Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரதி சீக்கிரம் பணக்காரியாக வழி சொல்லுங்கள்ள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ.

நீங்கள் தரும் ஜடியாவைக் கொண்டு நான் பணக்காரியாக வேண்டும் அதற்காக கடுமையாக உழைப்பேன் ஆனால் ஒருவரையும் ஏமாற்றக் கூடாது[நீங்கள் தரும் ஜடியாவால்]அத்தோடு கள்ள வழியில் முறை தவறியும் சம்பாதிக்க கூடாது...நான் பணக்காரியாக வந்ததும் யார் சிறந்த ஜடியா தந்து நான் பணக்காரியாக வந்தேனோ அவர்களுக்கு எனது பணத்தில் 10% த்தை கொடுப்பேன் என யாழ் களத்தில் உறுதி எடுக்கிறேன்.

பணத்தை விரும்பாதோர் யாரும் உண்டோ.எல்லோரும் சும்மா சொல்வார்கள் பணம் என்ன பணம்...பணத்தை விட குணம் தான் பெரிது என்று அப்படி சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள் உண்மையான யதார்த்தத்தை வைத்துப் பார்த்தால் அவர்கள் தான் விழுந்து,விழுந்து பணம் தேடுபவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு தொழிலதிபரை திருமணம் செய்வதுதான் மிக இலகுவான வழி.

தொழிலதிபரை கண்டெடுத்த பின் தெரிவியுங்கள். எனது வங்கி இலக்கத்தை அறிவிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழிலதிபரை திருமணம் செய்வதுதான் மிக இலகுவான வழி.

தொழிலதிபரை கண்டெடுத்த பின் தெரிவியுங்கள். எனது வங்கி இலக்கத்தை அறிவிக்கிறேன்.

எந்த தொழிலதிபர் என்னை திருமணம் செய்ய முன் வருவார் :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தொழிலதிபர் என்னை திருமணம் செய்ய முன் வருவார் :D:lol::D

அது தான் நீங்கள் முதலில் அழகி என்று சொல்லி விட்டீர்களே!!. :D

எந்த தொழிலதிபர் என்னை திருமணம் செய்ய முன் வருவார் :D:lol::D

ஐடியாதானே கேட்டீர்கள். சொன்னேன். :blink:

இப்ப மெல்ல மெல்லமாய் தொழில் அதிபரையே மணமேடைக்கு அழைத்து வரச் சொல்வீர்கள் போல கிடக்கே. :lol:

டிஸ்க்கி

பத்து வீதத்திற்காய் ஆசைப்பட்டாய் தப்பிலி. வேண்டாமடா கண்மணி. :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஐடியா உண்டு

ஆனால் முகத்துக்கு முன்னால்தான் சொல்வேன்......... :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஐடியா உண்டு

ஆனால் முகத்துக்கு முன்னால்தான் சொல்வேன்......... :lol::D:D:D

என்ன விசு, நீங்கள் தொழில் அதிபர்தானே ? :lol::wub:

தப்பான வழிகள் பத்து

1 . காட்டிகொடுப்பு வேலைகள்

2 . தமிழரை திசை திருப்பும் நல்ல திட்டங்கள்

3 . விடுதலைபுலிகள் பேரால் வசூல்

4 . வெளி நாட்டிற்கு கூட்டி போகிறேன் என பணம் வசூலித்து நாடு கடலில் விடுவது அல்லது தமிழ்நாட்டு போலீசில் மாட்டி விடுவது

5 . இனப்படுகொலை செய்த அரசை பாராட்டி தொடர்ந்து எழுதுவது ( ஏற்கனவே அதுபோல ஒரு கேஸ் இங்க இருந்தது )

6 . ஐந்து இணைய தளம் ஆரம்பித்து ஒன்றில் ஈழ விடுதலையை ஆதரித்தும் / இன்னொன்றில் இணைந்தே இருப்போம் என்றும் / இன்னொன்றில் சிங்கள அரசு விடும் அறிக்கைகளை மட்டும் வெளிவிடுவது / இன்னொன்றில் எதுவுமே புரியாத மாதிரி அப்பப்ப கவர்ச்சி படம் / இன்னொன்றில் இந்திய அரசுக்கு ஆதரவாக எழுதி வந்தால் சீக்கிரமே பணக்காரி ஆகலாம்.

