Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!

போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என தெரிவித்திருந்தார். இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜாவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தி வருவீர்களா என கேட்குமாறு சிவமோகன் தெரிவித்த போது இது ‘கோல் சென்ரர் அல்ல, கட்சி.’ “உங்கள் வைத்தியசாலை அல்ல” இது என்று சாணக்கியன் பதில் அளித்தார். அவர் மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர்.

இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை சிரேஸ்ட உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டிவரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.

தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையினால் நீண்டநேரமாக கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் போர்க்களமாக மாறியது. சிவமோகனுக்கு அருகில் எழுந்துசென்ற சுமந்திரன் அவரை சாமாளிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை சேனாதிராஜா வருகை தந்திருந்தார். இதன்போது “உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது மாவை ஐயா. எனவே அந்த கதிரையில் இருக்க வேண்டாம் இந்த பக்கம் இருங்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவருக்கு தெரிவித்துள்ளார்.

அதனை பொருட்படுத்தாத மாவை சேனாதிராஜா முன்பகுதியில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தார்.

அதன் பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

https://athavannews.com/2024/1412264

  • கருத்துக்கள உறவுகள்

அட😊 தேர்தலில் வென்ற பின் சாணக்கியன் கதைக்க வெளிக்கிட்டார் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!

கருத்து மோதல் எல்லாம் இப்ப போர்களமாக மாறிவிட்டது போல ஊத்தவாளியர்களுக்கு

1 minute ago, ரதி said:

அட😊 தேர்தலில் வென்ற பின் சாணக்கியன் கதைக்க வெளிக்கிட்டார் 

கிழக்கின் விடிவெள்ளி  அவர் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்சியின் கூட்டத்தையே கையாளக் தெரியவில்லை?????

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கொண்டுவந்து சேர்த்த ஆசான் தோல்வியடைந்த காண்டு, தனக்கு உதவியில்லை பக்கக்கதைக்கு என்கிற ஆதங்கம், ஏதோ அரசியல் சூழ்நிலையால் வென்றுவிட்டார். தலைகால் தெரியாமல் ஆடினால் அடுத்தமுறை இவரும் காணாமல் போக வாய்ப்பிருக்கு. இப்போ கட்சிக்குள் குடைச்சல் கொடுக்க இவரை தவிர வேறொருவருமில்லை சுமந்திரனுக்கு. அவரின் நாட்டாண்மையை இவர் கையில் எடுத்துவிட்டார். இவரும் வியாழேந்திரன் இடத்துக்கு வந்து தொற்றிகொண்டவர்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

அவரை கொண்டுவந்து சேர்த்த ஆசான் தோல்வியடைந்த காண்டு, தனக்கு உதவியில்லை பக்கக்கதைக்கு என்கிற ஆதங்கம், ஏதோ அரசியல் சூழ்நிலையால் வென்றுவிட்டார். தலைகால் தெரியாமல் ஆடினால் அடுத்தமுறை இவரும் காணாமல் போக வாய்ப்பிருக்கு. இப்போ கட்சிக்குள் குடைச்சல் கொடுக்க இவரை தவிர வேறொருவருமில்லை சுமந்திரனுக்கு. அவரின் நாட்டாண்மையை இவர் கையில் எடுத்துவிட்டார். இவரும் வியாழேந்திரன் இடத்துக்கு வந்து தொற்றிகொண்டவர்தானே. 

1) வடக்கன்ஸ் அர்ச்சுனா ரமநாதனுக்கும் அனுரவுக்கும் வாக்களித்து டமில் தேசியத்தை காற்றினிலே பறக்கவிட்டபோது,  வீரம் விளை நிலம்தான் தமிழரின்  மானத்தைக் காப்பாற்றியது.  ஆகவே சாணக்கியன் தொடர்பாக அவதூறு  கூற சாத்தானுக்கு அருகதை இல்லை. 

