Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது...

மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்...

மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்…

பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை…

அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது…

சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்…

இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்…

இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்...

இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது...

இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்..

இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்..

—-—

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்...

நானும் அவருடை இந்த மாதிரியான கருத்துக்களை வன்மையாக் கண்டிக்கின்றேன்

அவருக்கான எனது ஆதரவையும் வாபஸ் பெற்றுவிட்டேன்

நாங்கள் தமிழர்களும் இனவாதம் பேசுபவர்கள் தான் என்பதற்கு அண்மையில் இவர் பேசும் உரைகள் ஆதாரம்.

இஸ்லாமியர்கள் மீது இவர் மிகவும் காட்டமாக உள்ளார்

என்பது கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமே

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்..

ஓணாண்டி டாக்ரருக்கு இன்னம் இன்னும் ஆதரவுகள் கூடிக் கொண்டு போகிற மாதிரியே தெரிகிறது.

அவரது நடவடிக்கைகள் கொந்தல் மாம்பழம் போல.

கொந்தலைத் தவிர்த்தால் மற்றையவை மிகவும் சுவையாக இருக்கும்.

கடந்த பாராளுமன்றில் அவர் பேசியவைகளை கொந்தலைத் தவிர்த்து மற்றையவைகளை மிகவும் வரவேற்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தல்களிலும் கணிசமான ஆதரவுகள் இருக்கும் போலவே தெரிகிறது.

உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆவலுடன் இருந்தேன்.

தமிழ்கட்சிகளின் வங்குரோத்து இவர்களை தூக்கி வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி டாக்ரருக்கு இன்னம் இன்னும் ஆதரவுகள் கூடிக் கொண்டு போகிற மாதிரியே தெரிகிறது

அரச்சனாவுக்கு ஆதரவு கூடிக்கொண்டு போகிறது என்றால், யாழ்பாண மாவட்டத்தில் மடையர்களும் காவாலிகளும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோகளும் அதிகரித்து சென்று கொண்டிருப்பதை உணர்ததுகிறது. அவரது பாராளுமன்ற உரைகள் அனைத்துமே தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய கேவலமான உரைகள் இவரை ஊக்குவிக்கும் இவரது ஆதரவாளர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்லது அரசியல் அறிவு, பொது அறிவு அற்றவர்களாகவே இருப்பார்கள்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, island said:

அரச்சனாவுக்கு ஆதரவு கூடிக்கொண்டு போகிறது என்றால், யாழ்பாண மாவட்டத்தில் மடையர்களும் காவாலிகளும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோகளும் அதிகரித்து சென்று கொண்டிருப்பதை உணர்ததுகிறது. அவரது பாராளுமன்ற உரைகள் அனைத்துமே தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய கேவலமான உரைகள் இவரை ஊக்குவிக்கும் இவரது ஆதரவாளர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்லது அரசியல் அறிவு, பொது அறிவு அற்றவர்களாகவே இருப்பார்கள்.

என்ன தம்பி இஞ்சாலை?

சீமானைப்பற்றி இனிக்கும் செய்தி ஒன்றுமில்லைப் போல.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தம்பி இஞ்சாலை?

சீமானைப்பற்றி இனிக்கும் செய்தி ஒன்றுமில்லைப் போல.

ஓ அப்ப நீங்களும் இந்த அர்சனா என்ற விஷசெடியின் ஆதரவாளரோ? தெரிந்த விடயம் தான் இனவெறியை யாரெல்லாம் கக்குகின்றார்களோ அவர்களை எல்லாம் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்பது.

