Jump to content

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை ரணில் ஜனாதிபதியானால் தமிழரசுக்கட்சிக்கு சுமந்திரன் தலைவராகவும் அரசுடனும் சேர்ந்து இயங்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு

island

அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சு

பாலபத்ர ஓணாண்டி

லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிர

20 minutes ago, விசுகு said:

நடந்த அநியாயங்களுக்கு மீண்டும் மீண்டும் நீதி கேட்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும். 

முக்கியமாக நீதியும் வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டதால் தமிழர்கள் வட்டுக்கோட்டையிலேயே உறுதியாக நிற்கிறார்கள் என்று தெரியவரும்.

இது யாரை எம் பக்கம் சிந்திக்க வைக்கும் என்று கேட்டால் பதில் தெரியாது. ஆனால் எமது கையில் ஒரு பைல் மீண்டும் கனமாக இருக்கும். 

இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன்.

இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. 

பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம்.

ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.

 

Edited by நிழலி
ஒரு சொல் சேர்க்க...
  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன்.

இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. 

பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம்.

ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.

தாயக மக்கள் முட்டாளாக்க படுகிறார்கள் போன்ற கருத்துக்களோ கணிப்புகளோ எனக்கு இல்லை. அவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பை ஆதரிப்பதற்கு காரணம் அவர்களது தூர நோக்கு தான் 

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். போகவேண்டிய இடம் மிக மிக தூரம். பார்க்கலாம். நன்றி.

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

தாயக மக்கள் முட்டாளாக்க படுகிறார்கள் போன்ற கருத்துக்களோ கணிப்புகளோ எனக்கு இல்லை. அவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பை ஆதரிப்பதற்கு காரணம் அவர்களது தூர நோக்கு தான் 

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். போகவேண்டிய இடம் மிக மிக தூரம். பார்க்கலாம். நன்றி.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.

 

மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கும் செய்யும் துரோகம்..தமிழ்த்தேசியத்தை விட்டு மக்களை சலிப்படையச்செய்து ஒதுங்கப்பண்ண செய்யப்படும் செயல்ப்பாடுகள்தான் இவை... மக்களுக்கு செய்யும்  துரோகம் மட்டுமல்ல மக்களை சலிப்படையச்செய்யும் வேலை.. நான் எல்லாம் ஒருகாலத்தில் இவர்களுக்காக கட்டிப்புடிச்சு உருண்டு சண்டைபோட்ட ஆள்.. இவர்கள் பேய்க்காட்டுவதை பார்த்து பாத்து சலித்து வெறுத்து ஒதுங்கிய பலரும் நானும் ஓராளாகிறேன்.. 

தொழில்நுட்பத்துடன் நாங்கள் அப்டேற் ஆகாவிட்டால் எப்படி நாங்கள் கணணித்துறையில் நிலைக்க முடியாதோ அதே பழைய ரெக்னிக்குகளை பேசிக்கொண்டு இவர்களாலும் நிலைக்க முடியாது.. வேணுமானால் எழுபது எண்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டி பேசி பொழுதுபோக்க இவர்கள் செய்வது உதவும்.. ஆனால் 2கே கிட்ஸ் பெரும்பான்மையாகப்போகும் அடுத்த தலைமுறை அரசியலில் இது எடுபடப்போவதில்லை.. இவர்களை காலமே காலாவதியானவர்கள் என்று  புறங்கையால் தட்டி ஒதுக்கிவிடும்..

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்?

இதுவரையில் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்யதற்காக சர்வதேசம் எந்தவகையில் உதவிசெய்திருக்கிறது?

 

22 hours ago, நிழலி said:

2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி,  இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா?

 

22 hours ago, நிழலி said:

ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?

