Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள்

Featured Replies

இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள்.

1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி)

2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை)

3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை)

4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கருத்து சொல்ல கூடியவர். (நீதிபதி - சட்டம் ஒரு இருட்டறை)

5 . இசைகலைஞன் - இரண்டுவரியில் திருவள்ளுவர் மாதிரி நச் என்று பதிலளிக்க கூடியவர்.( யாழ் களத்தின் இசை அமைப்பாளர் - எங்க ஊரு பாட்டுக்காரன்)

6 . நிழலி - தன்னைபற்றி சொனாலும் வெட்டாத மட்டறுத்துனர். வெட்கம் என்ன விலை என்று கேட்கும் ஒரு கருத்தாளர். (வெட்டுக்கிளி - நான் அடிமை இல்லை)

7 . நுணாவிலான் - எல்லாருக்கும் மனசு நோகாமல் கருத்து எழுதவல்லவர். (பண்பாளர் - எங்க வீட்டு பிள்ளை)

8 . குமாரசாமி - ஒரேவரியில் தலையில் ஆணியடிக்கும் கருத்தாளர்.(ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி - பாட்ஷா)

9 . வாத்தியார் - ஊருக்கு இலவச உபதேசம் வழங்கும் ஒரு நிஜ வாத்தியார்.(பிரம்பு - வாத்தியார் வந்தார்)

10 . அர்ஜுன் - பட்டறிவை வைத்து கருத்து எழுதுபவர். அதை விளங்கி கொள்ள பத்து வருஷம் செல்லும். (நடிகன் - நான் மகான் அல்ல)

  • Replies 99
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி என்னை வைத்து காமெடி,கீமடி பண்ணவில்லைத் தானே...எனக்குப் பிடித்த முதல் பத்து யாழ் கள எழுத்தாளர்கள் என்டால்;

1)கலைஞன்‍ இவர் தனக்கு எது நியாயம் எனப்படுதோ அதை எழுதுபவர்...பக்கச் சார்பு அற்றவர்

2)ச‌காரா அக்கா இவரின் பெண்ணியம் தொட‌ர்பான கருத்துகள் எனக்குப் பிடிக்கும்.

3)குறுக்காலபோவான் அநேகமான இவரின் கருத்துகள் உண்மையை சொல்லும்.

4)குமாரசாமி அண்ணா நகைச்சுவையாய் எழுதுவதில் மன்னன்.

5)நெடுக்ஸ் பெண்கள் தொட‌ர்பான தம்பியின் கருத்துகளிலும் வேறு சில கருத்துகளிலும் எனக்கு உட‌ன்பாடு இல்லா விட்டாலும் இவர‌து தைரிய‌மான கருத்து எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும்.

6)நெல்லையன் இவரும் துணிந்து தனக்கு சரியெனப்பட்டதை எழுதுபவர்.

7)நிழலி ஒரு கருத்தை வைத்தால் அதை கடைசி வரைக்கும் மாற்றாதவர்.

8)இ.கலைஞனின் கருத்துகளை வாசிக்கப் பிடிக்கும் ஆனாலும் சில நேர‌ம் ஒன்டை கதைத்து விட்டு பிறகு மாற்றி கதைக்கும் போது கடுப்பு வரும்.

9)தமிழ்சிறியின் அநேகமான கருத்துகளில் எனக்கு உட‌ன்பாடு உண்டு.

10)சுஜி இவர் யாழுக்கு வந்த புதுசில் நிறைய கதைகள் எழுதி இருக்கார் இவர் கதை எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும் ஆனால் ஏனோ தெரியவில்லை தற்போது கதை எழுதுவதை நிற்பாட்டி விட்டார்.

இவர்களை விட‌ யாழில் எழுதும் அநேகமானவர்களைப் பிடிக்கும் நேர‌ம் கிடைக்கும் போது மீதி எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தனி நபர் தாக்குதலாக மாறாது பார்த்துக்கொண்டால் சரி..........???

6 . நிழலி - ....வெட்கம் என்ன விலை என்று கேட்கும் ஒரு கருத்தாளர். (வெட்டுக்கிளி - நான் அடிமை இல்லை)

அடடா,,, ஒரு சின்னப் பெட்டைக்கும் என்னைப் பற்றித் தெரிந்து விட்டது.............. நிழலி ரூட்டை மாத்து

எனக்குப் பிடித்த கருத்தாளர்கள் என்று குறிப்பாக இல்லை. யார் நல்லாக எழுதினாலும் பச்சை குத்திவிட்டு அங்கால போவன்..ஆனால் பின்வருபவர்கள் எழுதினால் உடனடியாக முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பேன்

1. சுகன்

2. இன்னுமொருவன்

3. குறுக்கால போவான்

4. கிருபன்

5, பொயட் (வ, ஐ.ச)

6. நம்மட இளந்தாரி குமாரசாமி

இவர்களை விட

நுணாவின் இசை ரசனையிலும், தமிழ் சிறியின் நகைச்சுவையான பதில்கலும், சித்தனின் குசும்பான பதில்களும் அரசியல் தாண்டிய கலா ரசனைக்குரிய விடயங்கள்.

