Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது தாயகப் பயணமும் சமரச அரசியல் பற்றிய சிந்தனைகளும்

Featured Replies

வணக்கம் நண்பர்களே! பேசி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு அன்பான நன்றிகள்.

இதிலே என்னுடைய தாயகப் பயணம் பற்றிய அனுபவங்களையும் சமரச அரசியல் நோக்கிய என்னுடைய சிந்தனைகளையும் தொடராக எழுது விரும்புகிறேன்.

சமரச அரசியல் என்பது அடிமை அரசியல் அல்ல. அதே வேளை எதிர்ப்பு அரசியலும் இல்லை. விட்டுக் கொடுப்புக்களை செய்து பெறக்கூடியவற்றை பெற்றுக் கொண்டு தன்னை தக்க வைத்தபடி அடுத்த இலக்கு நோக்கி நகர்வதுதான்.

.

இந்த் தொடரில் தாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நான் சந்தித்த மக்கள், கண்ட ஊர்கள் என்பவைகளோடு என்னை சமரச அரசியலின் பக்கம் சிந்திக்கச் செய்கின்ற காரணிகள் பற்றியும் பேச இருக்கிறேன்.

கட்டாயம் புலம்பெயர் நாடுகளில் நிலவுகின்ற அரசியல் பற்றியும் பேசுவேன்.

தொடங்குவதற்கு முன்பு உங்களின் கருத்தை கேட்க விரும்புகிறேன். நான் இதை எழுதலாமா? எழுதுவது ஏதாவது பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு நாளை இரவு வந்து எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் அண்ணா...நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவை காண்பதில் மகிழ்ச்சி...அரசியல் என்று வந்தால் விமர்சனம் என்பது விளைவாக இருக்கும்தானே..இதில் என்ன பாதிப்பு..தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...காத்திருக்கிறோம் வாசிக்க...

நாங்கள் எல்லோரும் எதையும் தாங்கும் இதயமாகி பல வருடங்களாகிவிட்டன .எழுதுங்கள் வாசிக்க ஆவலாக இருக்கு

வணக்கம் சபேசன்

உங்கள் கட்டுரைகளைத் தொடருங்கள். வாசிக்க ஆவலாய் உள்ளோம்.

முன்பு கண்டமேனிக்கு பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருந்தவர்களில் நீங்களும் ஒருவர் . இங்கு ஒரு உறவு (குறுக்கர்) இதைப் பற்றிக் கேட்ட பொழுது, போர் நடக்கும் பொழுது புலம் பெயர்ந்தவர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று எழுதினீர்கள். முன்பு ஆய்வுகள் செய்யும் பொழுது இந்த 'சமரச அரசியல்' செய்ய வேண்டியதன் அவசியத்தை உணரவில்லையா?

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தாயகம் போய் சம்பந்தரோட.. கூட்டணி வைச்சுள்ள.. சித்தார்த்தன்.. சங்கரி.. வரதராஜப் பெருமாள்.. என்று.. பிசினஸ் பேசிட்டு வந்து எழுதுறார் போல..! :):lol:

தேள் வடிவில் அடிவிழப் போகுது என்று வன்னிக் கள நிலவரங்களில் சூடு பரப்பிய.. ஆட்களில் இவரும் ஒருவர்..! அப்புறம்.. மற்றவன் தாலி கட்டக் கூடாது என்று "புரட்சி பேசியவர்".. தான் மனைவியின் விருப்பதுக்கு கட்டினன் என்றிட்டு போனவர் தான் இப்ப தான் திரும்பி வந்திருக்கிறார். நல் வரவுகள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

தேள் என்றால் கொட்டத்தான் செய்யும் நீங்கள் எழுதுங்கள் சபேசன்.அதற்கு முதல் ஒரு கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்.

விஷம் பரவக் கூடாதில்ல.. அந்த விடயத்தில் அவதானம் அவசியம்.. வாத்தியார்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தீவை வாங்கி அங்கே தமிழ் மக்களை குடியேற்றலாம் என்ற கோணத்திலும் சபேசன் சிந்தித்தவர். :) இனி சமரச அரசியல் பற்றி எழுதவுள்ளார்.தொடரவும்.

