Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளோ சொல்லியும் யாருக்கும் புத்தி வரல... காலையில குடிக்க கஞ்சி இருக்கா அதை முதல்ல கவணிக்க..

டிஸ்கி

மாணவ பருவம் சுகமானதுதான் ஆனால் அக்குளில் resume தூக்கி கொண்டு படி படியாக ஏறும்போது அது டிஸ்கி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • Replies 83
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

//அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா//

மேல் உள்ள‌ வரியை கலாச்சார‌ காவலர்கள் என சொல்பவர்கள் என்னுடைய பாணியில் நாகரீகமாக எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.எழுத்து நடை உங்கள் நடையாக இருக்கக் கூடாது என் நடையாக இருக்க வேண்டும்.

அவர் பதவியைத் துறந்த பிறகும் நினைத்த மங்கையுடன் பாலியல் உறவு கொள்வதற்குத் தடையா? ^_^

இப்பிடிக் கேட்டிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமே..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பபதவியை துறந்தபின் அவர் திறந்து கொண்டு திரிஞ்சால் என்ன அல்லது யாருடனாவது படுக்கையை பகிர்ந்தால் என்ன.உங்களுக்கு ஏன் பொத்திக்கொண்டு வருகுது. :lol: :lol: சரியா ரதி. :)

நானும் இது எல்லாம் அவரது சொந்த விருப்பம் அத்தோடு இது எல்லாம் ஒரு செய்தியா என்று தான் கேட்டு இருந்தேன் :lol: :lol: :lol:

அவர் பதவியைத் துறந்த பிறகும் நினைத்த மங்கையுடன் பாலியல் உறவு கொள்வதற்குத் தடையா? ^_^

இப்பிடிக் கேட்டிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமே..! :icon_idea:

நான் எனது பாணியில் எழுதச் சொன்னேன் நீங்கள் உங்கள் பாணியில் எழுதி உள்ளீர்கள் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் என்பவர் யாழ்களத்தின் மறைமுக மட்டுறுத்தினரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டை கடிச்சு............. மாட்டை கடிச்சு........ கடைசியா............?

சுத்தி சுத்தி எனக்கு ஆப்பு இறுக்குவதாகவே கருதுகிறேன்.

இந்த பாளைபோன (எனது கொம்ப்யுட்டருக்கு மவ்ளவு "ழா" வுடன் கோவம் வெட்டிதான் ஓட்டவேண்டிய நிலைமை) சொல்லை இங்கே அடிக்கடி பாவிப்பது அடியேன்தான்.

அநாகரீகம் ஆனவர்களை நாகரீகமாகவும் எழுதவேண்டுமா என்ற தப்பான முடிவு அது என்று நினைக்கிறேன். புங்கையூரன் சுட்டிக்காட்டும் போதுதான் உணர்த்து கொள்கிறேன் மலத்தை பற்றி எழுதும்போது மலத்தை தொட்டா எழுதவேண்டும்? எங்களுடைய நாகரீகம் என்பது எண்களின் எழுத்தில் இருக்கும்போது அதை கருத்தில் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று உள்ளது.

நான் காலேஜ்ஜில் ரைடிங் (எழுத்துருவாக்கம்) கிளாஸ் எடுக்கும்போது ஒரு பேப்பர் கட்டாயமாக எழுதவேண்டும் என்று செக்ஸ் பற்றி தலைப்பு தந்தார். எனக்கு அந்த ஆசிரியை மீது ஒரே அருவெறுப்பு காரணம் எப்படி சொல்லாடல்களை பாவிப்பது என்று தெரியாத நிலை மற்றது பள்ளியில் இவாவுக்கு ஏன் இந்த தலைப்பு என்று கருதியதால். பின்பு அந்த பேப்பர்கள் திருத்தும் நாள் வந்தது............... அன்றுதான் அவா சொன்னார் அந்த தலைப்பு தந்ததற்கான காரணத்தை.

