Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொட்டை மாடிக் கனவுகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது. ஒரு ஒன்று கூடல் மாதிரி பேசிப் பறைந்து விட்டுக் கலைவார்கள். இளந்தாரிப் பெடியள் ஒரு ரேடியோவைக் கையில் வைத்து அங்கையிங்கை திருப்பி வருகிற இரைச்சல் சவுண்டுகளையும் புரியாத மொழிகளையும் பைலட்காரர் கதைப்பதாகச் சொல்வார்கள். அது உண்மைதானா அல்லது இலங்கை வானொலியின் சிங்களச் சேவையில் போன ஏதும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிதானா என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

யாழ்ப்பாண ரவுணில் திருமணம் நடந்த அன்றே ஷெல்லடியில் கணவன் இறந்த கதையொன்றை அப்படியொரு ஊர் திரண்ட பொழுதில்த்தான் யாரோ சொல்லி நான் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. நாங்கள் வீடு கட்டும்போதும் இப்படிப் பிளேட் வீடொன்றுதான் கட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அப்படிப் பின்னர் நடக்கவில்லை. உண்மையில் பின்னாட்களில் யாரும் சிமெந்துப் பிளேட்டுக்கடிகளில் அடைக்கலம் தேடவேண்டியிருக்கவில்லை. அவ்ரோ சகடை புக்காரா சுப்பர்சொனிக் என வந்த புதுப்புது ஐட்டங்கள் பிளேட்டுக்களைப் பிய்த்து எறியத் தொடங்கியிருந்தன. நாங்கள் பிளேட்டுக்கு கீழே பதுங்குவதை விட்டு வெளியான இடங்களில் குப்புறப் படுக்கத் தொடங்கினோம். பதுங்கு குழிகளும் இருந்தன. அவை பாம்புகளுக்கு….

எங்களது வீட்டில் போர்ட்டிகோ என்ற ஒன்றிருந்தது. பெரும்பாலும் ஓட்டு வீடுகளுக்கு முன்னால் ஒரு தாழ்வாரம் போல சிமெந்து பிளேட்டினால் அது அமைக்கப்பட்டிருக்கும். அதற்கும் மொட்டை மாடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் நிலத்திலிருந்து பத்தடி துாரம் உயர இருத்தல் என்பதை சாகசம் என நினைக்கிற அந்தச் சின்ன வயதில் எனது மொட்டை மாடி அதுதான். அத்தனைக்கும் நினைத்த மாத்திரத்தில் ஏறிவரக் கூடியதாக அது இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் இருக்கிற அன்ரனா பைப்பைப் பிடித்து மேலேறி ஓட்டுக் கூரையை அடையை வேண்டும். கிறீஸ் பூசிய வழுக்கு மரத்தில் ஏறுவதைப் போன்றிருக்கும் அது. பிறகு ஓட்டுக் கூரையில் உச்சத்துக்கு ஏறி முன்பக்கமாக இறங்கி இந்த ஐந்தடிக்கு ஐந்து மொட்டைமாடிகை்கு வரவேண்டும். கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் அதில் உட்கார்ந்து கொண்டு படலையைத் திறந்து வருகிறவர்களுக்கு ஒரு வணக்கம் சொல்வதில் அவ்வளவு கிக்.

இப்ப நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி விட்டிருந்தேன். பாஞ்சாலியாக, ரீச்சராக, குடும்பத் தலைவியாக என ஐயாத்துரை மாஸ்ரரின் அத்தனை நாடகங்களிலும் முடிமயிருக்கும் இரண்டு பாதிச் சிரட்டைக்கும் வேலை வைக்கிற வேடங்கள்தான் காலம் முழுக்க எனக்குக் கிடைத்தன. ஐயாத்துரை மாஸ்ரர் நாட்டியப் பேரொளி பத்மினியின் ரசிகர். அவரது எல்லா நாடகங்களிலும் பத்மினியின் பாட்டொன்றும் நாட்டியமும் கட்டாயம் இருக்கும். அப்படியான கன்ராவிக் காட்சிகளுக்குரிய சிற்றுவேசன்களை என் மூலமாகவே நாடகத்தில் உருவாக்கிக் கொள்வார் அவர்.

