Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2010 15:50

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது.

ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ்ப்பாணம் செல்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற உரிய அலுவலகத்துக்குச்சென்றனர். ஆனால்அந்நடைமுறை நீக்கப்பட்டு விட்டது என அங்கு தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை வந்து அடைந்த அவர்கள் வடமராட்சி- கற்கோவளத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றுக்கு சென்று தங்கி இருந்தனர்.

இவர்களை மோப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டினர். கடவுச்சீட்டைத் தரக் கோரினர். மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக்களையும் பறித்தெடுத்தனர்.

தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றனர்.தொலைபேசியில் மதியம் தொடர்பு கொண்டபோது ஐவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்களுக்குள் 50 இலட்சம் தந்து விட்டு கடவுச் சீட்டைப் பெறக் கோரினர்.தவறினால் கொல்லப்படுவர் என்றும் மிரட்டினர்.அவர்கள் கொடுத்த தவணை நேற்றுடன் முடிந்து விட்டது.

இந்நிலையில் இக்குடும்பத்தினர் கற்கோவளம் பொலிஸ் நிலையத்தில் கப்பம் கோரல், கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கினர்.பின் ஏற்றனர். குடும்பத் தலைவர் அத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மிரட்டல் பேர்வழிகளுடன் பேசினார்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றமை தெரியும் என்றும் முறைப்பாட்டை வாபஸ் பெற்று விட்டு வந்து விட வேண்டும் என்றும் பணத்தைத் தரா விட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்டல் பேர்வழி ஒருவர் கூறி இருக்கின்றார்.

பொலிஸார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர் மரண அவஸ்தையில் அந்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

tamilcnn.com

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு என்ன செய்யனும் என்றீங்க... லண்டனில் தீக்குளிக்கனும் என்றீங்களா..!

போறவை பட்டு அனுபவிக்கட்டும். போராட்டத்தை மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி போறவை போய் இப்படி தான் கஸ்டப்படனும்.. அப்பதான் இவைக்கு விளங்கும். தாங்கள் பொய் சொல்லி அடித்த அசைலத்தின் உண்மைப் பெறுமதி. எவனோ போராட எவனோ அசைலம் அடிச்சதுதானே கண்ட மிச்சம்..!

இதோட நிற்காமல்.. பிரித்தானிய அரசிக்கு ஈமெயில் போடனும்.. சிறீலங்கா போய் வரும் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்துப் பெற்று இங்கிலாந்து பிரஜா உரிமை பெற்றவர்களின் பிரஜா உரிமையை ரத்துச் செய்து அவர்களை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று.

அப்பதான் இந்த அகதி அந்தஸ்தில்.. பந்தா காட்ட ஊருக்குப் போகும் கும்பல்கள் திருந்தும்..!

Edited by nedukkalapoovan

சிங்கள பயங்கரவாதிகளின், இந்திய பயங்கரவாதிகளின், இவர்களின் கைக்கூலிகளாக யாழில் இயங்கும் டக்லஸ் கும்பல், சித்தார்த்தன் கும்பல், பத்மநாபா அணி கும்பல், வரதர் அணி கும்பல், கருணா அணி கும்பல்களின் முகத்திரைகளை புலம்பெயர் மக்கள் கிழிக்கும் வரை இந்த பிரச்சினைகள் தொடரும்.

தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடிக்க முடியாத சிங்கள போலிஸ் பயங்கரவாதிகளின், அராஜக கும்பல்களின் முகத்திரைகளை சர்வதேசத்தில் அம்பலப்படுத்த சகல வாய்ப்புகள் இருந்தும், வாளாவிருப்பவர்கள் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்.

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2010 15:50

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது.

ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ்ப்பாணம் செல்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற உரிய அலுவலகத்துக்குச்சென்றனர். ஆனால்அந்நடைமுறை நீக்கப்பட்டு விட்டது என அங்கு தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை வந்து அடைந்த அவர்கள் வடமராட்சி- கற்கோவளத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றுக்கு சென்று தங்கி இருந்தனர்.