முன்பு ஒரு முறை பதுளை காடுகளை புலிகள் பிடிக்க வேண்டும் என்ற ஆய்வாளரும் இதே (ஆடு)களத்தில் எழுதுவது எமக்கு ஆய்வாளர்களுக்கு பஞ்சமில்லை என்று மட்டும் விளங்குகிறது. :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சபேசன்!கண்டு கனகாலம்????உள்ளதை எழுதுங்கள்....உண்மைகள் வெளிவரட்டும்....ஈழத்தமிழனுக்கு விடிவு வரவேண்டும்.

வாழத்துக்கள் சபேசன் உங்கள் தொடருக்கு . உங்கள் போன்றோரது தொடுகை யாழில் தொடராதது எனக்கு மிகவும் கவலை அழித்த விடையம் . மேலும் முரண்பாடுகள் எங்குதான் இல்லை . சொல்லப் போனால் இந்தப் பூமியே பல முரண்பாடுகளைத் தன்னகத்தே உள்வாங்கி அமைதியாக உள்ள கிரகம் . மேலும் சமரச அரசியலில் ஏறத்தாள 50 வருடங்களுக்கு மேலாகப் பயணித்த எமது தேசியப்போராட்டத்தின் பெறுபேறுகள் என்ன என்று கேட்டால் இல்லை என்பதே விடை . இதற்கு முக்கிய காரணியாக அமைந்தது எமது இனத்தின் மரபணுக்களில் ஊறிய நண்டுக் குணமே . பின்பு , ஆயுத வழிப் போராட்டத்தால் தமிழ் இனத்தின் வரலாறு உலகசரித்திரத்தின் பக்கத்தில் உள்வங்கப்பட்டது . இப்பொழுது நீங்கள் சொல்லப் போகின்ற சமரச அரசியல் என்ன செய்தியைத் தரப்போகின்றது என அறிய ஆவலாக உள்ளேன் . தொடருங்கள் சபேசன் :) :) :) .

பிற சக்திகளின் நலன்களா? தமிழ்த் தேசத்தின் நலன்களா?

kajendrirakumaar%20ponnampalam.jpgசர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயற்ப்படுவதா, அல்லது எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில் எமது கொள்கையினை முன்வைப்பதா?கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கடந்த பத்தியில் சுயநிர்ணய உரிமைக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு பற்றி ஆராயப்பட்டிருந்தது. அதில், அதிகாரப்பகிர்வு வழிமுறையிலான தீர்வுக்கு இணங்கிப்போவது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை நிர்மூலமாக்கும் செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இம்முறை பத்தியானது, இரு தேசங்கள் ஒரு நாடு என்ற நிலைப்பாடு எவ்வாறாக சர்வதேசத்தினால் நோக்கப்படும் என்பது பற்றி ஆராயவுள்ளது.

சர்வதேசத்தினைப் பொறுத்த வரையில், அது இலங்கை தொடர்பில் நிலையான வெளியுறவுக் கொள்கையினை கொண்டதாக இல்லை. சர்வதேசமானது இலங்கை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, மற்றும் சீன தலைமையிலான நாடுகள் என மூன்று அணிகளாக செயற்படுகின்றது. இவ்வாறாக சர்வதேசம் மூன்று அணிகளாக செயற்படுகின்ற நிலையில், அவர்கள் தத்தமது நாடுகளின் நலன் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய தீர்வினையே எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வலியுறுத்துகின்ற நிலைமை உள்ளது.

சர்வதேச சமூகம் தமது நலன்களைக் பேணத்தக்க வகையில், இலங்கைத் தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தங்களுக்கென ஓர் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடென்பது, அவர்களது நலனை கவனத்திற்கொள்வதாகவே இருக்கும். அதனடிப்படையில் அழுத்தத்தினை பிரயோகிப்பதற்கான முக்கியமான ஒரு கருவியாக, தமிழ் அரசியல் உருவாகியுள்ளது. ஆதலால், சர்வதேசத்தினை மட்டும் திருப்திப்படுத்தும் முகமாக கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து, தமிழ்மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்காது பேணப்படத்தக்கவகையிலும், அதேவேளை, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையிலும், தமிழ் அரசியல் தலைமைகள் தமது நிலைப்பாட்டினை உறுதியாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்கவேண்டும்.