“அத்தான்”

“ம்”

“அத்தான்”

“ம்..”

“அத்தான் நாமிருவரும் இன்று வெளியே இசை நிகழ்ச்சியொன்றுக்கு போவோமா.. நீண்ட நாட்களாகி விட்டது அத்தான்”

பேந்தென்ன.. நானும் “அவரும்” இசை நிகழ்ச்சிக்கு ஜோடியாகப் போவோமாம். மேடையிலேயே வரிசையில் உட்காருவோமாம். ஐயாத்துரை மாஸ்ரரின் மகள் மேனகா கிடதொம் கிடதொம் என்ற இசை முழங்கிட மேடையில் குதித்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என ஆடிப் பாடுவாவாம். நடனம் முடிய அற்புதம் அத்தான் அற்புதம் என சொல்லிவிட்டு சேலை நுனியைப் பிடித்தவாறே நான் அவரோடு அடுத்த காட்சிக்குப் போவேனாம்.

மேற்கண்ட நாடக ஒத்திகைகளை நான் போர்டிக்கோ மேல்த் தளத்தில் செய்யத் தொடங்கியிருந்தேன். “அத்தான் கணநேரம் கூட உங்களைப் பிரிந்து இருக்க முடியவில்லையே அத்தான்.. பிரிந்திருக்க முடியவில்லையே” வகையறா வசனங்களை எல்லோரும் நக்கலடிக்கத் தொடங்கிருந்தார்கள். வெட்கத்தில் மேலேறிவந்து பிராக்டிஸ் செய்தேன். எனக்கது பிடித்திருந்தது. யாரும் என்னைக் கவனிக்காதபடிக்கு மறைந்து “உங்களைப் பிரிந்து வாழும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகம் போல கழிகிறதே அத்தான் ஒரு யுகம் போல கழிகிறதே..” என வசனங்களை சத்தமாகச் சொல்லிப் பழக அந்த சின்ன மொட்டைமாடி எனக்கிருந்தது.

ஐயாத்துரை மாஸ்டர் கடைசி வரை என்னை ஆம்பிளையாக்கவே இல்லை. மீசை வளர நாளாகிறது என்பதற்காக அவர் என்னை அப்படிச் செய்யமுடியாது என நான் முடிவெடுத்தேன். அவருடைய நாடகக் குழுவில் அதிருப்தியாளர்கள கொஞ்சப் பேரைச் சேர்த்துக்கொண்டு நான் எழுதத் தொடங்கினேன் நாடகம். கதையெல்லாம் எழுதி ஈழநாதம் வெள்ளி மஞ்சரிக்கும் சாளரத்துக்கும் வெளிச்சத்துக்கும் அனுப்பத்தொடங்கிய பிறகு (Please note : அனுப்பத்தொடங்கிய… மட்டும்) நாடகம் எழுதுவது கஸ்டமாகத் தெரியவில்லை. அப்படி உருவாகியது எல்லாளன் நாடகம். முன்னாள் அனுபவக் கடுப்போ என்னவோ அந்த நாடகத்தில் பெண் கதாபாத்திரமே இல்லை. துட்டைகைமுனுவாக நான், எல்லாளன், அவனது படைத்தளபதி, துட்டைகைமுனுவின் தம்பி என ஒரே அமர்க்களம்தான்.

நாடகம் பழகத்தொடங்கிய இரண்டாவதோ மூன்றாவதோ நாள் வசனங்களை சொல்லிப்பழக என் சின்ன மொட்டைமாடி மேலே ஏறிய எனக்கு – உடனடியாக இறங்கச் சொல்லி ஓடர் வந்தது. இனிமேல் அங்கே எக் காரணத்தைக் கொண்டும் ஏறக் கூடாதென்றும் சொல்லப்பட்டது.

