Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்?

என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அவருக்கு ஏன் அந்த கேள்வி வந்தது என கேளுங்க ஐயா?
இந்தக் கேள்வி எமது புலம்பெயர் சந்ததிகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்?

என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????

உண்மையை சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்..உங்கள் பேரன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்....குழந்தைப் பிள்ளை ஏதாவது தவற விடுவதாக நினைக்கிறாரோ தெரியாது..நீங்கள் தான் அவரது மனதிலிருப்பதை அறிய வேணும்.ஏன் எனில் கடந்த காலங்களில் ஜேர்மன் நாட்டில் பாடசாலை ஒன்றில் தமிழ் பெண் பிள்ளை ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் செய்திகள் ஊடாக அறிந்திருக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்?

என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????

நடந்த விடயங்களை நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்ற கசப்பான விடயங்களை கூறி விடுவது நல்லது காரணம் சிங்களம் ஒரு போதும் திருந்தாது  தமிழரை சந்தேக புத்தி கொண்டு பார்ப்பார்கள்.அத்துடன் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இனபிரச்சனை தீர்வு கண்டால் அவர்களின் வருமானம் பாதிக்கும் அங்கிருந்து தப்பினாலும் வடக்கன் இந்தியாக்காரன் விடமாட்டன் .

இப்பவே எங்களின் வயது வட்டுக்குள் வந்து விட்டது பேரன்களின் காலத்திலாவது அவர்களின் காலத்தில் சிந்தித்து அப்போதைய உலக அரசியலுக்கு ஏற்ப முடிவெடுக்கட்டும் . 

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணை…. பேரனுக்கு, நீங்கள் இங்கு வந்த காரணத்தை மறைக்காமல் சொல்லி விடுவதே நல்லது.
எப்படியோ அவரின் பதின்ம வயதுகளில்… அவருக்கு உண்மை நிலவரம் தெரிய வரும் போது… தனது தாத்தா பொய் சொல்லி விட்டார் என்று அவரை கவலைப் பட வைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஏன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக்கொண்டு போனாய், இலங்கையை விட்டு நாங்கள் ஏன் வெளிநாட்டுக்கு போகவில்லை என கேள்வி கேட்கும் பிள்ளைகளும் உண்டு. 

நானும் எனது தகப்பனாரிடம் பல வினாக்கள் தொடுத்துள்ளேன்.

வினாக்களிற்கான விடைகள், தெளிவு நாம் அவர்களின் வயதுக்கு/நிலமைக்கு வரும்போது விளங்கும்.

இலங்கையை விட ஜேர்மனி எந்த வகைகளில் வாழ்வதற்கு உகந்தது என உங்கள் பேரனுக்கு கூறலாம் @Paanch

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏன் வந்தீர்களோ அந்த உண்மையை குழந்தைகளுக்கு சொல்வதே சரியானது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணா ஜேர்மனிக்கு வந்தீர்கள்??

உண்மையை சொல்லுங்கள். அப்படி இல்லாமல் விட்டாலும் அவன் அதை தெரிந்து கொள்வான். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்?

கேள்வியிலே ஒரு தவறு இருப்பதை கவனித்தீர்களா Paanch?

நீங்கள்தான் சிறீலங்காவில் இருந்து யேர்மனிக்கு வந்தீர்கள். உங்கள் பேரன் அல்ல. உங்கள் பேரன் பிறப்பால் யேர்மனியன். ஆக நீங்கள் வந்த காரணத்தைச்  சொன்னால் போதும். அவர் புரிந்து கொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை அவரது வயதில் உள்ள ஒரு பிள்ளை விளங்க கூடியவாறு நீங்கள் சொல்லவேண்டும்.

இரண்டாவது நீங்கள் ஒரு அப்பியாசகொப்பியில் உங்கள் வாழ்க்கை வரலாறை எழுதி பத்திரமாக வைத்துவிடுங்கள். நான் எனது தந்தை, தாயிடம் கேட்டு அதை செய்து வைத்துளேன். எனது பிள்ளைக்கும் அது தெரியும். நானும் நான் கடந்து வந்த பாதையை எழுதி வைக்கிறேன். 

