Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இங்கே கூட உங்கள் கருத்துக்கு நாலு பச்சை மட்டும்தான்.

அட... அதை நான் கவனிக்கவேயில்லை. இப்ப  தான்,  நீங்கள் சொல்கிறீர்களே, எனக்கும் யாரோ நாலுபேர் குத்தியிருக்கிறார்களேயென்று போய்ப்பார்த்தா.... ஒன்று குறைகிறது. நீங்கள் பார்க்கும் போது இருந்த ஒரு பச்சை குறைகிறதே, அதற்கு என்ன நடந்தது? எண்ணுதலில் தவறோ?

பி. கு, நான் பச்சை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு போய்விடுவேன், யாராவது பச்சை குத்தினார்களா என பார்ப்பதில்லை எண்ணுவதுமில்லை. கேள்வி கேட்டு எழுதியிருந்தால் பதிலளிப்பேன். எனக்காக எண்ணி அறியத்தந்ததற்கு நன்றி கோசான்!

  • Haha 1
  • Replies 364
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை    ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப

goshan_che

பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

Thumpalayan

எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, satan said:

அட... அதை நான் கவனிக்கவேயில்லை. இப்ப  தான்,  நீங்கள் சொல்கிறீர்களே, எனக்கும் யாரோ நாலுபேர் குத்தியிருக்கிறார்களேயென்று போய்ப்பார்த்தா.... ஒன்று குறைகிறது. நீங்கள் பார்க்கும் போது இருந்த ஒரு பச்சை குறைகிறதே, அதற்கு என்ன நடந்தது? எண்ணுதலில் தவறோ?

பி. கு, நான் பச்சை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு போய்விடுவேன், யாராவது பச்சை குத்தினார்களா என பார்ப்பதில்லை எண்ணுவதுமில்லை. கேள்வி கேட்டு எழுதியிருந்தால் பதிலளிப்பேன். எனக்காக எண்ணி அறியத்தந்ததற்கு நன்றி கோசான்!

மூன்றாக இருக்கலாம். நானும் மேலோட்டமாகவே பார்த்தேன்.

எனக்கும் இந்த பச்சையில்  இச்சை இல்லை. இதை வைத்து என்ன வங்கியில் கடனா எடுக்க முடியும்🤣.

ஆனால் யாழிலோ, வெளியிலோ மக்களின் சிந்தனை போக்கு எப்படி உள்ளது என்பதை அறிவதில் எப்போதும் ஆர்வம் உண்டு.

இதை அறிய பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று இந்த பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இது வாழ்விட உரிமைக்காக அல்ல. உழைப்புக்கு.

இப்படி யோசித்துப்பாருங்கள்.

35,000 இலங்கை ரூபாவுக்காக யாழ்பாணத்தில் வந்து உயிரை விட்ட அதே ஆட்களில் இருந்து வருவோரே 3500 ஈரோவுக்காக ரஸ்யாவில் உயிரை விடுகிறனர்.

அப்படி நாங்கள் நினைக்கிகிறோம்....ஆனால் அவர்கள் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து தங்கள் ஐக்கிய இலங்கை என்ற இலட்சியத்துக்காக உயிர் நீத்தார்கள் ....

இன்று அதே சமுகத்தினர் இரு வேறு நாட்டுக்காக  எதிர் எதிராக ஆயுதம் ஏந்தி போரிடுகிறார்கள்..மிகவும் வருந்த வேண்டிய விடயம்...
உசுப்பேத்திய சிங்கள தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கை ....மீண்டும் ஜனாதிபதியாக வர துள்ளுகின்றனர் ...இந்த இளைஞர்களுக்கு எதுவும் செய்யவில்லை அரசாங்கத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்....

35000 ரூபாவுக்கு வேலை செய்கின்றனர் என்றால் இவர்களை புலிகள் தங்கள் படையணியில் சேர்த்து இருந்திருக்கலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, putthan said:

இல்லை இலங்கையில் இலட்சியத்துக்காக உயிர் நீத்தோர் மாவீரகள் மட்டுமே.

