Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலவின் வருகை: நிழலி

Featured Replies

நிலவின் வருகை:

ஒரு இரவின் இடையில்

உயிரின் கலசம்

உடைந்தது

உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின்

உச்சத்தில் அவளை

இறுகத் தழுவினேன்

இறுக்கி அணைத்தேன்

முத்தமிடா இடங்களை

காதலின் உச்ச

வரிகள் நிரப்பிச் சென்றன

யுகங்களுக்கு அப்பால்

இருந்து கால பைரவன்

உயிரின் துளிகளை

சுமந்து என்னிடம் தந்தான்

என் தேவதையின்

காதல் இடைவெளியை

அந்த உயிர் துளிகளால்

நிரப்பினேன்

ஒரு மொட்டின்

அசைவை தன்னில்

என் தேவதை

எனக்குச் சொன்னாள்

ஆயிரம் கலவிகள்

கடந்த வீரத்தையும்

தன் நீந்தலையும்

என்னுள்

என் ஆண்மை

தன்னைப் பற்றி

வாய் வலிக்கச் சொன்னது

2

அந்த அறை எனக்கு

கருவறை

அந்த அறையில்

ஒரு உயிரின்

வருகைக்காய்

காத்திருந்தேன்

என் தாய் எனைப்

பெற்ற யோனி

வலி

நான் கண்டேன்

வார்த்தைகள் அற்றுப்

போகின

வாக்கியங்கள் தன்

ஆளுமை இழந்தன

எல்லா மொழியும்

தன் இருப்பை

தொலைத்தன

காலம் என்னை விட்டு

தானே கழன்று

கொள்வதாய்

நான் உணர்தேன்

பல யுகங்கள்

நீரின்றி

தாகம் கொண்ட

மானுடன் அலைந்த

உயிர் வற்றும்

தாகம்

நான் கொண்டேன்

எப்போது உயிரின்

இசை நான் கேட்பேன்

3

ஒரு கண இடைவெளியில்

நிலவின் வருகை

அமைந்திருந்தது

கீச்சுக் குரல்

கொண்ட அழுகை

என் வாழ்வின்

இடைவெளிகளை

நிரப்பியது

கால பைரவன்

சிரித்துக் கொண்டான்

யுகம் யுகமாய்

உனக்காக சேமித்த

நிலவு இது

என்று சொல்லிச்

சென்றான்

சின்ன நிலவு

விழி திறக்கையில்

என் உயிர்வாழ்தலின்

வலி இன்புற்றது

முதல் தொடுகையில்

விழிகள் கண்ணீரை

உதிர்த்தது

ஆயிரம் ஆண்டுகால

வாழ்வின் சுமை

விடுபட்டது

என் தேவதை

தந்த நிலவு

என் இருட்டினை

கடந்து செல்கின்றது

என்

தேவதையை திரும்பிப்

பார்கின்றேன்

கேட்காத அற்புத

இசையை அவள்

கண்களால்

சொல்லிக் கொண்டாள்

அதில் அவள்

காட்டாத உச்சபட்ச

காதல் நிரம்பியிருந்ததை

நான் அறிந்தேன்

ஒரு இரவின் இடையில்

உடைந்த கலசம்

நிலவாக பிரவாகித்து

ஓடியது

ஆண் பெண்

உறவின் நதி

இன்னொரு

நாகரீகத்தை

தோற்றுவித்துக்

கொண்டது

: நிழலி

(நவம்பர் 14, 2009 இரவு அன்று என் மகள் பிறக்கும் போது அருகிருந்த உணர்வின் பாற்பட்டு எழுதிய கவிதை. என்னால் மீள் திருத்தம் ஒரு போதும் செய்யப்பட மாட்டாத ஒரு உணர்வுக் கவிதை)

எழுதியது: நவம்பர் 18, இரவு 11:00

Edited by நிழலி

  • Replies 87
  • Views 11.8k
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் நிழலி. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலிக்கு

முதலில் வாழ்த்துக்கள் உங்கள் குட்டி நிலவின் வருகைக்கு...

அடுத்த வாழ்த்து உங்கள் அழகான கவிதைக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

என் தேவதை

தந்த நிலவு

என் இருட்டினை

கடந்து செல்கின்றது...