நீங்கள் இனிவரும் நாட்களில் எங்கு எங்கோ எல்லாம் எழுதபோகிரீர்கள் ஒரு விடயத்தை ஒரே மாதிரியாக எல்லா இடமும் எழுதமுடியாது. இது நீங்கள் கற்கும் இடம் இங்கே பிழைகள் திருத்தபடலாம் எதிர்காலத்தில் அந்த வசதி உங்களுக்கு இருக்காது என்றார். இங்கே பலருடைய கருத்துக்களை வாசிக்கும் போது அந்த ஆசிரியை சொன்ன பலவிடயங்கள் தான் ஞாபகத்தில் வருகின்றது.

இங்கே இந்த களத்தில் எப்படி நாகரிகமாக எழுதுவது என்று புங்கைஊரன் எழுதிஉள்ளார் அதற்கு நாம் முயற்சி செய்யலாமே என்றும் தனது எண்ணத்தை எழுதியுள்ளார். மட்டுருத்தினரக இருக்கும் நிழலி அவர்களே தான் இலக்கிய பரம்பரை என்று பறை சாற்றுவதையே முனிருத்துகின்றார். ஆக மற்றவர்களுடன் இதை பேசி முடிவெடுக்கலாம் என்பது மட்டமானது.

பெண் விடுதலை பற்றி எழுதிக்கொண்டே பெண்ணின் கையை பிடித்து இழுக்கும் இலக்கிய சிற்பிகளின் புத்தகம் படித்தது வளரும் வாசகரிடம் ஆசிரியரின் பாதிப்பு இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. பெண்ணுக்கு விடுதலை என்று வக்காலத்து வாங்க முடியுமே தவிரே இவர்களால்தான் பெண்களுக்கு ஆபத்து. (எங்களுக்கு ஏற்கனவே உள்ளூரில் நல்ல பெயர் என்பதால் யாரும் அருகில் வருவதில்லை).

இங்கே ஆண்கள் எழுதலாமா பெண்கள் எழுதலாமா ? என்று யாரவது எழுதினார்களா? யாரும் எழுதும்போது அதை சுட்டிகட்டலமே? தவிர ஆண்கள் எழுதுகிறார்கள் ஆகா பெண்களும் எழுதவேண்டும் (இவர்கள் பெண்ணுக்கு விடுதலை வேண்டிய சாகிறார்கள்) இந்த கருத்து எந்த ஆணி வேரில் இருந்து வருகிறது? ஏன் ரதியை ஒரு பெண்ணாகவே இவர்கள் பார்கிறார்கள்? ரதியை ஏன் இந்த பெண் விடுதலை வீரர்களால் ஒரு கருத்தாளராக பார்க்கமுடியவில்லை?

ஆகா ரதி என்ற கருத்தாளர் இவர்களுக்கு ஒரு பாதிப்பை பெண்ணாக இருந்து கொடுக்கிறார் என்பதே அதன் இன்னொரு பக்கம்.

தமிழ் என்பது ஒரு உயரிய மொழி நிச்சயமாக நாம் எல்லோரும் அதற்கு கற்று குட்டிகள்........ தெரிந்தவர்கள் அதை சொல்லித்தரும்போது. ஏற்பதை தன்னடக்கம் என்று தமிழில் அழகாக சொல்வார்கள். இது புரிபவர்களுக்கு புரியலாம்.

மீண்டும் சொல்கிறேன் இங்கே அநாகரீகமாக எழுதுவது நானும் கூடவே ............

சுட்டிக்காட்டும் இடத்து அதை திருத்தி. இந்த யாழ் களத்தை ஒரு நாகரீகமான தளமாக மாற்றவேண்டும் என்ற ஒரு சிறிய ஆசை. ( இனி நாங்களும் தமிழர்கள்தானே?)

மேலும் பிராவிற்கு தூய தமிழ் சொல்லை எழுதிட்டு.. என் போலித்தனத்தை பறை சாற்றுதல் நன்று. எங்களுக்கு எங்கள் விஞ்ஞான ஆசிரியர் கூட.. Blue to Red (Acid) இதை ஞாபகப்படுத்த BRA என்று ஞாபகம் வைக்கச் சொல்லி தந்தார்கள். அது எங்கள் தப்பா. அவையை நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்திறன்.

