Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து மரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து மரணம்.

28 ஆகஸ்ட் 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக சற்று முன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66290/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவரது மரண தண்டனையினை நிறுத்தக் கோரி இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை! (இரண்டாம் இணைப்பு)

Published on August 28, 2011-7:54 pm

மரண தண்டனையினை எதிர்நோக்கியிருக்கின்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை புரிந்துள்ளார்.

சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 27 வயதுடைய செங்கொடி என்ற இளம் பெண்ணே தன்னைத் தானே எரித்து தனது உயிரை மாய்த்திருக்கின்றார். இந்தச் சம்பவம் காஞ்சிபுரம் தாசிந்தார் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.saritham.com/?p=32330

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிற்ச்சி தரும் செய்தி. யாரும் தொடரக்கூடாது. அறவழி போராடுகிறவர்கள் குரலுக்கும் கருணை மனுக்களுக்கும் மதிப்பழித்து முதல்வர் இப்பிரச்சினைவின் சுமூகமான முடிவுக்கு வழிகாண்பார். நீதி மன்ற நடவடிக்கைகள் அதற்கான அவகாசத்தை உருவாக்கும் என்கிற நம்பிக்கை வளர்ந்து வருகிறது. என்பதை செங்கொடி போன்ற தோழர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது யாழ் போன்ற இணையத் தளங்களதும் மனித உரிமையில் ஆர்வமுள்ள சகலரதும் கடமை. நல்லது நடக்கும் என நம்பி நல்லதற்க்கு குரல் கொடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தீக்குளிப்புகள் தொடரக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈகி முத்துக்குமாரின் விவரணப்படத்தை இயக்கிய மகேந்திரன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது.

இராஜீவ் காந்தி என தமிழின அழிப்பாளனின் பெயரில் பறிக்கப்பட்ட இன்னுமொரு தமிழ் உயிர்.

ஆழ்ந்த அனுதாபங்கள் செங்கொடியின் குடும்பத்தாருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா சிக்கல் ஆரம்பிச்சி இவ்வளவு நாள் ஆகுதே .. இன்னும் ஒன்னும் நடக்கலியே என்று பார்த்தான் .. நடத்திடாங்க..

Candle338WM.gif

கண்ணீர் அஞ்சலிகள்!! :(

அன்னா அசார் என்னும் மோசடிப் போராட்டங்களின் பின் அலையும் இந்திய வல்லாதிக்கம் உங்கள் உயிர்களை ஒரு பொருட்டாகவே எடுக்கப் போவதில்லை.அதனால் தயவு செய்து இப்படி வீணாக உங்கள் உயிரைக் கொடுக்காதீர்கள் ,இதனால் எவருக்கும் எந்தப் பிரியோசனமும் இல்லை.தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்கள் எவற்றையும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.ஆயுதம் ஒன்றே இவர்கள் காது கொடுத்துக் கேட்கும் மொழி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31826622626158742491410.jpg
  • கருத்துக்கள உறவுகள்

மூவர் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி இளம் பெண் தீக்குளித்து இறந்தார். (Photo in)

main1.jpgபேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன்

தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

j-copy.jpgnews.jpghj1.jpg

http://www.tamilthai.com/?p=25254

எனது உடன்பிறவா சகோதரி செங்கொடிக்கு கண்ணீர் அஞ்சலிகள்.!

Edited by தமிழ் அரசு

ஆழ்ந்த அனுதாபங்கள். :(

இப்படியான அநியாய உயிர் இழப்புகளைத் தமிழக உறவுகள் தவிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் செங்கொடிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தமிழ் உயிர் எதுவும் இந்த விடயத்தில் தீக்குளிப்பு மூலம் வீணாகபோகக் கூடாது.

அவர்கள் சில வேளை நீதிமன்றம் மூலமாக, விடுதலையடைவதற்கு சந்தர்ப்பமும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னா அசார் என்னும் மோசடிப் போராட்டங்களின் பின் அலையும் இந்திய வல்லாதிக்கம் உங்கள் உயிர்களை ஒரு பொருட்டாகவே எடுக்கப் போவதில்லை.அதனால் தயவு செய்து இப்படி வீணாக உங்கள் உயிரைக் கொடுக்காதீர்கள் ,இதனால் எவருக்கும் எந்தப் பிரியோசனமும் இல்லை.தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்கள் எவற்றையும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.ஆயுதம் ஒன்றே இவர்கள் காது கொடுத்துக் கேட்கும் மொழி.

எனது கருத்தும் இது தான்

அறிவும் அழகும் சேர்ந்தோளிரும் முகம். ஆயிரம் சூரியனை தோற்கடிக்கும் கண்கள். கருணை என்ற தாய் பெற்ற வெள்ளை உள்ளம். பெத்தவள் நெஞ்சு பத்தியெரியவோ கருகி நமஞ்சு இப்படி சுருண்டு விழுந்தாய் தங்கை செங்கொடி? இரக்கத்தை தேடியலையும் இந்த தமிழ் சனத்தை, நீயும் துறந்து சென்றால் இன்னோரு மறத்தேவதைக்கு நாம் எங்கு போவோம்.