அவ்வாறு நடந்தாலும் தமிழர் கள் மேலதிகமாமாக என்ன நட்டம் வரப் போகிறது/

பரீட்சித்துப்பார்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?சிறிலங்காவில் தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் தனிச்சிங்களமக்களினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் ஒன்று திரண்டு ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறுகள் பல இருக்கின்றன.தமிழ்மக்கள் அதிக அளவு வாகக்களித்து தெரிவு செய்த சந்திரிகாவும் மைத்திரியும தமிழர்களுக்கு செய்த நன்மைகள் என்னவென்று பட்டியலிட முடியுமா?யார் வரக்கூடாது என்று மைத்திரிக்கு வாக்களித்தார்களோ அவரைப் பிரதமராக்கியவர் மைத்திரி.யார் வேண்டாமென்று சிங்களமக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சேக்களுடன் சேர்ந்து குறுக்கு வழியில் ஜனாதிபதியானவர் ரணில். தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்க ளவேட்பாளர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள்.இவர்களில் யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வரப்போகிறார். இவர்களை நம்புவதை விட ஒரு பரிசோதனை செய்வதில் என்ன கேடுவரப் போகிறது.ஆனால் இந்தப் பொது வேட்பாளர் விடயத்தில் கரிசனையாகவுள்ள அரசியல்கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்களால் 13 மேலே போக முடியாது தவறானவர்களால் ஒரு சரியான விடயம் முன்வைக்கப்படும் பொழுது அதனைச் சாதகமாகப் பயன்படுத்தாமல் விடுவது தமிழர்களுக்குத்தான் இழப்பாகும்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டியது காலத்தின் தேவை. பொருளாதாரப் பிரச்சினைகளில் தமிழரின் உரிமைப் பிரச்சினை கரைந்து போகக்கூடிய அபாயநிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர் தம் திரட்சியை மீளவும் காண்பிக்க வேண்டிய தேவை உள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:      
மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அப்பழுக்கற்ற தமிழ்த் தேசியவாதி. தமிழ்த்தேசிய ஆயுதப் போராட்டத் தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் மக்கள் பிரதிநிதியாக 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் புகுந்தவர்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இணைந்துள்ளமை சிறப்பான விடயம். அதே நேரம் வேட்பாளர் ஊடாக தமிழரசுக்கட்சியும் அந்தக் களத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே தாயகக் கோட்பாட்டின் அடிநாதமாக விளங்குகின்றதும், சமகாலத்தில் உச்சப்பட்ச சவால்கள் எதிர்நோக்கியுள்ளதுமான  கிழக்கு மண்ணிலிருந்து மீன்பாடும் தேன் நாடு, தென் தாய்மண் மட்டக்களப்பிலிருந்து ஒருவர் முழுத் தமிழ்மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்வு செய்யப்பட்டமை பொதுக் கட்டமைப்பின் நடுநிலைப் பார்வையை உயர்த்தி உள்ளது. தமிழ்த்தேசியத் தேரை முன்நோக்கி இழுத்து, தமிழ்த்தேசியத் திரட்சியை வெளிக்காட்டுவதற்கும், தேக்க நிலையை உடைத்துப் புதிய அத்தியாயம் படைக்கவும் முன்வருவோம்- என்றுள்ளது. (ச)
 

2வுது 3வது  தெpரிவைச் செய்யக்கூடாது என்று ஏன் இவர்களால் சொல்ல முடியவில்லை. மறைமுகமாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை வெற்றியடையச் செய்யும் முயற்சியா இது என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்து இவர்களின் கபடத்தனத்திற்கு நெற்றியடி கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 மே 14 ஆம் திகதியில் சிங்கள அரசுகளுடன் சேர்ந்து வாழ முடியாது, வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், எனவே சுதந்திர தமிழீழமே இறுதி தீர்வு என்று முழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானம். இன்னொரு விதத்தில் தமிழீழத்துக்காக இளைய சமூகத்தினரை ஆயுதம் போராட்டத்துக்கு வழி வகுத்த தீர்மானம். 
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதே வட்டுக்கோட்டை தொகுதியில் தியாகராஜாவிடம் 700 சொச்ச வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோற்ற பின் தன் செல்வாக்கையும் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கையும் இளைஞர்களிடையே பெருக்கி கொள்ள, முதுமையால் சுகவீனமுற்றிருந்த செல்வ நாயகம் அவர்களை தூண்டி 
கொண்டு வரப்பட்ட தீர்மானம்.