அறுதி பெரும்பான்மையான இலங்கை சிப்பாய்கள் கொடுப்பனவுகள் இல்லாவிடில் எப்போதோ ஓடி இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/4/2024 at 23:50, goshan_che said:

கந்தர்மடமும் போனேன் - ஆஸ்பத்திரிகள், ஷோரூம்கள் என லக..லக…என்று இருக்கிறது உங்கள் ஊர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்த (டட்டூ) இப்போ உங்கள் ஊர் கடை ஒன்றுதானாம் பேமஸ்.

கொழும்பு புதுக்கடையில் சாப்பிட்ட போது, உங்களையும் நீங்கள் சிலாகிக்கும், நான் அனுபவித்திராத மொக்கன் கடையையும் நினைத்துக்கொண்டேன்.

குறுகிய காலத்தில்…. எல்லா இடமும் ரசித்து சுற்றிப் பார்த்து இருக்கின்றீர்கள். 👍🏽🙂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

1£=1Rs என ஆகினால் நீங்கள் சொன்ன இந்த படம்காட்டல் மட்டும் அல்ல அண்ணை,

சுற்று மதில் கட்டுகிறோம், இதர தர்ம காரியங்களை படம் எடுத்து போட்டு படம் காட்டுவதும் அடங்கி விடும் அண்ணை. 

பொதுவாக எழுதியது அது.

எனக்கு தெரிந்து ஒரு யூரோ= 90 ரூபாய் என்று இருந்தபோது மதில் கட்டி வித்தியாலயத்தை கல்லூரி என்று கொண்டு வந்தவர்கள் உண்டு.

ஆனால் புலத்தில் மரத்தில் காசு புடுங்குறோம் என படம் காட்டியவர்கள் பழக்கி விட்டதால் அதை பராமரிக்க பூச்சு பூச என்று இன்னும் கதவு தட்டல் தொடர்கிறது. என்ன இன்னும் கொஞ்ச காலம் பழைய தலைமுறைக்கதவுகள் திறக்கும். திறக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, விசுகு said:

இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. 

நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம்.

கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட  

ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது.

எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். 

ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு .

https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/

நன்றி அண்ணா….

ஆனால் நாம் சிலதை ஏற்றுக் கொள்ள வேண்டும்…

2019 நவம்பரில் ஓர் பிரித்தானிய பவுண்ட்ஸ் 230/= இன்று 04/04/24 371/=. ஆனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு கூடியுள்ளன.

கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்த பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் சில அத்தியாவசிய பொருட்கள்.

அதே போல் அங்குள்ள 50% மேற்பட்ட தமிழ் இளம் சமுதாயம் ஒற்றை சிறீலங்காவிற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

இல்லை சகோ

இங்கே இருந்து போய் காசை கட்டு கட்டாக மாத்தி எடுத்து விசுக்கலும் ஆடம்பரம் காட்டுதலும் தேடித் தேடி வாய்க்குள் போட்டு குடித்து கும்மாளம் போடுவதும் அறவே அற்றுப் போகும். அதுவே தேவை. அந்த நிலை வரணும் வந்தால் அந்த மக்களும் இந்த படம் காட்டுதலை காணாது அங்கையே நிம்மதியாக வாழ வழி பிறக்கும். 

ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது .

ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் .

இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின்  ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀

அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு  மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை?

அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர்  ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் .

ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் .

இதுக்குள்  @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் .

இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு  ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.

  • Like 2
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

பொதுவாக எழுதியது அது.

எனக்கு தெரிந்து ஒரு யூரோ= 90 ரூபாய் என்று இருந்தபோது மதில் கட்டி வித்தியாலயத்தை கல்லூரி என்று கொண்டு வந்தவர்கள் உண்டு.