இவர்களை மோப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டினர். கடவுச்சீட்டைத் தரக் கோரினர். மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக்களையும் பறித்தெடுத்தனர்.

தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றனர்.தொலைபேசியில் மதியம் தொடர்பு கொண்டபோது ஐவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்களுக்குள் 50 இலட்சம் தந்து விட்டு கடவுச் சீட்டைப் பெறக் கோரினர்.தவறினால் கொல்லப்படுவர் என்றும் மிரட்டினர்.அவர்கள் கொடுத்த தவணை நேற்றுடன் முடிந்து விட்டது.

இந்நிலையில் இக்குடும்பத்தினர் கற்கோவளம் பொலிஸ் நிலையத்தில் கப்பம் கோரல், கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கினர்.பின் ஏற்றனர். குடும்பத் தலைவர் அத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மிரட்டல் பேர்வழிகளுடன் பேசினார்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றமை தெரியும் என்றும் முறைப்பாட்டை வாபஸ் பெற்று விட்டு வந்து விட வேண்டும் என்றும் பணத்தைத் தரா விட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்டல் பேர்வழி ஒருவர் கூறி இருக்கின்றார்.

பொலிஸார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர் மரண அவஸ்தையில் அந்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

tamilcnn.com

ஏன் பாஸ்போட்டை மாத்திரம்கொண்டு போனவன், ஆட்களையும் கொண்டு போய் இருக்கனும்.

அகதி வாழ்க்கை இப்ப சிரிலங்காவுக்கு ஆடம்பர வாழ்க்கை. யாருடைய அப்பாவிகளின் இரத்தத்தில் எங்களுக்கு வந்த வாழ்வு.

அண்மையில் ஒரு நகர வியாபார ஸ்தலத்தில் ஒரு பெரியவரை கண்டு கதைத்துக் கொண்டு இருந்தேன், பத்து நிமிடங்கள் கூட இருக்காது.... அதற்குள் ஐந்து ஆறு தமிழ் சோடிகள் கை கோர்த்துக் கொண்டு நடமாடியதை கவனித்த அந்த பெரியவர் சொன்னார், 'அவன் தம்பி பிரபாகரனின் புண்ணியத்தில் இஞ்ச வந்திறங்கின சனம் கைகோர்த்துக் கொண்டு ஜாலியாத் திரிரியுது' என்று. அந்த நேரம் சிரித்தாலும், நினைத்துப் பார்க்கையில் அது தான் மறுக்க முடியாத உண்மை என்று புரிந்த்தது.

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்,துப்பாக்கி முனையில் பாஸ்போட் பறிமுதல்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2010 15:50

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது.

ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ்ப்பாணம் செல்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற உரிய அலுவலகத்துக்குச்சென்றனர். ஆனால்அந்நடைமுறை நீக்கப்பட்டு விட்டது என அங்கு தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை வந்து அடைந்த அவர்கள் வடமராட்சி- கற்கோவளத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றுக்கு சென்று தங்கி இருந்தனர்.

இவர்களை மோப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டினர். கடவுச்சீட்டைத் தரக் கோரினர். மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக்களையும் பறித்தெடுத்தனர்.

தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றனர்.தொலைபேசியில் மதியம் தொடர்பு கொண்டபோது ஐவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்களுக்குள் 50 இலட்சம் தந்து விட்டு கடவுச் சீட்டைப் பெறக் கோரினர்.தவறினால் கொல்லப்படுவர் என்றும் மிரட்டினர்.அவர்கள் கொடுத்த தவணை நேற்றுடன் முடிந்து விட்டது.

இந்நிலையில் இக்குடும்பத்தினர் கற்கோவளம் பொலிஸ் நிலையத்தில் கப்பம் கோரல், கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கினர்.பின் ஏற்றனர். குடும்பத் தலைவர் அத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மிரட்டல் பேர்வழிகளுடன் பேசினார்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றமை தெரியும் என்றும் முறைப்பாட்டை வாபஸ் பெற்று விட்டு வந்து விட வேண்டும் என்றும் பணத்தைத் தரா விட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்டல் பேர்வழி ஒருவர் கூறி இருக்கின்றார்.

