Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுகளில் விளக்கேற்றுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gloriosa_superba.jpg

நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,

வற்றிப் போகாமல்,

வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர்,

வடிந்தோடி நிறைத்திருக்க,

வடக்கிலும், கிழக்கிலும்.

வசந்தம் தேடியவர்களின்,

வாடிப் போன முகங்களில்,

கோடுகள் மட்டும் விழுகின்றன!

அரேபியாவின் பாலைவனங்களை,

அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக';

அரைக் காசுக்கும் பயனில்லாத,

அபிவிருத்தித் திட்டங்கள்

ஆயிரமாய் அரங்கேறுகின்றன!

அந்தக் காலத்து வாழ்வில்,

ஆடம்பரங்கள் இல்லை!

அரை வயிற்றுக் கஞ்சியும்,

ஆனையிறவின் அசைவில்!

ஆனாலும் வாழ்வில்,

அர்த்தம் இருந்தது!

வளவைச் சுற்றி வர,

வேலிகள் இருந்தன!

விடி வெள்ளி கூட.

அருகில் நெருங்கியது!

யாருக்குத் தெரியும்?

விட்டில் பூச்சிகளுக்கு,

விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று!

வினாக்கள் தொடர்கின்றன!

விடைகள் மட்டும்,

கண்ணாமூச்சி ஆடுகின்றன!

தாயைக் கட்டிப் பிடித்த,

சேயின் குரல்வளைகள் நெரித்துத்,

தாய் கூடப் பேயாகினாள்!

வென்றாலும், தோற்றாலும்

வீர மறவர்கள் நீங்கள்!

விடை பெற்றுப் போய்விட்ட,

வீராங்கனைகள் நீங்கள்!

விதையாகி விட்ட உங்களை,

வியாபாரப் பொருளாக்கி,

விற்பனைச் சந்தையில்,

விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!

வேதனையின் விம்மலுடன்,

விழி கனக்க நினைக்கிறோம்!

இழப்பின் பரிமாணம்.

ஏளனத்துடன் சிரிக்கின்றது!

நீங்கள் பாய்ந்த போது,

நாங்களும் பாய்ந்தோம்!

களம் வென்று வந்த போது,

புளங்காகிதம் கொண்டு,

வாழை மரங்கள் நட்டு,

விடுதலைக் கீதமிசைத்தோம்!

வானத்தில் பறந்த போது,

நாங்கள் கூடப் பறந்தோம்!

ஆனாலும்,

நீங்கள் வீழ்ந்த போதில்.

நாங்கள் வீழ்ந்து விடவில்லை!

நாய்களைப் போல்,

நமக்குள்ளே போட்டிகள்!

கருவூலங்களின் திறப்புகளும்,

கை மாறி விட்டன!

அக்கினியில் குளித்தும்,

அழிந்து போகாத, சீதையின்

தூய்மை உங்களுக்கு!

உங்கள் கனவுகள்,.

நனவாகும், காலம் வரை,

நினைவுகள் சுமந்து.

நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!

Edited by புங்கையூரன்

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைக்கு கவிபடைத்த புங்கையூரனுக்கு என் நன்றிகள்.

எளிமையான இலகு சொல்லெடுத்து உணர்வூட்டும் வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் உங்களுக்கு ஒரு பச்சை

இணைப்புக்கு நன்றி சகோதரா.

சகோதரி நிலாமதி கூறியது போன்று, " எளிமையான இலகு சொல்லெடுத்து உணர்வூட்டும் வரிகள் ".

சாதாரண வாசகர்களையும் சென்றடையும் ஆழமான உணர்வுகொண்ட வரிகள்.

நன்றிகள் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்திற்கு பொருத்தம் மிக்க கவிதை. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான்

நாய்களைப் போல்,

நமக்குள்ளே போட்டிகள்!

கருவூலங்களின் திறப்புகளும்,

கை மாறி விட்டன!

காலத்திற்கு பொருத்தம் மிக்க கவிதை. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் வடித்த

புலி வீரர் கவிதையிது!

வேரினுள் ஓடி

விதைகளைத் தேடுது!

கிளைதனில் தொங்குது

ஆயிரம் பிஞ்சுகள்!

மீண்டும் தோன்றிடும்

பல்லாயிரம் விதைகள்!!!

நன்றி நண்ப!

நன்றி புங்கையூரன்.....!

தங்களின் வரிகள் ஒவ்வொன்றையும் பலமுறை படித்தேன்!

தெளிவடைய வேண்டிய நிலையில் நாங்கள்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான கவிதை தந்த புங்கையூரானுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள் தொடர்கின்றன!

