Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி'

Featured Replies

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'டீ பார்ட்டிக்கு' அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்திரா காந்தி-எம்ஜிஆர் உருவாக்கிய நீண்ட கால கூட்டணி காங்கிரஸ்-அதிமுக இடையிலான கூட்டணியாகும். பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராகி, ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரான பின்னரும் இக் கூட்டணி நீடித்தது.

ஆனால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிக வலுவான அந்தக் கூட்டணி உடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்தக் கூட்டணி 40க்கு 40 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக காரணமாக அமைந்தது. அடுத்து 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணி வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தீவிரமாக முயன்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் பேசுவதைக் கூட சோனியா தவிர்த்துவிட்டதால் அந்தக் கூட்டணி உருவாகவில்லை.

இந் நிலையில் திமுகவை ஒழித்துக் கட்டுவது என்ற வேலையை காங்கிரசின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல் காந்தி ஆரம்பித்தார். திமுகவுக்கு எல்லா வகையிலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு பேருதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசிய அளவில் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது திமுக. இதனால் திமுகவை கூட்டணியில் வைத்திருந்தால் அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வுவது நிச்சயமாகிவிட்டது. இதற்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி.

இதனால் திமுகவை கழற்றிவிட சோனியாவும்-ராகுலும் முடிவு செய்துவி்ட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவுடனான பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சிகளை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

அடுத்த மாதம் டீ பார்ட்டி-பங்கேற்க ஜெ சம்மதம்:

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு டீ பார்ட்டி தர உள்ளார் சோனியா. இதற்காக டெல்லி வருமாறு ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். சோனியாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும், அடுத்த மாதம் இந்த டீ பார்ட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதில் ராகுல் காந்தியும் பங்கேற்று ஜெயலலிதாவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலையை தீவிரப்படுத்துவார் என்று தெரிகிறது.

(1999ம் ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து சோனியாவுக்கு ஜெயலலிதா டீ பார்ட்டி தந்ததும், இருவரும் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்ததும் குறிப்பிடத்தக்கது.)

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதம் தந்ததை திமுக தலைவர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. காரணம், அது சோனியா-ராகுல் காந்தி மன வருத்தம் தரும் என்பதால்..

அதே போல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 20,000 தமிழர்கள் ஒரு மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும் கருணாநிதி அமைதி காத்தார். காரணம், இதைக் கண்டித்தால் சோனியா-ராகுல் காந்திக்கு கோபம் வரும் என்பதால்.

இப்படி காங்கிரஸ் எவ்வளவு அடித்தாலும் பதவிக்காக அமைதி காத்தார் கருணாநிதி. நாம் சண்டை போட்டால் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி போட்டுவிடும் என்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழர் விரோத செயல்களுக்கு முழு அளவில் துணை போனார்.

ஆனால், எவ்வளவு விரட்டினாலும் வெளியேற மறுத்த திமுகவை ஸ்பெக்ட்ரத்தை வைத்தாவது விரட்ட ராகுல் முயன்றும் முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவிட்ட திமுகவால் இனி தனக்கு பயனில்லை என்பதால் அதை காங்கிரஸ் தூக்கி வீச உள்ளது.

பதவிக்காக காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி செய்த எல்லா துரோகங்களையும் எல்லாம் மறைக்க முயன்ற திமுகவுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாபெரும் தவறு செய்த திமுகவுக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவையே.

திமுகவுடன் கூட்டணி தொடர்கிறதாம்-ஜெயந்தி சொல்கிறார்:

இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறுவதற்கே இந்த டீ பார்ட்டிக்கு சோனியா ஏற்பாடு செய்துள்ளதாகவும், திமுகவுடன் கூட்டணி தொடர்வதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

விருந்துக்கு அழைப்பது அரசியல் நாகரிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டீ பார்ட்டி நடக்கும் வரை ஜெயந்தி நடராஜன் இப்படித்தான் பேசிக் கொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/15/sonia-invites-jaya-tea-party-new-alliance-aid0090.html

கொள்ளேல போனதுகள்.

