Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!

1725317847.jpg

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்  ஒன்று இன்று  யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 

ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்றுவிட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக வீதியை கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. 

தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_வேலையில்லா_பட்டதாரிகள்_வித்தியாசமான_முறையில்_போராட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வித்தியாசமானப் போரட்டமாகத்தெரியலாம் ஆனால் மேலை நாடுகளில் எம்மில் பலர் மொப் வாளியுடன் தான் வாழ்க்கையைத் தொடங்குகினார்கள், ஆனால் இன்று எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் முதியவர்களைப் பார்க்க வேலைக்கு ஆட்கள் இல்லை, சரியான மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை. இந்த வேலையெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்களா? லூசுகள் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அரச உத்தியோகத்தையே விரும்புகின்றனர்.
இலங்கையில் 18 பேரில் ஒருவர் அரச உத்தியோத்தில் இருப்பதாக வாசித்த நினைவு. இது உண்மையானால், ஏழை நாட்டிற்கு மிக அதிகம்.

எமது நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை சீர் செய்து… எட்டாம் வகுப்புகளில் இருந்தே  தொழில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது… பல சுய தொழில் முனைவோர் உருவாகுவார்கள்.

எல்லா அரசாங்கங்களும் தினமும் அறிக்கை மழையாக பொழிந்து, வாயால்… வடை சுட்டுக் கொண்டு இருந்தால், உலகின் முதலாவது பிச்சைக்கார நாடாக ஶ்ரீலங்கா வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 10:22, தமிழ் சிறி said:

தனியார் ஓய்வூதியம் இல்லாதது தான் உண்மையான பிரச்சினை. மற்றது அரச உத்தியோகம் எண்டால் வேலையால் இலகுவில்நிறுத்த முடியாது. ஒப்பீட்டளவில்நோகாமல்நொங்கு (நுங்கு) குடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 09:57, பகிடி said:

மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை

large.IMG_8039.jpeg.4b2dce2d64b85cd90a46

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 11:22, தமிழ் சிறி said:

எல்லோரும் அரச உத்தியோகத்தையே விரும்புகின்றனர்.
இலங்கையில் 18 பேரில் ஒருவர் அரச உத்தியோத்தில் இருப்பதாக வாசித்த நினைவு. இது உண்மையானால், ஏழை நாட்டிற்கு மிக அதிகம்.

எமது நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை சீர் செய்து… எட்டாம் வகுப்புகளில் இருந்தே  தொழில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது… பல சுய தொழில் முனைவோர் உருவாகுவார்கள்.

எல்லா அரசாங்கங்களும் தினமும் அறிக்கை மழையாக பொழிந்து, வாயால்… வடை சுட்டுக் கொண்டு இருந்தால், உலகின் முதலாவது பிச்சைக்கார நாடாக ஶ்ரீலங்கா வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஜேர்மனிக்கு கூப்பிட்டு விடுங்கள்” எந்த வேலையும் செய்வார்கள்  

பட்டதாரிகள். என்பதையெல்லாம் மறந்து விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

தனியார் ஓய்வூதியம் இல்லாதது தான் உண்மையான பிரச்சினை. மற்றது அரச உத்தியோகம் எண்டால் வேலையால் இலகுவில்நிறுத்த முடியாது. ஒப்பீட்டளவில்நோகாமல்நொங்கு (நுங்கு) குடிக்கலாம்

உண்மை தான். ஓய்வு பெற்ற பின்னரே இதை உணர்கிறேன்.

சுயதொழில் செய்தபடியால் எவ்வளவுக்கு செலவைக் காட்டி அரசிடமிருந்து பணத்தைப் பெற முடியுமோ அதையெல்லாம் செய்தோம்.

இப்போது இளைப்பாறிய பின் சோசல் பணத்தை மட்டும் வைத்து வாழ்வதென்றால் முடியாத காரியம்.

அரச வேலை செய்தவர்களுக்கு சோசலும் வரும்.ஓய்வூதியப் பணமும் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு

Published By: Vishnu

21 Jan, 2025 | 04:02 AM
image

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். 