நீங்கள் பயன்படுத்திய வார்த்தை அல்ல இங்கு தவறு; அது பயன்படுத்தப்பட்ட விதம் கடும் ஆபசாமானது. ஒரு பெண்ணை விமர்சிப்பதற்கு அவரின் உள்ளாடையை கழட்டி வீசுகின்றார் என்று கூறுமளவுக்கு அநாகரீகமாக எழுதும் நீங்கள் வெறும் 'படுப்பது' என்ற சொல்லை ஒருவர் எழுதியதை பார்த்து ஆவேசப் படுவதுதான் போலித்தனமானது.

அதுசரி.. நீங்கள் ராஜேஸ் ஆன்ரியின் அபிமானி என்பது எனக்கு இன்று தான் தெரியும்.

இப்படி நீங்கள் எழுதாவிட்டிருந்தால் தான் அதிசயப்பட்டு இருப்பேன். அம்மணியின் உள்ளாடையை கழட்டி எறிவது பற்றி எழுதுவதை தவறு என்று சுட்டிக் காட்டுவதற்கு அந்த அம்மணியின் அபிமானியாக இருக்க வேண்டியதில்லை. அத்துடன் இந்த அம்மணியின் வார்த்தை பிரயோகங்களுக்கும் உங்களின் வார்த்தை பிரயோகத்துக்கும் எள்ளளவும் வேறுபாடும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நீங்கள் ஒரு வளரும் எழுத்தாளர்! உங்கள் கருத்துக்களை, சிறுவர்கள் (குறிப்பாகப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்) வாசிக்கக் கூடும்!

'படுப்பது' என்பது ஒரு நல்ல தமிழ் வார்த்தை அல்ல! இதை தரமான எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் உபயோகிப்பது, மனதிற்குக் கவலையைத் தருகின்றது!

மற்றது எழுதுவது உங்கள் உரிமை! இதே கருத்தை வேறு வகையான வார்த்தைகளால் சொல்ல முடியும்!

தமிழ் ஒரு வளமான மொழி! அதில் வார்த்தைகளுக்கா பஞ்சம்!

ஏதோ கள உறவு, என்ற வகையில் சுட்டிக் காட்டினேன்! எனது வரம்புகளைக் கடந்து விட்டேன் என நீங்கள் கருதினால் மன்னித்து விடுங்கள்!

தனி மடலில் தான் தெரியப் படுத்த நினைத்தேன்!

ஆனால் பல கள உறவுகள், இந்த வார்த்தையை உபயோகிப்பதை, அவதானித்ததால் , இங்கு பதிந்தேன்!

நன்றிகள்!!!

மன்னிக்க வேண்டும் புங்கையூரான் "படுப்பது" என்பது பொதுவான வார்த்தை என்பதாலேயே அப்படி எழுதினேன்...இனி மேல் நீங்கள் சொல்வதை கவனத்திலெடுத்து அப்படி எழுதாமல் தவிர்க்கிறேன்...உங்கள் ஆலோசனைக்கு நன்றி

இருவருக்கும் எனது முதல் பச்சை சமர்ப்பணம்.

பலரின் உண்மை முகங்களை வெளிக்கொண்டுவர பண்ணிய இந்த இணைப்பை இணைத்த நீலப்பறவைக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முகத்தை கண்ண்டியில் பாருங்க முதல், மற்றவனின் முதுகில இருக்கிற ஊத்தையை சொறிச்சே எங்கட சனம் காலத்தை கழிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

யார்.....

பெர்லுஸ்கோனியா பிரான்செஸ்காவா?

தப்பிலி, இப்ப திரி போற போக்கிலை... யார் பிடில் வாசிச்சது என்று சொன்னால்... முதுகிலை ரின் கட்டிப் போடுவார்கள். :lol:

அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா

அவர் பதவியைத் துறந்த பிறகும் நினைத்த மங்கையுடன் பாலியல் உறவு கொள்வதற்குத் தடையா?

இப்பிடிக் கேட்டிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமே..!