அதன் பின் நிகழ்ந்தது பல்லாயிரக்கணகான இளையவர்களின் தியாகங்களும், வீரமரணங்களும், பொதுமக்களினதும் உயிரிழப்புகளும், பொருளாதார சீரழிவும், தாயகம் ஆட்புலம் அற்று சிறுகிப் போனதும், தான்.

இந்த தீர்மானம் முழுதும் இந்திய செல்வாக்கினால் கொண்டு வரப்பட்டது என்று நம்பப்படும் தீர்மானம் (அன்றும் இன்றும் கக்கா போவதுக்கும், தும்முவதற்கும் கூட தமிழரசுக் கட்சி இந்தியாவின் அனுமதி இன்று எதுவும் செய்ததில்லை)

வடக்கு கிழக்கில் தமிழர்களை அணிதிரட்டி போராட்டத்துக்கு அழைத்த இந்த தீர்மானத்துக்கும், பொது வேட்பாளரை களம் இறக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?

அப்படியே ஒரு தொடர்பு இருப்பதாக நீங்கள் எண்ணினால், இன்னமும் தமிழ் கட்சிகள், மக்களிடம் முன் சென்று காத்திரமாக செயலாற்ற எந்த ஊக்கமும் இன்றி, மீண்டும் மீண்டும் இத்துப் போன, தோற்றுப் போன முழக்கங்களுடன் தான் முன் செல்கின்றனர் என்பது மீண்டு நிரூபணம் ஆகின்றது.

செப்ரம்பர் 24 ஆம் திகதிக்கு பின், எந்த பயனும், சிறு சலனமும்,ஒரு சிறு மாற்றம் தானும் ஏற்பட வாய்ப்பில்லாத ஒரு விடயத்துக்காக மக்களை திரளப்பண்ணி, அணி திரட்டி மீண்டும் மீண்டும் மக்களை முட்டாள்களாக்கி, அதில் குளிர் காயும், தம் இருப்பை தக்க வைக்க முயலும், ஈன அரசியலைத்தான் இந்த பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் செய்கின்றன.

சரி பொது வேட்பாளரை நிறுத்துவதில் பயன் இல்லை. எந்த சிங்கள வேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களித்தால் தமிழர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.தமிழ்ப் பொது வேட்பாளரால் எந்தப்பயனும் இல்லை என்று தெரிந்து கொண்ட உங்களுக்கு எந்தச சிங்கள வேட்பாளரைத் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, புலவர் said:

சரி பொது வேட்பாளரை நிறுத்துவதில் பயன் இல்லை. எந்த சிங்கள வேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களித்தால் தமிழர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.தமிழ்ப் பொது வேட்பாளரால் எந்தப்பயனும் இல்லை என்று தெரிந்து கொண்ட உங்களுக்கு எந்தச சிங்கள வேட்பாளரைத் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.

எந்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை விட ஜேவிபி இன் அனுரவுக்கு வாக்களிக்காமல் விட்டால் நல்லது என்பது என் நிலைப்பாடு.

ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்டு கொண்டிருக்கும் கடும் இனவாத கட்சி மட்டுமல்லாமல் சீனாவின் பக்கம் மீண்டும் இலங்கை யை சாய வைக்க கூடிய கட்சி.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழர்களின் வாழ்வும் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. அனைத்தும் இழந்து போயிருக்கும் எம் சமூகத்துக்கு சிறுக சிறுக பொருளாதார ரீதியாக முன்னேற கால அவகாசத்தை வழங்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதே நல்லது. இல்லாவிடின், மேலும் மேலும் புலம்பெயர்ந்து, தாயகம் மேலும் சிறுத்துப் போய்விடும்.

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

பொருளாதார ரீதியாக முன்னேற கால அவகாசத்தை வழங்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதே நல்லது. இல்லாவிடின், மேலும் மேலும் புலம்பெயர்ந்து, தாயகம் மேலும் சிறுத்துப் போய்விடும்.

