Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ததேகூட்டமைப்பை பிதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களின் முடிவுக்கு பெரும்பாலான மக்கள் கட்டுப்பட்டு சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கட்டும்.அதை பெரும்பாலான புலத்துத் தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை.அதாவது தாயகத்தில் வாழும் மக்களின் முடிவுக்கு(அரசியல் செயற்பாட்டுக்கு) புலத்திலுள்ள பெரும்பாலான மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதே புலம் பெயர் ஊடகங்களுக்கூடாக அறியக் கூடியதாக இருக்கிறது.நாளை தாயகத் தமிழரின் போராட்ட வடிவமானது மாற்றம் கண்டால் அதற்கும் புலத்திலுள்ள தமிழர்கள் ஆதரவாகவே இருப்பார்கள்.தாயக மக்களும் புலத்து மக்களும் வேறு வேறல்லர்.

நன்றி புலவர்

என் கருத்தும் இதுதான்

ஏறகுறைய மகிந்த பதவியேற்ற காலப்பகுதியில் இருந்து சிங்கள இனவாதம் நன்கு திட்டமிட்டு தன் மூளை வளங்களை ஒன்றுசேர்த்தது. பல்வேறு சிங்களப் பல்கலை களகப் பேராசிரியர்கள் தமிழரை அடக்க ஒன்றுசேர்ந்து அரசின் பின் நின்றார்கள். உள்ளூர் / வெளிநாடுப் பேராசிரியர்கள் எனப் பலர்.

இவர்களின் நீண்ட காலத்திட்டங்களுள் ஒன்றுதான் புலத்தில் இருக்கும் தமிழரை போராட்டத்திற்கு பயனற்றதாக்குவது. இதன் அடிப்படையில் பல பிரச்சாரங்களை முன்னெடுத்தர்கள். 2006 அளவில் போராட்டம் நடப்பதே புலம் பெயர்ந்தவர்களுக்குத்தான் என்று வேறு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

புலம் பெயர்ந்தவர்களிற்கும் உள்ளூரில் இருப்பவர்களிற்கும் இடையில் தனிநாடு சம்பந்தமாக சிந்தனையில் வேறுபாடு இருக்கின்றதென்பதும் இவர்களின் ஒரு பிரதான‌ பிரச்சாரம். ஏறகுறைய 4 வருடம் பழமை வாய்ந்த சிங்களக் கருத்து இது.

இன்று ந‌ம்ம‌வ‌ர்க‌ள் சில‌ர் இது போன்ற‌ க‌ருத்துக்க‌ளை முன்வைக்கின்றார்க‌ள் என்றால் சிங்க‌ள‌ப் பிர‌ச்சார‌ம் வேலை செய்கின்ற‌து என்று அர்த்த‌ம்.

இன்னுமொன்றையும் நாம் க‌வ‌னிக்க‌ வேண்டும். இவ்வள‌வு தேர்த‌ல் அம‌ளி தும‌ளிக்குள்ளும், த‌மிழ‌ரைப் பிரித்து புல‌த்த‌மிழ‌ரை சோர்வ‌டைய‌ வைக்க‌த்த‌க்க‌ வ‌கையில் செய்ற்பாடுகள் தொட‌ர்ந்து ந‌ட‌க்கின்ற‌தென்றால் சிங்க‌ள‌ இனவாதம், இன்னும் எவ்வ‌ள‌வு உசாராக‌ இருக்கின்ற‌து என்ப‌தையும், ச‌ர‌த், ம‌கிந்த‌விற்கு அப்பால் நிதான‌மாக த‌ன‌து அடிக‌ளை எடுத்துவைப்ப‌தையும் க‌வ‌னிக்க‌வேண்டும்.

உண்மைதான்

ஆழமாக

அவசியமாக சிந்திக்கவேண்டியது பகுதி இது..

நன்றி ஈசன்

  • Replies 100
  • Views 8.2k
  • Created
  • Last Reply

இந்தக் கதை கட்டுதலில் நாசூக்காக யதார்த்த பூர்வமாக சிந்திக்கப் பின்னிக்கும் தமிழர் மத்தியில் பொய்யான புள்ளிவிபரம் ஒன்று திணிக்கப்படுகிறது - புலம் பெயர்ந்த தமிழர்கள் வெறும் 8 இலட்சம் என்பதுதான் அது.

கடந்த 30 ஆண்டுகளில் 15 இலட்சம் தமிழர் இலங்கையை விட்டு பல்வேறு வழிகளில் வெளியேறியிருக்க முடியும் என ஒரு பல்கலைகழக பேராசிரியர் சில காலத்தின் முன் குத்து மதிப்பான புள்ளிவிபரங்களுடன் சொன்னதாக ஞாபகம்.

இன்று அவர்களின் குழந்தைகளுடன் இந்தியா உட்பட உலகில் புலம் பெயர்ந்து இருக்கும் ஈழத் தமிழரின் மொத்த எண்ணிக்கை சுமார் 22 இலட்சத்தையும் தாண்டவேண்டும்.

