Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதனும் பாம்பும்: கவிதை, நிழலி

Featured Replies

பாம்பு !!

உடைப்பெடுத்த ஆற்றைப் போல்

பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன்

என் முன்னே

ஆடியது

வரிகள் எல்லாம்

அதன் தோலாக

தோலெல்லாம் அதன்

வரிகளாக

நெளிந்து நெளிந்து

சீறிக் கொண்டே

ஆர்ப்பரித்தது

இதிகாசங்கள் தம்மை

ஏமாற்றிய தவிப்பு

ஒரு கண்ணில்,

ஆயிரம் ஆயிரம் ஆண்டு

கடந்தும் மனிதன் மீது

மாறா வெஞ்சினம்

அதன் மறு

கண்ணில்

தனக்கும் மனிசனுக்குமான

தீர்க்க முடியா

கணக்கை பாம்பு

சொல்லியது

ஒவ்வொரு வரியிலும்

மனிதன் பெயர் வரும்போது

வெறுப்புடன் துப்பியது

பாம்பின் கால்கள் எல்லாம்

நியாயம் கேட்டு

வரலாறு முழுதும்

நடந்து நடந்தே

அழிந்து போனதாம்...

அதன் காதுகள்

மனிதனின் பம்மாத்து

வாக்குறுதிகளால் அறுந்து

விழுந்ததாம்

ஏவாளுக்கு கனி கொடுத்ததெனும்

பொய் பழி தீர்க்க

அது ஒவ்வொரு மாதத்திலும்

தோலுரித்து தவம் புரியுமாம்

வருடத்துக்கு ஒரு முறை

இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில்

மண்டி இட்டு அவரின்

காம இச்சைக்கான

பாவத்துக்காக

சிலுவை சுமக்குமாம்

தேவர்களுக்காக

தன்னை மத்தாக்கி

கடைந்த பெருங் கள்வன்

சிவனின் உடலெங்கும் இருந்த

விசத்தை தன் பல்லில்

தேக்கிய துயர் தீர்க்க

இரவில் மட்டுமெ கலவி கொண்டு

இரத்தினக் கல்லெடுத்து

வழிபடுமாம்

கண்கொத்தி பாம்பாய் மாறி

கண்களை கொய்து

சிவன் எனும் அற்பனுக்கு

அபிசேகம் செய்யுமாம்

நாகமென்று,

சாரை என்று

புடையன் என்று,

கண்கொத்தி என்று

கட்டு விரியன் என்று

கண்ணாடி விரியன் என்று

மண்ணுணி என்று

கொம்பேறி மூக்கன் என்று

சுருட்டை என்று

பச்சை என்று

ஆயிரம் பேர் சொல்லி அழைக்கினும்

....

தன்னை

பாவத்தின் சாபமாய்

சாபத்தின் பலனாய்

பலனில் வரும் துயராய்

துயரில் வரும் வெறுப்பாய்

ஈற்றில்

வெறுப்பில் வரும் வழிபாட்டாய்

மட்டுமே மனிதன்

வழிபடுகின்றானாம்

பல இரவு கடந்தும்

தூங்காத என்

இரவு ஒன்றில்

வந்த பாம்பு

தன் கதையை

சொல்லி புலம்பிற்று

****************

என் முடிவுறா இராக் காலத்தின்

இறுதியில் அடிக்கடி

ஒரு

பாம்பு வரும்

செதில் உதிர்த்து

விடம் கொண்டு

படம் காட்டி

ஒரு பெரு நாகம்

கனவில்

பீறிட்டு எழும்

என் கனவுகளின் மேல்

ஊர்ந்து போகும்

உணர்வுகளில்

விடம் தடவும்

நினைவுகளில் தங்கி

முழு உடல் அனைத்தையும்

நுனி வால் தாங்கி

படம் பிடித்து ஆடும்

இறுதியில் தனக்கும்

மனிசனுக்கும் இடையிலான

தீர்க்காத கணக்கை

விடம் கொண்டு

தாக்கி

சொல்லிச் செல்லும்

******************

அடுத்த நாள்

காலை நான்

ஆலகால நஞ்சுண்டவனாய்

விழித்தெழுவேன்

:நிழலி: ஆகஸ்ட் 21 அதி காலை 00:25 (5 கிளாஸ் வொட்கா)

இன்று வல்வை சாகராவின் கவிதையிலும் சடை விரித்த பாம்பு பற்றிய ஒரு பதிவை பார்த்த பின் "ஏன் மனிசனுக்கு பாம்பென்றால் பயம்" என நினைத்த பின் வன்த ஒரு கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 21 அதி காலை 00:25 (5 கிளாஸ் வொட்கா)

வொட்கா அடித்தால் கவிதையும் வருமா?

