Jump to content

நான் அவனில்லை...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவனில்லை...

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... :D)

இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... :D  அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன்.

சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும் இன்னும் கொஞ்சப் பொடியளோட கோயிலடியில இருந்து அரட்டை அடிச்சு முடிஞ்சு வெளிக்கிட நேரம் இரவு 11 ஆச்சு.இண்டைக்கு வீட்டை போனா திட்டு விழும் எங்கை இவ்வளவு நேரமும் போனனி எண்டு.இன்னும் கொஞ்ச நேரம் பிந்திப் போனா வீட்டில எல்லாரும் நித்திரை ஆகிவிடுவினம்...பூனை மாதிரி சத்தப்படாமல் உள்ளட வேண்டியதுதான்...விடிய எழும்பிப் பாக்கிறவைக்கு நான் எப்ப வந்தன் எப்பிடி வந்தன் எண்டு தெரியாது.வீட்டை போய்ச் சாப்பிட்டா சட்டிபானை தட்டுப்படுற சத்தத்தில எல்லாரும் நித்திரையாலை எழும்பிவிடுவார்கள்...பசிவேறு வயித்தைக் கிள்ளுது...ரவுனுக்க இருக்கிற கொத்துக்கடைக்குப் போவமெடா எண்டு நண்பணிடம் சொல்லிப்போட்டு நான் மோட்டார்பைக்கில ஏறி உட்க்காந்திட்டன்.நண்பண்தான் றைவிங்க்(என்ன காறா றைவிங்க் பண்ண எண்டு கேட்க்காதீர்கள்...எங்களுக்கு அந்த நேரம் கார்,பஸ்,ரெயின்,ஏறோப்பிளேன் எல்லாம் மோட்டார்பைக்தான்)ரவுன் கொத்துக்கடையில ஆளுக்கொரு கொத்துரொட்டியை முழுங்கிவிட்டு ஏப்பம் விட்டவாறு வந்துகொண்டிருக்கிறம்...நேரம் அரைச்சாமம் ஆகிவிட்டது.ஊருக்குள்ளை வந்ததும் மச்சான் கெட்லைட்டை நிப்பாட்டெடா ஆரும் பாத்திட்டு காலைமை அப்பரிட்டப் போட்டுக்குடுக்கப்போறாங்கள் எண்டு அவனை அலேட்டாக்கினதும் லைற்றை நிப்பாட்டிட்டு சிக்னல் லைற்றின்ர வெளிச்சத்தக் கொண்டு ஒரு குத்துமதிப்பில அவன் ஓடிக்கொண்டிருக்கிறான்...

முறிகண்டித்துரை வீட்டை நெருங்குகிறம்..."மவனே நீ இண்டைக்குச் செத்தாயடா...வே** மவனே என்ர மகள் கேக்குதாடா உனக்கு" முறிகண்டித்துரை வீட்டிலிருந்து ஒரு உருவம் கத்தியவறு எங்களை நோக்கி வாறது இருட்டுக்கை தெரியுது...கையில ஒரு கொட்டன் சிக்னல் லைற்றில மின்னிமின்னித் தெரியுது... அந்த உருவத்துக்குப் பின்னாலை ஒரு கூட்டமே வருகுது...எல்லாரும் தயாராய் நிண்டிருக்கிறாங்கள் போல...எனக்கு இப்ப என்னோட கூடவந்தவன்,மோட்டார்பைக்,காலில் போட்டிருந்த செருப்பு எதுவுமே ஞாபகமில்லை...எப்படி ஓடிக்கொண்டிருந்த மோட்டார்பைக்கை விட்டு இறங்கினன் எண்டு கூடத்தெரியவில்லை..."அண்ணை நானில்லை,அண்ணை நானில்லை" எண்டு கத்திக்கொண்டு இரவு ஆரோ கேற்றைக்கொழுவ மறந்துபோய் விட்டிருந்த வீடொன்றுக்கை உள்ளட்டு மண்கும்பி ஒண்டுக்குப்பின்னாலை விழுந்து படுத்திட்டன்..படுத்துக் கிடந்து வானத்தைப் பார்த்தபடி யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்...எதுக்குத் துரத்துறாங்கள் எண்டு எனக்குப் பிடிபடுகுதே இல்லை...எனக்குத் தெரிஞ்சு எந்த வம்பு தும்புக்கும் நானும் என்ர நண்பனும் கிட்டடியிலை போனதில்லை...(அப்பிடியெண்டால் முன்னம் போனனியளோ எண்டு கேக்காதேங்கோ..முன்னமும் போனதில்லை :D )