..உங்கள் தேவதைக்கும் உங்களுக்கு (இருவருக்கும்) வாழ்த்துக்கள் இனி எல்லாம் சுபமே. மண்ணில் வந்த நிலவு அவள் மடியில் தூங்கும் நிலவு உங்களுக்கு இனி எல்லாம் சுபமே. கவலைகளும் ஏக்கங்களும் தூர போய் விடும் .என் மகள் என்ற பெருமை வரும். அப்பா என்ற அதிகாரம் வரும். அம்மாக்கு அழகு படுத்தி பார்க்க ஆசை வரும் , ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்னறு என்ற (பழைய கால ) நினைவு வரும். இனத்தில் ஒன்று போதும் என்ற எண்ணம் வரும். (வருமா) . உங்கள் இன்பத்தை யாராலும்பங்கு பிரிக்க முடியாது. இனிஎன்ன் இன்பத்துக்கு சொந்த காரன்.வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றமில்லாத உச்ச வரிகள் நிழலி. வரிந்து கட்டியோ, வலிந்தோ திணிக்காத உணர்வில் உதிர்ந்த கண்ணீர்த்துளி கவிதையாகி நிழலியின் மற்றைய கவிதைகள் அத்தனையையும் பொய்யாக்கி மெய்யை உருவாக்கிப் புதுவடிவம் தந்துவிட்டாள் குட்டி நிலா. குட்டிநிலா இயலினிக்கு வாழ்த்துக்கள்.

நல்ல உணர்வான கவியை எம்மோடு பகிந்து கொண்டதற்கு நன்றிகள் தோழரே....வாழ்த்துக்கள்...!

Edited by ஈழமகள்

நிழலி

கவிதை மிக மிக அருமை.ஒவ்வொரு வரியுமே ஒரு கவிதையாய் இருந்தது.என்க்கும் இதே வார்த்தையில் விபரிக்கமுடியாத அனுபவம் வந்தது ஆனால் இன்று அது உங்கள் மூலம் முழு ஆண்களுக்கும்சார்பாக நிறைவேறியிருக்கின்றது.

வாழ்த்துக்கள். கவிதைக்கும்,உங்களை அப்பா,அம்மா ஆக்கிய அந்தபுது ஜீவனுக்கும்.தொடரட்டும் உங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிரின் ஜனனம் பற்றிய படைப்பு அழகு.

காலம் காலமா இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய தேவதை நேற்றைய மகள். இன்றைய மகள் நாளை இன்னொருவன் தேவதை. இவற்றையும் மனித வரலாறு சந்திக்க வைக்கும்..! அதையும் இப்போதே உணர்ந்து கொண்டு எதிர் கொள்வது நலம்.

மனித வாழ்க்கைச் சுழலியில் நான் எந்த இடத்தில்...???! சுழலி முடியும் தறுவாயில் எல்லா உடல் உணர்வு இன்பங்களும் கழிந்து நான் எங்கே..???! மரணத்தின் பிடியில் அந்த வாழ்வின் முடிவில்.. எதை உணர்வேன்..???! இவற்றையும் சொல்வது நன்று. ஏனெனில்.. இப்போ எல்லாம் மனிதர்கள் வாழ்க்கை என்பது ஏதோ தமக்கான நிரந்தரம் என்பதுவாய் சுயநல மிக வாழப் பழகிக் கொள்கின்றனர். ஆசைகளை அதிகம் வளர்த்துக் கொள்கின்றனர். அது ஆபத்துக்களை வரவழைத்துக் கொள்கிறது. :D

Edited by nedukkalapoovan

கவிதையின் ஒவ்வொரு வரியும் உங்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நிற்கிறது. கவிதை அருமையிலும் அருமை! வாழ்த்துக்கள்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

என் தாய் எனைப்

பெற்ற யோனி

வலி

நான் கண்டேன்

கருப்பையின் தசைகளின் அதீச சுருக்கமே வலிக்குப் பெரிதும் காரணம். யோனி மடல் இயல்பாகவே மீள்தகவுடைய (Elastic) தசையமைப்பைக் கொண்டிருப்பதால் அதன் காரணமாக ஏற்படும் வலி பெரிதாக இருக்காது. :D

காலம் காலமா இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய தேவதை நேற்றைய மகள். இன்றைய மகள் நாளை இன்னொருவன் தேவதை. இவற்றையும் மனித வரலாறு சந்திக்க வைக்கும்..! அதையும் இப்போதே உணர்ந்து கொண்டு எதிர் கொள்வது நலம்.