நீங்கள் எழுதியவற்றில் இது வித்தியாசமாக இருக்கின்றது. ஒரு புள்ளியில் இருந்து வாழ்வை புரிந்துகொள்ள முற்படுதல் என்று சொல்லலாம். போதனை வெளிப்படுத்துதல் என்பதுக்கு அப்பால் இது ஒரு நல்ல சிந்தனைப்பழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

என் கனவுகளின் மேல்

ஊர்ந்து போகும்

உணர்வுகளில்

விடம் தடவும்

நினைவுகளில் தங்கி

முழு உடல் அனைத்தையும்

நுனி வால் தாங்கி

படம் பிடித்து ஆடும்

அற்புதமாய் இருக்கிறது இந்த வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கிளாஸ் வொட்காவிற்கு பின்னும் சொற்கள் தடுமாறவில்லை! :icon_mrgreen:

ஈற்றில்

வெறுப்பில் வரும் வழிபாட்டாய்

மட்டுமே மனிதன்

வழிபடுகின்றானாம்

பாம்பு வழிபாட்டிற்கு இப்படி ஒரு காரணம் உள்ளதை அறியத் தந்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் கனவை நானும் கண்டேன் இந்தக்கவிதையின் வழி.. அழகான கவிதை..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால்கள் எல்லாம்

நியாயம் கேட்டு

வரலாறு முழுதும்

நடந்து நடந்தே

அழிந்து போனதாம்...

அதன் காதுகள்

மனிதனின் பம்மாத்து

வாக்குறுதிகளால் அறுந்து

விழுந்ததாம்

இன்றைய ஈழத்தமிழனின் நிலையைப் போல.

நானும் இண்டைக்கு சிவாசை விட்டிட்டு வொட்கா அடிச்சுப்பாப்பம் பாம்பு வருகிதாஎண்டு. சகாராவின்ரை கடல் நாகம் வந்தால் இன்னும் நல்லாயிருக்கும். :lol:

கவிதை சுவாரசியமா இருக்கு நிழலி

.

வாசிச்சுக்கொண்டு போகேக்க நினைச்சன், என்னடா பாம்பு சிவனில் உள்ள கோபத்தின் காரணமாகவும் வழிபடுகிது, யேசுவின் மீதான கோபத்திலும் வழிபடுகிது, ஏவாழுக்குப் பழங் கொடுத்த பழிச் சொல்லை நினைச்சு நினைச்சும் தவம் செய்யுது. மொத்தத்தில கோபம், பயம் வெறுப்பு போன்ற எல்லா உணர்வுகளையும் பாம்பு வழிபாடு என்ற வடிகாலைத் தான் மருந்தாக்குது என்று யோசிக்கும் போதே மனுசன் மட்டும் ஏனாம் பாம்பைக் கும்பிடத்தொடங்கினான் என்ற எண்ணம் தான் மீண்டும்; வந்தது. கவிதையிலும் நச்சென்று இந்த விடயம் வெளிவந்திருப்பது இரசிக்கும் படி இருக்கிது.

சுரணாகதி அரசியல் எண்டும் இதைத் தான் சொல்லுறவையோ...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நிழலி

அரவு இல்லாத மாது அமர்க்களப்படுத்தியிருக்கிறது

இந்த கவிதையை வாசிக்கும்போது ஈழதேசமே மனதிற்குள் விரிகிறது நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, நிழலி.

பிடித்த வரிகள்:

பாம்பின் கால்கள் எல்லாம்

நியாயம் கேட்டு

வரலாறு முழுதும்

நடந்து நடந்தே

அழிந்து போனதாம்...

