Jump to content

சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
02 JUL, 2024 | 12:46 PM
image
 

யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

VideoCapture_20240702-110409.jpg

VideoCapture_20240702-110514.jpg

பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம்,  சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

VideoCapture_20240702-110503.jpg

VideoCapture_20240702-110524.jpg

VideoCapture_20240702-110521.jpg

VideoCapture_20240702-110416.jpg

https://www.virakesari.lk/article/187469

போராட்டம் செய்யவேண்டியவற்றுக்கு செய்யாதேங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாடு பட்டாவது வடகிழக்கு தமிழருக்குள் ஒன்றாக இருக்கவிடாமல் கிருத்துவம் இந்து பிரிவுகளை உருவாக்கி எதிர் காலத்தில் தமிழர் என்ற இனமே இல்லாமல் பண்ணுவதுதான் இதற்க்கு அம்பு மறவன் புலவு மூலம் டெல்லி .

இப்படியான மண்டை கலண்ட போராட்ட செய்திகளை உள்ளூர் ஊடகங்கள் பிரசுரிப்பதை தவிர்ப்பது தமிழ் மக்களுக்கு நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நச்சுப்பாம்புகள் பல்லுப்பிடுங்கப்படவேண்டும்!

Link to comment
Share on other sites

மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல. 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறாக தமிழரிடையே மத பிரிவினைகளை மறவன்புலவு தேரடியாக செய்ய வேறு சிலர்  தந்திரமாக மறைமுகமாக நச்சு விதைகளை மக்களின் மத்தியில் விதைக்கின்றனர்.  தமிழ் சிவில் சமூகம் என்று கூறுமர அமைப்புகள் இதனை கண்டும் காணாமல் விடும் நிலையே உள்ளது.  வழமை போல் தலைக்கு மேல் வெள்ளம் போன பின்பே குய்யோ முறையோ என்று ஓலமிடுவார்கள். உலகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இனமாக தமிழரை மாற்றும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் போல் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு இத்தனை அநியாயங்களையும் செய்த பெளத்தர்களுக்கோ    அல்லது முஸ்லிம்களுக்கோ   எதிர்ப்பெதையும் காட்டாமல் தங்களுடன் எப்போதும் கூட நிற்கும் கிறீஸ்தவர்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதன் காரணம் என்ன? 

😁

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரகளது கூச்சல்களை மக்கள் காதில் வாங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை.மாறாக மக்களின் இப்போதய மனநலையும்
நோக்கமும் வேறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல. 

மேற்குலக அரசியலும் மதம் சம்பந்தப்பட்டதே. ஆனால் அது வெளியே தெரிவதில்லை.காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஆனால் சீனா,ரஷ்யா போன்ற நாடுகளில் மதம் அரசியலுக்குள் இல்லை. மத சார்பான போராட்டங்களும் அறவே இல்லை.
எனவே மேற்குலக  பரிவட்ட அரசியலை தவிர்த்து ரஷ்ய/சீன அரசியல் கொள்கைகளை கடைப்பிடித்தால் மத அரசியல்,கோவில் குளங்களிலிருந்து விடுபடலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக அரசியலும் மதம் சம்பந்தப்பட்டதே. ஆனால் அது வெளியே தெரிவதில்லை.காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஆனால் சீனா,ரஷ்யா போன்ற நாடுகளில் மதம் அரசியலுக்குள் இல்லை. மத சார்பான போராட்டங்களும் அறவே இல்லை.
எனவே மேற்குலக  பரிவட்ட அரசியலை தவிர்த்து ரஷ்ய/சீன அரசியல் கொள்கைகளை கடைப்பிடித்தால் மத அரசியல்,கோவில் குளங்களிலிருந்து விடுபடலாம்.

 

நீங்கள் சொல்வது சரிதான் சாமியார்,  

1) போத்துக்கே, பறங்கிபடையின் எச்ச சொச்சங்களே"

2) தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர் இல்லை,.

3) பறங்கியனே,...

இதுவெல்லாம் எதைக் கூற வருகிறது? 

ரெல்மீ ரெல்மீ,.....

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் சொல்வது சரிதான் சாமியார்,  

1) போத்துக்கே, பறங்கிபடையின் எச்ச சொச்சங்களே"

2) தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர் இல்லை,.

