Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடலை விற்பதிலும் பார்க்க, உயிரை விடுவது மேல் என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

புங்கையூரான் ,

இப்போது வருகின்ற செய்திகளில் வன்னிப்பெருநிலம் ,யாழ் எங்கும் வறுமை வாழ வழியற்ற நிலமையில் பல முன்னாள் பெண்போராளிகளும் குடும்பப்பெண்களும் உடலை விற்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு உயிரை விடுங்கள் என்று சொல்லலாம் போலிருக்கிறது. எனது தனிப்பட்ட கருத்து இது!!!

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி போலத்தான் கிடக்குது, சாத்திரியார்!

தொடருங்கள்!

நான் பழைய தலைமுறை போல கிடக்கு!

உடலை விற்பதிலும் பார்க்க, உயிரை விடுவது மேல் என்பது எனது தனிப்பட்ட கருத்து!!!

ஒருவர் வாழ்க்கையை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்று நாங்கள் தீர்மானிக்க முடியாது. அதே நேரம் சன்னம்மா தற்கொலை செய்வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் குழந்தையை கொலை செய்யவேண்டும். அது சரியானதா?? ஏற்றுக்கொள்கிறீர்களா?? அதே நேரம் எனது கருத்து என்னவெனில் நான் இன்னும் சில மணி நேரத்தில் இறக்கப் பேகின்றேன் எனத்தெரிந்தால் எனது மனைவியை கூப்பிட்டு மகளை என்ன கஸ்ரப்பட்டாவது படிப்பித்து பெரியவளாக்கிவிடு என்றுதான் சொல்வோன். நிச்சயம் மகளைகொன்று விட்டு நீயும் தற்கொலை செய் எனச்சொல்லமாட்டேன். அதே போலதொரு நிலைமை உங்களிற்கு வந்தால் நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன கருத்தை சொல்வீர்கள் புங்கையூரான். இதனை ஒரு விவாதத்திற்காகத்தான் கேட்கிறேன் குறை நினைக்கவேண்டாம்.

பிறிதொரு தலைப்பில் போராளிகள் பட்ட துன்பங்கள்,அவர்களின் வாழ்வு முறைகள் போன்றவற்றை எமது அடுத்த சந்ததிக்கு தெரியப்படுத்துவீர்களா??.

நான் முன்னரே சொன்னது போல் நாடு கிடைத்திருந்தால் ஒரு புத்தகமாக அதனை வெளியிட்டிருப்பேன் ஆனால் இனி அதையெல்லாம் எழுதி என்ன ஆகப்போகின்றது என்கிற விரக்தி வந்துவிட்டது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முன்னரே சொன்னது போல் நாடு கிடைத்திருந்தால் ஒரு புத்தகமாக அதனை வெளியிட்டிருப்பேன் ஆனால் இனி அதையெல்லாம் எழுதி என்ன ஆகப்போகின்றது என்கிற விரக்தி வந்துவிட்டது. :(

நீங்கள் எழுதாமல் விடுவது உங்கள் உரிமை, உங்கள் மனநிலையை பொறுத்தது. ஆனால் அதில் பலன் உண்டு. அது தனியே இன்னுமொரு போராடத்திற்கான/ ஆயுதப்போரத்திர்ர்கான உந்த்துலகாக மாத்திரமன்றி, அதில் ஒரு வாழ்வியல், அறிவியல் இன்னும் ஏதொஏதொவெல்லம் ஒளிந்திருக்கும் அது சிலருக்கு பயன்படலாம்.

இது முற்றிலும் நகைச்சுவையானது எனிலும், ஆனாலும் நான் சில வேளைகளில் பயன்படுத்துவது, எனக்கு ஒரு விபத்தின் பின்னர் என்னால் வடிவாக நடக்க, பாரம் தூக்க முடியாது, நான் ஏதும் பாரம் தூக்கினால் கூட இருப்பவர்கள் கால் கவனம் என்று சொல்லுவார்கள்..அப்போது நான் சொல்லுவது.." இதென்ன பாரம் ஆனையிறவு அடிபட்டில நான் தூக்காததவென" - நான் இருந்த இடமும் ஆனையிறவு அடிபாடு நடந்த இடமும் 200 / 250 மைல் தூர வித்தியாசம், ஆனாலும் நாங்கள் உணர்ந்திருந்தோம் அது எவ்வளவு கடினமென, அந்த உணர்வு எனக்களுக்கு உந்துதலாக இருந்த்தது நாங்களும் இன்னும் கடினமான வேலைகளை செய்யலாம் என.

இன்னுமொரு நல்ல உதாரணம், உங்கள்/ உங்களை போன்ற ஏனையோரின் பயண அனுபவங்கள் எனது/ ஏனையோரது எதிர்கால பயண திட்டமிடல்களில் ஏலவே இணைந்துவிட்டது.