ஏனெனில், தமது நலனை பேணத்தக்க வகையிலேயே சர்வதேசம் இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். குறைந்த அழுத்தத்துடன் தமது நாட்டின் நலன் பேணப்படுமாயின், தமிழ்மக்களுக்கு குறைந்தபட்சத் தீர்வினையே திணித்துவிட முயற்சிப்பார்கள்.

இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்கு நிலையானதும், நீதியானதுமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், தமிழ் அரசியல் தலைமைகளை ஒரு கருவியாக பயன்படுத்தி, சிங்களத் தரப்பினை தமது தேவைக்கேற்ப வழிநடத்துவதிலேயே சர்வதேச சமூகம் கவனம் செலுத்துகிறது.

அதற்காக, தமிழ் அரசியல் தலைமைகள்; சிறீலங்கா அரசின் நலன்களுக்கு நேரடியாகவே இணங்கிச் செயற்படுகின்ற தரப்பாக இருக்கக் கூடாது எனவும் சர்வதேசம் எதிர்பார்க்கும்.

ஆகவே, தமிழ்த் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைமைகள், பூகோளஅரசியலில், தமிழ்மக்களுக்கு சார்பாக உருவாகியுள்ள வாய்ப்பை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும்.

புதிய நாடு என்ற விடயம் சர்வதேசத்தின் தற்போதைய ஒழுங்குகளை மாற்றியமைக்கும் எனக்கூறி, அதனை சர்வதேசம் நிராகரித்து வருகிறது. அதேவேளை, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உள்ள தமிழர் தேசம், அதேபோன்ற சமஅந்தஸ்த்துடன் உள்ள சிங்கள தேசத்துடன் ஓரு நாட்டுக்குள் இணைந்து வாழக்கூடியவகையிலான அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்திகொண்டிருக்கும் வரை, அதனை சர்வதேச சமூகம் நிராகரிக்கமுடியாத சூழல் உருவாகும். மேலும், தமிழ்த் தேசம் தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அரவணைத்து செல்லும் வரை, தமிழ்மக்களின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் நிராகரிக்க முடியாததாக அமையும்.

இந்த அடிப்படையில் தான் சென்ற பத்தியில் கூட இரு தனித்துவமான இறைமை கொண்ட தேசங்கள், சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்திய கூட்டினை நிராகரிக்க முடியாது என்றிருந்தேன்.

மேலேகூறப்பட்ட விடயங்களை சுருக்கமாகச் சொன்னால், சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயப்படுவதா, அல்லது எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில் எமது கொள்கையினை முன்வைப்பதா என்ற கேள்வி எழுகிறது? தமது நலன்களை முன்னிறுத்திய சர்வதேச சமூகத்தின் நிகழ்சிசி நிரலானது, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உடைய தமிழர் தேசத்தின் நலன்களை பேணாது. ஆகவே, எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில், தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து, எமது கொள்கையினை முன்வைக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான், இரு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட தேசங்களுடைய கூட்டாக தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறோம்.

இவைகள் இவ்வாறிருக்க, சிங்கள தேசத்தின் தலைமைத்துவமான சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் அவசியமாக நோக்கத்தக்க விடயமாகவுள்ளது.

கடந்த வாரப் பத்தியில், அதிகாரப் பகிர்வு என்ற பாதையில் தமிழ் அரசியல் தலைமைகள்; நகர்வதானது, நாம் சுயநிர்ணய உரிமையினை எவ்வாறு இழப்பதாக அமையும் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தேன். அது அவ்வாறிருக்க, இன்றைய சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வு என்ற விடயத்திலும் பார்க்க குறைந்த பாதையான அதிகாரப் பரவலாக்கம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் என்பதை அடிப்படையாகக் கொண்டே பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகள் என்ற விடயத்தினை முன்வைத்து பேச்சுக்கள் நடக்கையில், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் எவ்வாறானவை என்பது அனைவரும் கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும். இந்த மாகாண சபையில், ஆளுநர், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என மூன்று அங்கங்கள் இருப்பதனை நாம் அவதானிக்கலாம்.