அதன் காதுகள்

மனிதனின் பம்மாத்து

வாக்குறுதிகளால் அறுந்து

விழுந்ததாம்

ஏவாளுக்கு கனி கொடுத்ததெனும்

பொய் பழி தீர்க்க

அது ஒவ்வொரு மாதத்திலும்

தோலுரித்து தவம் புரியுமாம்

வருடத்துக்கு ஒரு முறை

இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில்

மண்டி இட்டு அவரின்

காம இச்சைக்கான

பாவத்துக்காக

சிலுவை சுமக்குமாம்

தேவர்களுக்காக

தன்னை மத்தாக்கி

கடைந்த பெருங் கள்வன்

சிவனின் உடலெங்கும் இருந்த

விசத்தை தன் பல்லில்

தேக்கிய துயர் தீர்க்க

இரவில் மட்டுமெ கலவி கொண்டு

இரத்தினக் கல்லெடுத்து

வழிபடுமாம்

கண்கொத்தி பாம்பாய் மாறி

கண்களை கொய்து

சிவன் எனும் அற்பனுக்கு

அபிசேகம் செய்யுமாம்

சுயதணிக்கை ***

  • கருத்துக்கள உறவுகள்

சுயதணிக்கை ***

கலைஞன் இப்படியே சுயதணிக்கை செய்து கொண்டுபோனால்..... முடிவென்ன?

சில மனிதர்களும்... சில பாம்புகளும்... பல சமயங்களில் ஒரேமாதிரித்தான். :mellow:

அருமையான கவிதை.... ! பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது! :rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் இப்படியே சுயதணிக்கை செய்து கொண்டுபோனால்..... முடிவென்ன?

நிழலிக்கு எதுக்கு வேலை கொடுப்பான் எண்டு நினைச்சிட்டார் போலை :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நிழலி, 5 vodka காணாது, விட்டு விட்டு அடிச்சிருங்கிங்க உடம்புக்கு கூடாது, தண்ணி அடிக்கும் போது ஒரு பெண்ணு நாம விரும்பின பாட்டுக்கு ஆடின எப்படி இருக்கும், Middle East ல் இது கூட, மாலை போட்டு நீங்க விரும்பின எந்த பாட்டுக்கும் எந்தனை பெண்களையும் ஆடச் சொல்லி கேட்கலாம். விடிய விடிய இந்த ஆட்டத்தை பார்த்துக் கொண்டே தண்ணி அடிக்கிற சுகமே தனி சுகம்

95 மில்லியன் வருட தொல்படிவ எச்சத்தில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் கூர்ப்பின்போது எப்படிப் பாம்பு தனது கால்களை இழந்தது என்பதை அறிந்துகொண்டுள்ளனர். கால்களுடன் கூடிய பாம்புகளின் மூன்று தொல்லுயிர் எச்சங்களில் இதுவும் ஒன்று;தற்போது லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னங்கால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அடுத்தகாலை தொல்படிமப் பாறைகளில் காண்பதற்கு எக்ஸ்-கதிர் நுட்பம் தேவையாக இருந்தது.

முள்ளந்தண்டு உயிரிகளின் தொல்லுயிரியல் சஞ்சிகையில் ஆய்வுக்குழு கால்கள் இழத்தலின் ஆரம்பக் கட்டத்தில் பாம்பு இருந்திருக்கின்றது என்று தெரிவித்தனர். Eupodophis descouensi எனப்படும் இனப் பாம்பினது கால்களையே உயர் நுணுக்க முப்பரிமாணப் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது.

இவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வருதல் சாத்தியமாக உள்ளது. பாம்பு கணுக்கால் எலும்புகளைக் கொண்டிருப்பினும் அவை பாத எலும்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வில் இருந்து பாம்புகள் 150 மில்லியன் வருடத்திற்கு முன்னர் கூர்ப்பில் தோன்றியுள்ளது எனக் கருதலாம்.

பரிணாம வளர்ச்சியின் போது, பாம்பின் கால்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் மிகவும் குறைவாக வளர்ந்து பின்னர் மறைந்து போயின. இவற்றின் தேவை பாம்புகளில் குறைந்தமையே காரணம் ஆகும்.

இரண்டு கருதுகோள்கள் பாம்பின் தோற்றம் பற்றி உள்ளன.