ஆனால் புலத்தில் மரத்தில் காசு புடுங்குறோம் என படம் காட்டியவர்கள் பழக்கி விட்டதால் அதை பராமரிக்க பூச்சு பூச என்று இன்னும் கதவு தட்டல் தொடர்கிறது. என்ன இன்னும் கொஞ்ச காலம் பழைய தலைமுறைக்கதவுகள் திறக்கும். திறக்கிறது. 

நீங்கள் மேலே சொல்வதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை.

ஆனால் சாமத்திய வீடு, கலியாண வீடு, செத்தவீடு, கொடை, விடுமுறை என்று எங்கேயும் எதிலேயும் படம் தான் பிரதானம் என்ற நிலைக்கு ஈழத்தமிழர் வந்து பலகாலமாகி விட்டது என்பதும் உண்மை.

ஊர்பக்கம் இன்னும் கொஞ்சம் பேய்க்காட்டலாம் போலும், ஆனால் இலண்டன் வண்டவாளங்களை நகர்புறங்களில் பலர் தெரிந்தே வைத்துள்ளனர்.

நான் யாழில் ஒரு உறவினர் பெண்மணியை போய்பார்தேன். அருகில் கடையில் நல்ல பழங்களை வாங்கிப்போனேன்.

”நீர் பழம் கொண்டு வந்தது நல்ல விசயம், பொதுவா இலண்டன் காரர் poundland சொக்கிலேட்தான் கொண்டுவருவினம், ஒரே பிராண்ட் ஆனால் டேஸ்ட் ஒரு சதத்துக்கு உதவாது” என்று ஒரே போடாய் போட்டு விட்டார்🤣.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான திசையில் சரியான பாதையில் எல்லோரும் எழுதுகிறோம் புரிந்து கொள்ள முயல்கிறோம் என்று தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொருவராக பதில் எழுதுகிறேன். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, பெருமாள் said:

ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது .

ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் .

இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின்  ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀

அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு  மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை?

அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர்  ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் .

ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் .

இதுக்குள்  @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் .

இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு  ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.

மிக உன்னிப்பாக கூட்டங்களை அவதானித்து எழுதியுள்ளீர்கள்.

பசித்திருப்பவன் பார்த்திருக்க உண்ண கூடாது என்பது அடிப்படை விதி, ஆனால் தங்கச்சங்கிலிகள் தக தகக்க, கடன் வாங்கி கலர் காட்டும் ஆட்கள் நிறையவே உள்ளார்கள். 

இதில் படித்தவர் படிக்காதவர் வேறு பாடில்லை. ஒரு டாக்டர் எப்பவும் இலங்கை போகின் பஸ்ட் கிளாஸ்தான். ஆனால் தவறாமல் அந்த இருக்கையில் சாய்ந்து இருந்து ஒரு போட்டோ கட்டாயம் போடுவார்.

முட்டி வலிக்க cattle class இல் குந்தி இருந்து போகும் எம்மை பற்றி சிறிதும் யோசிக்காமல்🤣.

நான் ஊரில் திருவிழா சீசனுக்கு முதல் திரும்பி வந்தமைக்கும் ஒரு காரணம் டிக்கெட் மலிவு🤣, இன்னொரு காரணம் இந்த அலப்பறைகளை தவிர்க்க விரும்பியமை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

பயண வருசை குறைவாக இருந்தால் போர்டிங் பாஸ் எடுக்கையில் ஒரு 1௦௦ இருநுறு பவுன் உடன் அப்டேட்  முதல்வகுப்பு கிடைக்கும் நமக்கு எங்கே என்றாலும் நித்திரை வந்துடும் ஓரிரு முறை ஆசைக்கு ஏறி இறங்கியதுடன் சரி  மற்றபடி எக்கனாமிக் ல் பெல்ட் போட்டால் குரங்குக்கு பெல்ட் போட்டு கட்டியது போல் மனபிராந்தி உருவாகுவதை தவிர்க்க முடியாது 😃

17 minutes ago, goshan_che said:

இதில் படித்தவர் படிக்காதவர் வேறு பாடில்லை. ஒரு டாக்டர் எப்பவும் இலங்கை போகின் பஸ்ட் கிளாஸ்தான். ஆனால் தவறாமல் அந்த இருக்கையில் சாய்ந்து இருந்து ஒரு போட்டோ கட்டாயம் போடுவார்.

அவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 12௦ பவுன் வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வரும் வருமானத்துக்கு முதல் வகுப்பு  சிலவை காட்டினால் வரி விலக்கு கிடைக்கும் தானே ........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, பெருமாள் said:

பயண வருசை குறைவாக இருந்தால் போர்டிங் பாஸ் எடுக்கையில் ஒரு 1௦௦ இருநுறு பவுன் உடன் அப்டேட்  முதல்வகுப்பு கிடைக்கும்

பெருமாள் இது எந்தக் காலம்.

இப்போ சாதாரண வகுப்பு ரிக்கற் 1000 என்றால் முதல்வகுப்பு 3000-4000 என்கிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் இது எந்தக் காலம்.

இப்போ சாதாரண வகுப்பு ரிக்கற் 1000 என்றால் முதல்வகுப்பு 3000-4000 என்கிறார்களே.

போர்டிங் கவுண்டரில் டிக்கெட் மாற்றம்  பண்ண முடியுமா என்று கேட்டு  பாருங்க ஆட்கள் குறைவாக இருந்தால் குறைந்த விலையில் முதல் வகுப்பு கிடைக்கும் மிக நீண்ட பயணம் என்றால் மிக நல்லது . இப்படி பெற்று கொண்டது பத்து வருடங்களுக்கு மேல்  இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப அந்த சூட்சுமம் வேலை செய்யுமா தெரியலை .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பெருமாள் said:

போர்டிங் கவுண்டரில் டிக்கெட் மாற்றம்  பண்ண முடியுமா என்று கேட்டு  பாருங்க ஆட்கள் குறைவாக இருந்தால் குறைந்த விலையில் முதல் வகுப்பு கிடைக்கும் மிக நீண்ட பயணம் என்றால் மிக நல்லது . இப்படி பெற்று கொண்டது பத்து வருடங்களுக்கு மேல்  இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப அந்த சூட்சுமம் வேலை செய்யுமா தெரியலை .

அப்போது இருந்த தராதரம் இப்போது இல்லை.

அப்போ 1-5 இறாத்தல் வரை கூடுதலாக இருந்தாலும் தள்ளிவிட்டு விடுவார்கள்.இப்போ ஒரு இறாத்தல் கூடினாலும் பணம் கட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, பெருமாள் said:

ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது .

ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் .

இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின்  ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀

அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு  மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை?

அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர்  ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் .

ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் .

இதுக்குள்  @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் .

இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு  ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.

இதில் இன்னொரு வகை.

அண்மையில் கனடாவில் இருந்து ஒருவர் குடும்பமாக தாயகம் சென்றிருந்தார். அவரது அக்கா வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு இருக்கிறார். அதற்கு தங்கை எனது கணவர் இந்த கோழி சாப்பிடமாட்டார். இந்த வகை மீன்களை பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னாராம். அடப்பாவிகளா கனடாவுக்கு வந்ததில் இருந்து இதுவரை சம்பளச்சீற் என்றாலே என்ன என்று தெரியாது. அந்த காசு இந்தக்காசு இலவச மருத்துவம் என இன்னொருத்தரின் வியர்வையை உறிஞ்சி வாழ்ந்தபடி.... 

Edited by விசுகு
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் @goshan_che

பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம்  பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍

நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா?  புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். 

இந்த YouTube  தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை  அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.  

  • Thanks 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

ஊர்பக்கம் இன்னும் கொஞ்சம் பேய்க்காட்டலாம் போலும், ஆனால் இலண்டன் வண்டவாளங்களை நகர்புறங்களில் பலர் தெரிந்தே வைத்துள்ளனர்.

