Jump to content

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இருவரும் பேசி இணக்கம் கண்ட ஏற்பாடுகளின்படி,

* மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

* சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு தயாரான நிலையில் உள்ளது. அந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ள சில திருத்தங்களுடன் அதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண சபைகளில் இளைஞர், யுவதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிப்படுத்தல், எம்.பிக்களும் அப்பதவியில் இருந்து கொண்டே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வகை செய்தல் ஆகிய திருத்தங்கள் இந்தச் சட்டமூலத்துக்குச் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின்போது சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அந்த மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கலாம் என சுமந்திரன் எம்.பி. கூறியமையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்.

தாம் சமர்ப்பித்துள்ள மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தை வரும் 22, 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் எடுத்து விவாதிப்பதற்கு அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சிப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு தாம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளார் என்றும், அது இன்று நாடாளுமன்ற விவகாரங்களை ஆராயும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கு அரசுத் தரப்பில் ஆதரவு கிட்டினால் விடயத்தை அந்தத் திகதியில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதற்கான வழிகாட்டுதல்களை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அரசு தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவுக்கும் தாம் வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

அதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் சுமந்திரனின் தனிநபர் சட்ட மூலம் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

* 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி அதிகாரப் பகிர்வை மாகாண சபைகள் உடனடியாக பிரயோகிப்பதற்குத் தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவுக்கான கட்டமைப்பு தயாராக இருப்பதாகவும், அது உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின்போது உறுதி கூறினார். தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட்டு காணிகள் தொடர்பான தேசிய கொள்கைகள் வகுக்கப்பட்டால், காணிகள் நேரடியாக மாகாண நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

* உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவும் உடனடியாக நிறுவப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

* அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட பல அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் மீளப் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாகாணங்களுக்கு மீளப் பகிரும் ஏற்பாடுகள் எந்தத் தாமதமுமின்றி உடனடியாகவே மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

* 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எல்லாத் தரப்புகளுடனும் பேசி, இணக்கம் கண்டு, அதைச் சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

https://thinakkural.lk/article/307273

Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ. 

உண்மை.. இதுதான் இப்போதைக்கு இருக்கு சாத்தியப்படக்கூடிய தீர்வு.. இது மட்டும் நிகழ்ந்தால் தமிழைனத்துக்கு கிடைக்ககூடிய மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.. தமிழ் நாடு அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஆவது எமது, நாம் என்ற உரிமையுடன் வாழலாம்.. ஆனால் தேர்தல் முடிய காற்றில் பறக்கவிட்டால்..?

ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.. இதில் இருந்து மீள தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

 தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..

அது ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

  • Like 2
  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களின் முன் சஜித் யாழ் வந்து, பதின்மூன்றை, காணி போலீஸ் அதிகாரமுள்ள, சட்டமாக்குவேன் என்று சொன்னார். கொழும்பில் அவர் வீட்டிற்கு கல் எறியாதது ஒன்று தான் குறை. ஜேவிபியினர் அவர் வீட்டு வாசலிலேயே நின்று தொண்டை நரம்புகள் தெறிக்க, வழமை போலவே, சஜித்துக்கு எதிராகப் போராடினார்கள். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இது போரில் இறந்த இராணுவத்திற்கு சஜித் செய்யும் துரோகம் என்றார். 

சஜித் ஆளையே இப்ப காணவில்லை.

ரணில் 'காணி போலீஸ் 2.0' உடன் இப்ப வந்திருக்கின்றார். பீல்ட் மார்ஷல் நாளைக்கு பீல்ட்டில் பிசியாக நிற்பார். ஜேவிபியினருக்கு எல்லா நாளும் ஒரே நாளே, என்னமா பேசுவார்கள்........... நமக்கும் எல்லா நாளும் ஒரே நாளே, ஒரு மரமும் வெட்டாத தச்சன் போல. 

இந்தக் கலவரங்களிற்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் ஒரு கண்டன அறிக்கையை நாங்கள் விட்டிருந்தோம். 'சமஷ்டி எல்லாம் ஏத்துக்க முடியாது, தனிநாடு தான் எங்களுக்கான ஒரே தீர்வு ............', சுருக்கமாக அந்த அறிக்கையில் இருந்தது இது தான்............   

