Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த முன்னாள் அதிபரொருவர்  உயிரிழந்துள்ளார். சி.விசுவாசம் (வயது 63) என்ற ஓய்வுநிலை அதிபரே உயிரிழந்தவராவார்.
 
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குருமார்கள் பயனித்த பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேசத்துக்குத் தனியார் வகுப்புக்குக் கற்பிக்கச் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அதிபரை பிரதேச மக்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்றுக் காலை சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேகநபர்களாக நால்வரைக் கைது செய்துள்ளனர். இன்னொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைதானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி. 😢

புலம் பெயர் தேசத்திலிருந்து செல்லும்... கொழுப்பு மிஞ்சியதுகளால்,

தனது வருமானத்துக்காக, ஒய்வு பெற்ற பின்பும் உழைத்துக் கொண்டு இருந்த

அப்பாவி மனிதனை, பாவிகள் அடித்துக் கொன்று விட்டார்கள்.

எங்கே போகின்றது நம் இனம்.?

அகால மரணத்தை தழுவிய முன்னாள் அதிபருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மிகவும் துயரமான செய்தி. 😢

புலம் பெயர் தேசத்திலிருந்து செல்லும்... கொழுப்பு மிஞ்சியதுகளால்,

பழைய சிநேகிதத்தில்...... சும்மா கண்ட கசிப்பை குடித்து சாக்கிரங்களே என்று ஒரு போத்திலை கொடுத்ததால் ....... குடிச்சிட்டு அதிபரையே போட்டு தள்ளுவார்கள் என்று அவனுக்கு எப்படி தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குருமார்கள் பயனித்த பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேசத்துக்குத் தனியார் வகுப்புக்குக் கற்பிக்கச் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்

4 hours ago, பிழம்பு said:

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில்

என்னப்பா சாவகச்சேரி இப்படி போகின்றது ....சண்டியர்கள் அட்டகாசம்...பா.உ எப்படியோ அது போல ☹️

பிக்குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல்

அதிபர் மீது தாக்குதல்

என்ன என்றே புரியவில்லை ...அது சரி இவர் எந்த நாட்டில் இருந்து போனவராம்....இந்த காலகட்டத்தில் செய்திகளை நம்ப முடியவில்லை...

57 minutes ago, Maruthankerny said:

பழைய சிநேகிதத்தில்...... சும்மா கண்ட கசிப்பை குடித்து சாக்கிரங்களே என்று ஒரு போத்திலை கொடுத்ததால் ....... குடிச்சிட்டு அதிபரையே போட்டு தள்ளுவார்கள் என்று அவனுக்கு எப்படி தெரியும்?

தமிழ் தேசியவாதிகளின் பாரில் தான் இவர்கள் மது அருந்தினார்கள் என சில சமயம் தீவிர தேசபக்தர்கள் வந்து கருத்து வைப்பினம் ...நான் எஸ்கேப்

  • கருத்துக்கள உறவுகள்

சவாகச்சேரி 2004 முதலே கிட்டத்தட்ட இப்படித்தான். ஒரு படம் பார்க்க திரையரங்கம் செல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையான காலப்பகுதியில் நிறைய பேருக்கு உதவியவரென்றும் அதனால் நிறைய பிரச்சனைசந்தித்து தடுப்புகளிலும் இருந்து வெளி வந்வரென்றும் இன்று ஒரு பதிவு படித்தேன்.நாம் என்ன செய்ய முடியும்..?.ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

அது சரி இவர் எந்த நாட்டில் இருந்து போனவராம்

கனடா??? பெரும்பாலும் கனடாவில் இருந்து வருபவர்கள் ஊரிலும் சரி, அரசியலிலும் சரி அதிகமாக சிக்கலை தோற்றுவிப்பவர்கள். ஊரில் நடக்கும் அடாவடிகளையும், சொல்லும் தெனாவட்டான கதைகளையும் வைத்துச் சொல்கிறேன். போலீசார் இவர்களின் கைக்கூலிகள். நாங்கள் செய்வதை செய்துவிட்டு கனடாவிற்கு போய் விடுவோம், எங்களை யாரும் ஒன்றும் பண்ண முடியாதென சவால் வேறு விடுகிறார்கள். கனடா அரசாங்கம் இவர்கள் மேல் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள், ஏன் அடிக்கடி செல்கிறார்கள், தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். இது மனித உரிமை மீறல் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் நாட்டுக்கு வந்து, ஏழைகளுக்கு மனஉளைச்சலையும் அலைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அங்கே கஸ்ரப்பட்டு உழைப்பவர்களாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

