Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சண்டித்தனம்

Featured Replies

தமிழத் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மீது யாழ் இணையத்தின் கொலை அச்சுறுத்தல்: அனைத்துலக ரீதியான சட்டநடவடிக்கையில் “ஈழம்ஈநியூஸ்

Wednesday, June 2, 2010

செய்தியளர்: ஆர்த்தி

ஈழம் ஈ நியூஸ் உட்பட பல தமிழ்த் தேசிய ஊடகங்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் “யாழ்”; இணையம் இறங்கியுள்ளது தொடர்பில் நாம் இந்த பகிரங்க மடலை வெளியிடுவதுடன். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

கடந்த வாரம் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும், ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தான் காரணம் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எமது ஊடகம், அதன் ஊடகவிலயாலர்கள் சக ஊடகங்கள் மற்றும் சக ஊடகவியலாளர்கள் மீது அவதூறு மற்றும் கொலை அச்சுறுத்தல் ஒன்றை யாழ் இணையத்தில் “சுமங்களா” என்பவர் மேற்கொண்டுள்ளார்.

ஆதாரமற்ற இந்த செய்தியின் மூலம் சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள், வன்முறைமிக்க பயங்கரவாத கும்பல்கள் மற்றும் அன்னிய புலனாய்வு சக்திகளினால் சம்மந்தப்பட்ட ஊடகங்கவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. இது தொடர்பில் நாம் ஜேர்மன் காவல்துறையினருக்கும், அதன் புலனாய்வு கட்டமைப்புக்கும், ஜேர்மனிய அரசுக்கும் முறைப்பாடுகளை செய்ய முடிவெடுத்துள்ளோம்.

எனவே யாழ் இணையம் எமக்கு “சுமங்களா” என்ற தனது கருத்துக்கள “முகமூடி” மனிதரின் விபரங்களை உடனடியாக தந்து உதவுவது அவசியமானது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அவர் வதியும் நாட்டின் காவல்துறை மற்றும் ஊடக வன்முறைகளுக்கு எதிரான அமைப்புக்கள் மூலம் நடவடிக்கைகளை எடுக்க முடியும். யாழ் இணையம் “சுமங்களா” என்ற நபரின் விபரங்களை தரமறுக்கும் பட்சத்தில் நாம் யாழ் இணையத்தின் மீது இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

மேலும் “DAM” என்ற யாழ் இணையத்தின் மற்றுமொரு “முகமூடி” நபர் எமது ஊடகங்கள் உட்பட தமிழ்த் தேசிய ஊடகங்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களை பிரான்ஸ் நாட்டு புலனாய்வுத்துறை மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினருடன் சம்பந்தப்படுத்தி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துக்கள் தொடர்பில் நாம் பிரான்ஸ் நாட்டில் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

“DAM” என்பவர் தனது செய்திக்கான ஆதராங்களை சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுள்கொள்வதுடன், அவரின் விபரங்களை யாழ் இணையம் எமக்கு உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அவர் வதியும் நாட்டின் காவல்துறை மற்றும் ஊடக வன்முறைகளுக்கு எதிரான அமைப்புக்கள் மூலம் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

யாழ் இணையம் “DAM” என்ற தனது கருத்துக்கள முகமூடி நபரின் விபரங்களை தரமறுக்கும் பட்சத்தில் நாம் யாழ் இணையத்தின் மீது இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமாக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகவே நாம் இதனை கருதுவதால், யாழ் இணையத்தின் இணையத்தளக் கட்டுப்பாட்டாளர் வதியும் நோர்வே நாட்டு அரசுக்கும், அதன் காவல்துறைக்கும் எமது முறைப்பாடுகளை மேற்கொள்வதுடன், எமது உயிருக்கு பாதுகாப்பு கோரி கோரிக்கைகளையும் விடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எமது உயிருக்கான பாதுகாப்புக்களை நோர்வே அரசு வழங்கவேண்டும் என்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு, அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, பிரான்ஸ் நாட்டின் புனாய்வுத்துறை, ஜேர்மன் நாட்டு காவல்துறை உட்பட எல்லா அமைப்புக்களிடமும் முறைப்பாடுகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். யாழ் இணையத்தின் ஊடகப்பயங்கரவாதத்தில் இருந்து எமது உயிருக்கான பாதுகாப்புக்களை வழங்குமாறும் கோரவுள்ளோம்.

இந்த கோரிக்கைகளின் பிரதிகள் சில தினங்களில் எமது தளத்தில் மக்களின் பார்வைக்காக இணைக்கப்படும். முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரும் போரை ஒத்த ஒரு சமரை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் தற்போது சந்தித்துள்ளனர். இதனை நாம் வெற்றிகொள்ளும் போது தான் எமக்கான வளமான ஊடகத்துறையை நாம் உருவாக்கிக் கொள்வதுடன் எமது விடுதலையை விரைவுபடுத்தவும் முடியும்.

இதில் நாம் தோல்விகண்டால் எமது தேசியத்தின் கொள்கைகளும், விடுதலை வேட்கையும் புலம்பெயர் நாடுகளிலும் பேரழிவை சந்திக்கும் என்பதில் ஜயமில்லை.

எனவே தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல், அவதூறு பரப்பியமை, பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் நாம் யாழ் இணைத்தின் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யதிருக்கிறோம்.

இந்த வழக்கை தமிழ் மக்களின் உதவியுடன் நாம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். எமது மக்களின் பங்களிப்புக்களுடன் நாம் யாழ் இணையத்தின் இந்த ஊடகப்பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

இங்கணம்,

ஈழம் ஈ நியூஸ் நிர்வாகம்.

****

யாழ் இணைய நிர்வாகிகளுக்கு நாம் அனுப்பிய கடிதம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு,

வணக்கம்

கடந்த மே 31 ம் நாள் உங்கள் தளத்தில் “காட்டிக்கொடுப்புக்கள் யாரால்? எங்கே?” என்ற தலைப்பில் சுமங்களா என்பவர் ஒரு “செய்தி”யை (?) இணைத்திருந்தார். அதில் பல தமிழ் ஊடகங்களுடன் எமது ஊடகத்தையும் (ஈழம்ஈநியூஸ்) சேர்த்து சிறீலங்கா புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்து நாம் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து “DAM” என்பவர் பிரெஞ்சு புலனாய்வுத்துறையினுடாக சக ஊடகவியலாளர்கள் சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கு விற்கப்பட்ட “கதை” எழுதியிருக்கிறார். இது தொடர்பாக உங்களிடம் சில விளக்கங்களை எதிர்பார்க்கிறோம். “சுமங்களா” என்பவர் யார்? அவர் ஒரு ஊடகவியலாளரா? அல்லது உங்கள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரா? அது ஒரு செய்தி ஆய்வா? அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா? உங்கள் தளத்தில் தனிப்பட்ட கருத்தையும் இணைத்து யாரையும் வசைபாடலாம் கொலை அச்சுறுத்தல் விடலாமா? அப்படியென்றால் நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஊடகமா? கட்டப்பஞ்சாயத்தா? அல்லது விபச்சாரவிடுதியா? இதற்கு ஏன் தமிழ்த்தேசியம் என்ற போலி முகமூடி?

ஏற்கனவே நீங்கள் எம்மீது அவதூறு பரப்பியதன் பொருட்டு உத்தியோகபூர்வமாக நாம் எழுதிகேட்டிருந்த இரு கடிதங்களுக்கு பதில் தரவில்லை. இப்போது தங்களது மேற்படி நடவடிக்கை அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளின் அடிப்படையில் உங்கள் மீது வழக்கு தொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு எம்மைத் தள்ளியுள்ளது.

பின்வரும் தகவல்களை தருவதனூடாக எமது சட்டரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம்.

