Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளர் தயாபரராஜா கொழும்பில் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைதாகி படுகொலை

Featured Replies

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள தயாபரராஜா, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் ஆவார்.

சிறிலங்காவில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற இவர், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கின்றார்.

சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 13 ஆம் நாள், சட்டவிரோதமான முறையில் சுடப்பட்டதாகத் தெரிகின்றது.

கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் மரணமடைந்தார்.

ஆற்றல் மிக்க ஒரு கணினிப் பொறியியலாளரான இவர், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியதன் மூலம், வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதில் பெரும் பணியாற்றியுள்ளார்.

தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட உடனடியாகவே 'வன்னி ரெக்' நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.

வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ப்பதற்காக செயற்பட்ட ஒரேயொரு அமைப்பாக இதுவே இருந்துள்ளது.

வன்னியில் உள்ள இளைஞர்களுக்கு கணினி மென்பொருட்களை உருவாக்குவதில் குறுகிய காலத்தில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய இவர், தனது கடின உழைப்பால் அமெரிக்காவில் இருந்தும் பல செயற்திட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவரின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

திறமையான ஈழத்துக்கல்விமான் அநியாயமாகக் கொலைகார சிறிலங்கா அரசினால் கொல்லப்பட்டிருக்கிறார். கண்ணீர் அஞ்சலிகள்.

பெற்றோர் , உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்.

சிங்களக் காட்டுமிராண்டி நாய்களே...

சிங்களக் காட்டுமிராண்டி நாய்களே...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை உயிர்களைப் பறித்துவிட்டது சிங்கள இனவெறி. கொடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுமளவுக்கு அந்த ஆற்றல்மிக்க இளைஞன் செய்த குற்றமென்ன? தமிழனாய்ப் பிறந்து அறிவாளியாய் வளர்ந்து தன் இனத்து இளஞர்களுக்கு கணனியறிவை ஊட்டியதும் தனக்குக் கெடுக்கப்பட்ட பிரதேசத்தில் கண்னிப்பாவனையை மேம்படுத்தும் திட்டங்களைத் தீட்டியதும்தானே?

தமிழனான காரணத்தால் இவையெல்லாம் சித்திர வதைக்கும் மரணதண்டனைக்குமுரிய குற்றங்களாய்ப் போய்விட்டன. சிறீலங்காவில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் குற்றப் புலனாய்வுத் துறையில் அறிவுள்ள புத்திஜீவிகளே இல்லையா? எல்லோரும் காட்டு மிராண்டிகள்தானா? இங்கே (லண்டனில்) இந்தக் காட்டு மிராண்டிகளின் படுபாதகச் செயல்களை நியாயப்படுத்த படித்த சிங்களவர்கள் கொடிபிடித்து ஆர்ப்பரிக்கிறார்ககிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது சிங்கள இனப் புத்திஜீவிகளைக்கூட மதிப்போடு எண்ணமுடியவில்லை. எங்கேயிருந்து இவர்களுக்கு இந்தகச் கொடூரப்புத்தி வந்தது என்றே தெரியவில்லை. வெறும் அரசியல் நோக்கத்திற்காகத் தமிழனத்தின்மீது நடாத்தப்படும் கொடூரத்தனமான தாக்குதல்களையும் இனப்படுகொலையையும் நியாயப்படுத்தி முழுப்பூசனிக்காயைச் சோற்றில் புதைக்க முற்படும் இந்தப் படித்த கூட்டம் தங்கள் மனச்சாட்சிக்குப் எப்படிப் பதில் சொல்லி வாழ்கிறார்களோ தெரியவில்லை. சாதாரணமாக எந்த மனிதரையும் வெறுத்து நோக்காத நமக்கு இவர்களைத் தெருவில் காணும்போது வெறுப்பு வருகிறது. முகத்தைச் சுழித்துக் கொண்டுதான் போகத் தோன்றுகிறது. புத்தர் இவர்களுக்குப் போதித்ததெல்லாம் இந்த நயவஞ்சகத்தைத்தானா? இப்போதெல்லாம புத்தரையே உயர்வாய் மதிக்க முடியவில்லை.