சிங்கள இனவாதிகள் தமிழரின் எண்ணிக்கையை பல வழிகளிலும் குறைத்துக் காட்ட முயலுவதற்கு எம்மவர் துணை போய்விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை யாராவது அறியத்தரலாமே...

ஆராய்ச்சி செய்யலாமே....

Replying to வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள்

அடுத்தது, இப்படியான ஒரு சம்பவத்தை எனக்குத் தெரிந்த எந்தவொரு யாழ் வாழ் தமிழ்க் குடிமகனும் உறுதிப்படுத்தவில்லை.

எனவே இது தமிழரை சிதைக்கும் முயற்சியாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

Edited by Aasaan

  • கருத்துக்கள உறவுகள்

நான் போய் இருக்கிறனோ..... என்ர புருசன் போய் இருக்கிறானோ..... என்ர பிள்ளையள் போய் இருக்குதுகளோ...... இல்லையோ.... முற்றத்து மாமரத்துக்கோ பின்வளவு பனை மரத்திற்கோ.... எனக்கு தமிழீழம் வேணும்.... அது என்ர உரிமை.... அத கேக்குறதுக்கும் எனக்கு உரிமை இருக்கு..... அதப்பற்றி உங்களுகஇக என்ன கவலை???????? உங்களுக்கு தேவையில்லையெண்டால் பொ* போகவேண்டியதுதானே.......

ஆமோதிக்கின்றேன்

உண்மைதான் ஆசான்

வரவர யாழ். களத்தில்தான் இப்படியான குப்பைகளை விதைத்து

வெளுத்து வாங்குகின்றனர்

எதிர்காலம் பற்றியோ

தீர்க்கதரிசனமோ

மக்களில் நேசமோ

இன்றைய எமது பலமோ

அறியாது இவை விதைக்கப்பட்டு

தேவையற்ற கருத்துக்கள் இவற்றினூடு விதைக்கப்படுகின்றன.....

என்னால் முடிந்தளவு எழுதிவிட்டேன்

மற்றவர்களும் எழுதவேண்டும்

நன்றி

சிலர் என்னுடன் மோதலுக்கு வந்தனர்

ஆனால் உண்மையில் நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்

நாங்கள் பலமாக இருந்தபோது....

இப்படியான உறுதியானவர்களைத்தேடித்திரிந்தோமே....

எங்கு போனார்கள் அன்று.....?

இன்று எம்மிடம் அந்த பலமில்லாதபோது...

அது இருப்பதாக மனதளவில் நினைத்துக்கொண்டு...

நாம் மீண்டும் பலமான எதிரியை எவ்வாறு எதிர்கொள்வது....

வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள்

இந்த தலைப்பையே பாருங்கள்

ஒருவர் சொல்லிவிட்டால்

வன்னி மக்களாகிவிடுமா?

ஏதோ கணக்கெடுப்பு நடத்தியதுபோல்...

சர்வசன வாக்கெடுப்பு நடாத்த இவர்கள் தயாரா?

நாங்கள் தயார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு,வெள்ளவத்தை,பம்பலப்பிட்டியிலை..

இருக்கிற புலம்பெயர்ந்தவங்களை புடிச்சு குரல்வளையை கடிச்சு காறித்துப்ப எல்லாம் கணக்காயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வந்தால் தமிழ்ர் பிரச்சினை எல்லாம் தீர்ந்து போகப்போகுது எண்டுறார்...! அது சரி உந்த விசயம் சிங்களச்சனத்துக்கு தெரியுமோ...???

எப்படி தயா அண்ணா உங்களால் மட்டும் முடியுது. :lol::(

quote name='காவடி' date='21 January 2010 - 08:25 AM' timestamp='1264062311' post='561902']

ஆக பொருளாதார வளம் இருந்தவர்கள் போருக்கு வெளியே வந்துவிட்டார்கள், அற்றவர்கள் அம்பிட்டுக் கொண்டார்கள். நம்மிடையேயான வர்க்கப் பிரிப்பு தெரிகிறதல்லவா?

மற்றது புலம் பெயர விரும்பினாலும் எத்தினை பேரிற்கு புலம் பெயர்வதற்கான பொருளாதார வாய்புக்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி என்னை முகத்தில் அறைகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் தமது பொருளாதாரத்தைப் பயன்படுத்தி தமது உறவுகளை அழைத்து விட்டார்கள். மற்றவர்களுக்கு நல்லவேளையாக அந்த வாய்ப்பு இல்லாத படியால் அவர்கள் வரமுடியாது. அதனால் தமிழீழத்திற்கான தேவையும் உள்ளது. அப்படித்தானே..

