Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன், பாருங்கோ" என்று சொல்லவும், சரி பார்க்கிறேன் என்று கூறினேன்.

தலைவர் குறித்தும், போராளிகள், மாவீரர்கள் குறித்தும் அவதூறு பேசுவோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஓரளவிற்கு என்ன பேசுவார்கள் என்பது குறித்த அனுமானமும் எனக்கு ஓரளவிற்கு இருந்தமையினால், இவள் புதிதாக என்னதான் பேசிவிடப்போகிறாள் என்று, மனதைக் கல்லாக்கிக்கொண்டு பார்க்கத் தொடங்கினேன். 

இன்ஸ்ட்ரகிராம் தளமாக இருக்கவேண்டும். நேரடியாக தனது முகத்தைக் காட்டிக்கொண்டு, துணைக்கு ஒரு மூன்று அல்லது நான்கு நபர்களை நேரலையில் அழைத்து வைத்துக்கொண்டு தலைவரைப் பற்றியும், மாவீரர் பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தூஷண வார்த்தைகளால் இடைவிடாது திட்டுகிறாள். மகிந்தவையும், சிங்கள இராணுவத்தையும் அடிக்கொருமுறை போற்றும் இவள், தமிழருக்கென்று நாடு கிடைக்கக் கூடாதென்பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகிறாள். தனது நேரலைக் கருத்துக்களை கேட்பவர்களும் தொலைபேசியில் பேசலாம் என்று கூறிவிட்டு, அப்படி வந்து அவளது கருத்துக்களை விமர்சிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக, அவர்களின் தாயை, தங்கையை, அக்காவை வைத்து செவிகொடுத்துக் கேட்கமுடியாதளவிற்கு வைகிறாள். ஒருகட்டத்தில் "உனது தாயை....... பண்ணுவதற்கு இப்போதே ஆமிக்காரர் கொஞ்சப்பேரை அனுப்புகிறேன், பாக்கிறியாடா?" என்றும், "நீ இருக்கிற இடத்தைச் சொல்லுடா, இப்பவே மகிந்தவின்ர ஆமியை அனுப்பி உனக்கு .... அடிக்கிறேன்" என்றும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்தும் பேசுகிறாள். இவளது கருத்துக்களை மறுதலித்து, இவளின் நோக்கத்தை வெளிப்படுத்த முனைந்தவர்களை உடனடியாக நேரலையில் இருந்து தடுத்து, மற்றையவர்களை விவாதத்திற்கு அழைக்கிறாள். இவளுக்கு ஆதரவாக நேரலயில் பேசும் ஒரு சிலரும் அவளைப்போன்றே தமிழர்களை ஒரு இனமாக கொச்சைப்படுத்தி வருகிறார்கள். "கருணாவைக் கூப்பிடட்டுமாடா? அவன் வந்து உங்களுக்கெல்லாம் இன்னொருக்கா ...அடிக்கச் சொல்லவாடா?" என்று இன்னொரு கருத்தாளரிடம் அட்டகாசமாகச் சொல்கிறாள்.  

