Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் முடித்தவுடன் மனைவி கணவனுக்குச் சில பணிவிடைகளை செய்ய ஆரம்பிப்பார். தேனீர் பரிமாறுதல், குளிக்கும்போது துவாய் எடுத்துக் கொடுத்தல், உணவுபரிமாறுதல் என்று தொடங்கும். பின்னர் கணவன் திருமணத்திற்கு முன்ன தானாகச் செய்துகொண்டிருந்த பல கருமங்களை மனைவியே செய்ய வேண்டி வரும். வயது போகப் போக மனைவிக்கு அப் பணிவிடைகள் கடினமாக இருந்தாலும் பழகி விட்டதால் செய்தே ஆகவேண்டிய நிலைக்கு வந்து விடுவார். கணவனும் மனைவி இன்றி வீட்டில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது பழக்கப்பட்டு விடுவார்.

வயதானவர்களைக் கூடப் பார்த்திருக்கிறேன். இருந்த இருப்பில் அந்தக் கண்ணாடியை எடு. பத்திரிகையை எடு. தேத்தண்ணி கொண்டுவா. என்று அதட்டிக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் பிரியும்போது இருவருக்குமே கடினமாக இருக்கும். கணவன் நான் இல்லாமல் தனியாக எப்படி எல்லாவற்றையும் செய்கிறாரோ என்று மனைவியும், மனைவி இல்லாமல் எதையும் சரியாகச் செய்ய முடியாது கணவனும் தவிப்பார்கள்.

இதைத்தான் அன்பு என்கிறோம். :D

இணையவன் அண்ணா எல்லாம் சொன்னீங்க சரி.. கடைசியில சொன்னீங்க பாருங்க இதுதான் அன்புன்னு.. அது உலக மகா பொய்..!

அன்பு பணிவிடை செய்வதால் தான் வருமா..??! பிள்ளை தாய்க்கு எதுவும் செய்யாத போதும்.. தாய் பிள்ளை மீது காட்டுவது அன்பு. தகப்பனும் அப்படியே. சகோதரங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவாவிட்டாலும் அன்பு காட்டுவார்கள். அதுதான் அன்பு.

இது ஒரு வகை அடிமைத்தனம். அதில் இருந்து இருவரும் விடுபட முடியா நிலையில்.. அதற்கு இடும் பெயர் அன்பு என்ற போலி அடையாளம் என்றே நான் நினைக்கிறேன்..! :D:lol:

  • Replies 77
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் மனைவி திரும்பி வந்தபின் ஒரு மாத இடைவெளியில் திருப்பி எங்கையாவது அனுப்பிவிடுங்கள்.பகிடிக்கு இல்லை உண்மையாகத்தான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யா மெய்யா எதை எழுதுவதென்றே தெரியவில்லை.2 கிழமைகள் ஆகிவிட்டது யாழில் பல நண்பர்களின் புத்திமதியடன் சிற்றிங் ரூமிற்கு காட்வூட்டும் அடித்து பெயின்ரையும் மாத்திவிட்டேன்.தோட்டத்தில் இருக்கும் முந்திரிகை பந்தலுக்கு புது மரமும் போட்டுவிட்டேன்.முடிந்த அளவுக்கு மாற்றங்கள்செய்துகொண்டுதானிருக்கின்றேன்

இருந்தும் என்னால் மனைவியின் பிரிவை ஒரு கணமும் தாங்க முடியவில்லை என்னில் ஏதும் பிழையா அல்லது எனது மனைவி என்னை அப்படி வைத்துவிட்டாரா?

அர்ஜுன் எங்களை வைச்சுக் காமெடி பண்ணவில்லைத் தானே

எனென்டால் முந்திரிகை மரத்துக்குப் பந்தல் போடுவதை விட்டுப் பந்தலுக்கு மரத்தைப் போட்டிருக்கிறிங்கள் :lol:

வாத்தியார்

***********

  • தொடங்கியவர்

யாழில் எழுது பெரும்பான்மையானோர் 20 இல் இருந்து 40 வரை என்றுதான் எனது கணிப்பு.50 தாண்டத்தான் எனது நிலை வரும் என நினைக்கின்றேன்.