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. :icon_mrgreen: (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் :D )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

யோசிச்சுக்கொண்டிருக்க காலடியில் ஏதோ வழுவழுப்பா உழக்குப்படுற மாதிரி இருந்திச்சு...தலையைத் திருப்பிப் பாத்தா ஒரு அஞ்சு இல்லா ஆறடியில் பெரிய பாம்பொண்டு..நான் எங்கை நிக்கிறன் எண்டதையும் மறந்துபோய் வழமையாய் வீட்டை கத்திற மாதிரி "அய்யோ பாம்புபாம்பு" எண்டு கத்திவிட்டன்..பிறகென்ன...அஞ்சு பெட்டையளும் தகப்பன்காறனோட சேர்ந்து என்னைச் சுத்தி வளைச்சிட்டாளவை...லைற்றடிச்சுப் பாத்தா அது சாரைப் பாம்பு...அமாவாசை இருட்டுக்கை தவளை தேடி வந்திருக்கு...அடச்சனியனே உன்னைப்பாத்தா நான் கத்தினனான்...அநியாயமாப் பிடிபட்டுட்டனே...எனக்கு அவமானமும் அதேநேரம் சின்ராசண்ணையைப் பாக்கப் பயமாயும் இருந்துது...அவமானத்தைப் பாக்காமல் நடந்ததைச் சொல்லி சின்ராசண்ணையிட்டைச் சரண்டராயிட்டன்...அவளவையும் பயப்படாதையுங்கோ நாங்கள் இருக்கிறம் எண்டு என்னைச் சுத்தி நிண்டுகொண்டாளவை...அந்தப் பிரச்சினையிலும் எனக்கு அப்ப அவளவையோட இருட்டுக்கை நிக்கிறது கிழுகிழுப்பா இருந்திச்சு... :icon_mrgreen: கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கெண்டு சந்தோசமாயிருந்திச்சு..

என்னைத் துரத்தி வந்தவன் தூசணத்திலயும் என்ர "நான் அவனில்லை" எண்ட ஒப்பாரியிலையும் குரைக்கத் தொடங்கியிருந்த ஊர் நாயின்ர சத்தமெல்லாம் இப்பத்தான் அடங்கிப்போயிருந்தது..எனக்கு அப்பதான் என்கூட வந்த என்ர நண்பனின்ரையும் மோட்டார்பைக்கின்ரையும் ஞாபகம் வந்திச்சு...முறிகண்டித்துரை வீட்டுப்பக்கம் காது குடுத்துக் கேக்கிறன்...சனங்கள் சுத்தி நிண்டு கதைக்கிறது கேக்குது...எனக்கு என்னநடந்ததெண்டு அறியவேணும் எண்டு ரென்சனாக்கிடக்கு..தெம்பாக் கதைச்சுப்போட்டுப் போன சின்ராசண்ணையோ றோட்டுக்கு இறங்கிறார் இல்லை...மனிசன் பயத்தில தன்ர வீட்டுக் கேற்றோட நிண்டு டோச்சை சுத்திச் சுத்தி அடிச்சுப்பாக்குது...கொஞ்ச நேரத்தில ஆரோ ஒருத்தன் என்ர பேரை ஈனஸ்வரத்தில முனகியபடி றோட்டால வாறான்..ஆரெண்டு பாப்பம் எண்டு கேற்றடிக்கு வந்து சின்ராசண்ணைக்குப் பின்னாலை ஒளிஞ்சு நிண்டு பாத்தா என்னோட வந்த என்ர நண்பண் ஒரு கையால மோட்டார்பைக்கை உருட்டியபடி மற்றக் கையில என்ர ஒரு சோடி செருப்பையும் தூக்கிக் கொண்டு என்னை வேலியளுக்க தேடினபடி வந்துகொண்டிருந்தான்...ஆள் ஒரு சேதாரமும் இல்லாமல் முழுசா வந்திருந்தான்.எனக்கு அவனைத் தனியா விட்டிட்டு ஓடிவந்திட்டனே எண்டு கவலையாய் இருந்தது..ஒருமாதிரி அவனைச் சமாளிச்சுப் போட்டு என்ன மச்சான் நடந்தது எண்டு கேக்கத்தான் விளங்கிச்சு..வில்லங்கமான நேரத்தில வில்லங்கமான இடத்துக்கு கெட்லைட்டும் போடாமல் வந்து நாங்கள் வில்லங்கமா அகப்பட்டிருந்திருக்கிறம் எண்டு..