மனித வாழ்க்கைச் சுழலியில் நான் எந்த இடத்தில்...???! சுழலி முடியும் தறுவாயில் எல்லா உடல் உணர்வு இன்பங்களும் கழிந்து நான் எங்கே..???! மரணத்தின் பிடியில் அந்த வாழ்வின் முடிவில்.. எதை உணர்வேன்..???! இவற்றையும் சொல்வது நன்று. ஏனெனில்.. இப்போ எல்லாம் மனிதர்கள் வாழ்க்கை என்பது ஏதோ தமக்கான நிரந்தரம் என்பதுவாய் சுயநல மிக வாழப் பழகிக் கொள்கின்றனர். ஆசைகளை அதிகம் வளர்த்துக் கொள்கின்றனர். அது ஆபத்துக்களை வரவழைத்துக் கொள்கிறது. :D

இப்பத்தான் குழந்தை வாழ்க்கைப்பயணத்தை ஆரம்பிச்சு இருக்கிது. இப்போதைக்கு உங்கட Databaseஇல மாத்திரம் இயலினியை பதிஞ்சு வையுங்கோ. இன்னமும் ஒரு பதினாறு, பதினேழு வருசம் பொறுங்கோ. நிழலியிண்ட பிள்ளை எண்டபடியால பதினைஞ்சு, பதினாறு வருசத்துக்குபிறகும் யாழ் இருந்திச்சிது எண்டால் பிள்ளை கட்டாயம் வந்து தமிழில கருத்து எழுதும். அதுக்குபிறகு உங்கடை வழமையான தாக்குதலை மேற்கொள்ளலாம். அந்தா நெடுக்கு மாமா வாறாரம் எண்டோன பிள்ளை ஐயோ எண்டு கத்திக்கொண்டு இஞ்சாளப்பக்கத்தால ஓட்டம் எடுக்கும்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியிண்ட பிள்ளை எண்டபடியால பதினைஞ்சு, பதினாறு வருசத்துக்குபிறகும் யாழ் இருந்திச்சிது எண்டால் பிள்ளை கட்டாயம் வந்து தமிழில கருத்து எழுதும். அதுக்குபிறகு உங்கடை வழமையான தாக்குதலை மேற்கொள்ளலாம். அந்தா நெடுக்கு மாமா வாறாரம் எண்டோன பிள்ளை ஐயோ எண்டு கத்திக்கொண்டு இஞ்சாளப்பக்கத்தால ஓட்டம் எடுக்கும்.

அந்தளவுக்கு பயந்தான் கொள்ளியாவா அதுவும் வளரப் போகுது..! மனிதன் என்றால் துணிவு வரனும்... இல்லைன்னா..!!! :D

அது சரி. பிள்ளை பயந்தாலும் மாமா நீங்கள் இருக்கிறீங்கள்தானே. உங்கடை கருத்துக்களை வாசிக்கிறதில பிள்ளைக்கு பயம் எல்லாம் போயிடும். :D

கருப்பையின் தசைகளின் அதீச சுருக்கமே வலிக்குப் பெரிதும் காரணம். யோனி மடல் இயல்பாகவே மீள்தகவுடைய (Elastic) தசையமைப்பைக் கொண்டிருப்பதால் அதன் காரணமாக ஏற்படும் வலி பெரிதாக இருக்காது. :)

யோனி மடல் மீள் தகவுடையன என்பதற்காக வலி குறைவாக இருக்கும் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நான் எந்த பிரசவத்தையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் அப்படி தான் என நினைக்கிறேன். ஆனால் எதையும் அனுபவிக்காமல்/ பார்காமல் எடுத்த எடுப்பில் மீள்தகவுடைய தசையமைப்பு எனும் தத்துவத்தை வைத்து விளக்கம் கொடுப்பது :D

Edited by KULAKADDAN

பிள்ளைப் பேறின் போது யோனி மடல் விரிவை விட கருப்பைக் கழுத்துப் பகுதியைக் கட்டுப்படுத்தும் தசைகள் மற்றும் எலும்புகளின் விரிவு மற்றும் கருப்பை சுவர் தசைகளின் சுருக்கமே அதிக வலியை ஏற்படுத்துவதாக நான் கற்றுக்கொண்ட அளவில் தெரிவித்துக் கொண்டேன். எனக்கும் நேரடி அனுபவமில்லை.

மேலதிக விபரங்கள் இங்கும் உள்ளன.

The birth begins when labour pains are strong. Labour pain is felt as a contraction in the womb

http://www.netdoctor.co.uk/health_advice/facts/deliverystart.htm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிப்பறிவை விட அனுபவங்கள்தான் முக்கியம் என சொல்லாமல் சொல்கின்றார்கள் . :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உயிரின் ஜனனம் பற்றிய படைப்பு அழகு.