நேரம் இருந்தால் எழுதுங்கள் ஓசியில் வசிப்பதர்ற்கு என்றுமே தயங்கியதில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னரே சொன்னது போல் நாடு கிடைத்திருந்தால் ஒரு புத்தகமாக அதனை வெளியிட்டிருப்பேன் ஆனால் இனி அதையெல்லாம் எழுதி என்ன ஆகப்போகின்றது என்கிற விரக்தி வந்துவிட்டது. :(

எமது இனமும் போராடியது என்று வரும்கால சந்ததி அறியக்கூடியதாக இருக்குமல்லவா...நீங்கள் அதை எழுதினால்...

வீரபாண்டிய கட்டபொம்மன் எதிர்த்து போராடினான் என்ற சரித்திரத்தை நாம் படிக்கிறோம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்.

ஆனால் அந்த பெண் விதவையானதால் தான் எல்லாம். பாவம் குழந்தையை என்ன செய்வார்?

ஒரு பெண் அதுவும் அதிகம் படிக்காதவர், ஆண் துணையின்றி இருந்தால் மற்றவர்கள் தொல்லை கொடுக்க மாட்டார்களோ?

ஒப்புக் கொள்கின்றேன், ஈஸ்.

எது வித ஆதரவுமற்ற ஒருவர், விலங்குகளின் கழுகுக் கண்களுக்குத் தப்ப முடியாது தான்!

இன்னொருவருடன், தனது வாழ்க்கையைத் தனக்காகவும், தன் குழந்தைகளின் வாழ்வுக்காகவும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை!

அவர் மணமானவர் ஆக இருப்பினும் பரவாய் இல்லை!

அது அவரது குழந்தையையும் பாதிக்காது!

ஆனால் பலருடன் உடலைப் பகிர்ந்து கொள்வது, அவளது மனநிலையும், மனநிலையையும் குழந்தையின் வருங்காலத்தையும் பாதிக்கும்!

ஒரு பெண் தன் உடலை விற்கும் போது, உடலை மட்டும் அவள் இழப்பதில்லை! தனது மனத்தையும் இழந்து விடுகின்றாள்!

உடல் என்றோ அழிய வேண்டியது தானே!

மனத்தை இழந்து விட்டால் அவளது வாழ்வு ஒரு நடைப் பிணத்தின் வாழ்வே!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் ,

இப்போது வருகின்ற செய்திகளில் வன்னிப்பெருநிலம் ,யாழ் எங்கும் வறுமை வாழ வழியற்ற நிலமையில் பல முன்னாள் பெண்போராளிகளும் குடும்பப்பெண்களும் உடலை விற்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு உயிரை விடுங்கள் என்று சொல்லலாம் போலிருக்கிறது. எனது தனிப்பட்ட கருத்து இது!!!

தவறு சாந்தி!

அவர்கள் செய்வதை விமரிசிக்கவோ அல்லது கருத்துக் கூறவோ எனக்கு அருகதையில்லை!

கடைசிக் கட்டமாக, எல்லா வழிகளும் அடைபட்டுப் போன பின்பு தான் அவர்கள் அந்தச் செயலைச் செய்கின்றார்கள்!

உங்கள் பதிவுகளை, அவதானமாக வாசிப்பவர்களில் நானும் ஒருவன்!

உங்கள் செயல்பாடுகள், முன்னெடுப்புக்கள் மிகவும் முற்போக்கானவை!

சும்மா இருப்பதைவிட, உங்களால் இயன்றதை நீங்கள் செய்வது மிகவும் வரவேற்கக் கூடியதும், காலத்தின் தேவையுமாகும்!

உங்கள் பதிவுகளுக்குக் கருத்துக்கள் எழுதுவது குறைவு!

ஏனெனில், எழுதும் கருத்துக்கள் அதிக விமரிசனங்களுக்கு உள்ளாகின்றன!

பதில் கருத்துக்களும் விமோசனங்களை நோக்கிச் செல்வதில்லை என்ற படியால் தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் வாழ்க்கையை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்று நாங்கள் தீர்மானிக்க முடியாது. அதே நேரம் சன்னம்மா தற்கொலை செய்வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் குழந்தையை கொலை செய்யவேண்டும். அது சரியானதா?? ஏற்றுக்கொள்கிறீர்களா?? அதே நேரம் எனது கருத்து என்னவெனில் நான் இன்னும் சில மணி நேரத்தில் இறக்கப் பேகின்றேன் எனத்தெரிந்தால் எனது மனைவியை கூப்பிட்டு மகளை என்ன கஸ்ரப்பட்டாவது படிப்பித்து பெரியவளாக்கிவிடு என்றுதான் சொல்வோன். நிச்சயம் மகளைகொன்று விட்டு நீயும் தற்கொலை செய் எனச்சொல்லமாட்டேன். அதே போலதொரு நிலைமை உங்களிற்கு வந்தால் நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன கருத்தை சொல்வீர்கள் புங்கையூரான். இதனை ஒரு விவாதத்திற்காகத்தான் கேட்கிறேன் குறை நினைக்கவேண்டாம்.

சாத்திரியார், சரியான இடத்தில் எக்கச் சக்கமான ஒரு கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்!