அமெரிக்காவில் இனவெறி கட்டுக்கடங்காமல் அதிகரித்தால் உங்கள் கதையும் காலி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கடைக்குள் தலைவர்களை தேடும் இனத்தின் இன்றைய நிலை. அந்தந்த ஊர்களில் சேவை செய்பவர்களை தெரிவு செய்யாமல் இவ்வாறு படித்தவன் பட்டம் பெற்றவன் என்று தூக்கிப் பிடித்து நம்பி வாக்குபோட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவமானங்களை சுமந்து நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

அரச்சனாவுக்கு ஆதரவு கூடிக்கொண்டு போகிறது என்றால், யாழ்பாண மாவட்டத்தில் மடையர்களும் காவாலிகளும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோகளும் அதிகரித்து சென்று கொண்டிருப்பதை உணர்ததுகிறது. அவரது பாராளுமன்ற உரைகள் அனைத்துமே தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய கேவலமான உரைகள் இவரை ஊக்குவிக்கும் இவரது ஆதரவாளர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்லது அரசியல் அறிவு, பொது அறிவு அற்றவர்களாகவே இருப்பார்கள்.

இது தான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். வாசிப்பில்லை, உழைப்பில்லை, படிப்பை ஒழுங்காக முடிப்பதில்லை, வெளி நாடு போகும் திட்டம் தவிர வேறெந்த மாற்றுத் திட்டமும் இல்லை என்று ஒரு குறிப்பிடத் தக்க அளவு மக்கள் தொகை உருவாகியிருக்கிறது. இவர்களை இன்ஸ்ரா, முகநூல், யூ ரியூப் என்று தொலைபேசித் திரை மூலம் வசியம் செய்து வைத்திருக்கும் வேலையை அர்ச்சுனா செய்திருக்கிறார்.

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இதற்கு உடந்தை. நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் 60 தாண்டிய அன்ரிமாரிடம் இருந்து மட்டும் அர்ச்சுனாவுக்கு தேர்தல் நேரம் சென்ற பணம் சில கோடி ரூபாய்கள் என்கிறார்கள். இந்தப் பண வரவைக் கண்ட பின்னர் தான், அர்ச்சுனாவின் பால்ய நண்பனான மயூரன் அர்ச்சுனாவை வெட்டி விட்டு தான் தலைமை வேட்பாளராக வர ஒரு முயற்சி செய்து, பிடிபட்டு வெட்டி விடப் பட்டார் என்றும் ஒரு கதை உலவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சாக்கடைக்குள் தலைவர்களை தேடும் இனத்தின் இன்றைய நிலை. அந்தந்த ஊர்களில் சேவை செய்பவர்களை தெரிவு செய்யாமல் இவ்வாறு படித்தவன் பட்டம் பெற்றவன் என்று தூக்கிப் பிடித்து நம்பி வாக்குபோட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவமானங்களை சுமந்து நிற்கிறார்கள்.

அவரது தந்தை நாட்டுக்காக உயிரை கொடுத்தவர். இதைப்பற்றிய தங்கள் கருத்து என்ன?

3 hours ago, Justin said:

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இதற்கு உடந்தை. நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் 60 தாண்டிய அன்ரிமாரிடம் இருந்து மட்டும் அர்ச்சுனாவுக்கு தேர்தல் நேரம் சென்ற பணம் சில கோடி ரூபாய்கள் என்கிறார்கள். இந்தப் பண வரவைக் கண்ட பின்னர் தான், அர்ச்சுனாவின் பால்ய நண்பனான மயூரன் அர்ச்சுனாவை வெட்டி விட்டு தான் தலைமை வேட்பாளராக வர ஒரு முயற்சி செய்து, பிடிபட்டு வெட்டி விடப் பட்டார் என்றும் ஒரு கதை உலவுகிறது.

எந்த புஸ்தகத்தில் இதை வாசித்தீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009க்கு பின்னர் ஈழத்தமிழர்கள் பல பரீட்சார்த்த அரசியலை செய்து பார்க்க வேண்டியுள்ளது. அதில் அனுரவும்,அர்ச்சனாவும் உதாரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இது தான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். வாசிப்பில்லை, உழைப்பில்லை, படிப்பை ஒழுங்காக முடிப்பதில்லை, வெளி நாடு போகும் திட்டம் தவிர வேறெந்த மாற்றுத் திட்டமும் இல்லை என்று ஒரு குறிப்பிடத் தக்க அளவு மக்கள் தொகை உருவாகியிருக்கிறது. இவர்களை இன்ஸ்ரா, முகநூல், யூ ரியூப் என்று தொலைபேசித் திரை மூலம் வசியம் செய்து வைத்திருக்கும் வேலையை அர்ச்சுனா செய்திருக்கிறார்.