இறந்து போன அந்த ஆற்றல்மிக்க அறிஞன் திரு கதிர்வேல் தயாபரராஜாவுக்காக என் இரண்டு சொட்டுக் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். கொடூர மனம் படைத்தோரை நிச்சயம் இறைவன் சும்மா விடமாட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.................... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

------

சிங்களவன் கொடி பிடித்தாலும் பரவாயில்லை .......

ஆனால் இப்படியான படு கொலைகளை நியாயப்படுத்தவும் , தமிழனிலை ஒரு கூட்டம் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலையுதே ...........

தயாபரராஜாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

புத்தர் இவர்களுக்குப் போதித்ததெல்லாம் இந்த நயவஞ்சகத்தைத்தானா? இப்போதெல்லாம புத்தரையே உயர்வாய் மதிக்க முடியவில்லை.

அவரும் வட இந்தியன் தானே வேற என்னத்தை எதிர்பார்க்கலாம் ,என்ன காவி உடுத்துக்கொண்டு கொள்கையை பரப்பினார்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்..! அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

தங்களை சந்தித்தபோது...

தங்களுடைய வேலைப்பழுவுக்கும் மத்தியிலும்(ஈழம், அமெரிக்கா)

எம்மை அழைத்து ச்சென்று வன்னி ரெக்கின் நிகழ்காலம் வருங்காலம் பற்றியும்இன்முகத்தோடு விபரித்ததை

மறக்கமுடியுமா?

Edited by விசுகு

கண்ணீர் அஞ்சலிகள்

இவரது கொலைக்கும் புலிகளும் பிரபாகரனும் தான் காரணம்.....அப்படித்தானே நெல்லையன் அன்ட் பொன்ட் ????

தூரநோக்கு ரொம்பக் கிட்டவா இருந்ததால கிளிநொச்சிக்குப் பிறகு கெரில்லா போர்முறைக்கு மாறேல்ல.. அதால வந்த பிரச்சினைதான் இது..!

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலத்துக்கு இன்னும் பதில் நடவடிக்கை இன்றி இருக்கப் போகின்றோம்?

சிங்களம் சமாதான காலத்தில் டி.சிவராமில் இருந்து ரவிராஜ், கிழக்கு பலகலைக்கழக துணைவேந்தர் என எம்மில் இருந்த ஆளுமைமிக்க மனிதர்களை கொன்றொழித்து வருகின்றது. தமிழர் தரப்பில் உள்ள புத்திசீவிகளையும், துறைசார் வல்லுனர்களையும் படிப்படியாக வெளியேற்றியோ அல்லது அழித்தோ வருகின்றது. இதற்கு மாற்றாக பதில் நடவடிக்கை இன்றி, சர்வதேச சமூகம் பார்த்துக் கொள்ளும் என்று எத்தனை காலத்துக்கு பொறுக்க போகின்றோம்?

இந்த கொலைகளுக்கு ஆணையிட்டோர், நாம் வாழும் தேசங்களில்தான் தம் குடும்பங்களை வைத்துள்ளனர். உளவு பார்க்க தூதுவர்களை நியமித்துள்ளனர், பயிற்சிக்காக வந்து போகின்றனர்....

முடியாது எனில் எதுவும் முடியாது....முடியும் எனில் அனைத்தும் முடியும்

நாட்டுப்பற்றளர் கதிர்வேல் தயாபரராஜாவுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்! அவரின் பெற்றார் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எம் ஆழந்த அனுதாபங்கள்.

சிங்களம் சமாதான காலத்தில் டி.சிவராமில் இருந்து ரவிராஜ், கிழக்கு பலகலைக்கழக துணைவேந்தர் என எம்மில் இருந்த ஆளுமைமிக்க மனிதர்களை கொன்றொழித்து வருகின்றது. தமிழர் தரப்பில் உள்ள புத்திசீவிகளையும், துறைசார் வல்லுனர்களையும் படிப்படியாக வெளியேற்றியோ அல்லது அழித்தோ வருகின்றது. இதற்கு மாற்றாக பதில் நடவடிக்கை இன்றி, சர்வதேச சமூகம் பார்த்துக் கொள்ளும் என்று எத்தனை காலத்துக்கு பொறுக்க போகின்றோம்?