பிரான்ஸ் நாட்டின் பரீசில் இருக்கலாம் என்று நம்பப்படும் இவள் சில நாட்களுக்கு முன்னர் தன்னை எவரும் அடையாளம் காண்மாட்டார்கள் என்கிற துணிவில் லா சப்பல் எனும் பகுதியூடாக நடைபவணியில் செல்லும்போது ஒரு தமிழ் இளைஞர் இவளைப் பார்த்துவிடுகிறார். அவளருகில் சென்று "நீதானே தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பேசுபவள்?" என்று கேட்கவும் அதே வைராக்கியத்துடன், "என்னடா செய்யப்போகிறாய், நான் அப்படித்தான் சொல்லுவன்டா" என்று ஆரம்பிக்கிறாள். இவர்களுக்கிடையிலான வாக்குவாதம் வீதியில் நடந்துசென்ற இன்னும் பல தமிழர்களை ஈர்க்கவே அவர்களும் அவளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனையடுத்து அவளைச் சுற்றிவளைத்த தமிழ் இளைஞர்கள், அவளை நோக்கி மிகுந்த ஆத்திரத்துடன் கேள்விகளை முன்வைக்க அவளும் பதிலுக்குப் பேச எத்தனிக்கிறாள். இந்தவேளையில் "என்ர அம்மா உனக்கு வேசியாடி?" என்று ஒரு இளைஞர் அவளைக் கேட்டுக்கொண்டே அவளது முகத்தில் முதலாவதாக அறைகிறார். நிலைகுலைந்து போன அவள், தனது குரலை அடக்கிக்கொண்டு, "அண்ணா, இங்க பாருங்க.." என்று தனது அகம்பாவம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு ஒதுங்கப் பார்க்கிறாள். ஆனால், அவளை விடாது தொடர்ந்த இளைஞர்கள் மூன்று நான்கு முறை அறைகிறார்கள். பயம் பற்றிக்கொள்ளவே, வீதியில் இருந்த கடையொன்றிற்குள் நுழைய அவள் எத்தனித்தபோதும், கடை உரிமையாளரான தமிழர், "இஞ்சை வரவேண்டாம், வெளியால போ" என்று கூறி கதவைத் திறக்க மறுக்கிறார். கடை இடுக்கில் மாட்டிக்கொண்ட அவளை இளைஞர்கள் சூழ்ந்து நின்று மீண்டும் கேள்வி கேட்கின்றனர். இடையே வீதியால் சென்ற இன்னொரு இளைஞர் தான் கொண்டுவந்த முட்டையை அவள் முகத்தின்மீது எறிய, அவளது அச்சம் அதிகரிக்க ஒடுங்கியபடியே நிற்க, இரண்டாவது முட்டையும் வீசப்படுகிறது. தமிழ் இளைஞர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, "எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, அடிக்க வேணாம்" என்று வயிற்றைக் காட்டிக் கெஞ்சவும், கூட்டத்தில் இருந்த ஒரு தமிழர், "பொம்பிளையடா, அடிக்காதையுங்கோ, விடுங்கோ, சுஜி, நீ தலைவற்ற படத்தை உன்ர இன்ஸ்ட்டகிராமில் காட்டிக்கொண்டு அவரைக் கொச்சைப்படுத்துறது நிப்பாட்டு, இனிமேல் தலைவரைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது" என்று கேட்க, அருகிலிருந்த இளைஞர், "ஏன் அண்ணா இவளிட்டை போய்க் கெஞ்சிறியள்? இவள் செய்த வேலைக்கு ஏன் கெஞ்சுறியள்" என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். 

இந்தச் சம்பவத்தை அருகில் நின்ற பலரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படமாக்கியிருக்கிறார்கள். யூ டியூப், முகப்புத்தகம் என்பவற்றில் ஒவ்வொரு கோணத்தில் இவளின் அகம்பாவம் உடைக்கப்படும் ஒளிப்படங்கள் வலம் வருகின்றன.

குறிப்பு :இவள் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பு தமிழர் தாயகத்திற்குச் சொந்தமனாதல்ல. முழுக்க முழுக்க கொழும்புத் தமிழ் . அவளே, "நான் கொழும்புத் தமிழடா, உங்கட தமிழ் இல்லடா" என்றே தன்னை அறிமுகப்படுத்துகிறாள்.

இவளது வீடியோக்களை நான் இணைக்கவில்லை. வேண்டுமானால் தேடிப்பாருங்கள்.  

விசுகு அண்ணை, உங்களுக்கு இதுகுறித்து ஏதாச்சும் தெரியுமோ? 

Edited by ரஞ்சித்
spelling

  • ரஞ்சித் changed the title to தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
  • Replies 128
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக

  • goshan_che
    goshan_che

    இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த

  • குமாரசாமி
    குமாரசாமி

    சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி  சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு  உதாரணங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான கருத்து! குரைக்கிறதுக்கு கல் எறிஞ்சால், இதுதான் நடக்கும். குரைக்க விட்டால், நமக்கு பல அனுகூலங்கள் உண்டு. புலிகள் முறியடிக்கப்பட்ட போது விழா கொண்டாடிய ஒரு பெண் பின்னாளில் அதற்காக வருத்தம் தெருவித்திருந்தாள். விடுங்கள்.... ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் கொண்டு செல்ல முடியாது. அவர்களது இயலாமை, பொறாமையின் விளைவு அது. அதுமட்டுந்தான் அவர்களால் முடிந்தது. சலுகைகளுக்கும் சில்லறைகளுக்கும் விலை போவோரின் செயலது. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரஞ்சித் இணைப்பிற்கு, அந்த பெண்மணி செய்ததை விட அவரை தாக்கியவர்கள்தான் மாவிரர்களையும், விடுதலை போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகமாக இவள் தலைவர் மீதும், போராட்டம் மீதும் சேற்றை அள்ளி வார்க்கிறாள் என்று அறியக் கிடைத்தது. இப்படியானவர்கள் அடங்கப்போவதில்லை. அவள்பாட்டில் விட்டிருக்கலாம். ஒரு நாய்க்குக் கல்லெறிந்து, ஊரிலிருக்கும் நாய்களெல்லாம் குரைக்கத் தொடங்கியிருக்கின்றன. 
 
இவள் சிங்களத்தியாக இருக்கலாம். இவள் பேசும் தமிழ் கொச்சையானது. இவளுக்கும் குடு சித்தாத்துக்கும் தொடர்பிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள்.

இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது  யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! 

மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள்.

வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்! 

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை விட  நாம் கேவலமானவர்கள் என்பதை நிருபிப்பதில் எம்மவருக்கு எப்போதும் எக்காலத்திலும் வெற்றிதான்.  அந்த நிருபிப்பில் சந்ததியை இழந்தாலும் எமது அடிப்படை நோக்கத்தை  இழந்ததிலும் எமக்கு கவலை இல்லை. 

வெற்றியை கொண்டாட வேண்டியதுதான். 😂 

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாவது சூடு சுரணை இருந்து வெளியே நடமாட வேண்டும் என்றால் தன்னை மாற்றிக் கொள்ள முயலுவார். இல்லை என்றால் இனி வீட்டுக்குள் இருந்து குலைக்க வேண்டியது தான். (இந்த தாக்குதல் செய்தவர்களுடன் முரண்பட்டேன் முதலில். சில வீடியோக்களை அனுப்பி பார்த்தபோது அவர் சவால் விட்டு ல சப்பலுக்கு வந்திருப்பது தெரிந்தது.) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்டவர்கள் அந்த பெண்ணை உணர்ச்சி மிகுதியால் தாக்கிவிட்டதாகவே தெரிகின்றது. ஆனால்  பல காணொளிகளில் போரட்டங்களை கொச்சப்படுத்தி தூசனங்களால்  அந்த பெண் பேசும் போது பல இடங்களில் அப்படி பேச வேண்டாம் என மன்றாட்டமாக கேட்டதையும் உன்னிப்பாக கவனித்தவர்கள் அவதானித்திருக்கலாம்.

அந்த சிறிய தாக்குதல் சரியென நினைப்பவர்களுக்கு அது சரியாகத்தான் இருக்கும். பிழையென நினைப்பவர்களுக்கு அது பிழையாகத்தான் இருக்கும்.

ஈழத்தமிழர்கள் அரசியல் போராட்டத்திலும் சரி ஆயுத போராட்டத்திலும் சரி இதுவரைகாலமும் புனிதர்களாக இருந்து எதை சாதித்தார்கள். உலக அரசியல் என்று பார்த்தால் ஈழத்தமிழர்கள் வேற்றுநாட்டு கொடியைக்கூட ஆர்ப்பாட்டங்களில் எரித்து கேவலப்படுத்தியவர்கள் இல்லை என நினைக்கின்றேன்.

அந்தை காணொளிய வெளியே விடாமல் தவிர்த்திருக்கலாம்.

40 minutes ago, island said:

எதிரியை விட  நாம் கேவலமானவர்கள் என்பதை நிருபிப்பதில் எம்மவருக்கு எப்போதும் எக்காலத்திலும் வெற்றிதான்.  அந்த நிருபிப்பில் சந்ததியை இழந்தாலும் எமது அடிப்படை நோக்கத்தை  இழந்ததிலும் எமக்கு கவலை இல்லை. 