காலம் காலமா இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய தேவதை நேற்றைய மகள். இன்றைய மகள் நாளை இன்னொருவன் தேவதை. இவற்றையும் மனித வரலாறு சந்திக்க வைக்கும்..! அதையும் இப்போதே உணர்ந்து கொண்டு எதிர் கொள்வது நலம்.

மனித வாழ்க்கைச் சுழலியில் நான் எந்த இடத்தில்...???! சுழலி முடியும் தறுவாயில் எல்லா உடல் உணர்வு இன்பங்களும் கழிந்து நான் எங்கே..???! மரணத்தின் பிடியில் அந்த வாழ்வின் முடிவில்.. எதை உணர்வேன்..???! இவற்றையும் சொல்வது நன்று. ஏனெனில்.. இப்போ எல்லாம் மனிதர்கள் வாழ்க்கை என்பது ஏதோ தமக்கான நிரந்தரம் என்பதுவாய் சுயநல மிக வாழப் பழகிக் கொள்கின்றனர். ஆசைகளை அதிகம் வளர்த்துக் கொள்கின்றனர். அது ஆபத்துக்களை வரவழைத்துக் கொள்கிறது. :D

நெடுக்கு சாமி!மன்னிக்கவும்

இது கொஞ்சம் அதிகபிரசங்கித்தனம்

நெருப்பு சுடும் எண்டு படிச்சால் மட்டும் காணாது.

நெருப்பை சொந்தகையாலை தொட்டுப்பாத்தால்த்தான் தெரியும் அதிலை என்னவிசயம் இருக்கெண்டு

ஏனெண்டால் அதின்ரை வேதினை படிப்பறிவாலை ஒருநாளும் தெரியாது :D

பாவப்பட்ட பொம்புளைசீவன்களுக்கு ஒவ்வொரு பிள்ளைப்பெறுவும் மறுபிறவி எண்டு எங்கடை பழசுகள் சொல்லுறது படிச்ச அறிவை வைச்சே? :D

திருப்பியும் மன்னிக்கோணும் :D பெண்வாசனையே தெரியாத உங்களுக்கு இதெல்லாம் ஒருகா தாலை போய் இன்னொருகாதாலை வெளி வாற விசயந்தானே :)

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் நிழலி. :)

நன்றி ஈசன்

நிழலிக்கு

முதலில் வாழ்த்துக்கள் உங்கள் குட்டி நிலவின் வருகைக்கு...

அடுத்த வாழ்த்து உங்கள் அழகான கவிதைக்கு....

வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் என் அன்பான நன்றிகள் இளங்கவி

என் தேவதை

தந்த நிலவு

என் இருட்டினை

கடந்து செல்கின்றது...

..உங்கள் தேவதைக்கும் உங்களுக்கு (இருவருக்கும்) வாழ்த்துக்கள் இனி எல்லாம் சுபமே. மண்ணில் வந்த நிலவு அவள் மடியில் தூங்கும் நிலவு உங்களுக்கு இனி எல்லாம் சுபமே. கவலைகளும் ஏக்கங்களும் தூர போய் விடும் .என் மகள் என்ற பெருமை வரும். அப்பா என்ற அதிகாரம் வரும். அம்மாக்கு அழகு படுத்தி பார்க்க ஆசை வரும் , ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்னறு என்ற (பழைய கால ) நினைவு வரும். இனத்தில் ஒன்று போதும் என்ற எண்ணம் வரும். (வருமா) . உங்கள் இன்பத்தை யாராலும்பங்கு பிரிக்க முடியாது. இனிஎன்ன் இன்பத்துக்கு சொந்த காரன்.வாழ்த்துக்கள்

அழகாக, உணர்வு பூர்வமாக எழுதி வாழ்த்தியுள்ளீர்கள்...பெண் பிள்ளை என்பது இயற்கை கொடுத்த வரம். ஒரு பெண் பிள்ளை என்பது பூரணத்துவத்துவத்தின் அடையாளம். ஒரு ஆண் பிள்ளையும் (மூத்தவன்) பெண் பிள்ளையுமாக இரண்டை இயற்கை கொடுத்துள்ளது என்பதால் என்னுள்ளும் ஒரு பூரணத்துவத்தை உணர்கின்றேன். மகள் படுக்கும் அழகை பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரமும் இருக்கலாம் போல இருக்கின்றது...எப்போதுமே தந்தைக்கு மகள் தான் உணர்வு பூர்வமான உறவு என்பதை உணர்த்துகின்றாள்