  • தொடங்கியவர்

சோனியா குடும்பத்திற்கு தம்மை தக்க வைக்க ஜெயலலிதா தேவையாக உள்ளது.

மாற்றுக்கு எமது, தமிழக மக்களின் (மீனவர், கச்சதீவு உட்பட) பிரச்னைகளை சாதுரியமாக ஜெயலலிதா நகர்த்தி உரிமைகளை பெற்றுத்தருவாரானால், அவர் கருணாநிதி சந்தித்த தோல்வியை அடுத்த தேர்தலில் தவிர்க்கலாம்.

சோனியா குடும்பத்திற்கு தம்மை தக்க வைக்க ஜெயலலிதா தேவையாக உள்ளது.

மாற்றுக்கு எமது, தமிழக மக்களின் (மீனவர், கச்சதீவு உட்பட) பிரச்னைகளை சாதுரியமாக ஜெயலலிதா நகர்த்தி உரிமைகளை பெற்றுத்தருவாரானால், அவர் கருணாநிதி சந்தித்த தோல்வியை அடுத்த தேர்தலில் தவிர்க்கலாம்.

... எங்கள் பிரட்சனையே இதுதான்!! ... நாம் ஒரு நிகழ்ச்சி நிரல் வட்டம் வைத்திருக்கிறோம் ... நீங்கள் எல்லாம் அவ்வட்டத்துக்குள் வாருங்கள் .... இல்லையேல் உங்களை எமக்கு தேவையில்லை, அதற்கு மேல் தமிழின விரோதிகள் நீங்கள்!!!!!!!!

... தமிழகமும் இன்றுவரை இந்தியா என்ற நாட்டினுள்ளேயே ... அந்தளவில் ஜெயலலிதாவும் செயற்பட வேண்டி இருக்கும் ... ஆனால் முதல் முறையாக வெற்றி பெற்றவுடன்(இதுவரை அவ்வாறு, அதுவும் பதவியில் அமர போகுமுன் சொன்னதே இல்லை) , எமக்கான அரசியல் தீர்வு, யுத்தக்குற்றங்கள் தொடர்பாக தெளிவான கருத்தை வெளியிட்டிருக்கிறார் ... அதனை எவ்வாறு, அவர் வழி சென்று அறுபடை செயவதென்பதை விட்டு விட்டு ........!!!!!!!!!

[i]... எங்கள் பிரட்சனையே இதுதான்!! ... நாம் ஒரு நிகழ்ச்சி நிரல் வட்டம் வைத்திருக்கிறோம் ... நீங்கள் எல்லாம் அவ்வட்டத்துக்குள் வாருங்கள் .... இல்லையேல் உங்களை எமக்கு தேவையில்லை, அதற்கு மேல் தமிழின விரோதிகள் நீங்கள்!!!!!!!!

அந்த வட்டத்திற்குள் அனாதையாய் தனித்து நிற்கிறோம்.

குறிகிய வீச்ச்சத்திற்குள் சிந்திப்பவர்களால் அம்மையாருக்கும் மிகச் சீக்கிரம் துரோகிப் பட்டம் வழங்கப்படும்.

Edited by thappili

அடுத்த தேர்தலின் பின் அகுதாவின் கருத்து இப்படி இருக்கும்......

சோனியா குடும்பத்திற்கு தம்மை தக்க வைக்க கருணாநிதி தேவையாக உள்ளது.

மாற்றுக்கு எமது, தமிழக மக்களின் (மீனவர், கச்சதீவு உட்பட) பிரச்னைகளை சாதுரியமாக கருணாநிதி நகர்த்தி உரிமைகளை பெற்றுத்தருவாரானால், அவர் ஜெயலலிதா சந்தித்த தோல்வியை அடுத்த தேர்தலில் தவிர்க்கலாம்.

பாவங்கள் நாங்கள்..... :huh:

சோனியா விருந்துக்கு செல்வீர்களா? :ஜெ. பதில்

நாளை முதல்வர் பதவி ஏற்பதை முன்னிட்டு இன்று கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...?

நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.

தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?

எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

ஏற்கனவே கடந்த 13-ந்தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.

மீண்டும் கேட்கிறோம், உங்கள் பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள் வழங்குவீர்கள்?

முதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.

எப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்?

முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?

இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?

நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியின் பின் ஜெயலலிதா விடுத்த ஈழத்தமிழர் தொடர்பான கருத்துக்களால் சோனியா காந்தி கும்பல் மிரண்டு போயிருப்பதாக தெரிகிறது. டீ-பார்ட்டிக்கு ஜெயலலிதாவை வரவழைத்து மாநில அரசுகள் தனிப்பட்ட வெளிவிவகாரக் கொள்கைளைக்கடைப்பிடிக்க முடியாது என்றும் அது மத்திய அரசின் பொறுப்பு மட்டுமே என்பதும் வலியுறுத்தப்படும்.

  • தொடங்கியவர்

08.05.2006-ல் தமிழக சட்டமன்றத்திற்கு 13-வது முறையாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து கொண்டு, 163 இடங்களில் தி.மு.க.வும், 69 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்று கருணாநிதி 5-ம் முறையாக முதல்வர் பதவியேற்றார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு 77 இடங்களில் வெற்றி பெற்றன.

தற்போது 2011 மே மாதம் நடைபெற்ற 14-வது சட்ட மன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 203 தொகுதிகளை பிடித்து ஆட்சி அமைக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி 31 இடங்களை மட்டும் பெற்று தோல்வி முகத்தை தழுவியுள்ளன. இதில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சுருக்கமாக சொல்லுவதெனில், இந்திய சுதந்திரதிரத்திற்கு முன்பும், பின்பும், தேசிய கட்சியான காங்கிரஸ் என்பது, தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் உள்ள தலைவர்கள், தேசிய கட்சியில் செல்வாக்கு வைத்திருந்தால் மட்டுமே, காங்கிரஸ் என்ற தேசிய கட்சிக்கு சிறிதளவாவது இடம் வெற்றி பெற வாய்ப்பிருந்து வந்துள்ளது. அதுவும், 1965க்கு பின்னர், மாநில கட்சி ஒன்றுடன் சேர்ந்து போட்டியிட்டதாலேயே, சில வேளைகளில் சொல்லும்படியான தொகுதிகள் வெற்றி பெற்று வந்துள்ளத தெளிவாய் தெரிகிறது.

2009 மே, முள்ளி வாய்க்கால் ஈழ தமிழ் படுகொலைக்கு பின்னர், கடைக்கோடியில் உள்ள தமிழக மக்களுக்கு, தங்களது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழர்களின் படுகொலைக்கு பின்புலமாய் இருந்து வந்து துரோகமிழைத்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி இனி எப்போதும் எழுந்து விடா வண்ணம், மரண அடியை இந்த தேர்தல் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளதை யாராலும் மறுக்க இயலாதது. மரணமடைந்து அஸ்தமித்து விட்ட காங்கிரஸ் என்னும் துரோக கட்சி, இனி எக்காலத்திலும் மேலே தலை தூக்க முடியாதபடி, தமிழக மக்கள் குழி தோண்டி புதைத்து, பூசை செய்து நடுகல் ஒன்றையும் நினைவாக வைத்து விட்டனர்.

http://www.eutamil.com/?p=24528

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியின் பின் ஜெயலலிதா விடுத்த ஈழத்தமிழர் தொடர்பான கருத்துக்களால் சோனியா காந்தி கும்பல் மிரண்டு போயிருப்பதாக தெரிகிறது. டீ-பார்ட்டிக்கு ஜெயலலிதாவை வரவழைத்து மாநில அரசுகள் தனிப்பட்ட வெளிவிவகாரக் கொள்கைளைக்கடைப்பிடிக்க முடியாது என்றும் அது மத்திய அரசின் பொறுப்பு மட்டுமே என்பதும் வலியுறுத்தப்படும்.