IMG-20250120-WA0012.jpg

இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகதழிராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக  ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG-20250120-WA0015.jpg

இதன் பொழுது கருத்து தெரிவித்த வடமாகாண பட்டதாரிகள் சங்க தலைவர் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வடமாகாணத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

IMG-20250120-WA0013.jpg

இதேவேளை இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும்.

IMG-20250120-WA0014.jpg

எம்மால் கடந்த முறை சுத்திகரிப்பு தொழிலாளர் வேடமிட்டு போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பில் பலர் சமூக ஊடகங்களில் எமக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தனர். எமக்குள்ளும் பல கூலி தொழிலாளிகள் இன்று காணப்படுகின்றனர்.

எமது பெற்றோர்களும் பல கூலி தொழில்களை முன்னெடுத்து வியர்வை சிந்தியே இந்த இடத்திற்கு எம்மை கொண்டு வந்தார்கள். கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில்  நகைப்புக்குரிய தொழில் அல்ல. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலம் நாம் பெற்றது என்ன அரிசிற்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறாக ஈடுபட்டோம்.

இது தொடர்பில் அன்றைய போராட்டத்தின் பொழுதே முழுதெளிவினையும் வழங்கியிருந்தோம். இன்றைய தினமும் எமது அறவழிப்போராட்டம் வீதியூடாக கோஷங்களை எழுப்பி ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கவுள்ளோம். அரசாங்கம் உருவாகி நான்கு மாதங்களே கடக்கின்றது. எமக்கான பதில் அழுத்தம் மூலமே கிடைக்கபெறுமானால் அதனை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது.

இதன் போது போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர் இருப்பினும் ஆளுநரின் செயலாளர் ஒருவர் குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் என தெரிவித்தார்.

 தமக்கு அரசாங்க வேலை பெற்றுத் தருவேன் என  உறுதியளிக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிசாருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார்.

போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

என தெரிவித்ததாக குறிப்பிட்டார் இதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

https://www.virakesari.lk/article/204395

13 minutes ago, கிருபன் said:

 தமக்கு அரசாங்க வேலை பெற்றுத் தருவேன் என  உறுதியளிக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோல் மக்ஸ் விளக்கே தான் வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kandiah57 said:

ஜேர்மனிக்கு கூப்பிட்டு விடுங்கள்” எந்த வேலையும் செய்வார்கள்  

பட்டதாரிகள். என்பதையெல்லாம் மறந்து விடுவார்கள் 

ஜேர்மனியில் ரோட்டு கூட்டினாலும் நல்ல  சம்பளம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8039.jpeg.4b2dce2d64b85cd90a46

அது தானே.கொழும்பில் இருந்து யாழ்ப் பாணம்-யாழ்ப்பாணம் இருந்து மன்னார்--மன்னாரில் இருந்து பிறகு திரும்ப கொழும்பு , அங்காலை பார்னிமென்ட் -அப்புறம் யூருப்,  முகப் புத்தகம் ,வேலை பத்தாதோ அர்ச்சனாவுக்கு.அடுத்தவருக்கு யாரும் ரிக்கற் போட்டு குடுத்தால் உலக நாடுகளை சுற்றுவது...மீடியாக்களின் மைக்கை பிடிச்சு கொண்டு தூங்குவது.இது எனது கண்ணோட்டம்.🖐️

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் ரோட்டு கூட்டினாலும் நல்ல  சம்பளம்.

உங்களுக்கு,..எங்களுக்கு நல்ல சம்பளம் தான்  ஜேர்மன்காரன். காணாது என்கிறார்கள்  .....ஒவ்வொரு வருடமும் கூட்டினாலும்.  காணாது என்கிறார்கள் 

இலங்கையிலும் கூட   கூலி தொழிலுக்கு. இப்போது நல்ல சம்பளம் தான்   நான் இங்கே 1985 இல்   5 மார்க்  வேலை செய்துள்ளேன்,..முறிந்து. வேலை செய்து  பொருள்கள் வேண்டி சமைத்து சாப்பிட்டு உள்ளேன்   

ஏன்.  இவர்கள் இருக்கும் கூலி வேலையை செய்யக்கூடாது  ??? 

இல்லாத அரசாங்க வேலையை எப்படி கொடுக்க. முடியும்?? 