பூனைகுட்டி தமிழீழம் உங்கடை விருப்பம் அல்லது உங்களுக்கு வேணும் என்பது உங்கட விருப்பம். ஆனா உங்கடை விருப்பத்திற்காக இன்னொருவன் துயரப்பட முடியாது.

45 லட்சம் மக்களுக்கான விடுதலைக்கான பாதையின் பாரம் - கடைசியில் 3 லட்சம் பேரின் தோளிலும் முதுகிலும் வந்து பொறிந்த போதே போராட்ட சமநிலை குலைந்து விட்டது.

முதலும் சொன்னதுதான்.

45 லட்சம் மக்களில் ஆயுதம் தூக்கியவர்கள் 45 ஆயிரம் பேர்

யுத்தம் காரணமாக வெளியேறியவர்கள் 10 லட்சம் பேர்..

சுதந்திரத்துக்குப் போராடும் தகமையுள்ள இனமென்று சொல்லிக் கொள்ள ஏதாவது முகாந்திரம் உள்ளதா என்ன....?

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதிகள் ஒரு விமானத்தைக்கடத்தி அதனை அழிக்கப்போவதாகவும் அவ்வாறு செய்யாது விடுவதென்றால் அவர்களது நிபந்தனைக்கு இணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள் அதனை அந்த நாட்டு பாதுகப்பு சபையில் கலந்தாலோசித்தார்கள் அதில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் கூறினார் விடுங்கள் அவர்களை விமானத்தைக்குண்டு வைத்து தகர்க்கட்டும் என்றார்,அதைக்கேட்ட அதிகாரிகள் ஆத்திரத்துடன் அமைச்சரைக்கேடனர்" இதுவே உங்களது குடும்பத்தில் ஒருவர் இந்த விமானத்தில் பயணம் செய்தால் இப்படி அலட்சியமாகக்கதைப்பீர்களா?? என்று கேட்டன்ர் அதற்கு அவர்

"ஒன்றல்ல எனது இரண்டு குடும்ப அங்கத்தினர் இந்த விமானத்தில் பயணிக்கின்றனர் எனது மனைவியும்,எனது மாமியாரும் பயணிக்கின்றனர் என்றார்.

ஆரம்பத்தில் இவர்கள் ஏதோ புலிகளைத்தான் எதிர்க்கிறார்கள் என்று நினைத்தால் இவர்களுக்கு வன்னி மக்களும் ஆகாது போலிருக்கு உலகமே கை விட்ட போதும் எமது புலம்பெயர் உறவுகள் எமக்கு உள்ளார்கள் என்ற அவர்களது நமிக்கையை சிதைக்கவேண்டும் என்பது இவர்களது அவா!

இந்த முயற்சி ஒருசிறு பிள்ளைத்தனமான முயற்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மட்டுமல்ல. வடகிழக்கு எங்கனும் தமிழீழம் கோரி ஒரு வாக்கெடுப்பு நடாத்துவதில் சிக்கல் இல்லை. அவ்வாறான ஒரு வாக்களிப்பில் தமிழீழமே அவர்களினது தெரிவாகவும் இருக்கப் போவதை யாரும் மறுக்கப் போவதில்லை.

எப்படி இங்கே தமிழர்களுக்கு தமிழீழத்தில் பெருவிருப்பு எனக்காட்டுகிற வாக்களிப்புக்கள் நடைபெறுகிறதோ.. அவ்வாறே அங்கும் நடந்தால் 99 வீத வாக்குகள் விழத்தான் செய்யும்.

ஆனால் இங்கே தமிழீழத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி - அதற்காக முழுநேரப் பங்காளியாக வருமாறு கோரி தேர்தல் நடாத்தப்பட்டால் எத்தனைதூர வரவேற்பு இருக்குமோ அதே மாதிரி அங்கும் தமிழீழத்திற்கான முன்னெடுப்புக்களில் இணைந்துகொள்ளுமாறு தேர்தல் நடாத்தப்பட்டால் - விளைவு சொல்லிக்கொள்வதைப் போல அமையப்போவதில்லை. அதில் தவறுமல்ல.

--

உண்மையாகவேதான் - ஸ்கில்ட் இமிக்ரேஸன் வழிகளில் புலம்பெயர்ந்தவர்கள் - தமது மனைவி குடும்பம் குழந்தையென அழைத்தவர்கள் - அங்கிருக்கிற ஸ்கில் அற்ற பொருளாதாரம் அற்ற மனிதர்களைப் பார்த்து அவர்கள் பொருளாதாரமற்றவர்கள். அதனால் வரச்சாத்தியமில்லை என நிம்மதியடைவது - என் முகத்தில் அறைகிறதுதான். அவர்கள் வர விரும்பினால் கூட பொருளாதாரம் அவர்களை விடுகுதில்லையல்லவா.. ?