விடைகள் மட்டும்,

கண்ணாமூச்சி ஆடுகின்றன!

தாயைக் கட்டிப் பிடித்த,

சேயின் குரல்வளைகள் நெரித்துத்,

தாய் கூடப் பேயாகினாள்!

வென்றாலும், தோற்றாலும்

வீர மறவர்கள் நீங்கள்!

விடை பெற்றுப் போய்விட்ட,

வீராங்கனைகள் நீங்கள்!

விதையாகி விட்ட உங்களை,

வியாபாரப் பொருளாக்கி,

விற்பனைச் சந்தையில்,

விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!

வேதனையின் விம்மலுடன்,

விழி கனக்க நினைக்கிறோம்!

இழப்பின் பரிமாணம்.

ஏளனத்துடன் சிரிக்கின்றது!

நீங்கள் பாய்ந்த போது,

நாங்களும் பாய்ந்தோம்!

களம் வென்று வந்த போது,

புளங்காகிதம் கொண்டு,

வாழை மரங்கள் நட்டு,

விடுதலைக் கீதமிசைத்தோம்!

வானத்தில் பறந்த போது,

நாங்கள் கூடப் பறந்தோம்!

ஆனாலும்,

நீங்கள் வீழ்ந்த போதில்.

நாங்கள் வீழ்ந்து விடவில்லை!

நாய்களைப் போல்,

நமக்குள்ளே போட்டிகள்!

கருவூலங்களின் திறப்புகளும்,

கை மாறி விட்டன!

அக்கினியில் குளித்தும்,

அழிந்து போகாத, சீதையின்

தூய்மை உங்களுக்கு!

உங்கள் கனவுகள்,.

நனவாகும், காலம் வரை,

நினைவுகள் சுமந்து.

நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!

நன்றி புங்கையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கனவுகள்,.

நனவாகும், காலம் வரை,

நினைவுகள் சுமந்து.

நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!

வணக்கம் புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும்,

நீங்கள் வீழ்ந்த போதில்.

நாங்கள் வீழ்ந்து விடவில்லை!

நாய்களைப் போல்,

நமக்குள்ளே போட்டிகள்!

கருவூலங்களின் திறப்புகளும்,

கை மாறி விட்டன!

உண்மைதான் :(

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

புங்கையூரான் உங்களுக்கு ஒரு பச்சை

இணைப்புக்கு நன்றி சகோதரா.

அலை அரசி, தமிழரசு... மேலே, புங்கையூரான் எழுதியது சொந்தக் கவிதை.

அதனை இணைப்பு என்று சொல்லி, அவரின் மனதை நோகப் பண்ணாதீங்கப்பா...

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள் தொடர்கின்றன!

விடைகள் மட்டும்,

கண்ணாமூச்சி ஆடுகின்றன!

தாயைக் கட்டிப் பிடித்த,

சேயின் குரல்வளைகள் நெரித்துத்,

தாய் கூடப் பேயாகினாள்!

வென்றாலும், தோற்றாலும்

வீர மறவர்கள் நீங்கள்!

விடை பெற்றுப் போய்விட்ட,

வீராங்கனைகள் நீங்கள்!

விதையாகி விட்ட உங்களை,

வியாபாரப் பொருளாக்கி,

விற்பனைச் சந்தையில்,

விலை பேசுகின்றார்கள்!

வீழ்ந்து விட்ட வீரர்களே!

வேதனையின் விம்மலுடன்,

விழி கனக்க நினைக்கிறோம்!

உண்மை!

உள்ளத்துக் குமுறல்களை நிரலாக்கிப் படையலிட்ட புங்கையூரானுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

காலத்தின் தேவைக்கு கவிபடைத்த புங்கையூரனுக்கு என் நன்றிகள்.

எளிமையான இலகு சொல்லெடுத்து உணர்வூட்டும் வரிகள்.

புங்கையூரான் உங்களுக்கு ஒரு பச்சை

இணைப்புக்கு நன்றி சகோதரா.

சகோதரி நிலாமதி கூறியது போன்று, " எளிமையான இலகு சொல்லெடுத்து உணர்வூட்டும் வரிகள் ".

சாதாரண வாசகர்களையும் சென்றடையும் ஆழமான உணர்வுகொண்ட வரிகள்.

நன்றிகள் நன்றிகள்.

காலத்திற்கு பொருத்தம் மிக்க கவிதை. நன்றிகள்.

நன்றி புங்கையூரான்

நாய்களைப் போல்,

நமக்குள்ளே போட்டிகள்!

கருவூலங்களின் திறப்புகளும்,

கை மாறி விட்டன!