[பட்டதாரிகளுக்கு இது புரியவில்லை   வேலை வெற்றிடங்கள் இருந்தால் கோரலாம் ]

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 05:22, தமிழ் சிறி said:

எல்லோரும் அரச உத்தியோகத்தையே விரும்புகின்றனர்.
இலங்கையில் 18 பேரில் ஒருவர் அரச உத்தியோத்தில் இருப்பதாக வாசித்த நினைவு. இது உண்மையானால், ஏழை நாட்டிற்கு மிக அதிகம்.

எமது நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை சீர் செய்து… எட்டாம் வகுப்புகளில் இருந்தே  தொழில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது… பல சுய தொழில் முனைவோர் உருவாகுவார்கள்.

எல்லா அரசாங்கங்களும் தினமும் அறிக்கை மழையாக பொழிந்து, வாயால்… வடை சுட்டுக் கொண்டு இருந்தால், உலகின் முதலாவது பிச்சைக்கார நாடாக ஶ்ரீலங்கா வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 அரசாங்கம் மக்களுக்கு வேலை தர வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே  மண்டையில் ஊறிவிடுகிறது. 

படிப்பை  முடித்து  என்ன செய்ய்ப்போறதாக உத்தேசம்? என்ன,.......ஒரு பென்சன் கிடைக்கிற வேலையாப் பார்த்தாப் போச்சு ......🤨

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் முரண்பாடு!

யாழில் பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் முரண்பாடு!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது.

இதன் போது போராட்டக்காரர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். எனினும் நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிஸாருடன் தர்க்கம் ஏற்பட்டது.

இதனைத்  தொடர்ந்து ஆளுநர்  போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும்  ஆளுநர் உறுதிமொழி வழங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1417418

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

அரச வேலை செய்தவர்களுக்கு சோசலும் வரும்.ஓய்வூதியப் பணமும் வரும்.

இது   புதிதாக கேள்விபடுகிறேன். புதுமையாக உள்ளது.  ஓய்வூதிய பணமும் அள்ளி கொடுத்து சோசல் பணமும் அள்ளி அமெரிக்காவில் கொடுப்பார்கள். அப்போ அமெரிக்காவில்அரச வேலை செய்பவர் ஓய்வு பெற்ற பின்பு டொலர் கோடீஸ்வரன்.

 ரசோதரன் அண்ணா அரச வேலை தானே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இங்கு வேலை செய்யும் போது எல்லோருமே சோசலுக்கு பணம் கட்ட வேண்டும்.

முன்னர் 62 வயது வந்ததும் 100 வீதமும் எடுக்கலாம்.

இப்போது 67.4 வயது வந்தாலே முழு தொகையும் எடுக்கலாம்.

இந்த முழுத்தொகை வரமுதலே சோசல் எடுத்தால் வருடம் 18 ஆயிரம் டாலருக்கு மேல் உழைத்தால் 100 வீதம் ரைக்ஸ் கட்ட வேண்டும்.

அரச தொழிலில் உள்ளவர்களுக்கு விரும்பிய வயதுவரை வேலை செய்யலாம்.ஓய்வூதிய பணம் கட்டுவார்கள்.

அவர்களுக்கு ஓய்வின் பின் ராஜ வாழ்க்கை.இரண்டு தொகையும் கிடைக்கும்.

ரசோதரன் மாதிரி கம்பனிகளில் வேலை செய்பவர்கள் ஓய்வூதியத்திற்குப் பதிலாக 401K  ஐ கட்டுவார்கள்.இதை 1980 இல் அறிமுகப்படுத்தினார்கள்.

நான்  Limousine Driver ஆக வேலை செய்ததால் தனியே சோசலையே கட்டிக் கொண்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரசோதரன் அண்ணா அரச வேலை தானே

இல்லை விளங்க நினைப்பவன், நான் தனியார் நிறுவனங்களில் தான் எப்போதும் வேலை. ஆனால் 'அரசவேலை' போல வேலை செய்யச் சொல்லும் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவையை வழங்குவதாக முடிவெடுத்து போய்க் கொண்டிருப்பதால், நான் இன்று வேலையில் இருக்கின்றேனோ அல்லது இல்லையோ என்ற சந்தேகம் இடைக்கிடை வரும்...............🤣.