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இதற்கு உடந்தை. நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் 60 தாண்டிய அன்ரிமாரிடம் இருந்து மட்டும் அர்ச்சுனாவுக்கு தேர்தல் நேரம் சென்ற பணம் சில கோடி ரூபாய்கள் என்கிறார்கள். இந்தப் பண வரவைக் கண்ட பின்னர் தான், அர்ச்சுனாவின் பால்ய நண்பனான மயூரன் அர்ச்சுனாவை வெட்டி விட்டு தான் தலைமை வேட்பாளராக வர ஒரு முயற்சி செய்து, பிடிபட்டு வெட்டி விடப் பட்டார் என்றும் ஒரு கதை உலவுகிறது.

அர்ச்சனா அளவுக்கு அதிகமாக தொடர்சசியாக அநாகரிகமாக நடத்து கொண்டாலும் அவரை கண்டிக்க கல்வி சமுதாயம் என்று தம்மை அடிக்கடி பீற்றிக்கொள்ளும் யாழ்பாண சமூகம் முன்வரவில்லை. மெளனமாக அவரது பண்பாடு அற்ற செயல்களை அங்கீகரிக்கும் போக்கே காணப்படுகின்றது. அத்துடன் இன்னும் அவரை ஊக்குவிக்கும் போக்கும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சாக்கடைக்குள் தலைவர்களை தேடும் இனத்தின் இன்றைய நிலை. அந்தந்த ஊர்களில் சேவை செய்பவர்களை தெரிவு செய்யாமல் இவ்வாறு படித்தவன் பட்டம் பெற்றவன் என்று தூக்கிப் பிடித்து நம்பி வாக்குபோட்ட மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டு அவமானங்களை சுமந்து நிற்கிறார்கள்.

அர்ச்சனா தனது துறைசார் கல்வியை கற்றிருந்தாலும் அதில் முழுமை பெற்றவரக தெரியவில்லை. முழுமையாக அந்த கல்வியை கற்றவர் போல் தெரியவில்லை. இவரது புலம் பெயர் / தாயக ஆதரவாளர்கள் எவரும் படித்த கல்வியாளர்களாகவோ முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவோ தெரியவில்லை. மருத்துவத்துறையில் இலங்கையில் அவர் எந்த சாதனையையும் நிகழ்ததவில்லை.

பொதுவாக துறைசார் கலவியை கற்றவர்கள் அத்துறையில் உச்சத்தை தொட வேண்டும் என்றே விரும்புவர். மருத்துவத் துறையில் தன்னால் இதற்கு மேல் செல்லும் அளவுக்கு தனக்கு அறிவு இல்லை என்பதாலேயே தனது வாய் வாரத்தை காட்டி, தன்னை ஹீரோவாக காட்டி அரசியலில் பிரவேசித்தார். தமிழ் சமுதாயத்தில் அரசியல்/ போது அறிவற்ற ஒரு கூட்டம் இருப்பதை துல்லியமாக கணிப்பிட்டது அவரது திறமை என வேண்டுமானால் கூறலாம்.

அவர் படித்தவர் என கு தன்னை தானே பீற்றிக்கொண்டாலும் அவரது எந்த நடத்தையும் படித்தவர் போல் என்றுமே இருக்கவில்லை பக்கா லோக்கல் மொழி நடையில் கதையாடல்களை மேற்கொண்டே மக்கள் ஆதரவை பெற்றார். அவரது சிங்கள / ஆங்கில மொழி பாவனைகள் கூட பக்கா லோக்கல் பாசையகவே உள்ளபோது அவரை எப்படி படித்தவரக கொள்ள முடியும். மக்கள் வாக்களித்ததும் அவரது கல்விக்காக இல்லை . அவரது ஹீரோயிசத்தையும் அதிரடி புரட்சியாளனாக காட்டிக்கொண்டதை நம்பியே மக்கள் வாக்களித்தனர். தேர்தலுக்கு முன்பே அநாகரிகமாக நடந்து கொள்ள தொடங்கியும் தனக்கு வாக்குகள் விழுந்ததை வைத்து அரசியல் அறிவு அற்ற இந்த கூட்டம் தான் எப்படி பண்பாடு அற்ற முறையில் நடந்தாலும் வாக்களிக்கும் என்று நம்ப தொடங்கி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் கலந்து வந்த சேதி ஒன்று ....அர்ஷுனாவின் மீதுள்ள சில வழக்குகளின் , தீர்ப்பால் இவரது பாராளுமன்ற பதவி பறிபோகும் நிலையில் உள்ளதாம் அதனால் தங்கச்சியை / தங்கத்தை அந்த பதவிக்கு அமர்த்திவிட்டு இவர் மாகாண முதல்வர் பத்விக்குப் போட்டியிடப போகிறாராம் கடைசியில் அதுவுமில்லாமல் இதுவும் இல்லாமல்...அம்போ