😂

வெளிநாடுகளில் ஒவ்வொரு தமிழர்களும் சொந்த வீடு வைத்திருப்பதோடு அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும் போது ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வாங்கி அந்த வீட்டை வெள்ளை இனத்தவர்களுக்கு   வாடகைக்கு விட்டிருப்பார்கள் என்று  இலங்கையில்  சிலர் நம்பவைக்கபட்டுள்ளதை  கண்டேன்.

  • Haha 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

இதில் இன்னொரு வகை.

அண்மையில் கனடாவில் இருந்து ஒருவர் குடும்பமாக தாயகம் சென்றிருந்தார். அவரது அக்கா வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு இருக்கிறார். அதற்கு தங்கை எனது கணவர் இந்த கோழி சாப்பிடமாட்டார். இந்த வகை மீன்களை பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னாராம். அடப்பாவிகளா கனடாவுக்கு வந்ததில் இருந்து இதுவரை சம்பளச்சீற் என்றாலே என்ன என்று தெரியாது. அந்த காசு இந்தக்காசு இலவச மருத்துவம் என இன்னொருத்தரின் வியர்வையை உறிஞ்சி வாழ்ந்தபடி.... 

யூகேயில் தனியே அரச மானியத்தில் இருந்தபடி இப்படி கொலிடே போக முடியாது என நினைக்கிறேன்.

ஆனால் கையில் காசுக்கு வேலை செய்தால் - சார்ல்ஸ்சை விட கலாதியாக வாழலாம்🤣.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

வணக்கம் @goshan_che

பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம்  பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍

நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா?  புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். 

இந்த YouTube  தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை  அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.  

வருகைக்கும், கருத்துக்கும், அழகிய வீடியோவுக்கும் நன்றி ஐலண்ட். 

நீங்கள் இணைத்த வீடியோவில் வரும் இடங்களில் எனக்கு 10/10😎.

எல்லே,  நுவர-எலிய சிறு வயதிலும், வெளிநாடு வந்த பின்பும், சில தடவைகள் போயுள்ளேன். இந்த முறை போகவில்லை.

எல்லே கேப், அழகிய ரயில் பாலம் viaduct, என மனதை கொள்ளை கொள்ளும் ஊர் எல்லே. 

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் உடரட்ட மினிகே யின் கடைசி பெட்டியில் ஒப்சவேர்சன் சலூன் என பெரிய கண்ணாடி களால் ஆன பெட்டியை இணைப்பார்கள். 1st class டிக்கெட் விலைதான். ஆனால் கடைசி நான்கு இருக்கைகள் கிடைப்பது முயல்கொம்பு. பெட்டியில் எங்கோ ஒரு இருக்கை கிடைத்தாலே போதும்.

ரயில் பாதை எங்கும் பொல்கஹாவலவில் இருந்து பதுளை வரை கண்பூத்து போகும் அளவுக்கு இயற்கை அழகு தித்திக்கும்.

இந்த வீடியோவில் வரும் ஹோர்ட்டன் பிளைன்சில்தான் வேர்ல்ஸ் எண்ட், எனும் அழகிய இடம் உள்ளது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, island said:

வணக்கம் @goshan_che

பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம்  பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍

நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா?  புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். 

இந்த YouTube  தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை  அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.  

இந்த 10 இடங்களில் பெரும்பாலான இடங்களுக்குப் போயிருக்கிறேன், அதிலும் சொந்தக் காசு செலவில்லாமல்.

இலங்கையில் மிருக வைத்தியராக இருப்பதன் பல அனுகூலங்களில் ஒன்று, இந்த இடங்களுக்கெல்லாம் அரச வாகனத்தில் பணி நிமித்தம் செல்லக் கிடைத்தமை.