ஒரு பாகைமானியில் எலான் மஸ்க், விவேக் போன்றோர் ஒரு நுனியிலும், சிலர் அதற்கு நேர் எதிரான நுனியிலும், ஆனால் தனியார் நிறுவனங்களிலேயே இருக்கின்றார்கள்.

இங்கும் அரசவேலை பள்ளிக்கூடத்திற்கு போவது போலவே............. படிக்கத் தேவையில்லை, படிப்பிக்கவும் மாட்டார்கள், ஆனால் மணி அடிக்க உள்ளே இருக்க வேண்டும், கடைசி மணி அடிக்க வீட்டுக்கு கிளம்பவேண்டும். 

தனியார் நிறுவனங்களில், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் நேரக் கட்டுப்பாடு பொதுவாகக் கிடையாது, அதிகமாக சம்பாதிக்கலாம். அதிக சம்பளம், போனஸ், நிறுவனப் பங்குகள், 401கே முதலீடுகள் என்று கிடைக்கும். நிறுவனங்களின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து இவை அமையும்.

இங்கு அதிபராக ட்ரம்ப் வந்தவுடன், பங்குச்சந்தை ஏறி, இன்று பலர் புதிய 401கே கோடீஸ்வரர்கள்........ 

லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பு போல இடைக்கிடை தனியார் நிறுவனங்களில் எரிந்து சாம்பலாவதும் உண்டு......🤣.

மகளுக்கு முதல் வேலை தனியார் நிறுவனத்திலும், அரசாங்கத்திலும் கிடைத்தது. 'முதல் வேலையே அரசில் வேண்டாம், அம்மா................ வாழ்க்கையில் சில வருடங்களாவது வேலை செய்வது நல்ல அனுபவம். அரசில் பின்னர் சேரலாம். ஆனாலும் உன் இஷ்டம், பிள்ளை...................' என்ற பொறுப்பான ஒரு ஆலோசனையின் பின், மகள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.............😜.    

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 19:39, RishiK said:

யாழில் வித்தியாசமானப் போரட்டமாகத்தெரியலாம் ஆனால் மேலை நாடுகளில் எம்மில் பலர் மொப் வாளியுடன் தான் வாழ்க்கையைத் தொடங்குகினார்கள், ஆனால் இன்று எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள். 

நூறு வீதம் உண்மை...ஆனால் டான் தொலைகாட்சியில் (அந்த கால்ம் இந்த காலம் என்ற நிகழ்ச்சியில்)தாயகத்தில் இருக்கும் ஒருவர் பேட்டி அளிக்கின்றார் வெளிநாடுகளுக்கு போய் கீழ்தரமான் வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி வராதாம் அனுராவின் புதிய கல்விகொள்கையினால்...🤔

டொலர் பெறுமதியை கூட்டப்போகிறார்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 19:57, பகிடி said:

ஊரில் முதியவர்களைப் பார்க்க வேலைக்கு ஆட்கள் இல்லை, சரியான மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை. இந்த வேலையெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்களா? லூசுகள் 

சொந்த வீட்டு மலசல கூடத்தை துப்பரவு செய்தாலே  கெளரவ பிரச்சனையாக நினைப்பவர்கள் ...அதுவும் ஆண் பிள்ளைகளை எட்டியும் பார்க்கவிடமாட்டார்கள்..அம்மாமார்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2025 at 10:49, யாயினி said:

அது தானே.கொழும்பில் இருந்து யாழ்ப் பாணம்-யாழ்ப்பாணம் இருந்து மன்னார்--மன்னாரில் இருந்து பிறகு திரும்ப கொழும்பு , அங்காலை பார்னிமென்ட் -அப்புறம் யூருப்,  முகப் புத்தகம் ,வேலை பத்தாதோ அர்ச்சனாவுக்கு.அடுத்தவருக்கு யாரும் ரிக்கற் போட்டு குடுத்தால் உலக நாடுகளை சுற்றுவது...மீடியாக்களின் மைக்கை பிடிச்சு கொண்டு தூங்குவது.இது எனது கண்ணோட்டம்.🖐️

On 21/1/2025 at 09:43, கிருபன் said:

வடமாகாணத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

பட்டதாரிகளே வேலை யிருக்கு ஆனால் சம்பளம் கொடுக்க காசு இல்லை அரசாங்கத்திடம்  ...யாரவது புலம் பெயர் அமைப்புகளிடம் கேட்டு பாருங்கோ ...