நடந்தது இதுதான்...முறிகண்டித்துரைக்கு ஒருமகள் இருக்கிறாள்...ஒரே ஒருத்திதான்..வேறயாரும் இல்லை...பழைய படங்களில வாற நதியா(இப்ப புதுப்படங்களிலும் வாறா போல) மாதிரிக் களையாய் இருப்பாள்...அவளை ஆரோ ஒரு பெடியன் லவ்வி இருக்கிறான்...அது தெரிஞ்சு ரென்சனான முறிகண்டித்துரை மகளுக்கு அவசரம் அவசரமாக லண்டனில சொந்தக்காறப் பெடியனுக்குப் பேசி முற்றாக்கியிருக்கிறார்...அடுத்த நாள் கலியாணம்..இதை அறிஞ்ச அந்த லவ்வி சினிமாப் படங்களில வாற கீரோ மாதிரி ஆக்களைச் சேத்துக்கொண்டு பெட்டையைத்தூக்க அண்டைக்குப் பகல் வந்திருக்கிறான்...வந்தவங்கள் ஒரு காரிலை இல்லை ஆட்டோவிலை வந்திருக்கலாம்...அதை விட்டிட்டு எல்லாரும் மோட்டார்பைக்கில வந்து துலைச்சிருக்கிறாங்கள்..முறிகண்டித்துரை வீட்டு றோட்டாலை சுத்திச்சுத்தி வந்து நோட்டம் விட்டிருக்கிறாங்கள்...முறிகண்டித்துரை பெட்டையை வீட்டுக்கை வைச்சுப் பூட்டிப்போட்டு வெளியில ஒரு கோடாலியோட காவலிருந்திருக்கு...எவனாவது உள்ள வந்தா தறிக்கிறதெண்டு...பகல் பெட்டையைத் தூக்கேலாமல்ப் போக நாளைக்கு விடியிறதுக்குள்ளை பெட்டையைத் தூக்கிறதாச் சவால் விட்டிட்டுப்போயிருக்கிறாங்கள் வந்தவங்கள்...பயந்துபோன முறிகண்டித்துரை தன்ர இனசனங்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு தடிதண்டுகளோட காவலிருந்திருக்கு...அவங்கள் வாறதுக்கு முன்னம் கெட்லைட் இல்லாமல் நடுச்சாமத்திலைநாங்கள் வந்திருக்கிறம்...மிச்சக்கதை உங்களுக்குத் தெரியும்தான...

முறிகண்டித்துரை மாதிரி இல்லாமல் முறிகண்டித்துரையின்ர இனசனம் தெளிவா இருந்தபடியால்தான் என்ர நண்பண் தப்பியிருக்கிறான்...பின்னால இருந்து அவசரப்பட்டு நான் இறங்கி ஓட பெரும் ஆத்திரத்தில இருந்த முறிகண்டித்துரை நினைச்சிருக்கு நான் தான் லவ் பண்ணுற பெடியன் எண்டு..இருட்டு வேறு ஆளைஆள்த்தெரியா அமாவாசை இருட்டு.. அதுதான் அந்தாள் ஆள்த்தெரியாமல் என்னைத்துரத்தியிருக்கு...முறிகண்டித்துரை என்னைத்துரத்திக்கொண்டு ஓடிவர என்ர நண்பனை முறிகண்டித்துரையின்ர இனசனம் சுத்திவளைச்சிருக்கு..நல்லவேளை அவங்கள் இவன்ரை முகத்துக்கு டோச் அடிச்சுப் பாத்திருக்கிறாங்கள்...பாத்தா ஊர்ப்பொடியன்...அதுதான் அவன் தப்பின கதை..இல்லாவிட்டால் அடிக்கடி படங்களிலை துணியாலமூடி அடிவாங்குகிற வடிவேலு காமடிபோல ஆகியிருக்கும் என் நண்பன் நிலை.. :o