நர பலி தேடும் கங்கிரஸ் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க இன்னொருதடவை இடம்கொடுக்காதீர்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இவர் போல் பலர் முன்பு தீக்குளித்தும் தமிழ் நாட்டு அரசு, மத்திய அரசுகள் கண்டும் காணாமல் இருந்தன.இத்தகைய இறப்புகள் எதிர்காலத்தில் பயன் தராது என்பது மட்டும் உறுதி.

தமிழ் நாட்டு சகோதரர்கள் மாற்று வழிகளை அதாவது மத்திய அரசை உலுக்கும் நடவடிக்கைகள் தான் மத்திய அரசை செவி மடுக்கச்செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த்தெய்வங்களே உறவுகளே! இன்னும் அழிவுகள் வேண்டாம்.வாய்மையையும் வலுவையும் தாருங்கள்.அதுவே எமக்கு போதும்.பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு யாரால் ஆறுதல் சொல்லமுடியும்? :(

  • கருத்துக்கள உறவுகள்

செங்கோடியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்படியான தீக்குளிப்புக்கள் தமிழகத்தில் தவிர்க்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைகளால் நாம் அடையப்போவது ஒன்றுமில்லை. எமது சாவுகள் காங்கிரஸின் கண்ணில் தெரியப்போவதில்லை. இனியும் எமதுயிர்கள் வீணே போக வேண்டாம். நாம் அருகி வரும் இனமாகிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை செங்கொடியின் இழப்பு கண்களைக் குளமாக்குகிறது..! மூன்று உயிர்களைக் காக்க தனதின்னுயிரைத் தியாகம் செய்துவிட்டாளே..! :(

காங்கிரஸ் எனும் இன அழிப்புப் பேயை வேரறுப்பதன்மூலமே இத்தகைய இழப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும். காங்கிரஸ்காரர்கள் வீதியில் இனிமேலும் இறங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக உறவுகளின் கடமையாகும்..!

தங்கை செங்கொடியின் இழப்பு கண்களைக் குளமாக்குகிறது..! மூன்று உயிர்களைக் காக்க தனதின்னுயிரைத் தியாகம் செய்துவிட்டாளே..! :(

காங்கிரஸ் எனும் இன அழிப்புப் பேயை வேரறுப்பதன்மூலமே இத்தகைய இழப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும். காங்கிரஸ்காரர்கள் வீதியில் இனிமேலும் இறங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக உறவுகளின் கடமையாகும்..!

இனியும் இப்படியான உயிரிழப்புகள் வேண்டாம்.

:( :( :( :( :(

சகோதரி செங்கொடிக்கு அஞ்சலிகள்.

இவை தொடரக்கூடாது.

இவ்வளவு துணிச்சலைப் பெற்ற நீங்கள் இருந்திருந்தால், அதே துணிச்சலை தக்கவைக்கும் பக்குவம் இருந்தால், வாழ்நாளில் இன்னும் நிறைய சாதித்திருக்கலாம்.

செத்து மடிய தயாரெனின் எதையாவது சாதித்த பின்னர் மடியவேண்டும். இவை பலரின் கவனத்தை ஈர்க்கிறது என்பதை மறுக்கவில்லை.

ஆனால் தமிழ்நாட்டு திருப்பூர் குமரன் போல், வாஞ்சிநாதன் போல், ஈழத்து தற்கொடைப் போராளிகள் போல், திலீபன் போல் எதையாவது சாதித்துவிட்டு மடிவது மேல்.

எனவே தீக்குளித்து இறப்பது தொடரக்கூடாது.

மீண்டும் சகோதரி செங்கொடிக்கு அஞ்சலிகள்.

post-1361-0-61131000-1314581860.jpg

தேசிய தலைவரை தன் இதயத்தில் ஏந்திய நம் தங்கை செங்கொடி...

Edited by narathar

இதுபோல விசயங்களுக்கு ... கருத்து சொல்லவே பிடிப்பதில்ல!

அப்பிடியும், மனசு தாங்காம ஏதும் சொல்லபோய் ....

உன்னைபோல உணர்வுகளைகாட்ட..தன்னோட உயிர மாய்ப்பதுதான் வழி என்னு இன்னும் நம்பிக்கிட்டு இருக்கும் , ஒரு சிலரை ஊக்குவிக்க நான் தயாரில்லை!

அவர்கள் உயிராவது மிஞ்சட்டுமே!

அதனால ...சகோதரம்....உனக்கு அஞ்சலி செய்ய நான் விரும்பவில்லை! ....

கண்ணீர் அஞ்சலிகள்! இனியும் வேண்டாம் இழப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.