" தவளையும் தன் வாயால் கெடும்".

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது அவா கவ்சலியாவும் நாங்கள் நினைத்த மாதிரி இல்லையாம் அர்ச்சுனாவின் கோமாளி செயல்களை எல்லாம் அமைதியாக இரசித்து கொண்டு இருப்பாவாம் 🙄

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதை செய்து படுகொலை செய்ய உதவிய ரணில்,இனப்படுகொலை செய்த ராஜபக்சாக்கள்,தொழிற்சாலைகள் எரித்து இனக்கலவரங்களை தூண்டி சோசலிசம் வளர்த்த கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமர்களாகவும் இருக்கும் நாட்டின் ... கிராமத்திலிருந்து போனவான் பாராளுமன்றத்தில் உளறுவதால் படித்த யாழ்ப்பாணத்தானின் மானம் போகுது என் அழுவது கொஞ்சம் ஒவர்....

தலைவரின் பெயரை தன் சுயநல அரசியலுக்கு பயன் படுத்தும் பொழுதே வைத்தியர் பைத்தியம் என புரிந்திருக்க வேணும் ..

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

உங்களது ஒப்பீடே தவறானது. நாம் இங்கு பேசுவது அர்சசுனா என்ற நபர் தமிழரின் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக விடயங்களில் தனது அடியாட்கள் மூலம் செய்துவரும் அழிசாட்டியங்களை பற்றி மட்டுமே. தனக்கு பிடிக்காதவர்கள் மூலம் பழி சுமத்துவதும் பெண்கள் என்றால் அவர்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக தனது அடியாட்கள் மூலம் அவதூறு பொழிவதும் தமிழர் சமூக வாழ்வில் சாதாரண மக்கள் வாய் திறக்க அஞ்சும் நிலமையை உருவாக்கி வருகிறார். இது தமிழரின் சமூக வாழ்வில் ஏற்படுத்த போகும் தாக்கம் பாரதூரமாக இருக்கும். அவரை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவி என்று மறைமுக முட்டு கொடுப்பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் அர்ச்சுனாவை குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை

கலாபூஷணம் பரீட் இக்பால்

யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தனர்.

டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன் தலைவர் செய்தது பிழையென்றும்  ஒட்டுமொத்தமாக இவர்களை உள்ளே வைத்து சீமெந்து பூசி இருக்க வேண்டும் என்று ஒரு நச்சுக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

கேட்க > https://www.facebook.com/share/v/1DyRWcSwHn/

காலம் தாழ்த்தி, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தது தவறு என உணர்ந்தனர் புலிகள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமான கருத்தை கொண்டுள்ளார் டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இவரைத் தவிர அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் மொழியாகவிருப்பதால் தமது சகோதரர்கள் என்று தான் கூறுவார்கள். பாராளுமன்றத்தில் எத்தனையோ தடவைகள், முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர்.