பொலிஸ் தினைக்களத்தில் ,முப்படையில் ஒரளவு வேலைவாய்ப்பு இருக்கும் அரசு நினைத்தால் கொடுக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

பட்டதாரிகளே வேலை யிருக்கு ஆனால் சம்பளம் கொடுக்க காசு இல்லை அரசாங்கத்திடம்  ...யாரவது புலம் பெயர் அமைப்புகளிடம் கேட்டு பாருங்கோ ...

பொலிஸ் தினைக்களத்தில் ,முப்படையில் ஒரளவு வேலைவாய்ப்பு இருக்கும் அரசு நினைத்தால் கொடுக்கலாம்..

கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியரது பக்கத்தில் வேலையில்லா  பட்டதாரிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களோடு கதைத்து மாதம் 30.00 தொடக்கம் 40.000 சம்பளம் வாங்கித் தருவதாக எழுதி இருந்தார்.உங்கள் அரசாங்கம் எதற்காக இருக்கிறது....இப்படியே புலம் பெயர்ந்தவர்களிடம் வாங்கி கொடுக்கும் போது இரண்டு மாதத்தில் இந்த சம்பளம் பத்தாது என்பார்களே அதற்கு பின் என்ன திட்டம் என்று கேட்டு எழுதினேன்.இப்போ புலம்பெயர்ந்தவர்கள் பற்றி எழுதுவதை சற்று குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது பிரச்சனை வருமானம் தான் என்றால் ஆயிரம்  வழி உண்டு ஆனால் இவர்களுக்கு அரச உத்தியோகம் வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இவர்களது பிரச்சனை வருமானம் தான் என்றால் ஆயிரம்  வழி உண்டு ஆனால் இவர்களுக்கு அரச உத்தியோகம் வேண்டுமாம்.

அரச உத்தியோகத்தில் உள்ள சலுகைகளை தனியார் துறைக்கும் வழங்கினால் அரச உத்தியோகத்துக்கு அடிபட மாட்டார்கள் 

1 hour ago, யாயினி said:

கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியரது பக்கத்தில் வேலையில்லா  பட்டதாரிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களோடு கதைத்து மாதம் 30.00 தொடக்கம் 40.000 சம்பளம் வாங்கித் தருவதாக எழுதி இருந்தார்.உங்கள் அரசாங்கம் எதற்காக இருக்கிறது....இப்படியே புலம் பெயர்ந்தவர்களிடம் வாங்கி கொடுக்கும் போது இரண்டு மாதத்தில் இந்த சம்பளம் பத்தாது என்பார்களே அதற்கு பின் என்ன திட்டம் என்று கேட்டு எழுதினேன்.இப்போ புலம்பெயர்ந்தவர்கள் பற்றி எழுதுவதை சற்று குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்..

1 hour ago, யாயினி said:

கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியரது பக்கத்தில் வேலையில்லா  பட்டதாரிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களோடு கதைத்து மாதம் 30.00 தொடக்கம் 40.000 சம்பளம் வாங்கித் தருவதாக எழுதி இருந்தார்.உங்கள் அரசாங்கம் எதற்காக இருக்கிறது....இப்படியே புலம் பெயர்ந்தவர்களிடம் வாங்கி கொடுக்கும் போது இரண்டு மாதத்தில் இந்த சம்பளம் பத்தாது என்பார்களே அதற்கு பின் என்ன திட்டம் என்று கேட்டு எழுதினேன்.இப்போ புலம்பெயர்ந்தவர்கள் பற்றி எழுதுவதை சற்று குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்..

மருத்துவர் வெறியில் பதிவுகளை போடுகிறாரா அல்லது உண்மையிலயே அவருக்கு ........

அந்த பட்டதாரிகளை ஒன்றிணைத்து ஏதாவது தொழில் முயற்சியில் ஈடுபடுத்தலாம் புலம் பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.