புலிகளும் பிரபாகரனும் தான் காரணம்.....

:rolleyes:

செய்தி உண்மையாக இருந்தால் சகோதரருக்கு இதய அஞ்சலிகள், ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

இதைத்தவிர எம்மால் என்ன செய்ய முடியும்

அறிவாளிகள் எல்லாம் தமிழ் இனத்தின் பொக்கீசங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உழைத்த தியாகியின் திரியின் கீழ் இவ்வாறு தொடர என்னால் முடியவில்லை.....

ஆனால் கருத்து சுதந்திரத்திற்கும் அசிங்கங்களை அள்ளி எறிவதற்கும் வித்தியாசம் தெரியாது இருக்கும் நிர்வாகத்தின் நிலையை சுட்டிகாட்ட வேறு வழியுமில்லை.

கண்ணீர் அஞ்சலிகள் செலுத்தி சும்மா உசுப்பேற்றி விட்டு வாழும் புலம் பெயர் மந்தைகளே. இதுகளுக்கும் காரணம்!

  • 4 years later...
அகதி என்ற பெயரில் இந்தியா சென்ற தயாபரராஜா???? 
  • கருத்துக்கள உறவுகள்

அகதி என்ற பெயரில் இந்தியா சென்ற தயாபரராஜாவும் மனைவி உதயகலாவும் தமிழ் மக்களை வாட்டி வதைத்தவர்கள் : படையினருடன் நெருக்கமானவர்கள் : அனைத்து விடயங்களும் அம்பலம்

மே 9, 2014

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறிலங்காவிலிருந்து அண்மையில் தமிழகத்திற்குச் சென்றவர்களில் தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைத்து ஏறக்குறைய ஐந்துகோடி ரூபா நிதி மோசடி செய்துகொண்டு அகதி என்ற பெயரில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் தமிழ் மக்களை அச்சுறுத்தினர். சிறிலங்கா படையினர் இறுதி யுத்தத்தின்போது கைது செய்து சிறைகளில் தடுத்து வைத்திருக்கின்ற முன்னாள் போராளிகள், மற்றும் சாதாரண பொதுமக்களை விடுவிக்க முடியும் என்று உறவுகளுக்கு ஆசை வார்த்தை கூறிய இவர்கள் அதற்காக அந்த உறவுகளிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.

இவ்வாறு ஒரு குடும்பத்திடம் இருந்து இவர்கள் அதியுச்ச பட்சத் தொகையாக 37 லட்சம் ரூபாவைப் பெற்றது தெரியவந்துள்ளது. ஏனைய குடும்பங்களிடமிருந்து 30 இலட்சம், 15 இலட்சம், 13 இலட்சம், 7 இலட்சம், 6 இலட்சம் மற்றும் அதற்கு கீழான தொகைகளையும் பெற்றிருக்கின்றனர். முழுவதுமாக ஐந்து கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர்.

DSC00404.jpg

இவர்களுக்கு எதிராக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது. பல பெண்களை படையினருக்கும் படைப் புலனாய்வாளர்களுக்கும் இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த விடயங்களும் கண்ணீர் கதைகளாக அம்பலமாகியிருக்கின்றன.

எனவே, இவர்களுக்காக தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு அமைப்போ அரசியல்வாதிகளோ குரல்கொடுக்க வேண்டாமென்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறும் தாயகத்திலுள்ள உறவுகள் தமிழக உறவுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்கள் தொடர்பான சகல விடயங்களையும் சங்கதி24 இற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இவர்கள் தொடர்பாக சங்கதி24 இற்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:

தயாபரராஜா (தேசிய அடையாள அட்டை இலக்கம் 810020431V) யாழ்ப்பாணம் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனின் பெயர் செல்லத்துரை கதிரவேலு. இவர் பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளியேறியவர். இதன் பின்னர் வன்னி நெற் என்ற பெயரில் முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றை நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் ஏறக்குறை ஐம்பதினாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப பணியாற்றியவர்.