மாகாண சபைகளுக்கு தனியான இருப்புக் கிடையாது. சிங்கள தேசத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய இருப்பே உள்ளது. இம் முறைமையில்; சிங்கள தேசத்தின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரினாலேயே, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தப்படுகின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரினால் நிiவேற்று அதிகாரம் மாகாண சபைகள் மீது பிரயோகிக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தினை அமைச்சரவை ஊடாகவும் திணைக்களங்களின் தலைவர்கள் ஊடாகவும் ஆளுநர் பிரயோகிக்கின்றார்.

அதாவது, முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் ஆக்கபூர்வமான அதிகாரங்கள் எதுவும் இல்லை. அவர்கள் தனித்து ஆளுநரின் நிறைவேற்று அதிகாரத்தை பியோகிப்பதற்கு உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்குமே மட்டுமே உள்ளனர். அதேவேளை, அமைச்சரவையின் ஆலோசனைகளைப் புறக்கணித்து அல்லது கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலே ஆளுநரால் தன்னிச்சையாக செயற்பட முடியும் என்பது ஆழமாக அவதானிக்கப்பட வேண்டியது.

ஜனாதிபதி விரும்பிய நேரத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபைகளைக் கலைக்கலாம். இது தமிழ்த் தேசத்து மக்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்த பிரதிநிதிகளை சிங்கள தேசத்து தலைவர் கேட்டுக் கேள்வியின்றி அகற்றுவதாக அமைகின்றது. அத்துடன், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை செயல்வடிவம் கொடுக்கக்கத்தக்கதாக சட்டங்களை பாராளுமன்றம் இயற்றவேண்டும்;. அவ்வாறாக இயற்றிய சட்டத்தினை (உதாரணமாக மாகாண சபைகள் சட்டம் ) சாதாரண பெரும்பான்மை மூலம் பாராளுமன்றம் நீக்கவோ மாற்றவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் உத்தரவுப் படியே மாகாண சபைகள் நடந்துகொள்ளவேண்டும். இதன் அர்த்தம், ஜனாதிபதியின் விருப்பத்திற்கும் உத்தரவிற்கும் அடங்கிய வகையிலேயே மாகாண சபைகள் செயற்பட வேண்டும் என்பதாகும்.

மாகாண சபைகளின் நிதி சம்மந்தமான விடயங்கள் கூட ஜனாதிபதியினதும் சிங்கள தேசத்தினதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயேயுள்ளது. மாகாண அமைச்சரவை ஆளுநருடன் இணங்க மறுத்தால், ஜனாதிபதி அமைச்சரவையினை கலைக்க முடியும்.

சுருக்கமாகக் கூறுவதாயின், மாகாண சபை முறையில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அமைச்சரவைக்கு அமைச்சரவை அதிகாரங்கள் இல்லை. அதேவேளை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனருக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. இதனை இன்னுமொரு வகையில் கூறுவதாயின், பல அதிகாரங்கள், ஆளுனருக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் ஒரு மோசமான நிலையே உள்ளது.

மாகாண சபைகள் உண்மையில் நிதியைக் கூட கையாள முடியாத ஒரு புகழப்பட்ட உள்ளுராட்சி சபைகளாக மட்டுமே உள்ளன. இது மட்டுமல்லாமல், மாகாண சபைகளினால் எடுக்கப்படும் தீர்மானங்களை “தேசிய கொள்கை” என்ற பெயரில் பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்படும் சட்டங்களின் வாயிலாக செல்லுபடியற்றதாகச் செய்ய முடியும் என்ற நிலையும் காணப்படுகின்றது.