முரளி, வல்வை சாகரா, தமிழச்சி போன்றோர் சிறந்த நண்பர்கள் என்பதால் அவர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை

Edited by நிழலி

நமது கருத்துக்கள் தங்களுக்கு பயனுள்ளவையாக காணப்பட்டால் மிக்க மகிழ்ச்சி சுஜி, ரதி.

எனக்கு இங்கு பண்பாக கருத்தாடல் செய்கின்ற அனைவரது கருத்துக்களும் பிடிக்கும். நான் எவற்றை முதலில் பார்க்கின்றேன், எவற்றுக்கு பதில் அளிக்கின்றேன் என்பனவற்றை பலவித காரணிகள் தீர்மானிக்கும்: உ+ம்: எனது உளநிலமை, தனிப்பட்ட அனுபவங்கள், யாழின் களநிலமை, மிகவும் முக்கிய விடயங்கள், தகவல் வழங்கல், அறிவூட்டல், சுவாரசியம், நகைச்சுவை இன்னோரன்ன...

கருத்தாளர்களிற்கு உளமார மதிப்பளித்தல் என்று பார்த்தால்.. ஓர் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னராவது... என்னுடன் நேரடியாக தொலைபேசி மூலமாக உரையாடியவர்கள், நேரில் சந்தித்தவர்கள், வெறும் முகமூடிகளாக இல்லாது தம்மை யார் என்று அறிமுகம் செய்துகொண்டவர்கள்.. தமது புகைப்படங்களை பிரசுரித்தவர்கள்.. இவர்களிற்கு நமது மரியாதை எப்போதும் உண்டு. இதற்காக அறிமுகம் இல்லாதவர்கள் மீது நமக்கு மதிப்பு இல்லை என்று கூறவில்லை. நட்பை, உறவை வலைத்தளத்திற்கு வெளியிலும் வளர்த்துக்கொண்டவர்கள் மீதான நமது மதிப்பு அதிகம். இதை ஏன் கூறுகின்றேன் என்றால்... இங்கு நாங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கு வெட்டியாக மினக்கடவில்லை. யாழ் களத்தை மாத்திரம் அல்ல.. வலைத்தளத்தை நான் வாழ்க்கையின் ஓர் பகுதியாகவே பார்கின்றேன்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் வந்து ஒருதரும் இத் தலைப்பில் எழுத வரவில்லை?...ஒரு வேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ட பயமோ!...எங்களுக்கு ஒருத்தரை பிடித்திருக்குது என்டால் அவர் தான் யாழில் சிறந்த கருத்தாளார் என்ட அர்த்தம் இல்லை அதே வேளை நாங்கள் எழுதாமல் விட்டவர்கள் எல்லாம் அரை குறை கருத்தாளார்கள் என்ட அர்த்தமும் இல்லை...இது வந்து அவரவர் தங்களுக்கு பிடித்த கருத்தாளார்களைப் பற்றி எழுதும் ஒர் ஆக்கம் இதில் எந்த வித மனஸ்தாபத்திற்கும் இடம் இல்லை.

1)சுகன் இவரின் எழுத்துகள் காத்திரமானவை...உண்மையை அப்பட்டமாய் சொல்பவை.

2)கிருபன் இவரினது கருத்துகளும் அநேகமாக நடு நிலையாய் காணப்படும்.

3)புத்தன் யாழில் இவர் எழுதும் கதைகளை அடிப்பதற்கு ஆளே இல்லை.

4)இன்னுமொருவன் இவரின் எழுத்துகளை வாசித்து விளங்கிக் கொள்வது கடினம் ஆயினும் எனக்கு இவரது எழுத்துகள் பிடிக்கும்.

5)அர்ஜீன் இவரது சில கருத்துகள் பிடிக்கா விட்டாலும் அநேகமான கருத்துகள் பிடிக்கும்.

