Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?

adminFebruary 6, 2025
archuna-1170x658.jpg
ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை

இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா  பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே  தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு , கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாகவும். அதனால் தான் தனக்கு கீழ் நியமிக்கப்பட கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்யமுடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்
 
https://globaltamilnews.net/2025/210830/

  • Replies 53
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தேவையில்லாமல் எல்லாவற்றுளுள்ளும் மூக்கை நுழைப்பது,  சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிறது, பிறகு தமிழேண்டா என்று தலைவரின் பெயரை இழுக்கிறது, காணாமற் போன உறவுகளுக்கு தீர்வு சொல்லுறது, தையிட்டி விகாரை விடய

  • நந்தன்
    நந்தன்

    அது உரசி கழித்து கொள்ளலாம்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தியர்களையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. 👍 முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது. அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?

adminFebruary 6, 2025
archuna-1170x658.jpg
ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை

இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா  பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே  தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு , கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாகவும். அதனால் தான் தனக்கு கீழ் நியமிக்கப்பட கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்யமுடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்
 
https://globaltamilnews.net/2025/210830/

தங்கத்தின் சம்பளத்திற்கு கணக்கு காட்டவில்லையே..

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா  பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே  தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார்.

சித்தப்பாவுக்கு கொடுப்பதை யாரால் தட்டிக் கேட்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

தங்கத்தின் சம்பளத்திற்கு கணக்கு காட்டவில்லையே..

அந்தப் பெண் அர்ச்ச்னாவுக்காக வாதாடுவதற்கு பெறும் சம்பளம் லட்சக்கணக்கில் என்று அர்ச்சனாவின் முகப் புத்தகத்தில் யாரோ எழுதி கிடந்தது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

படையினரைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்றுவேன் - அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, யாயினி said:

அந்தப் பெண் அர்ச்ச்னாவுக்காக வாதாடுவதற்கு பெறும் சம்பளம் லட்சக்கணக்கில் என்று அர்ச்சனாவின் முகப் புத்தகத்தில் யாரோ எழுதி கிடந்தது.

தலை சுத்துதுங்க...வீட்டுச் செலவுக்கே காணமல் அண்ணன் மகன்சம்பளத்தை எடுப்பவருக்கு...வழக்குக்கு எப்படி காசு கொடுக்கமுடியும்..எங்கைய்யோ உதைக்குதே

35 minutes ago, nunavilan said:

படையினரைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்றுவேன் - அர்ச்சுனாவை எச்சரித்த பிரதி சபாநாயகர்!

வந்தவன் ..போனவன் எல்லோரும் வெருட்டும் அளவுக்கு அருச்சுனாவின் தரம் குறைந்து விட்டதா...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா  பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே  தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார்.

அருச்சுனா அண்ணன் மகன் உழைப்பை சுரண்டி எடுத்தால் அவர்   உணவுக்கும் செலவுக்கும் என்ன செய்வார்😟
வெளிநாட்டு தமிழர்களிடம் இருந்து நிதிபெற்று வேலைவாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை தொடங்க போவதாக சொன்னாரே

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல்வாதிகளை விட ஊழலை புடுங்குவோம் என வெளிக்கிடுபவர்கள் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

அன்னா ஹசாரே மூலம் நான் கற்ற பாடம் இது.

பெரிசு ஊழலை எதிர்க்குது எண்டு நானும் சப்போர்ட் பண்ணினா, சைக்கிளை அப்படியே கொண்டு போய் மோடி வீட்டு போர்ட்டிகோவில் நிப்பாட்டி விட்டார் 🤣.

இதே போலத்தான் இன்னொருவர் தமிழ்நாட்டில், 18 வயதில் தன் முகசாயலில் ஒரு புதிய மகனை அறிமுகம் செய்தார்.

அவரும் ஊழல் எதிர்ப்பாளர் என தொடங்கியவர்தான்.