இசை எழுதியதை விட, ரதி எழுதியதை வாசிக்கும் போது... கிக்கா இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பயன்படுத்திய வார்த்தை அல்ல இங்கு தவறு; அது பயன்படுத்தப்பட்ட விதம் கடும் ஆபசாமானது. ஒரு பெண்ணை விமர்சிப்பதற்கு அவரின் உள்ளாடையை கழட்டி வீசுகின்றார் என்று கூறுமளவுக்கு அநாகரீகமாக எழுதும் நீங்கள் வெறும் 'படுப்பது' என்ற சொல்லை ஒருவர் எழுதியதை பார்த்து ஆவேசப் படுவதுதான் போலித்தனமானது.

இப்படி நீங்கள் எழுதாவிட்டிருந்தால் தான் அதிசயப்பட்டு இருப்பேன். அம்மணியின் உள்ளாடையை கழட்டி எறிவது பற்றி எழுதுவதை தவறு என்று சுட்டிக் காட்டுவதற்கு அந்த அம்மணியின் அபிமானியாக இருக்க வேண்டியதில்லை. அத்துடன் இந்த அம்மணியின் வார்த்தை பிரயோகங்களுக்கும் உங்களின் வார்த்தை பிரயோகத்துக்கும் எள்ளளவும் வேறுபாடும் இல்லை

இதில் ஆபாசம் உள்ளதா இல்லையா என்பதை அதைச் சொன்ன ராஜேஸ் ஆன்ரிதான் விளக்க வேண்டும். அவர் தான் கிழக்கு லண்டனில் நடந்த ஒரு மகளில் மாநாட்டில் சொன்னதாக.. அதே செய்தியை யாழிலும் பிற ஊடகங்களிலும் பிரசுரிக்க.. நான் படித்தேன். அதையே அங்கு சொன்னேன். அதை நீங்கள் ஆபாசம் என்று கருதினால்.. அப்படிச் செய்யச் சொன்ன.. அந்த ஆன்ரியைப் போய் அதற்கு விளக்கம் கோருவதே சிறப்பானது. நான் அவர் எத்தகையவர் என்று சொல்ல.. அவர் சொன்னதை மீளச் சொன்னேன் அவ்வளவே.

(http://www.yarl.com/forum3/index.php?showtopic=92944&st=0 இந்தத் தலைப்பிலும் அதைக் குறிப்பிட்டுள்ளேன். அப்போது உணராத ஆபாசத்தை சோ.சுத்தியின் தலைப்பில் உணர்ந்ததன் பின்னணி..?????! :rolleyes::lol: )

மேலும்.. உள்ளாடைகள் பல உண்டு. நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பதை நான் எழுதிய சொல்லாடலே வாசகர்களுக்கு உணர்த்துகிறது. அதையும் நீங்கள் உள்வாங்கிக் கொண்டு ஆபாசம் பற்றிப் போதிக்க வேண்டும். இப்பவாவது நீங்கள் போதி மரத்துப் புத்தராகி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் பல இடங்களில் ஆபாசமாக உரையாடல்களை நீங்கள் செய்திருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். :):D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நிழலி ஆபாசமாக உரையாடி இருக்கிறார் தான் ஆனால் உங்கள மாதிரி மற்றவர்களுக்கு அப்படி எழுதாதே,இப்படி எழுதாதே என அறிவுரை செய்து கொண்டு அவர் எழுதவில்லை...மற்றவர்களுக்கு எதையும் சொல்ல முன் தாங்கள் அப்படி நடக்கிறமா என முதலில் பார்க்க வேண்டும் அதன் பின் மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லலாம்.

நான் பதிவில் முதலாவது எழுதியதை புங்கையூரான் சுட்டிக் காட்டியதால் தான் மன்னிப்பு கேட்டேன்.உங்களுக்கோ,வி.அண்ணாவுக்கோ மற்றவர்களை பார்த்து அப்படி எழுத வேண்டாம் என சொல்ல எந்த அதிகாரமும் இல்லை...நீங்கள் எழுதும் உங்களுக்கு சரியாகப் பட்டது மற்றவருக்கு தப்பாய் படும்.