ஒன்றில், பல்லி வகைகள் வளைகள் உருவாக்கத்தொடங்கின, பின்னர் நிலக்கீழ் வசிவிடத்துக்கு ஏற்றவாறு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டன; அவற்றின் கால்கள் குறுக்கப்பட்டு பின்னர் இல்லாமல் போயிற்று; முதலில் முன்னவயவமும் பின்னர் பின்னவயவமும் மறைந்தன.

இரண்டாவது கருதுகோளில், இவற்றின் தோற்றம் நீரில் நடைபெற்றன; கடல்வாழ் ஊர்வன மூலம் தோன்றின.

அறியப்பட்ட இருகால் பாம்புகளின் தொல்-எச்சங்களில் அவை பெரியதாக இருப்பது, இக்கருதுகோள் பற்றிய விவாதத்துக்கு துணை போகின்றது.

இந்தப்படிப்பு இவ்விரு கருதுகோள்களை மெய்ப்பிப்பதற்கு போதாது, இன்னமும் புதைபடிமங்களில் இருந்து தகவல்கள் பெறப்படல் அவசியம் என்று இவ்வாராய்வை மேற்கொண்ட முனைவர் ஹௌசே கூறினார்.

Eupodophis descouensi இனப் பாம்பு ஒரு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. பிந்தைய கிரித்தேசியக் காலத்தில், டைனசொர்கள் வாழ்ந்த காலத்தில் இவை ஊர்ந்து திரிந்திருக்கலாம்.

அசைவதற்கென்று இக்கால்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைவிட இவற்றிற்கு வேறு தொழில்களும் இருந்திருக்கலாம். பைதன் போன்ற இற்றைய காலத்துப் பாம்புகளில் குறுகிய நகர்நீட்சிகள் இருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது, இவை பாலுறவின் போது இறுகப்பற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன.

ஆசிரியர்: பல்கலைக்கழகம்மேற்கோள்கள்

1. http://news.discover...ion-110207.html

2. http://www.bbc.co.uk...onment-12393387

post-8644-0-74892900-1313996745.png

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கட பாம்பு கவிதை படிச்சதால், இராத்திரி கனவில் பாம்பெல்லாம் படமெடுத்து ஆடுது,

பாம்பு !!

தேவர்களுக்காக

தன்னை மத்தாக்கி

கடைந்த பெருங் கள்வன்

சிவனின் உடலெங்கும் இருந்த

விசத்தை தன் பல்லில்

தேக்கிய துயர் தீர்க்க

இரவில் மட்டுமெ கலவி கொண்டு

இரத்தினக் கல்லெடுத்து

வழிபடுமாம்

பாம்பை மத்தாகேல்லை , கயிறு ஆக தான் பவிச்சவை , மந்திர மலையை ? தான் மத்தாக்கினவை எண்டு இரண்டாம்/முன்றாம் வகுப்பில்? படித்த நினைவு.

மண்ணுணி என்று

மண்ணுணி பாம்பு எண்டு சொல்லுறது உண்மையான பாம்பு இல்லை, அது முதுகெலும்பில்லாத, உயிரினம்.

நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே எண்டு சொன்ன நற்கீரன் பரம்பரையாக்கும் ....... :lol:

உந்த முட்டையிலை மயிர் பிடுங்கிற வேலையை விட்டுட்டு உள்ளதை சொன்ன கவிதை நல்ல இருக்கு,

Edited by KULAKADDAN

”வருடத்துக்கு ஒரு முறை

இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில்

மண்டி இட்டு அவரின்

காம இச்சைக்கான

பாவத்துக்காக

சிலுவை சுமக்குமாம்”

அப்பிடீன்னா என்ன நிழலி?

இயேசுவின் காம இச்சையா யு மீன்?

இயேசு ஒண்ணும் கடவுள் இல்லியே!

அவர் வெறும் இறைதூதர்!!

  • தொடங்கியவர்

பாராட்டிய கருத்து சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

நேரமின்மையால் விரிவாக பதில் எழுத முடியவில்லை...நேரம் கிடைக்கும் போது பல கருத்துகளுக்கு / கேள்விகளுக்கு பதில் தருகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.