அந்த மேல்த் தளத்தில் நின்று பார்க்கின்ற போது முன்வீட்டுப் பின்வளவின் ஒரு மூலையோரமாக இருந்த கிணற்றடியில் குளிப்பது தெரிகிறது என மூன்று பொம்பிளைப் பிள்ளைகளின் அந்த வீட்டு அம்மா கொம்பிளைன்ட் பண்ணியதைத் தொடர்ந்து இந்தத் தடையுத்தரவு வந்தது. அப்படி எனக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை. அவர்களில் யாரோவுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்…

எனக்கென்னவோ முதன்முதலா நான் ஆம்பிளை வேடம் போட்டதற்கும் அந்தச் சம்பவத்திற்கும் ஏதாவது பட்டர்பிளைத் தொடர்புகள் இருக்குமோ என இப்ப தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பேந்தென்ன.. நானும் “அவரும்” இசை நிகழ்ச்சிக்கு ஜோடியாகப் போவோமாம். மேடையிலேயே வரிசையில் உட்காருவோமாம். ஐயாத்துரை மாஸ்ரரின் மகள் மேனகா கிடதொம் கிடதொம் என்ற இசை முழங்கிட மேடையில் குதித்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என ஆடிப் பாடுவாவாம். நடனம் முடிய அற்புதம் அத்தான் அற்புதம் என சொல்லிவிட்டு சேலை நுனியைப் பிடித்தவாறே நான் அவரோடு அடுத்த காட்சிக்குப் போவேனாம்.

அழகிய படைப்பு சயந்தன்! தொடர்ந்து எழுதுங்கள்!!!

ஐயாத்துரை மாஸ்டருக்கு மட்டுமல்ல, எனக்கும் தான் அந்தப் பாட்டில் ஒரு பிடிப்பு இன்றும் உண்டு!

'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?

மலையழகா, கோவில் சிலையழகா!

இசையும் தமிழும் சேர்ந்து விளையாடும் ஒரு பாடல் அது!!!

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு நாடகம் போட்டீர்களா! :)

மொட்டை மாடி என்றதும் இந்தியா மொட்டை மாடி என்று நினைத்துவிட்டேன். மொட்டை மாடியிலிருந்து அரட்டையடிப்பதில் ஒரு தனிச்சுகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் கதை சொல்ல தெரிகிறது .மேலும் தொடருங்கள்.

Edited by நிலாமதி

கதை நன்றாக இருக்கிறது சயந்தன்.

மொட்டை மாடி என்றதும் சென்னை மொட்டை மாடிகளில் இரவு நேரங்களில் நண்பர்களுடன் வாழ்ந்த இனிமையான காலங்கள் ஞாபகம் வந்து போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை ஏன் போடவில்லை :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை.

எங்களது வீட்டில் போர்ட்டிகோ என்ற ஒன்றிருந்தது. பெரும்பாலும் ஓட்டு வீடுகளுக்கு முன்னால் ஒரு தாழ்வாரம் போல சிமெந்து பிளேட்டினால் அது அமைக்கப்பட்டிருக்கும். அதற்கும் மொட்டை மாடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் நிலத்திலிருந்து பத்தடி துாரம் உயர இருத்தல் என்பதை சாகசம் என நினைக்கிற அந்தச் சின்ன வயதில் எனது மொட்டை மாடி அதுதான். ஓட்டுக் கூரையில் உச்சத்துக்கு ஏறி முன்பக்கமாக இறங்கி இந்த ஐந்தடிக்கு ஐந்து மொட்டைமாடிகை்கு வரவேண்டும். கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் அதில் உட்கார்ந்து கொண்டு படலையைத் திறந்து வருகிறவர்களுக்கு ஒரு வணக்கம் சொல்வதில் அவ்வளவு கிக்.