மருதங்கேணி நீங்கள் எதற்காக இடையில் மூக்கை நுழைத்து உங்களுக்கு ஆப்படித்ததாக நினைக்கிறீர்களோ தெரியவில்லை...நான் புங்கையூரான் என்ட‌ உறவுக்கு மதிப்பு கொடுத்ததால் தான் இனி மேல் அப்படி எழுத மாட்டேன் என சொன்னேனே தவிர‌ நான் எழுதியதில் அவ்வளவு ஆபாச‌ம் இருக்கும் என நினைக்கவில்லை...இங்கே ஆண்கள் எழுதுகிற படியால் பெண்களும் எழுதலாம் என சொல்லவில்லை இத் தலைப்பில் இது பற்றி புத்திமதி சொல்ல சிலருக்கு தகுதி இல்லை என்பதே எனதும்,நிழலின்[நினைக்கிறேன்]கருத்தும்...இதற்குள் வந்து பெண் விடுதலை,ர‌தி பெண் என்பதால் அதனால் வரும் பாதிப்பு,இலக்கியம் என்று என்னொவெல்லாம் எழுதுகிறீர்கள்...தமிழ் அநாகரீமாக எழுதினால் சுட்டிக் காட்டி திருந்தப் போவதாக எழுதி இருந்தீர்கள் இதே பதிவில் ஒருவர் தேவையில்லாமல் அநாகரீகமாக எழுதி இருக்கார் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?...அது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது ஆனால் ர‌தி போன்ற பெண் உறுப்பினர் எழுதினால் உட‌னே தெரிந்து விடும்.

மிகுதி விவாதம் தொட‌ர்ந்தால் இர‌வு வந்து வைத்துக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி விவாதம் தொட‌ர்ந்தால் இர‌வு வந்து வைத்துக் கொள்கிறேன்

:( :( :(

:unsure: :unsure: :unsure:

:lol: :lol: :lol:

மிகுதி விவாதம் தொட‌ர்ந்தால் இர‌வு வந்து வைத்துக் கொள்கிறேன்

. இப்பவாவது நீங்கள் போதி மரத்துப் புத்தராகி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் பல இடங்களில் ஆபாசமாக உரையாடல்களை நீங்கள் செய்திருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். :):D:icon_idea:

மண்ணாங்கட்டி...நானாவது புத்தராக மாறுவதாவது...!! ஒருக்காலும் நடக்காது

நான் பல இடங்களில் நேரடியாக, மறைமுகமாக, கொடுப்புக்குள்ள சிலேடையாக ஆபசமாக / இரட்டை அர்த்தத்தில் கதைத்து விட்டு கம்முன்று இருந்து விடுவன். முக்கியமாக உங்களால் ஆரம்பிக்கப்பட்ட "மாங்கனிகள் தொட்டினிலே தூங்குதடி" என்ற அர்த்ததில் வரும் திரியில் கூட எழுதியிருக்கின்றேன். ஆனால் நிச்சயம் இன்னொருவரை விமர்சிக்கும் போது அநாகரீகமாக ஆபசமாக திட்டியதில்லை

ஆனால் அதற்காக நான் மட்டும்தான் எழுதுவேன் என்றோ அல்லது ஆண்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றோ ஒற்றைக் காலிலும் நின்றதில்லை.

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பல இளைஞர்கள் இங்கு பகிடியாகவும் சிலவேளை ஆபாசமாகவும் எழுதியதற்காக சிவப்புப்புள்ளிகளையும் தடைகளையும் ஏன் சிலவேளை அவர்களை முழுவதுமாக இங்கிருந்து கலைக்க நானும் சிலவேளைகளில் காரணமாக இருந்திருக்கின்றேன். அப்போதெல்லாம் யாழின் தராதரத்தையும் இங்கு எழுதும் பெண்களை பாதுகாப்பதற்காகவுமே என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஒரு காலத்தில் தவறுகளைச்சுட்டிக்காட்டுங்கள் தமிழைக்கொச்சைப்படுத்துவோரை இங்கு அனுமதிக்கமுடியாது அப்படி யாரும் எழுதினால் எமது கண்ணில் படாவிட்டாலும் எழுதுங்கள் என்று நல்லதை செய்ய நல்லதைவளர்க்க நல்லதுணை தேடிய யாழே இன்று அவர்கள் கேட்டவற்றை செய்தமைக்காக எம்மை நோக்கி நீயார் என கை நீட்டுவதைப்பார்க்கும்போது மிகவும் மனவருத்தமாக உள்ளது. கத்தரிக்கோலை கையில் வைத்தபடி பலரது கருத்துக்களை வெட்டி பலரை தடை செய்த நிழலி கூட அவரை ஏன் கேட்கவில்லை(உண்மையில் ராஜேஸ் பற்றி நெடுக்கெழுதியதை நான் கவனிக்கவில்லை) இவரை ஏன் கேட்கின்றீர்கள் என்பது போன்று தான் செய்யவேண்டிய துப்பரவை நாம் செய்ததை குற்றம் காணுவதும் அவலமானநிலையை சுட்டிக்காட்டிநிற்கிறது.