சன்னம்மாவின் வாழ்க்கையை, எப்படி வாழ்வது என்பதை, அவரது சூழ்நிலைகளைப் பொறுத்து அவர் தான் தீர்மானிக்க வேண்டும்!

அவர் தற்கொலை செய்யக் கூடாது! குழந்தைக்காக அவர் வாழ வேண்டும்!

மற்றும் படி, மரணப் படுக்கையில் இருக்கும் கணவன் மனைவியிடம் கூறுவது, என்ன பாடுபட்டாவது படிபித்துப் பெரியவளாக்கி விடு என்று!

ஆனால், கணவன் ஒரு நாளும் உடலை விற்கும் செயலைக் கணம் கூட மனத்தில் நினைக்க மாட்டான்!

இரண்டாம் அல்லது மூன்றாம் திருமணமோ, அல்லது இன்னொருவரின் வைப்பாட்டியாக இருப்பதையோ அவன் ஆட்சேபிக்க மாட்டான்!

மாதமும் மாரி பெய்த காலத்தில் வந்த சமூக சம்பிரதாயங்களைச் சன்னம்மா ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை! ஏனெனில், அந்தச் சமுதாயமே அவளைக் கை விட்டு விட்டது!

ஒரு விவாதத்திற்காக நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும், இரண்டு கேள்விகள்!

சன்னம்மாவின் வளர்ப்பில் வளரும் குழந்தை, தாயைக் குருவாக,எல்லாமாகவும் எண்ணுகின்றது! நாளை அதுவும், சன்னம்மாவின் வழியில் போகாது என்பதற்கு, என்ன உறுதியிருக்கின்றது?

பாரமரிப்பு இழந்த ஒவ்வொரு குடும்பங்களிலும் இருந்து, ஒவ்வொரு சன்னம்மாக்கள் உருவாக மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது தடை இருக்கின்றதா?

ஒரு விவாதத்திற்காக மட்டும் தான்! உங்களிடம் குறை நினைக்க மாட்டேன்!

யாழ் களத்தைப் பொறுத்த வரையில், நீங்கள் எனது உடன் பிறவா சகோதரன் போல! எனவே தயக்கமில்லாமல் விமரிசியுங்கள்!!!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் உங்கள் இரண்டு கேள்விகளிற்குமான எனது ஒரேபதில் சன்னம்மா போன்றவர்கள் குழந்தை வளர்ந்து அது சுயமாக அனைத்தையும் அறியத்தொடங்கும் போது பொருளாதார நிலையினை ஓரளவு பெருக்கிக் கொண்டு அந்த சமூகத்தை அல்லது அந்த ஊரை விட்டு வேறு இடங்களிற்கு சென்று ஏதாவது தொழில் செய்து குழந்தையை வளர்க்கலாம். அல்லது குழந்தைக்கு நிலைமையை புரியவைத்து யாரையாவது ஒருவரை திருமணம் செய்து வாழலாம். இப்படியான செயற்பாடுகள் முலம் குழந்தையின் மனநிலை பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். இப்படியானவர்களிற்கு உதவுவதற்கு மத அமைப்புக்கள் இந்தியாவின் கிராமங்களில் இயங்குகிறார்கள்.ஆனால் அவர்கள் முதலில் மதம் மாறவைத்தபின்னரேயே உதவுகின்றார்கள். இந்தியா என்கிற தேசம் இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்த்தவர்களும் முஸ்லிம்களும் மட்டுமே வாழும் நாடு ஆகப்போகின்றது இது உறுதி. அந்தளவிற்கு வேகமாக மதப் பரம்பல் இடம்பெறுகிறது. அது பற்றிய அனுபவங்களையும் தொடரும் பயணத்தில் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி

Edited by sathiri

நன்றிகள், சாத்திரியார்!

வளர்ந்து வரும் நவீன உலகில், வருணாச்சிரம தர்மத்தை எவ்வளவு காலம் தான், உயர் ஜாதி இந்துக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் விற்க முடியும்?

அம்பேத்கார் கூட ஒரு தடவை, எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு பள்ளிவாசலுக்குப் போய், அனைவரும் முஸ்லிமாக மாறிவிட முடிவெடுத்திருந்தார்!

மகாத்மா காந்தியின் தலையீட்டால் இது அப்போது நிறுத்தப் பட்டது!

வல்லபாய் பட்டேல் இறுதி வரை, அம்பேத்காரை வெளிப்படையாக மதித்து நடந்தது கிடையாது!!!

நீங்கள் எழுதாமல் விடுவது உங்கள் உரிமை, உங்கள் மனநிலையை பொறுத்தது. ஆனால் அதில் பலன் உண்டு. அது தனியே இன்னுமொரு போராடத்திற்கான/ ஆயுதப்போரத்திர்ர்கான உந்த்துலகாக மாத்திரமன்றி, அதில் ஒரு வாழ்வியல், அறிவியல் இன்னும் ஏதொஏதொவெல்லம் ஒளிந்திருக்கும் அது சிலருக்கு பயன்படலாம்.

