Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார் 

  • Replies 328
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.

  • Like 1
Posted

அமைதி வழி அரசியல் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுக்க முடியாத தோற்றுப்போன அரசியல்வாதியாக 91 வயது வரை வாழ்ந்து தன் வாழ்நாள் கனவான எம் பி யாகவே சாக வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட ஒருவராக விடைபெற்றார்.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தர் மட்டுமல்ல இதுவரை தமிழர் அரசியலுக்கு தலைமை வகித்த அனைவருமே தோல்வியடைந்தவர்களாகவே  மரணத்தை தழுவினர் என்பதே வரலாறு. அந்த வரிசையில்  இப்போது சம்பந்தர். அன்னாரிர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவ்வளவிற்கும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும்… 
தனது சொந்த ஆசையை… மட்டும், நிறைவேற்றிக் கொண்டார்.

அடுத்த தீபாவளிக்குள்  தீர்வு, அடுத்த பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லிச் சொல்லி...  தமிழ் மக்களை நம்ப வைத்த அரசியல்வாதி மறைந்தார்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் ......... !

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆழ்ந்த இரங்கல்கள்.......... சிலருக்கு மட்டுமே மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும், அதையும் பயன்படுத்தாமல் விட்டவர்கள் அவர்களில் பலர். சம்பந்தர் ஐயாவும் அப்படியான ஒருவர் என்று முடிகின்றது அவரின் பயணம்.

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Like 6
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்பாறையில்…. பியசேன என்ற சிங்களவனை தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வைத்ததும் சம்பந்தர்தான்.

அந்தச் சிங்களவன் வெற்றி பெற்ற பின்… சிங்களக் கட்சிக்கு தாவிப் போன கூத்தும் இவர் கண்முன்னேதான் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் இனத்தின் வரலாற்றுத்துயரங்களில் ஒன்று விடைபெற்றது.. ஆழ்ந்த அனுதாபங்கள் சார்ந்தவர்களுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரம் பொன்னானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, தமிழ் சிறி said:

அம்பாறையில்…. பியசேன என்ற சிங்களவனை தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வைத்ததும் சம்பந்தர்தான்.

அந்தச் சிங்களவன் வெற்றி பெற்ற பின்… சிங்களக் கட்சிக்கு தாவிப் போன கூத்தும் இவர் கண்முன்னேதான் நடந்தது.

அது சரி  பலமுறை  கருத்துகள் எழுதி உள்ளீர்கள்  ஆனால்   அனுதாபம்.     அல்லது இரங்கல்  தெரிவிக்கவில்லை    என்ன  காரணம்??? 🤣🤣,......ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  🙏ஒம் சாந்தி 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Former TNA Leader R. Sampanthan no more

Colombo, June 30 (Daily Mirror) - Veteran Tamil politician and parliamentarian R. Sampanthan passed away at a private hospital in Colombo today evening, aged 91. 

Sampanthan was one of the longest serving MPs with decades of experience and served as the Leader of the Tamil National Alliance for several years.

https://www.dailymirror.lk/breaking-news/Former-TNA-Leader-R-Sampanthan-no-more/108-286102

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் காலமானார் !

01 JUL, 2024 | 12:02 AM
image
 
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் சற்று முன்னர் இயற்கை எய்தினார். 

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது  அவருகு்கு 91வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

அது சரி  பலமுறை  கருத்துகள் எழுதி உள்ளீர்கள்  ஆனால்   அனுதாபம்.     அல்லது இரங்கல்  தெரிவிக்கவில்லை    என்ன  காரணம்??? 🤣🤣,......ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  🙏ஒம் சாந்தி 🙏🙏🙏

ஒன்றையும் தமிழருக்கு பெற்று தரவில்லை பரவாயில்லை சிங்களத்தின் குணம் அப்படி திருமலையை சிங்களமாக மாற்றும் திட்டத்துக்கு கண்டும் காணமால் இருதவர்தானே கொழும்பு வீட்டுக்கு ஆசைபட்டு இந்த வயதிலும். இப்படி சொந்த இனத்துக்கு கேடு விளைவித்த கருணா இறந்தால் ஆழ்ந்த அனுதாபம்  இரங்கல் தகுதி உடையவரா ? இல்லையே அது போலத்தான் .