நண்பன் சொல்லி முடிக்கிறான்...எனக்கு என்னைச் சுத்தி நிக்கிற அஞ்சு பெட்டையள் மட்டும்தான் கண்ணுக்குத்தெரியுறாளவை..இப்ப எனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருகிது...வேலியிலை தடி ஒண்டை முறிச்செடுத்துக்கொண்டு என்னை விடுங்கோ உவனை ஒரு கை பாக்கிறன் றோட்டாலை போறவாறவங்களோட உவனுக்கென்ன சொறிச்சேட்டை எண்டு அடம்பிடிக்கிறன்...ஆனால் மனதுக்குள்ள ஆரேனும் மறிக்கவேணும் எண்டு நேந்துகொண்டிருக்கிறன்....நினைச்ச மாதிரி சின்ராசண்ணையின்ர பெட்டையள் என்னை மறிச்சிட்டாளவை...அந்த சமபவத்திற்க்குப் பிறகு வெக்கத்திலை நான் சின்ராசண்ணை வீட்டு றோட்டுப்பக்கம் தலைகாட்டுறதில்லை...ஏலுமானவரை அவளவை அஞ்சுபேற்றை கண்ணிலும் படாமல் ஒளிச்சுத்திரிஞ்சன்..சபதம் விட்டிட்டுப் போனவங்கள் கடைசிவரை வரவும் இல்லை பெட்டையைத்தூக்கவும் இல்லை...அநியாயமாய் நாங்கள்தான் இடையிலை அகப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது... :( முறிகண்டித்துரை அடுத்த நாள் சொன்னமாதிரி மகளுக்கு கலியாணவீடு நடத்திவைச்சு இப்ப நிம்மதியா இருக்கு..அதுக்குப் பிறகு முறிகண்டித்துரைமேல இருந்த கடுப்பில, அந்த வயதில் எங்களுக்கிருந்த இருந்த ரத்தச் சூட்டில நானும் நணபனும் முறிகண்டித்துரைக்கு இருட்டுக்கை மண்டையை உடைக்கிறதெண்டு கன நாள் தேடித் திரிஞ்சனாங்கள்...ஆனால் முறிகண்டித்துரைக்கு விசயம் தெரிஞ்சு ஆள் இரவில வெளியில வாறதில்லை...பிறகு காலப்போக்கில கோபம் எல்லாம் ஆறிப்போக அநதச் சம்பவத்தையும் மறந்து போனம்... :D(அதுசரி அந்த அஞ்சு பெட்டையள்ளை ஏதாவது பிறகு அகப்பட்டதா எண்டுதான கேக்குறியள்..?அதுதான் இல்லை..அவளவையள் லண்டன்,கனடா,அவுஸ்த்திறேலியா எண்டு ஆளுக்கொரு நாடாப்பாத்துக் கலியாணம் கட்டிச் செற்றிலாகிட்டாளவை...நானும் விக்கிரமாதித்தன் மாதிரிச் சளைக்காமல் வேற ஏதேனும் மாமரம் அகப்படுமோ எண்டு தேடித்திரியுறன் கல்லெறிய... :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் நன்றாக இருக்கு, ரசிச்சு வாசிக்க கூடியதாக இருந்திச்சு, சம்பவத்தை கண் முன்னால் நடக்கிற மாதிரி எழுதியுள்ளீர்கள், பச்சை இல்லை நாளைதான் குத்தனும், வாழ்த்துகள்,

இதைவிட மோசமா நடத்திருக்கு எனக்கு :lol::D

Link to comment
Share on other sites

நான் அவனில்லை...

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... :D)

...