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் விரட்டியடிக்கும் போது, யாழ்ப்பாணத்தினுள்ள தமிழ் மக்களின் முக்கியமானவர்களும் இந்து சமய குருக்களும் சேர்ந்து யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசர பேச்சு வார்த்தைகளை நடாத்தியும் கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. இவ்வாறுதான் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் மேயராக ஒரு முஸ்லிமை சட்டத்தரணி எம். எம்.சுல்தான் அவர்களை மேயராக தெரிவு செய்து கெளரவப்படுத்தினார்கள். இவ்வாறுதான் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

புலிகள்தான் முதலில்  ஒற்றுமையை சீர்குழைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்கள், தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கிறார் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன்.
இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குழைக்கும் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் இந்த நாட்டின் குடியுரிமைக்கு கூட தகுதியில்லாத டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தகுதியில்லை. எனவே டாக்டர் அர்ச்சுனா இராமநாதனின் குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கூறுகிறோம்.

யாழ்ப்பாணத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த முஸ்லிம்களின் இன்றைய நிலையை அறிந்து கொள்ளுங்கள் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே! யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் விரட்டியடிக்கும்போது உங்களுக்கு 4 வயது தான். அறிந்து கொள்ளுங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் துயர நிலைமையை .

யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று பல திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன. 34 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன.

எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள்.

வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.

புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான்.

“முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம்.

அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர்.

ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம்.

எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?

ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள்.

இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.

பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.

பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது……

விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது.

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
34ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அச்சுறுத்தலாக விளங்குகிறார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி யாழ்ப்பாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!!
*கலாபூஷணம் பரீட் இக்பால்-*

https://madawalaenews.com/16689.html

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

யாழ்ப்பாணத்தானின் மானம் போகுது என் அழுவது கொஞ்சம் ஒவர்....

உண்மை தான்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

தலைவரின் பெயரை தன் சுயநல அரசியலுக்கு பயன் படுத்தும் பொழுதே வைத்தியர் பைத்தியம் என புரிந்திருக்க வேணும் ..

இருக்கும் ஆனால் ....அர்ச்சுனாவுக்கு தலைவரின் முடிவு மிகுந்த கவலைப்பதாய். உள்ளது” எங்கள் எல்லோரையும் விட. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயத்துடனே தான் இருந்தார்கள் எவரும் புலிகளை பாராட்டு ஒரு வார்த்தை சொன்னதில்லை ஆனால் அர்சசுனா சொல்லுகிறான். பயப்படவில்லை அவன் பல நல்ல செயல்களை செய்துள்ளான். அதைப் பற்றி கதைப்பவர்கள் இல்லை ஆனால் ஒரு பிழை செய்தால் தூக்கி பிடிக்கிறாரகள். அர்சசுனாவுக்கு மாற்றீடாக. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை. பெயரிடுங்கள். . பார்ப்போம் முடியாது இல்லையா?? அர்ச்சுனா இருந்திட்டுப் போகட்டும் ....காரணம் உங்களால் நீங்கள் நினைப்பது போல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியாது இலங்கையில் உருவாக்க முடியாது அப்படி என்றால் ரொபோ அல்லது மரத்தில் தான் வடிவமைக்கப்பட வேண்டும் அர்ச்சுனா ஒரு திறமைசாலி. இலங்கை வரலாற்றில் ஏன். உலக வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி சுயேட்சையாக. பாராளுமன்றம் போய்யுள்ளார். உங்களால் முடியுமா??? ஒரு மனிதன் செய்யும் காரியங்கள் அனுத்தும். சரியாக இருக்க முடியாது அதேபோல் அனைத்தும் பிழையாகவுமிருக்க. முடியாது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயமின்றி பேசிப் பழக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இருப்பது அவசியமாகும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57 கந்தையர், உங்களை போலவே எனது மனநிலையும். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிடம் திறமை/ஆளுமை உள்ளது. உட்கிடக்கையை வெளிப்படுத்தாமல் பம்மிக்கொண்டு நிற்பவர்கள் மத்தியில் விடயங்களை வெளிப்படையாக தெளிவாக துணிந்து கூறக்கூடியவர். அவர் பேசுபவை எல்லாம் சரி என்று இல்லை, ஆனால் அவர் உத்வேகம் பிடித்துள்ளது.