பொலிஸார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர் மரண அவஸ்தையில் அந்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

tamilcnn.com

எங்கப்பா அது பயணக் கட்டுரை எழுதின விடிவெள்ளி? வந்து உடன ஏதாவது எழுதவும், இல்லாட்டி ஏஜென்சி பிசினஸ் படுத்துடும்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுகாலபோவானின் கருத்துக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

உண்மைதான். சிறீலங்கா அரச பயங்கரவாத அச்சுறுத்தலை காரணம் காட்டி வதிவிட உரிமை பெற்றவர்கள் சிறீலங்கா சுற்றுப்பயணம் செய்வார்களாயிருந்தால் அவர்களது வதிவிட உரிமை பறிக்கப்பட வேண்டுமென சர்வதேசத்தி்டம் கோர வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரைவிட்டு வந்தாப்பிறகு இன்னுமொருக்காலும் :rolleyes: அதுவும் பிள்ளையளையாவது ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகேல்லையோ :unsure::lol::D எண்டு..

கோயில்குளத்துக்கு போற இடத்திலை கூட நக்கலாய் அதுவும் வாயையும் கண்ணையும் ஒருமாதிரி செருகிவைச்சுக்கொண்டு ஒருசிலதுகள் கேள்வி கேக்குதுகள் :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டுத்தான் அனுபவிக்கனும் எண்டால் என்ன செய்யிறது. அனுபவி

இதற்கு என்ன செய்யனும் என்றீங்க... லண்டனில் தீக்குளிக்கனும் என்றீங்களா..!

போறவை பட்டு அனுபவிக்கட்டும். போராட்டத்தை மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி போறவை போய் இப்படி தான் கஸ்டப்படனும்.. அப்பதான் இவைக்கு விளங்கும். தாங்கள் பொய் சொல்லி அடித்த அசைலத்தின் உண்மைப் பெறுமதி. எவனோ போராட எவனோ அசைலம் அடிச்சதுதானே கண்ட மிச்சம்..!

இதோட நிற்காமல்.. பிரித்தானிய அரசிக்கு ஈமெயில் போடனும்.. சிறீலங்கா போய் வரும் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்துப் பெற்று இங்கிலாந்து பிரஜா உரிமை பெற்றவர்களின் பிரஜா உரிமையை ரத்துச் செய்து அவர்களை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று.

அப்பதான் இந்த அகதி அந்தஸ்தில்.. பந்தா காட்ட ஊருக்குப் போகும் கும்பல்கள் திருந்தும்..!

இனி வரும் காலங்களில் தாயகத்தில் இருந்து இன்னல்ப்பட்டு தமிழர் யாரும் அகதி அந்தஸ்து கோருவதுக்கு தடையாக இருப்பவர்களும் இந்த ஊருக்கு போய் உல்லாசமாக களிப்பவர்களே... அதாவது துன்பத்தில் இருந்து மக்கள் வெளியேற தடையாக இருக்கும் புலம்பெயந்தவர்கள் எண்டதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் எண்டு கேட்டுக்கொள்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

என்சார்பிலும் நெடுக்கருக்கு ஒரு பச்சை..! நேர்மைத்தன்மையற்றவர்களின் செயற்பாடுகளால் உண்மையில் அகதித்தஞ்சம் கோருபவர்களுக்கும் பிரச்சினை..!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன் நெடுகஸ்க்கு.

நெடுக்காலைபோவான் சொல்லுவதையே Torontoவின் பிரதான பத்திரிக்கை ஒன்று சொல்லுது!

Refugees go home for holidays

OTTAWA - A secret government survey reveals the majority of successful Tamil refugees travel back to Sri Lanka, raising questions about the legitimacy of their refugee status.

http://www.torontosun.com/news/canada/2010/08/21/15098766.html

அகதி அந்தஸ்து பெற்று வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கை வருபவர்கள் திரும்பி அந்த நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படாது என்றால் நல்லது.