இது முற்றிலும் நகைச்சுவையானது எனிலும், ஆனாலும் நான் சில வேளைகளில் பயன்படுத்துவது, எனக்கு ஒரு விபத்தின் பின்னர் என்னால் வடிவாக நடக்க, பாரம் தூக்க முடியாது, நான் ஏதும் பாரம் தூக்கினால் கூட இருப்பவர்கள் கால் கவனம் என்று சொல்லுவார்கள்..அப்போது நான் சொல்லுவது.." இதென்ன பாரம் ஆனையிறவு அடிபட்டில நான் தூக்காததவென" - நான் இருந்த இடமும் ஆனையிறவு அடிபாடு நடந்த இடமும் 200 / 250 மைல் தூர வித்தியாசம், ஆனாலும் நாங்கள் உணர்ந்திருந்தோம் அது எவ்வளவு கடினமென, அந்த உணர்வு எனக்களுக்கு உந்துதலாக இருந்த்தது நாங்களும் இன்னும் கடினமான வேலைகளை செய்யலாம் என.

இன்னுமொரு நல்ல உதாரணம், உங்கள்/ உங்களை போன்ற ஏனையோரின் பயண அனுபவங்கள் எனது/ ஏனையோரது எதிர்கால பயண திட்டமிடல்களில் ஏலவே இணைந்துவிட்டது.

நேரம் இருந்தால் எழுதுங்கள் ஓசியில் வசிப்பதர்ற்கு என்றுமே தயங்கியதில்லை :)

எல்லோரும் சொல்வதைப்போல் நானும் சொல்ல விரும்பவில்லை. பட்டவனுக்குத் தான் அதன் வடுக்களும் வலிகளும் தெரியும் என்பது எனது நிலைப்பாடு.ஒருவரின் மனதைக் காயப்படுத்தி அதில் வரும் ரத்தத்தை சுவைப்பது என்பது குரூரத்தன்மையானது. நீங்கள் மனதால் பாதிக்கப்பட்டு நாங்கள் இன்புற நாம் தயாரில்லை. :):):)

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய தகவல்கள் சேமித்து வைக்கிறன் சாத்திரியார்...................... உங்களிடம் பல விஷயங்களை கற்கனும்!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெல்கம்மில் நான் தங்கியிருப்பதற்காக பிரான்சிலிருந்து புறப்படுமுன்னரே ஒரு வீடு ஒன்று பார்க்கச்சொல்லி நண்பனிடம் சொல்லியிருந்தேன். ஏனென்றால் விடுதிகளில் செலவு அதிகம் அதைவிட நண்பர்கள் வந்தால் தங்கி போவதும் சிரமம்.எனவேதான் வீடு வாடைகைக்கு எடுத்து தங்க முடிவுசெய்திருந்தேன். வீடு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்த நண்பன் பெல்கம் காம்ப் பகுதியில் ஒரு வீடு இருக்கிறது ஆனால் அது பேய்வீடு என்று இங்கை கதைக்கிறாங்கள். ஒருவருசமாய் யாருமே அங்கை இல்லை .கடைசியாய் ஒரு முஸ்லிம் குடும்பம் ஒன்றுதான் இருந்தது அந்தக் குடும்பத்திற்கு பிறகு யாரும் அங்கு இல்லை என்கிற தகவலையும் சொல்லியிருந்தான். நாங்க பேயோடையே குடும்பம் நடத்திறவங்கள் இதற்கெல்லாம் பயப்பிடுவமா?? போசாமல் வீட்டை எடுத்திட்டு எவ்வளவு வாடைகை என்றுமட்டும் சொல்லு என்று நான் சொன்ன பதிலை கேட்டு என்ரை மனிசி நுள்ளின நுள்ளையும் தாங்கியபடி சொல்லி முடித்தேன்

வீட்டின் சொந்தக்காரர் பெங்களுரில் இருந்தார் அவரிற்கோ வீட்டில் போய் இருப்பதாக அந்தப்பகுதியில் கதை பரவியிருப்பதால் யாரும் வாடைகைக்கு வீடு கேட்டுவராத கவலையில் இருந்தார். அதனால் அவரிற்கு அந்த வீட்டில் யாராவது குடியிருந்து வீட்டில் பேய் இல்லையென்று அக்கம் பக்கதாரிற்கு நிருபித்தாலே போதுமானதாக இருந்தது. எனவே வாடைகையெல்லாம் வேண்டாம் ஏதோ பார்த்து கொடுக்கச்சொல்லிவிட்டார்.

மறுநாள் காலை பெல்கம் வந்திறங்கியிருந்தேன்.முதல் இரண்டு நாட்கள் சரியான நித்திரையில்லை பயணக்களைப்பு என்று சரியான அலுப்பாக இருந்தது. குளித்து காலை சாப்பிட்டுவிட்டு படுத்ததுதான் தெரியும் வீட்டின் கூரையில் யாரோ ஓடுவதுபோல சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து நேரத்தை பார்த்தேன் 6மணியாகி இருட்டத்தொடங்கியிருந்தது. நடுச்சாமத்தில் தானே பேயவரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதென் பேய் மாலையிலேயே நேரத்தோடை வந்திட்டிது என்று நினைத்து வெளியே வந்து பார்த்தேன் கூரையில் ஒரு ஆடு ஒன்று துள்ளி விழையாடிக்கொண்டிருந்தது.