கனடா என்றவுடன் எனக்கு கோபம்தான் (?) வருகுது..நடந்தது இது...நான் இங்கிருந்து போய் இறங்கியவுடன் என்னுடன் வந்த உறவினன் நண்பர்களுக் கொடுபதற்காக போத்தலாக வாங்கி அடுக்கினார்...நான் அப்படி எதுவும் வாங்கவில்லை...ஊர் போனதும் ..அவர் ஒருவாரம் முன் திரும்புவதால்..கொடுத்ததுபோக எஞ்சியஒன்றை என்னிடம் தந்து ..யாருக்கும் கொடுக்கும்படி சொன்னார்...நான் யரும் குடிப்பவர்களுக்கு என் கையால் கொடுக்கமாட்டேன்...வேறு வழி செய்கின்றேன்..அதன்படி..நான் பயண ம் புறப்பட முன்பு உறவினர் ஒருவரை நெல்லியடிக்கு அழைத்து ...பாருக்கு முன் கூட்டிசென்று..போத்தலை கொடுத்துவிட்டுச் சொன்னென்..இதை யாருக்கும் விற்று காசை வாங்கி நீயெடு...இது எனக்கு முன்னால் செய்யப் பட்டது...இது உண்மை...அதாவது கனடாவிலும் கண்ணகிகள் (கண்ணகன்)>.இருக்கிறார்கள் என்பதை சாத்தான்...ஏற்றுக் கொள்ள வேண்டும் ...இப்படியும் மனிதர்கள் நேர்மையாக உழைத்து...குடி கூத்து இல்லாமலும் கனடாவில்..வாழ்கிறார்கள்... என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்...எழுந்தமானத்தில் எதையும் எழுதக்கூடாது...நீங்கள் ஆதாரத்துடன் குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

கனடா??? பெரும்பாலும் கனடாவில் இருந்து வருபவர்கள் ஊரிலும் சரி, அரசியலிலும் சரி அதிகமாக சிக்கலை தோற்றுவிப்பவர்கள். ஊரில் நடக்கும் அடாவடிகளையும், சொல்லும் தெனாவட்டான கதைகளையும் வைத்துச் சொல்கிறேன்.

43 minutes ago, alvayan said:

கனடா என்றவுடன் எனக்கு கோபம்தான் (?) வருகுது..

இப்ப kனடாவிலிருந்து போறவர்கள்தான் பல தொழில் முயட்சிகளையும் செய்கிறார்கல் .ஒட்டு மொத்தமாக குறை கூறக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இவர்கள் அங்கே கஸ்ரப்பட்டு உழைப்பவர்களாக தெரியவில்லை.

1 hour ago, alvayan said:

நடந்தது இது...நான் இங்கிருந்து போய் இறங்கியவுடன் என்னுடன் வந்த உறவினன் நண்பர்களுக் கொடுபதற்காக போத்தலாக வாங்கி அடுக்கினார்...நான் அப்படி எதுவும் வாங்கவில்லை...ஊர் போனதும்

நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள், எப்போ நாட்டுக்கு வந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்கிற விபரம் எதுவும் எனக்கு தெரியாது. அதை நான் கேட்கவுமில்லை. சிலர் நாட்டுக்கு வருகை தந்து போடும் அலங்கோலங்களை எழுதினேன். அதற்கு உங்களுக்கு கோபம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

சிலர் இங்கு வந்து செய்யும் கூத்துக்களை பார்த்தால், அவர்களால் சிலர் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்தால், இவர்களை ஏன் கனடா அரசு அடிக்கடி நாட்டுக்கு வர அனுமதியளிக்கிறது என்று தோன்றுகிறது? அங்கே சும்மா கொடுக்கும் பணத்தை கொண்டுவந்து இங்கு கொழுத்தாடு பிடிக்குதுகள். கனடா போவதற்கு முன்னும் அவர்கள் அப்படித்தான். அது அவர்களின் பிறவிக்குணம். வருடக்கணக்கில் வந்து வேலை வெட்டி இல்லாமல் பிரச்சனை கொடுக்கிறார்கள் என்றால்; அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்? காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

பொதுவாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தொடர்ந்து வருகை தந்து பல மாதங்கள் தங்கி இவ்வாறு செலவு செய்கின்றனர் என்றால் நிச்சயமாக இவர்கள் உழைப்பவர்களாக இருக்கவோ குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்பவர்களாகவோ இருக்கவோ வாய்ப்பில்லை. எனவே மிகவும் ஆபத்தான பேர்வழிகள். கவனம்.