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. :icon_mrgreen: (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் :D )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

...

:lol: :lol: :lol::D மனம்விட்டுச் சிரித்தேன், பகிர்விற்கு நன்றி...

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

முதல் பச்சை என்னுடையது..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...நன்றி..உங்கள் பச்சைப் பொற்கிளிகளுக்கும் பாராட்டுக்களுக்கும் யாழ்கள மன்னர்களே... :):D

Link to comment
Share on other sites

நான் அவனில்லை...

(நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... )

இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன்.

சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும் இன்னும் கொஞ்சப் பொடியளோட கோயிலடியில இருந்து அரட்டை அடிச்சு முடிஞ்சு வெளிக்கிட நேரம் இரவு 11 ஆச்சு.இண்டைக்கு வீட்டை போனா திட்டு விழும் எங்கை இவ்வளவு நேரமும் போனனி எண்டு.இன்னும் கொஞ்ச நேரம் பிந்திப் போனா வீட்டில எல்லாரும் நித்திரை ஆகிவிடுவினம்...பூனை மாதிரி சத்தப்படாமல் உள்ளட வேண்டியதுதான்...விடிய எழும்பிப் பாக்கிறவைக்கு நான் எப்ப வந்தன் எப்பிடி வந்தன் எண்டு தெரியாது.வீட்டை போய்ச் சாப்பிட்டா சட்டிபானை தட்டுப்படுற சத்தத்தில எல்லாரும் நித்திரையாலை எழும்பிவிடுவார்கள்...பசிவேறு வயித்தைக் கிள்ளுது...ரவுனுக்க இருக்கிற கொத்துக்கடைக்குப் போவமெடா எண்டு நண்பணிடம் சொல்லிப்போட்டு நான் மோட்டார்பைக்கில ஏறி உட்க்காந்திட்டன்.நண்பண்தான் றைவிங்க்(என்ன காறா றைவிங்க் பண்ண எண்டு கேட்க்காதீர்கள்...எங்களுக்கு அந்த நேரம் கார்,பஸ்,ரெயின்,ஏறோப்பிளேன் எல்லாம் மோட்டார்பைக்தான்)ரவுன் கொத்துக்கடையில ஆளுக்கொரு கொத்துரொட்டியை முழுங்கிவிட்டு ஏப்பம் விட்டவாறு வந்துகொண்டிருக்கிறம்...நேரம் அரைச்சாமம் ஆகிவிட்டது.ஊருக்குள்ளை வந்ததும் மச்சான் கெட்லைட்டை நிப்பாட்டெடா ஆரும் பாத்திட்டு காலைமை அப்பரிட்டப் போட்டுக்குடுக்கப்போறாங்கள் எண்டு அவனை அலேட்டாக்கினதும் லைற்றை நிப்பாட்டிட்டு சிக்னல் லைற்றின்ர வெளிச்சத்தக் கொண்டு ஒரு குத்துமதிப்பில அவன் ஓடிக்கொண்டிருக்கிறான்...

முறிகண்டித்துரை வீட்டை நெருங்குகிறம்..."மவனே நீ இண்டைக்குச் செத்தாயடா...வே** மவனே என்ர மகள் கேக்குதாடா உனக்கு" முறிகண்டித்துரை வீட்டிலிருந்து ஒரு உருவம் கத்தியவறு எங்களை நோக்கி வாறது இருட்டுக்கை தெரியுது...கையில ஒரு கொட்டன் சிக்னல் லைற்றில மின்னிமின்னித் தெரியுது... அந்த உருவத்துக்குப் பின்னாலை ஒரு கூட்டமே வருகுது...எல்லாரும் தயாராய் நிண்டிருக்கிறாங்கள் போல...எனக்கு இப்ப என்னோட கூடவந்தவன்,மோட்டார்பைக்,காலில் போட்டிருந்த செருப்பு எதுவுமே ஞாபகமில்லை...எப்படி ஓடிக்கொண்டிருந்த மோட்டார்பைக்கை விட்டு இறங்கினன் எண்டு கூடத்தெரியவில்லை..."அண்ணை நானில்லை,அண்ணை நானில்லை" எண்டு கத்திக்கொண்டு இரவு ஆரோ கேற்றைக்கொழுவ மறந்துபோய் விட்டிருந்த வீடொன்றுக்கை உள்ளட்டு மண்கும்பி ஒண்டுக்குப்பின்னாலை விழுந்து படுத்திட்டன்..படுத்துக் கிடந்து வானத்தைப் பார்த்தபடி யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்...எதுக்குத் துரத்துறாங்கள் எண்டு எனக்குப் பிடிபடுகுதே இல்லை...எனக்குத் தெரிஞ்சு எந்த வம்பு தும்புக்கும் நானும் என்ர நண்பனும் கிட்டடியிலை போனதில்லை...(அப்பிடியெண்டால் முன்னம் போனனியளோ எண்டு கேக்காதேங்கோ..முன்னமும் போனதில்லை )