DSCF0046.jpg

கர்நாடகா மானிலத்தின் பெல்கம் பகுதி இந்தியாவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி முகாம்களில் பெலகம் இராணுவ முகாமும் ஒன்றாகும். இராணுவ தொழில் நுட்பக்கல்லூரியில் பூனேக்கு அடுத்ததாக பெல்கம் இராணுவத்தொழில் நுட்பக் கல்லூரியே பெரியது என்று சொல்லலாம். அதைத்தவிர சிறப்பு அதிரடிப்படை பயிற்சி முகாம். அனைத்துலக இராணுவ கூட்டுப்பயிற்சி முகாம்.இராணுவ வைத்தியசாலை இராணுவக்குடியிருப்புக்கள்.என பல ஏக்கர் பரப்பளவில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான இடமாக விரிந்திருக்கும் பகுதி. இங்கு 93 இறுதியில் புலிகள் அமைப்பு ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு திட்டம் தீட்டியிருந்தனர். அது முழுக்க முழுக்க இந்தியாவிலிருந்து வந்து புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களை வைத்தே மேற்கொள்ளப்படவிருந்த திட்டம். ஆனால் அதற்கிடையில் புலிகள் அமைப்பில் மாத்தையாவின் பிரச்சனையால் இந்தத் திட்டம் கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

இந்திய உளவுப்பிரிவினரிற்கும் புலிகளின் உளவுப்பிரிவினரிற்கும் நடந்த கண்ணாமூச்சி விழையாட்டில். புலிகளின் உளவுப்பிரிவு மாத்தையா விடயத்தில் அவசரப்பட்டு இந்தியாவின் சதித்திட்டத்திற்கு பலியாகிவிட்டிருந்தனர் என்பதுதான் என்னுடைய கருத்து.விசாரணைகளின் பின்னர் மாத்தையா கொல்லப்பட்டார். அதனால் பல அனுபவமிக்க போராளிகளையும் புலிகள் இழக்கவேண்டி ஏற்பட்டது.ஆனால் அது சண்டைகள் நடந்தகாலம் என்பதால் அந்த இழப்புகளையும் மாத்தையா ஆதரவாளர்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள்கள் மற்றும் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்டிருந்த விரிசல் அனைத்து விடயங்களையும் பூனகரி தவளைப்பாச்சல் நடவடிக்கை மூலமும் புலிகள் ஈடுகட்டி அதிலிருந்து மீண்டிருந்தனர்.ஆனால் கருணா விடயம் சமாதான காலமென்பதால் புலிகளால் அதன் இழப்பிலிருந்து மீழமுடியாமல் போய்விட்டது.

93 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட பெல்கம் பகுதியில் அந்த நடவடிக்கை நடந்தேறியிருந்தால் இந்திய அரசு புலிகளிடம் பேரம்பேசும் நிலைக்கு வந்திருக்கும். புலிகளின் வராலாற்றியல் அது வளர்ச்சி பாச்சலாக இருந்திருக்கும். ஆனால் நான் ஆரம்பதிலேயே சொன்னது போல வெறும் ஊகங்களால் மட்டும் வரலாற்றை மாற்றிவிட முடியாது. எது எப்படி நடக்கவேண்டும் என்பதை காலம் தீர்மானித்து வரலாற்றை எழுதிச்செல்கின்றது. அதில் இப்படி நடந்திருந்தால் அப்படி நடக்காமல் போயிருகலாம் என நாம் உச்சுக்கொட்டத்தான் முடியும்.இங்கு முகாம் பகுதியில் உள்ளதொரு வீதிக்கு மெட்ராஸ் வீதி என பெயரிட்டுள்ளனர். காரணம் அங்கு இராணுவத்தில் உள்ளவர்களில் தமிழ் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்த வீதியிலேயே குடியிருப்பதால் அதற்கு மெட்ராஸ் வீதியென பெயரிட்டுள்ளனர். இது இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியெனபதால் கர்நாடகா மானிலத்தில் அடிக்கடி தமிழருக்கெதிரான வன்முறைகள் வெடிக்கும் போதெல்லாம் அந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாப்புத்தேடி மெட்ராஸ் வீதிக்குள் புகுந்துவிடுவார்கள். கர்நாடகாவில் தமிழருக்கெதிரான வன்முறைகள் மட்டுமல்ல மராட்டியருக்கு எதிரான வன்முறைகளும் அடிக்கடி நடக்கும். ஆனால் மராட்டியர்கள் கர்நாடகத்தில் வர்த்தகர்களாகவும் பணக்கரர்களாகவும் இருப்பதோடு மராட்டியர்களிற்கு ஆதரவாக பால்தக்கரே உடனே மும்பையில் போர்க்கொடி தூக்குவார். அதனால் கன்னடர்களின் பருப்பு அவ்வளவாக மராட்டியர்களிடம் வேகுவதில்லை. தமிழருக்காக தமிழ்நாட்டில் கவிதை எழுத மட்டுமே ஒரு தலைவர் இருந்ததனால் அதிகமாக அடிவாங்குவது தமிழர்களே.