நான் மக்களின் உணர்வுகளூடு பேசுகிறேன். நீங்கள் தர்க்க ரீதியாக ஒரு பட்டிமன்ற பேச்சாளர்போல பொயின்ற்ஸ் எடுத்து வெட்டிப் பேசுகிறீர்கள். எப்படி இராயகரனதும் சிறிரங்கனதும் சித்தாந்தங்கள் யதார்த்தத்தை விட்டு தூர நிற்கிறதோ அப்படியே உங்களதும்..

--

நீங்கள் சொன்ன அங்குள்ள மக்களின் நிலையறிகிற தேர்தல் ஒன்றின் தேவையை உணர்கிறேன். ஜனாதிபதித்தேர்தல் முடிவுகளில் தமிழர்களின் தெரிவு எதுவாக இருக்கிறது என்பதனை அறிய ஆவலாகவே இருக்கின்றேன்.

1. வடகிழக்கு தமிழர்கள் மகிந்தவை பெருவாரியாக தெரிவு செய்தால் - சரி அவர்கள் தமது வழியைத் தெரீவு செய்துவிட்டார்கள். இனி நாம் தலையிடத்தேவையில்லை என முடிவெடுப்பதற்கும்

2. சரத்தை தெரிவு செய்தால் மகிந்தமீது மக்கள் கோபமுற்றிருக்கிறார்கள் என்பதுவும் அது தேசியத்தின் பாற்பட்டதேயென்றும் முடிவு செய்து கொள்வதற்கும்

3. தேர்தலில் வாக்கேயளிக்காமல் விட்டால் - எவன் ஆண்டால் எனக்கென்ன என்ற விட்டேத்தியான மனநிலையில் அவர்கள் உள்ளார்கள் என முடிவு செய்து கொள்வதற்கும் 26 ஐ எதிர்பாக்கிறேன்.

நான் அறிந்தவரை 3 வது நடைபெறவே வாய்ப்புண்டு என்கிறார்கள். அது பற்றிய அக்கறையே இன்றி மக்கள் இருப்பதால் மக்கள் திரண்டு தேர்தலை புறக்கணித்தார்கள் என நாங்கள் ஏதாவது கட்டுரை எழுதவே நிறையச் சாத்தியங்கள் உள்ளன.

காவடி,

பொருளாதார வளம் அற்றவர்கள் புலம் பெயர முடியாது என்று உண்மையைச் சொன்னால் அதற்காக நான் நிம்மதி அடைவதகாச் சொல்லி உங்களுக்கு மட்டுமே இது கவலை அழிக்கிறது என்றும் சொல்லி நீங்கள் மட்டுமே புனிதராக உங்களைக் கட்டமைப்பது மிகவும் மலினமான யுக்தி.மக்களின் அவலம் எதனால் ஏற்பட்டது அதற்க்குக் காரணம் என்ன என்பதை தர்க்க ரீதியாகக் கூறினால் பட்டி மன்ற வெட்டிப் பேச்சு என்று சொல்வதும் மக்களின் உணர்வுகளூடாகாப் பேசுவது என்று சடைவதும் அதனை விட மிக மலினமான யுக்தி.

மக்களின் அவலம் யாரால் ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன அதற்கான தீர்வு என்ன என்பதைப் பார்ப்பதன் மூலமே அந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.உங்களின் வெறும் கவலைகள், அவர்களின் அவலங்களை முடிவுக்குக் கொண்டுவரா.உங்களை மக்களின் காவலர் என திரு நிலைப் படுத்த மட்டுமே அது உதவும்.மக்கள் போராடியதே அவர்களின் அவலங்களுக்குக் காராணம் ,அதனால் இந்த அவலங்கள் வேண்டாம் எனில் அவர்கள் போராடி இருகக் கூடாது இனியும் போராடாக்கூடாது என்பதன் மூலம், மக்கள் ஏன் எவருக்கு எதிராகாப் போராடினர் என்பதுவும் அடிபட்டுப் போய், அவர்கள் அடங்கி ஒடுக்கி இருக்க வேண்டும் என்பதில் வந்து முடியும்.மக்களின் அவலக்களுகுக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் பேசாமால், அவலங்களை மட்டுமே பேசுவதன் மூலம், மக்களை அடக்குபவர்களின் எண்ணக் கருவுடன் நீங்கள் ஒன்று படுகிறீர்கள்.இது மக்களின் அவலங்களை தொடரச் செய்யுமே ஒழிய, அவர்களுக்கான விடுதலையையோ சுதந்திரத்தையோ பெற்றுத் தரா.தமிழரங்கத்தில் அரங்கேறும் மக்களின் அவலம் பற்றிய கட்டுரைகள், நாளை இதய வீணையிலும் தினகரனிலும் வெளிவரலாம்.டக்கிளஸ் கருணா போன்றோர் மக்களைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள், ஏன் மகிந்த ரணில் கலைஞர் என மிகப் பெரும் தலைகள் எல்லாருமே கவலைப்படுகிறார்கள்.அவர்களின் கவலைகளுக்கும் உங்களின் கவலைக்கும் பெரிய வித்தியாசாம் இல்லை.ஏனெனில் அவர்களும் மக்களின் அவலத்துக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து இருந்தும் கவலைப்படுகிறார்கள், நீங்களும் காரணங்களைச் சொன்னால் எனக்கு பட்டி மன்ற வெட்டிப் பேச்சு மட்டுமே தெரியும் என்று கவலைப்படுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று அவர்களின் குழந்தைகளுடன் இந்தியா உட்பட உலகில் புலம் பெயர்ந்து இருக்கும் ஈழத் தமிழரின் மொத்த எண்ணிக்கை சுமார் 22 இலட்சத்தையும் தாண்டவேண்டும்.