இப்போ இவர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

அன்னா ஹசாரே மூலம் நான் கற்ற பாடம் இது.

பெரிசு ஊழலை எதிர்க்குது எண்டு நானும் சப்போர்ட் பண்ணினா, சைக்கிளை அப்படியே கொண்டு போய் மோடி வீட்டு போர்ட்டிகோவில் நிப்பாட்டி விட்டார் 🤣.

🤣..................

அது ஒரு கனவுக் காலம்............ அன்னா ஹசரேவிற்கு ஆதரவாக இங்கே மெழுகுவர்த்தி ஊர்வலம் கூட நடந்தது. என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த பல இந்தியர்கள் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியும் இருந்தனர்.

அடுத்த நாளே பெரிய எல்சிடி அல்லது பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டிகளை வரி எதுவும் கட்டாமல் எப்படி அவர்களின் விமான நிலையங்களினூடாக எடுத்துப் போவது என்று அவர்கள் ஆலோசனை செய்ததையும் கண்டேன். மெழுகுவர்த்தி எரிந்து முடிய, ஊழலை ஒழிக்கும் சிந்தனையும் முடிந்து விட்டது போல............

இவர்களையா அன்னா ஹசரே நம்புகின்றார், ஐயோ பாவம் அவர் என்று நினைக்க, அந்த மனிசனும் இன்னொரு பக்கம் இழுபட்டு போய்விட்டது. ஊழல் மட்டும் எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்கின்றது...........🤣.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

வந்தவன் ..போனவன் எல்லோரும் வெருட்டும் அளவுக்கு அருச்சுனாவின் தரம் குறைந்து விட்டதா...

தேவையில்லாமல் எல்லாவற்றுளுள்ளும் மூக்கை நுழைப்பது,  சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிறது, பிறகு தமிழேண்டா என்று தலைவரின் பெயரை இழுக்கிறது, காணாமற் போன உறவுகளுக்கு தீர்வு சொல்லுறது, தையிட்டி விகாரை விடயத்தில் தீர்வு சொல்லுறதுக்கு யார் இவர்? இவருக்கு மேலேயே ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், வழக்குகள். இதில தேவையில்லாத பிரச்சனைகளை காவிக்கொண்டு திரியிறார். காணொளி பைத்தியம் என்று நேரடியாகவே சொல்லி கேலி செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

சாவகச்சேரியில் நடந்த முதலாவது இவரது குரலில் இருந்தே சில சந்தேகங்களும் கேள்விகளும் எனக்கு இவர் மேல் உள்ளன. இவரது தொடர்ச்சியான செயற்பாடுகள் அவற்றை மேலும் மேலும் வலுவூட்டுகின்றனவே தவிர....?

ஆனால் அந்த மக்களை குறைசொல்ல முடியாது. தலைவர்கள் இல்லாத மக்கள் இவ்வாறு தான் குழிகளுக்குள் விழுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊழல் அல்ல.

வேலை இருக்கிறது, அதை குடும்பத்தவருக்கு கொடுத்தது, (அப்படி கூடாது இலங்கையில் என்று இல்லை என்றே நினைக்கிறன். )

சம்பளத்தை அன்னாரின் மகன் அர்ச் க்கு கொடுக்கிறார் - இதுக்கும் எதாவது உள் இணக்கப்பாடுகள் - அண்ணரின்  மகன் நேரடியக அரச   இயக்குனர் மற்றும் சட்டவாக்க திரையில் நேரடி அனுபவம் பெறுவது, தொடர்புகள் ஏற்டுவது (அன்னாரின் மகனுக்கு அது தெரியாவிட்டால் அஹு வேறு விடயம்) ... என்று   எல்லோருக்கும் இந்த அனுபவம்  கிடைக்காது, குறிப்பாக அவரின் அண்ணரின் மகனின் வயதில், இப்படியான வேலையில்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதே போலத்தான் இன்னொருவர் தமிழ்நாட்டில், 18 வயதில் தன் முகசாயலில் ஒரு புதிய மகனை அறிமுகம் செய்தார்.

