Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!

அப்போது நான் பிறந்திருக்கவில்லை 
இது நான் நாட்டில் இருக்கும்போது என் கண்முன்னே நடந்தது 
 
  • Replies 328
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று  தானாக தேடி வந்தது அழிவு....?

2 minutes ago, ஏராளன் said:

56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!

இவை புலிகள் மீதான வஞ்சம் தீர்க்கும் எழுத்துக்கள் மட்டுமே. வரலாறு மற்றும் அனுபவம் சார்ந்த பதிவுகள் அல்ல. எல்லா இனத்திலும் இப்படி கொஞ்சம் இருக்கும். எதிரியை விட கடினம் இவற்றை கையாள்வது தான். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kandiah57 said:

இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,......ஹிட்லர்.  உலகையே ஆட்டிப் படைத்தவர்   இரண்டாவது உலகப் போர் வரக் காரணம் ஆனவர்  சம்பந்தர்   திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர்  இரண்டுமே எப்படி ஒப்பிட முடியும்??  ஆறு தடவைகள் தமிழ் மக்கள்  பிழை விட்டுள்ளார்கள். ...அந்த தமிழ் மக்களை திருத்த முயற்சி செய்யுங்கள்   🙏🤣

இவர் மட்டுமல்ல  எல்லோரும் தீர்வு வேண்டித் தரமுடியும்.  என்று தான் சொன்னார்கள்   ஆனால்  இவரை மட்டுமே ஏன்   ஒரு தடவையல்ல ஆறு தடவைகள் தெரிவு செய்ய வேண்டும்????  

குறிப்பு,.....விவாதத்தை நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு தருங்கள் 🙏

ஒருவன் இறந்து விட்டான் , அவ்வளவுதான் மற்றும்படி உயிருடன் இருக்கும் போதே செருப்பால அடித்திருக்கவேண்டிய ஒரு ...... தமிழில் சொல்வதட்கு வார்த்தை இல்லை . அவ்வளவுக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, island said:

உங்களை பொறுத்தவரை, சம்பந்தர் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியிருந்தால் அதை மன்னித்திருப்பீர்கள்.😂  

அருமையான கருத்து. பிறகென்ன மேலே இருக்கிறவன் எல்லாத்தையும் பார்த்துக்கொள்வான் என்றுவிட்டு உங்கள் வேலையை தொடங்கவேண்டியத்துதானே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று  தானாக தேடி வந்தது அழிவு....?

56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!

சிங்கலவர்கள் தமிழர்கள் மீது நடத்திய இன கலவரங்கள், முஸ்லிம்கள் மீது நட்திய தாக்குதல்கள்,  தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதியால் ஒடுக்கி ஒரு பகுதி  தமிழர்கள் மீது நடத்தும் சாதி கலவரங்களை எல்லாம் முள்ளிவாய்கால் பேரழிவேடு ஒப்பிட முடியாது. இது இரு தரப்பு கொடிய இராணுவ யுத்தம். இன்னும் பல வருடங்களாகியும் காணாமல் போன தமது உறவுகளை தேடி தமிழர்கள் அலைகிறார்கள். கண்ணி வெடி அகற்றும் முயற்சி இன்னும் நடைபெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிங்கலவர்கள் தமிழர்கள் மீது நடத்திய இன கலவரங்கள், முஸ்லிம்கள் மீது நட்திய தாக்குதல்கள்,  தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதியால் ஒடுக்கி ஒரு பகுதி  தமிழர்கள் மீது நடத்தும் சாதி கலவரங்களை எல்லாம் முள்ளிவாய்கால் பேரழிவேடு ஒப்பிட முடியாது. இது இரு தரப்பு கொடிய இராணுவ யுத்தம்.

