Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310557

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்க பாத்தால் வீட்டுக்கொரு கட்சி வரும் போல கிடக்கு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

போற போக்க பாத்தால் வீட்டுக்கொரு கட்சி வரும் போல கிடக்கு....:cool:

நானும் ஒண்டு தொடங்கத்தான் இருக்கு. சொந்தக்காரர் எல்லாம் பொட்டாலே ஒரு 5000 தாண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாதவூரான் said:

நானும் ஒண்டு தொடங்கத்தான் இருக்கு. சொந்தக்காரர் எல்லாம் பொட்டாலே ஒரு 5000 தாண்டும்

தமிழரசு........
ஜனநாயக தமிழரசு.....

சுதந்திரத் தமிழரசு
தேசியத் தமிழரசு
தேசிய மக்கள் தமிழரசு
 
தேசிய ஜனநாயகச் சுதந்திரத் தமிழரசு  
தேசிய மக்கள் ஜனநாயக சுதந்திர தமிழரசு

வீட்டின் ஒவ்வொரு கல்லும் ஒரு கட்சியாக  வரப்போகின்றது
பெயர்களை   இப்போதே பதிவு செய்து வையுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

போற போக்க பாத்தால் வீட்டுக்கொரு கட்சி வரும் போல கிடக்கு.

வீட்டில் இருந்து ஒரு கட்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

போற போக்க பாத்தால் வீட்டுக்கொரு கட்சி வரும் போல கிடக்கு....:cool:

கீரை கடைக்கு எதிர் கடை வேணுமென்பதில் எம்மவர்கள் உறுதியாக உள்ளார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

தமிழரசு........
ஜனநாயக தமிழரசு.....

சுதந்திரத் தமிழரசு
தேசியத் தமிழரசு
தேசிய மக்கள் தமிழரசு
 
தேசிய ஜனநாயகச் சுதந்திரத் தமிழரசு  
தேசிய மக்கள் ஜனநாயக சுதந்திர தமிழரசு

வீட்டின் ஒவ்வொரு கல்லும் ஒரு கட்சியாக  வரப்போகின்றது
பெயர்களை   இப்போதே பதிவு செய்து வையுங்கள் 

மக்களைக் குழப்புவதற்காக மேற்கொள்ளப்படும் திருகுதாளம் இது. 

இந்த திருவாளிக் கூட்டம்தான் தமிழ்த் தேசியத்தைக் காக்குமென்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனம்? 

  • கருத்துக்கள உறவுகள்

தவத்தின்ட இந்த  மனமுடைந்த குழுவுக்கு சுமந்திரனுக்கெதிரான புலம்பெயர் விடுதலை முன்னணியினரும் பட்டாசு குழுவினரும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

தமிழரசு........
ஜனநாயக தமிழரசு.....

சுதந்திரத் தமிழரசு
தேசியத் தமிழரசு
தேசிய மக்கள் தமிழரசு
 
தேசிய ஜனநாயகச் சுதந்திரத் தமிழரசு  
தேசிய மக்கள் ஜனநாயக சுதந்திர தமிழரசு

வீட்டின் ஒவ்வொரு கல்லும் ஒரு கட்சியாக  வரப்போகின்றது
பெயர்களை   இப்போதே பதிவு செய்து வையுங்கள் 

பெயர்கள் இப்போதே பதிவு செய்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் அதை விற்று நல்ல வருமானம் பெறலாம். 😂

11 minutes ago, வாலி said:

தவத்தின்ட இந்த  மனமுடைந்த குழுவுக்கு

“மனமுடைந்த தமிழ் தேசிய முன்னணி” இதுவும் நல்ல பெயர் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

நானும் ஒண்டு தொடங்கத்தான் இருக்கு. சொந்தக்காரர் எல்லாம் பொட்டாலே ஒரு 5000 தாண்டும்

இப்போ யாரைக் கேட்டாலும் சொந்தக்காரராலேயே பிரச்சனை என்கிறார்கள்.