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂

தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

ஆமா....இதற்கு உதவியாக யாழில் பிரச்சாரப் பீரங்கிகள்.....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

ஆமா....இதற்கு உதவியாக யாழில் பிரச்சாரப் பீரங்கிகள்.....

வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. 

மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, விசுகு said:

வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. 

மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....

நானும் நடுக்கடலில் தத்தளிக்கிற ஆள்தான்...சும்மா இந்த சுமாவை நம்புகிற ஆளில்லை

Edited by alvayan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.

நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு  சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா, வாய்புளிக்குது என்று சுமந்திரனும், ரணிலும் கதைக்க, செய்தியாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂

தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣

செய்ய மாட்டேன் என்பதை அழகிய தமிழில்    தேர்தலுக்குப் பின்னர் என்று சொல்லியிருக்காங்கள்.   அவ்வளவு தான்     

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்

 

 

அதாவது தேர்தலில் ரணிலுக்கும் வாக்கு போடோணும், சுமந்திரனுக்கும் வாக்கு போடோணும் எண்டு சுருக்கமா சொல்ல வர்றீங்க?

சிறுவயசில் என்னோட வெறிகுட்டி மாமா ஒருத்தர்கூட கொழும்புக்கு அம்மா அப்பா அனுப்பி வைத்தார்கள் கையில நூறூரூபா காசும் தந்து, வவுனியா கடந்ததும் அந்தாள்  என்ர காசை வாங்கி என்னமோ செலவு பண்ணிப்போட்டு கொழும்பு வரேக்க தருவன் எண்டு சொன்னார் சிறுவனா இருந்தபடியா அந்த காசு...காசு எண்டு வடிவேலு ஸ்டைல்ல திரும்ப திரும்ப கேட்க இதைவிட கனக்க தருவன் கொழும்பு வந்ததும் ஜோசிப்பாய் மாமா எவ்வளவு நல்லவர் எண்டு ஆசைகாட்டி கொழும்பு வந்ததும் சொந்தகாரர்கிட்ட கொண்டுபோய் விட்டிட்டு அப்படியே ஓடிட்டான்.

அந்தநிலைதான் இதுவும்.

தமிழர் பகுதிக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால்  தீ குளிப்பேன் என்று ஒரு தேரர் சொன்னதும்  சிங்கள மக்களை திரட்டி மிக பெரும் போராட்டமே நடத்துவோம் என்று ஜேவிபி சொன்னதும்,காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தனிநாடு கொடுத்ததுக்கு சமம் என்று அப்பப்போ  மஹிந்த ஆட்களுட்பட பல சிங்கள கட்சிகளும் தலைவர்களும்  தேரர்களும் அறிக்கைவிடுவது ஊரறிஞ்ச விஷயம்.

ஒரு சில சிங்களவர்கள் என்னுடன் பேசும்போது போர் காலத்தில் நீங்கள் தனி தீர்வு கேட்டது நியாயம், இப்போதான் எந்த பிரச்சனையும் இல்லையே வடக்கிலிருந்து தெற்குவரை அனைத்து மக்களும் எங்கும்போய் எங்கும் வரலாம் அப்புறம் எதுக்கு தனியாக உங்கள் பகுதிக்கு மட்டும் தீர்வு என்று கேட்கிறார்கள். அப்படியிருக்கிறது அவர்கள் தற்போதைய மனநிலை.

தாமதிக்கப்பட்ட நீதி  மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதுபோல் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்த சிங்களத்துடன் இணைந்து மாஜஜால வார்த்தைகள் பேசி தமிழர் பிரச்சனைகளை இழுத்தடிப்பது காலப்போகில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எவனும் கேட்க வைத்திடும்.

காணி காவல்துறை அதிகாரம் கிடைத்தால் மகிழ்ச்சி , அதேநேரம் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு கொடுத்த ரணில் பதவியிலிருப்பாரா  சிங்கள தேசம் பதவியில் விட்டு வைக்குமா என்பதையும் பார்க்க சுமந்திரனும் ரணிலும் சேர்ந்து அரசியல் தீர்வு தருவார்களென்று நம்பும்   அனைவரும் ஆவலுடன் காத்துள்ளோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வந்தது, டும்.. டும் ...
பொங்கல் போய் வரியம் வந்தது,  டும் .. டும் ...
வரியம் போய் தீபாவளி வந்தது, டும் ,, டும் ...
தீபாவளி போய் கிரிஸ்மஸ்  வந்தது,  டும் .. டும் ...
கிரிஸ்மஸ் போய் நியூ இயர் வந்தது, டும் ,, டும் ..