ஆரம்பத்தில் முஸ்லிம்கள்மீது நடத்திய கலவரங்கள் போல் பொத்திக்கொண்டிருந்த தமிழர்கள்மீது கட்டற்ற அரச பயங்கரவாத இனக்கலவரங்களை நடத்தியே தமிழர்களை ஆயுதப்போராட்டத்தை நோக்கி தள்ளினார்கள். அதன் வருவிழைவே மிக  நீண்ட சிவில் யுத்தத்திற்கு வித்திட்டது. முஸ்லிம்களையும் இப்படியே வதைத்து ஆயுதப்போராட்டத்தை நோக்கி தள்ளி பயங்கரவாதம் என்று இனவழிப்பு செய்வதுதான் சிங்களவர்களின் நோக்கம் ஆனால் முஸ்லிம்களின் நல்லநேரம் பொருளாதார சீரழிவில் இலங்கையின் அடிநாதமே காலியாகிவிட்டது.  முசுலீம் தீவிரவாதிகளும் சும்மா லேசுப்பட்டவர்களில்லை பொத்திக்கொண்டிருந்த தமிழ் கிறீஸ்தவர்களை தான் உயிர்த்த ஞாயிறு அன்று பதம் பார்த்தார்கள். தமிழர்கள் காத்தான்குடியில் திருப்பியடித்தது போல் அடிக்கும் வல்லமையுடன் இருந்திருந்தால் முஸ்லிம் தீவிரவாதிகள் பொத்திக்கொண்டிருந்திருப்பார்கள். ஆக இங்கே கருப்பொருள் எவ்வளவு இழுத்து சுருட்டிக்கொண்டு பொத்திக்கொண்டிருந்தாலும் அடி(ழி)க்கவேண்டும் என்ற நோக்கத்திலிருப்பவன் அடித்தே தீருவான் என்பதே அது யுத்தமாக இருந்தாலும் சரி கலவரமாக இருந்தாலும் சரி    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழன்பன் said:

ஒருவன் இறந்து விட்டான் , அவ்வளவுதான் மற்றும்படி உயிருடன் இருக்கும் போதே செருப்பால அடித்திருக்கவேண்டிய ஒரு ...... தமிழில் சொல்வதட்கு வார்த்தை இல்லை . அவ்வளவுக்கு ....

நீங்கள் எதுவும் செய்யலாம் அது உங்கள் விருப்பம்,......ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பியது தமிழர்கள் தான்  மட்டுமல்ல அவர் சொல்லை கேட்டு   குண்டுகள் பொழிந்தவனுக்கும். ஐனதிபதி தேர்தலில் வாக்குப்போட்டார்கள்   எனவே… இந்த தமிழருக்கும் சேர்த்து அடியுங்கள்.  இலங்கையில் வாழும் தமிழர்கள் திருத்தினால்  தான்  எதுவும் சாத்தியம்  அவர்கள் மீண்டும் மீண்டும்  சம்பந்தன். போன்றோரை தெரிவுசெய்கிறார்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள்  என்ன செய்ய முடியும்?? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்கள் அனுபவத்தில், இப்படி இறந்த ஒருவரை துக்கிப்போட்டு மிதித்ததை நான் அறியவில்லை. 

கடந்த ஒரு பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் "அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவுடன் தமிழர்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவோம் எனக்கூறியதாகவும் ஆனால் அவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் எனவும் கூறியிருந்தார்.

உண்மையில் சம்பந்தன் தரப்பு போர்க்குற்ற விசாரணையை சர்வதேசத்திடம் வலியுறுத்தாத காரணமும் இதுதான். அப்படி வலியுறுத்தி, போர்குற்றவிசாரணை வரும்போது தானும் சாட்சி சொல்ல வேண்டிவரும் என அமெரிக்காவும் இந்தியாவும் பயமுறுத்தி வைத்ததே. 

இந்த மனிசன் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம் சிலவேளைகளில் அப்படி ஒரு விசாரணை வருமாகில்? அவரையும் ஏத்தியிருக்கலாம்.
செத்துப்போயிட்டார்

இனிமேல் சுமந்திரன் ஏற்கனவே அறிக்கை விடப்பாவிக்கிறன் எண்டு சில வெள்ளைப்பேப்பரில கையெழுத்து வாங்கி வைத்திருகிறார். சுமோ அந்தப்பேப்பரில சம்பந்தரின் உவர்மலையில் உள்ள சொத்துப்பத்துக்களை எழுதி உயில் முடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கனவே ரவிராஜ் அவர்களது மனைவியிடம் இப்படிக் கையெழுத்து வாங்கித்தான் பாராளுமன்றக்கதிரையை ஆட்டையைப்போட்டவர்.