அப்பா கனடாவில வோட்பாண்ணின 48000 ஆட்கள் (99 % ) வோட்பன்ன தகுதியான ஆட்களில் எத்தனை வீதம்...

22 லட்சத்தில கனடாவில 7 அல்லது 8 லட்சம் ஆவது இருக்கும். அதில வோட்பண்ணகூடிய ஆட்கள் கிட்டத்தட 5 லட்சத்திற்கு கூட வரும்...அப்ப 48000 :rolleyes: 10 வீதத்திற்கும் குறைவு...ஆரோ முந்தியும் எழுதியிருந்தவை டக்லஸ் வென்ற மாதிரிதான் என்று...யார் யார் same goal அடிக்கிறது என்று தெரியாம இருக்கு...

எல்லா பகிடிகளுக்கும் பதில் எழுதினால் ஈசன் சொன்னமாதிரி யாரோ ஒரு லூசு புண்ணாக்கு என்றுதான் ஆட்கள் நினைப்பினம்..

நான் நினைச்சனான் அந்த "4 வருட பழமையானது" எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று, ஆனால் விசு அண்ணையும் அதை கோட் பண்ணி எழுதியிருக்கிற படியாச் சொல்லுவம் என்று பார்க்கிறான்... 2003 நான் வேலை தொடங்கேக்க..(சிங்கள இடத்தில) அப்பவே அவங்கள் எங்களிட்டை கேட்பாங்கள்...எங்களுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை...புலிக்கும் அவைகளுக்கு காசு கொடுக்கிற அகதி சனத்துக்கும் தான் நாடுவேண்டும்..(நாங்கள் அவர்களை மொட்டு சிங்களவர் என்று சொல்லுவது போல் அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை அகதிகள்/ கோப்பை கழுவுவார்கள் என்று கானகாலமாய் சொல்லுறவர்கள்...இங்கே உள்ள கனேடியன் பேப்பர் களில் உள்ள பின்னுட்டங்க்களை பார்த்தால் தெரியும்...) நாங்கள் அவர்களை இப்பத்தான் உதுகள் எல்லாம் செய்யவெளிகிட்டவங்கள் என்று சொல்லி எங்களை திருப்பித்திபடுத்துவதில் யாருக்கு என்ன லாபம்?

மற்றது ரகுநாதன் நீங்கள் முதலே சொல்லியிருந்தால்..உங்களின் நண்பர் ஒரு பக்கசார்பானவர் என்று ..இவ்வளவு விவாதம் வந்திருக்காது..நான் முதலே சொல்லியிருந்தேன்..எனக்கும் இப்படி மக்கள் ? நிம்மதியாய் இருக்கிறார்கள் என்று தெரியும் ஆனால் நான் சொல்ல வரவில்லை... சொன்னால் என்ன சொல்லுவீர்கள்....உங்கள்களின் நண்பர் மாதிரி எனக்கும் ஒரு பின்னணி உண்டென நினைக்ககூடும்/ சொல்லக்கூடும்..

இசைக்கலைஜன், உங்களின் பதிலில் நீங்கள் திருப்ப்திபடலாம் ஆனால்...எனது கேள்வி பொதுவானது...தனிப்பட்டதல்ல...

ரதி உங்களது பதிலில் ஒன்றை நான் தவறவிட்ட உணர்வு...

பலரும் வேலையை விட்டது/ இழந்தது என்று சொல்லியிருந்தீர்கள்...உண்மை...பலரும் கலந்து கொண்டதும் உண்மை...அதில் பலன் வராது போனதுதான் கவலை...நீங்கள்.. நான் அவ்வாறு செய்ததால் தான் மக்களின் இழப்பு கூடியது என்று சொல்லுவேன்/ கருதுவேன் என்று எழுதியிருந்தீர்கள்...அப்படிஎன்றால் எனது 2 வயது குழந்தையுடன் கிட்டதட்ட எல்லா நாளும் பேயிருப்பேனா? போராட்டம் நாடத்தப்பட்ட முறையில் தவறு இல்லாமல் இல்லை..இங்கு பலருக்கு தெரியும்...பலரிடம் பதில் இருக்கவில்லை ஏன் புலிக்கொடி பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்று, அதனுடைய ஒருவிளைவுதான் நாங்கள் நாட்கணக்க வாரக்கணக்கா கூட்டம் கூடியும் ஒருவரும் எங்களிடம் முறையான பதில் தரவில்லை...ஆனால் அதைபற்றி பல கருத்துக்கள்/ முறைப்பாடுகள் இங்கேயுள்ள CFRA என்கிற வானெலியில் போனபோது நாங்கள் அவர்களுக்கு விசர் என்று நினைத்தோம்..தமிழ் ஆட்களும் பலர் TVI இல், எங்களுடைய பிரதான TV கனடாவில் எடுத்து சொன்னார்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக தான் போனது எல்லாவிடத்திலும்...