கன பேருக்கு இந்த அனுபவம் இருக்கும்..எதோ மலரும் நினைவுகள் போல் உள்ளது. - நீங்கள் சொல்லுகிற மொட்டை மாடி என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. எனக்கு தெரிய, மொட்டை மாடி என்பது "மேல் வீடு" "upstair house " . மெட்டை மாடி வீடுகள் ஓடுக்கூரையுடனும் பார்த்திருக்கிறேன். நல்ல பதிவு.. மற்றது உந்த குளிச்சுகொண்டிருந்த 3 பிள்ளைகளும் என்ன செயினம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் எப்படி சுகங்கள்?கண்டு கனகாலம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

saygirl-300x222.jpg

ஓகே படம் போட்டிருக்கு சாத்திரி :)

  • கருத்துக்கள உறவுகள்

இதை மாறி தான் அங்கே கண பேர் தேங்காய் புடுங்கிறேன் என மர‌த்தில் ஏறி பக்கத்து வீடுகளில் குளித்துக் கொண்டு இருக்கும் அக்காமாரை எட்டிப் பார்க்கிறவை...நீங்கள் எழுதின விதம் நல்லாயிருக்கு சயந்தன் நான் தான் நேற்று வாசித்துப் போட்டு பச்சை குத்திப் போட்டுப் போனான்...தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை யாழில் இணையுங்கள்.

பி.கு;பெண் வேச‌ம் நன்றாக பொருந்துகிறது

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தல் சயந்தன்

நாடகங்கள் பழகுவது ஒரு கலகலப்பான பக்கம்

பரவாயில்லை ஐயாத்துரை வாத்தியார் சரியான ஆளைச்சரியான பாத்திரத்தில் போட்டிருக்கிறார். உங்களுக்கு இப்படியான கவலை உங்கள் கவலையைப்போல் எனக்கும் இருந்திருக்கிறது. எப்போதுமே நான் நடித்த நாடகங்களில் ஆண் கதாப்பாத்திரம் அதுவும் நகைச்சுவை நிரம்பியதாக இருக்கும் சரியான கவலை கவலையாக வரும். எப்படியாவது ஒரு புடைவை அணிந்த பெண்பாத்திரத்தில் நடித்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டது நிறைவேறவே இல்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வீட்டில் போர்ட்டிகோ என்ற ஒன்றிருந்தது. பெரும்பாலும் ஓட்டு வீடுகளுக்கு முன்னால் ஒரு தாழ்வாரம் போல சிமெந்து பிளேட்டினால் அது அமைக்கப்பட்டிருக்கும். அதற்கும் மொட்டை மாடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வீட்டுக்கு முன் குவிக்கப்பட்ட மணலில் மேலே இருந்து நானும் சகோதரனும் குதித்து விளையாடிய ஞாபகங்கள் வந்து போயின.கதைக்கு நன்றிகள் சயந்தன்.

இது போன்ற போர்ட்டிக்கோவின் மேல் தளத்தில் தனிமையில் அமர்ந்திருந்த அனுபவம் எனக்கும் நிறையவே உள்ளது. சுவாரசியமாக பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு சென்றிருக்கிறீர்கள்.

நாட்கள் சென்றிருப்பினும் ஐயாத்துரை மாஸ்ற்ரரின் குழவை விட்டு விலகித் தனிக்குழு அமைத்தமை இதனால் தான் என்று ஒரு சிறு தன்னிலை விளக்கம் சொல்லவேண்டும் போல் உள்ளுக்குள் ஏதோ நச்சரித்திருக்குமோ? அது போல் அந்த முன்வீட்டு மூவர், செய்யாத குற்றத்தை அபாண்டமாய்ச் சுமத்தியவர்களிற்கு இன்னமும் அந்நிகழ்வு சாதுவாய் வலிக்கிறது என்று ஓங்கிச் சொல்லியிருக்கிறீர்கள் போலுள்ளது.

எனக்கென்னவோ முதன்முதலா நான் ஆம்பிளை வேடம் போட்டதற்கும் அந்தச் சம்பவத்திற்கும் ஏதாவது பட்டர்பிளைத் தொடர்புகள் இருக்குமோ என இப்ப தோன்றுகிறது.