மற்றப்படி சம்பந்தர் "செத்துப்போனது" பற்றி எதுவும் சொல்லத்தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வேளை டக்ளஸ் இறந்தால் இதைவிட மோசமாக திட்டுவார்கள்.. இந்த சோசல்மீடியா இணையம் இதைப்பற்றி எதுவுமே தெரியாத எங்கள் ஊரில் இருக்கும் பல அம்மா அப்பா பாட்டி தாத்தா அப்பத்தாக்கள் எவ்வளவு கேவலமாந்திட்டுவார்களோ அவ்வளவு கேவலமாக திட்டுவார்கள்.. எனக்கு தெரிஞ்சு மட்டும் சமாதான காலத்தின் இறுதிப்பகுதிகளில்(2004-2006) மட்டும் ஒரு முப்பது பேரை ஸ்கூட்டி பெப்பில் வந்து ஈபிடியினர் ராணுவப்புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து சுட்டிருப்பார்கள்.. சீலன் உட்பட எனது நண்பர்கள் மூன்று பேரை சுட்டிருந்தனர்.. என்னைக்கூட ஆள்மாறி தேடி வந்திருந்தனர்.. ஒரு மயிரிழையில் நான் வன்னிக்கு பின் காணியால் வெளிகிட்டு பஸ் ஏறி போனதால் தப்பினன்.. தேத்தண்ணிக்கடை கண்ணன், பலசரக்குக்கடை சின்ராசண்ணை, பிரபாகரன் பிறந்த நாளுக்கு பொங்கல் பொங்கிய எங்கூரு வர்த்த்க சங்கர்தலைவர், கப்பம் குடுக்காததால் சுடப்பட்ட நகைக்கடை அண்ணை, பஸ் ஓனர் பாலா அண்ணை, ஆட்டோ ஓடுற பொடியள் மட்டும் ஒரு பத்து பேர் வரும் எங்கட ஏரியாவில்.. வரலாற்றின் இடியமின் யாழ்ப்பாண மக்களுக்கு இந்த டக்ளஸ் உம் அவன் கூட்டமும்..

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்போது நான் பிறந்திருக்கவில்லை

நானும் தான் பிறக்கவில்லை சகோ.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதியால் ஒடுக்கி ஒரு பகுதி  தமிழர்கள் மீது நடத்தும் சாதி கலவரங்களை 

இங்கும் இந்த அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் இருந்தது... இருக்கிறது... தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்துக்கு ட்க்ளஸ் மாதிரி மட்டக்கிளப்புக்கு கருணா பிள்ளையான்.. இவர்களோடு ஒப்பிடும்போது அந்தளவுக்கு சம்பந்தர் செய்யவில்லை.. டகளஸ் கருணா ஓட ஒப்பிடேக்க பாவம் நல்ல மனுசன் சம்பந்தர்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ்ப்பாணத்துக்கு ட்க்ளஸ் மாதிரி மட்டக்கிளப்புக்கு கருணா பிள்ளையான்.. இ வர்களோடு ஒப்பிடும்போது அந்தளவுக்கு சம்பந்தர் செய்யவில்லை.. டகளஸ் கருணா ஓட ஒப்பிடேக்க பாவம் நல்ல மனுசன் சம்பந்தர்..

கருணா, பிள்ளையானுடன் ஒப்பிடேக்க ஆள் பரவாயில்லை தான். ஆனால் கருணா, பிள்ளையான் போன்ற கேடுகெட்ட போக்கிலிகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமை என்று கதைத்து அரசியல் செய்யுமளவு வெற்றிடத்தை உருவாக்கி கொடுத்ததில் தாத்தாவுக்கு பெரிய பங்குண்டு. இப்போது கூட ஹரிஸ், ரவுப் ஹக்கிம் போன்ற முசுலிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுதாபங்களுடன் கொண்டாடி தீர்க்க முசுலிம் மக்கள் அழாத குறையாக வழியனுப்பி வைக்க தமிழ் மக்களோ பிணத்தை தோண்டி எடுத்து கிழிக்கும் அளவுக்கு வசவுகளை வாங்கும் அளவுக்கு தனது இனத்திற்கு செய்த கசபோக்கிலி அரசியல் மட்டுமே தாத்தாவின் ஆயுட்கால சாதனை