ஊருக்கு ஒவ்வொரு விழிப்புணர்வு அமைப்புக்களை உருவாக்கி இவர்களை கவனித்து அனுப்பாமல் விட்டால் வித்யாவுக்கு நடந்தவை தொடரும். நாம் கண்ட கனவு தேசம் சின்னாபின்னமாகி போவதை எம் கண்முன்னே காணவேண்டிவரும்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை விட அவர்களது பணம் பேசுகிறது. அரச கருவிகளும் அவர்கள் பக்கம். வித்தியா வழக்கிலும் போலீசாரே குற்றவாளிகளுக்கு உதவினர். இவர்களின் துணிவிலே இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், அதிலும் கொலை மிரட்டல் விடுகிறார்கள். தாங்கள் தங்கள் பணத்தினால் தப்பி விடுவோம் என்று சவால் வேறு விடுகிறார்கள். பாப்போம் எங்கே போய் முடிகிறது என்று? எப்படியும் ஒருநாள் சிக்கத்தான் போகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

மிகவும் துயரமான செய்தி. 😢

புலம் பெயர் தேசத்திலிருந்து செல்லும்... கொழுப்பு மிஞ்சியதுகளால்,

தனது வருமானத்துக்காக, ஒய்வு பெற்ற பின்பும் உழைத்துக் கொண்டு இருந்த

அப்பாவி மனிதனை, பாவிகள் அடித்துக் கொன்று விட்டார்கள்.

எங்கே போகின்றது நம் இனம்.?

அகால மரணத்தை தழுவிய முன்னாள் அதிபருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

குடித்தால் கண்டவன் நின்றவன். .....எல்லாம் அடிக்க வேண்டுமா??? ஜேர்மனியிலும். குடிக்கிறான்கள். தான் எவருக்கும் அடிப்பது இல்லை கொலை செய்வதுமில்லை இவர்களின் மன வக்கிரம் ...வெளிநாட்டுக்கு போகவில்லையோ என்ற கவலை இவர்களிடம் பல மில்லியன் நட்ட ஈடு வேண்டி இறந்தவர் குடும்பத்திற்கு. கொடுக்க. வேண்டும்

வெளிநாட்டிலிருந்து போவோர். போததலுக்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் பத்து மரக்கன்றுகள். கொடுக்க வேண்டும் நடும்படி இது எனது தொகுதியில் உள்ள இடம் எங்களுக்கு பக்கத்து ஊர் ஆனால் போவது குறைவு அங்கேயிருந்து அடிக்கடி தினமும் கைதடிக்கு வருவார்கள்’’ 🤣. நிறைய வயல்கள். சூழவுள்ள இடம் நல்ல காற்று ஓட்டமுள்ள இடம் வருட இறுதியில் அந்த பகுதியில் சைக்கிளில். போக ரம்மியாமான. இடம் அளவான குளிர் அளவான வெப்பம் மற்றும் நல்ல சுத்தமான. காற்று ஒட்டம். என்பவற்றை அனுபவிக்க முடியும் மொட்டை கறுப்பன். புழுங்கல். அரிசி நல்ல சுவையாக இருக்கும்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியிலும். குடிக்கிறான்கள். தான் எவருக்கும் அடிப்பது இல்லை கொலை செய்வதுமில்லை இவர்களின் மன வக்கிரம்

வெளிநாட்டுப்பானம், உள்நாட்டுக்காரரை அப்படி செய்ய வைக்குதோ என்னவோ? எதுக்கு குடி வாங்கிக்கொடுக்கிறார்கள்? ஏதாவது பயனுள்ள, உள்ளளவும் நினைக்கத்தக்க பரிசை கொடுக்கலாமே? இவர்களால், அவர்கள் குடிகாரராகி, வீணான பிரச்சனைகளில் மாட்டி விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காவாலிகளால்... கொலை செய்யப் பட்ட,

அந்த ஒய்வு பெற்ற அதிபரின் உழைப்பை நம்பி...

வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் என்று

எத்தனை உயிர்கள் காத்துக் கொண்டு இருந்திருக்கும்.

எல்லாவற்றையும் கெடுத்து விட்டது... இந்தக் குடிகாரக் கூட்டம்.