இது கருணாநிதியிடம் எடுபடும்

ஆனால் ஜெயலலிதாவிடம் எதிர் மாறான விழைவுகளையே தரும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.

அத்துடன் இன்றைய தோல்வியின் நிலையில் இது சாத்தியமே இல்லை.

  • தொடங்கியவர்

வெளிவிவகார கொள்கை மத்தியின் கைகளில் தான் உள்ளது. ஆனால் அது தன்னிச்சையாக நூறுவீதம் முடிவுகளை சம்பந்தப்பட மாநில அரசுகளை ஆலோசிக்காமல் எடுத்தால் அது அவர்களை அடுத்த தேர்தலில் தோல்வியை தரும், சில சந்தர்ப்பங்களில் உள்நாட்டு பிரச்சனைகளையும் தூண்டிவிடும்.

தற்போதுள்ள இந்திய அரசியல் நிலைமையில் மத்தியில், தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதை விட கூட்டாட்சி அமைக்கும் சாத்தியங்களே கூடுதலாக உள்ள நிலையில், தமிழக ஆதரவு காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற தேசிய கட்சிகளுக்கு முக்கியமாகின்றது.

தான் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற ஜெயலலிதா அவர்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவையுள்ளது. அதேவேளை காங்கிரசுக்கு தமிழக மாநில கட்சியின், ஜெயலலிதாவின், ஆதரவு தேவையாக உள்ளது. இந்த அரசியல் இராசதந்திர தேவைகள் என்ற நகர்வுகள் ஊடாக ஜெயலலிதா தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டும். அதற்கு தமிழக, உலக தமிழர்கள் விழிப்பாய் இருந்து, தேவையான இடத்தில் ஆதரவும் வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேநீர் விருந்தில் சோனியா காந்தி ஜெயலலிதாவிற்கான அளவீட்டை உணர்த்திவிடுவார். மத்திய அரசோடு முரண்பட விரும்பாத ஜெயலலிதா இன்றைய வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மட்டுப்படுத்திக் கொள்வார். நாற்காலிகளுக்கு மனிதாபிமானம் கிடையாது. அத்தோடு தமிழகத்தில் கடந்தகாலங்களில் ஆட்சியாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் ஒன்று பழிவாங்கும் படலம். ஜெயின் கடந்தகாலங்கள் பழிவாங்கலிலும், பலியானதிலும் அதிகமாகச் செலவழிந்திருக்கிறது. தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை என்பதுபோல் ஜெயலலிதா என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று எல்லோராலும் இலகுவாக கூறக்கூடிய ஒரு பாத்திரப்படைப்பாகவே இதுவரை இருந்திருக்கிறார். இந்த இமேஜை உடைத்து தமிழினத்தின் உன்னதமான அன்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுவரை தமிழகத்து முதலமைச்சர்களால் சாதிக்க முடியாத விடயத்தை முடிந்தால் இவர் சாதிக்கட்டும்.

சாகராவின் கருத்து மிக சரியானது.

ஜெயலலிதா சோனியாவோட சேருகின்றாரோ அல்லது இலங்கை அரசுக்கு சாதகமாக மாறுவாரோ அதற்கு முதல் நாம் அவரை எதிரியாகவோ அல்லது துரோகியாகவோ ஆக்கிவிடுவோம் போலுள்ளது.

பழக்க தோசமும் பொறுப்பிலுள்ளவர்களும் அப்படி என்ன செய்வது.

படித்த கள்வர்களும் படிக்காத ரவுடிகளும் தான் எமது புலம்பெயர் அமைப்புக்கள்.அவை மாறதமட்டும் எதுவும் சாத்தியமில்லை.