தமிழ் மக்களது விருப்பாக அவர்களது அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையே உள்ளது. ஆனால், அதிகாரப் பகிர்வென்பது சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும்; ஒரு அம்சமாகவே உள்ளது என்பதைனை எனது முன்னைய பத்திகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். மாகண சபையென்பது அந்த அதிகாரப் பகிர்வையும் விட மோசமானது என்பதுடன், வெறும் அதிகாரப் பரவலாக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த மாகாண சபையென்பது ஒற்றையாட்சி முறைக்குள் உருவாக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிறீலங்கா அரசு ஓற்றையாட்சி முறைக்குள் அமைந்திருக்கின்றமையே இனப்பிரச்சினை தோற்றம் பெற்று நீண்டு செல்வதற்கான பிரதான காரணமாகும். இந்த நிலையில், மாகாண சபையை கட்டியெழுப்பலாம் என முற்பட்டால், அந்த மாற்றங்கள் ஒற்றையாட்சியை மீறுகின்ற விடயமாக இருப்பின், அந்த திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பொரும்பான்மையினையும், ஒரு சர்வஜன வாக்கnடுப்பில் பெரும்பான்மை ஆதரவினையும் பெறவேண்டி இருக்கும். இது, இன்றைய சிங்கள தேசத்தின் மனோநிலையை கருத்தில் கொள்ளும் போது சாத்தியமற்ற விடயம் என்பதை முன்னைய கட்டுரைகள் ஊடாக எடுத்துக் காட்டியிருந்தேன்.

இதனை, தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் புனித வாரத்தில் மனதிற்கொள்வோமாக.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

தேடல்களும், அனுபவங்களும் சிந்தனை மாற்றங்களை உருவாக்க்கும். அதிலும் குறிப்பாக பயணங்கள், சந்திப்புக்கள் சிலவேளை நமது கருத்தியலை வட துருவத்தில் இருந்து தென்துருவத்திற்கும் மாற்றக்கூடியவை. மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்போர் தமது இயங்கு தளத்தை யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குப் பின்னிற்க மாட்டார்கள்.

வெறும் வரட்டுக் கெளரவம் பார்க்கும் தூய்மைவாதிகள் தாங்கள் பல வருடங்களாக நம்பிய கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

அதில் சிலர் கொள்கைகளின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக மானிடத்திற்கு நன்மை பயக்குமே இல்லையோ என்ற கேள்விகளைத் துச்சமாக மதித்து, கொள்கை தோன்றிய அடிப்படைக் காரணத்தை மறந்து வாழ்பவர்கள்.

இன்னும் சிலர் தமது வாழ்நாளின் முக்கிய காலகட்டத்தை ஒரு கொள்கைக்காக இழந்தவர்கள். இவர்களிற்கு கொள்கையை விட்டுக்கொடுப்பது வாழ்நாளின் சில வருடங்களை வீணாக்கிவிட்டோமே என்ற மனவுளைச்சலை ஏற்படுத்தும். எனவே தமது மனவுளைச்சலைத் தவிர்ப்பதற்காகக் கொள்கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டிருப்பார்கள்..

சபேசன், தனிப்பட்ட ரீதியில் உங்கள் மேல் சேறு அடிக்கப் பலர் இருந்தாலும் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக முன்வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி சமரசம் செய்தால் துரோகம் என்போம்.. கருணா செய்தால் துரோகம் என்போம்.. சம்பந்தன் செய்தால் துரோகம் என்போம்.. ஆனால் நாங்கள் குந்தி இருந்து அது பற்றியே நாலு பக்கத்துக்கு எழுதி வைச்சுப் படிப்போம்..! அதிலும்.. அடிமைக்கு அப்பால் விடுதலைக்கு இப்பால்... நடுவில் நின்று சமரசம் செய்தோம் என்றால்.. அது ஒரு புது கண்ணோட்டம்.. அதனூடு.. விடிவு வரப்போகுது..அடுத்த இலக்கு நோக்கி.. நகர்வது குறித்து சிந்திக்கலாம் என்று ஏதோ இல்லாததை.. இவ்வளவு காலமும் நடக்காததை சொல்லப் போறதா படம் காட்டுவோம்.

இதெல்லாம்.. குழம்பின குட்டைகள் இருக்கும் இடத்தில்.. மீன் பிடிக்க தெரிந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் என்ன.. இந்த எழுத்துக்களால்.. நன்மையை விட மக்களை குழப்பி அடிக்கும் தன்மை இன்னும் இன்னும் கூடும் என்பது மட்டும் தெளிவா தெரியுது.