எத்தனை ஆயிரம் போராளிகளை வைத்திருந்த தலைவர் என்னபாடு பட்டிருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

கீரை கடைக்கு எதிர் கடை வேணுமென்பதில் எம்மவர்கள் உறுதியாக உள்ளார்கள் 🤣

ஏற்கெனவு அப்படி  உறுதி
அநுரகுமார திசாநாயக வேறு ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என்று சொல்லியிருக்கின்றார் 😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஏற்கெனவு அப்படி  உறுதி
அநுரகுமார திசாநாயக வேறு ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என்று சொல்லியிருக்கின்றார் 😄

அங்க நிற்கிறான்டா நம்ம சிறிலங்கா இடதுசாரி தேசியவாதி😅

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kavi arunasalam said:

வீட்டில் இருந்து ஒரு கட்சி

9 hours ago, உடையார் said:

கீரை கடைக்கு எதிர் கடை வேணுமென்பதில் எம்மவர்கள் உறுதியாக உள்ளார்கள் 🤣

10 hours ago, வாதவூரான் said:

நானும் ஒண்டு தொடங்கத்தான் இருக்கு. சொந்தக்காரர் எல்லாம் பொட்டாலே ஒரு 5000 தாண்டும்

 

நானும் குமாரசாமிய சுருக்கி  " வட குமார" எண்ட பேரில கட்சி தொடங்குவம் எண்டு பாக்கிறன்.:cool:
சின்னம் வடலி 😁

202203271830291030-palmtree-seed-planting-in-land-SECVPF.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான வேட்பாளர்கள் சிலர் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் குறித்த தரப்பினர் நேற்று மேற்படி சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பானது யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

மாவை சேனாதிராஜா

இதன்போது "மாம்பழம் சின்னத்தில்" போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கிவைத்துள்ளனர்.

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு | K V Thavarasa Met Maavai With Mango

குறித்த சந்திப்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

https://tamilwin.com/article/k-v-thavarasa-met-maavai-with-mango-1728688618

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்து வண்டு வாசமலர்செண்டு 
யார் வரைவை கண்டு வாடியது இன்று
ஹோ சுமெ அண்ட் சிறி கோஸ்டியை கண்டு 
வாடியதே இந்த வணடு
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதன்போது "மாம்பழம் சின்னத்தில்" போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கிவைத்துள்ளனர்.

மீண்டும் இவரிடமே ஆசி பெற்றனரா? எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்பமுடியாத, முதுகெலும்பில்லாத தலைவர். ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியாக சஜித்துக்கு ஆதரவு, பாராளுமன்ற தேர்தலில் இருதலைக்கொம்பு எறும்பாக, தனது கட்சியையும் அதிகாரத்தையும் பறிகொடுத்த, இழந்த தலைவராக யாருக்கு ஆதரவு கோருவார் மக்களிடம்? மாம்பழத்துக்கா, வீட்டுக்கா?

ஒரு தலைவன், முப்பத்தைந்து ஆண்டுகளாக பலதரப்படடட, திறமையுள்ள, திறமையற்ற போராளிகளை வைத்து சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எவ்வாறு? நினைத்ததை சொன்னார், சொன்னதை நிறைவேற்றினார்,  யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத தன்மை எதைக்கண்டும், யாரைக்கண்டும் பயப்படாத, சுட்டிக்காட்டி திருத்தி வழிநடத்தும் நெஞ்சுரம், திறமை, பொறுப்பு  எதிரிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டாலும் தீரமுடன் போராடி மக்களுக்காக உயிர் விட்டிட ஒரே தலைவன். இதில் ஏதாவது ஒன்று நமது இன்றைய தலைவர்களிடம் உண்டா? அவர் கட்டியெழுப்பியதை சிதைத்ததை தவிர.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சின்னம் வடலி 😁

இதை, ‘வடலி வளர்த்துக் கள்ளு குடிப்பது’ என்று சொல்லல்லாமா?😂

  • கருத்துக்கள உறவுகள்

462830597_8795385357150397_5945435623607

May be an image of text

தமிழரசு கட்சிக்குள் தெற்கு அரசியலை புகுத்த முயற்சி.  -சட்டத்தரணி தவராசா.-

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இதை, ‘வடலி வளர்த்துக் கள்ளு குடிப்பது’ என்று சொல்லல்லாமா?😂

ஆம்   ஆனால் வடலிகளின்.   எண்ணிக்கை போதாது,...இப்படி வடலியை வளர்ந்து கள்ளு குடிப்பவர்களுக்கு மக்கள் வாக்கு போடுவார்களா  ?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிக்குள் தெற்கு அரசியலைப் புகுத்த முயற்சி என்று  இலங்கையின்  வட மாகாணத்தில் அமைந்துள்ள  கொழும்பு மாவட்டத்தின்   கிளை தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய  தவராசா தெலிவித்துள்ளார்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kavi arunasalam said:

இதை, ‘வடலி வளர்த்துக் கள்ளு குடிப்பது’ என்று சொல்லல்லாமா?😂

தமிழரசு கட்சியை வளர்த்து அவர்கள் சுக போக வாழ்க்கை வாழலாமென்றால்....
வடலி வளர்த்து கள்ளு குடிப்பதில் தவறில்லையே.....?😀