போர் நிறைவடைந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இளவு காத்த கிளிபோல் மக்கள், ஏமாற்றப்பட்டார்கள். புதியன புகுதலும், பழையன கழிதலும் நடந்தேறலாம். அவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினுள் வருகின்றார். தந்தை விடயத்தில் அவருக்கு நீதி கொடுக்கப்பட்டதா?

இங்கு அவருக்கு எதிராக குத்தி முறிபவர்களை கவனித்தால் அவர்களுக்கிடையில் பல விடயங்களில் ஒற்றுமைகள் உள்ளன.

நல்லதை எடுக்கலாம். அல்லாதவைகளை விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

உங்களது ஒப்பீடே தவறானது. நாம் இங்கு பேசுவது அர்சசுனா என்ற நபர் தமிழரின் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக விடயங்களில் தனது அடியாட்கள் மூலம் செய்துவரும் அழிசாட்டியங்களை பற்றி மட்டுமே. தனக்கு பிடிக்காதவர்கள் மூலம் பழி சுமத்துவதும் பெண்கள் என்றால் அவர்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக தனது அடியாட்கள் மூலம் அவதூறு பொழிவதும் தமிழர் சமூக வாழ்வில் சாதாரண மக்கள் வாய் திறக்க அஞ்சும் நிலமையை உருவாக்கி வருகிறார். இது தமிழரின் சமூக வாழ்வில் ஏற்படுத்த போகும் தாக்கம் பாரதூரமாக இருக்கும். அவரை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவி என்று மறைமுக முட்டு கொடுப்

12 hours ago, island said:

அவரை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவி என்று மறைமுக முட்டு கொடுப்பது தவறானது

பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல.

நான் இங்கு அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசவில்லை ..அவரையும் சரி அவரது அடிமை சிங்கள அடியானையும் எங்கும் ஆதரவிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை.

அர்ஜூனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடை பெற்ற முறைகேடுகளை வெளிகொண்டு வந்த விதமே பிழை ,அப்பொழுதே சில வைத்திய அதிகாரிகள் இது பற்றி சுட்டி காட்டினார்கள் ஆனால் "ஊழல் ஒழிப்பு "என்ற மாயை சுயமாக சிந்தித்து செயல் படும் எங்களுடைய‌ ஆற்றலை மறைத்து விட்டது...

அன்று தொடக்கம் இன்று வரை அவர் செய்யும் செயல்கள் யாவும் முட்டாள் தனமாகவும்,விசமதனமாகவும் வக்கிரமாகவும் இருக்கின்றது.

மக்களுக்கான பொது சேவையில் ஈடுபடும் ஒருவருக்கு/ஒருத்திக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது .இதை பற்றி தெரிந்திருந்தாலும் "தனி மனித சுதந்திரம்"என்ற ஒர் அதிபுத்திசாலிதனத்தை சொல்லி மறைத்து விடுகின்றோம்.

"இலவச மருத்துவம்,இலவச கல்வி" இவை யாவற்றையும் இல்லாமல் பண்ணி தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதற்கு "ஊழல்"என்ற மாயை பயன்படுத்தி வேறு சக்திகளுடன் செயல் படுகின்றாரோ என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ...வடமாகாணத்தில் ஊள்ளூராட்சி மன்றங்கள்,வடமாகாணசபை போன்றவற்றை கைப்பற்றி அங்கு தனியார் கல்வி,மருத்துவ துறைபோன்றவற்றை ஊக்கப்படுத்தும் முயற்சியோ தெரியவில்லை.

அயல்நாட்டில் கல்வி,மருத்துவம் போன்ற்வை பெரிய மாபியா வியாபாரம் ..அந்த நிலையை இங்கு கொண்டுவர முயற்சிகள் நடை பெகின்றதோ தெரியவில்லை...

இவர் பாராளுமன்றம் சென்று இதுவரை செய்த நல்ல காரியம் எது?ஒன்றுமில்லை ஆயிரம் தடவை பிரபாகரனின் பெயரை சொல்லி அவருக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் இனம்,அமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விடயத்தை தவிர..

யூ டியுப்பர்கள்,வாகன விபத்துகள்,விபச்சாரம் போன்றவற்றை பாராளுமன்றம் சென்று பேசும் ஒர் ...தியம் தான் ...

அவருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அவரின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்கள்,அவரின் "ஊழல் ஒழிப்பு"நாடகத்தை உண்மை என நம்பியவர்கள் முட்டு கொடுக்கலாம் ...இவனுக்கு முட்டு கொடுத்து எனக்கு ஒர் லாபமும் கிடைக்க போவதில்லை ..

அமிர்தலிங்கத்துடன் இவரை ஒப்பிடவே முடியாது .அவருடைய கால் தூசிக்கு கூட ஏன் அவரின் செருப்பு தூசுக்கு கிட்ட வரமுடியாது ..அந்த விளக்கம் எனக்கு இருக்கு ...

12 hours ago, island said:

நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல.

இவர் பேசுவதும் அரசியல் ,நான் கூறியதும் அரசியல் வ்...விவாதம் என்ற பெயரில் சில கருத்துக்களை மட்டும்

மெய் என நிருபிக்க முயல்வதும் அரசியல்...சில இனங்களுக்கு முட்டு கொடுப்பதற்கு சில இனக்களின் அழிவுகளை மறைத்து ,விவாதம் திசை திரும்புகின்றது என்பதும் அரசியல் ...

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

இருக்கும் ஆனால் ....அர்ச்சுனாவுக்கு தலைவரின் முடிவு மிகுந்த கவலைப்பதாய். உள்ளது” எங்கள் எல்லோரையும் விட. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயத்துடனே தான் இருந்தார்கள் எவரும் புலிகளை பாராட்டு ஒரு வார்த்தை சொன்னதில்லை ஆனால் அர்சசுனா சொல்லுகிறான். பயப்படவில்லை அவன் பல நல்ல செயல்களை செய்துள்ளான். அதைப் பற்றி கதைப்பவர்கள் இல்லை ஆனால் ஒரு பிழை செய்தால் தூக்கி பிடிக்கிறாரகள். அர்சசுனாவுக்கு மாற்றீடாக. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை. பெயரிடுங்கள். . பார்ப்போம் முடியாது இல்லையா?? அர்ச்சுனா இருந்திட்டுப் போகட்டும் ....காரணம் உங்களால் நீங்கள் நினைப்பது போல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியாது இலங்கையில் உருவாக்க முடியாது அப்படி என்றால் ரொபோ அல்லது மரத்தில் தான் வடிவமைக்கப்பட வேண்டும் அர்ச்சுனா ஒரு திறமைசாலி. இலங்கை வரலாற்றில் ஏன். உலக வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி சுயேட்சையாக. பாராளுமன்றம் போய்யுள்ளார். உங்களால் முடியுமா??? ஒரு மனிதன் செய்யும் காரியங்கள் அனுத்தும். சரியாக இருக்க முடியாது அதேபோல் அனைத்தும் பிழையாகவுமிருக்க. முடியாது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயமின்றி பேசிப் பழக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இருப்பது அவசியமாகும் 🙏

பிரபாகரனை பற்றி உவங்கன்ட பாராளுமன்றில் பேசுவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை ...அப்படி பேசினாலும், பேசுபவர் பிரபாகரனின் பெயரை,கொள்கையை கலங்கப்படுத்தாத‌ வகையில் பேச வேணும்.

ஆனால் இவர் பல குறுக்கு வழிகளை தன் சுயலாபத்துக்கு பயன் படுத்துகின்றார்.அவர் பேச வேண்டிய விடயங்கள் பல இருக்கு அதை விடுத்து பிரபலம் அடைய வேணும் என்பதற்காக ஊர் கொசிப்புக்களை பாராளுமன்றில் பேசுகின்றார்...என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்...

அர்சுனாவின் இந்த செயல் கண்டிக்கப்படவேண்டியதுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த பக்கம் ஒரு அர்சுனா என்றால் இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் அர்ச்சுனாவினை விட மோசமானவர்கள்.

அதற்காக அவர்கள் அப்படியானவர்கள் என கூறி அர்சுனா செய்யும் அருவருக்கதக்க செயலை நீங்கள் மட்டுமல்ல ஒருவரும் ஆதரிக்க போவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.