Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கண்ட தாய்நிலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-fort1-495x328.jpg

வன்னி மண்ணின் வகிடெடுத்த

வரம்புகளும் வாய்க்கால்களும்

வளமுடன் வாழ்ந்து விட்ட நாட்களை,

நாட்காட்டியின் கிழிந்துபோன இதழ்களாக்கி,

பாளம், பாளமாய் பிளந்து கிடந்தன!

கூரை மீது கட்டிய விறகுக் கட்டுகளுடன்

ஊர்வலம் வந்தன உல்லாசப் பேருந்துகள்!

காய்ந்துபோன கண்ணீர்ச் சுவடுகளோடும்

தேய்ந்து போன செருப்புக்களோடும்

ஊர்ந்து திரிந்தன உயிர்க் கூடுகள்!

கொதிகணைகள் எறிந்த பெரு நெருப்பில்

பாதி முறிந்து போன பனை மரங்களின்,

செத்துப் போன உச்சிகளின் மீது,

பச்சைக் கிளிகள் சோடி சேர்ந்திருந்தன!

அரச மரங்களின் அடிவாரங்களில்

பிரசவ காலத்துப் பெண்களின்

அடி வயிற்றின் வட்டங்களாய்க்

குடி வந்திருந்தன புத்த கோவில்கள்!

புத்த பிரானின் புனிதம் கலையாது

பத்திரமாகப் பாதுகாத்தன,காவலரண்கள்!

அனுராத புரத்தைத் தாண்டியதும்,

அடிமனத்தின் ஆழத்தைப் பிசைகின்றன

அழிவின் ஆறிப்போன வடுக்கள்!

ஓமந்தைச் சாவடியில் இருந்து,

ஊர்காட்டிக் கற்களின் அம்புக்குறிகள்,

நாக தீபத்திற்குப் பாதை காட்டுகின்றன!

சர்வதேச விமான நிலையங்களின்,

நுழை வாயிலகளின் வனப்புடன்,

வீதியோரம் நிறைந்த விளம்பரங்களுடன்,

யாழ்ப்பாணம், உங்களை வரவேற்கின்றது!

உடைந்து போன கட்டிடங்களின் சுவர்களில்

வடக்கின் வசந்தம் விளம்பரம் செய்தது!

கருகிப் போன வடலிகளைக் காக்கக்

கருக்குமட்டை வேலிகள் தேவையிளந்தன

ஆரியகுளத்தின் தாமரைக் கொடிகள்

அனுராதபுரத்தின் 'புனித நகரமாய்;

ஆரிய குளத்தை மாற்றியிருந்தது!

தாவணிகள் இல்லாத சேலைகளுக்கிடையில்

தர்மத்தின் காவலர்களின் மழித்த தலைகள்!

கண்டி வீதியின், கச்சேரிச் சந்தியில்,

கெமுனுப் படையணியின் தலைமை இருந்தது!

பழைய பூங்காவின் அழகிய மரங்கள்,

பாதியாய்க் குறைந்து, புதியதாய் வளர்ந்தன!

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலமாய்

வங்கிகள் தங்களை விளம்பரம் செய்தன!

செல்வந்தர்கள் வாழ்ந்த பெரிய வீடுகள்,

உல்லாச விடுதிகளாய் உரு மாறியிருந்தன!

நல்லூர்க் கந்தனின் கோவில் பெரிதாக,

ஒல்லாந்தர் கோட்டையும் உயிர் பெறுகின்றது!

பெரிய கடையின், மீன் சந்தைகளில்,

'சூரை' மீன்கள் நிறையக் கிடைத்தன!

பாகிஸ்தான் நாட்டின் பெயரிட்ட பெட்டிகளில்,

பாரைக் கருவாடும் நிறையக் கிடைத்த்தது!

'வின்சர்' தியேட்டர் வெளியாகக் கிடக்க,

வண்ணான் குளத்தின் மேல் வாகனங்கள் நின்றன!

தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுச் சின்னம்.

தலை நிமிர்ந்து நிற்கின்றது, மீண்டுமொரு முறை!

வீரசிங்கம் கட்டிடத்தின் வெடித்த சுவர்கள்,

வெள்ளையடித்துப் புதிதாய் இருந்தன!