தமிழின் மேலுள்ள பற்றுதலால் தமிழின் வார்த்தை பிரயோகங்களை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை. அத்துடன் இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அல்லது போட்டிக்குப்போட்டியாக எழுதத்தொடங்கினாலோ யாழின் தரமே குறைவடையும். யாழின் நீண்டநாள் வாசகன் மற்றும் நலன் விரும்பி என்ற அடிப்படையில் அதை விரும்பவில்லை என்பதையும் அதை குறைக்கும் எந்த வேலையிலும் நான் ஈடுபடமாட்டேன் என மோகன் அண்ணாவுக்கும் மற்றும் நிழலி உட்பட மட்டுனர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இதை நடாத்த மோகன் அண்ணா படும்பாடு நானறிவேன். எனவே இது பற்றிய விவாதத்தை இத்துடன் நிறுத்துகின்றேன். நன்றி.

விசுகு,

உண்மையில் உங்களுக்கு இதனை நேர்வழியில் செய்ய நினைத்து இருந்தால்,

1. நீங்கள் அவ்வாறு எழுதுவதை நிறுத்தி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து இருப்பீர்கள். இதே திரியில் ஆத்திரம் மேலிட 'பேப்பூனா' என்று கூட படு தூசனம் எழுதி இருக்கின்றீர்கள்

2. ரிப்போர்ட் பட்டனை அழுத்தி, அறியத்தந்து இருப்பீர்கள்

3. அல்லது தனி மடலின் மூலம் மோகன் அண்ணாவுக்கோ அல்லது மட்டுக்களுக்கோ அறியத் தந்து இருப்பீர்கள்

3. வார்த்தையை தவறாக பயன்படுத்தியதாக உணர்ந்து இருந்தால் புங்கையூரான் போன்று கண்ணியமாக சுட்டிக் காட்டி இருப்பீர்கள் அல்லது ரதி தவறு என்று புங்கையூரானிடம் ஒத்துக் கொண்ட பின்பாவது திரியை நீட்டாமல் விட்டு இருப்பீர்கள்

4. பெற்றோர்களை இழுத்து எழுதி இருக்கமாட்டீர்கள்

5. மற்றவர்கள் இதே தவறை; முக்கியமாக் நானோ அல்லது இன்னொரு ஆணோ இதே போன்று எழுதியிருந்தவற்றுக்கும் உங்கள் அவதானங்களை குறிப்பிட்டு தவறைச் சுட்டிக் காட்டியிருப்பீர்கள்

உண்மையில் எனக்கு ஒரு உறவு தனிமடல் இட்டு நீங்கள் வழக்கம் போல சக உறவின் அம்மா அப்பாவை இழுக்கின்றீர்கள் என்று அறியத் தந்த பின்தான் இந்த திரியையே நான் பார்த்தது (ரதி அல்ல அந்த உறவு).