 

ரணீலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.ஆனால் அவருக்கு ஆதவளிப்பவர்களில் பெரும்பாலானோர் கடும் இனவாதம் கொண்ட பெரமுனகட்சியின் அமைப்பாளர்கள்.அவர்களுக்கு நாமலை முன்னிறுத்துவது ஒவ்வாமை மட்டுமல்ல. ரணிலே தங்களை சிங்கள அரகலய போராட்டத்தில் இருந்து காப்பற்றக் கூடியவர் என்று நினைக்கிறார்கள. ரணிலோ 5 தடைவைகளுக்கு மேல் பிதமராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தை கையில் வைத்திருந்தும் தமிழர்களிற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. அவருக்குத் தெரியும் மற்றைய வேட்பாளர்களை விட தான் ஒரு அமைதியான முகத்தைக்காட்டி நடிப்பதை தமிழர்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். பூனையின் அமைதியான  சுபாவத்தைக்கண்டு விபரம் அறியாத எலிக்குஞ்சொன்று அதனோடு நட்புப் கொள்ள நினைத்த சோமசுந்தரப்புலவரின் கவிதை நாடகம்தான் நினவுக்கு வருகின்றது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கையும் கத்தரிக்காயும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - மலையக தமிழர், முஸ்லிம் ஆதரவு யாருக்கு?

தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் அரியநேத்திரன்
படக்குறிப்பு,தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து
  • 10 ஆகஸ்ட் 2024, 13:52 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில், மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜூம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

 

தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில், அவர்கள் மலையக தமிழ் சமூகத்தை கவனத்தில் கொள்ளாததை அடுத்தே, தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக மயில்வாகனம் திலகராஜ், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் தனித்து ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், கணிசமான வாக்குகளை பெற முடியவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டுள்ள தமிழ் வேட்பாளர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் கடந்த காலங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதித் தேர்தலின் தமிழ் பொது வேட்பாளராக பா.அரிநேத்திரன் அறிவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா.அரியநேத்திரன், 2004ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டி, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.

பா.அரியநேத்திரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுரேஷ் பிரேமசந்திரன்
படக்குறிப்பு,''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான நகர்வு" என்கிறார் சுரேஷ் பிரேமசந்திரன்

தேர்தல் ஆணையகம் வேட்பாளர் நியமனங்கள் செய்யப்பட்டதன் பிறகு அதற்கான சின்னத்தை ஒதுக்கும்.

"அதுவரை என்ன சின்னம் என்பது எங்களுக்கு தெரியாது" என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.

''தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வுகளை கொண்டு வருவதற்கான ஒரு நகர்வை ஏற்படுத்தும் முறையில் அந்த வெற்றியை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கருதுகின்றோம். தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒன்றை சர்வதேச வெளிக்கு கொண்டு செல்லும் அளவில் இது மிகப்பெரிய உதவிகளை செய்யும்." என அவர் குறிப்பிடுகின்றார்.

பா.அரியநேத்திரன் என்ன சொல்கின்றார்?

தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே வேட்பாளராக களமிறங்குகின்றேனே தவிர, ஜனாதிபதியாவதற்கு அல்ல என்று தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.

''எதிர் வருகின்ற 9வது ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கில் இருந்து தமிழ்த் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்கான ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியுள்ளனர். நான் வெறும் அடையாளம். அதாவது தமிழ்த் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேனே தவிர, ஸ்ரீலங்கா சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு அல்ல" என தெரிவித்தார்.

இனப் படுகொலை நிகழ்ந்ததிலிருந்து தமிழ் மக்கள் உரிமையற்ற இனமாக இருப்பதாக கூறிய அவர், தங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திற்கும், ஸ்ரீலங்காவிற்கும் வலியுறுத்துகின்ற ஒரு அடையாளத்திற்காக மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் என்ன?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில், பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது.

மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.திலகராஜ்

மறுபுறம், தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்பில், மலையக தமிழர்களை கருத்திற் கொள்ளாததாலேயே, ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.திலகராஜ்
படக்குறிப்பு,"மலையக மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்கிறார் எம்.திலகராஜ்

இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்ட அளவிற்கு, மலையக தமிழர் பிரச்னை பேசப்படவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்.

"தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷம், மலையக தமிழரை உள்ளடக்கவில்லை என்பது அந்த பொது வேட்பாளர் கருத்துகளில் இருந்தே வெளிப்பட்டது. தமிழ் பொது வேட்பாளர் என பெயரை வைத்துக்கொள்கின்றார்களே தவிர, மலையக மக்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை" என திலகராஜ் தெரிவித்தார்.

கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியே தான் போட்டியிடுவதாக கூறினார்.

தென் பகுதி தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் பலவும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், தென் பகுதியிலுள்ள தமிழ் கட்சிகள், தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதரவை வழங்கவில்லை.

மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை முடிவை அறிவிக்கவில்லை.

 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்
படக்குறிப்பு,"மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது" என கூறுகிறார் செந்தில் தொண்டமான்

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொருத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்த காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாவே, தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தான் பார்ப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர்உமாச்சந்திரா பிரகாஷ்
படக்குறிப்பு,"பொறுத்தமற்ற நகர்வு" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்

''தமிழர் தரப்பு அரசியலில் பேசும் தரப்பாக இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், 2009ம் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்தும். வடக்கு, கிழக்கு, மலையகத்தை மையப்படுத்தி, தமிழர்கள் ஒருமித்த திசையிலே பேரம் பேசும் சக்தியை இழந்திருக்கின்றார்கள் என்ற நிலை கவலைக்குரிய ஒரு விடயம்" என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்.

தமிழர்களின் இருப்பு இலங்கையில் மிக முக்கியமான ஒரு விடயம் என்ற வகையில் காலத்தில் பொருத்தமற்ற ஒரு அரசியல் நகர்வாக பொது வேட்பாளர் நகர்வை பார்ப்பதாக அவர் கூறுகிறார்.

"இது, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினுடைய இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழர் தரப்பு தற்போது மிக புத்திசாலித்தனமாக சிந்தித்து, அரசியலில் எந்த பக்கமாக இருந்தாலும், வெற்றி கிடைக்கும் பக்கம் பேரம் பேசும் சக்தியாக இருந்து தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உரிமையுடன் கூடிய இலக்கத்தை கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர் என்ன சொல்கின்றார்?

தமிழர்களின் பலத்தை காண்பிப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் களமிறங்குவது இந்த தருணத்தில் பொருத்தமற்றது என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார்.

 
மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல்
படக்குறிப்பு,மூத்த ஊடகவியலாளர் கே.எம். ரசூலும் உமாச்சந்திரா பிரகாஷின் கருத்தையே வலியுறுத்துகிறார்.

''இலங்கை தமிழர்கள் குறிப்பாக நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் விடயங்களில் தீர்க்கமான கட்டங்களில் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்த நிலையில், இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் வடக்கு, கிழக்கு, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு களமிறங்கியிருந்தாலும், அவர் ஜனாதிபதியாவதற்கு எந்தளவு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று கேட்டால், அதற்கு மிக தெளிவாக அவரால் ஜனாதிபதியாக முடியாது என திட்டவட்டமாக கூறிக்கொள்ள முடியும்" என்றார் ரசூல்.

தமிழ் மக்களின் தனித்துவத்தை அல்லது தமிழ் மக்களின் பலத்தை நிருபிப்பதற்கான தருணம் இதுவென எண்ணி அவர் களமிறங்கியிருந்தால், நிச்சயமாக இது அதற்கான தருணம் கிடையாது எனவும் அவர் கூறுகிறார்.

"காரணம், தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அது நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல்களாக இருக்கலாம். அந்த இடங்களில் தமிழர்களின் பலத்தை காட்ட வேண்டும். அதனூடாக உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வலுவை பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் அந்த பலத்தை காண்பிப்பது, அதற்கான தருணம் கிடையாது என நினைக்கின்றேன்" என மூத்த ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் வாக்கு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் அமைந்துள்ளது.

தேர்தல் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மாவட்டம் எனவும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னி மாவட்டம் எனவும் கருதப்பட்டு வாக்கு பதிவு இடம்பெறும்.

இந்த நிலையில், வட மாகாணத்தில் மாத்திரம் 8,99,268 வாக்குகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.