நான் பெல்கம்மில் நின்றிருந்த நேரம்தான் வெளிநாடுகளில் நடக்கும் கணிவேல் போல ஆழும் பாரதீய ஜனதா அரசு கன்நாடகா மேளா என மிகப்பெரியதொரு நிகழ்வினை நடத்தியிருந்தனர். அனைத்து இடங்களில் இருந்தும் கன்னட பிரபலங்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதம விருந்தினராக ஜஸ்வர்யா ராய் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவர் கன்னடாவை பூர்வீகமாக கொண்டவர் என தெரிந்தது. மற்றும் எம்மவர்களிற்கு தெரிந்த பிரபலங்கள் ரஜனிகாந். எஸ்.பி பலசுப்பிரமணியம் ஆகியோரும் வந்திருந்தனர்.திறந்தவெளி மைதானத்தில் எஸ்.பி யின் கச்சேரியும் (கன்னடப்பாடல்கள்தான்)நடந்தது.ஜஸ்வர்யாவை பார்ப்பதற்காக இளைஞர் கூட்டம் அலைமோதியது.

இந்தியாவில் மராட்டியர்கள் எந்த மானிலத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் அதிகமாக வாழும் இடம்தில் தங்களின் தனித்துவத்தை நிலை நாட்ட மராட்டிய மன்னன் வீரசிவாஜின் சிலையை நிறுவியிருக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் எந்த மானிலத்தில் வாழ்ந்தாலும் ராஜராஜ சோழனின் சிலை வேண்டாம் ஒரு வள்ளுவர் சிலையைகூட வைக்கவில்லை என்பது நெருடலாக இருந்தது.

DSCF0113-1.jpg

DSCF0151.jpg

Edited by sathiri

கர்நாடகா மானிலத்தின் பெல்கம் பகுதி இந்தியாவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி முகாம்களில் பெலகம் இராணுவ முகாமும் ஒன்றாகும். இராணுவ தொழில் நுட்பக்கல்லூரியில் பூனேக்கு அடுத்ததாக பெல்கம் இராணுவத்தொழில் நுட்பக் கல்லூரியே பெரியது என்று சொல்லலாம். அதைத்தவிர சிறப்பு அதிரடிப்படை பயிற்சி முகாம். அனைத்துலக இராணுவ கூட்டுப்பயிற்சி முகாம்.இராணுவ வைத்தியசாலை இராணுவக்குடியிருப்புக்கள்.என பல ஏக்கர் பரப்பளவில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான இடமாக விரிந்திருக்கும் பகுதி. இங்கு 93 இறுதியில் புலிகள் அமைப்பு ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு திட்டம் தீட்டியிருந்தனர். அது முழுக்க முழுக்க இந்தியாவிலிருந்து வந்து புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களை வைத்தே மேற்கொள்ளப்படவிருந்த திட்டம். ஆனால் அதற்கிடையில் புலிகள் அமைப்பில் மாத்தையாவின் பிரச்சனையால் இந்தத் திட்டம் கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

93 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட பெல்கம் பகுதியில் அந்த நடவடிக்கை நடந்தேறியிருந்தால் இந்திய அரசு புலிகளிடம் பேரம்பேசும் நிலைக்கு வந்திருக்கும்.

இது பயணக்கட்டுரையா.....இல்ல..பக்காவா.... தமிழகத்திலும், புலத்திலும்...இன்னும் எஞ்சி இருக்குற புலி ஆதரவாளர்களுக்கு நீங்க வைக்குற ஆப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்காக தமிழ்நாட்டில் கவிதை எழுத மட்டுமே ஒரு தலைவர் இருந்ததனால் அதிகமாக அடிவாங்குவது தமிழர்களே.

வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதேன்பது ஒரு தனிக்கலை!

அது எல்லாருக்கும் இலகுவாக வந்து விடாது!

இயக்கம் பற்றி மட்டுமல்ல, பொதுவாக இந்தியா பற்றிய ஒரு அறிவூட்டலையும் உங்கள் பயணம் தருகின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தஸ் அண்ணா அது பேய் தான் ஆட்டின்ட உறுவத்தில வந்திருக்கு....போட்டோ எல்லாம் நன்னா இருக்கு அத விட போட்டோல இருக்கிறவ சூப்பரா இருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தஸ் அண்ணா அது பேய் தான் ஆட்டின்ட உறுவத்தில வந்திருக்கு....போட்டோ எல்லாம் நன்னா இருக்கு அத விட போட்டோல இருக்கிறவ சூப்பரா இருக்கு....