3) பறங்கியனே,...

இதுவெல்லாம் எதைக் கூற வருகிறது? 

ரெல்மீ ரெல்மீ,.....

🤣

நீங்களும் மறவன் புலவு போல் விசர் ஆடுகிரியல்  இப்போ உங்களுக்கு தேவை அற்ற சண்டை வேணும் என்றால்  இனி எங்களால் முடியாது எக்கேடு கெட்டால் என்ன என்று சொல்லி விட்டு அமைதியாகி விடுவதுதான் நல்லது .

  • Haha 1
Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

மேற்குலக அரசியலும் மதம் சம்பந்தப்பட்டதே. ஆனால் அது வெளியே தெரிவதில்லை.காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

அமெரிக்கா தவிர்ந்து எந்தெந்த நாடுகள் மதச் சார்பானவை என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம். பிரான்சில் அரசியலில் அல்லது பாடசாலை உட்பட எந்தவொரு பொது வெளியிலும் மதம் தலையிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் மதத்தை நம்புவதில்லை.

11 hours ago, குமாரசாமி said:

ஆனால் சீனா,ரஷ்யா போன்ற நாடுகளில் மதம் அரசியலுக்குள் இல்லை. மத சார்பான போராட்டங்களும் அறவே இல்லை.

சீனா சரி. ரஷ்யா பற்றி உங்களுக்குத் தெரியவில்லை போலுள்ளது. புதினே  ரஷ்யாவைக் கடவுளே ஆட்சி செய்வதாகக் கூறியுள்ளார். 

 

11 hours ago, குமாரசாமி said:

ரஷ்ய/சீன அரசியல் கொள்கைகளை கடைப்பிடித்தால் மத அரசியல்,கோவில் குளங்களிலிருந்து விடுபடலாம்.

இதனுடன் வடகொரியாவையும் சேர்த்திருக்கலாம். எதிர்க்கட்சி இல்லாத அரசியல் எப்படி இலங்கைக்குச் சாத்தியமாகும் என்பதை விளக்குங்கள்.

இதைவிட நான் சச்சியின் ஆதரவாளர் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

கோவில் குளங்களிலிருந்து விடுபடலாம்.

தமிழர்களா.   ??  நடக்க வாய்ப்புகள் இல்லை   சாமியார்        🤣 தமிழர்கள்   எங்கே போனாலும்   கோவிலை கட்டியெழுப்பி  ஐயரையும். ஊரிலிருந்து   ஸ்பென்சாரில். அழைத்து விடுவார்கள்  ஜேர்மனியில் பார்க்கவில்லையா.  ???   ஒரு 50. கோவில்கள் மொத்தமாக இருக்குமா    ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

அமெரிக்கா தவிர்ந்து எந்தெந்த நாடுகள் மதச் சார்பானவை என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம். பிரான்சில் அரசியலில் அல்லது பாடசாலை உட்பட எந்தவொரு பொது வெளியிலும் மதம் தலையிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் மதத்தை நம்புவதில்லை.

எந்த நாட்டில் மதம் சம்பந்தமான அரச விடுமுறைகள் இருக்கின்றனவோ அந்த நாடுகள் மதம் சார்பான நாடுகள் அல்லவா?

Link to comment
Share on other sites

பிரான்சில் 7500  private பாடசாலைகள் உள்ளன.அவற்றில் 85 வீதமானவை கத்தோலிக்க பாடசாலைகள். 
கனடாவில் கத்தோலிக்க பாடசாலை வட்டாரம் உண்டு. அவற்றின் கீழ் நிறைய கத்தோலிக்க பாடசாலைகள் இயங்குகின்றன.

  • Like 1
Link to comment
Share on other sites

39 minutes ago, nunavilan said:

பிரான்சில் 7500  private பாடசாலைகள் உள்ளன.அவற்றில் 85 வீதமானவை கத்தோலிக்க பாடசாலைகள். 
கனடாவில் கத்தோலிக்க பாடசாலை வட்டாரம் உண்டு. அவற்றின் கீழ் நிறைய கத்தோலிக்க பாடசாலைகள் இயங்குகின்றன.

மதச்சார்பற்ற நாட்டில் கத்தோலிக்க பாடசாலை இருக்க கூடாதா ? எனது மகளும் கத்தோலிக்க தனியார் பாடசாலையில்தான் படிக்கிறாள்.