சூறாவளி உங்களுடைய பதில்களுக்கு நன்றி...நோ more questions :unsure:

ஆனால், என்னவே இப்படியே எழுதி கொண்டிருக்காமல் இந்த திரியை விட்டிட்டு புது திரியில் எங்கட கருத்துக்களை கொட்டுவம் என்று நினைக்கிறேன்..அப்ப வரட்டே..

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இனி சிங்களம் கதைக்க தெரிஞ்சாத்தான் தமிழரோடை கதைக்கலாம் எண்டு சொல்லுறார். ம்ம்ம் தலைஎழுத்து! :rolleyes:

புலம்பெயர் நாடுகளில் மட்டும் என்ன வாழுதாம்? ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும், ஜேர்மனிலும் இன்னம் பிற மொழிகளிலும் கதைத்தால்தான் தமிழரோடை கதைக்கலாம். நாங்கள் எல்லாம் பிறமொழிகளைப் படிக்கலாம். தாயகத்தில் தமிழர்கள் தங்கள் வாழ்வைப் பாதுகாக்க சிங்களம் பறைஞ்சால் என்ன குறை வந்துவிடும்?

அப்பா கனடாவில வோட்பாண்ணின 48000 ஆட்கள் (99 % ) வோட்பன்ன தகுதியான ஆட்களில் எத்தனை வீதம்...

22 லட்சத்தில கனடாவில 7 அல்லது 8 லட்சம் ஆவது இருக்கும்.

கனடா புள்ளி விபரப்படி இரண்டு இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சம் அளவில் தான் உள்ளனர். அதிலும் வாக்களிக்க தகுதியுடைவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே

இங்கே உள்ள கனேடியன் பேப்பர் களில் உள்ள பின்னுட்டங்க்களை பார்த்தால் தெரியும்..

கீழ் வரும் பின்னூட்கள் ஒரு இஸ்ரேலிய குடும்பத்தின் அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படுதல் பற்றிய திரி. அண்மையில் இந்த குடும்ப தலைவன் தான் கட்டிட வேலையின் போது வீழ்ந்து இறந்தார்... பின்னூட்டல்களை வாசித்து பாருங்கள்..கனடிய சமூகம் அகதிகளை எந்த அளவுக்கு மோசமாக பார்க்கின்றது எனப் புரியும் அது தமிழர்களாக இருந்தால் என்ன அடிப்படைவாத கிறிஸ்தவர்களாக இருந்தால் என்ன

The Star

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கப்போனால் புலத்திலுள்ள தமிழரை விட சிங்கள அரச பயங்கரவாதத்தைக் கண்டும் அனுபவித்தும் வருபவர்கள் தாயகத் தமிழர்களே.அவர்களே அதை மறந்துவிட்டு புலத்திலுள்ளவர்களால்த்தான் இவ்வளவு பிரச்சனையுமென்றால் என்ன சொல்வது ?

ஒரு பேரழிவுக்குள் நின்று அனுபவித்தவர்கள் நிம்மதியாக இன்னமும் தங்கள் சொந்த இடங்களில் வாழமுடியவில்லை. அவர்கள் தமது இடங்களில் தங்கள் வாழ்வை ஆரம்பித்த பின்னர்தான் அரசியல் பற்றி சிந்திப்பார்கள். அதற்கு முன்னம் அவர்களின் அரசியல் நிலை அது/இது என்று குழம்பக்கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக நாடு திரும்பி வரவேண்டும் என்றொரு தீர்மானத்தை

வடக்கு கிழக்குத் தமிழர் எடுத்து அதற்கொரு எலக்சன் வைத்து 99 வீதத்தால வெல்ல வைக்கவேணும். பிறகு எங்களைபாத்து வாங்கோ என்று சொல்ல வேணும்.

சொன்னாலும் போறதுக்கு எங்களுக்கு என்ன விசரோ? குளிர் காலத்தில் இந்த நாடுகள் சரியில்லை என்று புலம்பினாலும், வேலையிடத்தில தும்படிக்க வேண்டியிருக்கு என்ற கவலை இருந்தாலும், எங்கட மில்லியனோராக இருக்கும் தமிழர்கள் மாதிரி நாங்களும் மில்லியனாராக இந்த நாடுகளிலதானே முடியும். பிறந்த இடத்தை இடைக்கிடை போய்ப் பார்க்கவும், எமது சந்ததிக்குக் காட்டவும் சரத்தோ, மகிந்தவோ வழிவிட்டால் போதும்.