இந்தச் செய்தியை... வாசித்ததில் இருந்து, மனம் மிகவும் வேதனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது ஊர்களில் ஏற்கனவே வாழ்க்கை போராட்டம். அப்படி இருக்க குடும்பத்தை சுமந்து கொண்டிருந்த தூணையே தகர்த்து விட்டார்கள்.கனடாவில் இருக்கும் கொலையாளிகளின் உறவினர்கள்,நண்பர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்வந்து மாதாந்த உதவிகளை செய்ய வேண்டும்.அதுதான் நீதியும் தர்மமும்.

அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

கனடா??? பெரும்பாலும் கனடாவில் இருந்து வருபவர்கள் ஊரிலும் சரி, அரசியலிலும் சரி அதிகமாக சிக்கலை தோற்றுவிப்பவர்கள். ஊரில் நடக்கும் அடாவடிகளையும், சொல்லும் தெனாவட்டான கதைகளையும் வைத்துச் சொல்கிறேன். போலீசார் இவர்களின் கைக்கூலிகள். நாங்கள் செய்வதை செய்துவிட்டு கனடாவிற்கு போய் விடுவோம், எங்களை யாரும் ஒன்றும் பண்ண முடியாதென சவால் வேறு விடுகிறார்கள். கனடா அரசாங்கம் இவர்கள் மேல் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள், ஏன் அடிக்கடி செல்கிறார்கள், தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். இது மனித உரிமை மீறல் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் நாட்டுக்கு வந்து, ஏழைகளுக்கு மனஉளைச்சலையும் அலைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அங்கே கஸ்ரப்பட்டு உழைப்பவர்களாக தெரியவில்லை.

இது சகல நாடுகளிலும் நடக்கின்ற ஒன்று ...இங்கு அவுஸ்ரேலியாவிலும் சிலர் இருக்கின்றனர் .இந்த நாட்டிலயே அண்மையில் வந்த (10 வருடங்களுக்குள்) நம்ம நாட்டு இளைஞர்கள் (சிலர் மட்டுமே)வீதியில் போதையில் இருப்பதை கண்டுள்ளேன் அது மட்டுமல்ல சில சமயம் வீதியில் செல்பவ்ர்களுக்கு நக்கல் அடிப்பதும் உண்டு ...

வெளிநாடுகளில் வாழும் வெள்ளை இனத்தவ்ர்களில் சிலர், எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும் வீடு அற்றோர் போல வாழ வேணும் என்று பஸ் ஸ்டான்ட் ,மற்றும் பூங்காவில் வாழ்கின்றனர் ...

அது போல இந்த புலம் பெயர் காவாலிகளும் ஒரு காலகட்டத்தில் அப்படி வாழ்க்கைக்கு செல்வார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப kனடாவிலிருந்து போறவர்கள்தான் பல தொழில் முயட்சிகளையும் செய்கிறார்கல் .ஒட்டு மொத்தமாக குறை கூறக்கூடாது .

இந்தியாவுக்கு காளிஸ்தான் போராளிகளை பிடிக்காது ..

அது போல தமிழர் போராட்டங்களையும்,இந்தியா சிறிலங்கா விரும்பவில்லை..

கனடாவிலிருந்து பஞ்சாப் தேசிய இன அடையாளத்துக்காக போராடுகிறார்கள் ..அதற்காக இந்தியா புலனாய்வாளர்கள் பல திட்டமிட்ட சதிகளை கனடா அரசுக்கும் ,பஞ்சாப் மக்களுக்கும் எதிராக செயல் படுத்துகின்றனர் ...

அந்த வகையில் இதுவும் இருக்கலாம் ..கனடா அரசு தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது அதை தடுப்பதற்கு என்றும் எடுத்து கொள்ளலாம்...

உலக அரசியல் அறம் சார்ந்து நடக்கவில்லை ..

11 hours ago, விசுகு said:

பொதுவாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தொடர்ந்து வருகை தந்து பல மாதங்கள் தங்கி இவ்வாறு செலவு செய்கின்றனர் என்றால் நிச்சயமாக இவர்கள் உழைப்பவர்களாக இருக்கவோ குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்பவர்களாகவோ இருக்கவோ வாய்ப்பில்லை. எனவே மிகவும் ஆபத்தான பேர்வழிகள். கவனம்.