லண்டனில் சம்பந்தர் இறந்த செய்தி கேட்டு வெடி கொளுத்தி கொண்டாடினார்கள் வடகிழக்கு தமிழர்கள் என்ற செய்தி வராத மட்டும் சந்தோசபடுங்க .

8 minutes ago, nedukkalapoovan said:

Sampanthan was one of the longest serving MPs with decades of experience and served as the Leader of the Tamil National Alliance for several years.

பலவருடகால அனுபவம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே தமிழருக்கு கிடைக்கவில்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1977  இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் .

அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.
பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு
மனுஷனின்  அழகோ அழகு.  அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில்   பெண்கள்  குவிந்திருப்பார்கள்

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர்.

ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் மூலம்
உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்
-----  அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து   சிங்கக்   கொடி அசைத்து  தன் நலமே  முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் .

இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை.

இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை.

எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. 

அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை.

இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான். 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வாத்தியார் said:

1977  இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் .

அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.
பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு
மனுஷனின்  அழகோ அழகு.  அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில்   பெண்கள்  குவிந்திருப்பார்கள்

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர்.

ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் மூலம்
உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்
-----  அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து   சிங்கக்   கொடி அசைத்து  தன் நலமே  முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் .

இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்

தேசத் துரோகி ??

இன்னொருவரைத் துரோகி என்று கூறுவதற்கு தாங்கள் பிடுங்கியது என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த போராளிகளையும் அந்தப் போராட்டத்தின் விளைவாக உயிர் தந்த மக்களையும்.. இனப்படுகொலையாளர்களை மறந்து.. மன்னித்து.. ஒரே நொடியில் பயங்கரவாதமாக்கிய சம்பந்தன் கும்பல் இரங்கலுக்குரிய கும்பலே அல்ல. இதுதான் எங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 தோல்வியை எழுதிச்செல்லும் தமிழர்களின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம். 

இனி இந்திய சிறீதரனுக்கும் மேற்கின் சுமந்திரனுக்குமான போட்டி தமிழர்களை முட்டாள்கள் என்று உலகுக்கு மீண்டும் பறைசாற்றும்  பயணம் தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kapithan said:

தேசத் துரோகி ??

இன்னொருவரைத் துரோகி என்று கூறுவதற்கு தாங்கள் பிடுங்கியது என்ன? 

நான் மக்களிடம் உங்களுக்குத் தீர்வை வாங்கித்   தருவேன்
எனக்கு வாக்குப் போடுங்கள் என்று இலங்கையில் எந்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கவில்லை.

அரசியலில் இருந்தாவது இன்றுவரை விலகி இருக்கின்றேன்.
முடிந்தவர்களை.... நீங்கள் முயற்சியுங்கள் என்று அவர்களுக்கு வழி விட்டிருக்கினேறேன்.

கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் துரோகி என்று சொல்லும் யோக்கியம் இன்னொரு எட்டப்பனுக்கு இருக்காது

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, வாத்தியார் said:

நான் மக்களிடம் உங்களுக்குத் தீர்வை வாங்கித்   தருவேன்
எனக்கு வாக்குப் போடுங்கள் என்று இலங்கையில் எந்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கவில்லை.

அரசியலில் இருந்தாவது இன்றுவரை விலகி இருக்கின்றேன்.
முடிந்தவர்களை.... நீங்கள் முயற்சியுங்கள் என்று அவர்களுக்கு வழி விட்டிருக்கினேறேன்.

கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் துரோகி என்று சொல்லும் யோக்கியம் இன்னொரு எட்டப்பனுக்கு இருக்காது

ஒரு மசிரும் பிடுங்காத ஆட்கள்தான் பிறரைத் துரோகி என்று தற்போது கூறுகிறார்கள். 

துரோகி என்று பிறரைத் தூற்ருபவர்களை முச்சந்தியில்  நிற்கவைத்து பச்சை மட்டையடி போட வேண்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகம் செய்தவர்களை துரோகி என்றுதானே அழைப்பது வழமை மாறாக சந்தியில் வைத்து அடிப்பது எல்லாம் எந்த வகையில் சேர்த்தி ?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.