அடுத்து முந்திரிகை பந்தல் .முதலில் டெக்கை சுற்றி வைத்தால் நிழலாக இருக்கும் என்று எண்ணினேன் பின்னர் அந்தளவுக்கு வளருமோ தெரிடாது என வேலியுடன் வைத்திவிட்டேன்.3 வருடங்களிலேயே வளர்ந்து தள்ளிவிட்டது.ஒரு செரியும்,ஒரு அப்பிள் மரமும் வைத்தேன்.அப்பிள் இன்னமும் காய்க தொடங்கவில்லை.செரி யூனிலெயே காய்கத்தொடங்கிவிடும்.குருவிகள் ஒன்றயும் விடாது இம்முறை மினுங்க்ல்கள் கொஞ்சம் கட்டிவிட்டேன் குருவி வந்தது குறைவு.நல்ல ருசியாக இருக்கும் வீட்டுத் தோட்டம் என்றபடியால்.

வீடு வாங்கும் போது பல வித மரங்களுடன் தான் வாங்கவேணுமென நினைத்தேன் மனைவியின் விருப்பத்திற்கு புது வீடு வாங்கியதால் எல்லாமே நாங்கள் தான் உருவாக்கியது.

நான் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்பாருங்கோ.நேற்றுக்கூட சலசலப்பு இணையத்தில் ஒரு வீடியோவை உங்களயும் பார்க்க பண்ணுவமென்றால் இணக்க தெரியவில்லை.மகனிடம் கேட்டு முந்திரிகை பந்தலை இணத்துவிடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுது பெரும்பான்மையானோர் 20 இல் இருந்து 40 வரை என்றுதான் எனது கணிப்பு.50 தாண்டத்தான் எனது நிலை வரும் என நினைக்கின்றேன்.

அடுத்து முந்திரிகை பந்தல் .முதலில் டெக்கை சுற்றி வைத்தால் நிழலாக இருக்கும் என்று எண்ணினேன் பின்னர் அந்தளவுக்கு வளருமோ தெரிடாது என வேலியுடன் வைத்திவிட்டேன்.3 வருடங்களிலேயே வளர்ந்து தள்ளிவிட்டது.ஒரு செரியும்,ஒரு அப்பிள் மரமும் வைத்தேன்.அப்பிள் இன்னமும் காய்க தொடங்கவில்லை.செரி யூனிலெயே காய்கத்தொடங்கிவிடும்.குருவிகள் ஒன்றயும் விடாது இம்முறை மினுங்க்ல்கள் கொஞ்சம் கட்டிவிட்டேன் குருவி வந்தது குறைவு.நல்ல ருசியாக இருக்கும் வீட்டுத் தோட்டம் என்றபடியால்.

வீடு வாங்கும் போது பல வித மரங்களுடன் தான் வாங்கவேணுமென நினைத்தேன் மனைவியின் விருப்பத்திற்கு புது வீடு வாங்கியதால் எல்லாமே நாங்கள் தான் உருவாக்கியது.

நான் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்பாருங்கோ.நேற்றுக்கூட சலசலப்பு இணையத்தில் ஒரு வீடியோவை உங்களயும் பார்க்க பண்ணுவமென்றால் இணக்க தெரியவில்லை.மகனிடம் கேட்டு முந்திரிகை பந்தலை இணத்துவிடுகின்றேன்.

இப்படியே மனைவி வந்த பின்னும் செய்தால்(creative) சிறு பிரிவும் பெரிய விடயமாக தெரியாது.

நன்றி. மகனுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இணைத்து விடுங்கள். நானும் ஒரு செரியும் ஒரு Asian Pear (ஸ்ரீலங்கா Pears - சிலோன் ஆப்பிள்) நட்டேன். செரி நன்றாக காய்த்தது. Asian Pears காய்கள் இப்பொழுது மரத்தில் பழுக்கத் தொடங்கியுள்ளன. நல்ல சுவையான கனிகள். இந்த வருடம் இதன் கிளைகளில் 3 வேறு வகையான Asaian Pears ஒட்டியுள்ளேன்.

  • தொடங்கியவர்

சிறிய இடைவேளையின் பின் மீண்டும்.

இந்த திரியை நானா தொடங்கினேன் என்று எனக்குள்ளேயே ஒரு வியப்பு.கடவுள் நம்பிக்கை அறவேயில்லாத நான். நடக்கும் ஒரு நிகழ்வுகளுக்கும் மூடநம்பிக்கையை அதற்குள் இழுக்காதீர்கள் என கத்திப்பேசும் எனக்கு இம் முறை எனது மனைவியின் பயணம் ஏனோ ஒரு சிறு தடுமாற்றத்தைக் கொடுத்தது.வயது போக எங்களின் மீது எமக்கே வரும் ஒரு விதபயம் கலந்த உணர்வு என இருந்தாலும் இந்த பிரிவு திரியை உங்களுடனும் பகிருவோம் என நினைத்தேன்.