வெற்றியை கொண்டாட வேண்டியதுதான். 😂 

ஈழத்தமிழர் வரலாற்றில்  இப்படியான சம்பவங்கள் முன்னர் நடந்ததுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் வரலாற்றில்  இப்படியான சம்பவங்கள் முன்னர் நடந்ததுண்டா?

நடந்ததுண்டு. இந்த பெண்ணை போல கேவலமாக பேசாமல் பண்பாக விமர்சித்த பலருக்கு இவருக்கு நடந்ததை விட மோசமாக பல நடந்துள்ளன.  தாயகத்திலும் ஐரோப்பாவில் தமிழர்வசிக்கும் அனேகமாக  எல்லா நாடுகளிலும் 1985 ம் ஆண்டுகளைத் தொடர்ந்த பல ஆண்டுகளில்  நடைபெற்றுள்ளன. 

நீங்கள் வசிக்கும் நாட்டிலும் நடைபெற்றுள்ளன. அந்த காலத்தில் காணொளிகள எடுக்கப்படுவதும் இல்லை அவை  இவ்வாறு பகிரப்படுவதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தை பற்றி இழிவாக கதைப்பதை  காட்டியே ரிப்போர்ட் செய்து இலகுவாக அவரின் சமூக வலைதளம்களை முடக்கலாம் அப்படி இருக்கையில் இப்படி அடிப்பதால் இன்னும் மேலும் மேலும் அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார்கள் அடி விழும் காணொளி வரும் மட்டும் இப்படியான ஆள் இருக்கிறார் என்றே தெரியாது .

தலைவர் ஒழுக்கமான கட்டுகோப்பான தமிழர் படையை உருவாக்கியிருந்தார் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

தமிழினவிடுதலைக்கும், விடுதலை உணர்வுக்கும் மற்றும் தனிமனித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இடையேயான ஊடாட்டம் என்பது சம்பவச்சூழலை மையங்கொண்டே நகரும். கூட்டுச்சேர்ந்து அழிகப்படுகின்றோம், கொல்லப்படுகின்றோம், கொடுமைகளுகுள்ளாக்கப்படுகின்றோம் என்ற சிந்தனையோடு வீதியால் செல்லும் ஒருவரது கண்ணிலே, தனது இனத்திற்கு எதிரான அவதூறாளனைக் காணும்போது உணர்சிமேலீட்டினால் இயல்பாக எழுகின்ற கொந்தளிப்பு வன்முறை எதிர்ப்பாக வடிவம் பெறுகிறது. மனித நடமாட்டப் பகுதிகளில் அது சில மணித்துளிகளில் குழுச் செயற்பாடாகப் பரணிமிக்கிறது. சிலர் இதனை ஏன் மிதிப்பான் எனக் கடந்துவிட சிலரோ அகற்றிவிட முனைந்து அதன்மேல் வீழ்தல் நிகழ்கிறது.
தமிழர்களுள்ளே பண்டாரவன்னியன் காலம் முதல் தொடர்கதைதானே. இதுபோன்ற பிழைப்புவாதிகள் இருக்கவே செய்வர். சமகாலத்திலே சட்டாம்பிள்ளை; சும் செய்யததை, செய்வதை நாம் கடந்து செல்வதுபோல் இதுபோன்ற தரங்கெட்டோரைக் கடந்துவிட வேண்டும். ஈடுபட்டவரால் கடந்துவிட முடியவில்லை. கைக்கூலிகளை நாம் இனங்காணவேண்டும். வெளிப்படுத்த வேண்டும் என்ற அளவிலே இருப்பதற்கான கருத்தாடல்கள் வலுப்பெற வேண்டும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஒரு இனத்தை பற்றி இழிவாக கதைப்பதை  காட்டியே ரிப்போர்ட் செய்து இலகுவாக அவரின் சமூக வலைதளம்களை முடக்கலாம் அப்படி இருக்கையில் இப்படி அடிப்பதால் இன்னும் மேலும் மேலும் அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார்கள் அடி விழும் காணொளி வரும் மட்டும் இப்படியான ஆள் இருக்கிறார் என்றே தெரியாது .