01. எமது வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கும் எமது வழக்கறிஞர் வழக்கு தாக்கல் தொடர்பான விடயங்களை அனுப்பி வைப்பதற்கும் தளக்கட்டுப்பாட்டாளரின் முழுப்பெயர் மற்றும் நிரந்தர வதிவிட விலாசம்.

02. சுமங்களா என்ற நபர் குறித்தான தங்களிடமுள்ள முழு விபரம்.

03. “DAM” என்ற நபர் குறித்தான தங்களிடமுள்ள முழு விபரம்.

நீங்கள் மேற்படி விபரம் எதனையும் தரமறுக்கும் பட்சத்தில் தங்கள் மின்னஞ்சலுக்கு வழக்கு விபரம் அனுப்பி வைக்கப்படும். “சுமங்களா” மற்றும் “DAM” ஆகிய முகமூடி மனிதர்களின் விபரம் எமக்கு தெரியாததால் அவர்கள் குறித்த காவல்துறை முறைப்பாடு மற்றும் வழக்குதாக்கல் விபரங்கள் யாழ் மின்னஞ்சலுக்கே அனுப்பி வைக்கப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏனெனில் அவர்கள் ஊடகவியலாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய அரச காவல்துறை மீதும் பழி போட்டு பெரும் பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்றுவித்திருக்கிறார்கள். சம்பந்தபட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்த வேண்டிய பெருங்கடமை எமக்கு இருப்பதையும் சுட்ட விரும்புகிறோம்.

பொய்யான ஆதாரமற்ற தகவல்களை வெளியட்டதனூடாக தமிழ் உடகவியலார்களின் உயிர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பாக தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுமங்களா னயஅ ஆகிய இருவர் மீதும் தனிப்பட்ட முறையில் வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும். அவர்களது விபரங்களை நீங்கள் தரமறுக்கும் பட்சத்தில் அவர்களது வழக்குகளையும் உங்கள் மீதே தொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

ஈழம்ஈநியுஸ் நிர்வாகம்.

குறிப்பு : நாற்பத்து எட்டு மணிநேரங்களுக்குள் எமக்கு சுமங்களா, DAM ஆகியவர்களின் விபரங்கள் அனுப்பப்பட வேண்டும் என நாம் யாழ் இணைநிர்வாகத்தினரை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

http://www.eelamenews.com/?p=28734

****

ஊடக எதேச்சதிகாரமும் சண்டித்தனமும் – “யாழ்” இணையத்தை முன்வைத்து சில கண்டனக் குறிப்புக்கள்

Saturday, May 15, 2010

செய்தியளர்: சஞ்ஜேய்

கடந்த மே 01ம் நாள் “குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளம்” ஈழம்ஈநியூஸ் உட்பட சில இணையத்தளங்கள் மீது தமது கட்டுரை ஒன்றின் மீள்பிரசுரம் குறித்த முறைப்பாடுகளை முன்வைத்து ஒரு கண்டனத்தை வெளியிட்டிருந்தது. ஊடக அறத்தையும் தர்மத்தையும் முடிந்தவரை பேண வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் எமக்கு மேற்படி கண்டனம் பேரதிர்ச்சியாக இருந்தது.

ஊடக மூலம் இல்லாமல் அந்த கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டதற்கான காரணத்தையும் அது குறித்த சில மேலதிக விளக்கங்களையும் எதிர்பார்த்து நாம் ஒரு மறு கண்டனப்பதிவை வெளியிட்டிருந்தோம்.

எம்மிடம் எழுத்து மூலம் எந்தவித விளக்கத்தையும் கோராமல் அவதூறு பரப்பும் நோக்கில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட கண்டனமாகவே அதை நாம் பார்த்தோம். அதனால்தான் நாம் எமது கண்டனத்தையும் வெளிப்படையாக முன்வைத்திருந்தோம். அந்த கண்டனப்பதிவை பின்வரும் இணைப்பினூடாக நீங்கள் வாசிக்கலாம். (http://www.eelamenews.com/?p=26717)

இன்றுவரை தனிப்பட்ட ரீதியாகவோ அவர்களது இணையத்தளத்தினூடாகவோ எமக்கான பதில் எழுதப்படவில்லை. எமது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மௌனமாகியிருக்கலாம். பிரச்சினை அத்தோடு ஓய்ந்து விடவில்லை. மேற்படி எமது கண்டனத்தை தமது தளத்தில் இணைத்த “யாழ்” இணையம் மிகவும் கேவலமான முறையில் வக்கிரமான வசைபாடல்களுடன் எமது இணையத்தளத்தை தடைசெய்வதாக ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தது எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது சரியா? தவறா? என்ற பிரச்சினைக்கு பிறகு வருவோம். எமது விளக்கம் குறித்த புரிதல் இல்லாமல், எம்மிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் “முகமூடி” மனிதர்களின் “மொட்டைக்கடதாசி”களை வைத்து எம்மீதான “நியாயத் தீர்ப்பு” எழுதப்பட்டிருந்தது. இது அவர்களின் ஊடக அறம்? பரவாயில்லை, நாம் அப்படி நடந்து கொள்ள முடியாதல்லவா? எனவே அவர்களின் மேற்படி செய்கைக்கு ஒரு விளக்கத்தை கேட்டு கடந்த 8ம் நாள் ஒரு கடிதத்தை யாழ் இணைய நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்தோம். அது பின்வருமாறு,

யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு,

வணக்கம்

எங்கள் (ஈழம்ஈநியூஸ்)மீது (இன்னும் பல தமிழ்த் தேசிய தளங்கள் உட்பட) ஒரு முகாந்திரமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்து “குளோபல் தமிழ் நியூஸ்” பரப்பிய அவதூறுக்கு விளக்கமளிக்குமுகமாக “குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளம் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம் இது” என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட மறுப்பை உங்கள் இணையத்தில் இணைத்து மிகவும் கேவலமான வசைபாடல்களுடன் எமது இணையத்தளத்தை நீங்கள் தடை செய்வதாக ஒரு குறிப்பை வெளியிட்டிருப்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஒரு இணையத்தை உங்கள் தளத்தில் இணைப்பது – விலக்குவது தொடர்பான உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் நாம் இணையத்தளம் தொடங்கும் போதே “யாழ்” இணையத்தளத்தை எமது கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டோம்.

“மொட்டைக்கடதாசி” என்று சொல்லப்படுகிற முகம் தெரியாத நபர்களின் வக்கிர கருத்துக்களுக்கு களம் அமைத்துக்கொடுத்து ஊடக அறத்தையும் தர்மத்தையும் மீறுவதோடு போராடும் இனத்தின் கருத்தியல் சிந்தனையை நுட்பமான முறையில் துண்டாடும் உங்கள் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருந்து ஊடக அறத்தையும் தேசியத்தையும் விற்க நாம் தயாரில்லை என்ற காரணத்தினால் நாம் உங்கள் தளத்தை எமது “கறுப்பு பட்டியலில்” இணைத்து விட்டோம்.

இது எங்கள் நிலைப்பாடு. அது போல் நீங்கள் எங்கள் தளத்தை நீக்க முடிவெடுத்திருப்பது உங்கள் நிலைப்பாடு. பிரச்சினை அதுவல்ல. குளோபல் தமிழ் நியூஸ் தனிப்பட்ட முறையில் எம்முடன் பேசி பரஸ்பரம் புரிந்துணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக ஒரு விளக்கத்தை பெறாமல் வெளிப்படையாக அவதூறு பரப்பியபோதே நாம் வெளிப்படையாக எமது கண்டனத்தை பதிவு செய்தோம். சில விளக்கத்தையும் கோரியிருந்தோம்.