இந்த மூன்று மாவட்டங்களிலும் 13,21,043 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை தவிர, முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தென் பகுதியை பொருத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமையினால் தமிழர்கள் வாக்கு எண்ணிக்கையை சரியாக கணிப்பிட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள படை ஆக்கிரமிப்புக்குள் முழு தமிழர் தேசமும் உள்ள நிலையில்.. இது ஒரு தேவையில்லாத ஆணி புடுங்கல். 

தமிழர்கள் குடைக்கு ஆதரவளிக்கலாம். மகிந்த ரணில் சஜித்.. அனுர.. சரத் கும்பலை நம்பாமல்.. பொதுமைப்பாடான சிங்கள மக்களோடு இணைந்து... லிபரல் தன்மை கொண்ட சிங்கள முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இளையோர் வழியில்.. வாக்குப் போடலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம்

August 10, 2024

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்னும் பெயரில் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் 7 குடிசார் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை அறிவித்துள்ளனர். இது 1976க்குப் பின் கட்சி அரசியலில் மீளவும் கூட்டணி அரசியலை மீள் கட்டமைத்துள்ளது.இதனை உறுதி செய்யக் கூடிய விதமாக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவுள்ள முன்னாள் மட்டக்களப்பு இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அளித்த உரையும் அமைகிறது. முதலில் அவ்வுரையைச் சுருக்கமாக எடுத்து நோக்குவோம். “தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மட்டுமே நான் இருப்பேன். இலங்கை சோசலிசக் குடியரசின் தலைவராக வருவதற்காக நான் போட்டியிடவில்லை. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டுமென்பதற்காக அனைத்துலகத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக நான் இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளராக நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டெம்பர் 22ம் திகதி வரை மட்டுமே இருக்கும். அதற்குப் பிற்பாடான பணிகளைத் தமிழ் பொதுக்கட்டமைப்பே எடுக்கும்” என்னும் அவரின் உரையின் முக்கிய பகுதி ஈழத்தமிழர் கட்சி அரசியலில் ஏற்பட்டிருந்த தேக்க நிலையைக் கட்டுடைப்பதற்கான அறைகூவலாக அமைகிறது.


அடுத்து “அனைத்துலக ரீதியில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற பொழுது அனைத்துலகம் ஒருமித்த குரலில் வரவேண்டும் என்றுதான் நமக்குக் கூறியது. நடைபெறவுள்ள இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் ஒருகுரலில் ஒருமித்த கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்காக தமிழ் பொதுவேட்பாளர் அடையாளப்படுத்தப்பட்டு அவருக்கு ஆதரவை மக்கள் வாக்குகளாகச் செலுத்துகின்ற பொழுது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளது அவை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்தப் பொதுவேட்பாளர் முயற்சி” என்னும் அவரின் விளக்கம் அனைத்துலக நிலையில் உள்ள தேக்கத்துக்கான எதிர்வினையாகவும் உள்ளது. ஆனால் அவர் “பொதுக்கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாகச் சட்டத்தரணி தவராசவின் பெயரும் எனது பெயரும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரம் நண்பர்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானோ அவரோ எவ்விதமான சர்ச்சைகளுமில்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்” என்கின்ற பொழுது; தமிழ்த்தேசியம் என்பது குறித்த விளக்கம் அதன் வரலாற்று வளர்ச்சி தெளிவாக்கப்படாத நிலை உண்டு என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.


“இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் எத்தகையவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். விடுதலைப்புலிகளை நான்தான் பிரித்தேன். கட்சிகளைப் பிரித்தேன். என்னை மாற்றமாட்டேன் என்றெல்லாம் போட்டியிட்டுபவர்களே அவர்கள். இவ்வாறான நிலையில் மக்களைப் பிரித்தாள்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப் போகின்றோமா? வடக்கு கிழக்கைப் பிரித்தவர்களுக்கு வாக்குகளை வழங்கப் போகின்றோமா? என்பதைத் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல அரசுத்தலைவர்களைக் கண்டு ஏமாற்றமடைந்த நிலையில் இன்னும் பேரம்பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்க வேண்டும். இவற்றுக்காகத்தான் பொதுவேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்க வேண்டும்” என இவர் வாக்களிப்புக்கான காரணத்தைக் கட்டமைக்கையில் இனஅழிப்பு குறித்து எதுவுமே பேசாத நிலையில் இவர் தமிழ் தேசியத்தின் சின்னமாக எவ்வாறு தன்னை வெளிப்படுத்துவார் என்கிற சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்பட வைக்கிறது என்பது இலக்கின் கருத்து. இந்நிலையில் இந்த உரையினை அவர் 1979 முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் 1983ம் ஆண்டு ஆறாவது திருத்தத்திற்கும் கட்டுப்பட்ட நிலையிலேயே ஆற்ற வேண்டிய நடைமுறை எதார்த்தம் உள்ளதால் இது குறித்த திறனாய்வுக்குள் இலக்கு மேலும் செல்லாது. இந்த முயற்சியை இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் மேடையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை எவ்வாறு ஈழத்தமிழர் தாயகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மீளுறுதி செய்யலாம் என்பதை எடுத்து நோக்கலாமெனக் கருதுகிறது.


இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்தப் பொதுவேட்பாளரின் நோக்கு என்ன அது எந்த வகையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு அவர்களின் ஆதரவையும் ஓத்துழைப்பையும் நாடி நிற்கிறது என்பதைத் தெளிவாக்க வேண்டும் என்பது இலக்கின் முதல் கருத்தாக உள்ளது. இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி இழக்கப்பட்டுள்ளதைச் சான்றாதாரங்களுடன் எடுத்து விளக்கி இதனை ஈடுசெய்யாது ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பை நடாத்த மக்கள் மேலான போரை முன்னெடுத்தே முழு இலங்கையரையும் வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்துள்ளன சிங்களக் கட்சிகள் என்பதைத் தெளிவாக்க வேண்டும். ஈழத்தமிழரின் இறைமையின் மீளுறுதி என்பது இலங்கையின் வேறெந்த இனத்துக்கும் எந்த வகையிலும் எந்த இழப்புக்களையும் ஏற்படுத்தாது என்பதையும் மாறாக எல்லா இனங்களுக்குமான எல்லா வளர்ச்சிகளுக்கும் உதவும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தல் முக்கியம் என்பது இலக்கின் நிலைப்பாடாக உள்ளது.


இந்தப் பொதுவேட்பாளர் என்பது அனைத்துலகத் தூதுவர்கள் ஈழத்தமிழர் சனநாயக வழிகளில் பங்கெடுக்க மறுப்பதினாலேயே தங்களால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைகளில் உரிய உதவிகளைச் செய்ய இயலாதிருக்கிறது எனக் கூறிவருவதற்கு எதிர்வினையாக அமைகிறது. எனவே ஒவ்வொரு தூதரகங்களுடனும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு தொடர்பு கொண்டு தங்களின் இந்த முடிவுக்கான தேவையை எடுத்து விளக்குவது முக்கியம். அனைத்துலக நாடுகளைப் பொறுத்த மட்டில் புலம்பெயர் தமிழர்கள் ஊடகங்கள் வழியாகவும் தங்கள் தங்கள் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களிடமும் ஈழத்தமிழர்கள் சனநாயக அரசியலில் பங்கெடுக்காத நிலையில் தவிப்பதற்கான காரணங்களைத் தெளிவாக்க வேண்டும். உலகின் அத்தனை நாடுகளின் தூதுவர்களுக்கும் அனைத்துலக ஆதரவினாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்யலாம் என்ற உண்மை உணர்த்தப்படல் முக்கியம் என்பது இலக்கின் தலையாய எண்ணம். இறுதியாக இந்தியாவின் கூட்டாண்மை, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பங்காண்மை, சீனாவின் நட்பாண்மை, ரஸ்யா மற்றும் யப்பான் உட்பட அனைத்துநாடுகளுடனுமான பல்வேறு செயலாண்மைகள் இவற்றின் மூலமே இன்று சிறிலங்கா அரசாங்கம் தன் இறைமையை நிலைப்படுத்துவதால் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பு பொதுவேட்பாளரை மையப்படுத்தி அனைத்து நாடுகளுடனும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு உலக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்ப எழுச்சிக்கும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை துறைசார் நிபுணர்களின் ஓத்துழைப்புடன் வெளிப்படுத்தினாலே ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் பெற முடியும். இவற்றைச் சரி வரச் சரியான நேரத்தில் செய்யும் திறனே ஈழத்தமிழர்களைத் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பை தமிழ்த்தேசியத்தின் சின்னமாகக் கருதி வாக்களிக்க வைக்குமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
 