ஊருக்கு ஒவ்வொரு விழிப்புணர்வு அமைப்புக்களை உருவாக்கி இவர்களை கவனித்து அனுப்பாமல் விட்டால் வித்யாவுக்கு நடந்தவை தொடரும். நாம் கண்ட கனவு தேசம் சின்னாபின்னமாகி போவதை எம் கண்முன்னே காணவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

வெளிநாட்டுப்பானம், உள்நாட்டுக்காரரை அப்படி செய்ய வைக்குதோ என்னவோ? எதுக்கு குடி வாங்கிக்கொடுக்கிறார்கள்? ஏதாவது பயனுள்ள, உள்ளளவும் நினைக்கத்தக்க பரிசை கொடுக்கலாமே? இவர்களால், அவர்கள் குடிகாரராகி, வீணான பிரச்சனைகளில் மாட்டி விடுகிறார்கள்.

இப்போ எல்லாம் பொருட்களாக வாங்குவதை விட பணத்தை தான் அங்குள்ள மக்கள் பெருதும் விருப்ப பட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்..பொருட்களாக விருப்பபடுதாக இருந்தால் ஜபோன் 15 மேலும் என்னவெல்லாம் புதுசு, புதுசா வருகிறதோ அது எல்லாம் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கு.சாதரணமாக 5ம், ஆறாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தொடங்கும் ஒரு வித போட்டிகளே வளர, வளர இப்படியான பிரச்சனைகளை கொண்டு வருகிறது..ஊர் மக்களின் செயல்பாடுகள், கதைகளை கேட்டு, கேட்டு வெறுத்து போச்சு அண்ண.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இது சகல நாடுகளிலும் நடக்கின்ற ஒன்று ...இங்கு அவுஸ்ரேலியாவிலும் சிலர் இருக்கின்றனர் .இந்த நாட்டிலயே அண்மையில் வந்த (10 வருடங்களுக்குள்) நம்ம நாட்டு இளைஞர்கள் (சிலர் மட்டுமே)வீதியில் போதையில் இருப்பதை கண்டுள்ளேன் அது மட்டுமல்ல சில சமயம் வீதியில் செல்பவ்ர்களுக்கு நக்கல் அடிப்பதும் உண்டு ...

வெளிநாடுகளில் வாழும் வெள்ளை இனத்தவ்ர்களில் சிலர், எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தாலும் வீடு அற்றோர் போல வாழ வேணும் என்று பஸ் ஸ்டான்ட் ,மற்றும் பூங்காவில் வாழ்கின்றனர் ...

அது போல இந்த புலம் பெயர் காவாலிகளும் ஒரு காலகட்டத்தில் அப்படி வாழ்க்கைக்கு செல்வார்கள் ...

அது உண்மை, அண்மையில் நான் Pendle hill இற்கு போய்சா ப்பாடு வாங்கிவிட்டு அவனது காரை நோக்கிப் போகேக்க, 3 தமிழர்கள் நிறை வெறியுடன் footpath இல் வழியை மறைத்துகொண்டு நடந்து வந்து எதயோ சொன்னார்கள், நான் ignore பண்ணிகொண்டு போகேக்க தூஷண மழை பொழிந்தார்கள் எங்கள் தமிழர்கள். அப்பத்தான் நான் யோசிச்சேன் இவங்கள ஏன் ஆஸ்திரேலியா இன்னமும் வச்சுக்கொண்டு இருக்குது, நல் நடத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த பலரை திருப்பி அனுப்பி விட்டது ( பாலா என்ற முடி திருத்துனர் நல்ல பெடியன் Ceylon cut இல் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெடியன் visa கிடைக்காமல் திரும்ப போட்டான் - பாலா தான் எனக்கு முடி திருத்துனர்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, யாயினி said:

இப்போ எல்லாம் பொருட்களாக வாங்குவதை விட பணத்தை தான் அங்குள்ள மக்கள் பெருதும் விருப்ப பட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்..பொருட்களாக விருப்பபடுதாக இருந்தால் ஜபோன் 15 மேலும் என்னவெல்லாம் புதுசு, புதுசா வருகிறதோ அது எல்லாம் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கு.சாதரணமாக 5ம், ஆறாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தொடங்கும் ஒரு வித போட்டிகளே வளர, வளர இப்படியான பிரச்சனைகளை கொண்டு வருகிறது..ஊர் மக்களின் செயல்பாடுகள், கதைகளை கேட்டு, கேட்டு வெறுத்து போச்சு அண்ண.

உதென்ன பிரமாதம். இன்னுமொரு பெரிய புதினம் சொல்லுறன் கேளுங்கோ..