இன்றுவரை எமக்கு பதிலும் இல்லை. எந்த மறுப்பும் அவர்களது இணையத்தில் வெளியாகவும் இல்லை. ஏனெனில் எமது நிலைப்பாட்டையும் அன்று நடந்த சம்பவத்திற்கான விளக்கத்தையும் தெளிவாகவே முன்வைத்திருந்தோம். அவர்களது மௌனம் அதை ஏற்றுக்கொண்டதன் விளைவுதான். ஆனால் உங்கள் தளத்தில் எமது மறுப்பை இணைத்து, மிகவும் வக்கிரமான வசைபாடல்களுடன் “முகமூடி” தரித்தவர்கள் “தீர்ப்பு” வாசித்திருக்கிறார்கள்.

மெய்சிலிர்க்கிறது! ஆகா என்ன ஊடக அறம்? எமது மறுப்பை முழுமையாக வாசிக்கவில்லையா? அல்லது வாசித்து ஒன்றும் புரியவில்லையா? இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் உண்மை.

எங்களுக்கு தங்களது அன்றைய பதிவில் உள்ள எம்மைத் தடை செய்வதான குறிப்புக்கு ஒரு விளக்கத்தை கோர விரும்புகிறோம். ஏனெனில் அது தங்கள் நிர்வாகத்தின் முடிவு எனில் நாம் எமது விளக்கத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது. உங்களது விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

பின் குறிப்பு: சம்பந்தபட்ட “குளோபல் தமிழ் நியூஸ்” கட்டுரை ஊடக மூலம் இல்லாமல் எமக்கு தெரிந்தவரை உலகெங்குமுள்ள 21 தமிழ் ஊடகங்களில் வெளியாகிருக்கிறது. ஆனால் எமது தெளிவான நியாயத்தை – ஊடக தர்மத்தை விளங்கப்படுத்தியதற்காக எம் மீது தடை. ஏன் மற்றவர்களை உங்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கவில்லை? உண்மையில் “குளோபல் தமிழ் நியூஸ்” தளத்தை முதலில் தடை செய்யுங்கள்.

ஏனெனில் நாம் வெளிப்படையாக வைத்த மறுப்புக்கும் விளக்கத்திற்கும் இன்னும் பதில் தரவில்லை. தமது தவறை உணர்ந்து மற்றைய ஊடகங்கள் மௌனம் சாதிப்பது போல்தான் குளோபல் தமிழ் நியூஸ் தளமும் மௌனம் சாதிக்கிறது. நாம் வெளிப்படையாக இருக்கிறோம். ஊடக அறத்தையும் தர்மத்தையும் முடிந்தவரை பேணுகிறோம்.

அதனால்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். உங்கள் பதிலை அடுத்து ஊடக அறம் தொடர்பாக இன்னும் விரிவாக எமது தளத்தினூடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்களைப்போல் “முகமூடி” மனிதர்கள் அல்லாமல் வெளிப்படையாக சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமையாளர்களைக்கொண்டு அந்த விளக்கத்தை பதிவு செய்ய காத்திருக்கிறோம். இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு 24 மணிநேரத்திற்குள் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். உங்கள் தாமதத்தை உங்கள்” மௌனமாக” கருதி எமது மறுப்பையும் உங்கள் மீதான எமது கண்டனத்தையும் எமது தளத்தில் பதிவு செய்வோம்.

நன்றி

இப்படிக்கு

ஈழம்ஈநியூஸ் நிர்வாகம்.

இதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு ஊடகத்தின் மீது வெளிப்படையான கண்டனத்தை பதிவு செய்வது – அவதூறு பரப்புவதன் அரசியல் குறித்த ஆழமான புரிதல் எமக்கிருக்கிறது. அதைத்தான் பொறுப்பற்ற முறையில் மேற்படி இரு இணையமும் பிரயோகித்திருந்தன.

ஆனால் நாம் ஊடக தர்மத்தை மதித்து எதிர் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு வாய்ப்பை வழங்கியிருந்தோம். கண்டனத்தை வெளியிடுவதற்கு முன்பாக இன்னொரு சந்தர்ப்பத்தை “யாழ்” இணையத்திற்கு வழங்குவது என்று நாம் முடிவெடுத்து நிலமையின் தீவிரத்தையும் விளங்கப்படுத்தி;, ஊடக அறத்தின்பாலும் நின்று மீண்டும் இன்னொரு கடிதத்தை “யாழ்” நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தோம். அது பின்வருமாறு,

யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு,

தங்கள் இணையத்தின் ஊடாக எங்கள் இணையத்தளம் மீது அவதூறு பரப்பியதன் பொருட்டு நேற்று (08.05.2010) தங்களிடம் ஒரு விளக்கத்தை கோரியிருந்தோம். தங்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. ஒரு ஊடகத்தின் மீது (ஏன் தனி நபர், சமூகம், நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்) வெளிப்படையாக அவதூறு பரப்பும் முன்பாக அந்த ஊடகத்திடம் ஒரு தன்னிலை விளக்கத்தை பெறவேணடும்.

அந்த விளக்கத்தை அவர்கள் தராதபட்சத்தில் தான் கண்டனத்தை வெளிப்படையாக பதிவு செய்ய வேண்டும். இது பொதுவான ஊடக அறம். நீங்கள் அதனை கடைப்பிடிக்கிவில்லை. ஆனால் நாங்கள் உங்களைப்போல பொறுப்பற்று நடக்க முடியாது. அதனால் தான் உங்களிடம் விளக்கத்தை கோரியிருந்தோம்.

நீங்கள் பதில் தரவில்லை. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மீண்டும் உங்களிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். ஏனெனில் எமது கண்டனப்பதிவு உங்கள் நேர்மையற்ற ஊடக எதேச்சதிகாரப் போக்கை துகிலுரிந்து அம்மணமாக்கும். இதை ஆரோக்கியமாக நாம் கருதவில்லை.

ஏனெனில் ஒரு ஊடகத்தை இழுத்து மூடுவது எமது நோக்கமல்ல.

போராடும் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் என்ற அடிப்படையில் சக ஊடகங்களை மதித்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றே எதிர்பார்கிறோம்.

இந்தக் கடிதத்திற்கும் பதில் இல்லையெனில் முன்னைய கடிதத்தில் குறிப்பிட்டது போல எமது கண்டனத்தை மக்களின் பார்ரவக்கு கெண்டு செல்வோம்.

இப்படிக்கு

ஈழம் ஈ நியூஸ் நிர்வாகம்

நம்புங்கள். இந்தக்கடிதத்திற்கும் எந்த பதிலும் இல்லை. முவரியற்ற “முகமில்லாத” மனிதர்களைக் கொண்டு “மொட்டைக்கடதாசி” தளங்களை நடத்துபவர்களிடம் ஊடக அறத்தை எதிர்பார்த்ததும் அவர்களுக்கு இரு சந்தர்ப்பங்களை வழங்கியதும் எமது முட்டாள்தனம் என்பது மிகத் தாமதமாகவே எமக்கு புரிந்தது.

“குளோபல்தமிழ்நியூஸ்” இணையமும் அதைத் தொடாந்து “யாழ்” இணையமும் “ஐயோ, ஊடக அறம் பிறழ்ந்து விட்டது” என்று அலறிப்புடைத்து எம்மீது கண்டனத்தை பதிவு செய்தது நேர்மை என்றால் அதே நேர்மையுடன் எமக்கு பதில் அளித்திருக்கவும் வேண்டும். ஏன் இந்த மௌனம்? பதிலுக்கு நீங்கள் எமது கண்டனத் தலைப்பை படிக்க வேண்டும்.