7 . தமிழ் ஈழ மக்களுக்கு உண்டவுகிறேன் என்று காசு திரட்டி பாதியை லபக்கிவிட்டு மீதியை கொடுப்பது

8 . இலங்கை பொருட்களை புறக்கணிப்பு என கதை விட்டுக்கொண்டு அதை யாருக்கும் தெரியாமல் உபயோகிப்பவர்களுக்காக ஒரு கடை

9 . ஆசிரமம் அமைத்து ( ஆனால் அதில் பிரதம சீடனாக நான் இருந்தால் நன்று . கொள்ளை அடிக்க நல்ல ஐடியா எல்லாம் கொடுப்பேன் )

10 . காசு பணம் சேர்த்து கொழும்புக்கும் யாழுக்கும் இடையே போக்குவரத்து நடத்தி நம் மக்களையே கொள்ளையடிப்பது ( அடுத்தவனை கொள்ளை அடித்தால் ஆப்பு வைத்து விடுவார்கள் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ.

உங்களிட்டை கிட்டத்தட்ட எவ்வளவு காசு கையிலையிருந்தால்.........நீங்கள் பணக்காரி எண்ட லெவலுக்கு வருவியள்?

ரதி நீங்கள் ரதிபோல அழகி என்றபடியால்

நடிகையாகிவிடுங்கோ

பணத்துக்கு பணமும் கிடைக்கும்

அத்தோட புகழும் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் ரதிபோல அழகி

ஐயோ ஐயோ.................... :D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கவென்றே பல்கலைக் கழகங்களில் எவ்வளவோ பணம் செலவு செய்து படிக்கிறார்கள்.

நீங்க சும்மா தட்டிக் கொண்டுபோகலாமா?

எவ்வளவு பணம் கையிருப்பென்றதை முதலில் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சீக்கிரம் பணக்காரியாக வழி சொல்லுங்கள்ள்

உங்க வீட்டுபக்கம் வங்கி ஒன்றும் இல்லையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசு, நீங்கள் தொழில் அதிபர்தானே ? :lol::wub:

அவர் எனக்கு அப்பா மாதிரி அவர் நேரில் என்னைப் பார்த்து நான் ஆணா அல்லது பெண்ணா என உறுதி செய்த பின் அவருக்கு நம்பிக்கை வந்தால் எனக்கு அன்பளிப்பாக ஒரு பெரும் தொகை பணம் வழங்குவார் என நினைக்கிறேன் :rolleyes::blink::D

உங்களிட்டை கிட்டத்தட்ட எவ்வளவு காசு கையிலையிருந்தால்.........நீங்கள் பணக்காரி எண்ட லெவலுக்கு வருவியள்?

ஒரு லட்சம் பவுண்ஸ் இப்போதைக்குப் போதும் அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் பவுண்ஸ் இப்போதைக்குப் போதும் அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது.

இதுக்கா இத்தனை ஆர்ப்பரிப்பு

எங்காவது வேலை செய்யுங்கள்

இதை அடைய சில மாதங்கள் போதும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ரதி பணம் ? அது ....... அளவாய் இருந்தால் அது உனக்கு அடிமை . அதிகமிருந்தால் நீ அதற்கு அடிமை ..அதிகம் இருந்தால் அதை பாது காக்க ,அதைப் பற்றியே சிந்தனை.எவன் கொண்டுபோரானோ ...? எந்தவங்கி திவால் ஆகிறதோ ? என்று ...வாங்கும் சொத்துக்களை பராமரிக்க் என்று ...ஆயிரம் பிரச்சினை. பணத்தால் . உணவு உண்ணவும் இருக்க வீடும் ... உடுத்த ஆடையும் நிம்மதியும் இருந்தால் அதுவே போதும். உழைத்து சாபிடுங்கள் அந்த திருப்தியே போதும்.........பணம் அளவுக்க் மேல் என்றால் நிம்மதி போய்விடும். பிரச்சினை தோன்றும். .ஒரு பணக்காரன் சொன்னானாம் பசி இருந்த போது உணவு இல்லை. உணவு தாராளமாக் இருந்தத் போது சாப்பிட முடியாது நோய் ( அள்வுச்ச்ப்பாடுதான்)

  • கருத்துக்கள உறவுகள்

ரீச்சர்

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை

பணம்

அது எல்லோருக்கும் வேண்டுமான பொருள். திருப்தி என்ற அளவுகோலுக்கு அப்பாற்பட்டது பணம். மற்றவன் பணத்துக்கு ஆசைப்படாமல் இருத்தல் அல்லது பேராசை என்று வேண்டுமானால் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் பணத்தை தேட அதை சேமிக்க பின் நிற்கக்கூடாது.