நான் நெடுகாலபோவானின் கருத்துக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

நானும்... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி விலங்கத்தை விலைக்கு வாங்குறது மாதிரி ஒண்டை எழுதிப்போட்டு என்னுடைய விடுமுறையை முடித்து வைப்பம்...

அவர்கள் குடும்பமாக தங்களது உறவுகளை பார்க்க போனார்கள், 15 வருடம்க்களுக்கு பிறகு போகிறார்கள். எனக்கு தெரியாது அந்த பிள்ளைகளின் வயது, ஒரு கதைக்கு கடைசிபிள்ளைக்கு ஒரு 20 வயது என்று வைத்தால், அது அங்கு போவாதால் அதற்கு தனது ஊர் உறவினர் பற்றிய உணர்வு கூடுமே அன்றி குறையாது. மற்றது இன்று அவர்கள் அவலத்தில் உள்ளார்கள், அந்த நிலையில் அவர்களுக்கு உங்களால் ஏதும் செய்ய முடியும் என்றால் செய்வதை விடுத்து, அவர்கள் செய்தது பிழை அதற்க்கு இதுதான் சரியான தண்டனை என்பது போல் பேசுவது சரியா என பார்க்கவும். மற்றது இது ஒரு மலினமான தந்திரோபாயம் இப்படி நடக்குது என்றபடியால் போகாதிர்கள் என்பது. 15 வருடம் முன் புலம் பெயர்வர்களுக்கு தாயகத்தில் செய்வதற்கென்று நிறைய கடமைகள் உண்டு, அப்படியானவர்கள் போதில் தவறில்லை, ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை கூடிய மட்டும் அவர்கள்தான் பொறுப்போடுத்து செல்லவேண்டும். ஏனெனில் இங்கே அப்படியானவர்களை காப்பதர்ற்கு செய்யக்கூடியது பெரியளவில் ஏதும் இல்லை, அதற்கு மேல் எதாவது செய்ய போனால் அது இங்கே அகதிகோரிக்கையை முன்வைத்திருபவர்களுக்கும், பொதுவாகவே எங்களது பிரச்சனைகளை சர்வதேசத்தில் எடுத்து சொல்லுவதில் பல சிக்கல்கள் ஏற்படும். மற்றது இவர்கள் பிரித்தானிய பிரஜைகள் என்கின்றபோது இவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றவர்களில் பார்க்க பரவாயில்லை. அவர்கள் தாங்களாகவே, இலங்கையில் உள்ள பிரித்தானிய துரதகத்துடன் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை -பெறமுடிந்தால் பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா அது பயணக் கட்டுரை எழுதின விடிவெள்ளி? வந்து உடன ஏதாவது எழுதவும், இல்லாட்டி ஏஜென்சி பிசினஸ் படுத்துடும்! :wub:

அவையின்ர ஊரிலே இப்போது விடிந்துவிட்டதுபோல்.............

இனி இங்கே வராயினம்!

  • கருத்துக்கள உறவுகள்

சரி விலங்கத்தை விலைக்கு வாங்குறது மாதிரி ஒண்டை எழுதிப்போட்டு என்னுடைய விடுமுறையை முடித்து வைப்பம்...