நிற்க. ஈழம்ஈநியூஸ் தொடங்கப்பட்டு இன்னும் ஆறு மதகாலங்கள் கூட பூர்த்தியாகவில்லை. எமக்கு ஒரு ஊடகம் நடத்த வேண்டும் என்ற விருப்பமும் தேவையும்கூட இல்லை. ஆனால் மே 18 இற்கு பிற்பாடு தமிழ்த் தேசிய ஊடக வெளியில் நிகழ்ந்த சில அபத்தங்களை பார்த்து அதற்கு மாற்றாகத் தொடங்கப்பட்டதுதான் ஈழம்ஈநியூஸ். இந்த அபத்தங்கள் எது என்பதை பதிவு செய்யும் இடம் இதுவல்ல என்பதால் அதைத் தவிர்த்துக்கொள்கிறோம். இந்த அபத்தங்கள் முடிவுக்கு வரும்போது ஈழம்ஈநியூஸ் என்ற தளமும் தனது பணியை நிறுத்திக்கொள்ளும்.

இனப்படுகொலையைச் சந்தித்து அரசியல் (வெ)வறுமைக்குள் சிக்கியுள்ள ஒரு இனத்தினை வழி நடத்தும் ஊடகங்கள் என்ற புரிதலுடன் கருத்துச்சுதந்திரம், மாற்றுக்கருத்து, பன்மைத்தன்மை என்பவை பேணப்பட்டு ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய ஊடகங்கள் செயற்படவேண்டும் எனபதே எமது அவாவும் எமது இணையத்தின் தோற்றத்தின் அடிப்படையும். இந்த ஆறு மாத காலத்தில் ஊடக அச்சுறுத்தல்,

கருத்து சுதந்திரம், போராட்டத்தில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பாக நாம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் பதிவுகளும் உதாரணத்திற்கு கீழுள்ள இணைப்புகளில் பார்க்கலாம்.

1. http://www.eelamenews.com/?p=25935

2. http://www.eelamenews.com/?p=23286

3. http://www.eelamenews.com/?p=16311

4. http://www.eelamenews.com/?page_id=11346

5. http://www.eelamenews.com/?p=24713

இந்த அடிப்படையில் எம்மீது ஊடக அறம், தர்மம் தொடர்பாக குற்றம் சுமத்துவதை நாம் பாரதூரமாகக் கருதுகிறோம். யாழ் இணையத்தின் நடவடிக்கையை நாம் சட்ட ரீதியாகக்கூட அணுக முடியும். அது குறித்து நாம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். ஏனெனில் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பில் அவதூறுகளைப் பரப்புவது என்பது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது.

யாராவது ஒருத்தரை சட்டத்தின்பிடியில் கொண்டுவரும் போதே மற்றவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே எம்மீது அவதூறு பரப்பியது என்பதற்கும் அப்பால் தமிழ்த் தேசிய ஊடக வெளியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கேனும் நாம் இதை சட்டத்தினூடாக அணுக முடிவு செய்திருக்கிறோம்.

சரி தவறுகளுக்கும் அப்பால் உத்தியோகபூர்வமாக ஒரு ஊடகம் எழுத்து மூலம் விளக்கம் கேட்டால் அந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்ற ஊடக அடிப்படையும் அரிச்சுவடியும்கூட “யாழ்”; இணையத்திற்கு தெரியவில்லை. இது எத்தகைய சட்ட சிக்கலை அவர்கள் ஊடகம் நடத்துவதில் ஏற்படுத்தும் என்பதும் புரியவில்லை போலும்.

இந்தப் பின்புலத்தில் எம்மீது “முகமூடி” தரித்தவர்களை வைத்து எமக்கு ஊடக அறத்தை போதிக்கிறது “யாழ்”. இதை இந்த வருடத்தின் மிகச் சிறந்த சிறந்த இரண்டாவது நகைச்சுவையாக ஈழம்ஈநியூஸ் தெரிவு செய்கிறது. ( முதலாவது நகைச்சுவையாளராக போட்டியில்லாமல் ஒருவர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டார். பார்க்க ……. http://www.eelamenews.com/?p=25935 )

ஊடகங்களிடையே அவதூறு பரப்புவது குறித்து அண்மைக்காலமாக பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் இக்பால் அதாசுக்கும் லங்காநியூஸ்வெப் தளத்திற்கும் இடையில் ஒரு “தகராறு” நடந்து வருகிறது. பின்வரும் இணைப்பில் அதை பார்க்கலாம். (http://www.eelamenews.com/?p=27308 )

லங்காநியூஸ்வெப இந்த வழக்கில் முறையாகச் சிக்கிகொண்டாலும் அது தப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எப்படியெனில் அத்தளம் அளித்திருக்கும் இக்பால் அத்தாசின் வழக்குரைஞருக்கான பதிலில் “எமது செய்திகள் தொடர்பில் அத்தாஸ் எம்முடன் தொடர்பு கொண்ட பின்னரும் நாம் அதை புறக்கணித்தால் மட்டுமே எம்மீது சட்ட நடவடிக்கைகளை மே;றகொள்ள முடியும்.” என்று வாதாடுகிறது.

இந்தக் குறிப்பு “யாழ்” இணையத்தின் பார்வைக்கு சமர்ப்பணம். இதை ஏன் குறிப்பிடுகிறோமெனில் ஊடகம் குறித்த எந்த புரிதலுமில்லாமல் மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கிறது “யாழ்”. இதுதான் ஊடக எதேச்சதிகாரமும் சண்டித்தனமும். எங்களுக்கு இன்னொன்றும் தெரியும். இந்தக் குறிப்பு எமது தளத்தில் வெளியானவுடன் “யாழ்”; தளத்தில் முகமில்லாத மனிதர்கள் “ஏய், ஈழம்ஈநியூஸ் ஒண்டிக்கு ஒண்டி வருகிறாயா?” என்று தொடை தட்டி நிற்பார்கள்.

இதிலை என்ன அவலம் என்றால் யாரென்று தெரிந்தால் அல்லவா நாம் சண்டைக்குப் போறதற்கு… உத்தியோகபூர்வ கடித்திற்கே பதில் இல்லை. இதிலை சண்டை என்றால்…? நாம் எம் பங்குக்கு வெட்ட வெளியிலை கையையும் காலையும் உதறிப்போட்டு ஓய வேண்டியதுதான்.. what a crazy?

நாம் நீண்ட நாட்களாகவே “யாழ்” போன்ற கருத்துக்களங்களை மையப்படுத்தும் சில இணையங்களை அவதானித்து வருகிறோம். இது ஊடக அறத்திற்கும் தர்மத்திற்கும் மிகப் பெரிய சவால். முகம் தெரியாத நபர்கள் நுட்பமான முறையில் எமது போராட்டத்தை கீழறுப்பதற்கும் துண்டாடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதாகவே நாம் கருதுகிறோம்.

ஏனெனில் குளோபல் தமிழ்நியூஸ் மீது நாம் கண்டனத்தை பதிவு செய்தவுடன் எமக்கு ஏராளமான வாசகர் கடிதங்கள் வந்திருந்தன. அவற்றுள் பெரும்பான்மையானவை, குளோபல் தமிழ் நியூஸ் தளக்கட்டுப்பாட்டாளர் கடத்தப்பட்டதாக ஒரு நாடகம் நடத்தப்பட்டு கோத்தபாயவினால் பெரும் விலைக்கு வாங்கப்பட்டு புலத்தில் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பில் தேசியத்தையும் போராட்டத்தையும் சிதைப்பதற்காக அனுப்பப்பட்ட நபர் என்பது தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருந்தன.