ஓ பேய் ஆட்டிலை வாறபடியாலைதான் பேய் ஆடுறதெண்டு சொல்லுறவையா?? ^_^ அந்த பால்குடப்படம் யாழ் மட்டுஸ் நிழலிக்காக விசேசமாய் இணைச்சனான். அதைபாத்து கொமென்ற அடிச்சிட்டு யாழிலை வெட்டுவாங்கினால் நான் பொறுப்பில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பயணம்..நீங்கள் அனுபவித்ததை உங்கள் எழுத்து வழியே எங்களுக்கும் மிக அழகாக் காட்டிவருகிறீர்கள்...நன்றி..

நிற்க..ஒரு வேண்டுகோள்..சாத்திரி அண்ணை போராட்டத்துடன் பிணைந்த உங்களுடைய சுயசரிதையே புதிர் நிறைந்த அழகான கதையாக இருக்கும்போல இருக்கு.. நிறைய விசயங்கள் உங்களுக்குத்தெரிந்திருக்கிறது..எப்ப எங்களுடனும் அவற்றைப் பகிரப்போகிறீர்கள்..?

அதுதான் இங்ங அடிக்காமல் அங்க அடிச்சனான் :D

  • கருத்துக்கள உறவுகள்

டோன் வொரி சாத்ஸ் அண்ணா நாங்க கதைக்கிற மாட்டரே அவருக்கு றொம்ப பிடிச்ச சப்ஜக்ட் தானே........நிழலி அண்ணா கேட்ட ஜலயா மாட்டரையும் எழுதினிங்கன்னா நல்லா இருக்கும்...

ஏன் என்டா ஒரு மசலா திரைப்படம் மாதிரி தான் கதையும் இருக்கனும்...

பாட்டு பைட் அப்பிடியே கொன்ஞம் அது ......அப்ப தான் வாசிக்க ஒரு இதா இருக்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பயணம்..நீங்கள் அனுபவித்ததை உங்கள் எழுத்து வழியே எங்களுக்கும் மிக அழகாக் காட்டிவருகிறீர்கள்...நன்றி..

நிற்க..ஒரு வேண்டுகோள்..சாத்திரி அண்ணை போராட்டத்துடன் பிணைந்த உங்களுடைய சுயசரிதையே புதிர் நிறைந்த அழகான கதையாக இருக்கும்போல இருக்கு.. நிறைய விசயங்கள் உங்களுக்குத்தெரிந்திருக்கிறது..எப்ப எங்களுடனும் அவற்றைப் பகிரப்போகிறீர்கள்..?

பல புதிர்கள் நிறைந்த பயணங்கள் எல்லாவற்றையும் எழுதும் சூழல் இல்லை. ஆனால் புலிகள் அமைப்பின் நிலத்திலும் பின்னர் கடலிலும் அதன் பின்னர் ஆகாயத்திலும் களமாடிய வரலாறுதான் அனைவரிற்கும் தெரிந்தது. ஆனால் அதையும் தாண்டி சர்வதேச நிலையில் அவர்களது பலமான வலையமைப்பு உலக வல்லரசுகளையே திணறடித்த திறமைசாலிகள். இதைப்பற்றிய விபரங்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்களில் 5 சத வீதத்திற்கும் குறைவானவர்களிற்கே தெரிந்திருக்கும். அதைப்பற்றி பொதுமக்களிற்கு ஒரு வீதம் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வெளியுலக கட்டமைப்பில் கிட்டத்தட்ட 90 பேரிற்கு மேல் உயிர் தியாகங்களை செய்திருக்கிறார்கள் அவர்கள் பெயர் விபரங்கள் கூட வெளிவந்ததில்லை. இவர்கள் கரும் புலிகளிற்கு நிகரானவர்கள். ஆனாலும் என்னபயன். விரக்தி. வெளியுலக கட்டமைப்பை பற்றி விபரமாக எழுதவும் முடியாது :(

அதுதான் இங்ங அடிக்காமல் அங்க அடிச்சனான் :D

இப்ப புரியிது

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னரே சொன்னது போல் நாடு கிடைத்திருந்தால் ஒரு புத்தகமாக அதனை வெளியிட்டிருப்பேன் ஆனால் இனி அதையெல்லாம் எழுதி என்ன ஆகப்போகின்றது என்கிற விரக்தி வந்துவிட்டது. :(