6)அபிராம் தற்போது கதை எழுதுபவர்களிலே அபிராமும் நல்லதொரு பாணியைக் கடைப்பிடித்து வருகிறார்... போராளிகள் பற்றிய உண்மைகளை மையமாய்க் கொண்டு எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரிதான்..! ஆனால் எழுத்து என்பதற்கு அப்பால் எனக்கு நட்பு முக்கியம். :D அதனால் எனக்கு வரிசைப்படுத்தத் தெரியவில்லை (விருப்பமில்லை?? :rolleyes: )..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் யாழில் வந்து ஒருதரும் இத் தலைப்பில் எழுத வரவில்லை?...ஒரு வேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ட பயமோ!.

வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தாலும் கூப்பிட்டு அடி வாங்கித் தருகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். :rolleyes:

எதையும் யோசித்து விட்டுத் தான் எழுத வேண்டும்

விதி யாரை விட்டது. :)

வாத்தியார்

********

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, ரதி உங்கள் இருவரின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். மனதிற்குப் பட்டவற்றை வெளிப்படையாகச் சொல்லி அதன்பால் நிறையவே காயங்களைப் பட்டுக் கொண்டுள்ளேன். சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன். மிச்சமாக இருப்பது யாழ்க்களத்தில் எழுதும் கருத்தாள நண்பர்களே. முகங்கள் அறியாவிட்டாலும் பந்தா பண்ணுதல், வால் பிடித்தல் அற்ற நேர்த்தியான பல விருட்சங்கள் இங்கு புனை பெயர்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளும், கேள்வி கேட்கும் சிந்தனையும், பாங்கும் அவற்றை உணர்த்துகின்றன. இவர்களில் எவர் முதல் பத்தில் நிற்கிறார் என்று சொல்லத் தெரியவில்லை.

சுஜி, ரதி உங்கள் இருவரின் உற்சாகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். மனதிற்குப் பட்டவற்றை வெளிப்படையாகச் சொல்லி அதன்பால் நிறையவே காயங்களைப் பட்டுக் கொண்டுள்ளேன். சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன். மிச்சமாக இருப்பது யாழ்க்களத்தில் எழுதும் கருத்தாள நண்பர்களே. முகங்கள் அறியாவிட்டாலும் பந்தா பண்ணுதல், வால் பிடித்தல் அற்ற நேர்த்தியான பல விருட்சங்கள் இங்கு புனை பெயர்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளும், கேள்வி கேட்கும் சிந்தனையும், பாங்கும் அவற்றை உணர்த்துகின்றன. இவர்களில் எவர் முதல் பத்தில் நிற்கிறார் என்று சொல்லத் தெரியவில்லை.

சாகரா,

கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றன்.. 'பிடித்த 10 பேர்' என்பது 'தகுதியான 10 பேர்' என்று தகுதியின் அடிப்படியில் தெரிவு செய்வதாக அர்த்தம் இல்லைதானே? சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும் சிலருக்கு எல்லாமே பிடிக்கும். யாழில் பல களங்கள் இருந்தாலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள் என்று இல்லைதானே. 10 பேரின் பெயரை போடுவதால் மிச்ச ஆட்களுடன் கோபம் என்றோ அல்லது, அவர்களின் எழுத்துகளை வாசிபதில்லை என்றோ அர்த்தம் இல்லை. மனுசராக பிறந்த எல்லாருக்கும் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றிலும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. ஒருவர் ஏன் தன பெயரை போடவில்லை என்று கோபித்து கொண்டால் அது அவரின் புரிந்துணர்வின் தவறுதானே...

பல ஆங்கில ஊடங்கள், கருத்துக் களங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பட்டியல் வெளிவிடுவர். மிக நகைச்சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தான் எல்லாவற்றுக்கும் 'தொட்டாச் சிணுங்கி' ஆக இருக்கின்றோம். இதில் இருந்து கொஞ்சமாவது மாறிக் கொண்டு போனால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

சாகரா,

கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றன்.. 'பிடித்த 10 பேர்' என்பது 'தகுதியான 10 பேர்' என்று தகுதியின் அடிப்படியில் தெரிவு செய்வதாக அர்த்தம் இல்லைதானே? சிலருக்கு அரசியல் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும் சிலருக்கு எல்லாமே பிடிக்கும். யாழில் பல களங்கள் இருந்தாலும் எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள் என்று இல்லைதானே. 10 பேரின் பெயரை போடுவதால் மிச்ச ஆட்களுடன் கோபம் என்றோ அல்லது, அவர்களின் எழுத்துகளை வாசிபதில்லை என்றோ அர்த்தம் இல்லை. மனுசராக பிறந்த எல்லாருக்கும் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றிலும் இருக்கும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. ஒருவர் ஏன் தன பெயரை போடவில்லை என்று கோபித்து கொண்டால் அது அவரின் புரிந்துணர்வின் தவறுதானே...