அவற்றை வாசகர் கருத்து என்ற போர்வையில் பின்னூட்டங்களாக இணைக்கும் தொழில்நுட்பம் தெரியாதவர்கள் அல்ல நாம். முகம் தெரியாத நபர்களின் அந்த வாசகர் கடிதங்களை நாம் இன்றுமட்டுமல்ல என்றுமே நாம் எமது தளத்தில் இணைக்க மாட்டோம். ‘மொட்டைக்கடதாசிகளுக்கு” ஒரு நம்பகத்தன்மையையும் ஊடக வெளியையும் கொடுக்க நாம் தயாரில்லை.

அத்தோடு அந்த கடிதங்கள் ஏன் தனிப்பட்ட வக்கிரங்களை தீர்த்துக்கொள்ளும் களமாக சம்பந்தப்பட்டவர்கள் பாவித்திருக்ககூடாது..? எனவேதான் எமக்கு சார்பானதாக இருந்தபோதும் மேற்படி இரு இணையங்களும் “வாசகர்” கடிதங்களை இணைத்து எம்மீது சேறு பூசியபோதும ஊடக அறத்தின்பாலும் தர்மத்தின்பாலும் நின்று எமது வாசகர் கடிதங்களை நாம் இணைக்கவில்லை.

இதே போன்றுதான் “யாழ்” தளக்கட்டுப்பாட்டாளர் நோர்வே புலனாய்வுத்துறை அமைப்பொன்றினூடக பணம் பெறுவதாகவும் மே 18 இற்கு பிறகு வேறு சில இணையங்களுடன இணைந்து போராட்டத்தை சிதைப்பதற்கு வேறு பல அன்னிய சக்திகளுடன் கூட்டு சேர்ந்திருப்பதாகவும் அதுதான் தமிழ்த் தேசிய ஊடகங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாகவும் எமக்கு மின்னஞ்சல்கள் அதிகளவில் கிடைக்க பெற்றன.

இந்த முகமில்லாத கருத்துக்களுக்கு நாம் களம் வழங்கத் தயாராக இல்லை. இதை சம்பந்தபட்ட இணையங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

கருத்துக்களம் என்ற போர்வையில் பின்னூட்டங்களை இணைப்பது இணைய ஊடகங்களின் அரசியலாகவே போய்விட்டது துரஸ்டவசமானது. ஆட்கள் மூலம் செய்திகள் காவப்பட்டு தொடங்கிய ஊடகவெளி பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி என்று விரிந்து விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியாய் இன்று இணையம் வரை வந்திருக்கிறது. சாதராண ஊடக அறங்களும் நியதிகளும் இணையத்தின் முன்னால் மண்டியிடத்தொடங்கியிருப்பதை காலத்தின் விசித்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அண்மையில் ஆய்வாளர் ஜமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

“இணையம் ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு பிரதானமான,சிக்கலான,போக்கிரித்தனமான பாத்திரத்தை வகித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொண்டு,

விடுதலைப்போராட்டம் எனும் அளவில் அதனது அனைத்துவிதமான பரிமாணங்களோடும் – பங்களிப்புகள், வக்கிரங்கள்,விநோதங்கள்- விவாதங்களோடும் வெளி உலகுக்கு வந்த முதல் விடுதலைப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும்……இந்த இணையங்கள் நிஜத்துக்கும் புனைவுக்குமான எல்லைகளை முற்றிலும் அகற்றியதில் இவை அனைத்துக்கும் பெரும் பாத்திரம் இருக்கிறது…அதாவது பரபரப்பான மஞ்சள் பத்திரிகை கலாச்சாரத்தின் பங்காளிகளாகவே ஆகியிருக்கிறார்கள்.

எதையும் எழுதலாம், எப்படியும் எழுதலாம்…அடிப்படையான இதழியல் வழிகாட்டு நெறிகள் இணையத்திற்கு என்று எதுவும் அவசியமில்லை. உண்மைகளைப் பொய்களாகவும், பொய்களை உண்மையாகவும் உங்களால் கட்டியமைக்க முடியும்…. குழுசார்ந்த காழ்ப்புணர்வுகளினதும் சொந்த வெறுப்புகளினது போக்கிடமாகவும், தன்முனைப்பை முன்வைத்து மனித மனத்தின் இருளைக் கடக்கும் மந்திர வெளியாகவும் இணையம் ஆகியிருக்கிறது. பின்னூட்டக் கலாச்சாரம் (வாசகர் கடிதம் இணைத்தல்) மிகு வன்மையான வெளிப்பாட்டு வடிவமாக மாறியிருக்கிறது.

மட்டுறுத்துணரும், இதழாசிரியரும், கட்டுரையாளரும் ஒருவரே எனில் உண்மையை எவரும் எங்கும் தேடிக்கண்டு பிடிக்க முடியாது.

இணையம் தந்திருக்கிற சுதந்திரத்தைத் தமது அரசியல் தந்திரத்திற்காகப் பாவிக்கிற ஒரு சூழல் – பொய்களையும் நிஜங்களையும் பிரித்து பார்க்க முடியாத சூழல்- ஈழச் சிக்கலை முன்வைத்து உலகெங்கிலும் நஞ்சைப்போல் பரவிக்கொண்டிருக்கிறது” என்று நீண்டு செல்கிறது அந்த விவரணம்.

மே 18 இற்கு பிற்பாடு தமிழ் இணையத்தளங்கள் எதுவுமே நம்பகத்தன்மையுடன் இல்லை. மேற்கண்ட விபரணத்தில் அச்சொட்டாக பொருந்துபவயே அனைத்தும்.

இந்த இடத்தில்தான் தமிழ் ஊடகங்களின் ஒற்றுமையும் சேர்ந்து பயணிக்கும் போக்கும் காலத்தின் அதிதேவையாகிறது. ஈழம்ஈநியூஸ் குழு சார்ந்த வாதங்களை தாண்டி இனப்படுகொலையைச் சந்தித்த – தொடர்ந்து ஒடுக்கபடும் இனத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஊடகங்கள் என்ற அடிபப்டையில் தமிழ்த் தேசிய ஊடகங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறது. அவதூறுகளை தவிர்ப்போம்.

முடிந்தவரை ஊடக அறத்தை மதித்து பன்மைத்துவத்தை கட்டிக்காத்து எமது விடுதலைக்கு தொடர்ந்து போராடுவோம். இனியாவது “யாழ்” போன்ற ஊடகங்கள் தம்மை மாற்றியமைக்கும் என்று நம்புவோமாக…. தொடர்ந்து விவாதிப்போம் – ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பகிhந்து கொள்வோம்.

நன்றி

ஈழம்ஈநியூஸ் ஆசிரியர் குழு.

http://www.eelamenews.com/?p=27507

  • Replies 110
  • Views 13k
  • Created
  • Last Reply

... முடியல monkeyphoto.gif

... பிடித்து மூத்தா பெய்யத்தெரியாத குறுனிகள் எல்லாம் .... செய்தால் ....ம்ம்ம்ம்! .... தமிழனின்டை சாபக்கேடடாப்பா!