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு வேளை டக்ளஸ் இறந்தால் இதைவிட மோசமாக திட்டுவார்கள்.. இந்த சோசல்மீடியா இணையம் இதைப்பற்றி எதுவுமே தெரியாத எங்கள் ஊரில் இருக்கும் பல அம்மா அப்பா பாட்டி தாத்தா அப்பத்தாக்கள் எவ்வளவு கேவலமாந்திட்டுவார்களோ அவ்வளவு கேவலமாக திட்டுவார்கள்.. எனக்கு தெரிஞ்சு மட்டும் சமாதான காலத்தின் இறுதிப்பகுதிகளில்(2004-2006) மட்டும் ஒரு முப்பது பேரை ஸ்கூட்டி பெப்பில் வந்து ஈபிடியினர் ராணுவப்புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து சுட்டிருப்பார்கள்.. சீலன் உட்பட எனது நண்பர்கள் மூன்று பேரை சுட்டிருந்தனர்.. என்னைக்கூட ஆள்மாறி தேடி வந்திருந்தனர்.. ஒரு மயிரிழையில் நான் வன்னிக்கு பின் காணியால் வெளிகிட்டு பஸ் ஏறி போனதால் தப்பினன்.. தேத்தண்ணிக்கடை கண்ணன், பலசரக்குக்கடை சின்ராசண்ணை, பிரபாகரன் பிறந்த நாளுக்கு பொங்கல் பொங்கிய எங்கூரு வர்த்த்க சங்கர்தலைவர், கப்பம் குடுக்காததால் சுடப்பட்ட நகைக்கடை அண்ணை, பஸ் ஓனர் பாலா அண்ணை, ஆட்டோ ஓடுற பொடியள் மட்டும் ஒரு பத்து பேர் வரும் எங்கட ஏரியாவில்.. வரலாற்றின் இடியமின் யாழ்ப்பாண மக்களுக்கு இந்த டக்ளஸ் உம் அவன் கூட்டமும்..

ஆமாம் எங்கள் ஊரிலும். நடந்தது  பத்துக்கு. மேல் வரும்   எனது உறவினர் ஒருவர் புலிகளை புகழ்ந்து கொண்டு இருப்பார்   வீட்டில் முற்றத்தில். கதிரையிலிருந்தவரை  மோட்டார் சைக்கிளில். வந்தவர்கள் சுட்டு விட்டு போய் விட்டார்கள்  2009.  ஆவணி மாதம் 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

GRe-Mq21-W0-AAB2i9.jpg

GRe-Mq6-AW8-AESk-F2.jpg

சம்பந்தனின் தேசியத்தலைவரும் சிரித்த முகத்துடன் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.  

GRe-Mq09-Xw-AAth-FV.jpg

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ்ப்பாணத்துக்கு ட்க்ளஸ் மாதிரி மட்டக்கிளப்புக்கு கருணா பிள்ளையான்.. இவர்களோடு ஒப்பிடும்போது அந்தளவுக்கு சம்பந்தர் செய்யவில்லை.. டகளஸ் கருணா ஓட ஒப்பிடேக்க பாவம் நல்ல மனுசன் சம்பந்தர்..

ஆயுதத்தை விட கொடூரமானது முக்கிய சந்தர்ப்பங்களில் மௌனம் காத்தல் ஓடி ஒழிதல். இவற்றின் இழப்புக்கள் பல ஆயிரம் ஆனால் எவருக்கும் தெரிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

ஆயுதத்தை விட கொடூரமானது முக்கிய சந்தர்ப்பங்களில் மௌனம் காத்தல் ஓடி ஒழிதல். இவற்றின் இழப்புக்கள் பல ஆயிரம் ஆனால் எவருக்கும் தெரிவதில்லை. 

🤣😂மக்களை அடைத்து வைத்து, எதிர் ஆயுதங்களை அவர்கள் மீது தாக்க விட்டதை விட, அது நடந்த போது  ஓடி ஒழிந்தது மோசமான செயலா விசுகர்😎?

தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாக, சம்பந்தர், கருணாநிதி, ஒபாமா, ஹிலாரி எல்லாரும் காரணம். காயம் பட்டவனை ஏற்ற வந்த கப்பலில் கூட மக்களை ஏற்ற அனுமதிக்காத சிறைப்படுத்தல் காரணமேயில்லை😎! நல்லா நடத்துங்க விசுகர்!