தலைவர் ஒழுக்கமான கட்டுகோப்பான தமிழர் படையை உருவாக்கியிருந்தார் .

எதுக்காக நீங்கள் தலைவர் புலிப் படை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 

நான் அவரை தாக்காமல் இருக்க எந்த ஒரு காரணத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஈழம், தமிழர்கள், அம்மா, பண்புகள் பண்பாடு...... இவற்றையும் தாண்டி போனால் எனது ஊர் (புங்குடுதீவார் புகையிலை வித்தனியே) 

எனவே இவளை எல்லாம் மனித இனத்துக்குள் அடக்காமல் இருங்க. ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டை உங்கள் வருங்காலத்தை தட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

எதுக்காக நீங்கள் தலைவர் புலிப் படை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 

நான் அவரை தாக்காமல் இருக்க எந்த ஒரு காரணத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஈழம், தமிழர்கள், அம்மா, பண்புகள் பண்பாடு...... இவற்றையும் தாண்டி போனால் எனது ஊர் (புங்குடுதீவார் புகையிலை வித்தனியே) 

எனவே இவளை எல்லாம் மனித இனத்துக்குள் அடக்காமல் இருங்க. ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டை உங்கள் வருங்காலத்தை தட்டும்.

ஓ, நீங்களும் இவளின் செயலினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள்.

உண்மை, இரண்டுதரப்பும் பிரபாகரனை அவமானப் படுத்தியிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எதுக்காக நீங்கள் தலைவர் புலிப் படை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 

நான் அவரை தாக்காமல் இருக்க எந்த ஒரு காரணத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஈழம், தமிழர்கள், அம்மா, பண்புகள் பண்பாடு...... இவற்றையும் தாண்டி போனால் எனது ஊர் (புங்குடுதீவார் புகையிலை வித்தனியே) 

எனவே இவளை எல்லாம் மனித இனத்துக்குள் அடக்காமல் இருங்க. ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டை உங்கள் வருங்காலத்தை தட்டும்.

கை வைத்தால் மீண்டும் எதிர் கருத்து அவவின் வாயில் இருந்து வரகூடாது இப்ப என்ன நடக்குது ? இன்னும் மோசமாக கத்தி கொண்டு இருக்கிறா என்று கேள்வி ஒரு இனத்தை கேவலமாக சமூக வலைதளம்களில் பேசகூடாது ரிப்போர்ட்செய்து முடக்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட 1950 முதல்  இலங்கையில் இவ்வளவு இனக்கலவரங்கள், சிங்கள அத்துமீறல்கள்,அடாத்தான குடியேற்றங்கள், உரிமை பகிர்வில்லா வாழ்க்கை, புலம்பெயர்ந்த வாழ்க்கை,போர்காலத்தில் உள்ள பக்குவங்கள்,முள்ளிவாய்க்கால் அழிவு என பல அனுபவங்களை பார்த்த இனம் ஈழத்தமிழினம். 
இப்படியிருந்தும்......இதுவரை யாருமே நிரந்தர முடிவு சொல்லவுமில்லை. தீர்வு தரவுமில்லை.

எனது கேள்வி என்னவென்றால்....?

இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

கை வைத்தால் மீண்டும் எதிர் கருத்து அவவின் வாயில் இருந்து வரகூடாது இப்ப என்ன நடக்குது ? இன்னும் மோசமாக கத்தி கொண்டு இருக்கிறா என்று கேள்வி ஒரு இனத்தை கேவலமாக சமூக வலைதளம்களில் பேசகூடாது ரிப்போர்ட்செய்து முடக்கலாம் .

மேலோட்டமாக பார்த்தால் இப்படி தான் எனக்கும் இருந்தது. ஆனால் இதன் அத்திவாரம் ஆரம்பம் தமிழர்களுக்கு, புலிகளுக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கும் போது தொடங்கி விட்டது.