தலைப்பை ஈழம் நியூஸின் சண்டித்தனம் என்று மாற்றினால் இன்னமும் பொருத்தமாய் இருக்கும். மேற்கண்ட முறைப்பாடு தமிழ் இணையத்தளங்களிடையே ஏற்பட்டுள்ள போட்டிகள், ஒன்றுடன் மற்றொன்றின் மீது காணப்படும் வக்கிரத்தன்மைகளின் வெளிப்பாடாகவே என்னால் பார்க்க முடிகின்றது. புலம்பல்களின் முடிவில் ஒவ்வொருவரும் கடைசியில் தாயகம், தேசியம் பாதுகாக்கப்பட வேணும், அதற்காகவே செயற்படுகின்றோம் என்று கூறி முற்றுப்புள்ளி போடுவதுதான் இன்னமும் வேடிக்கையானது. மேற்கண்ட முறைப்பாடுகளை முழுமையாக வாசித்து கிரகித்துக்கொண்டபோது எனக்குள் தோன்றிய எண்ணம் - கண்ணாடியில் உங்கள் விம்பத்தை முதலில் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

அடஅடஅடடடா ஒரு கருத்துக்களத்திற்கும் செய்தி ஊடகத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆய்வாளர்கள் எல்லாம் ஒரு செய்தி தனம் நடத்துகிறார்களாம். அதுக்கை வழக்கு கோட்டு என்று வெருட்டல்வேறை.ஜயா ஆய்வாள கனவான்களே இது கருத்துக் களம் இங்கு யாரும் எது வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு கருத்துக்கள நிருவாகம் பொறுப்பாகாதய்யா அவர்கள் அதனை கண்காணிக்கலாம் அவ்வளவுதான். இதுகூட தெரியாத நீங்களெல்லாம் ஒரு பத்திரிகையாளர்கள். அதனை ஒரு செய்தியென்று ஆளவந்தான் இங்கு கொண்டு வந்து ஒட்டுகிறார்கள். ஆளவந்தானிற்கு சுமங்களா என்றாலே ஒரு நடுக்கமாக இருக்கிறதாக்கும். :D

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் நியூஸ் குழுமத்தினருக்கு,

இப்படி யாழ் களத்திற்கு முறைப்பாடுகளைச் செய்வதை விடுத்து,

ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளுக்காகவும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் ஐ. நா விற்கோ, மனித உரிமைகள் சபைக்கோ சிங்கள அரசிற்கு எதிராக முறைப்பாடுகளை அனுப்பினால் நன்றாக இருக்கும்.

"கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் யாழ் களத்தில் இருப்பவர்கள் நாங்களும் நம்மவர்களுமே"

வாத்தியார்

...................

இது கருத்துக் களம் இங்கு யாரும் எது வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு கருத்துக்கள நிருவாகம் பொறுப்பாகாதய்யா அவர்கள் அதனை கண்காணிக்கலாம் அவ்வளவுதான்.

ஈழம்நியூஸ் உட்பட நான், நீங்கள், வலைத்தளத்தில் யாரும் எது வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால், பொறுப்பற்ற முறையில் எவற்றையாவது எழுதி பிரச்சனைகள் வரும்போது அவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். பலரும் தமிழில் எழுதுவதால் எதையும் எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அண்மையில் பேஸ்புக் வலைத்தளத்தில் சுவரில் ஓர் கனேடிய அரசியல்வாதியை கொலை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாகவே கனடா காவல்துறை மேற்கண்ட அச்சுறுத்தல் சம்மந்தமாய் நடவடிக்கை எடுத்து இருந்தார்கள். வலைத்தளம் தானே நாம் என்னமும் எழுதலாம் என்று நினைப்பது மிகவும் தவறானது.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் நியூஸ் நிர்வானத்தாருக்கு.... சீ .... நிர்வாகத்தினருக்கு .....

யாழ் இணையத்தில இருக்கிற கடுப்பில், சும்மா அப்பப்ப வந்திட்டு போற என்னில ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டிங்கள் தானே...

பயமாய் கிடக்கு, அது தான் கேட்டனான்.

போடாஆங் .................................................. எழுத விருப்பம் பட் நிழலிக்கு ஏன் நேர மினைக்கேடு எண்டு தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னப்பா......., இங்கை என்ன நடக்குது?

வெட்கமாயில்லை.

கொஞ்சமாவது மனிதராக இருக்கப் பழகுங்கள்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் எவ்வளவோ எழுதித் தள்ளுறான். நெருப்பு, தேனி, ... இவ்வாறு எத்தனையோ தளங்கள் எல்லாம் எழுதுகின்றன. அதையெல்லாம் சட்டரீதியில் எதிர்க்க வக்கில்லை. கருத்துக்களத்தில் எழுதும் தனி நபர்களோடு மோதுவதில் வெட்கமாக இல்லையா?

யாழ் களம் ஒரு கருத்துக் களம். அதன் மூலமாக மக்கள் தங்கள் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் போராட்டத்தை ஊக்குவிக்கவும் மிகச் சிறந்த இணைய வழி ஊடகமாக பயன்படுகிறது. இதில் ஊடக சண்டித் தனமோ எதேச்சைப் போக்கோ இருப்பதாக தெரியவில்லை.... தனி நபர் கருத்து ஒரு இணையத்தின் ஒரு ஊடகத்தின் கருத்தாகாது....... தவறான கருத்து பரப்பப் படுவதாக உணர்வீர்களேயானால் அதற்கு ஒரு மறுப்பறிக்கை வெளியிடுங்கள்...... அதை விட்டு யாழ் களத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டாதீர்கள்......

அந்த தலைப்பு இட்டது முதல் கடைசி வரைக்கும் அந்தனை எதிர்த்து அந்த கருத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கி பலர் எதிர்கருத்துகள் வைத்து இருந்தனர் என்பதும்... பொய் என்பதுக்கான விளக்கங்கள் வைக்கப்பட்டன என்பதும் அந்த தலைப்பை யாழ் தலைமை நிர்வாகி மோகன் அகற்றி இருந்தார் என்பதும் ஈழம் நியூஸ் அறியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது...

காட்டிக்கொடுப்புக்கள் யாரால்??எங்கே?? தலைப்பு தனிநபர் தாக்குதல் மற்றும் ஊகங்களின் அடிப்படையிலான (ஆதாரங்களின்றி) கருத்துகள் எழுதப்பட்டதனால் நீக்கப்படுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67449&pid=590259&st=125&#entry590259

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்நியூஸ் உட்பட நான், நீங்கள், வலைத்தளத்தில் யாரும் எது வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால், பொறுப்பற்ற முறையில் எவற்றையாவது எழுதி பிரச்சனைகள் வரும்போது அவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். பலரும் தமிழில் எழுதுவதால் எதையும் எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அண்மையில் பேஸ்புக் வலைத்தளத்தில் சுவரில் ஓர் கனேடிய அரசியல்வாதியை கொலை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாகவே கனடா காவல்துறை மேற்கண்ட அச்சுறுத்தல் சம்மந்தமாய் நடவடிக்கை எடுத்து இருந்தார்கள். வலைத்தளம் தானே நாம் என்னமும் எழுதலாம் என்று நினைப்பது மிகவும் தவறானது.

கலைஞனின் கருத்து யாழில் எழுதும் ஒருசிலரை யோசிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

.

சாப்பிட்ட கோப்பையில் , துப்புறமாதிரி......

இவ்வளவு ஒரு நீண்ட கட்டுரையை தயாரிக்க எத்தனை நாள் எடுத்திருக்கும்.

ஏனப்பா..... வெந்த புண்ணிலை வேலை பாச்சிறீங்கள்?

உங்களுக்கு வேறை வேலை பாருங்கோ ......... :D

.

யாழ்கள உறவுகள் அனைவரிற்கும் வணக்கங்கள்..நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகி என்கிற முறையில் யாழ் களத்தின் நோக்கம் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் அறிந்தவள். யாழ்களம் தமிழர் உரிமைக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் இன்றுவரை உறுதியோடு உழைக்கும் ஒரு இணையத்தளம். சொல்லப்போனால் முந்தாநாள் பெய்த மழைக்கு முழைத்த காளான்களிற்கெல்லாம் மூத்த தமிழ் தாய்தளம். யாழ் இணையத்தில்தான் அனைவருமே கணணித்தமிழ் எழுத கற்றுக்கொண்ட இடம் என்றாலும் அது மிகையாகாது. இன்று அந்த தாய் தளத்திற்கு ஒரு குட்டி இணையத்தளம் பாகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. யாழ் இணையத்திற்கு மிரட்டல்கள் ஒன்றும் புதிதல்ல என்றாலும். தமிழ்விரோத சக்திகள் ; யாழ் இணையத்தினை பல தடைவைகள் தாக்கியும் அதனை செயலிழக்கப்பண்ணியுமிருந்தனர்.

