Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலர் தினம் தேவைதானா?

32 members have voted

  1. 1. காதலர் தினம் தேவைதானா?

    • ஆம் நிச்சயமாக
      11
    • இல்லை
      9
    • ஒவ்வொரு காதலரும் எப்போது முதல் முதலில் சந்தித்தார்களோ அந்த நாளே அவர்களது காதலர் தினமாகும்.
      2
    • தெரியாது
      0
    • இது ஒன்று தான் குறைச்சல்
      10

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காதலனோ/காதலியோ கிடைத்தால் காதலர் தினம் கொண்டாடுவதில் தப்பில்லை.

திருமணம் செய்தவர்கள் நிச்சயம் கொண்டாட வேண்டும் :)

இருந்தால் நன்றாக இருக்கும். :)

ஒரு சும்மா ஒரு rechaarge பண்ணுவதுமாதிரி.

அதற்காக சொக்கலேட், பூ கொடுத்துதான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. அன்பை ரோமாண்டிக்காய் :wub: (தமிழ் என்ன? ) வெளிப்படுத்த வேண்டும்.

டிஸ்க்கி

குட்டி தயவுசெய்து காதல் பிடிக்கதவர்களுக்காக 'காமுகர் தினம் கொண்டாடுகிறேன்' என்று வேறு ஒரு திரி தொடங்க வேண்டாம். :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

எனது, வாக்கு இல்லை என்பதற்கே.....

காதலர் தினம் என்று தனியே.... ஏன் ஒரு நாளை ஒதுக்கி கொண்டாட வேண்டும்?

உண்மையான காதலர்களுக்கு விடியும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே...

மாசி 14 ம் திகதி மட்டும் கொண்டாடாமல், ஒவ்வொரு நாளும் என்ஞாய் பண்ணுங்கப்பா....dance-smiley05.gifdance-smiley06.gifdance-smiley07.gif

ஆம் நிச்சயமாக....!

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது அமையுமா இருந்தால் நிச்சயம் கொண்டாடலாம்..! :rolleyes: தப்பில்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அநாவசியமானதுடன்.. காதல் உணர்வை ஒரு நாளுக்குள் கட்டிப்போட்டு அதை வைச்சு வியாபாரம் செய்வது போன்றது. காதல் அன்பு இவை எப்போதும் எந்த வித எதிர்பார்ப்புக்களுக்கும் இடமில்லாது மனிதர்களிடையே பரிமாறப்பட வேண்டிய உணர்வுகள். அதை ஒரு தினத்துக்குள் அடக்குவது ஒரு வகை முட்டாள் தனம்.

காதலர் தினம் கொண்டாடுவதிலும் தினமும் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள் அது போதும். இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு ஏழைகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள். உங்கள் அன்பை இயலுமானவரை செலுத்துங்கள். அதுவே போதும்.

என்னைப் பொறுத்தவரை காதலர் தினம் சுத்த வேஸ்டு. அதேவேளை கொண்டாடுறவையை.. அவையிட சுதந்திரத்தை தடுக்கிற மாதிரியும் சிலர் செயற்படுவதை விரும்பவில்லை..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள நாயள் பூவும் சொக்லேட்ரும் விக்கிறதுக்கெண்டே கொண்டாட்டங்களை உருவாக்கி வைச்சிருக்கிறாங்கள்.

பூசணிக்காய் விக்கிறதுக்கு கலோவின் மாதிரி இதுவும் ஒண்டுதான்

நானும் மனுசியும் டெய்லி நாய்கடிபூனைகடிதான் ..ஆனால் லவ் விசயத்திலை நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்குடுக்கமாட்டம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள நாயள் பூவும் சொக்லேட்ரும் விக்கிறதுக்கெண்டே கொண்டாட்டங்களை உருவாக்கி வைச்சிருக்கிறாங்கள்.

பூசணிக்காய் விக்கிறதுக்கு கலோவின் மாதிரி இதுவும் ஒண்டுதான்

நானும் மனுசியும் டெய்லி நாய்கடிபூனைகடிதான் ..ஆனால் லவ் விசயத்திலை நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்குடுக்கமாட்டம். :wub:

:lol::lol::lol:

தேவையில்லை.ஒரு பிரத்தியேக நாள்/நாட்கள் ஒவ்வொரு காதலருக்கும் உண்டு. அது நிச்சயமாக காதலர் தினமாக இருக்க வேண்டியதில்லை.ஒவ்வொரு நாளும் காதலர் தினமாக கொண்டாடுபவர்கள் உண்மையான காதலர்கள்.அதற்காக வைனும்,சொக்லேற்றும்,றோஜாப்பூவும் கொடுக்க வேண்டுமென்றில்லை.காதலர் தினம் ஏதோ வியாபர உத்தியாக திசை திருப்பப்பட்டுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அநாவசியமானதுடன்.. காதல் உணர்வை ஒரு நாளுக்குள் கட்டிப்போட்டு அதை வைச்சு வியாபாரம் செய்வது போன்றது. காதல் அன்பு இவை எப்போதும் எந்த வித எதிர்பார்ப்புக்களுக்கும் இடமில்லாது மனிதர்களிடையே பரிமாறப்பட வேண்டிய உணர்வுகள். அதை ஒரு தினத்துக்குள் அடக்குவது ஒரு வகை முட்டாள் தனம்.