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழரசுக் கட்சியில் தகுதியானவர்களை போட்டியிடுவதை தடுத்த அராஜகம்
மாவை பதவி விலகுவதற்கு காரணமான சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கத்தை தோலுரித்து மனம் திறந்தார் சந்தர்ப்பம்

https://fb.watch/v9YWOb3BIN/

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும். மக்களை வைத்து விளையாடியவர்கள் இப்போ, மக்கள் இவர்களை விரட்டியடிக்கப்போகிறார்கள். அதன் பின் எதை யாருக்காக சரி செய்வது, ஒன்று சேர்ந்து செயலாற்றுவது? மக்கள் எத்தனை முறை எச்சரித்தார்கள் உங்களை? நீங்களோ கவனத்தில் எடுக்கவில்லை, உங்களை விட்டால் மக்களுக்கு வாக்களிக்க வேறு யாருமில்லை என்கிற மமதையில் இருந்தீர்கள், மக்களே உங்களை உதறிவிட்டு தூர விலகி விட்டார்கள், உங்களால் தங்களுக்கு விமோசனம் இல்லையென உணர்ந்து கொண்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க தயார் செய்து கொள்ளுங்கள் உங்களை. ஜனாதிபதி தேர்தல் பகிடி, அவருக்கும் போட்டேன் இவருக்கும் போட்டேன். நாடாளுமன்ற தேர்தல் பகிடி, தேர்தலில் போட்டியிடும் எல்லோரும் வெற்றி பெறவேண்டும். தன் பொறுப்பை சரிவர திறமையுடன் செய்யாமல் பக்க சார்பாக நடந்து கொண்டதால் இன்று தனித்து, மௌனமாய், நகைச்சுவையாளனாய் வருந்துகிறார். சொல்லவும் முடியல மெல்லவும் முடியல அவரால்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

 

தமிழரசுக் கட்சியில் தகுதியானவர்களை போட்டியிடுவதை தடுத்த அராஜகம்
மாவை பதவி விலகுவதற்கு காரணமான சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கத்தை தோலுரித்து மனம் திறந்தார் சந்தர்ப்பம்

https://fb.watch/v9YWOb3BIN/

புலவர், 

உண்மையில் மாவையர் சொன்னதை முழுமையாகக் கேட்டீர்களா? கேட்டிருந்தால் அதனை இங்கே இணைத்திருக்க மாட்டீர்கள். 🤣

 

மாவையரின் பேட்டியின் சாராம்சம்.

1) நான்  ஒரு தோல்வியுற்ற தலைவர் 

2) இத்தனை வருடங்களாக அரசியலில் இருந்தபோதும் என்னால் ஒரு மசி,....த்தானும் பிடுங்க முடியவில்லை 

3) தவராசா தலைமையிலான அணிக்கும் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்குமிடையே வேறுபாடு எதுவும் இல்லை 

4) எதிர்காலத்தில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டும் என விரும்புகிறேன் 

5) தவராசா ஆட்கள் தங்களுக்குத் தேர்தலில் நிற்பதற்குச் சந்தர்பம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் மாத்திரமே கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

6) தமிழரசுக் கட்சி முற்றுமுழுதாக எனது கட்டுப்பாட்டில் இருந்து வேறு ஒருவரின் கைகளுக்குச் சென்றுவிட்டது. 

7) தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி  போலியாக மக்களைப் பலிகொடுக்கும் விளையாட்டு தொடரும். 

மேலதிக இணைப்பு. (உபயம் - கப்பித்தான்) தவராசா ஆட்களுக்கு நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டில் நல்ல விருப்பம். 

🤣

 

6 hours ago, island said:

தமிழரசுக் கட்சிக்குள் தெற்கு அரசியலைப் புகுத்த முயற்சி என்று  இலங்கையின்  வட மாகாணத்தில் அமைந்துள்ள  கொழும்பு மாவட்டத்தின்   கிளை தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய  தவராசா தெலிவித்துள்ளார்.  

நல்ல விடயம்தானே. எத்தனை காலத்திற்குத்தான் மக்களை ஏமாற்றுவார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

மேலதிக இணைப்பு. (உபயம் - கப்பித்தான்) தவராசா ஆட்களுக்கு நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டில் நல்ல விருப்பம். 

இந்த குறூப்பில கன்டீன் சாப்பாட்டை ஏற்கனவே ருசிகண்ட பூனை ஒண்டும் இருக்கு।😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.