அவரும் ஊழல் எதிர்ப்பாளர் என தொடங்கியவர்தான்.

இப்போ இவர்.

அன்னா ஹசாரேவை தெரியவில்லை தமிழ்நாட்டு ஏமாற்றுகாரரை நன்றாக தெரியுமே. அர்ச்சுனாவிற்கே இப்படியான தீய எண்ணங்கள் அந்த ஆளை பார்த்து தான் தோன்றி இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

🤣..................

அது ஒரு கனவுக் காலம்............ அன்னா ஹசரேவிற்கு ஆதரவாக இங்கே மெழுகுவர்த்தி ஊர்வலம் கூட நடந்தது. என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த பல இந்தியர்கள் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியும் இருந்தனர்.

அடுத்த நாளே பெரிய எல்சிடி அல்லது பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டிகளை வரி எதுவும் கட்டாமல் எப்படி அவர்களின் விமான நிலையங்களினூடாக எடுத்துப் போவது என்று அவர்கள் ஆலோசனை செய்ததையும் கண்டேன். மெழுகுவர்த்தி எரிந்து முடிய, ஊழலை ஒழிக்கும் சிந்தனையும் முடிந்து விட்டது போல............

இவர்களையா அன்னா ஹசரே நம்புகின்றார், ஐயோ பாவம் அவர் என்று நினைக்க, அந்த மனிசனும் இன்னொரு பக்கம் இழுபட்டு போய்விட்டது. ஊழல் மட்டும் எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்கின்றது...........🤣.   

ஹசாரேயை விட கிரண் பேடி அடித்த யூ டர்ன் இன்னும் மெய்சிலிர்க்க வைத்தது.

பிரசாந்த் பூஷணும் பின்னர் ஏதோ சிக்கலில் மாட்டி கொண்டார் என நினைக்கிறேன்.

இப்பொ கேஜ்ரிவால் மீதும் ஊழல் வழக்கு.

ஒரு காலத்தில் தான் கறுப்பு பணமாகத்தான் சம்பளம் வாங்கினேன் என்பதை மேடையில் ஏற்று கொண்ட ரஜனி, ஷிஷ்டம் சேஞ் பற்றி இஷ்டம் போல் கதைக்கவில்லையா🤣.

இலங்கையில் இனவாத ஒழிப்பும், இந்தியாவில் ஊழல் ஒழிப்பும் வெறும் கோசங்கள் மட்டுமே.

36 minutes ago, Kadancha said:

இது ஊழல் அல்ல.

வேலை இருக்கிறது, அதை குடும்பத்தவருக்கு கொடுத்தது, (அப்படி கூடாது இலங்கையில் என்று இல்லை என்றே நினைக்கிறன். )

சம்பளத்தை அன்னாரின் மகன் அர்ச் க்கு கொடுக்கிறார் - இதுக்கும் எதாவது உள் இணக்கப்பாடுகள் - அண்ணரின்  மகன் நேரடியக அரச   இயக்குனர் மற்றும் சட்டவாக்க திரையில் நேரடி அனுபவம் பெறுவது, தொடர்புகள் ஏற்டுவது (அன்னாரின் மகனுக்கு அது தெரியாவிட்டால் அஹு வேறு விடயம்) ... என்று   எல்லோருக்கும் இந்த அனுபவம்  கிடைக்காது, குறிப்பாக அவரின் அண்ணரின் மகனின் வயதில், இப்படியான வேலையில்.

பா உ க்கள் தங்கள் பிரேத்தியேக செயலாளராக உறவினரை வைப்பது இலங்கையிலும், யூகேயிலும் கூட ஏற்று கொள்ளபட்ட நடைமுறைதான்.

ஆனால் ஆய்வு அலுவலகராக நியமிப்பது தக்க வழிமுறைகள் வழி வர வேண்டும்.

அதைவிட அரச ஊழியர் ஒருவருக்கு அரசு கொடுக்கும் சம்பளத்தை, அவரின் மேலதிகாரி ஸ்தானத்தில் உள்ளவர் பெறக்கூடாது.