ஒரு நிரந்தர இடம் இல்லாத சமூகம் தனது பூர்வீகம் தொடர்பான அறிவு, பெற்ற பாடங்கள் என்பவற்றை வாய் மொழி மட்டுமல்ல எழுத்திலும் எழுதி வைத்துவிட்டு போகவேண்டும். எப்படி அன்று யூதர்கள் மற்றும் பூர்வீக குடிமக்கள் செய்தார்களோ அதுபோல் வரலாற்றை அடுத்ததைமுறைக்கு சொல்லுவது மிகவும் அவசியம். அது உங்கள் பணி, கடமை (moral obligation). நடந்த விடயங்கள் பற்றிய நியாங்கள், உண்மை, சரி/பிழையை அந்த வரும் கால சமூகம் தங்கள் வாழ்கிற கால நீரோட்டத்துக்கு ஏட்ப தீர்மானிக்கட்டும். நீங்கள் அது பற்றி அதிகம் யோசிக்கவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்?

என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????

நான் எனது சொந்த மண்ணில் இருந்து, என் பூர்வீக மண்ணில் இருந்து துரத்தப்பட்டேன்.

இதில் எங்கே ஐயா வருகிறது இனத்துவேசம்?

இது அல்லவா நீங்கள் வந்த காரணம் - அப்படியாகின் வந்த காரணம் (பொருளாதாரம்?) எதுவோ அதை சொல்லுங்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் எமக்கு இலங்கை தீவில் நிகழ்ந்த, நிகழ்கிற அநீதியை மட்டும் சொல்லாமல் விட வேண்டாம்.

கதை போல சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை நாட்டின் உள்ள அரசியல் பிரச்சனையால் புலம்பெயர்ந்தோம் என சொல்லிவிடுங்கள். உங்கள் பேரன் இன்னும் கேள்விகளை கேட்பார் என நினைக்கின்றேன்.
அப்போது இலங்கை ஒடுக்கு அரசியலையும் ஜெர்மனியின் சுதந்திர அரசியலையும் ஒப்பிட்டு விளங்கப்படுத்த முயலுங்கள்.
உலகில் உள்ள ஒவ்வொரு இன மக்களுக்கும் சொந்த நாடு இருக்கின்றது. எமக்கு ஒரு நாடில்லை என்பதையும் உணர்த்த முயலுங்கள்.

அது சரி 5 வயது பேரனுக்கு இதுவெல்லாம் சாத்தியமா? 🙂

  • கருத்துக்கள உறவுகள்

பேரன் இலங்கைக்கு போய் இருக்கிறாரா? இலங்கை நாட்டில் பெரும் பான்மை இனம் (எண்ணிக்கை ) சிறுபான்மை இனம்  என வகைப்படுத்தி  சிறுபான்மை இனத்தை அடிமைப்படுத்தி , அதைத் தட்டிக் கேட்ட இனத்தலைவனையம் குடிமக்களையும்   பல நாட்டு ஆயுத உதவியுடன்  ஈவு இரக்கமின்றி ஏவல் படை மூலம்  கொன்று வந்தான். . உயிருக்கு பயந்து ஆயுட்கால மெல்லாம் தேடி வைத்த சொத்து, சுகம், இனத்தை விட்டு  சொந்த மண்ணை   விட்டு அகதியாக வந்தேன். எனச் சொல்லுங்கள் ஒரு வேளை அவன் பல்கலைகழகத்தில் கற்கும்  வாழ்வில் இலங்கை சரித்திரத்தை   ஒருபாடமாக   எடுத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுத கூடும். தாயகத்தில் வாழ்ந்த அதே அளவு காலம் வெளி நாட்டிலும் வாழ்ந்து விடடோம் . 

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை. மனிதன் எப்போ வருவான் என மண் காத்திருக்கிறது. காலம் வரும்போதுபோக வேண்டியது தான்.    

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமத்தில் பேச்சாளர் ஒருவர் சொற்பொழிவாற்ற மேடையில் ஏறிப் பார்க்கிறார் அங்கு ஒரே ஒருவரைத் தவிர யாரும் இல்ல....... அவர்கூட ஒரு மாடுகள் மேய்ப்பவர் . ........ ஆயினும் தான் வாங்கிய ஊதியத்தின் பொருட்டு 1 1/2 மணிநேரம் பேசிவிட்டு இறங்கி வந்து அவரிடம் கேட்கிறார் ஐயா உங்களுக்கு நன்றி . ......நீங்கள் மட்டும்தான் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டிருக்கிறீர்கள் . ......எப்படி இருந்தது என்று . ......அதற்கு அந்த இடையர் கூறினார் ......சாமி நான் ஒருஇடையன் என்னிடம் நூறு பசுக்கள் இருக்கின்றன .....மாலையில் அவை பட்டிக்கு வரும்போது நிறைய உணவுகள் போடுவேன் . ....ஆனால் எதிர்பாராமல் வேளைக்கே ஒரு பசு மட்டும் வந்தால் அதுக்கு மட்டும் அளவான உணவைக் கொடுத்து விட்டு மிகுதியை ஒதுக்கி வைத்து விடுவேன் . ......!

ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஊர் நிலவரத்தை நீங்கள் எப்படி சொன்னாலும் விளங்கப் போவதில்லை . ......இன்னும் ஒரு ஐந்து வருடம் போகட்டும் ,  அப்போது கொஞ்சம் புரியும் . ...... அதுவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும் . ......!

உங்கள் வீட்டில் நாய் இருந்தால் அது எப்படியும் வீதியால் செல்லும் ஆட்களையோ அல்லது நாயையோ பார்த்துக் குரைக்கும் ........அப்போது அவரிடம் கேளுங்கள் ஏன் எங்களின் ஜிம்மி அவையளைப் பார்த்து குரைக்குது என்று கேளுங்கள் . ......அவரும் தயங்காமல் சொல்லுவார் அவையள் எங்கட வளவுக்க வராமல் விரட்டுது என்பார் ......... இது போன்றதுதான் எங்கள் ஊர் நிலைமையும் என்று சொல்லலாம் . ......பின்னாளில் அவர் விளங்கிக் கொள்ளட்டும் .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நிறைய எழுதி விட்டார்கள்  அவர்கள் எழுதாமல் விட்டவற்றை எழுதுகிறேன் 

1, வேலைவாய்ப்பு இல்லை  

2, எப்படி எத்தனை. வருடங்களாக பத்தாவது வகுப்பு படித்தாலும் சித்தி அடைய முடியவில்லை 🤣

3,..எனவே   பகல் 7 மணிக்கு வாசிகசாலை மதிலில். ஏறி இருந்து  பாடசாலைகளுக்கு போகும்  பெண் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருப்பதுடன் கிண்டலும் பண்ணுவதுண்டு   மதியம் வீட்டில்  அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு  கொஞ்சம் நித்திரை கொண்ட பின்னர்   சரியாக பிற்பகல் 4 மணிக்கு  அதே மதிலில். ஏறி இருந்து விடுவேன் [ இப்படி கடும் முயற்சிகள் செய்தமையால். தான்  பாட்டி மாட்டிக்கொண்டார் ]

4,.....எங்களுக்கு நிறைய தோட்டங்கள் இருந்தது  ஆனால் செய்ய விரும்பவில்லை   ஏனெனில் அது ஒரு கூடாதா தொழில் 

ஜேர்மனியில் பல வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்தேன் 

பணம் பணம்,.......ஜேர்மன் பணத்தை எட்டால். பெருக்க தொடங்கிய நாங்கள்   இன்று 360 ஆல்.  பெருக்கிக்கொள்கிறோம்.  

5,....இந்த நாட்டு கடவுச்சீட்டில்   உலகத்தை சுற்றி வரலாம். 

6.   பல்கலைக்கழகம் வரை படிக்கலாம்  

7,.வேலைவாய்ப்பு நேரடியாக விண்ணப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும்  முடியும்    டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகள் பின்னால்  வருடக் கணக்கா அலைய வேண்டியதில்லை 

8,..கூலி வேலை. செய்பவனுக்கும். ஒய்வு ஊதியம் உண்டு   வயோதிப காலத்தில்  பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை 

ஏதாகினும் பிழையாக. எழுதி இருந்தால்  மன்னியுங்கள் 

பாஞ்ச் அண்ணை  🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அது சரி 5 வயது பேரனுக்கு இதுவெல்லாம் சாத்தியமா? 🙂

சாத்தியம். 

  • கருத்துக்கள உறவுகள்

Vacation ல்  அழகான கடற்கரைகள்,  நல்ல வெதுவெதுப்பான காலநிலையில் அங்குள்ள சம வயதுப்  பிள்ளைகளுடன் விளையாடும் இனிமையான தருணம் போன்றவற்றை அனுபவித்த 5 வயது பிள்ளை விடுமுறை முடிந்து திரும்பி வந்ததும் இப்படியான கேள்வியை கேட்பது வழமை தான்.   விடுமுறை முடிந்துவிட்டது அடுத்த விடுமுறைக்கு செல்வோம் என்று சமாதானம் சொல்வதே சரியாக இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரம் போர் நடந்த இடங்களை சுற்றி காட்டினீர்கள் என்றாலே சிறுவன் புரிந்து கொள்வான். 
5 வயது பிள்ளைக்கு போரினால் அங்கு இருக்க முடியவில்லை என்று சொன்னால் போதுமானது. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 10 வருடங்கள் பொறுத்திருங்கள்.