மாற்றமில்லாத உச்ச வரிகள் நிழலி. வரிந்து கட்டியோ, வலிந்தோ திணிக்காத உணர்வில் உதிர்ந்த கண்ணீர்த்துளி கவிதையாகி நிழலியின் மற்றைய கவிதைகள் அத்தனையையும் பொய்யாக்கி மெய்யை உருவாக்கிப் புதுவடிவம் தந்துவிட்டாள் குட்டி நிலா. குட்டிநிலா இயலினிக்கு வாழ்த்துக்கள்.

முதல் எழுத்தில் இருந்து, முடிவு வரை ஒரே மூச்சில் எழுதிய கவிதை இது. எந்த சொல்லும், வரியும் எந்தவிதமான யோசனையும் இன்றி தன் பாட்டில், தன்னுணர்வினால் வந்து அமர்ந்து கொண்டது. கவிதை என்னைக் கொண்டு தன்னை எழுதியது. எழுதி முடித்து இரவு படுக்கப் போய் விடிய பார்க்கும் போது, எனக்கே என் கவிதை புதிய கவிதையாக தெரிந்தது. அதனால் தான் திருத்தி எழுத விரும்பவில்லை (எழுத்துப் பிழைகளை திருத்துவதை தவிர)

நல்ல உணர்வான கவியை எம்மோடு பகிந்து கொண்டதற்கு நன்றிகள் தோழரே....வாழ்த்துக்கள்...!

நன்றி தோழி

நிழலி

கவிதை மிக மிக அருமை.ஒவ்வொரு வரியுமே ஒரு கவிதையாய் இருந்தது.என்க்கும் இதே வார்த்தையில் விபரிக்கமுடியாத அனுபவம் வந்தது ஆனால் இன்று அது உங்கள் மூலம் முழு ஆண்களுக்கும் சார்பாக நிறைவேறியிருக்கின்றது.

வாழ்த்துக்கள். கவிதைக்கும்,உங்களை அப்பா,அம்மா ஆக்கிய அந்தபுது ஜீவனுக்கும்.தொடரட்டும் உங்கள் பணி.

நன்றி அர்ஜுன்... அற்புதமான அந்தத் தருணங்களை ஒரு கவிதையில் அடக்கி விட முடியாது என்று நினைக்கின்றேன். அந்த நிமிடங்களில், அதிலும் முதன் முதலாக குழந்தையை கண்ணுற்ற அந்த தருணங்களை வடிக்க ஆயிரம் கவிதைகள் போதாது

மனித உயிரின் ஜனனம் பற்றிய படைப்பு அழகு.

காலம் காலமா இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய தேவதை நேற்றைய மகள். இன்றைய மகள் நாளை இன்னொருவன் தேவதை. இவற்றையும் மனித வரலாறு சந்திக்க வைக்கும்..! அதையும் இப்போதே உணர்ந்து கொண்டு எதிர் கொள்வது நலம்.

நன்றி நெடுக்ஸ்

கவிதையின் ஒவ்வொரு வரியும் உங்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நிற்கிறது. கவிதை அருமையிலும் அருமை! வாழ்த்துக்கள்.... :)

நன்றி ராசராசன்

என் தாய் எனைப்

பெற்ற யோனி

வலி

நான் கண்டேன்

என்று எழுதியது சில கருத்து மயக்கங்கள் ஏற்பட காரணமாக் அமைந்துள்ளது என தெரிகின்றது. அம்மா அந்த கணத்தில் பட்ட வலி எனக்குள், பிரசவ அறைக்குள் போனதில் இருந்து குழந்தையை காணும் வரை உணர்வு பூர்வமாக எழுந்தது என்று பொருள் பட எழுத முயன்றுள்ளேன்.

Edited by நிழலி

அருமையான பஞ்சாமிர்தம் உண்ட ருசி

உங்கள் கவி கண்ணுற்ர போது!!!!!

அற்புதம் உங்கள் வீட்டில் வந்திருக்கும் அந்த

மலர் எல்லா சுதந்திரமும் பெற்று மனித நேயத்துடன்

நிமிர்ந்த நடையுடன் இந்த உலகை வலம் வர

என் வாழ்த்துக்கள்!!!!!!!!!

அத்தோட என்னட்டையும் 4 பெடியள் இருக்கிறாங்கள் எண்டு

சொல்லி வைக்கிறன்..................