ஜெயாவுக்கு இப்ப கூட்டணி அவசியம் இல்லை; தமிழத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்து இருப்பதால்

சோனியாவுக்கும் இப்ப ஜெயின் எம் பி க்கள் தேவை இல்லை ; ஏனெனில் கருணா நிச்சயம் காங்கிரசுக்கு எதிராக இன்றைய நிலையில் போக மாட்டார்

ஆனால் அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இவர்கள் இருவரும் நிச்சயம் கூட்டணி அமைப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

தேநீர் விருந்தில் சோனியா காந்தி ஜெயலலிதாவிற்கான அளவீட்டை உணர்த்திவிடுவார். மத்திய அரசோடு முரண்பட விரும்பாத ஜெயலலிதா இன்றைய வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மட்டுப்படுத்திக் கொள்வார். நாற்காலிகளுக்கு மனிதாபிமானம் கிடையாது. அத்தோடு தமிழகத்தில் கடந்தகாலங்களில் ஆட்சியாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் ஒன்று பழிவாங்கும் படலம். ஜெயின் கடந்தகாலங்கள் பழிவாங்கலிலும், பலியானதிலும் அதிகமாகச் செலவழிந்திருக்கிறது. தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை என்பதுபோல் ஜெயலலிதா என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று எல்லோராலும் இலகுவாக கூறக்கூடிய ஒரு பாத்திரப்படைப்பாகவே இதுவரை இருந்திருக்கிறார். இந்த இமேஜை உடைத்து தமிழினத்தின் உன்னதமான அன்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுவரை தமிழகத்து முதலமைச்சர்களால் சாதிக்க முடியாத விடயத்தை முடிந்தால் இவர் சாதிக்கட்டும்.

அழகிரியின் கைத்தடி பொட்டு சுரேஷ் கைது

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011 15:38

அழகிரியின் கைத்தடியாக செயல்பட்டு, பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு வந்த பொட்டு சுரேஷை மதுரை காவல்துறையினர் திடீரென்று சற்று முன் கைது செய்துள்ளனர் ..

http://savukku.net/component/content/article/8-news/823-2011-05-15-10-10-10.html

டிஸ்கி:

சகோதரி வாயில் யாராவது சர்க்கரை அள்ளி போடுங்கப்பா.. என்ன தீர்க்க தரிசனம்... :D

இனி...

30pic2.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா முழுமையாக நம்பக் கூடிய ஒருவர் அல்ல..!

1996 கலைஞர் பதவிக்கு வரும் முன்.. இவரின் செயற்பாடுகள் சந்திரக்காவோடு சேர்ந்த ஒன்றாக இருந்தது. இவை இலகுவில் மறக்கக் கூடிய விடயங்கள் அல்ல. இருந்தாலும்...

இன்றைய தேவை ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையைப் பயன்படுத்தி தமிழக மக்களின் தார்மீக ஆதரவை வளர்த்துக் கொள்வதுதான். அதைவிடுத்து ஜெயலலிதா எமக்காக துணிந்து பல விடயங்களை செய்ய முன்வருவார் என்பது போல படம் காட்டுவது தற்போதைய சூழலில் ஆபத்தானது.

ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ளாத வகையில் சில நெருக்காமான உறவாடல்களை அவரோடு பேணி அவரின் கடந்த கால நிலைப்பாடுகளில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டினால்.. ஒருவேளை அவர் தனது நிலைப்பாடுகளை திருத்தக் கூடும். அதற்கான வாய்ப்பை ஆராய்ந்து பார்த்து அதனை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா உண்மையில் திருந்தா விட்டாலும்.. அவர் திருந்தியவராக நடிக்க வேண்டிய தேவையை.. தமிழக மக்களின் ஈழத்தமிழர் மீதான அனுதாபம் அவருக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தை தனது அரசியல் முதலீடாக பயன்படுத்தி ஜெயலலிதா மத்தியில் தான் பிரதமராக அமரும் வாய்ப்பையும் தேடிக் கொள்ள முனைவார். அந்த வகையில் தான் நான் முதல்வராக ஒரு எல்லைக்குள் தான் செயற்பட முடியும் என்பதை கோடிட்டு காட்டியுள்ளார். என்னை மத்தியில் செல்வாக்குச் செய்ய வாக்களியுங்கள் நான் ஈழத்தமிழர்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொடுப்பேன் என்றும் நாளை அவர் சொல்வார்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது துயரம் தமிழக திராவிட அரசியல்வாதிகளின் முதலீடாகியுள்ளது. அந்த முதலீட்டினை அவர்கள் பாவிக்கும் போது நாமும் அதனூடு எமக்கான பயனைப் பெற முனைய வேண்டும்.