அப்பொழுதெல்லாம் அதன் வாசகர்களின் உறுதியான உற்சாகத்தினால் அது மீண்டும் மீண்டும் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறைவையாக மீண்டெழுந்தது. மறைமுகமான தாக்குதல்களிலெல்லாம் மீண்டெழுந்த யாழ் களத் திற்கு இன்று நேரடியாகவே ஒரு தமிழ்த்தேசிய விரோதிகளினால் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழினத்திற்கு விரோதமாக எத்தனையோ தமிழ் சிங்கள தளங்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும் போது அவற்றையெல்லாம் ஏனென்று கேட்க வக்கில்லாத ஒரு இணையத்தளம் எதற்காக யாழ் இணையத்தை மட்டும் மூடியேயாகவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்பதன் பின்னணி என்ன????????????????? யாழ் இணைய வாசகர்களே இங்கு உங்கள் கண்டணங்களை தெரிவியுங்கள். யாழ் இணைய உறவுகளிடம் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் மோதல்கள் இருக்கலாம். ஆனால் யாழ் இணைய்த்திற்கு ஒரு பிரச்சனை என்றுவரும் பேது சும்மா இருக்க முடியுமா??????? யாழ் இணையம் என்பது உலகத்தமிழர்களின் இணையம் யாழ் இணையம் எமது உணர்வு.யாழ் இணையம் எமது மூச்சு .எமது மூச்சையடக்க யாராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் கருத்து யாழில் எழுதும் ஒருசிலரை யோசிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்

வாத்தியார்

................

Yarl should not allow pro terrorist elements to tarnish the name of intellectuals. The comments by Sumangala and Dam about Ithayachanthiran and Arus is unacceptable. Similar attacks by Araamuthan against me is also unacceptable. Yarl is not above the law.

- V.I.S.Jayapalan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை பாதிக்கப்பட்டவைக்கு நேச்கரத்திற்கு யாழுக்காலையும் கொஞ்ச உதவி கிடைக்கிறதெண்டு நினைச்சன் இப்ப அதையும் இழுத்து பூட்டப் பேறாங்களா. ஏதோ நம்மடை சனத்தின்ரை தலைவிதி அவ்வளவுதான் இதிலை யாரை நொந்து என்ன செய்யிறது. அய்யாமாரே அம்மா மாரே ஏதோ என்ரை ஆதங்கத்தை மட்டும் சொன்னன் அதுக்காக நேசக்கரத்தோடை கோவிச்சு அதையும் இழுத்து பூட்டப்போறன் எண்டு சபதமெடுத்திடாதீங்கய்யா உங்கடை காலிலை வேணுமெண்டாலும் விழுந்து கும்புடுறன் நன்றிகள்

தங்கட ஓட்டைகள் வெளி வருகுது எண்டு எல்லாருக்கும் பயம் பிடிச்சு போச்சு.

புலியை சொல்லி சவாரி செய்தவை. புலி எதிர்ப்பு சவாரி செய்தவை எல்லாரும் எனன செய்கிறதெண்டு தெரியாமல் முழிக்கினம்.

யாழ்களம் மூலம் தான் நிறைய விசயம் வருகுதெண்டு பல பேர் சொல்லுகினம்.

ஒரு செய்தியை பார்த்தா அதன் சரி பிழை என்ன ,விமர்சனம் என்ன என்று பலர் யாழ்களம் சென்றுதான் பார்க்கினம்.

இதுக்கும் ஆப்புவைச்சு கள்ள வேலைகள் செய்ய நிற்கினம்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தவரை நோக்கிக் கல்லெறிவதற்கான காலமல்ல

இது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.

வன்னி மண்ணில் எமது இனத்தையும் போராளிகளையும் அளித்து ஓராண்டு முடிந்து விட்டது.

அந்த மாபெரும் தலைவனின் ஒரே வழிகாட்டலில் நடந்த தியாக வேள்வியில் ஒரு துளியாக இப்பங்களிப்பில் இருந்ததில் மனத்தால் மௌனமாக பெருமைப்பட்ட போதிலும், காதோடு கசிகின்ற செய்திகள் சில நெஞ்சை நோக வைக்கின்றன. இணையத் தளங்களில் முகமில்லாத மனிதர்களாக விடுதலைப் போராட்டத்தில் தலைவரின் பின்னே கைகோர்த்து நின்றவர்களை மிக மோசமாக பழிப்பதும், தூற்றுவதும் சிலரது வெளியாகி விட்டது. ஏதோ ஒரு குற்ற்றத்தை சுமத்தி வேடிக்கை பார்ப்பது விளையாட்டாகி விட்டது. உலகமெல்லாம் பரந்து வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மிகக் கட்டுப்பாட்டுடன் தலைவனது ஒவ்வொரு குறிக்கோலும் மிகவும் நேர்த்தியான முறையில் பின்பற்றப்பட்டது. ஆனால், மே 18 க்கு பிறகு, என்ன நடந்து கொண்டிருக்கிறது?

தட்டிக் கேட்க ஆளில்லா வீட்டில் என்பார்களே, அது தான் புலம் பெயர்ந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. வன்னியில் இயக்கத்தோடு இணைந்து, தம்மை முழுமையாக அர்ப்பணித்த சிலரோடு மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணம் ஈழநாடுவில் பணியாற்றிய காலத்தில் கவிஞர் புதுவை இரத்தினத்துரையோடு பழகிய காலங்கள் மறக்க முடியாதவை. முந்தைய ஆண்டுக்கு முன்னைய ஆண்டு ஏதோ ஒரு நாள் நன்றாக நினைவிருக்கிறது. " புதுவை என்னுடைய நண்பர் , அவருடன் பேச விரும்புகிறேன்" என்று அன்பான கோரிக்கை விடுத்திருந்தேன்.

தொலைபேசி மூலம் முதலில் அறிமுகமாகி பின் நண்பரான இளையவர் ரஞ்சனிடம் தான் இப்படிக் கேட்டிருந்தேன். ஒரு நாள் காலையில் " இந்த நம்பருக்கு அவருடன் உடனே பேசுங்கள், அவர் வன்னியில் உங்களுக்காக காத்திருப்பார்" என்று ரஞ்சன் சொன்னார். பேசினேன், மச்ச்சான் எப்படி இருக்கிறாய்? இப்பவும் தாடி தானே... உன்னை மறக்க மாட்டேன் மறக்கிற மாதிரியா பழகினோம்...? " என்று பலதும் பத்தும் பேசியவர், " உணர மனுஷி என்னுடைய பாட்டுக்களுக்கிப் பழக்கி, அவரது பிள்ளைகள் ஆடிய நடனத்தையும் பார்த்தேன். சந்தோசம் அவருக்கு என்ற வாழ்த்துக்கள்" என்றவரிடம், " இந்தா, என்ற மனுஷியிடமே கொடுக்கிறேன்" என்று என் துணைவியாருடன் போனைக் கொடுத்தேன்.

புதுவையின் குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியுடன் பேசினார். "தலைவருக்கு முன்னாள் எனது பிள்ளைகளின் நடனம் நடக்க வேண்டும்" என்ற தன

ஆசையை வெளியிட்டார். எதுவுமே நிறைவேறாமல் போய்விட்டது. ஆனாலும் ஏதோ ஒரு நினைவு பழைய நண்பனிடம் பேசியது. இதையெல்லாம் அப்போதே புதினம் இதழில் எழுதினேன். புதுவையும் படித்து மகிழ்ந்தார். இதே போன்று, தலைவருடன் கூட இருந்து பணியாற்றிய வழக்கறிஞர், சோமாஸ்கந்தனுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். ரஞ்சன் மூலமாகத்தான் அந்த தொடர்பைபெற்று பேசினேன்.