இன்று தாயகத்தில் ஒன்றும் புரட்சி அரசியல் நடக்கவில்லை.. யாரும் தமிழீழமும் கேட்கல்ல. தமிழ் தேசியமும் பேசல்ல. டக்கிளஸ்.. கருணா.. சம்பந்தன்.. சங்கரி.. வரதராஜப்பெருமாள்.. சித்தார்த்தன்.. மனோ கணேசன்.. என்று எல்லோரும்.. இணக்க.. சமரச அரசியலே செய்து கொண்டிருக்கினம். தமிழர்கள் கடந்த 64 ஆண்டுகளாக செய்ததும் இதைத்தான்..! பலன்...???! பல ஆயிரம் பேரைப் பலியிட்டு.. தோல்வியில் முடிந்த ஆயுதப் போராட்டமும்.. பல இல்டசம் பேரின்.. வளமான புலம்பெயர் வாழ்வும்.. வசதிக்கு ஏற்ப தாயக விடுமுறைகளும்.. பக்கம் பக்கமான ஆராய்ச்சி கட்டுரைகளும்.. பயணக்கட்டுரைகளும்..???!

இதன் மூலம் எட்டப்பட்ட அடுத்த இலக்கு... சூனிய அரசியல் சூழல்..! அனாதைகளாக்கப்பட்ட மக்கள். இதைக் கடந்து ஏதேனும்.. புதிசா இருந்தா சொல்லுங்க.. இல்லைன்னா விடுங்க சார். சனம் நிம்மதியா அதுகள் பாட்டுக்கு சூழ்நிலைக்கு ஏற்பவா முடிவெடுத்து வாழுங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சி ஆக்குங்கள்..! இந்தியப் படைகள் நிற்கேக்க.. நீங்களா வந்து சனத்துக்கு வழிகாட்டினனீங்கள். இல்லையே அதுகளா.. சூழ்நிலைக்கு தகுந்ததா மாறி வாழ்ந்துதுகள்.. வாழ்க்கையை தக்க வைச்சுதுகள். தமிழனுக்கு சொல்லிக் கொடுக்காமலே சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி வாழத் தெரியும்.. அரசியல் நடத்தத் தெரியும் என்று நினைக்கிறேன். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சபேசன் அண்ணா

எழுதுங்கள்

நாம் கனக்க பேசணும்.

நீண்ட நாட்களின் பின் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி சபேசன்! :)

தெளிவான கண்ணோட்டத்துடன், உள்ளதை உள்ளபடி எழுதுங்கள்........!

வாசித்து தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்!

  • கருத்துக்கள உறவுகள்

சமரசம் என்பது நுனி நாக்கில் மட்டும் நிலைக்க வேண்டும்..! :wub:

மாறாக, இலட்சிய உறுதி என்பது நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சமரசம் என்பது நுனி நாக்கில் மட்டும் நிலைக்க வேண்டும்..! :wub:

மாறாக, இலட்சிய உறுதி என்பது நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்..! :rolleyes:

இந்த நிலைப்பாட்டை சர்வதேசம் சரியாகப் புரிந்ததனால்தான் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது இலட்சிய உறுதியைச் சோதிக்க ஒன்றுமே செய்யாமல் இருந்தார்கள்.

சமரச அரசியல் என்னைப் பொறுத்தவரை அடிமை அரசியலுக்குச் சமனாகும். என்றாலும் சபேசன் புதிதாக எதையாவது சொன்னால் கேட்பதில் தவறில்லை.. உள்வாங்கி முடிவெடுப்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விடயம்!

யாரும் இங்கு சபேசனை எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. அவரிடம் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. முன்பு சபேசன் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்.