2) ஒரு நிகழ்வு குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது சாதாரணமாக பள்ளிக்கூடம் சென்ற எல்லோருக்கும் தெரியும். ஆகவே, குறித்த நேரத்திற்கு நிகழ்வை ஆரம்பிக்குமாறு கோருவது தவறான விடயம் அல்ல. நிகழ்வை காலம் தாழ்த்தி ஆரம்பிக்குமாறு கோருவது தவறு என்பது பாடசாலை செல்லும் சிறு குழந்தைக்கும் தெரியும். 

3) இப்படியான கூட்டங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழமையான ஒன்று. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ""போர்களமாக மாறிய "" என்று போடும் ஆதவனின் வறுமைத்தனத்தை நம்பிக்  கருத்து கூறுவது ஆபத்தான முயற்சி. 😁

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்!

14 DEC, 2024 | 12:07 PM
image
 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.  

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற  உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ் கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக மத்திய குழு கூடியுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

IMG_9782.jpg

IMG_9781.jpg

IMG_9769.jpg

https://www.virakesari.lk/article/201245

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? 

1 hour ago, Kapithan said:

வடக்கன்ஸ் அர்ச்சுனா ரமநாதனுக்கும் அனுரவுக்கும் வாக்களித்து டமில் தேசியத்தை காற்றினிலே பறக்கவிட்டபோது,  வீரம் விளை நிலம்தான் தமிழரின்  மானத்தைக் காப்பாற்றியது.  

நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். 

அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?  

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? 

நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். 

அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?  

சாத்தானுக்கு இன்னும் சும்மின் பேதி நிற்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் தலைவர் விடயம்! நாள்முழுதும் பேசி முடிவுகள் எட்டப்படாமல் முடிந்த கூட்டம்! 

14 DEC, 2024 | 06:31 PM
image

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சனிக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (14) காலை10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. 

இதன்போது கூட்டம ஆரம்பிக்கமுன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார்.இதனால் கூட்டத்தில்  குழப்பநிலை ஏற்ப்பட்டது. பின்னர் மாவைசேனாதிராயா கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார். அதனைத்தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது.

இந்தநிலையில் மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவர் தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்டுக்கொண்டதுடன், மற்றொருதரப்பினர்

அவரே தொடர்ச்சியாக தலைவராக செயற்படவேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதனால் இன்றைய கூட்டம் முழுவதும் அந்த விடயம் தொடர்பாகவே பேசப்பட்டதுடன், முடிவுகள் எடுக்கப்படாமல் பிறிதொருநாள் அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன்….

கட்சியின் கூட்டத்திற்கு தலைமைதாங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. மாவை சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் மாதத்திலே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன்பிறகு இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அது தொடர்பாக செயலாளர் அவரிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். இருப்பினும்அவர் அதற்கு பதில் சொல்லியிருக்கவில்லை. இதனால் செயலாளர் அவரது ராஜினாமா நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்டநடவடிக்கையினை மேற்கொள்வதாக அவருக்கு அறிவித்திருக்கிறார். 

அதன்பின்னர் தனது ராஜினாமாவை மீள கைவாங்குவதாக அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளதாக காட்டப்படும் ஒரு கடிதம் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மூலம் செயலாளருக்கு அனுப்பபட்டிருந்தது. அதற்கு மறுநாள் மாவை அவர்களும் செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார். 

எனவே அவர் ராஜினாமா செய்திருப்பதால் கட்சியின் அடுத்த மாநாடுவரைக்கும் எஞ்சியிருக்கிற காலத்துக்கு மத்தியசெயற்குழு ஒருவரை தலைவராக நியமிக்க முடியும் என்ற எமது யாப்பின் அடிப்படையில் சிவிகே சிவஞானம் அவர்களை அந்த பதவிநிலைக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. 

இதேவேளை சேனாதிராஜா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றிருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மாற்று முன்மொழிவும் சொல்லப்பட்டது. இதனால் குறித்த விடயம் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது.

எனவே இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடும்படியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தரப்பினர் கேட்டுக்கொண்டனர். இறுதியில் அது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் அதற்காக இன்னொரு கூட்டத்தை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டியநிலையில் இருக்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/201292

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சேனாதிராஜா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றிருக்கிறார்

 

1 hour ago, ஏராளன் said:

கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டியநிலையில் இருக்கிறது

தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

 

தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?