7 hours ago, விசுகு said:

மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது இவர்கள் சரியாக நடப்பதால் என்று நீங்கள் நினைத்தால் என்னிடம் உங்களுக்கு பதில் சொல்ல நல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி. 

வார்த்தைகள் இல்லையென்பதை விட நீங்கள் வழமையாகப் பதுங்கும் மூலை வந்து விட்டதென்று சொல்லி விடை பெறுங்கள்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Justin said:

🤣😂மக்களை அடைத்து வைத்து, எதிர் ஆயுதங்களை அவர்கள் மீது தாக்க விட்டதை விட, அது நடந்த போது  ஓடி ஒழிந்தது மோசமான செயலா விசுகர்😎?

தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாக, சம்பந்தர், கருணாநிதி, ஒபாமா, ஹிலாரி எல்லாரும் காரணம். காயம் பட்டவனை ஏற்ற வந்த கப்பலில் கூட மக்களை ஏற்ற அனுமதிக்காத சிறைப்படுத்தல் காரணமேயில்லை😎! நல்லா நடத்துங்க விசுகர்!

வார்த்தைகள் இல்லையென்பதை விட நீங்கள் வழமையாகப் பதுங்கும் மூலை வந்து விட்டதென்று சொல்லி விடை பெறுங்கள்!

நேர்மையும் செயலும் உண்டு. எனவே பதுங்கி வாழ வேண்டி வருவதில்லை. பொதுவேலை என்பதால் எல்லோரும் கூடி தேர் இழுத்தல் தேவை என்பதால்.....?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆனால் கருணா, பிள்ளையான் போன்ற கேடுகெட்ட போக்கிலிகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமை என்று கதைத்து அரசியல் செய்யுமளவு வெற்றிடத்தை உருவாக்கி கொடுத்ததில் தாத்தாவுக்கு பெரிய பங்குண்டு.

சிறுவர் போராளிகளாக இயக்கத்தில் இணைந்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் அரசியலை கற்று கொடுக்காது போக்கிலியாக வளர்ததது யார் குற்றம்?  அரசியலை கற்று கொடுத்திருந்தால் அவர்கள் சம்பந்தரை விட சிறந்த அரசியலை செய்திருக்கலாம். 

  • Downvote 3
Posted

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம்.

வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? 

மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா?

தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்?

முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். 

ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர்.

இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர்.

அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள்.

அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும்.

டொட்.

  • Like 6
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் போராட்டம் 2009 இன் பின்னர் புலம்பெயர் தமிழ்ப் போராளிகளிடமும் செந்தமிழன் அண்ணாவிடமும் சம்பந்தபட்டவர்களால் கையளிக்கப்பட்டுவிட்டது. மாறாக ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் சத்தியம் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுக்கப்படவில்லை. 

சும்மா சம்பந்தர், சுமந்திரன், கருணாநிதி போன்றோருக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்காமல் புலம்பெயர் போராளிகள் புலத்தில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் சம்பந்தன் வகையறா இலங்கை பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ் மேற்கு, இந்தியா அல்லது ஏதவது ஒருநாட்டின் உதவியுடன் ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம் என்று தாமும் நம்பி மக்களையும் நம்பவைக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்கமுடியும்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம்.

வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? 

மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா?

தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்?

முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். 

ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர்.

இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர்.

அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள்.

அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும்.

டொட்.

உங்கள் கருத்துடன் முற்றாக உடன்பாடில்லை, எனவே அந்த "டொட்" தாண்டி இதை எழுத அனுமதியுங்கள்:

1. மேலே கள உறவான   @நியாயம் தான் சம்பந்தன் பற்றிய துல்லியமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்: "அவர் பாராட்டப் பட வேண்டியவரும் அல்ல, அதே நேரம் இங்கே பலரும் செய்வது போல தூசிக்கப் பட வேண்டியவருமல்ல". ஆனால், விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவரும் அல்ல (ஆனால், புலிகளை விமர்சிப்பது புலிக்காய்ச்சலால் மட்டும் தான் என்பது வேறு விடயம்😎!).