ஊரில இருக்கிற இரத்த உரிமை சொந்தங்களுக்கே நீங்கள் காசு பணம் குடுக்கேல்லை எண்டால் அவ்வளவுதான். அதாவது அவையள் கேக்கிற நேரம் மணி குடுக்கேல்லை எண்டால் மனிசராயே மதிக்க மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragaa said:

நான் யோசிச்சேன் இவங்கள ஏன் ஆஸ்திரேலியா இன்னமும் வச்சுக்கொண்டு இருக்குது,

"நெல்லுக்கிறைத்த நீர் கசிந்துருகி புல்லுக்கும் அங்கே பாய்ந்தது." மனிதாபிமானம், இப்படியான சிக்கல்களை உருவாக்குகிறது. இவர்கள் எங்கே போனாலும் திருந்த மாட்டார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள், வடக்கில் ஆமி போலீசோடு முள்ளிவாய்க்கால் பேரழிவு நிறைவடையும் வரை நின்று சண்டித்தனம், சமூக சீரழிவு, களவு, சுகம் அனுபவித்தவர்கள் இன்று கலியாணம் என்கிற பெயரிலும், வேறு வழிகளிலும் கனடாவில் உள்ளனர். அதற்காக எல்லோரும் அப்படியானவர்கள் என்று நான் முத்திரை குத்தவில்லை. எத்தனையோ நல்ல உள்ளங்கள், தங்கள் வீடுகளை ஏழைகளுக்கு குடியிருப்பதற்கோ, சொந்தமாகவோ கொடுக்கிறார்கள். ஏழைப்பிள்ளைகளை பொறுப்பெடுத்து படிப்பிக்கிறார்கள். தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீடு பராமரிப்பதற்காக மாதாந்த வருமானமாக பணம் அனுப்புகிறர்கள். ஆனால் சில அற்பங்கள் தங்களை பிரபல்யப்படுத்த இப்படியான இழி வேலைகளை செய்து தங்களை முதன்மைப்படுத்துகிறார்கள். ஒரு முசுறு கடிக்க கூட்டோடு நசுக்கப்படுவது இயல்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மாற்று கருத்துக்கள் எதையும் நான் வாசிக்கவில்லை ஆனால் ஒரு முன்னாள் அதிபரை அடித்து கொல்வது எந்த சமூகத்தில் நடந்து உள்ளது நிழலி சொல்வது போல் புலிகள் பிஸ்ட்டல் குழுவையாவது விட்டு சென்று இருக்கலாம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragaa said:

அது உண்மை, அண்மையில் நான் Pendle hill இற்கு போய்சா ப்பாடு வாங்கிவிட்டு அவனது காரை நோக்கிப் போகேக்க,

இந்த இடத்தில்த் தான் எனது அண்ணனும் வசிக்கிறார்.

ஸ்ரேசன் பக்கத்தில் எனுது ஒன்றுவிட்ட அண்ணனின் மகன் சாப்பாட்டுக்கடை ஒன்று போட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ragaa said:

அது உண்மை, அண்மையில் நான் Pendle hill இற்கு போய்சா ப்பாடு வாங்கிவிட்டு அவனது காரை நோக்கிப் போகேக்க, 3 தமிழர்கள் நிறை வெறியுடன் footpath இல் வழியை மறைத்துகொண்டு நடந்து வந்து எதயோ சொன்னார்கள், நான் ignore பண்ணிகொண்டு போகேக்க தூஷண மழை பொழிந்தார்கள் எங்கள் தமிழர்கள். அப்பத்தான் நான் யோசிச்சேன் இவங்கள ஏன் ஆஸ்திரேலியா இன்னமும் வச்சுக்கொண்டு இருக்குது, நல் நடத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த பலரை திருப்பி அனுப்பி விட்டது ( பாலா என்ற முடி திருத்துனர் நல்ல பெடியன் Ceylon cut இல் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெடியன் visa கிடைக்காமல் திரும்ப போட்டான் - பாலா தான் எனக்கு முடி திருத்துனர்)

நானும் அதே மூவரை பற்றி தான் எழுதியிருந்தேன் ...நான் சென்ற நேர்ம் காலை 9 மணிக்கு அந்த நேரத்திலயே ஆட்கள் தடுமாறுகிறார்கல் ...மாலை 9 மணிக்கு மேல் என்றால் சகித்து கொள்ளலாம் ...காலையிலயே இப்படி என்றால்...அதுவும் வேலை நாள் ஒன்றில்...

17 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த இடத்தில்த் தான் எனது அண்ணனும் வசிக்கிறார்.

ஸ்ரேசன் பக்கத்தில் எனுது ஒன்றுவிட்ட அண்ணனின் மகன் சாப்பாட்டுக்கடை ஒன்று போட்டுள்ளார்.

உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.