காதலர் தினம் கொண்டாடுவதிலும் தினமும் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள் அது போதும். இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு ஏழைகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள். உங்கள் அன்பை இயலுமானவரை செலுத்துங்கள். அதுவே போதும். என்னைப் பொறுத்தவரை காதலர் தினம் சுத்த வேஸ்டு. அதேவேளை கொண்டாடுறவையை.. அவையிட சுதந்திரத்தை தடுக்கிற மாதிரியும் சிலர் செயற்படுவதை விரும்பவில்லை..! :)

இந்த விடயத்தில் நெடுக்சுக்கும் குமாரசாமியண்ணைக்கும் 100 க்கு 100

நானும் அதையே விரும்புகின்றேன்.

கடிபடுவது தள்ளிப்படுப்பது எல்லாம் போகும் வழியில் வரும் தடைகள்

இருவருக்கும்போகும் வழிபற்றி தெளிவிருந்தால்............

வாழ்வில் ஒவ்வொரு துளியும் சுகமே. :wub::wub::wub:

நெடுக்ஸின் கருத்து மிகச் சரியானது

குசா வின் கருத்துக்கு 100 பச்சைப் புள்ளிகளாவது கொடுக்க வேண்டும்...மனுசன் ஒரு காதல் மகாத்மா :D

  • தொடங்கியவர்

கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.

முதல் 4 options-களையும் போட்டு விட்டு ஐந்தாவதாக எனது பதிலையும் சேர்த்து இருந்தேன். பறவாய் இல்லை இங்கே உள்ளவர்களில் கொஞ்ச பேராவது என்னைப் போல யோசிக்கிறீர்கள் என்பதில் சந்தோசம்.

கனபேர் 'காதலர் தினம்' என்றொரு நாள் தேவை தானா என்ற கடுப்பில தான் இருகிறீங்கள் என்று புரிகிறது.

ஊரில் எமது தாத்தா பாட்டி, அப்பா அம்மா காதலர் தினம் என்று ஒன்றைக் கொண்டாடியதாக நான் அறிந்ததில்லை... அங்கு வாழ்ந்தவர்கள் எல்லாரும் தமது அன்பை வெளிக்காட்டவில்லையா? கு.சா. அண்ணா சொன்னது முழுக்க முழுக்க சரி. இதுவும் ஒரு வியாபாரா ரீதியில் தான் உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள். அதே போல 'இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவுவதன் மூலம் எமது அன்பையும் வெளிபடுத்தலாம்' என்று நெடுக்ஸ் சொன்னதும் யதார்த்தம்.

உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பர்கிந்த ரதி, அகூதா, தப்பிலி, சிறி அண்ண, வீணா, இசை, நெடுக்ஸ், கு.சா.அண்ண, நுணா,

விசுகு அண்ண, நிழலி அனைவர்க்கும் நன்றிகள். நன்றிகள்!! :)

Edited by குட்டி

திருமணம் செய்தவர்கள் நிச்சயம் கொண்டாட வேண்டும் :)

நிச்சையமாக இல்லை என்றால் வீட்டில் காமலர்தினம் கொண்டாட முடியாது,. :D :D

நெடுக்ஸின் கருத்து மிகச் சரியானது

குசா வின் கருத்துக்கு 100 பச்சைப் புள்ளிகளாவது கொடுக்க வேண்டும்...மனுசன் ஒரு காதல் மகாத்மா :D

உண்மை தான் எத்தனையை கண்டு இருப்பார். :lol:

கள்ள நாயள் பூவும் சொக்லேட்ரும் விக்கிறதுக்கெண்டே கொண்டாட்டங்களை உருவாக்கி வைச்சிருக்கிறாங்கள்.

பூசணிக்காய் விக்கிறதுக்கு கலோவின் மாதிரி இதுவும் ஒண்டுதான்

நானும் மனுசியும் டெய்லி நாய்கடிபூனைகடிதான் ..ஆனால் லவ் விசயத்திலை நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்குடுக்கமாட்டம். :wub:

கு. சாமி சொன்னது சரி.