பலரின் ஆய்வுகளில், மே 19 இற்கு முன் பிழையான தகவல்களே தரப்பட்டுக் கொண்டிருந்தன. புலத்து மக்கள் கற்பனை உலகில் சஞ்சரிக்கவே இவை உதவின. புலிகள் விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டவோ, சர்வதேச அரசியல் நிலையைப் புரிந்து கொண்டு இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் பற்றியோ ஆராயப்படவில்லை. புலிகளே தங்கள் சகதிக்குள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் 'தாக்குதல் உத்திகள்' எல்லாம் கற்பனையில் கண்டுபிடித்து எல்லோரையும் 'பப்பா' வில் ஏற்றி வைத்திருந்தார்கள். உண்மையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்று அவர்களுக்கே அப்பொழுது விளக்கமில்லை.

இனி வரும் காலங்களிலாவது ஆய்வுகள் செய்பவர்கள் பொறுப்புடன் எழுத வேண்டும். காரணம் ஒரு இனத்தின் விடிவும் அதில் தங்கியுள்ளது.

உந்த பப்பாவில் ஏற்றிவிடும் ஆய்வாளர்களை தான் புலிகளும் விரும்பியது .மன்னாருக்கு ஆமி வந்தால் மதவாச்சியில் நாங்கள் நிற்போம் என்றதும்,கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆமி நிற்கின்றான் நடந்துபோயே அடிக்கலாம் என முள்ளிவாய்காலில் ஆமி நிற்கும் போது சொன்னவர்களல்லவா?.

இங்கு ஒரு ஆய்வாளர்கள் சொன்னார் தேசிய எழுச்சிக்கு இப்படியான கருத்துக்களை முன் வைக்கசொல்லித்தான் தமக்கு சொல்லப்பட்டதாகவும் உண்மையை சொல்லவேளிக்கிட்டவர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் சொன்னார்.

அதே ஆய்வாளர்கள் தான் இன்றும் அதே வாணவேடிக்ககைகளை காட்டிக்கொண்டிருகின்றார்கள் .கனடாவில் வானொலியைத் திறந்தால் இந்த ஆய்வாளர்களின் கொமேடிக்கு பஞ்சமில்லை.அதுவும் ஒரு பெண்ணாய்வாளர் குரலை வேறு உயர்த்தி தேசியம் தேனாக அந்தமாதிரி ஓடும் ,கேட்க ,நம்ப பல கேணையர்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும் களஉறவொன்று எழுதியதுபோல் இ.பொ.சா வில் ஏறாமல் பிளேனில் ஏறியவர்கள் தான் இங்கு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இ.பொ.சா வில் ஏறாமல் பிளேனில் ஏறியவர்கள் தான் இங்கு அதிகம்.

முதன் முதலில் மதவாச்சியில் கண்ட ரயிலில் ஏறித்தான் கொழும்பு வந்தேன்! ஆனால் அதற்கு முதலில் விமானத்தில் ஏறிய அனுபவம் இருக்கின்றது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பப்பாவில் ஏற்றிவிடும் ஆய்வாளர்களை தான் புலிகளும் விரும்பியது .மன்னாருக்கு ஆமி வந்தால் மதவாச்சியில் நாங்கள் நிற்போம் என்றதும்,கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆமி நிற்கின்றான் நடந்துபோயே அடிக்கலாம் என முள்ளிவாய்காலில் ஆமி நிற்கும் போது சொன்னவர்களல்லவா?.

இங்கு ஒரு ஆய்வாளர்கள் சொன்னார் தேசிய எழுச்சிக்கு இப்படியான கருத்துக்களை முன் வைக்கசொல்லித்தான் தமக்கு சொல்லப்பட்டதாகவும் உண்மையை சொல்லவேளிக்கிட்டவர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் சொன்னார்.

அதே ஆய்வாளர்கள் தான் இன்றும் அதே வாணவேடிக்ககைகளை காட்டிக்கொண்டிருகின்றார்கள் .கனடாவில் வானொலியைத் திறந்தால் இந்த ஆய்வாளர்களின் கொமேடிக்கு பஞ்சமில்லை.அதுவும் ஒரு பெண்ணாய்வாளர் குரலை வேறு உயர்த்தி தேசியம் தேனாக அந்தமாதிரி ஓடும் ,கேட்க ,நம்ப பல கேணையர்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும் களஉறவொன்று எழுதியதுபோல் இ.பொ.சா வில் ஏறாமல் பிளேனில் ஏறியவர்கள் தான் இங்கு அதிகம்.