எந்த வகுப்பிலும் கத்தோலிக்க பாடமோ மதம் சம்பந்தமான சின்னங்களோ கிடையாது. மதம் பற்றிப் பேசுவதும் இங்கு தடை. கத்தோலிக்க பாடசாலையாக இருப்பதால் சிலவற்றில் பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் பாடசாலைக்குத் தொடர்பில்லாத வகையில் அருகிலிருக்கும் தேவாலையத்திலோ அல்லது தனிப்பட்ட கட்டடத்திலோ சமய வகுப்பு உண்டு. இதில் விரும்பியவர்கள் மட்டும் சேரலாம். இந்தச் சமய வகுப்பு பற்றிக் கூட பாடசாலை மூலம் அறிவிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எந்த நாட்டில் மதம் சம்பந்தமான அரச விடுமுறைகள் இருக்கின்றனவோ அந்த நாடுகள் மதம் சார்பான நாடுகள் அல்லவா?

கிறிஸ்மசுக்கு இலங்கையிலும் லீவு, அமெரிக்காவிலும் லீவு, ஜேர்மனியிலும் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் அதிக இந்தியர்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் தீபாவளிக்கும் பாடசாலைகள் விடுமுறை இருக்கிறது.  இது எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமென்ற முற்போக்கின் விளைவேயன்றி, மதத்தைத் தூக்கித் தலையில் வைக்கும் அரசின் செயல்பாடல்ல.

ரஷ்யா மதச்சார்பில்லாத நாடென்று இன்று நீங்கள் சொல்லித் தான் கேள்விப் படுகிறேன். புரினுக்கு முட்டுக் கொடுக்கும் Patriarch Kirill எந்த மதத்தின் தலைவர்?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

New York City will add the festival of Diwali to the list of public school holidays in recognition of the growth of the city’s South Asian and Indo-Caribbean communities, Mayor Eric Adams announced Monday.

Diwali, known as the festival of lights, happens October or November, depending on the lunar calendar.

 

However, this year it falls on Sunday, Nov. 12 — meaning the 2023-24 school calendar will not be affected by the change. City officials say more that 200,000 New York City residents celebrate Diwali, which is observed by Hindus, Sikhs, Jains and some Buddhists.

 

“This is a city that’s continuously changing, continuously welcoming communities from all over the world,” Adams said in announcing that Diwali will join celebrations including Rosh Hashana and Lunar New Year as a day off for students. “Our school calendar must reflect the new reality on the ground.”

The new holiday will become official if Gov. Kathy Hochul, also a Democrat, signs a bill passed by the Legislature this month to make Diwali a public school holiday in New York City. 

https://www.nbcnews.com/news/asian-america/nyc-makes-diwali-official-school-holiday-s-catch-year-rcna91383

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறவன் புலவுக்கு மறை கழன்ற செயற்பாட்டைச் சிலர் கண்டித்தாலும்   பலர் மறைமுகமாக  வரவேற்கின்றனரோ? . 

☹️

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

அமெரிக்கா தவிர்ந்து எந்தெந்த நாடுகள் மதச் சார்பானவை என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம். பிரான்சில் அரசியலில் அல்லது பாடசாலை உட்பட எந்தவொரு பொது வெளியிலும் மதம் தலையிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் மதத்தை நம்புவதில்லை.

22 hours ago, குமாரசாமி said:

மேற்குலக அரசியலும் மதம் சம்பந்தப்பட்டதே. ஆனால் அது வெளியே தெரிவதில்லை.காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.

.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

சீனா சரி. ரஷ்யா பற்றி உங்களுக்குத் தெரியவில்லை போலுள்ளது. புதினே  ரஷ்யாவைக் கடவுளே ஆட்சி செய்வதாகக் கூறியுள்ளார். 