  • கருத்துக்கள உறவுகள்

கால பைரவன்

சிரித்துக் கொண்டான்

யுகம் யுகமாய்

உனக்காக சேமித்த

நிலவு இது

என்று சொல்லிச்

சென்றான்

பாராட்டுக்கள் நிழலி. நல்ல கவிதையும் மகிழ்ச்சியான தருணமும். உங்கள் தேவதைக்கும் நிலாவுக்கும் என் வாழ்த்துக்கலைச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் நிலா என்றும் வளர்பிறையாக இருக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னட்டையும் 4 பெடியள் இருக்கிறாங்கள் எண்டு

சொல்லி வைக்கிறன்..................

தம்பி நிழலி!

இரண்டு கடிநாய் வாங்கி வளவப்பா :)

இனி உங்கை உள்ள கடுவன்கள் எல்லாம் வாலை ஆட்டிக்கொண்டு திரியப்போகுதுகள் :)

தம்பி நிழலி!

இரண்டு கடிநாய் வாங்கி வளவப்பா :)

இனி உங்கை உள்ள கடுவன்கள் எல்லாம் வாலை ஆட்டிக்கொண்டு திரியப்போகுதுகள் :)

:wub::(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

கருப்பையின் தசைகளின் அதீச சுருக்கமே வலிக்குப் பெரிதும் காரணம். யோனி மடல் இயல்பாகவே மீள்தகவுடைய (Elastic) தசையமைப்பைக் கொண்டிருப்பதால் அதன் காரணமாக ஏற்படும் வலி பெரிதாக இருக்காது. :)

நிழலியின் கவிதை இரண்டு உயிரின் பெறுமதியை சொன்னது.

பெண்களை இழிவாக நினைக்கும் நெடுக்காலைபோவானுக்கு ........

ஒரு பெண் பிரசவ அறையில் குழந்தை பெறும் போது ..... வரும் அழுகையை , வேதனையை கேட்ட அனுபவம் உண்டா ....?

ஏட்டுச்சுரைக்காய் என்றும் கறிக்கு உதவாது.

  • தொடங்கியவர்

அருமையான பஞ்சாமிர்தம் உண்ட ருசி

உங்கள் கவி கண்ணுற்ர போது!!!!!

அற்புதம் உங்கள் வீட்டில் வந்திருக்கும் அந்த

மலர் எல்லா சுதந்திரமும் பெற்று மனித நேயத்துடன்

நிமிர்ந்த நடையுடன் இந்த உலகை வலம் வர

என் வாழ்த்துக்கள்!!!!!!!!!

அத்தோட என்னட்டையும் 4 பெடியள் இருக்கிறாங்கள் எண்டு

சொல்லி வைக்கிறன்..................

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தமிழ்மாறன்.........

உங்கள் பெடியள்ள ஒன்றை தாரதென்றால், எவ்வளவு சீதனம் தருவீர்கள்?

கால பைரவன்

சிரித்துக் கொண்டான்

யுகம் யுகமாய்

உனக்காக சேமித்த

நிலவு இது

என்று சொல்லிச்

சென்றான்

பாராட்டுக்கள் நிழலி. நல்ல கவிதையும் மகிழ்ச்சியான தருணமும். உங்கள் தேவதைக்கும் நிலாவுக்கும் என் வாழ்த்துக்கலைச் சொல்லுங்கள்.

வாழ்த்துகளுக்கு கருத்துக்கும் என் அன்பான நன்றி கவிஞரே. எனக்கு பிடித்த கவிஞரான உங்களின் பாராட்டும், வாழ்த்தும் என்றும் நெஞ்சில் இனிக்கும் நினைவாக நிற்கும்

நிழலியின் நிலா என்றும் வளர்பிறையாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி கிருபன்...

தம்பி நிழலி!

இரண்டு கடிநாய் வாங்கி வளவப்பா :)

இனி உங்கை உள்ள கடுவன்கள் எல்லாம் வாலை ஆட்டிக்கொண்டு திரியப்போகுதுகள் :)

கொஞ்சம் வளரவிட்டு, கண்டிப்பாக கராத்தே மற்றும் தற்காப்பு பயிற்சிக்காக அனுப்ப போறன் மகளை

...மற்றும் கருத்துகளை தந்த மச்சானுக்கும், குளக்காட்டனுக்கும், கு.சா வுக்கும், தமிழ் சிறிக்கும் என் நன்றிகள்

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.