ரதி நீங்கள் மில்லியனராகலாம். சுலபம் ஒரேயொரு பொய் அதாவது ஆளாளிற்கு 50 யுரே தாருங்கள் தமிமிழீழம் வாங்கித்தரலாம்.நீங்கள் ஓ கோ...... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி இப்ப உதாரணத்துக்கு ஒரு லச்சம்பவுண்ஸ் கையிலை இருந்தால் என்ன செய்வியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி நீங்கள் மில்லியனராகலாம். சுலபம் ஒரேயொரு பொய் அதாவது ஆளாளிற்கு 50 யுரே தாருங்கள் தமிமிழீழம் வாங்கித்தரலாம்.நீங்கள் ஓ கோ...... :wub:

மங்களம்! தமிழீழம் எண்ட சொல் உங்களுக்கு நக்கலாய்த்தெரியுதோ?

ஒருசில ஆக்கள் செய்த பிழைக்காக.........எத்தனை பேரை நீங்கள் புண்படுத்திறியள்?

ஒட்டுமொத்த விடுதலைவிரும்பியளையுமே ஏளனமாக பாக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் மில்லியனராகலாம். சுலபம் ஒரேயொரு பொய் அதாவது ஆளாளிற்கு 50 யுரே தாருங்கள் தமிமிழீழம் வாங்கித்தரலாம்.நீங்கள் ஓ கோ...... :wub:

அதெற்கெல்லாம் ஒரு ஜோக்கிதம் வேண்டும்............... யாரிடமும் போய் செருப்படி வாங்கிவிடாதீர்கள்.

கேட்பவன் நம்புவதற்கு ஒரு குறைந்தபட்ச அடிப்படை தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

மங்களம்! தமிழீழம் எண்ட சொல் உங்களுக்கு நக்கலாய்த்தெரியுதோ?

ஒருசில ஆக்கள் செய்த பிழைக்காக.........எத்தனை பேரை நீங்கள் புண்படுத்திறியள்?

ஒட்டுமொத்த விடுதலைவிரும்பியளையுமே ஏளனமாக பாக்கிறியள்?

உண்மைதான் குமாரசாமியண்ணா

கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். செயற்படுகிறார்கள். இதைவிட தான் ஒரு முன்னால் போராளி என்றும் கதை விடுகிறார்கள். கூட்டிக்கழித்துப்பார்த்தால்...

தப்பு போராட்டத்தில் அல்ல இவர்களது குறிக்கோளில் என்பது புலப்படுகிறது.

அதெற்கெல்லாம் ஒரு ஜோக்கிதம் வேண்டும்............... யாரிடமும் போய் செருப்படி வாங்கிவிடாதீர்கள்.

கேட்பவன் நம்புவதற்கு ஒரு குறைந்தபட்ச அடிப்படை தேவை.

இங்கு தமிழ் பைத்தியம் என்பவர் எழுதிய ஆலோசனைகளைப்பார்த்ததும் இப்படித்தான் நானும் நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ.

-----

ring.jpg

ரதி நீங்கள் நவரத்தினக் கல்லு பதித்த மோதிரம் ஒன்றை வாங்கி, நடுவிரலில் போட்டுப் பாருங்கள்.

எல்லாக் கிரகமும் உங்களுக்கு சாதகமாக அமையும் போது.... பணக்காரியாக சந்தர்ப்பம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ரதி இன்னும் பணக்காரி ஆகவில்லையா! நானும் கொக்கு போல ஒற்றை காலில நிக்கிறன் ஏதாவது உருப்படியா கிடைத்தால் அப்படியே அலேக்காய் தூக்கலாம் என்று! :D

சிறி மோதிரத்துக்கு நீங்களா கல்லு பதிச்சநீங்கள். எல்லாம் தப்பு தப்பா பதிஞ்ச மாதிரிக் கிடக்கு. பிறகு கிரகங்கள் எல்லாம் ஒன்றின் மேல் ஒன்று ஏறி துவம்சம் பண்ணி அவவிட்ட இருக்கிறதும் போயிடப் போகுது கவனம்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

------

சிறி மோதிரத்துக்கு நீங்களா கல்லு பதிச்சநீங்கள். எல்லாம் தப்பு தப்பா பதிஞ்ச மாதிரிக் கிடக்கு. பிறகு கிரகங்கள் எல்லாம் ஒன்றின் மேல் ஒன்று ஏறி துவம்சம் பண்ணி அவவிட்ட இருக்கிறதும் போயிடப் போகுது கவனம்! :unsure:

navratna213114.jpghandcrafted_navaratna_ring_jre35sm.jpg

சுவி, மோதிரத்திலை கல்லு பதிஞ்சது கடைக்காரர். அதிலை தப்பு என்றால்...

ரதி இந்தப் பென்ரனை, சங்கிலியில் கொழுவி நெஞ்சோடு முட்டும் படியாக போட்டாலும்.... எதிர் பார்த்த பலன் கிடைக்கும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.