2. ஒவ்வொருவரும் தன் நிலைக்கேற்ப செயல் பட்ட காலத்தில், சம்பந்தன் தன்னால் செய்யக் கூடியதைச் செய்தார். இதற்குப் பயன் இல்லை என்பதால் யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப் பயன் இல்லாத செயல் செய்தார்கள் என்று ஒரு தரப்பைத் திட்டுவதானால் புலிகளையும் திட்ட வேண்டிய நிலை வரும். இதை @island சுட்டிக் காட்டியதில் அர்த்தம் இருக்கிறது. திரிக்குத் தொடர்பும் இருக்கிறது.

3. ஆனால், "பயனற்ற செயல்கள் செய்தார், செயலே செய்யாமல் இருந்தார்" என்று சம்பந்தரை வைதோரை விட , "புலிகளை மானசீகமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்" என்று  கருதியோர் தான் அவர் மரணத்தை இங்கே கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு, புலிகளை இழுக்காமல் எப்படி பதில் சொல்வது என நீங்கள் ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா? என்னிடம் அப்படியெதுவும் இல்லை.

4. இந்த சம்பந்தன் மீதான வசவையெல்லாம் "எதிர்கால தமிழ் தலைவர்களுக்கு பாடம் கற்பிக்க செய்கிறோம்" என்று நேராகவே ஒருவர் எழுதியிருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்? "2009 இற்கு முன்னர் இருந்த அதே நிலைப்பாட்டோடு, புலிகளின் பாரம்பரியத்தை தலையில் சுமக்காத தலைமையாக இருந்தால், செத்தாலும் திட்டுவோம், உயிரோடிருக்கும் போதும் செருப்பால் அடிப்போம்" என்று என்று தான் எனக்கு விளங்குகிறது.

இந்த அணுகுமுறையின் விளைவு என்னவென்று நினைக்கிறீர்கள்?

தாயகத்தில், அடுத்த நிலையில் ஒரு தமிழ் அரசியல் தலைமையும் இளையோரிடமிருந்து இப்போது இல்லை. இனியும் அவர்கள் வரப் போவதில்லை. இப்படி வெளிநாட்டில் சொகுசாக இருந்த படி தாயக அரசியல் வாதிகளுக்கு செருப்புக் காட்டும் "மண்ணு லாறி" கூட்டங்கள் இருக்கும் வரை, தாயக தமிழர்களுக்கு அரசியல் தலைமையும் புதிதாக வராது, அரசியல் ரீதியாக முன்னேற்றமும் வராது.

இத்தகைய ஒரு பேரிடர் நிலை வராதிருக்க, பேசித்தான் ஆக வேண்டும். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@நிழலி

சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில்  முடிவெடுக்கும் பொறுப்பு வாய்ந்த  தலைவராக உருவேடுத்தது 2009 இன் பின்னரே.

1977 ல் அவர்  முதல் முறையாக பாராளுமன்றம்  தெரிவு செய்யப்பட்டதில் இருந்து 1983 வரையான குறுகிய காலப்பகுதியில் அவர் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே.

 1983 ல் ஆயுத போராளிகள் போராட்டத்தை முழுமையாக கையில் எடுத்த பின்  2004 வரை  அவர் மற்றைய அரசியல்வாதிகளைப் போல செல்லா காசாகவே இருந்தார். போரட்டதை முழுமையாக வலுக்கட்டாயமாக (byforce)  பொறுபெடுத்தவர்களுக்கே போராட்ட தோல்வியில் அதிக  பொறுப்பு உண்டு. 

2004 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் நிபந்தனையுடன் புலிகள் அவரை அங்கீகரித்திருந்தாலும், சம்பந்தர்  புலிகளின் கருத்துகளை சர்வதேசத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு  பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். தனது சொந்த கருத்துக்களை பொதுவெளியில் பேசும் உரிமை அற்ற ஒருவராகவே விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தார்.   திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே இதை தெரிவித்திருந்தார். புலிகள் மட்டும்  தான் இங்கு  அரசியல் செய்கிறார்கள் . நாம் சொல்வதை செய்வதை மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்ய முடியும்.  அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியாது என்று திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததை  இங்கு சுட்டிக் காட்ட விளைகிறேன். 