பல ஆங்கில ஊடங்கள், கருத்துக் களங்களில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு பட்டியல் வெளிவிடுவர். மிக நகைச்சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தான் எல்லாவற்றுக்கும் 'தொட்டாச் சிணுங்கி' ஆக இருக்கின்றோம். இதில் இருந்து கொஞ்சமாவது மாறிக் கொண்டு போனால் நல்லது

நல்லது நிழலி. :rolleyes:

அப்படியே ஒரு கலாய்ப்புக் கலாய்க்கலாம் என்கிறீர்கள்.

முதலில் பேரீட்சைப் பொறுக்கி வெட்டுக்கிளி ஆகமாட்டேன் என்று சத்தியம் பண்ண வேண்டும் தயாரா? :):D:lol:

அத்துடன் இத்தலைப்பில் எழுதும்படி நம்முடைய பழைய நண்பர் ஆதிவாசிக்குத் தனிமடல் போட்டிருக்கின்றேன் அவர் வந்து வாங்கிக் கட்டினால் நாங்களும் இரசிக்கலாம்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::D

(எனக்கு யாழில உள்ள எல்லாரையும் சமனாகப் பிடிக்கும். அதனால் வரிசைப்படுத்த முடியல்ல..!)

(ஒரு மாதிரி சுழிச்சிட்டட்டா... நிலைமையை..! நான் தான் புத்தனுக்கே பாடம் எடுத்த சுழியன்..! (இதையும் நம்பிடுவாங்களோ... நம்பினால் நம்பட்டும்.. நஸ்ரமா.. இல்லைத் தானே..! ) :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::)

சீச்சீ நம்பிற மாதிரி ஒரு பிலீம் காட்டுறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ நம்பிற மாதிரி ஒரு பிலீம் காட்டுறாங்க

அதுதானே பார்த்தன். நம்மள வரிசைப்படுத்திற அளவுக்கு நாங்க பொண்ணுங்களுக்கு என்ன அவ்வளவு கெடுதலா செய்தோம். உண்மையைத் தானே சொன்னம்..! :rolleyes::)

நம்மவே முடியல்ல... நான் யாழிலையா நிக்கிறன்...???!

நம்மளை இன்னுமா இந்த உலகம் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு...???! :rolleyes::D

மகளிரணி உங்களை தெரிவு செய்து இருக்கிறார்களே அதைத்தான் தாங்க முடியல்ல. :)

Edited by thappili

நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். வேறுபட்ட எழுத்துக்களை ரசிப்பேன். பட்டியலிடும் அளவுக்கு ஞானம் போதாது. எனக்கு புட்டும் நண்டு கறியும் பிடிக்கும். கொத்து ரொட்டியும் பிடிக்கும். இதில் எது சிறந்தது என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது.

எனது ரசனைகள் வெவ்வேறானவை. எல்லோரையும் ஒரே கூடைக்குள் போட்டு தரம் பிரிக்க முடியாதுள்ளது.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

மகளிரணி உங்களை தெரிவு செய்து இருக்கிறார்களே அதைத்தான் தாங்க முடியல்ல. :rolleyes:

இப்படியாவது மகளிரைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கிற நோக்கமாகவும் இருக்கலாம் இல்லையா..!! அதுவும் இல்லாம தலைப்பு நகைச்சுவைக்க அமைந்திருக்கிறதைக் கவனிக்கல்லப் போல நீங்கள்..! :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இப்படியாவது மகளிரைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கிற நோக்கமாகவும் இருக்கலாம் இல்லையா..!! அதுவும் இல்லாம தலைப்பு நகைச்சுவைக்க அமைந்திருக்கிறதைக் கவனிக்கல்லப் போல நீங்கள்..! :lol::rolleyes:

மகளிர் மீதான நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள இவ்வளவு மலிவான நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை நெடுக்கண்ணா.. :) .

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றுதான் நகைச்சுவை பகுதியில் இணைத்தேன்..... :D

பாடசாலையில் மாணவமுதல்வர் போட்டி ஞாபகம் வருகின்றது வகுப்பில் ஒவ்வொருவரையும் ஒருவிதத்தில் பிடிக்கும்.சிலரை உண்மையில் பிடிக்காது.

எனக்கு எப்பவும் லெவல் அடிப்பவர்களை பிடிப்பதில்லை.இயல்பாக இருப்பவர்களை நன்கு பிடிக்கும். எதற்கும் அபிப்பிராயம் ,கருத்து சொல்லாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பவர்களை அறவே பிடிக்காது .