நெப்போலியன் பல முறை போரில் தோற்ற போதும் இன்றும் மாவீரன் நெப்போலியன் என அழைக்கப்பட்டது மட்டுமில்லாமல் அவனது தோல்விகள், வெற்றிகள் எல்லாம் எழுத்தில் உள்ளது.காரணம் நெப்போலியனுக்கு அடுத்த சமுதாயம் பாடங்களை கற்றுக்கொள்ளும் என்பதற்காகவே எல்லாம் எழுத்தாக்கம்(documents) செய்யப்பட்டுள்ளது.இது போல் நாம் தோற்று விட்டோம் என்ற விரக்தியில் அடுத்த தலைமுறைக்கு தெரிவிக்காமல் விடுவது தவறு என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பல புதிர்கள் நிறைந்த பயணங்கள் எல்லாவற்றையும் எழுதும் சூழல் இல்லை. ஆனால் புலிகள் அமைப்பின் நிலத்திலும் பின்னர் கடலிலும் அதன் பின்னர் ஆகாயத்திலும் களமாடிய வரலாறுதான் அனைவரிற்கும் தெரிந்தது. ஆனால் அதையும் தாண்டி சர்வதேச நிலையில் அவர்களது பலமான வலையமைப்பு உலக வல்லரசுகளையே திணறடித்த திறமைசாலிகள். இதைப்பற்றிய விபரங்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்களில் 5 சத வீதத்திற்கும் குறைவானவர்களிற்கே தெரிந்திருக்கும். அதைப்பற்றி பொதுமக்களிற்கு ஒரு வீதம் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வெளியுலக கட்டமைப்பில் கிட்டத்தட்ட 90 பேரிற்கு மேல் உயிர் தியாகங்களை செய்திருக்கிறார்கள் அவர்கள் பெயர் விபரங்கள் கூட வெளிவந்ததில்லை. இவர்கள் கரும் புலிகளிற்கு நிகரானவர்கள். ஆனாலும் என்னபயன். விரக்தி. வெளியுலக கட்டமைப்பை பற்றி விபரமாக எழுதவும் முடியாது :(

சாத்திரி அண்ணை இப்படிதான் புலிகள் அமைப்பும் மக்களுக்கு ஒன்றையுமே தெளிவு படுத்தாமல் மறைந்ததால்தான் இப்ப நிறைய பிரச்சனைகள் கண்டவன் எல்லம் கேள்வி கேட்கிறான்......

இந்த ஆவணப்படுத்தல் அல்லது அது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தல் சம்பந்தமாக நான் நினைக்கிறன் 1998 - 1999 காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு பபகுதியில் அமைந்துள்ள நடுவப்பணியக பொறுப்பாளர் (அருள்தாஸ் பின்னர் வெளிநாடு அனுப்பப்பட்டதாக அறிந்தேன்) பல முறை கதைக்கும் சந்தர்பம் கிடைக்கும் (என் அக்காவும் அப்போது போராளி அதன் முலம் பழக்கம் ஏற்பட்டது) மக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தல் சம்பந்தமாக அவருடன் தர்க்கங்கள் கூட ஏற்பட்டது பின்னர் நான் விட்டு விட்டேன் இது பற்றி கதைக்க கூடாது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

. பிரதம விருந்தினராக ஜஸ்வர்யா ராய் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவர் கன்னடாவை பூர்வீகமாக கொண்டவர் என தெரிந்தது.

ஐஸ்வர்யா துளு(அல்லது துளுவம்) இனத்தினைத் தாய் மொழியாகக் கொண்டவர். இம்மொழி ஒரு திராவிட மொழியாகும். தமிழில் இருந்து பலவருடங்களில் தோன்றிய மொழி தான் துளு.தென் கன்னடா, உடுப்பி ஆகிய கர்நாடக மானிலத்தில் பேசப்படும் இம்மொழியை தற்போது இரண்டு மில்லியனுக்கும் சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர்.

அப்ப ஜஸ்வரியா நம்ம ஆளு ....என்று அப்பு சொல்லுறார்.....இப்ப தமிழனை கண்டால் துளு காரனுக்கும் பிடிக்குது இல்லை :D

பல புதிர்கள் நிறைந்த பயணங்கள் எல்லாவற்றையும் எழுதும் சூழல் இல்லை. ஆனால் புலிகள் அமைப்பின் நிலத்திலும் பின்னர் கடலிலும் அதன் பின்னர் ஆகாயத்திலும் களமாடிய வரலாறுதான் அனைவரிற்கும் தெரிந்தது. ஆனால் அதையும் தாண்டி சர்வதேச நிலையில் அவர்களது பலமான வலையமைப்பு உலக வல்லரசுகளையே திணறடித்த திறமைசாலிகள். இதைப்பற்றிய விபரங்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்களில் 5 சத வீதத்திற்கும் குறைவானவர்களிற்கே தெரிந்திருக்கும். அதைப்பற்றி பொதுமக்களிற்கு ஒரு வீதம் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வெளியுலக கட்டமைப்பில் கிட்டத்தட்ட 90 பேரிற்கு மேல் உயிர் தியாகங்களை செய்திருக்கிறார்கள் அவர்கள் பெயர் விபரங்கள் கூட வெளிவந்ததில்லை. இவர்கள் கரும் புலிகளிற்கு நிகரானவர்கள். ஆனாலும் என்னபயன். விரக்தி. வெளியுலக கட்டமைப்பை பற்றி விபரமாக எழுதவும் முடியாது :(

அதனால் தானே எவ்வளவு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தும் உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அப்ப ஜஸ்வரியா நம்ம ஆளு ....என்று அப்பு சொல்லுறார்.....இப்ப தமிழனை கண்டால் துளு காரனுக்கும் பிடிக்குது இல்லை :D

தமிழனைக்கண்டால் தமிழனுக்கே பிடிக்குதில்லை, இதில துளுகாரனை என்ன சொல்வது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.