அவருக்கு experience தான் வேணும், சம்பளம் வேண்டாம் என்றால் அதை திறைசேரிக்கு மீள கொடுக்க வேண்டும்.

இது ஊழல்தான். ஆனால் மிக சின்ன ஊழல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஊழல்வாதிகளை விட ஊழலை புடுங்குவோம் என வெளிக்கிடுபவர்கள் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

அன்னா ஹசாரே மூலம் நான் கற்ற பாடம் இது.

பெரிசு ஊழலை எதிர்க்குது எண்டு நானும் சப்போர்ட் பண்ணினா, சைக்கிளை அப்படியே கொண்டு போய் மோடி வீட்டு போர்ட்டிகோவில் நிப்பாட்டி விட்டார் 🤣.

இதே போலத்தான் இன்னொருவர் தமிழ்நாட்டில், 18 வயதில் தன் முகசாயலில் ஒரு புதிய மகனை அறிமுகம் செய்தார்.

அவரும் ஊழல் எதிர்ப்பாளர் என தொடங்கியவர்தான்.

இப்போ இவர்.

M. Karunanidhi - Movies, Biography, News, Age & Photos | BookMyShow 

ஊழலின் பிதாமகனே  கருணாநிதிதான்.
சர்க்கரை ஊழல் என்று ஆரம்பித்து... கூவம் ஆற்று ஊழல் என்று 
வேறை லெவலில் விஞ்ஞான  ஊழல் செய்த ஆள். 

முதல் முறையாக  ஊழலுக்காக இந்தியாவில் ஆட்சி கலைக்கப் பட்டதும்
தி.மு.க.வின் கருணாநிதி ஆட்சி  தான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அன்னா ஹசாரேவை தெரியவில்லை தமிழ்நாட்டு ஏமாற்றுகாரரை நன்றாக தெரியுமே. அர்ச்சுனாவிற்கே இப்படியான தீய எண்ணங்கள் அந்த ஆளை பார்த்து தான் தோன்றி இருக்கும்

அதே. எழுத நினைத்தேன். பிறகு சிலர் டிரிகர் ஆகி விடுவார்கள் என்பதால் விட்டு விட்டேன்🤣

11 minutes ago, தமிழ் சிறி said:

M. Karunanidhi - Movies, Biography, News, Age & Photos | BookMyShow 

ஊழலின் பிதாமகனே  கருணாநிதிதான்.
சர்க்கரை ஊழல் என்று ஆரம்பித்து... கூவம் ஆற்று ஊழல் என்று 
வேறை லெவலில் விஞ்ஞான  ஊழல் செய்த ஆள். 

முதல் முறையாக  ஊழலுக்காக இந்தியாவில் ஆட்சி கலைக்கப் பட்டதும்
தி.மு.க.வின் கருணாநிதி ஆட்சி  தான்.

இந்தா எழுதாமலே ஆயிட்டார் அண்ணை 🤣.

——-

ஓம் கருணாநிதிதான் தமிழ் நாட்டில் ஊழலின் பிதா,  சுதன்,பரிசுத்தாவி,  பேரன், பூட்டன் எல்லாமே 🤣

அதில் மாற்று கருத்தே இல்லை.

ஆனால் தமிழ் நாட்டுக்கு அப்பால் ஊழல் இந்தியாவின் ஒவ்வொரு படி நிலையிலும் வியாபித்து இருப்பதற்கு அவர் பெரிய காரணம் இல்லை. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால் தமிழ் நாட்டுக்கு அப்பால் ஊழல் இந்தியாவின் ஒவ்வொரு படி நிலையிலும் வியாபித்து இருப்பதற்கு அவர் பெரிய காரணம் இல்லை. 