https://www.ilakku.org/ilakku-weekly-epaper-299-august-10-2024-epaper_editorial/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளரை இறக்க இதுதான் காரணம்; விளக்குகிறார் விக்கி

மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம் என சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு மூன்று பேரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பா. அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 07 கூட்டணிக் கட்சிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளடக்கப்படவில்லை.

இக் கட்சிகளுடன் சிவில் சமூக அமைப்புகள் பேச்சு நடத்தியிருந்தன. ஆனாலும் இக் கட்சிகள் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்க மறுத்துவிட்டன.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பலமான விருப்பத்தின் பேரில் 07 கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது அவசியமற்றது என பல தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/307632

pothu-vetpalar.jpg

வட்சப்பில வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

தமிழ் பொது வேட்பாளரை இறக்க இதுதான் காரணம்; விளக்குகிறார் விக்கி

large.IMG_6908.jpeg.e6a83058e581cdd7ae40

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், நேர்ந்துவிடப்ப்ட்டுள்ளார்!😂

Link to comment
Share on other sites

தமிழர் தரப்பு  ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்போர் எந்த சிங்கள வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் ? ஏன் வாக்களிக்க வேண்டும் என காரணங்களை கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரை தவிர யார் என்ன சொன்னாலும் மக்களின் தேர்வு நடைமுறை வாழ்வினை தழுவியே இருக்கும் .... தமிழ் கட்சிகள் அமைதியாக இருப்பதே நல்லவிடயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்பது வேற லெவல்.
ஈழதமிழர்களை இன்னுமொரு படி கீழே கொண்டு செல்வதற்கான முயற்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்பது வேற லெவல்.
ஈழதமிழர்களை இன்னுமொரு படி கீழே கொண்டு செல்வதற்கான முயற்ச்சி

ஆம் 

காரணம் ஒற்றுமை இன்மை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பொது வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் அப்படியே தலைகீழாகத் திரும்பிய சும் வட-கிழக்கு இணைந்த சமஸ்டியைத் தருவோருக்கே ஆதரவு என்று ஏன் கூறுகின்றார். இந்த அறிவிப்பு ஏதோவொரு தாக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே செய்திருப்பதாலா?

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2024 at 23:49, நிழலி said:

இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்

உதவாது,..அவர் அரச அதிபர்  பதவியை பெற்றுக் கொண்டால் மட்டும் உதவும் 

On 8/8/2024 at 23:49, நிழலி said:

2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி,  இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா?

எப்போதும் அரசு அரசுடன் தான்  உறவுகளை   கொண்டிருக்கும் 

On 8/8/2024 at 23:49, நிழலி said:

ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?

வாய்ப்புகள் உண்டு,.  . .  ஆனால் அதற்காக தோல்வி எற்படும்.  என்பதற்குகாக   போட்டி இடமால்.  விட முடியாது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, nochchi said:

தமிழ்ப்பொது வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் அப்படியே தலைகீழாகத் திரும்பிய சும் வட-கிழக்கு இணைந்த சமஸ்டியைத் தருவோருக்கே ஆதரவு என்று ஏன் கூறுகின்றார். இந்த அறிவிப்பு ஏதோவொரு தாக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே செய்திருப்பதாலா?

 

 

On 8/8/2024 at 19:29, விசுகு said:

சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

போன வாரம் எழுதப்பட்ட இந்த எனது கருத்துக்கு இன்று இருவர் விருப்ப வாக்குகள் இட்டிருக்கிறார்கள். இது தான் நிலை. ஆனால் விதைப்பு தொடரும்.....

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

12 Aug, 2024 | 03:03 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது | Virakesari.lk

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.