கீழ ரெண்டுபேர் வெளிநாட்டில சிலுவை சுமக்கிறீனம். உதுபற்றியும் கொஞ்சம் அலசிப்பாருங்கோ.

இரு கனேடிய தமிழர்களுக்கு கடும் சிறைத்தண்டனை

ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நியூயோர்க் மாநிலத்தின் கிழக்கு மாவட்ட நீதவான் ரெய்மன்ட் ஜே. டியாரியினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 50 வயதான நடராசா யோகராஜா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,

சராசந்திரனுக்கு 26 ஆண்டுகால சிறைத்தண்டனையும், யோகராஜாவிற்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் சார்பில் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேருமே கனேடிய தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி GTN

குறித்த இரண்டு தமிழர்களையும் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2006ம் ஆண்டு கைது செய்திருந்தனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் அமெரிக்க இடமளிக்காது என்பதனை இந்தத் தீர்ப்பு உலக நாடுகளுக்கு வலியுறுத்தும் என சட்டத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அங்கே சரணடைந்ததாக சொல்லப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேலான போராளிகளும் சிலுவை சுமக்கின்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ திரும்ப திரும்ப நீங்கள் எழுதும் கருத்திற்கு எதிராக எழுதுகிறேன் என கோபிக்காதீர்கள்... முதலில் உங்கள் தாயக உணர்வை மதிக்கிறேன் அதே நேரம் ஏன் புலிக் கொடி பிடிக்கிறீர்கள் என யாராவது கேட்டால் சொல்ல வேண்டியது தானே இது எங்கள் தேசியக் கொடி அதனாலே பிடிக்குறோம் என...உண்மையான புலிக் கொடி என்றால் அதன் கீழ் தமிழிழ விடுதலைப் புலிகள் என எழுதி இருக்கும் ஆனால் நாங்கள் பிடிக்கும் கொடியில் அப்படி எழுதி இருக்காது என விளக்கமாகச் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி..

அதில் நான் எழுதும் போது கனடிய தமிழரின் எண்ணிக்கை 7 தொடக்கம் 8 லட்சமாக வரவேண்டும் என வந்திருக்க வேண்டும்..நானும் அதை நம்பவில்லை என்ற கருத்தில் தான் எழுதினான்/ எழுத எண்ணினேன் ( மாறி வந்தது தவறுதான்)

அகதிகளை கனேடிய சமூகம் கருதும் விதம்....

நான் சொன்னது சிங்களவர்கள் எங்களை கருதும்வகை/ மரியாதை தரும்வகை எனக்கு ஞாபகம் இருக்கிறது ஒருமுறை நான் அவர்களை படிக்காதவர்கள் என்று எழுதும் போது அவர்களில் ஒருவர் கனடாவிலே கூடிய சம்பளம் எடுக்கிற பல்கலை கழக தலைவர் ஒரு சிங்களவர் என்று எழுதி அவருடைய பெயரையும் போட்டார்...? இந்திர குணவர்த்தன...அந்த நேரம் அவ ஒரு கலப்பினத்தவா என்று எனக்கு தெரியாது --அம்மா தமிழ் அப்பா சிங்களம் (அல்லது மாறி ) வளர்ந்தது தமிழ் குடும்பத்தில் மணந்தது சிங்களவரை ....Alberta university president . இப்படி நான் சொல்லுவது சிங்களவர் எங்களை கருதுகிற விதம் பற்றியே. அதே நேரத்தில் எனது பொதுவான கருத்து கனடா அகதிகளை கவுரமாக நடத்துகிறது என்று. அவர்களுக்கும் பிரச்சனைகள் உள்ளனவே. எத்தனை பேர் அரசாங்கத்தின் உதவி பணம் பெறுகிறார்கள் (எங்கள் சமூகம் மட்டுமல்ல பொதுவாக).எனக்கு ஒருமுறை தரையால் (பஸ்ஸில்) Alberta போகவேண்டி வந்தது...சில இடங்கள் எங்களின் ஊர் கிராமங்கள் எவ்வளவே முன்னேறி உள்ளார்கள் என்றே சொல்லுவேன்..(சிங்கள இடத்தில் பெரும்பாலும் ஒவ்வொரு ரயில்வே கடப்பிலும் காவலாளிகள் இருப்பார்கள் ஆனால் இங்கே 100km வேகத்தில் உள்ள பெரும்தெருவில் ஒரே ஒரு stop sign உடன் ரயில்வே கடவைகள் உண்டென்றால் எந்தனை பேர் நம்ப தயாராக உள்ளீர்கள்? ). சொல்லவருவது என்ன வென்றால் அவர்களுக்கும் நிறைய தேவையுண்டு.