கருணாநிதியின் வீழ்ச்சி எமக்கு சாதகமற்ற அவரின் அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வி மட்டுமன்றி.. ஈழத்தமிழர்களின் துயர் என்பது மீண்டும் 80களின் பின் தமிழக அரசியலில் செல்வாக்குச் செய்யும் அளவிற்கு அது தமிழக மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வலியை தமிழக மக்கள் உணரச் செய்த இனக் கடமையை செய்தவர்கள்.. அண்ணன் சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயா போன்றவர்களும்.. இன்னும் பல ஈழத்தமிழின ஆதரவாளர்களுமாவர். அவர்களின் தொடர்ச்சியான அரசியல் மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஒத்துழைப்புக்களும் எமக்கு அவசியம்... அவையே எமது பலம்.

ஜெயலலிதா சில விடயங்களில் கொண்டிருக்கும் தெளிவின்மையை போக்க வேண்டியதில்.. தாயக கட்சிகளுக்கும்.. புலம்பெயர் அமைப்புக்களுக்கும்.. தமிழக ஈழ ஆதரவு அரசியல் தலைவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஒரு கடமை உள்ளது. அவர் அவற்றை கேட்டு தெளிகிறாரோ இல்லை நடிக்கிறாரோ நாம் அதனை இட்டு முயற்சிக்க வேண்டும். அவரின் உண்மைச் சொரூபத்தையும் தமிழக மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் இராஜதந்திரம் மூலம் அவரை எம் ஜி ஆர் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டோடு இணைந்து எடுத்த பொது முடிவுக்கு இணங்க நகர்த்தி வர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் பெரு வீழ்ச்சி.. அதுவும் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பில் ஒரு நீலிக்கண்ணீர் வடிக்க வகை செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. திமுக விற்கும் அதே நிலை. இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தமிழக மக்களின் மனங்களில் இடம்பிடித்து.. ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட அவர்களின் பேராதரவை தமதாக்கிக் கொள்வதே பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் எமது குரலுக்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடிய ஒற்றுமையை வாங்கித் தரும்.

அதன் மூலமே சிங்களத்திடமிருந்து சர்வதேசத்தை எமக்கு நாம் விரும்பும் வடிவில் ஆகக் குறைந்த ஒரு தீர்வையாவது நாம் நிம்மதியாக எம் மண்ணின் மைந்தர்களை தொழுது வாழ பெற்றுத் தர வகை உந்தச் செய்ய முடியும்..!

சிந்திப்போம் செயற்படுவோம். வெறும் உணர்ச்சிப் பெருக்குகளால் உந்தப்பட்டு இருப்பதிலும்.. சரியான சூழலை சரியாக பாவிக்கும் திறனே எமக்கு இன்று அவசியமாக உள்ளது. மற்றவர்களை நம்பி நடப்பதிலும் அவர்கள் நம்மை நம்ப நடப்பது எமக்கு பலம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.. சோனியாவை திருத்தி.. ஓ.. இதுக்கு பிஜெபியே தெவாலாம் உதவி செய்யவில்லை என்றாலும் குறைந்த படசம் உபத்தரவம் செய்யாமல் இருப்பார்கள்..

நந்தா டேமு.... சோ ..மாலினி.. சப்புறமணி சாமி.. நோ சான்ஸ் ... :(

டிஸ்கி:

நேரடியாக சசிகலா மன்னார்குடி வைகயறாக்களிடம் உதவி கோருவதன் மூலம் சிலதினை எதிர்பார்க்கலாம் .. கொள்ளையடித்தாலும் . தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் கொஞ்சம் நல்லது செய்வார்கள் என்ற ஆசைதான்... :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை..................

ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக?

சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார்.

தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக இந்த முயற்சிகளில் அவர் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை காங்கிரஸ் கழற்றிவிட நெருக்கடி தருவதற்காகவே ஆட்சிக்கு வந்தவுடனேயே ஈழப் பிரச்சனையை ஜெயலலிதா கையில் எடுத்ததாகத் தெரிகிறது.

ஈழப் பிரச்சினையை ஜெயலலிதா முழுவீச்சில் கையிலெடுக்கும் போது, ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவன் நான் என அடிக்கடி சொல்லி வரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் சும்மா இருக்க முடியுமா?.

இனி ராஜபக்சேவை தூக்கிலேற்றவேண்டும் என்ற குரல் அறிவாலய முகாமிலிருந்து சற்று பலமாகவே கேட்க ஆரம்பிக்கும். அதற்கு அச்சாரமாக, தந்தை செல்வா காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க திமுக மேற்கொண்ட முயற்சிகள் தொடங்கி சகோதர யுத்தம் வரை என கருணாநிதி தரப்பிலிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகும்.

மீண்டும் மனித சங்கிலி, உண்ணாவிரதங்கள், மீனவர்களுக்காக கனிமொழி நடத்திக் காட்டியது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அரங்கேறும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி சும்மா இருக்குமா? கூட்டணிக்குள் இருந்து கொண்டே ஈழப் பிரச்சினையில் திமுக தீவிரம் காட்டுவதை அமைதியுடன் வேடிக்கைப் பார்க்குமா?. திமுகவுக்கு சிபிஐ உள்ளிட்ட பல வகைகளில் நெருக்கடிகளை காங்கிரஸ் அதிகரிக்கும். இதைத் தான் எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.

தான் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்தால் பதிலுக்கு திமுகவும் அதை கையில் எடுக்கும். இதன்மூலம் திமுக-காங்கிரஸ் உறவை காலி செய்யலாம் என்பது அவரது திட்டம். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடு முழுவதும் கெட்ட பெயர் வாங்கிவிட்ட காங்கிரஸ், திமுகவை வெட்டி விட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்து கைகோர்க்க வேண்டிய இடம் அதிமுக தான். இந் நிலையில் அந்தக் கட்சி ஈழப் பிரச்சனையை பெரிதாக்கி, தனக்கு எதிராக திரும்புவதற்குள், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சோனியா. இதனால் தான் யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்படி காங்கிரஸால் வெட்டிவிடப்பட்டாலும் திமுக கையில் எடுக்கப் போகும் பிரச்சனை ஈழ விவகாரமே.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ள திமுகவுக்கும் இப்போதைக்கு இளைப்பாறக் கிடைத்திருப்பது ஈழப் பிரச்சினை என்ற நிழல்தான் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்

http://thatstamil.oneindia.in/news/2011/05/16/why-jaya-shows-great-interest-eelam-aid0090.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசுகளின் கடந்த கால வரலாறு, மத்திய அரசை மீறி என்றும் செயற்படவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது!

ஆயினும் காங்கிரசின் படு தோல்விக்கு, ஈழப் பிரச்சனை ஒரு முக்கிய காரணியாகும்! மீண்டும் காங்கிரஸ் தனது நிலையைத் தமிழ் நாட்டில் பலப்படுத்த வேண்டுமானால், எமது பிரச்னைக்கு அவர்கள் ஒரு தற்காலிகமான தீர்வு ஒன்றைக் காணவேண்டும்!

அத்துடன் 'போர்க்குற்றவாளி' என்ற கெட்ட பெயரை நீக்குவதற்கும் இந்தியா ஏதும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இல்லாவிடில் சீமான் போன்றவர்கள் அடுத்த தேர்தலில் தனியாகப் போட்டியிடும் சூழல் உருவாகக் கூடும். இதையும் மத்திய அரசு விரும்பாது!

எனவே எங்கள் பிரச்சினையை உயிருடன் வைத்திருப்பதில் தான் எல்லாமே தங்கியுள்ளது!

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி விடுத்த அழைப்பால் கடுப்படைந்தது தி.மு.க!

மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசனை!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளார் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி விடுத்த அழைப்புத் தொடர்பில் தி.மு.க கடுப்படைந்துள்ளது.

இதனால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள தி.மு.க, காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிய வருகின்றது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதியாகி இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இரு தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதேபோன்று பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இச் செயற்பாடு குறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க இன்னும் தங்களது கூட்டணியில் இருப்பதாகவும், ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி வாழ்த்துத் தெரிவித்ததும், தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்ததும் ஜனநாயக நடைமுறை என்று கூறியிருந்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந் நடவடிக்கையால் தி.மு.க கடும் அதிருப்தி கொண்டுள்ளதுடன், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மு.க.அழகிரி உள்ளிட்ட தி.மு.க அமைச்சர்களும் விசனம் கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது. இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுப்பது குறித்து தி.மு.க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதேவேளை, காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க வெளியேறாது என்றும் தெரிய வருகின்றது. குறிப்பாக, கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ள தி.மு.க தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் ஆட்சியதிகாரம் தற்போது கைமாறியுள்ள நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளதால் தி.மு.க தலைவரான கருணாநிதி அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார் என தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. எனவே, அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து தி.மு.க உயர்பீடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் தற்போது அழகிரி உள்பட ஆறு அமைச்சர்கள் தி.மு.க சார்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7BA304C8-0161-4497-B5E2-2C9F437295B1}

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. இதுவரை 99 தடவை, மத்திய அரசிலிருந்து வெளியேறுவதாக சொல்லிவிட்டது. :D

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. இதுவரை 99 தடவை, மத்திய அரசிலிருந்து வெளியேறுவதாக சொல்லிவிட்டது. :D

100 ஆவது முறையும் வெளியேறாது. :D

  • தொடங்கியவர்

2016 - வெயர் இஸ் த பார்ட்டி?

இந்த சட்டசபை தேர்தலில் விழுந்த வாக்குகளில் எல்லாமே அ.தி.மு.க. ஆதரவாக விழுந்தவை அல்ல. பல்வேறு காரணங்கள் காரணமாக தி.மு.க. / காங்கிரஸ் கட்சிகள் மீதான வெறுப்பு வாக்குகள்.

ஐந்து வருடத்தில், 2016 இல், நடக்கும் தேர்தலில் யார் ஆட்சி அமைப்பார்கள் என எதிர்வு கூறுவது கடினமான காரியமாக இருப்பினும், அ.தி.மு.க. நிச்சயம் இப்படி ஒரு வரலாற்று வெற்றியை காணாது என நம்பலாம். அதேவளை தி.மு.க. மறுசீரமைக்கப்பட்டாலும் மக்கள் அவர்கள் ஆட்சிக்காலத்தை இலகுவில் மறக்கபோவதில்லை. எனவே, இது ஒரு மூன்றாம் கட்சிக்கு மக்கள் வாக்குகளை வெல்லக்கூடிய வாய்ப்பை அளிக்கலாம்.

அந்த மூன்றாம் கட்சிக்கு அடுத்த 'டீ பார்ட்டி'க்கு அழைப்பு கிடைக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் இழுப்பாணி, சப்பாணி மாதிரி ஆகிவிட்டோம். எனவே எதுவித நீண்டகால திட்டங்கள் இன்றி யாராவது கைதூக்கி விடுவார்களா என்று காத்திருக்கும் நிலமை. சும்மா இருந்தால் சோறு கூடக் கிடைக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் இழுப்பாணி, சப்பாணி மாதிரி ஆகிவிட்டோம். எனவே எதுவித நீண்டகால திட்டங்கள் இன்றி யாராவது கைதூக்கி விடுவார்களா என்று காத்திருக்கும் நிலமை. சும்மா இருந்தால் சோறு கூடக் கிடைக்காது!

பயங்கரவாத தனமான வார்த்தைகள்!

இவ்வளவு காலமும் போராடி பட்ட கஸ்டங்கள் காணது???? இனியும் போராட சொல்லும் நீங்கள் கொழும்புக்கு கரும்புலியாக போவீர்களா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.