அம்பேவல, நுவரெலியா தாண்டி இருக்கும் ஒரு அழகிய பிரதேசம். பல தடவைகள் அம்பேவல பால் பண்ணை போய், நாள் முழுவதும் சாணத்தில் குளித்து வேலை செய்த பின்னர், மாலையில் நுவரெலியாவில் இறங்கி பியர் , கொத்து ரொட்டி எடுத்துக் கொண்டு வாகனத்தில் தூங்கியபடியே வந்தால் கண்டியில் வீட்டு வாசலில் இறக்கி விடுவர்.

ஹோர்ட்டன் சம வெளியும், அதற்கு அண்மையாக இருக்கும் பம்பரகந்த (??) நீர் வீழ்ச்சியும் முழு நாளும் பார்த்து ரசிக்க கூடிய இடங்கள். நுவரெலியா போகும் வழியில் மல்லியப்பூ சந்தியில் இருக்கும் உணவகத்தில் பெரும்பாலும் பஸ்கள் உணவுக்கு நிறுத்துவர். அந்த சந்தியில் இருந்து மலையழகை ரசித்தவாறே சுவையான உணவை அனுபவிக்கலாம். இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை.

அனுராதபுரம் கொஞ்சம் காய்ந்த இடம் தான் என்றாலும், அங்கே பெலிமல்  என்ற ஒரு தேனீர் போன்ற பானம் விற்பார்கள். சூடான அந்தப் பானம் குடிக்கும்  போது வயிறு குளிர்வதை உணரலாம்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, MEERA said:

நாங்க வெளிநாடு…. இதையும் கேட்டுப் பாருங்கள்…. 

https://m.facebook.com/story.php/?id=100064830332991&story_fbid=807641231406881

உண்மை தான் 

பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவும் அடுத்த விடுமுறைக்கு தேர தெடுக்க வேண்டிய இடம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/4/2024 at 02:20, Justin said:

அம்பேவல, நுவரெலியா தாண்டி இருக்கும் ஒரு அழகிய பிரதேசம். பல தடவைகள் அம்பேவல பால் பண்ணை போய், நாள் முழுவதும் சாணத்தில் குளித்து வேலை செய்த பின்னர், மாலையில் நுவரெலியாவில் இறங்கி பியர் , கொத்து ரொட்டி எடுத்துக் கொண்டு வாகனத்தில் தூங்கியபடியே வந்தால் கண்டியில் வீட்டு வாசலில் இறக்கி விடுவர்.

யாழில் ஒரு முறை ஈழபிரியன் அண்ணா மாட்டுப்பண்ணைகள் பற்றிய ஒரு செய்தியில், இப்படியான பண்ணைகள் எங்கே உள்ளன என கேட்ட போது….அம்பேவல, நியூசிலாந்து பண்ணைகள் பற்றி எழுதினேன்.

அருமையான இடம். வேலையாட்கள் பலரும் மலையக மக்களே. நான் டிக்கெட் எடுத்து பார்த்ததை நீங்கள் சம்பளம்+கொத்துடன் பார்த்துள்ளீர்கள்😀.

On 5/4/2024 at 02:20, Justin said:

ஹோர்ட்டன் சம வெளியும், அதற்கு அண்மையாக இருக்கும் பம்பரகந்த (??) நீர் வீழ்ச்சியும் முழு நாளும் பார்த்து ரசிக்க கூடிய இடங்கள்

ஹோர்ட்டன் சமவெளிக்குள் இருப்பது பேக்கேர்ஸ் நீர்வீழ்ச்சி என நினைக்கிறேன். தண்ணீர் ஒரு curtain போல பரந்து விழும்.

பம்பரகந்த இரத்திரபுரி, நுவெரெலியாவின் பின்புறத்தில் இடையே உள்ளது. நெடிய “பாகுபலி டைப்” நீர் வீழ்ச்சி. குளிக்கலாம். தலையில் நீர் விழும். நேர் எதிரே ஒரு சிங்கள அம்மாவின் தேனீர் கடை. நீர்வீழ்ச்சியை பார்த்தபடியே தேனீர் அருந்தலாம்.

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.