அவர் முழுமையான முடிவெடுக்கும் தலைவராக வந்த 2009 இன் பின்னரான காலப்பகுதியில் அவரால் அரசியல் தீர்வை கொண்டு வர முடியவில்லை. அவரின் குறுகிய கால  அரசியல் தலைமை  வெற்றிகரமாக செயற்படவில்லை என்பது ஏற்று கொள்ள தக்கதே.  அதற்கான அரசியல் சூழ்நிலையும் அவரது குறுகிய காலத்தில் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

ஆனால், 2015 ம் ஆண்டுக்கு முன்பு மகிந்த ஆட்சியில் தமிழர் பகுதியில்  படுமோசமான இராணுவ ஆட்சியே நேரடியாக நடை பெற்றது. மாவீரர் தினமோ வேறு தமிழர்  சார்ந்த எந்த உரிமை அரசியல் நிகழ்வுகளோ நடத்த முடியாத நிலை இருந்தது. மகிந்தவும் கோத்தாவும் நினைத்தபடி மட்டுமே ஆட்சி நடை பெற்றது.  2016 ல் நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் அவரது முடிவு தமிழரில் உரிமை அரசியலை மேற்கொள்ளுவதற்கான ஒரு ஜனநாயக  இடைவெளியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.  இன்று அவரை திட்டித் தீர்க்கும்  புலம் பெயர் அரசியலாளர்கள் கூட தாயகத்துக்கு விசிற் அடித்து தமது குடும்ப உறுபகினர்களுடன் மகிழ்வாக இருக்க  சந்தர்ப்பம் 2016 ல் அவரது அரசியல் முடிவினால் உருவான நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏற்பட்டது. 2015 ன் முன்பு. தாயகத்திற்கு செல்ல தொடை நடுங்கிக் கொண்டிருந்து,  2016 ன் பின்னர் இலங்கை சென்ற பல புலம் பெயர் வீராதி வீரர்கள் பலரை நான் அறிவேன்.   

மற்றப்படி ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு உள்ள வியாதியான சாகும்வரை பதவியில் இருத்தல் என்பது அவரையும் தொற்றிக் கொண்டது என்பதும் மறுக்கமுடியாததே. சம்பந்தரின் பல தவறுகள் விமர்சனத்துக்கு உரியவையே என்பதை ஏற்றுக் கொளுகிறேன். ஆனால் முழு பழியையும் அவர் மேல் போட்டு திட்டி தீர்ப்பது இழிவானவர்களின் செயலே. 

நிழலி, தாங்கள் தளத்தின் உரிமையாளர்.  எமக்கு இங்கு  எழுத இடம் தந்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.  உங்களுடன் எதிர்வாதம் புரிந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 

Edited by island
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, island said:

15 வருடங்கள் என்பதும் அது தமிழர்களின் முக்கிய காலகட்டம் என்பதும் அதில் அவர் பதவியில் ஒட்டி கொண்டு இருந்தார் என்பதும் அந்த காலப்பகுதியில் தனது இருப்பிடம் உட்பட தனது சுயலாபத்திற்காக தமிழர்களின் பாரிய இழப்பு மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்து பேசாதிருந்தது மட்டும் அன்றி அந்த இடத்தை வேறு யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருந்தார் என்பதுமே இங்கே கண்டனத்திற்கு ஆளாகின்றன. இதற்கும் புலிகளுக்கும் புலிகளின் காலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எல்லா இடத்திலும் நீங்கள் கொலை ஆயுதம் என்று வாந்தி எடுப்பதை நிறுத்தினால் பல இடங்களில் விவாதம் மற்றும் தெளிவுகள் சரியாக நடக்க வழி வகுக்கும். டொட்.

  • Thanks 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாலி said:

சும்மா சம்பந்தர், சுமந்திரன், கருணாநிதி போன்றோருக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்காமல் புலம்பெயர் போராளிகள் புலத்தில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் சம்பந்தன் வகையறா இலங்கை பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ் மேற்கு, இந்தியா அல்லது ஏதவது ஒருநாட்டின் உதவியுடன் ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம் என்று தாமும் நம்பி மக்களையும் நம்பவைக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்கமுடியும்!

மிக நியாயமான வேண்டுகோள் அறிவுரை. ஆனால் மேல்நாட்டு சுகபோகம் அவர்களை இலங்கை களத்தில் இறங்கி போராட்டங்களை நடத்த விடாது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.