uthayakala5865.jpg

தயாபரராஜாவின் மனைவி பெயர் உதயகலா. (தேசிய அடையாள அட்டை இலக்கம் 825884726V) இவர் சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்தவர். இவர்கள் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் டியோரன் (9வயது), மகள்கள் டிலினி (6வயது), டில்கியா (2வயது). இவர்கள் ஆரம்பத்தில் முல்லைத்தீவில் வசித்த போதிலும் தற்போது இலக்கம் 60, ஆரம்பப் பாடசாலை வீதி, வவுனியாவில் வசித்து வந்த நிலையிலேயே இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

சிறிலங்கா படையினருடனும் படைப் புலனாய்வாளர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள தயாபரராஜாவும் உதயகலாவும் ஒருவருக்கு மற்றையவர் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையில் மோசடிக்காரர்கள். தயவு தாட்சண்யம் இல்லாதவர்கள். வன்னியில் கணவனை இழந்த விதவைகள், யுத்தத்தால் ஊனமுற்றவர்கள், பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள், முன்னாள் போராளிகளின் மனைவிகள் என்றவாறு இவர்களால் பாதிக்கப்பட்ட ஏறக்குறை அறுபது பேருக்கு மேற்பட்டவர்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.

படைத் தலைமையுடன் தமக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் தரவுகளைப் பெற்றுக்கொண்ட இவர்கள் இருவரும் தடுப்பிலுள்ளவர்களின் மனைவிமார் அல்லது பெற்றோருடன் தொடர்புகொண்டு உங்கள் உறவுகள் இந்த தடுப்பு முகாமில் இருக்கின்றனர் என்று பெயர், விபரங்களைக் கூறி, அவர்களை படையினர் சுடுவதற்கு தயாராகி வருகின்றனர். நாங்கள் மீட்டுத் தருகிறோம். இவ்வளவு பணம் தாருங்கள் என்று கூறி பெரும்தொகைப் பணத்தை மோசடியாகப் பெற்றுக்கொண்டனர்.

இதற்கு மேலாக, வன்னிப் போரில் ஊனமுற்றவர்களுக்கு புலம்பெயர் நாட்டிலுள்ள சில அமைப்புகள் உதவி செய்துவருவதை அறிந்த இவர்கள் குறித்த ஊனமுற்றவர்களிடம் சென்று தங்களுக்கும் வெளிநாட்டு பராமரிப்பு அமைப்புகளுக்கும் தொடர்புகள் உள்ளன என்றும் இதனால் வெளிநாட்டுக்கு சென்று நல்ல நிலையில் வாழலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய அவர்களும் தமக்கு உதவி செய்கின்ற புலம்பெயர் நாட்டிலுள்ளோரின் விபரங்களை தயாபரராஜா மற்றும் மனைவி உதயகலா ஆகியோரிடம் வழங்கியிருக்கின்றனர். 
இதனைப் பயன்படுத்தி புலம்பெயர் நாட்டிலுள்ள அந்தச் சேவையாளர்களைத் தொடர்புகொண்ட தயாபரராஜா தம்பதியினர் தாங்கள் சிறிலங்காவிலுள்ள மனிதநேய அமைப்பொன்றிலிருந்து கதைப்பதாகவும் உங்களால் பராமரிக்கப்படுகின்றவர்களை நாங்கள் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கின்றோம். அதற்கு ஆகவேண்டிய செலவாக நீங்கள் இத்தனை இலட்சம் ரூபாவை வழங்க முடியுமா என்றும் கேட்டிருக்கின்றனர்.
அந்த நல்ல மனம் படைத்த புலம்பெயர் உறவுகளும் இந்த மோசடிப் பேர்வழிகளை நம்பி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்தப் பணம் முழுவதையும் இவர்கள் சுருட்டிய பின் அந்த ஊனமுற்றவர்களை கைகழுவினர்.

IMG_8829.jpg

இவ்வாறு யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலுள்ள பல ஊனமுற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு தமது வாகனங்களில் கொழும்புக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வெளிநாட்டு தரகர்கள் போன்று சிலரைச் சந்திக்க செய்த பின்னரேயே இவர்களிடம் இருந்து பணம் கறக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களையே வாட்டி வதைத்த மனிதநேயமற்ற தயாபரராஜா, உதயகலா தம்பதியினரின் செயல் தங்களை மிகவும் கொதிப்படையச் செய்துள்ளதாக இந்த தகவல்களை அறிந்தவர்கள் தற்போது கவலை வெளியிடுகின்றனர்.