செத்து…செத்து…விளையாட இது என்ன தமிழ் நகைச்சுவை படமா?🤣

இது கட்சி யாப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்தது.

1. இராஜினாமா செய்ததன் பின் - அதை மத்திய குழு அல்லது வேறு எவரும் ஏற்பபின்பே அது செல்லும் - என யாப்பு கூறின், அவ்வாறு நடக்க முன் மாவை ராஜைனாமாவை வாபஸ் பெறலாம்.

2. அப்படி இல்லாமல் ராஜினாமா செய்யாலே - அந்த நொடி முதல் அது செல்லும் என யாப்பு கூறின். வாபஸ் வாங்க முடியாது.

3. நடக்கும் இழுபறியை பார்த்தால் - யாப்பு இதில் எதுவும் கூறாமல் silent ஆக உள்ளது போல் உள்ளது. அதுதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம்.

செல்வா, அமிர், பெரிய பெரிய சட்டத் தூண்கள், சுமன் எல்லாரினதும் யாப்பு எழுதும் இலட்சணம் இதுதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

ளில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழமையான ஒன்று. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ""போர்களமாக மாறிய "" என்று போடும் ஆதவனின் வறுமைத்தனத்தை நம்பிக்  கருத்து கூறுவது ஆபத்தான முயற்சி. 😁

அது....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார்.

large.IMG_7887.jpeg.69513ee11e96d02a4c4a

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது.
ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும்.

இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். 

வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

13 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை சேனாதிராஜா வருகை தந்திருந்தார்.

மத்திய குழு கூட்டத்திற்கே நேரகாலத்துக்கு வர தெரியாதவர்கள் எல்லாம் தமிழின தலைவர்கள். முதலில் இப்படியானவர்களையும் இப்படியானவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களையும் மக்கள் இனிவரும் காலங்களில் தூக்கியெறிய வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கு என்னதான் நடக்குது...வேலவன் இவ்வளவு பவ்வியமாக இருக்கிறார்....IMG_9782.jpg

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இராஜினாமாசெய்வதாக அறிவித்தது அவருக்கு தேர்தலில் போட்டியிட சுமத்திரன் தரப்பப பெரும்பான்யைhகக் கொண்ட தேர்தல்நியமனக்குழு  அனுமதியளிக்காத கடுப்பில். அ(.அவருக்கு மட்டுமல்ல சிறிதரனுக்கும் அனுமதி மநறுக்கப்பட்ட பொழுது நான் போட்டியிடக்கூடாதென்றால் சுமத்திரனும் போட்டியிடக்கூடாது என்று வாதாடியமையால் வேறு வழியின்றி சம்மதித்தனர்).வரது ராஜினமாக்கடிதம் தனக்கு கிடைக்க வில்லை என்று செயலாளர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தது.குறிப்பிடத்தக்கது.அப்படியாயின் சட்டப்படி அவரே தொடர்ந்து லைவராக இருக்க முடியும். கட்சித்தலமை சுமத்திரன்கைக்குப் போகக் கூடாது என்றே மாவை இந்த தள்ளாத வயதிலுத் தான்தான் தலைவர் என்று அடம்பிடிக்கிறார். சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

. சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.

ஆமா...மாவை இருந்திட்டு ஒருக்காலாவது ..தேசியம் என்று கதைக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

IMG-9782.jpg

முதலில் இந்த படத்தில் இருக்கும் கண்ணாடி போட்ட  குரங்கை யும் சீனாவுக்கு அனுப்பும் குரங்குகள் உடன் அனுப்பி வைக்கவும் தமிழரசு கட்சி உருப்படும் இந்த குரங்கின் வேலைதான் இவ்வழவு கலவரமும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா - உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

சாத்தானுக்கு இன்னும் சும்மின் பேதி நிற்கவில்லை. 

சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  

இதில் என்ன சந்தேகம்,..

கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார். 

🤣

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.