ரஷ்யாவில் மதம் தனிப்பட்ட விடயம்.  வீதிகளில் மத போராட்டங்களோ  அல்லது மத பிரசாரங்களோ எல்லாம் தடைசெய்யப்பட்டது..சோவியத்யூனியன் காலத்தில் மத மக்குகளுக்கு இடமே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

அமெரிக்கா தவிர்ந்து எந்தெந்த நாடுகள் மதச் சார்பானவை என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

ஈழதமிழ் இந்துக்கள்  செய்கின்ற அட்டகாசத்தை பார்த்தால்  மேற்குலகநாடுகள் இந்து மத சார்பானவையோ என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வரத்தான் செய்யும்.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

பிரான்சில் 7500  private பாடசாலைகள் உள்ளன.அவற்றில் 85 வீதமானவை கத்தோலிக்க பாடசாலைகள். 
கனடாவில் கத்தோலிக்க பாடசாலை வட்டாரம் உண்டு. அவற்றின் கீழ் நிறைய கத்தோலிக்க பாடசாலைகள் இயங்குகின்றன.

ஜேர்மனியிலும் மதம் சம்பந்தப்பட்ட சாதாரண வைத்தியசாலைகளும் உயர்தர வைத்திய சாலைகளும்,பாலர் பள்ளிகளும் உயர்தர பள்ளிகளும் உள்ளன. எல்லாம் சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் ஏதாவது பிரச்சனை வரும்போது சட்டம் எனும் போர்வையில் மத நோக்கக்கள்  பூசிய மாதிரியும் தெரியும் பூசாத மாதிரியும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, Justin said:

கிறிஸ்மசுக்கு இலங்கையிலும் லீவு, அமெரிக்காவிலும் லீவு, ஜேர்மனியிலும் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் அதிக இந்தியர்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் தீபாவளிக்கும் பாடசாலைகள் விடுமுறை இருக்கிறது.  இது எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமென்ற முற்போக்கின் விளைவேயன்றி, மதத்தைத் தூக்கித் தலையில் வைக்கும் அரசின் செயல்பாடல்ல.

நான் என் வெற்றிக்காக விவாதிக்க வருபவனல்ல.

ஜேர்மனியில் மதம் சார்ந்த கட்சிகளுக்கே முதலிடம்.அவர்கள் தான் அதிகமாக ஜேர்மனியை ஆட்சி செய்திருக்கின்றார்கள்.

முதலாவது கட்சி CDU Christian Democratic Union of Germany
இரண்டாவது கூட்டு கட்சி CSU  Christian Social Union in Bavaria
இவர்களை மீறி ஜேர்மனி இயங்காது.

வெளியில் தெரியா விட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் பக்கா மதவாதிகள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியாயம், மேலே உள்ள செய்திகள் வீரகேசரி, உதயன் மற்றும் தினக்குரல் செய்தித் தளங்களிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்வின் செய்தியை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை.  செய்தியின் பிரகாரம் இதற்குப் பொறுப்பான ஆறுதிருமுருகனும் அவர் சார்ந்த சிவபூமியுமே இங்கு கண்டனத்துக்கு உள்ளாகியதே தவிர சிறுவர் விடுதியின் அவசியம் பற்றியதல்ல. சிவபூமி பற்றிய விமர்சனங்களில் எதுவித மாற்றமுமில்லை. அது தவிர உங்கள் இரு கருத்துக்களிலும், நடைபெற்ற சம்பவத்தை - அது சட்டப்படி குற்றம் என்று தீர்க்கப்படாவிட்டாலும் கூட, இம்மியளவும் கண்டிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள். நன்றி.
    • இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை  யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.  
    • புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!
    • தமிழ்வின் செய்தி தளத்தில் இந்த செய்தி உள்ளது. ஆனால், இது துர்க்காபுரத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதியாக கூறப்படவில்லை. செய்தியை இணைத்தவர்கள் முடியுமானால் செய்தியின் உண்மை தன்மையை தெளிவுபடுத்தவும்.  இங்கு பொதுவான ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.  இலங்கையில் க.பொ.த சாதாரணம் கற்றுவிட்டு க.பொ.த உயர்தரம் கற்கச்செல்லும் மாணவர்கட்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன.  குறிப்பாக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவிகள் உயர்தரத்திற்கு இடம்/பாடசாலை மாறவேண்டி உள்ளது.  வீட்டு சூழ்நிலை இடம்கொடுக்காத நிலையில் (தங்கும் இடம் வாடகை, உணவு செலவு, ரியூசன் செலவு: ஒரு பாடம் கிட்டத்தட்ட மாதம் 1,250 ரூபா கட்டணம், போக்குவரத்து செலவு) இலவச விடுதிகளில் விலை குறைவான இடங்களில் சென்று தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.