காலத்திற்கு பொருத்தம் மிக்க கவிதை. நன்றிகள்.

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான கவிதை தந்த புங்கையூரானுக்கு நன்றி.

நன்றி புங்கையூரான்

வணக்கம் புங்கையூரான்.

உண்மைதான் :(

அலை அரசி, தமிழரசு... மேலே, புங்கையூரான் எழுதியது சொந்தக் கவிதை.

அதனை இணைப்பு என்று சொல்லி, அவரின் மனதை நோகப் பண்ணாதீங்கப்பா...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட கள உறவுகளுக்கு, நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் வடித்த

புலி வீரர் கவிதையிது!

வேரினுள் ஓடி

விதைகளைத் தேடுது!

கிளைதனில் தொங்குது

ஆயிரம் பிஞ்சுகள்!

மீண்டும் தோன்றிடும்

பல்லாயிரம் விதைகள்!!!

நன்றி நண்ப!

சுவி உங்கள் கவிதை அழகு! எங்களுக்கும் உங்கள் கவிதை மழையில் நனைய, உங்கள் கவிதைகளையும் களத்தில் பதியுங்களேன்! நன்றிகள்!

நன்றி புங்கையூரன்.....!

தங்களின் வரிகள் ஒவ்வொன்றையும் பலமுறை படித்தேன்!

தெளிவடைய வேண்டிய நிலையில் நாங்கள்!!!!!!!!!!!!

தங்கள் கருத்துக்கு நன்றிகள், கவிதை!

கலங்கல்கள் விலகும்போது, தெளிவு தானே வரும்!

விரைவாக அந்தத் தெளிவைக் கொண்டு வருவது கூட, எங்கள் கையில் தான் உள்ளது!!!

உண்மை!

உள்ளத்துக் குமுறல்களை நிரலாக்கிப் படையலிட்ட புங்கையூரானுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும்.

நன்றிகள் நொச்சி! நீண்ட நாட்களுக்குப் பின்பு களத்தில் உங்களைக் கண்டத்தில், மிகவும் மகிழ்ச்சி!

எரிமலைகள் கூடக் குமுறிப் பின் அடங்கி விடுகின்றன!

எங்கள் குமுறல்கள், என்றைக்குமே அடங்கிப் போகச் சிங்களம் விடாது! நாங்களாக அதை அடக்கினாலல்லாது, தானாக அடங்காது!!!

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் புங்கையூரனின் கவிதை.....இன்றைய காலகட்டத்தில் ..... நினைவுகள் சுமந்து. நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் புங்கையூரனின் கவிதை.....இன்றைய காலகட்டத்தில் ..... நினைவுகள் சுமந்து. நெஞ்சினில் விளக்கேற்றுவோம்!

நன்றிகள், புத்தன்!

 

கடந்த சில வாரங்களாக, எனது கவிதைகளை இன்றைய தெரிவாக இணைத்துவரும் நியானிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!  :D

 

காலங்கள் கடந்து விட்டபோதும், உண்மை இன்னும் கூட அப்படியே உள்ளது! :o

 

ஆனால் நாங்கள் எதையும் தொலைத்து விடவில்லை! எவையும் வீணாகப் போய் விடவும் இல்லை!

 

தங்கள் நிழலைப்பார்த்தே குரைக்கின்ற நாய்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, காலம் கனிந்து வருவதன் அறிகுறியாகும்!

 

இன்றும் கூட, தமிழ் நெட் செய்திகளின் படி, இந்தியா, அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கெதிராக, இலங்கையின் இனவழிப்புக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது!

 

இது போன்ற செய்திகள் வரப்போகும் பெருமழைக்கான தூறலாக இருக்க வேண்டுமென்பதே எனது அவா!

 

http://news.tamilnet.com/art.html?catid=13&artid=36824

தியாகத்தின் சூட்டில் குளிர்காய்வோர் கண்டிப்பா படிக்க வேண்டிய கவிதை அண்ணே வாழ்த்துக்கள் .

 

ஆனாலும்,
நீங்கள் வீழ்ந்த போதில்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை!
நாய்களைப் போல்,
நமக்குள்ளே போட்டிகள்!
கருவூலங்களின் திறப்புகளும்,
கை மாறி விட்டன! :(

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எம் அனைவரின் நெஞ்சங்களிலும் நிலையாக வீற்றிருக்கும் என் தியாக தீபங்களுக்கு நினைவாலே விளக்கேற்றும் காலத்திற்கேற்ற நல்லதொரு கவிதை அருமையான வரிகள் நன்றிகள் புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.