அவர்கள் குடும்பமாக தங்களது உறவுகளை பார்க்க போனார்கள், 15 வருடம்க்களுக்கு பிறகு போகிறார்கள். எனக்கு தெரியாது அந்த பிள்ளைகளின் வயது, ஒரு கதைக்கு கடைசிபிள்ளைக்கு ஒரு 20 வயது என்று வைத்தால், அது அங்கு போவாதால் அதற்கு தனது ஊர் உறவினர் பற்றிய உணர்வு கூடுமே அன்றி குறையாது. மற்றது இன்று அவர்கள் அவலத்தில் உள்ளார்கள், அந்த நிலையில் அவர்களுக்கு உங்களால் ஏதும் செய்ய முடியும் என்றால் செய்வதை விடுத்து, அவர்கள் செய்தது பிழை அதற்க்கு இதுதான் சரியான தண்டனை என்பது போல் பேசுவது சரியா என பார்க்கவும். மற்றது இது ஒரு மலினமான தந்திரோபாயம் இப்படி நடக்குது என்றபடியால் போகாதிர்கள் என்பது. 15 வருடம் முன் புலம் பெயர்வர்களுக்கு தாயகத்தில் செய்வதற்கென்று நிறைய கடமைகள் உண்டு, அப்படியானவர்கள் போதில் தவறில்லை, ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை கூடிய மட்டும் அவர்கள்தான் பொறுப்போடுத்து செல்லவேண்டும். ஏனெனில் இங்கே அப்படியானவர்களை காப்பதர்ற்கு செய்யக்கூடியது பெரியளவில் ஏதும் இல்லை, அதற்கு மேல் எதாவது செய்ய போனால் அது இங்கே அகதிகோரிக்கையை முன்வைத்திருபவர்களுக்கும், பொதுவாகவே எங்களது பிரச்சனைகளை சர்வதேசத்தில் எடுத்து சொல்லுவதில் பல சிக்கல்கள் ஏற்படும். மற்றது இவர்கள் பிரித்தானிய பிரஜைகள் என்கின்றபோது இவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றவர்களில் பார்க்க பரவாயில்லை. அவர்கள் தாங்களாகவே, இலங்கையில் உள்ள பிரித்தானிய துரதகத்துடன் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை -பெறமுடிந்தால் பெறலாம்.

எரிமலை..

எங்களின் நியாயங்களின்படி நீங்கள் சொல்வது சரிதான். பல ஆண்டுகள் நாட்டுப்பக்கம் போகாமல் இருப்பவர்களுக்கு ஒருதடவை சென்று பார்த்துவிட்டு வரவேண்டும் என்கிற உந்தல் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இத்தகைய செயற்பாடுகள் அகதி அந்தஸ்தினைக் கொடுத்தவர்களை ஏமாற்றுவது போல் ஆகிவிடுகிறது என்பதும் உண்மைதானே... இத்தகைய செயல்களால் உண்மையிலேயே அங்கு வாழமுடியாமல் இங்கே வருபவர்களுக்கும் சிக்கலாகிவிடுகிறது..

அகதி அந்தஸ்து கோரியவர்கள் தாயகத்துக்குச் சென்று பாதுகாப்பாகத் திரும்பலாம் என்றால் அவர்கள் இனிமேலும் இங்கு இருக்க வேண்டிய தேவை கோட்பாட்டுரீதியில் இல்லை.

ஒருவர் தான் திவாலாகிவிட்டதாகப் பதிவுசெய்துவிட்டு அதேசமயத்தில் வீடுவாகனங்களை வாங்கி ஓஹோவென்று இருக்க முற்படுவது எவ்வாறு தர்க்கரீதியில் பிழையானதோ அதே போன்றதே இந்த அகதிகளின் தாயகவலங்களும்..! :wub:

யாழ்ப்பாணத்துக்கு வரலாமா? - வெளிநாட்டிலிருந்து குவியும் தொலைபேசி அழைப்புக்கள்

[ வலம்புரி ] - [ Aug 28, 2010 04:00 GMT ]

யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளுக்குத் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெறு வதாகவும் தெரியவருகின்றது.விமான ரிக்கெட் பெறப்பட்டு விட்டது. பயண ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அறிகிறோம். நாம் அங்கு வரலாமா? என்ற கேள்விக் கணைகளையே வெளிநாட்டிலி ருந்து கேட்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு வந் துள்ள வெளிநாட்டு உறவுகள் அச்சம் காரண மாக உடனடியாகத் திரும்புவதற்கு எண்ணி யுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து வந்து வடமராட்சியில் தங்கியிருந்த ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் மற்றும் கொக்குவில் பகுதியில் தங்கியிருந்தவருக்கு மிரட்டல் விடுத்த சம்ப வங்கள் போன்றனவே வெளிநாட்டவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் லண்டனிலிருந்து வந்து வட மராட்சியில் தங்கியிருந்த ஒருவர் கப்பம் கேட் டுக் கடந்த 25 ஆம் திகதி மிரட்டப்பட்டதுடன் அவரின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் என்பன மிரட்டல்காரர் களால் பறித்துச் செல்லப்பட்டன.

தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவி னர் என அறிமுகப்படுத்திய சிலரே இச் சம்ப வத்தில் ஈடுபட்டதாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. இதேவேளை நேற்று முன்தினம் இரவு இவ்வாறான மிரட்டல் சம்பவம் ஒன்று கொக் குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வு நேற்று நடைபெறவிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவ்வீட்டுக்குச் சென்ற சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன் கப்பமும் கோரியுள்ளனர்.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் மக்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தும் பணம் பறிக்கும் நிகழ்வு கள் இடம்பெற்று வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த எவரும் முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

'இசைக்கலைஞன்'

எரிமலை..

எங்களின் நியாயங்களின்படி நீங்கள் சொல்வது சரிதான். பல ஆண்டுகள் நாட்டுப்பக்கம் போகாமல் இருப்பவர்களுக்கு ஒருதடவை சென்று பார்த்துவிட்டு வரவேண்டும் என்கிற உந்தல் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இத்தகைய செயற்பாடுகள் அகதி அந்தஸ்தினைக் கொடுத்தவர்களை ஏமாற்றுவது போல் ஆகிவிடுகிறது என்பதும் உண்மைதானே... இத்தகைய செயல்களால் உண்மையிலேயே அங்கு வாழமுடியாமல் இங்கே வருபவர்களுக்கும் சிக்கலாகிவிடுகிறது..

அகதி அந்தஸ்து கோரியவர்கள் தாயகத்துக்குச் சென்று பாதுகாப்பாகத் திரும்பலாம் என்றால் அவர்கள் இனிமேலும் இங்கு இருக்க வேண்டிய தேவை கோட்பாட்டுரீதியில் இல்லை.

ஒருவர் தான் திவாலாகிவிட்டதாகப் பதிவுசெய்துவிட்டு அதேசமயத்தில் வீடுவாகனங்களை வாங்கி ஓஹோவென்று இருக்க முற்படுவது எவ்வாறு தர்க்கரீதியில் பிழையானதோ அதே போன்றதே இந்த அகதிகளின் தாயகவலங்களும்..!

இசைக்கலைஞன் அவர்களே 1990 ல் இருந்து 2001ம் ஆண்டுவரை உலகமெங்கும் அகதி அந்தஸ்த்து கோரிய அனைத்து தமிழர்கழும் தங்களது அகதி விண்ணப்பத்தில் இலங்கையரசாலும் அதே நேரம் புலிகளாலும் தங்களின் உயிரிற்கு ஆபத்து என்றுதான் எழுதியிருக்கிறார்கள் இதுபற்றி நான் விவாதித்து பலரிடம் முரண்பட்டிருக்கிறேன் காரணம் இங்கு இத்தாலியில் அந்த பிரச்சனையில்லை இங்கு வேலைக்கு வந்தவர்கள்தான் அதிகம் ஆனால் மற்றைய நாடுகளில் ஊதாரணம் இங்கிலாந்தில் இலங்யரசிற்கெதிரான ஊர்வலத்தில் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என்று தமிழ் ஊடகங்கள் கணக்கு சொல்லும். ஆனால் ஒரு முப்பதாயிரம் பேர் கலந்து கொண்டிருந்தால் அதில் அகதி அந்தஸ்த்து வாங்கியவர்களில் 80 வீதமானவர்கள் இவர்கள் பிரபாகன் எங்கள் தலைவன் தமிழீழமே எங்கள் நாடு என்று கத்துகிறார்கள். புலியால் உயிற்கு ஆபத்து என்றவர்கள் எப்படி பிரபாகரன் எங்கள் தலைவன் என்று கத்துவான் என்று யோசிக்கத் தெரியாத அளவிற்கு மடையரா இங்கிலாந்து காவல்துறை இதனால்தன் எங்கள் போராட்டமே வெளிநாடுகளில் எடுபடவில்லை சுய நலம்..சுயநலம்.