இப்ப தேர்தல் வந்திருக்கு  டுமக்கு டும் டும் ..

நிறம் மாறாத பூக்கள் 
தேடியலைகின்றன காதுகளை ..

டுமக்கு டுமக்கு டும் டும் டும்மோவ் ....... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

வேறு வழி? 

4 hours ago, ரசோதரன் said:

சில வாரங்களின் முன் சஜித் யாழ் வந்து, பதின்மூன்றை, காணி போலீஸ் அதிகாரமுள்ள, சட்டமாக்குவேன் என்று சொன்னார். கொழும்பில் அவர் வீட்டிற்கு கல் எறியாதது ஒன்று தான் குறை. ஜேவிபியினர் அவர் வீட்டு வாசலிலேயே நின்று தொண்டை நரம்புகள் தெறிக்க, வழமை போலவே, சஜித்துக்கு எதிராகப் போராடினார்கள். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இது போரில் இறந்த இராணுவத்திற்கு சஜித் செய்யும் துரோகம் என்றார். 

சஜித் ஆளையே இப்ப காணவில்லை.

ரணில் 'காணி போலீஸ் 2.0' உடன் இப்ப வந்திருக்கின்றார். பீல்ட் மார்ஷல் நாளைக்கு பீல்ட்டில் பிசியாக நிற்பார். ஜேவிபியினருக்கு எல்லா நாளும் ஒரே நாளே, என்னமா பேசுவார்கள்........... நமக்கும் எல்லா நாளும் ஒரே நாளே, ஒரு மரமும் வெட்டாத தச்சன் போல. 

இந்தக் கலவரங்களிற்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் ஒரு கண்டன அறிக்கையை நாங்கள் விட்டிருந்தோம். 'சமஷ்டி எல்லாம் ஏத்துக்க முடியாது, தனிநாடு தான் எங்களுக்கான ஒரே தீர்வு ............', சுருக்கமாக அந்த அறிக்கையில் இருந்தது இது தான்............   

பீல்ட் மார்ஸலை US கூப்பிட்டிருக்குது போல கிடக்கு. அவர் சிலவேளை அடக்கி வாசிக்கலாம் . 

4 hours ago, விசுகு said:

வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. 

மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....

எப்படி? 

தமிழுக்கு வந்த அழுத்தத்திற்கு எதிராக ஆறுமுக நாவலர் போராடியது போலவா? 

😁

3 hours ago, Paanch said:

நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு  சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌

 

பகல் கனவு 😁

வெளிநாடுகளில் ஓய்வூதியம் பெறுவோர் இலங்கையில் காணி வாங்கும்போது, தற்போதும் குறிச்சி, வட்டாரம் பார்த்துத்தான் வாங்குகிறார்கள். 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
 

வென்ற பின் வழக்கம்போல் மொட்டைகளிடம் ஆசிர்வாதம் வழக்கம்போல் இனவாத பேச்சுக்கள் இந்த கேனை சுமத்திரன் வீராவேசமாக அறிக்கை விடுவார் அதை கேட்டு சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று.

யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள்  சுமத்திரன் கூட்டம் அதை அடி  முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் .

இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

வேறு வழி? 

ரணில் தற்பொழுதும். ஐனதிபதி தான்  ... பல வருடங்களாக ஐனதிபதியாக இருக்கிறார் ....எதுவும் செய்யவில்லை    இனி செய்கிறேன் ஐனதிபதி   பதவியை தாருங்கள்” எனக் கேட்க முடியாது     கேட்கவும் கூடாது   

மற்றவர்கள் கேட்க முடியும்,..அதாவது சஜித்  அனுகுமார.........போன்றோர் கேட்கலாம் ஆனால் எப்போதும் தமிழர்கள் தான் சிங்களவனுக்கு   வாக்கு போட வேண்டும்    சிங்களவர்கள்.  தமிழனுக்கு வாக்கு போட்டால் என்ன??  வெளிநாடுகளில் தமிழனுக்கு    வெள்ளைக்காரன் வாக்கு போட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக தெரிவு செய்கிறார்கள்  ......இலங்கையில் வாழும் மக்கள் ஏன். இதை பின்பற்றுவதில்லை  