இப்ப இந்தியாவில் பூ. சாக்கிலட் கூட கொண்டாமும் இந்த நாட்களில் கூட செல்ஸ் ஆகுமாம். :D:(

  • கருத்துக்கள உறவுகள்

காதலும் தேவை.

காதலர் தினமும் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்ய்ய்ய்ய்ய்ய்.... நான் காதலர் தினம் தேவை இல்லை என்றேல்லோ புள்ளி போட்டுடன். :lol:

நெடுக்ஸ் அண்ணாக்கும்,கு.சா தாத்தாக்கும் ஒரு பச்சை குத்தி போட்டு.

தாத்தா சொல்றது போல காதலர் தினம் வியாபாரம் சார்ந்தே தவிர உணர்வுகள் சார்ந்த ஒன்றாக தெரியவில்லை.

நீங்கள் "சாக்கலேட்டு" இனிப்பு பண்டம் வாங்குபவராக இருந்தால், உங்களால் முடிந்தால் " பெயர் ட்ரேட்" - Fairbrand இலச்சனை பொருந்திய பண்டங்களை வாங்குங்கள். :)

- Fairbrand - http://www.fairtrade.org.uk/

  • அதன் மூலம் நீங்கள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி பணம் சம்பாதிப்பதை தடுக்க உதவுகின்றீர்கள்
  • வாங்கும் பண்டத்தில் ஒரு பகுதி பணம் சிறுவர்களை பராமரிக்க பயன்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் "சாக்கலேட்டு" இனிப்பு பண்டம் வாங்குபவராக இருந்தால், உங்களால் முடிந்தால் " பெயர் ட்ரேட்" - Fairbrand இலச்சனை பொருந்திய பண்டங்களை வாங்குங்கள். :)

- Fairbrand - http://www.fairtrade.org.uk/

  • அதன் மூலம் நீங்கள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி பணம் சம்பாதிப்பதை தடுக்க உதவுகின்றீர்கள்
  • வாங்கும் பண்டத்தில் ஒரு பகுதி பணம் சிறுவர்களை பராமரிக்க பயன்படுகின்றது.

இங்கிலாந்திலும் பிரதான பல்கலைக்கழக உணவு விடுதிகளில் இவர்களின் பொருட்கள் சந்தைப் படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி சமர்பீல்ட் இலும் ( இப்ப கோப்ஸ் க்க வந்திட்டு என்று நினைக்கிறன்... http://www.co-operative.coop/food/) இவர்களின் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவற்றை நீங்கள் தெரிந்து வாங்குவதன் மூலம் உங்கள் பங்களிப்பை மூன்றாம் உலக நாடுகளில் வறுமையில் வாடுவோரோடு பங்கிட்டுக் கொள்கிறீர்கள்.. என்பதை உணர்ந்து கொள்வீர்கள். . :)

http://www.co-operative.coop/food/ethics/Ethical-trading/Fairtrade/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

om, venum. ( viparam pinpu thamilil). :wub:

கணவரைக் காதலியுங்கள்... அதுதான் நிரந்தர சந்தோஷம்! - திருமதி ஒபாமா

சந்தோஷம் நிரந்தரமாக இருக்க ஒவ்வொரு பெண்ணும் தமது கணவரைக் காதலிக்க வேண்டும். அன்பு, மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்வதில் முன்னுரிமை தரவேண்டும். அப்போதுதான் சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும், என்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவம் குறித்தும், காதலர் தினத்துக்காக அவர் சொல்ல விரும்பும் கருத்து குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் மிகச் சிறப்பாக, பெண்களுக்கு பாடம் சொல்லும் அளவுக்கு அமைந்திருந்தது.

திருமதி ஒபாமா கூறியது:

தங்களின் வாழ்க்கை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைய தம்பதிகள் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ வேண்டும். பெண்கள் தங்கள் கணவர்களைக் காதலிக்க வேண்டும். அன்பையும் சந்ததோஷத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கணவன்- மனைவி இருவரும் தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் சிரிப்புடன் பகிர்ந்து கொள்வது முக்கியம். சிரிப்பில்லா இடத்தில் மகிழ்ச்சி இருக்காது.

எங்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்தின் போது அரசியலில் புகழ்பெற வேண்டும் என லட்சியத்துடன் அவர் (ஒபாமா) இருந்தார். முதலில் இல்லியாயிஸ் செனட் உறுப்பினரானார். பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினர் ஆனார். தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்த பதவியில் உள்ளார்.