அந்த மூவரின் பார்வையில் ஒருவேளை இப்படியும் ஒரு நியாயம் எழலாம்: ஒன்றிற்கு மூன்றுபேர் கிணத்தைச் சுத்தித் தில்லான ஆடியம், துளியும் கவனியாது மாடியில் எல்லாளனாய் வாழ்ந்து கொண்டு நின்றதால், மன்னர்கள் பாணியில் சின்னதாய் எல்லாளன் வீட்டில் ஆராய்ச்சி மணி அடித்தோம்;, கவனத்தை ஈர்;க்க என்று; :lol::D . இந்த நியாயத்திற்கான சாத்;தியத்தை கடைசிவரியில் “பட்டர்பிளைத் தொடர்புகள் இருக்குமோ” என்று சொல்லியிருக்கிறீர்கள் போலுள்ளது. கதை நன்றாக உள்ளது.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை மாறி தான் அங்கே கண பேர் தேங்காய் புடுங்கிறேன் என மர‌த்தில் ஏறி பக்கத்து வீடுகளில் குளித்துக் கொண்டு இருக்கும் அக்காமாரை எட்டிப் பார்க்கிறவை...

தேங்காய் புடுங்கப் போறவை ஏதோ நினைப்பில மாங்காய் பிடுங்கப் பாத்திருக்கினம் போல..

  • கருத்துக்கள உறவுகள்

saygirl-300x222.jpg

ஓகே படம் போட்டிருக்கு சாத்திரி :)

எதிர் காலத்தில் அந்தப் பெண் ஒரு திரிசா. ஸ்ரேயா.அசினாகவோ வரலாமென ஜயாத்துரை மாஸ்ரர் கனவு கண்டிருப்பார்.அதற்காக ஆண் வேடம் வேண்டுமென்று தனிக்கட்சி தொடங்கியது துரோகம். :lol: :lol: :lol:

கதை பல பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்கு.

நானும் மொட்டை மாடியில இருந்து பாட்டு பாடுறன் என்று கத்தியிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலா நான் ஆம்பிளை வேடம் போட்டதற்கும் அந்தச் சம்பவத்திற்கும் ஏதாவது பட்டர்பிளைத் தொடர்புகள் இருக்குமோ என இப்ப தோன்றுகிறது.

அதையும் தாண்டி ஒரு புனித தொடர்பு இருந்திருக்க வேண்டும்... :D:D .சயந்தன் .மீண்டும் உங்கள்படைப்புக்கள் யாழில் வரவேண்டும்....

நானும் மொட்டை மாடியில இருந்து பாட்டு பாடுறன் என்று கத்தியிருக்கிறன்.

நல்ல வேளை பக்கத்து வீட்டில நாங்கள் இருக்கவில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான கதை!

போர்டிகோ - எங்கள் ஊரில் "ஹூட்" என்றுதான் சொல்லுவார்கள். அம்மா கூட்டில ஏறக்கூடாது என்று சொன்னாலும் அதில் ஏறி இருந்துதான் கதைப்புத்தகம் படிக்கின்றது. முன் ஒழுங்கையால போற/வாற பெட்டையளைப் பார்க்கிறது. நல்ல காலம் ஒருதரும் கொம்பிளையின் பண்ணேல்ல!

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பொம்பிளை சிலுக்குதான்...நிறைய படங்களும் ...படங்களும் இருக்கு....

சயந்தன் உங்கடை நாடக அனுபவ்மும்,,கதையும் அருமை...எனக்கும் பழைய நினைவுகளை  கிளப்பி விட்டுது...அது ஒரு இனிமையான காலம்தான்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான கதை!

போர்டிகோ - எங்கள் ஊரில் "ஹூட்" என்றுதான் சொல்லுவார்கள். அம்மா கூட்டில ஏறக்கூடாது என்று சொன்னாலும் அதில் ஏறி இருந்துதான் கதைப்புத்தகம் படிக்கின்றது. முன் ஒழுங்கையால போற/வாற பெட்டையளைப் பார்க்கிறது. நல்ல காலம் ஒருதரும் கொம்பிளையின் பண்ணேல்ல!

நல்ல காலம் ஒரு பிகரும் மாட்டுப்படேல....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.