மேலும் சுமத்திரன். ஏன் தனியாக சந்தித்து பூட்டிய அறைக்குள் கதைத்தவர்   எத்தனை கோடிக்கணக்கில் பணம் வேண்டினார்??   கட்சியை கூட்டி. அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை.  .   .. தமிழர்களின் கட்சியை உடைத்து விட்டு   ....இரண்டு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள்.   தமிழர்களின் வாக்கை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று தனியாக ரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள்   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

பீல்ட் மார்ஸலை US கூப்பிட்டிருக்குது போல கிடக்கு. அவர் சிலவேளை அடக்கி வாசிக்கலாம் . 

👍..........

செய்திகளில் இருந்தது.  அமெரிக்காவிற்கும் ரணில் தான் தேவையாக இருக்குது போல.......

ரணில் தமிழ் எழுத்தாளர்கள் போல........ எழுத்தாளரின் பக்கத்து வீட்டுக்காரருக்கே அடுத்தவர் ஒரு எழுத்தாளர், கொஞ்சம் பிரபலமானவர் என்றெல்லாம் தெரியாது.

ரணிலையும் உள்ளூரில் எவரும் மதிப்பது இல்லை........ஆனால் உலகத்தில் ரணிலை பலருக்கும் தெரிந்திருக்குது.......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று.

யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள்  சுமத்திரன் கூட்டம் அதை அடி  முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் .

இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .

15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁

சுமந்திரனது இடத்தில் தகுதியுள்ளவர்கள் யாரையேனும் அமர்த்தலாமே,.... அதை ஏன்  இன்னும் செய்ய வில்லை ? ......என்ன,....யார் இருக்கினம் என்று தேடுகிறீர்களா? ....

முதலில் கூரையேறிக் கோழியைப் பிடியுங்கள். பின்னர், வானம் ஏறி வைகுண்டம் போவதைப் பற்றி யோசிக்கலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁

சுமந்திரனது இடத்தில் தகுதியுள்ளவர்கள் யாரையேனும் அமர்த்தலாமே,.... அதை ஏன்  இன்னும் செய்ய வில்லை ? ......என்ன,....யார் இருக்கினம் என்று தேடுகிறீர்களா? ....

முதலில் கூரையேறிக் கோழியைப் பிடியுங்கள். பின்னர், வானம் ஏறி வைகுண்டம் போவதைப் பற்றி யோசிக்கலாம். 

 

மாற்று கனடாவில் இருக்கிறார்  அண்ணா  ..  அவரைப் போடுவ்து... நீங்கள்தான் ஒரு வழி சொல்லவேணும்..🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்

அதென்ன தேர்தலுக்கு பின்......?
இப்படியான அறிக்கைகளை விடுபவர்கள் இப்போதும் பதவிகளுடன் இருக்கின்றார்கள்.இப்போது செய்யவில்லை என்றால் இனியும் இவர்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.
இப்படியான வாக்குறுதிகள் எல்லாம் அன்று தொடக்கம் நடக்கும் வழமையான பேய்ப்பட்டம் கட்டும் அரசியல்தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள்   தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த  தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது  என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது.  தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.   ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி  எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும்.

இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட)  ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு  கேட்பது  ஒன்றே  ஜதார்தத பூர்வமானது.  எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில்  இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும்  அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை.  இப்போது இதை செய்ய தவறினால்,  முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட  மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான். 

 

 

Edited by island
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சத்துருக்கொண்டானில் சிங்களப் படைகள், ஊர்காவல்படைகளாற் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகள் உட்பட எம்தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து  அகமேந்தி வணங்குகின்றேன்.
    • 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது. முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த  மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/193214
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும். இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா? ‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’ நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார். தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார். “ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது ‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’ அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது. அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும். இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது. யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது. இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.   ‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’ படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் “வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார். மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjyx771ll8o
    • ஜோர்தான் மேற்கு கரை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.