இந்த அளவு அவர் உயர்ந்த நிலை அடைவதற்கு எங்களின் மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பும் புரிந்து கொள்ளலும், எப்போதும் குறையாத காதலும்தான் காரணம் என நினைக்கிறேன். எங்களுக்கு இடையே எப்போதும் கோபப்படுவதற்கான சூழ் நிலை இருந்ததில்லை. மாறாக சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சியான தருணமே இருந்து வருகிறது.

அதுதான் எங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. எனவே, நாங்கள் எப்போதும் கேலி, கிண்டலுடன் கூடிய மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி கொள்கிறோம்..." என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/02/14/share-laugh-your-partner-says-michelle-obama-aid0136.html

English summary

Here's Michelle Obama's advice for couples this Valentine's Day: laugh and share every single happy moments with your partner. She says it's what she and President Barack Obama do, and it seems to be working. Their marriage, although tested throughout the years by his political ambitions -for the Illinois Senate, the U.S. Senate and later president - is going on 19 years. "I think a lot of laughing and sharing," the first lady said Tuesday at a White House luncheon with reporters who asked about the Obamas' union. "I think in our house we don't take ourselves too seriously, and laughter is the best form of unity, I think, in a marriage.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தேவை அதில சந்தேகம் எதுவும் இல்லை :)

கண்டிப்பாகத்தேவையில்லை.. :)

கள்ள நாயள் பூவும் சொக்லேட்ரும் விக்கிறதுக்கெண்டே கொண்டாட்டங்களை உருவாக்கி வைச்சிருக்கிறாங்கள்.

பூசணிக்காய் விக்கிறதுக்கு கலோவின் மாதிரி இதுவும் ஒண்டுதான்

நானும் மனுசியும் டெய்லி நாய்கடிபூனைகடிதான் ..ஆனால் லவ் விசயத்திலை நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்குடுக்கமாட்டம். :wub:

எப்படி குமாரசாமி அண்ணே இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்.. ஒரே வரியில் எழுதியே 10 20 பச்சைகளை வாங்கிகொண்டு போகிறீர்கள்... உங்களுக்கு ஒரு பச்சை புள்ளி குத்தியதில் நானும் ஒரு நபர்... இது ஏன் சொல்லுறன் என்றால் நான் ஏதாவது ஆக்கம் இணைத்தால் பச்சை புள்ளி குத்தவேண்டுமென்றுதான். :lol: :lol: ...

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 4 options-களையும் போட்டு விட்டு ஐந்தாவதாக எனது பதிலையும் சேர்த்து இருந்தேன். பறவாய் இல்லை இங்கே உள்ளவர்களில் கொஞ்ச பேராவது என்னைப் போல யோசிக்கிறீர்கள் என்பதில் சந்தோசம்.

கனபேர் 'காதலர் தினம்' என்றொரு நாள் தேவை தானா என்ற கடுப்பில தான் இருகிறீங்கள் என்று புரிகிறது.

அதே 5 ஆவது பதில் தான் எனதும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் தேவை என்பதற்கே போட்டிருக்கேன். நானும் எனது மனைவியும் காதலிக்க தொடங்கியது 15.02, இதனால் எனக்கு 14.02 வரும் போது பல கடந்த கால ஞாபகங்கள் வந்து போகும். நானும் அவளும் இருந்து, இந்த கடந்த வருசங்களில எங்களுக்க நடந்த குத்துப்பாடுகள் புடுங்குப் பாடுகள் பற்றியெல்லாம் கதைச்சு வாய் விட்டு சிரிப்போம். அந்தக் காலத்தில ஊரில இருந்த எங்கட பாட்ட பாடியிண்ட வாழ்க்கை முறை வேற இதால அவர்களுக்கு காதலை வெளிப்படுத்த காதலர் தினம் என்று ஒன்று தேவைப்படவில்லை. இப்போது புலத்திலே இயந்திரம் மாதிரி சீவிக்கிரதால இப்பிடி ஒரு நாளைக் கொண்டாடுறது தவறு எண்டு நான் நினைக்கவில்ல. கட்டாயம் அவசியம் எண்டு இல்லை ஆனால் எங்களுக்கும் ஏதாவது ஒரு சாட்டு வேணும் தானே :wub: . அதோடை கு.சா அண்ணாக்கும் ஒரு பச்சை. ஆள் நல்லா அடிபட்ட காய் போல... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் வென்றவர்களுக்கு காதலர் தினம் தேவையில்லாமல் கூட போகலாம், காதலில் தோற்றவர்களுக்கு கட்டாயம் காதலர் தினம் அவசியம். ஒரு நாளில் ஓரிரு நிமிடமேனும் காதலனோ/ காதலியோ எங்கே என்றாலும் நன்றாக வாழ வேணும் என்று பிரார்த்தனை செய்வதற்கு! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.