புங்கையூரின் புகழ்மிகு நுழைவாசலில்,

புத்தனின் சிலையொன்று, நல்வரவு கூறுகின்றது!

பொலித்தீன் பைகளில், புதுமை குறையாத,

பூவரசம் பூக்கள் விற்பனையாகின்றன!

ஊர் கூடித் தேரோட்டிய கோவில்கள்,

அர்ச்சகரின் வரவுக்காய்க் காவலிருக்கின்றன!

புத்தபிரானின் கால் பதித்த, புனித விகாரை,

புதியதோர் பாலத்துடன் பொலிந்து நின்றது!

தவழ்ந்து, தவழ்ந்து நடந்த வரிசையில்,

தத்தித் தத்தி, முன்னேறிச் செல்கையில்,

தெமிளுக் கட்டியக் எனவா, நேத?

தெளிவோடு கூறியது, புதியதொரு குரல்!

  • கருத்துக்கள உறவுகள்

"பெரிய கடையின், மீன் சந்தைகளில்,

'சூரை' மீன்கள் நிறையக் கிடைத்தன!

பாகிஸ்தான்" நாட்டின் பெயரிட்ட பெட்டிகளில்,

பாரைக் கருவாடும் நிறையக் கிடைத்த்தது!

'வின்சர்' தியேட்டர் வெளியாகக் கிடக்க,

வண்ணான் குளத்தின் மேல் வாகனங்கள் நின்றன!

தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுச் சின்னம்.

தலை நிமிர்ந்து நிற்கின்றது, மீண்டுமொரு முறை!

வீரசிங்கம் கட்டிடத்தின் வெடித்த சுவர்கள்,

வெள்ளையடித்துப் புதிதாய் இருந்தன!

புங்கையூரின் புகழ்மிகு நுழைவாசலில்,

புத்தனின் சிலையொன்று, நல்வரவு கூறுகின்றது!

புங்கையூரன் அருமையா உங்கள் பயண அனுபவத்தை நிஐத்தை கவிதை மூலம் தந்திருக்கின்றீர்கள், நன்றி பகிர்வுக்கு,

எங்கேயோ படித்த ஞபகம் "இலங்கை தீவு ஆனா ரின் பிஸ் மேட் இன் ஐப்பன்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், உடையார்!

காலங்களைப் புலங்களில் தொலைத்து விட்டுப் பூர்வீகம் பார்க்கப் போகும், என்னைப் போன்ற கள உறவுகளுக்கு, அதிர்ச்சியாய் இருக்கக் கூடாது என்பதற்காகவே, இதை இணைத்தேன்!

" கொதிகணைகள் எறிந்த பெரு நெருப்பில்

பாதி முறிந்து போன பனை மரங்களின்,

செத்துப் போன உச்சிகளின் மீது,

பச்சைக் கிளிகள் சோடி சேர்ந்திருந்தன!

அரச மரங்களின் அடிவாரங்களில்

பிரசவ காலத்துப் பெண்களின்

அடி வயிற்றின் வட்டங்களாய்க்

குடி வந்திருந்தன புத்த கோவில்கள்!

புத்த பிரானின் புனிதம் கலையாது

பத்திரமாகப் பாதுகாத்தன,காவலரண்கள்!"

இது தான் யாழ்................ :( :( . நான் ஒரு ரகமாய் சொன்னால் , நீங்கள் , இன்னுமொரு ரகமாய் உங்கள் பாணியில் சொல்கின்றீர்கள் . ஆனால் , இருவரிடமும் இருந்து வெளிப்படுவது வலியான செய்தியே . அருமை புங்கையூரான் . தொடருங்கள் :) :) .

Edited by komagan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கோமகன்! உங்கள் 'நெருஞ்சியின் நெருடல்' இன்னும் வலித்துக் கொண்டிருக்கின்றது!

ஆனால், எனது ஊரைப் பார்த்த போது, போரின் கோரப் பற்களின் நெருடல், அப்பட்டமாகத் தெரிந்த போது, அழுது விடக் கூட வாய் திறக்க முடியவில்லை!