உங்களின் தேனி ஆட்களின் ஆராய்வையும் நாங்களும் இடைக்கிடை வாசிப்போமில்ல.புல்லரிக்கும். அது சரி இவர்களும் இ.போ.ச வில் தான் ஏறி வந்தவர்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

அத்தோடு தேனிக்கள் இப்போது வெறும் வாயை மென்ற வண்ணம் உள்ளார்கள். சில பொரி அரிசிகளை போடுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பப்பாவில் ஏற்றிவிடும் ஆய்வாளர்களை தான் புலிகளும் விரும்பியது .மன்னாருக்கு ஆமி வந்தால் மதவாச்சியில் நாங்கள் நிற்போம் என்றதும்,கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆமி நிற்கின்றான் நடந்துபோயே அடிக்கலாம் என முள்ளிவாய்காலில் ஆமி நிற்கும் போது சொன்னவர்களல்லவா?.

இங்கு ஒரு ஆய்வாளர்கள் சொன்னார் தேசிய எழுச்சிக்கு இப்படியான கருத்துக்களை முன் வைக்கசொல்லித்தான் தமக்கு சொல்லப்பட்டதாகவும் உண்மையை சொல்லவேளிக்கிட்டவர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் சொன்னார்.

அதே ஆய்வாளர்கள் தான் இன்றும் அதே வாணவேடிக்ககைகளை காட்டிக்கொண்டிருகின்றார்கள் .கனடாவில் வானொலியைத் திறந்தால் இந்த ஆய்வாளர்களின் கொமேடிக்கு பஞ்சமில்லை.அதுவும் ஒரு பெண்ணாய்வாளர் குரலை வேறு உயர்த்தி தேசியம் தேனாக அந்தமாதிரி ஓடும் ,கேட்க ,நம்ப பல கேணையர்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும் களஉறவொன்று எழுதியதுபோல் இ.பொ.சா வில் ஏறாமல் பிளேனில் ஏறியவர்கள் தான் இங்கு அதிகம்.

அண்ணா ஊரில கார்,பஸ் ஓடித் திரிந்த ஆக்களுக்குத் தான் எல்லாம் தெரியுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேடல்களும், அனுபவங்களும் சிந்தனை மாற்றங்களை உருவாக்க்கும். அதிலும் குறிப்பாக பயணங்கள், சந்திப்புக்கள் சிலவேளை நமது கருத்தியலை வட துருவத்தில் இருந்து தென்துருவத்திற்கும் மாற்றக்கூடியவை. மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்போர் தமது இயங்கு தளத்தை யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குப் பின்னிற்க மாட்டார்கள்.

வெறும் வரட்டுக் கெளரவம் பார்க்கும் தூய்மைவாதிகள் தாங்கள் பல வருடங்களாக நம்பிய கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

அதில் சிலர் கொள்கைகளின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக மானிடத்திற்கு நன்மை பயக்குமே இல்லையோ என்ற கேள்விகளைத் துச்சமாக மதித்து, கொள்கை தோன்றிய அடிப்படைக் காரணத்தை மறந்து வாழ்பவர்கள்.

இன்னும் சிலர் தமது வாழ்நாளின் முக்கிய காலகட்டத்தை ஒரு கொள்கைக்காக இழந்தவர்கள். இவர்களிற்கு கொள்கையை விட்டுக்கொடுப்பது வாழ்நாளின் சில வருடங்களை வீணாக்கிவிட்டோமே என்ற மனவுளைச்சலை ஏற்படுத்தும். எனவே தமது மனவுளைச்சலைத் தவிர்ப்பதற்காகக் கொள்கைகளை இறுக்கிப் பற்றிக் கொண்டிருப்பார்கள்..

சபேசன், தனிப்பட்ட ரீதியில் உங்கள் மேல் சேறு அடிக்கப் பலர் இருந்தாலும் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக முன்வையுங்கள்.

Round_glossy_green_button_by_fbouly.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியமான வார்த்தைகள் தொடருங்கள் திரு சபேசன் அவர்களே.

மீண்டும் இதனூடாக சந்திப்பதில் மகிழ்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.