ஆனால் அவர்கள் எங்களை தங்களை போல் மாற எதிர்பாப்பது உண்மைதான். (நீங்கள் இணைத்த இணைப்பில் ஒருவர் குறிப்பிடிருக்கிறார் , 3 வருடமாக இருக்கிறார் ஆங்கிலம் தெரியாதென.. என்னுடைய வைத்தியரின் செயலாருக்கு 4 வருடமா என்னுடைய first name கூப்பிட தெரியாது (அது என்னுடைய அப்பாவின் பெயராக்கும் :) . இங்கே எனது ஜமேக்க (கறுப்பர் ) நண்பர் சொல்லுவார் இவர்கள் தங்களுடைய சமூகத்தை எவ்வளவு குறையாக கட்டமுடியுமோ அவ்வளவு குறையாக காட்டுவதாக ஆனால் தங்களில் விளையாட்டுகளுக்கு (ஓட்டம், பாஸ்கெட்பால் ...) எந்த விதமான முக்கியத்துவமும் தராமல் தங்களது சமூகத்தவர்களுடைய தகுதிகளை எல்லாம் வீணாக்குவதாக...( இங்கே குழப்பமான சமூகங்கள் என்றவகையில் எங்களுக்கு அண்ணன் தம்பியாய் உள்ளார்கள்...

ரதி நீங்கள் சொல்லுவது உங்களுக்கும் எனக்கும் தெரியும் ஆனால் பொதுமக்களுக்கு தெரிய எவ்வளவு காலம் எடுக்கும். அந்த நேரத்தில் அதற்கெல்லாம் காலம் இருக்கவில்லை என்பதுதான் எனது கருத்து...கடைசி ஒருநாள் மட்டும் நல்ல பிள்ளையாய் இருந்து என்ன பிரயோசனம்...ஆனால் இதுபற்றி விவாதிப்பது இப்போது தேவையா என யோசிக்கிறேன். ஆனால் பலரும் முதலே சொன்னவர்கள்...இல்லாவிடில் கடைசி நாள் எல்லாம் மாறியிருக்க மாட்டோம்..இங்கே கனடா உள்ள நிலை இலங்கையில் உள்ளமாதிரிதான் நாங்கள் ஒருகட்சிக்கு சார்பானவர்கள் என்று தெரிந்தால்/ அல்லது ஒருகட்சி எங்களுக்கு கிட்ட வந்தால் அந்த கட்சியை பயங்கரவாதத்துடன் சேர்ந்த கட்சியென பெயரிட மற்றகட்சிகள் தயாராக உள்ளது, இந்த நிலையில் நாங்கள்தான் அதற்குள் இருந்து விடுபட அவர்களுக்கு உதவ வேண்டும்

உடனடியாக சரத் வந்தவுடன் யாழ்பாணத்திற்கு சிங்கள பெயர் வைக்கலாம்.

முக்கியமாக அனைவரும் புத்தமதத்திற்கு மாறுங்கள்.

3 வேலைகளுக்குச் சென்று பணத்தை இனி ஊருக்கு அனுப்பத்தேவையில்லை.

  • 3 years later...

எங்கள் ஆட்களில் இன்னொரு வகையானவர்களும் இருக்கிறார்கள். மனத்தளவில் போராட்ட ஆதரவாளர்கள். ஆனால் வெளியில் பேசும்போது புளிச்சல் கதைதான் வரும். புலம்பெயர் நாடுகளிலேயே அவ்வாறான பலரைக் கண்டிருக்கிறேன்.

போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, இனிமேல் ஒன்றும் செய்ய ஏலாது. அவன் இப்படி, இவன் அப்படி என்று பேசியவர்கள். நடந்ததென்னவோ அதுதான். ஆனால் இவர்கள் ஆற்றும் எதிர்வினை பலரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். நான் அறிந்தவரை இவர்கள் இப்படிப் பேசுவதன் நோக்கம் ஒரு வேளை தோற்றுவிட்டால், நான் அப்பவே சொன்னன் பார்த்தியா என்கிற ஒரு சொல்லக்கூடிய ஒரு வாய்ப்புக்காகவே.

தமிழனின் காலைவாருவதற்கு தமிழனைக் கேட்டுத்தான்.

அது இசை ..................ஒரே கருத்துடன் எங்கும் எப்பவும் ,எதிலும் இருப்போம் ............அதுவே மனித நற்பண்பாகும்.

Edited by தமிழ்சூரியன்

It is better to take a fresh look at things. Challenges are new and opportunities are also new.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து பாலா அண்ணா....

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒட்டி உறவாடுகிறவர்களின் குரல்.....இதைபோல கேணையர்களால்தான்..இந்த நிலைமை...அது சரி...தமிழகத்தில் உக்கிரமான போராட்டம் நடக்கையில் ஏன் இந்தபதிவு மேலே வரவேண்டும்.....உள் குத்தோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.