எனது மனைவியின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவில் தேருக்கு போட்டுவந்து உணவு உண்ட கையுடன் அப்படியே மாரடைப்பில் எனது மனைவியின் கைகளில் சாய்ந்துவிட்டார்.யாழ் வைத்தியநிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றும் அவர்களின் பலத்த முதலுதவியாலும் கூட உதவமுடியவில்லை.எனது ந்ண்பரொருவர் யாழ் வைத்தியசாலையில் டொகடராக இருக்கின்றார் நன்றாக உதவிசெய்தாராம்.இருந்தும் தான் கூட்டிபோன தனது தாயாருக்கு இந்த நிலை வந்ததையிட்டு மிகவும் உடைந்து போய் போன் எடுக்கும் நேரமெல்லாம் ஒரே அழுகை.ஜேர்மனில் இருந்து ஒருவரும் கனடாவில் இருந்து இரு சகோதரர்களும் இன்றுதான் புறப்பட்டார்கள்.

என்று போன் எடுக்கும் போது சொன்னா இனி எனக்கு ஒன்றும் வேண்டாம் கனடா வந்து தனது கட்டிலில் படுத்தால் காணும் என்று.அம்மா இறந்தபின் அந்த இரண்டு நாட்களும் அங்கு இருக்கும் நடைமுறைகள்தன்னை போட்டு சிப்பிலி ஆட்டி தான் படாதபாடுபட்டுவிட்டதாக சொன்னா.

நொந்து நூலாகியிருக்கும் எனது மனைவியை நினைக்க எது என்னை இந்த திரியை எழுதத்தூண்டியது என யோசித்துப் பார்க்கின்றேன்

உங்கள் மாமியாருக்கு அஞ்சலிகள். தெரிஞ்ச அக்கா ஒருவரின் அம்மா ஒருவரும் இப்படித்தான்.. கலியாண வீட்டு பொன்னுருக்குக்கு போயிருந்தாராம். திடீரென மயங்கி விழுந்து மரணித்துவிட்டார் இரண்டு நாட்களுக்கு முன்னர். இந்த உலகம் எவ்வளவு தூரம் மகிழ்ச்சிகளாலும் கலகலப்பினாலும் நிறைந்து உயிர்ப்பாய் காணப்படுகின்றதோ.. அவ்வளவு தூரம் பிரிவுகள், துயர்களினால் நிறைந்து சூனியமானது. உயிர்ப்பிற்கும் சூனியத்திற்கும் இடையிலான போராட்டத்தில் எங்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுன், உங்கள் மாமியாரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.வாழ்க்கையே இப்படி தான் ஒன்று நினைக்க இன்னொன்று நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Dear Arjun ........

...Please accept my Heart felt condolence to you and your family.

My prayers for her. always .

Nilaamathy akka .

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...அந்த அம்மா கொடுத்து வைத்தவ ஊரில போய் இறந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

உங்கள் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன்

உங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

அர்ஜுன் அண்ணா

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இறுதிநேரத்தில் பெற்ற தாயை மடியில் சுமக்கும் அரியவாய்பு உங்கள் மனைவிக்கு கிட்டியிருக்கிறது இதைநினைத்து நீங்கள் மனநிறைவு கொள்ளவேண்டும்.

அர்ஜுன்,

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் மாமிக்கு அஞ்சலிகளும்.உங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறவை இழந்து தவிக்கும் உங்கள் எல்லாருக்கும் எனதும் எனது குடும்பத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அர்ஜுன், பெற்றோரைப் பிரிந்து நினக்கும் எந்தப் பிள்ளைக்கு ஆறுதல் சொன்னாலும் இப்போதைக்கு மனம் ஏற்றுக் கொள்ளாது... இருப்பினும் உங்கள் மனைவியை நீங்கள் தான் ஆறுதல் படுத்த வேண்டும். கடவுளைத் தரிசித்து விட்டு வந்ததும் உயிர் பிரிந்துள்ளது என்று சொல்லுறீர்கள், குடுத்து வைத்தவ...

அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்., உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜின் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா,

உங்கள் மாமியாரின் பிரிவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அத்தோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!சாந்தி!!சாந்தி!!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

post-7784-064442500 1282784089_thumb.gif

  • தொடங்கியவர்

அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

அதைவிட யாழ்களத்தில் பெரும்பாலோருடன் ஒத்துபோகாத நான் யாழில் இருந்து பல பாடம் கற்றேன்.எனது அரசியல் முகம் என்றுமே மாறாது ஆனால் மனிதனுக்கு அதைவிட பல வித முகங்களும் இருக்க வேண்டும் என எனக்கு உணர்த்தியதே யாழ் தான். ஒரு நாள்கூட ஊர்புதினத்தை விட அடுத்த பக்கத்திற்கு செல்லாத நான் இப்போது நாவுறவரைக்கும் என்னை கொண்டு வந்ததே யாழின் வெற்றி.

வெள்ளிக்கிழமை மாமியின் மரணச் சடங்கு.சகோதரர்கள் அங்கு போனதால் மனைவி ஓரளவிற்கு ஆறுதல் அடைந்துள்ளார்.

மீண்டும் யாழுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

அர்ஜுன் ..உங்கள் மாமியாரின் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

சிலருக்கு மட்டும் தான் தாய் மண்ணில் உயிரைவிடும் பாக்கியம் கிடைக்கும். அது உங்கள் மாமிக்கு கிடைச்சிருக்கு.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் தாயார் ஞாயிற்றுக்கிழமை கோவில் தேருக்கு போட்டுவந்து உணவு உண்ட கையுடன் அப்படியே மாரடைப்பில் எனது மனைவியின் கைகளில் சாய்ந்துவிட்டார்.யாழ் வைத்தியநிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றும் அவர்களின் பலத்த முதலுதவியாலும் கூட உதவமுடியவில்லை.எனது ந்ண்பரொருவர் யாழ் வைத்தியசாலையில் டொகடராக இருக்கின்றார் நன்றாக உதவிசெய்தாராம்.இருந்தும் தான் கூட்டிபோன தனது தாயாருக்கு இந்த நிலை வந்ததையிட்டு மிகவும் உடைந்து போய் போன் எடுக்கும் நேரமெல்லாம் ஒரே அழுகை.ஜேர்மனில் இருந்து ஒருவரும் கனடாவில் இருந்து இரு சகோதரர்களும் இன்றுதான் புறப்பட்டார்கள்.

ஏன் பிரிவென்று தலைப்புப் போட்டிங்க.

இறுதியில்.. உங்க மாமியாரை நிரந்தரமா பிரிய வேண்டியதாப் போச்சே. ஆழ்ந்த அனுதாபங்கள். :lol:

அதேன் என் மாமியார் இறந்திட்டாங்கன்று சொல்லாம.. மனைவியின் தாயார் என்று சொல்லுறீங்க. அவர் மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்போ இல்ல பாசமோ....???! அவரும் உங்க அம்மா போலத் தானே..! :):wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் ..உங்கள் மாமியாரின் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

நல்லதொரு கேள்வி நெடுக்ஸ்.எனது குடுப்மபத்தில் எவருக்கும் உறவு முறை சொல்லி அழைக்கும் பழக்கமில்லை.மனைவியின் குடும்பம் முழுக்க முறை சொல்லித்தான் அழைபார்கள்.நாங்கள் இன்னாரின் தாயோ , தகப்பனோ என்றுதான் அழைப்போம்.

இன்று பொழுதுபோகவில்லை பேஸ்மன்ட்டிற்குள்ளிருந்த பழைய அல்பங்களை கொண்டுவந்து புரட்டிப் பார்த்தேன்.பழைய நினைவுகளை மீட்டுவதில் தான் எத்தனை சுகம்.எமது வாழ்க்கை என்பது இன்னொருவரால் எழுதமுடியாதது நாமே அதன் நாயகர்கள்.ஒவ்வொரு படங்களையும் பார்க்க நானா இப்படி இருந்திருக்கின்றேன் என ஒரு வியப்பு..வீடியோ இன்னுமொரு மீடியம் ஆனல் புகைபடம் பார்க்கும் சந்தோசம் எதிலும் வரமாட்டாது.

லண்டனில் நடந்த எனது கலியாணவீட்டில் இப்போது பேர் அடிபடுக் கொண்டிருக்கும் அரைவாசிப் பேர்கள் நிற்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.