.

bhavatharini best songs and moments

வழிந்தோடும் குதூகலம்

திரைப்படங்களைப் பார்க்கையில் ரசிகர்களைக் குதூகலம் தொற்றுவதென்பது மிக முக்கியமானது. அந்த தருணங்கள் தான் திரையோடு ஒருவரைக் கட்டிப் போடுகிறது. அது சரியாக நிகழ்ந்தால், அந்த படைப்பும் கொண்டாடப்படும். அவற்றோடு சம்பந்தப்பட்ட கலைஞர்களைக் கொண்டாடித் தள்ளுவார்கள் ரசிகர்கள்.

தனது குரலின் வழியே, அப்படியொரு குதூகலத்தையும் கொண்டாட்ட மனநிலையையும் உருவாக்கியவர் பவதாரிணி. தன்னில் இருந்து வெளிப்பட்ட இசையின் வழியாக அதைச் சாதிக்க வேண்டுமென்ற விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது.

மிகக்குறைவான படைப்புகளில் அவர் பங்களிப்பு அமைந்திருந்தாலும், அவற்றில் ஒன்றைக் கூட நம்மால் விலக்கி வைக்க முடியாதென்பது அவரது சிறப்புகளில் ஒன்று.

‘டைம்’ படத்தில் இடம்பெற்ற ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலில் ‘காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு’ என்ற வரிகளைப் பாடியிருப்பார் பவதாரிணி. தெரிந்தோ தெரியாமலோ அது அவரது வாழ்வுக்கும் பொருந்திப்போனதை என்னவென்று சொல்வது?!

 

https://minnambalam.com/cinema/singer-and-composer-bhavatharinis-best-songs-and-moments/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள், ஒரு குயில் பாடுவதை நிறுத்தி விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.

இலங்கையில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) நடத்தப்படவிருந்த  இசைஞானி இளையராஜாவின் இசை  நிகழ்ச்சி  மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது. 

இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விழா ஏற்பாட்டுக் குழுவினர் இதனை தெரிவித்தனர். மேலும், மீண்டும் நிகழ்ச்சி நடத்தப்படும்  திகதிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.  

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.

இந்த நிலையிலேயே இலங்கையில் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/isaignani-ilaiyaraaja-live-in-concert-sri-lanka-1706264935

  • Like 1
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.