போறவை பட்டு அனுபவிக்கட்டும். போராட்டத்தை மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி போறவை போய் இப்படி தான் கஸ்டப்படனும்.. அப்பதான் இவைக்கு விளங்கும். தாங்கள் பொய் சொல்லி அடித்த அசைலத்தின் உண்மைப் பெறுமதி. அப்பதான் இந்த அகதி அந்தஸ்தில்.. பந்தா காட்ட ஊருக்குப் போகும் கும்பல்கள் திருந்தும்..!

ஊருக்கு செல்பவர்கள் எல்லோரும் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் என்று எப்படி உங்களுக்கு தெரியும்? செய்தியில் குறிப்பிட்ட குடும்பம் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் என்று எங்காவது கூறப்பட்டு உள்ளதா? மேலும், உங்கள் கருத்துப்படி ஊரில் உள்ளவர்கள் போராட்டத்தை, மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திக்கொண்டு உள்ளார்கள்? :wub:

எவனோ போராட எவனோ அசைலம் அடிச்சதுதானே கண்ட மிச்சம்..!

போராடுபவர்களே அசைலம் அடிக்கமுடியும் என்று கூறுகின்றீர்கள்? :(

யாழ் என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு தொடரென்றாகிவிட்டது.முகமில்லாமல் கருத்தை பதிவு செய்துவிட்டு அடுத்த நிமிடமெ அதற்கு சம்பந்தமில்லாமல் தமது நடவடிக்கைகைகளை தொடருவதென்பதுது வாடிக்கையாகி விட்டது.இலங்கைகான பயணமும் அப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான ஒப்பந்தக் காலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் தாயகப் பகுதிகளுக்குச் சென்று வந்தபோது அகதித் தஞ்சம் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. தற்போது தூக்கிப் பிடிப்பதற்கு காரணம் மக்கள் தங்கள் சொல்கேட்டு நடக்கவில்லை என்பதாகத்தான் இருக்கும். இதனால் அங்கு நடக்கும் ஒன்றிரண்டு பிரச்சினைகள் பூச்சாண்டி காட்டப் பயன்படுகின்றன. எனினும் நல்லூர் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ளும் அடியார் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தவர்களும் இருப்பர் என்பதை நாங்கள் விரைவில் அறிந்துகொள்வோம்.

பாஸ்போர்ட் காணாமால் போனால் அசெளகரியமாகத்தான் இருக்கும். எனினும் பிரித்தானியத் தூதரகத்தை அணுகினால் விரைவில் பிரித்தானியா வந்து சேர்ந்துவிடலாம்.

தெரிந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் இலங்கை சென்று வந்தார் ... அவர் வந்தவுடன் துரோகி, கடைத்தெடுத்த கேவலமான செயல், ... எல்லா வர்ணனையையும் எல்லோரும் செய்தார்கள்!! .. ஆனால் அவனை சிறு வயதில் தூக்கி வளர்த்த அவனது மாமனாரின் குடும்பம், இன்று எல்லாவற்றையும் இழந்து வன்னியில் நடுத்தெருவில்!!! இங்கிருந்து சென்றவரோ, அவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு, இன்னொரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளையை தத்தெடுத்துவிட்டு, இங்கு வந்து அப்பிள்ளையை இங்கு கொண்டு வருவதற்கு முயன்று வருகிறார், சில சமயம் மீண்டும் செல்லவும் வேண்டும் ... நான், அவருக்கு சொன்னது ... இங்கு குரைப்பார்கள், ஊழையிடுவார்கள், குதறுவார்கள், ஆனால் நீ செய்ததை எவரும் செய்ய முன்வரார்!!!!! ...

இங்கு வசனம் எழுதும் யாராவதாவது சொல்லுங்கள், இவர் சென்றது தவறென்று???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.