எனவே மாற்றம் முதலின் தன்னில் வரவேண்டும். தான் திருந்தினால் உலகம் திருந்தும் அல்லது உலகை திருத்தலாம் என்ற முன்னோர்கள் வாக்கியங்களை மீண்டும் நினைத்து பாருங்கள்

நெடுக்கு கூட பல முறை பல தவறுகளை ரிப்போர்ட் பண்ணி திருத்த வழி செய்து இருக்கின்றார் என்பதை அவரிடமே கேட்டுப் பாருங்கள்

முக்கியமாக இப்போதிருக்கும் இளைஞர்கள், இளைஞிகள் உங்கள்/ எங்கள் தலைமுறையை விட மிகத் தெளிவாக இருக்கின்றனர். தாம் எது செய்கின்றோம் என்ற தெளிவில் இருக்கின்றார்கள். தம்மை யாராவது விமர்சித்தால் விமர்சிப்பவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தான் முதலில் பார்க்கின்றனர்; அவரின் வயதை அல்ல

நன்றி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லாததைப்பற்றி இவ்வளவு கதையா.. எல்லாரும் பேசாமற் போய் "படுங்கய்யா.."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லாததைப்பற்றி இவ்வளவு கதையா.. எல்லாரும் பேசாமற் போய் "படுங்கய்யா.."

காவடி!என்ன இது?திருப்பியும் எரிச்சலை கிளப்பிக்கொண்டு........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லாததைப்பற்றி இவ்வளவு கதையா.. எல்லாரும் பேசாமற் போய் "படுங்கய்யா.."

மாவீரர் தினத்தை பல பிரிவுகளாக நடாத்துவதைப் பற்றி அலட்டுவதைவிட இது பரவாயில்லை. தனிமனித ஒழுக்கம், தமிழ் வளர்ப்பு எல்லாம் இருக்கின்றதுதானே! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பூன் என்றால் என்ன ஈழ தோழர்கள் அறிய தருவீர்களா? உங்கட பாசை புரியாது என்றாலும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன.. ? :)

ஊடகங்களில் உள்ள மேற்படி நபரின் அறிவிப்பு என்பதான செய்திப்படி தான் அதை இட்டுள்ளேன். மேலும் பிரா என்ற சொல்லை ஊடகங்களில் பாவிக்கினம். http://www.dinakaran...x?id=761&id1=49 // http://www.tamilmirr...7-12-03-43.html

மேலும் பிராவிற்கு தூய தமிழ் சொல்லை எழுதிட்டு.. என் போலித்தனத்தை பறை சாற்றுதல் நன்று. எங்களுக்கு எங்கள் விஞ்ஞான ஆசிரியர் கூட.. Blue to Red (Acid) இதை ஞாபகப்படுத்த BRA என்று ஞாபகம் வைக்கச் சொல்லி தந்தார்கள். அது எங்கள் தப்பா. அவையை நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்திறன்.

மேலும்.. இந்த ஆடைக்கு.. அந்த ஆன்ரி சொன்ன வடிவில்.. செய்தி சொல்லாட்டி.. அது அந்த ஆன்ரியை அகெளரவப்படுத்துவது போலாகிடும்.

அதுசரி.. நீங்கள் ராஜேஸ் ஆன்ரியின் அபிமானி என்பது எனக்கு இன்று தான் தெரியும். :):lol::icon_idea:

BRA என்பதன் தூய தமிழ் சொல் மார்புகச்சை இதை நான் சாண்டில்யன் நாவல்களில் படித்திருக்கிறேன்.

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பூன் என்றால் என்ன ஈழ தோழர்கள் அறிய தருவீர்களா? உங்கட பாசை புரியாது என்றாலும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன.. ? :)

தோழர். இது பபூன் என அழைக்கப் படும் ஒரு வகைக் குரங்கு வகையைக் குறிக்கின்றது!

இது இலங்கையின் வன்னிப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கருங்குரங்கு!

காளமேகப் புலவர் சொல்வது போல, 'குரங்கே' என்று ஒருவரைத் திட்டுவது போல!

இலங்கைத் தமிழில் மிகவும் தரங்கெட்ட :wub: ஓர் வார்த்தையாகக் கருதப் படுவது!

யோவ் புரட்சி

ஏற்கனவே இந்தத் திரி தீப்பற்றி நாலு பக்கம் நீண்டு விட்டது. நீர் வேறு வந்து திருமூலர் திருமந்திரத்திற்கு அர்த்தம் கேட்பது மாதிரி எண்ணையை ஊற்றுகிரீர். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.