தடுப்பிலுள்ளவர்களை விடுவிப்பதற்காக குறித்த பணத்தை தராவிட்டால் உறவினர்களை கடுமையாகத் தாக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. ஒரு தடவை தடுப்பிலுள்ள தனது மகனை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தைப் பேரம்பேசிய சாவகச்சேரியைச் சேர்ந்த வயதான பெண்ணொருர் மகனை விடுவிக்காத நிலையிலும் குறித்த பணத்தைக் கொடுக்காததால் தயாபரராஜின் மனைவி உதயகலா கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அதனால் அந்த வயதான தாயார் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருக்கின்றார்.

ஜீன்ஸ் அணிந்து எடுப்பாகத் தோற்றமளிக்கும் உதயகலா தடுப்பிலுள்ளவர்களின் உறவினர்களது வீடுகளுக்குச் சென்று தன்னை இராணுவப் புலனாய்வாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தடுப்பிலுள்ள உறவினர் தொடர்பில் விசாரிப்பதற்கு நாலாம் மாடிக்கு வருமாறு அச்சுறுத்திவிட்டு கொழும்பிற்கு வந்து அழைப்பு எடுக்குமாறு தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கிச் செல்வாராம். உறவுகள் பயந்தவாறு கொழும்பிற்குச் சென்று அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டால் அவர்களை அழைத்துச் சென்று மறைவிடத்தில் தடுத்து வைத்திருந்துகொண்டு உறவினர்களுக்கு அழைப்பு ஏற்படுத்தி இவ்வளவு பணம் தந்தால் தான் அவரை விடுவிக்க முடியும் என்றும் கூறி இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் விடுதலை செய்திருக்கின்றார்கள்.

IMG_8821.jpg

சிறிலங்காவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் கணக்குகளைப் பேணுகின்ற தயாபரராஜா உதயகலா ஆகிய இருவரும் அந்தக் கணக்குகளின் மூலமே பணத்தைப் பெற்றுள்ளனர். தயாபரராஜின் கொமர்சல் வங்கிக் கணக்கு இலக்கம்- 8100065900 வெள்ளவத்தை கிளை, இவருடைய செலான் வங்கி கணக்கு இலக்கம் - 0137001-013725 இவருடைய மக்கள் வங்கிக் கணக்கு இலக்கம் 0142001-7000-1411 யூனியன் பிளேஸ் கிளை. இந்தக் கணக்குகளில் சில கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் இருந்து இவர்களின் கடந்த மாதம் வரை படைப் புலனாய்வாளர்களின் உதவியுடன் இவர்களின் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை உத்தரவுகள் உள்ளமையால் இவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் படைப் புலனாய்வாளர்களின் உதவியுடனேயே இவர்கள் தமிழகம் சென்றிருக்கலாம் என்றும் பரவலாக நம்பப்படுகின்றது.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள ஏறக்குறைய அறுபது வரையானவர்கள் இவர்களிடம் தனித்தனியே பல லட்சக்கணக்கான ரூபா பணத்தைக் கொடுத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கின்றனர். தற்போது இவர்கள் இருவரும் தமிழகம் தப்பிச் சென்றுவிட்டனர் என்று செய்தியறிந்ததால் செய்வதறியாத நிலையில் தவிக்கின்றனர்.

இவர்களுக்கு படையினருடனும் படைப் புலனாய்வாளர்களுடனும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதால் பணத்தைக் கேட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சியதால் தாங்கள் அச்சமடைந்த நிலையில் இருந்தாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் துணிச்சலான சிலரே முன்வந்து இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இருவரும் எந்தவொரு தவணைக்கும் வழக்குகளுக்குச் செல்வதில்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்படி இருவருக்கும் தமிழக உறவுகளோ தமிழக அரசியல் கட்சிகளோ எந்தவிதத்திலும் ஆதரவுக்குரல் எழுப்பக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்ட உறவுகள் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தமக்கு பணத்தைப் பெற்றுத்தர உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சியிலிருந்து
கதிரவன், முகிலன்
சங்கதி24 செய்தியாளர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் தப்பி சென்றுள்ளது பூதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.