படிக்கிற காலத்தில் பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தை என்னிடம் வளர்த்த ஆசான் அவர். என் தாயாருக்குத் தம்பி முறை - ஆனாலும் நண்பனாக இருந்து என் உணர்வுகளுக்கு தீனி போட்டவர். அன்பரசு எனும் பெயரில் அவர் இயக்கத்தில் உலா வந்தவர். ரஞ்சன் என்ற இந்த இளைஞரை பற்றி குறிப்பிட வேண்டும் என்பதற்காகவே இவை எல்லாவற்றையும் நினைவு படுத்தினேன்.

விடுதலை உணர்வோடு டாமில் ஈழத்தை நெஞ்சில் நிறைத்து, லண்டனிலும் தமிழ் ஈழத்திலுள்ள இயக்கப் போராளிகளுடனும் உணர்வைப் பகிர்ந்து கொள்கின்ற ஈழம் ரஞ்சன் என்று அழைக்கப்பட்டு வருகின்ற அந்த இளைஞரைப் பற்றி வேண்டுமென்றே கசிய விடப்படுகின்ற மொட்டைச் செய்திகள் நம்ப முடியாதவை!

நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற ஒரு பலம் மிக்க அமைப்பை உருவாக்க உழைக்கின்ற உருத்திரகுமாரனைப் பற்றி கூசாமல் எழுதும் போது, ஈழம் ரஞ்சன் எம்மாத்திரம்? தலைவர் மீதிருந்த பயம் பலருக்குப் போய்விட்டது.

Edited by ஈழம் ரஞ்சன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்களே ஊடகப் பணியாளர்களே சிங்களத்தினது எண்ணத்தை நாம் விரைந்து முன்னெடுக்கிறோமா? என்ற ஐயமெழுகின்றது. முந்தி ஊரிலை வேலிச் சண்டை மாதிரி. இங்கை இணையச் சண்டையோ. யாராக இருந்தாலும் ஆதாரமற்ற தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் கருத்துகளை எழுதுவதும் வெளியிடுவதும் இன்றைய சூழலில் மிக மோசமான விளைவுகளையே தரும். சிந்திப்பதும் சீரிய வழியில் செயல்படுவதுமே தமிழினத்தினது விடியலுக்குத் தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இதை நகைச்சுவை பக்கத்துக்கு நகர்த்திவிடுங்களன்...முடியல... நாலு நாளைக்கு கக்கூசுக்கு போகேக்கு கூட என்னால சிரிப்பை அடக்கு முடியுமா என்று தெரியல...

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்ஈநியூஸ் நடத்துகின்ற அருஸ், பரணி கிருஸ்ணரஜனி உங்களுக்கே இது சின்னப்புள்ளைத்தனமாக தெரியவில்லையா?

உங்களின் ஆக்கங்களுக்கும் புலம்பல்களுக்கும் வடிகாலாகத்தான் ஈழம்ஈநியூஸ் இருக்கின்றதே தவிர ஆக்கபூர்வமாக உங்கள் தளத்தில் எதுவுமில்லையே.

அதென்னங்க தமிழ்த் தேசியம்? நீங்கள் மட்டும்தான் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் அல்லவா முழத்துக்கு முழம் தமிழ்த் தேசியம் என்று முழங்குகின்றீர்கள்.

வடிவேல் பாணியில் கூறுவதென்றால், றூம் போட்டு யோசிச்சீங்களோ இப்படி கடிதங்களும் கட்டுரைகளும் எழுதுவதற்கு???

முதலில் கருத்துக்களத்தின் வரையறைகள் என்ன என்பதனை படியுங்கள். அதன்பிறகு இவ்வாறான கடிதங்களையும் கட்டுரைகளையும் எழுத முயற்சியுங்கள்.

யாரும் எதனையும் எழுதிப்போடலாம் என்பதற்குத்தான் கருத்துக்களம் இருக்கின்றது. அதனை நீக்குவதற்கு அந்த அந்த கருத்துக்களத்தினை நடத்துபவர்களுக்குத்தான் அதிகாரம் இருக்கின்றதே தவிர. உங்களைப் போன்ற சில்லிடுப்புக்கள் எல்லாம் கேட்டதற்காக நீக்கவேண்டும் என்றில்லை.

***

Edited by இளைஞன்
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளின் விபரங்களை அனுப்பும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதென்ன வாசிகசாலையா நேரடியாக ஆட்களின் விபரங்களை பதிந்து அங்கத்தவராவதற்கு. அங்கத்தவர்களின் விபரங்களை யாழ்களம் எங்கிருந்து எடுத்துக்கொடுக்கும். கணனிகளின் ஐ.பி இலக்கங்களை கொடுக்கும்படி கேட்டார்களோ தெரியவில்லை. அதைத்தவிர வேறெதையும் உண்மைத் தன்மையுள்ள அங்கத்தவர்களின் தரவுகளாக கருதமுடியாது. நோர்வேயில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டால் முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பிரபல நோர்வேஜிய பத்திரிகைகள் உட்பட அனைத்தையும் இழுத்துப்பூட்ட வேண்டும். சட்டரீதியியாக எதுவித அடித்தளமுமற்று முன்வைக்கப்பட்ட இந்த வேண்டுகோளில் இனவாத மகிந்த நாற்றம் வீசுது. பொல்லை கொடுத்து அடிபடாமல் மரியாதை கொஞ்சநஞசம் இருக்கும்போதே கடையை கட்டினால் நல்லது என்பது தான் நான் இந்த ஒட்டு ஊடகக்குழுக்களுக்கு சொல்லும் புத்திமதி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்றியூஸ் நிறுவனத்திற்கு ஒரு கேள்வி தனிப்பட்ட நபர்களது அந்தரங்க விடயங்களாக வளர்சியடைந்த நாடுகளில் எவ்வாறு பிறிதொருவரால் கொடுக்கமுடியும்? ஊடகசுதந்திரம் அரசியல் மற்றும் மதரீதியான சுதந்திரங்களிலும்பார்க்க மேற்கத்திய நாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கே முதன்மையளிக்கப்படுகின்றது என்பதை தாங்கள் அறியாதவர்களல்ல. மேலும் நீங்கள் வெளியிட்ட இச்செய்தியே தங்கள் மீது சம்பநதப்பட்ட நபர்களால் தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு முயலமுடியுமென்பதை தாங்கள் அறியாதவர்களல்ல.

சிங்களவன் எவ்வளவோ எழுதித் தள்ளுறான். நெருப்பு, தேனி, ... இவ்வாறு எத்தனையோ தளங்கள் எல்லாம் எழுதுகின்றன. அதையெல்லாம் சட்டரீதியில் எதிர்க்க வக்கில்லை.

இப்படி யாழ் களத்திற்கு முறைப்பாடுகளைச் செய்வதை விடுத்து,

ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளுக்காகவும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் ஐ. நா விற்கோ, மனித உரிமைகள் சபைக்கோ சிங்கள அரசிற்கு எதிராக முறைப்பாடுகளை அனுப்பினால் நன்றாக இருக்கும்.

முடிந்தால் இவற்றை செய்து காட்டுங்கள்.

பரவாயில்லை. கொடுத்து வைத்த ஆக்கள். எந்த நேரமும் கணினிக்கு முன்னாலை குந்தியிருப்பாங்கள் போல. கடிதம் கடிதமாக எழுதித் தள்ளுறாங்கள்.

இவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து யாழ். இணையம் தனது கள உறுப்பினர் ஒருவருடைய தனிப்பட்ட விடயம் எதனையும் மற்றவர்களிற்கு வழங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.