தங்கள் கருத்துக்கு நன்றிகள், கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

தாய் நிலத்தின் சோகம் தாயவளின் சோகம்போல். அழகாய் கவி வரிகளில்... இயந்திரத்தனமான வாழ்விலிருந்து சற்று .விடுபட்டு

மேலும் மனத்தில் சோகம் ஏற்றிய விடுமுறையாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் என் ஊரவனே

மக்கள் முகத்தில் சிரிப்பைக்கண்டேன்

அவர் மனங்களில் ஒளியைக்கண்டேன்

என்றாவது சொல்லக்கூடாதா?

நன்றி தங்கள் கவிதைக்கும் நேரத்திற்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய் நிலத்தின் சோகம் தாயவளின் சோகம்போல். அழகாய் கவி வரிகளில்... இயந்திரத்தனமான வாழ்விலிருந்து சற்று .விடுபட்டு

மேலும் மனத்தில் சோகம் ஏற்றிய விடுமுறையாக இருந்திருக்கும்.

உண்மை தான், நிலாமதி அக்கா!

ஆனாலும், தாய்நிலத்தை மாற்ற முடியாது!

அதன் நிலையை மாற்ற முயல்வோம்!

அது எங்கள் கடமையும் கூட! நன்றிகள்!

வாருங்கள் என் ஊரவனே

மக்கள் முகத்தில் சிரிப்பைக்கண்டேன்

அவர் மனங்களில் ஒளியைக்கண்டேன்

என்றாவது சொல்லக்கூடாதா?

நன்றி தங்கள் கவிதைக்கும் நேரத்திற்கும்

தங்கள் கருத்துக்கு, நன்றிகள் விசுகர்!

நான் என்ன வைத்துக் கொண்டா, உங்களுக்கு வஞ்சகம் பண்ணுகின்றேன்!!! :D

அருமையாக இருக்கு புங்கையூரன் !!....கனமான வார்த்தைகளுடன் கனதியான ஒரு பயணக் கவிதை

போரின் பின்னான வன்னியை காட்சியாய் உங்கள் எழுத்துக்கள் முன்வைக்கின்றது. கடசி மூன்று வரிகளும் மனசாட்சியை பிழிகின்றது.

வன்னி மண்ணின் வகிடெடுத்த

வரம்புகளும் வாய்க்கால்களும்

வளமுடன் வாழ்ந்து விட்ட நாட்களை,

நாட்காட்டியின் கிழிந்துபோன இதழ்களாக்கி,

பாளம், பாளமாய் பிளந்து கிடந்தன!

கூரை மீது கட்டிய விறகுக் கட்டுகளுடன்

ஊர்வலம் வந்தன உல்லாசப் பேருந்துகள்!

காய்ந்துபோன கண்ணீர்ச் சுவடுகளோடும்

தேய்ந்து போன செருப்புக்களோடும்

ஊர்ந்து திரிந்தன உயிர்க் கூடுகள்!

உங்கள் எழுத்துக்கள் வலிமையானது

  • கருத்துக்கள உறவுகள்

போரின் பின்னான வன்னியை காட்சியாய் உங்கள் எழுத்துக்கள் முன்வைக்கின்றது. கடசி மூன்று வரிகளும் மனசாட்சியை பிழிகின்றது.

உங்கள் எழுத்துக்கள் வலிமையானது

கவிதை கற்பனையில் பொய் கலந்து ரசிக்க எழுதலாம் அனுபவிக்காமல்,

புங்கை அனுபவித்து அந்த வலியை கவிதை மூலம் தந்திருக்கிறார், நீங்க சொன்ன மாதிரி அந்த மூன்று வரிகளுக்கு மனதை பிசைகிறது, நடத்து முடிந்த அவலத்தை தடுக்க முடியவில்லை, மிஞ்சிருக்கு அவர்களுக்கு என்ன செய்யப்போறம்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சோகத்தின் பல பகுதிகளையும் தொட்டுச் சென்ற புங்கையூரானின் கவிதை,

மனதில் ஆத்திரத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.

  • கருத்துக்கள உறவுகள்

பலருது மனங்களையும் தொட்ட உங்கள் ஆக்கத்துக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா...தமிழ் எவ்வளவு அழகானது என்பதை உங்கள் பதிவு சொல்லுகிறது...வாசிக்கும்போது மனத்தில் பெருங்கனத்தை ஏற்படுத்திச்செல்கிறது உங்கள் பதிவு..நாங்கள் இழந்துவிட்டவைகள் ஏராளாம்...

பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி கோமகன்.

பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி கோமகன்.

ஆனாலும் இது ரெம்ப ஓவருங்கோ. இந்த அரசமகனுக்குக் கவி பாட வராது அலைமகளே :D :D . இதை நான் எழுதேல :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான,ஆழமான,உண்மையை உணர்த்தி நிற்கும் பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி, புங்கையூரான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணக்கதையை கவிதையாக உருமாற்றி.....யாழ்நிலவரத்தை அறியத்தந்த புங்கையூரானுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் வாசிக்க வேண்டும் போல் இருந்தது முடிந்ததும்

ஏனோ தவிர்த்திருக்கலாம் போல் இருக்கிறது;.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கு புங்கையூரன் !!....கனமான வார்த்தைகளுடன் கனதியான ஒரு பயணக் கவிதை

நன்றிகள் நிழலி!

நீல மயில்களாக, நிமிர்ந்து நடந்த காலம் போய் விடக், கோழிகளைப் போல குனிந்து இரை தேடும் நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றன, நமது சொந்தங்கள்!

போரின் பின்னான வன்னியை காட்சியாய் உங்கள் எழுத்துக்கள் முன்வைக்கின்றது. கடசி மூன்று வரிகளும் மனசாட்சியை பிழிகின்றது.

உங்கள் எழுத்துக்கள் வலிமையானது

எங்களதும், எங்கள் உறவுகளதும் கண்ணீருக்குக், காலம் கட்டாயம் பதில் சொல்லும், சுகன்!

இன்றைய சோகத்தின் பல பகுதிகளையும் தொட்டுச் சென்ற புங்கையூரானின் கவிதை,

மனதில் ஆத்திரத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.

எமது ஆத்திரங்களையும், ஏக்கங்களையும் ஆக்க பூர்வமான வழிகளில் செலுத்துவோம், தமிழ் சிறி!

எங்கள் பொழுதும், ஒரு நாளின் விடிந்தே ஆகும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா...தமிழ் எவ்வளவு அழகானது என்பதை உங்கள் பதிவு சொல்லுகிறது...வாசிக்கும்போது மனத்தில் பெருங்கனத்தை ஏற்படுத்திச்செல்கிறது உங்கள் பதிவு..நாங்கள் இழந்துவிட்டவைகள் ஏராளாம்...

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்,

அதை ஆங்கோர் வனத்திடைப்

பொந்தொன்றில் வைத்தேன்!

பொங்கி எரிந்தது காடு!

சுப்பிரமணிய பாரதியார்.

இந்தத் தமிழ் எப்படி, சுபேஸ்?

இதைத் தான் நாம் இழந்து கொண்டு போகின்றோம்!

கருத்துக்கு நன்றிகள்!

புங்கையூரான் வாசிக்க வேண்டும் போல் இருந்தது முடிந்ததும்

ஏனோ தவிர்த்திருக்கலாம் போல் இருக்கிறது;.

உண்மை சுடும் என்று சொல்வார்கள், ஈழப்பிரியன்!

உங்கள் மனநிலையே எனக்கும் கூட! நன்றிகள்!

தமிழ் அரசு, அலை அரசி,ரதி, நுணா, கு.சா.அண்ணா, உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும், நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தின் குரூரம் உறைக்கின்றது. கனமான விடயத்தை இலகுவான மொழியில் தந்த புங்கையூரானுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்நிலத்தின் பயணம் அழகான கவிதையாக.......

தாய்நிலத்தின் பயணம் தந்த சேதியையும் பகிர்ந்ததும் அழகே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தின் குரூரம் உறைக்கின்றது. கனமான விடயத்தை இலகுவான மொழியில் தந்த புங்கையூரானுக்கு பாராட்டுக்கள்.

நன்றிகள்! கிருபன்!

தாய்நிலத்தின் பயணம் அழகான கவிதையாக.......

தாய்நிலத்தின் பயணம் தந்த சேதியையும் பகிர்ந்ததும் அழகே!

தங்கள் கருத்துக்கு நன்றிகள், கறுப்பி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.