ஒவ்வொரு மாவீரர் தினங்களுக்கும் அழைத்து செல்லுங்கள்.

தானாகவே புரிந்து கொள்வார்.

மிகவும் சுட்டியான பையன்.கவனமாக படிப்பியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2024 at 14:12, Paanch said:

உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா!

இந்தப் பழமொழி அரசியல் நிர்ப்பந்தத்தினாலோ தொழில் வளம் இல்லாமையாலோ புலம் பெயர்வோர்க்கு/ புலம் பெயர வைக்கப்பட்டோர்க்குப் பொருந்தாது என்பது என் எண்ணம்.

                உங்கள் பேரன் பிறந்து வளர்ந்த மண்ணே ஜெர்மனி என்பதால், புலம் பெயர்ந்த வலி அவருக்கு ஓரளவு ஏற்படும். உதாரணமாக, அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவப் பருவக் கவிஞர்களை வைத்து வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்று  ஒளிபரப்பானது. அன்று அந்நிகழ்ச்சியில் அமெரிக்கர்களைக் கவர்ந்த பதினேழு வயது மாணவி மாயா ஈஸ்வரன், தனது பாலக்காட்டு வேர்களை அமெரிக்காவில் தொலைத்த புலம் பெயர்ந்த தமிழச்சி. தன் கவிதையை உணர்வு பொங்க வாசித்தாள். அதில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அனைவரையும் கவர்ந்த வரிகள், “எனது அடையாளம் உதிர ஆரம்பித்தது - முடி உதிர்வதைப் போல. கூந்தலை முழுவதும் இழந்து போகும் பீதி என் மனதில்.” கவிதையைக் கேட்டு மிச்சேல் ஒபாமாவே உணர்ச்சி வசப்பட்டார். அக்குழந்தையை அருகில் அழைத்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டார். தாமும் அந்த ரகம் தான் என நினைத்திருப்பாரோ? எது எப்படியாயினும் பேரன் சற்றுப் பெரியவனாகும்போது உலகின் நிதர்சனங்களை எடுத்துச் சொல்லுங்கள். அதுவரை ஏதாவது பொய் சொல்லியாவது சமாளியுங்கள்.  உயிருக்கு உயிரான என் தாத்தா இறந்தபோது என்னிடம் சொல்லப்பட்ட பொய், "தாத்தா சாமி அழைத்ததால் போயிருக்கிறார். சிறிது காலம் கழித்து உன்னிடம் வந்து விடுவார்" என்பது. எனக்குப் பேத்தி பிறந்த பிறகும் என் தாத்தா இன்னும் வரவில்லை; காத்திருக்கிறேன்.

            உங்கள் பேரனின் கேள்வியைத் தாண்டி, உங்கள் கேள்வியில் உங்கள் மனவலி வெளிப்படுவதாக உணர்கிறேன். அது எனது கற்பனையாகவும் இருக்கலாம். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த ஒருவர் தொழில் நிமித்தமாக சென்னையில் வாழ்வதன் வலியைப் பதிவு செய்ததை முகநூலில் கண்டேன். அப்பதிவின் இணைப்பைக் கீழே தந்துள்ளேன். அந்தத் துன்பத்தையே தாளாத நான் நாடு விட்டு நாடு சென்றோரில்  சிலருக்கு/பலருக்கு ஏற்படும் வலியை என்னவென்பேன் ? இது தொடர்பில் "பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்" என்பதுவே என் கையறு நிலை.

https://www.facebook.com/share/p/18hDk3PFjy/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். 

‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது,

சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார். 

இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது.

அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது.

சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Paanch said:

‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது,

சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார். 

வாழைச்சேனை காகித ஆலையா? எனது பெரியப்பாவும் இதே போன்ற காரணங்கள் ஓய்வு பெறும் வயது வர முதலே வேலையை விட்டிட்டார்.

23 minutes ago, Paanch said:

சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳

மண்வாசம் புலம்பெயர்ந்து அங்கு பிறந்தாலும் ஈர்க்கிறதோ!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.