ஆமாம் சிங்களத்திற்கு ஆக்கிரமிப்பு பைத்தியம், பௌத்த விகாரைகள் முளைப்பது மலச்சிக்கல், சிங்களம் தமிழர்கள் மேல் போடும் சட்டங்கள் மலம்....... இப்படியே சொல்லி சொல்லி விலகி ஓடலாம். ஆனால் எல்லோராலும் அது முடியாது அல்லவா ?? அப்படியான ஒரு சிலரால் தானே உலகம் மாற்றம் கண்டது. காணும் 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட 1950 முதல்  இலங்கையில் இவ்வளவு இனக்கலவரங்கள், சிங்கள அத்துமீறல்கள்,அடாத்தான குடியேற்றங்கள், உரிமை பகிர்வில்லா வாழ்க்கை, புலம்பெயர்ந்த வாழ்க்கை,போர்காலத்தில் உள்ள பக்குவங்கள்,முள்ளிவாய்க்கால் அழிவு என பல அனுபவங்களை பார்த்த இனம் ஈழத்தமிழினம். 
இப்படியிருந்தும்......இதுவரை யாருமே நிரந்தர முடிவு சொல்லவுமில்லை. தீர்வு தரவுமில்லை.

எனது கேள்வி என்னவென்றால்....?

இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டுமா?

அப்படியெதுவும் கண்ணியத்துடன் நடக்க வேண்டிய கட்டாயமில்லை. என்ன தான் குறைந்து விடும் கண்ணியத்தை இழந்தால்?

அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கும், ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கும்  கொடுத்த அதே முத்திரையைக் கொடுப்பர். கல்வி, வேலை, சமூகப் பதவிகளில் தமிழ் வழிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் இப்போதிருப்பதை விடக் குறையும். ஒரு தலை முறை கழித்து அந்த தமிழ் வழி வந்த பிள்ளைகள் ஏழைகளாக சமூகத்தின் ஓரங்களில் வாழ்ந்து விட்டுப் போவர்.

எனவே உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் குறையாது, நாம் இருவரும் புதைந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்😎!

  • கருத்துக்கள உறவுகள்

திரியோடு தொடர்புடைய காணொளியென்பதால் இணைத்துள்ளேன்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்

நன்றி - யூரூப்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கீழ்த்தரமான செயல்.

இனி அந்த பெண்ணிற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க பலர் முன் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவெளியில் இந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சகித்துக் கொள்ளக் கூடியவை அல்ல. சிறுவர்களும் இதனை கேட்க முடியும். அந்த வகையில் இவரின் காணொளிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதன் மூலம்.. இவரின் அநாகரிகத்துக்கு முடிவுகட்டலாம். இவர்கள் எப்பவும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. இப்படி சிலது காலத்துக்கு காலம் வந்து போயிடுங்கள். அதுகளை காலமே தண்டிக்கும். உணர்ச்சி வசப்பட்டு இவர்களை தண்டிக்க சட்டத்தை கையில் எடுத்து பிரான்ஸ் காவல்துறையின் அடாவடிக்கு இலக்காவதில் இருந்து இளைஞர்கள் புத்திசாதுரியுமாக விலகி இருந்து கொள்வதே சிறப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்?

உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன்.

ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும்.

இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம்.

அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள் அரசியல் போராட்டத்திலும் சரி ஆயுத போராட்டத்திலும் சரி இதுவரைகாலமும் புனிதர்களாக இருந்து எதை சாதித்தார்கள்.

சரியான கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்?

உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன்.

ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும்.

இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம்.

அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.

நன்றி சகோ

அந்த வீடியோவை முதலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு மரியாதையுடன் தங்கச்சி தலைவர் மற்றும் ஈழம் பற்றி பைசுவதை தவிருங்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவா என்னடா பெரிய கொம்பா என்ன எனக்கு அப்படி இப்படி என்று வம்பை ஆரம்பிக்கிறார். அப்பொழுதும் அந்த உங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவர் படத்தை எடுத்து விடு தங்கச்சி என்று தான் சொல்கிறார்கள். 

இங்கே மரியாதை கௌரவம் பண்புகள் பற்றி பேசுபவர்களுக்கு தெரியாது இவாவின் இந்த அடாவடித்தனத்தை இன்று கேட்காமல் விட்டால் ல சப்பலில் இனி எந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூருவதற்கு ஏன் மாவீரர் நாளுக்கே அக்காவின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டி வரும் என்பது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.