யாழில் இருவிதமானவர்கள் என் மனதில் இருக்கின்றார்கள். அறிவானவர்கள்,உண்மையானவர்கள்(அறிவு குறைந்தாலும் உண்மையாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும்).

1.சாந்தி-எழுத்தைவிட செயலில் காட்டுவதால்.

2.சுகன் -எதற்கும் ஒரு தெளிவான விளக்கம் தருவதனால்,

3,நுணாவிலான் -யாரையும் தட்டி கொடுக்கும் big heart.

4.ரதி -கொஞ்சம் அவசரப்பட்டாலும் நியாயத்திற்காக போராடும் தன்மை

5.நிழலி -எழுத்தின் ஆளுமை

6.கரும்பு. -தனக்கு சரியென பட்டதை ஆணித்தரமாகச் சொல்லுதல்.

7.நெடுக்ஸ் -விஞ்ஞானபூர்வமாக விளக்கம்,பல விடயங்களும் ஆராயும் தன்மை.

8.கிருபன் -ஆக்கபூர்வமான இணைப்புகள் தருபவர்.உண்மையானவர் .

9.இசைக் கலைஞன் -அனைவரையும் அளந்து வைத்திருப்பவர்

10.தமிழ் சிறி - சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்

இடைகிடை கருத்துக்கள் எழுதுவதால் மிக தரமாக இருந்தும் இன்னொமொருவன்,சகாரா,புத்தன்,அபிராம் பொயட் ஆகியோரை நான் கருத்தில் கொள்ளவில்லை.

திரியை தொடக்கியதால் உங்களையும் விட்டுவிட்டேன் யாயினி.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மீதான நன்மதிப்பை வளர்த்துக்கொள்ள இவ்வளவு மலிவான நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை நெடுக்கண்ணா.. :) .

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றுதான் நகைச்சுவை பகுதியில் இணைத்தேன்..... :D

என்ன.. நீங்க.. இதையெல்லாம் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு.. நாங்களும் ஜாலிக்கு.. பகிடிக்குத் தான் சொன்னமாக்கும்..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது நேரமின்மையால் கொஞ்சப் பேர் விடுபட்டு போய் விட்டனர்.

7)நூணாவிலான் இவர் யாராவது கேட்டவுடனேயே காணொலிகளை இணைக்க கூடியவர்...இவருக்கு யாழில் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

8)வாத்தியார் இவர் பல நேரங்களில் பலருக்குப் புத்திமதி சொல்லுவார்.

9)தயா அண்ணா,தூயவன் போன்றவர்களின் கருத்துகளையும் வாசிக்கப் பிடிக்கும்.

10)தமிழிச்சி தற்போது எதற்காக எழுதாமல் விட்டார் எனத் தெரியவில்லை...இவரது கருத்துகளையும் எனக்குப் பிடிக்கும்.

நெடுக்கு தம்பி பெண்களினது மனதில் இடம் பிடிப்பது மிகவும் கஸ்டம் அதற்காக நிறைய பாடுபட வேண்டும். :rolleyes::D:)

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் உள்ளதாலும், சிலர் விடுபட்டு விடக் கூடும் என்பதாலும் கருத்தாளர்களை வரிசைப்படுத்த விரும்பவில்லை.

கலகலப்பாக எழுதுபவர்களையும், சீரியஸாக எழுதுபவர்களையும் பிடிக்கும். குறுக்காலபோவான், அஜீவன், வசம்பு, டன் போன்றவர்கள் எழுதாமல் இருப்பது ஒரு குறைதான்.

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் உள்ளதாலும், சிலர் விடுபட்டு விடக் கூடும் என்பதாலும் கருத்தாளர்களை வரிசைப்படுத்த விரும்பவில்லை.

கலகலப்பாக எழுதுபவர்களையும், சீரியஸாக எழுதுபவர்களையும் பிடிக்கும். குறுக்காலபோவான், அஜீவன், வசம்பு, டன் போன்றவர்கள் எழுதாமல் இருப்பது ஒரு குறைதான்.

குறுக்காலபோவான்

இப்பொழுதெல்லாம் வருவதில்லை. சுண்டல், வன்னிமைந்தன், அஜீவன் எல்லாம் எங்கேயோ தெரியாது.

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இஞ்சை புடிச்ச ஆள் கறுப்பி

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

  • கருத்துக்கள உறவுகள்

புடிக்காத ஆள் வலைஞன்(சண்டித்தனம் இருந்தால் தனிய வெளியிலை வாரும் பாப்பம்)

:rolleyes::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.