இந்தியர்களையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. 👍

முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது.
அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள்.
ஆனால் இப்போ... எங்கும் ஊழல் பரவி உள்ளது என நினைக்கின்றேன்.
பாடசாலை அதிபர்களே... ஊழல் செய்யும் அளவிற்கு நாடு புரையோடிப்  போயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தலைவர்கள் இல்லாத மக்கள் இவ்வாறு தான் குழிகளுக்குள் விழுவார்கள்

இவர்கள்தான் ஏமாற்றுக்காரரின் முதல். இவர்களை தேடியே வலை விரிப்பார்கள். யாரைத்தான் நம்புவது மக்கள், தங்கள் துயர் களைவார்களென்று?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

தங்கத்தின் சம்பளத்திற்கு கணக்கு காட்டவில்லையே..

அது உரசி கழித்து கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது.
அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள்.
ஆனால் இப்போ... எங்கும் ஊழல் பரவி உள்ளது என நினைக்கின்றேன்.
பாடசாலை அதிபர்களே... ஊழல் செய்யும் அளவிற்கு நாடு புரையோடிப்  போயுள்ளது.

ஓம்….கசப்பான உண்மை.

6 minutes ago, நந்தன் said:

அது உரசி கழித்து கொள்ளலாம்

செய்கூலி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியர்களையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. 👍

முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது.
அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள்.
ஆனால் இப்போ... எங்கும் ஊழல் பரவி உள்ளது என நினைக்கின்றேன்.
பாடசாலை அதிபர்களே... ஊழல் செய்யும் அளவிற்கு நாடு புரையோடிப்  போயுள்ளது.

புட்டும் தேங்காய் பூவும்.

முன்னரும் இருந்திருக்கும் சமூகவலைத் தளங்கள் செல்போனுகள் இல்லாததால் முடங்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை மாசற்றவர்களக காட்ட முற்பட்ட “புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள்” எனப்படுவோரால் செய்யப்பட்ட,   மில்லியன் கணக்கான மக்கள் பணத் திருட்டு ஊழலை   மறைப்பதுவும் ஒருவகை ஊழல்தான். தமிழீழ தேச மீட்பு நிதி  என்று மக்களை ஏமாற்றி தமது குடும்பங்களுக்கு பணத்தை தேடிய இவர்களை போல மோசடி ஊழல் பேர்வழிகளை  மறைத்து அடுத்த நாட்டில் ஊழலை தேடுவது அபத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அது உரசி கழித்து கொள்ளலாம்

தங்கம் தேஞ்சு போய்விடும்

அதான் அர்ச்சனாவுக்கு பல புலம்பெயர் கூட்டங்கள் அவருக்கு காசு அனுப்புவதாக போனுக்கு மேல் போன் போட்டு சொல்லுகிறார்கள் பிறகு ஏன் பயப்படுவான் அவருக்கு காசு கிடைக்கும் வரைக்கும். அந்தாள் பல்டி அடிச்சு திரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

புட்டும் தேங்காய் பூவும்.

முன்னரும் இருந்திருக்கும் சமூகவலைத் தளங்கள் செல்போனுகள் இல்லாததால் முடங்கியிருக்கும்.

உண்மைதான். ஊழல்வாதிகளை மக்களுக்குக் காட்டுவதற்கான நெஞ்சுரம் கொண்ட எவரும் முன்னர் இல்லாததாலும் முடங்கியிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஓம் கருணாநிதிதான் தமிழ் நாட்டில் ஊழலின் பிதா,  சுதன்,பரிசுத்தாவி,  பேரன், பூட்டன் எல்லாமே 🤣

அதில் மாற்று கருத்தே இல்லை.

ஆனால் தமிழ் நாட்டுக்கு அப்பால் ஊழல் இந்தியாவின் ஒவ்வொரு படி நிலையிலும் வியாபித்து இருப்பதற்கு அவர் பெரிய காரணம் இல்லை. 

 இது  ஒரு மதத்தை அவமதிக்கும்சொற் பிரயோகம். மும் மூர்த்திகள்  மூவொரு கடவுள் , என சொல்லலாமே . 

Edited by நிலாமதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.