என்னைத் துரத்திவந்தவன் பெரிய சத்தமாய் தூசனங்களால் அர்ச்சனை செய்தபடி வேலிக்கரை எல்லாம் டோச் அடிச்சு என்னைத் தேடுறான்...ரோச் வெளிச்சம் எனக்கு மேலை விழாதபடி மண்கும்பியைச் சுத்திச்சுத்தி குரோலிலை மூவ் பண்ணிக் கவர் எடுத்துக்கொண்டிருக்கிறன்.இந்த அமளிதுமளியிலை நான் ஒளிச்சிருந்த மண்கும்பி வீட்டுக்காறங்களும் எழும்பி கேற்றடிக்கு வந்திட்டாங்கள்...மெதுவாகக் கறட்டி ஓணாண் மாதிரி தலையை நிமிர்த்திப் பாக்கிறன்...நான் ஒளிச்சிருக்கிறது சின்ராசண்ணை வீடு...சின்ராசண்ணைக்கு அஞ்சு பெட்டையள்...ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி வடிவு...எனக்கு அஞ்சிலையும் ஒரு கண் இருந்தது...அவளவையைப் பாத்தவுடன ஆரைச் செலக்ற்பண்ணி லவ் பண்ணுவம் எண்டு நான் குழம்புறதுண்டு.. (அவளவை உன்னை லவ்பண்ண ஓமெண்டவளவையோ எண்டு நீங்கள் கேக்குறது எனக்கு விளங்குது...ஒரு மாங்காய் எண்டாத்தான் எறிஞ்சு விழுத்துறது கஸ்ரம்...இங்க அஞ்சு மாங்காய் கொத்தாய் இருக்கு...ஒரு கல்லை எறிவம் ஏதாவது ஒண்டு விழும்தான எண்ட நப்பாசைதான் )பெரிய மன்மதக் குஞ்சுபோல அவளவையை லுக்கு விடுறனான்...இப்ப எலிக்குஞ்சு மாதிரி அவளவை வீட்டு மண்கும்பிக்குப் பின்னால ஒளிச்சிருக்கிறன்..எனக்கு அவமானமாக இருந்தது...என்னைத்துரத்தி வந்தவன்மேல் ஆத்திரமாகவும் இருந்தது...எப்படி அவளவையின்ர கண்ணில படாமல் போறது...?அதே நேரம் அங்கை ஒருத்தன் ஏன் எதுக்கெண்டு தெரியாமல் டோச் அடிச்சு என்னைத்தேடிக்கொண்டிருக்கிறான் படுபாவி...அவன் கண்ணிலும் படாமல் போகவேணும்...

யோசிச்சுக்கொண்டிருக்க காலடியில் ஏதோ வழுவழுப்பா உழக்குப்படுற மாதிரி இருந்திச்சு...தலையைத் திருப்பிப் பாத்தா ஒரு அஞ்சு இல்லா ஆறடியில் பெரிய பாம்பொண்டு..நான் எங்கை நிக்கிறன் எண்டதையும் மறந்துபோய் வழமையாய் வீட்டை கத்திற மாதிரி "அய்யோ பாம்புபாம்பு" எண்டு கத்திவிட்டன்..பிறகென்ன...அஞ்சு பெட்டையளும் தகப்பன்காறனோட சேர்ந்து என்னைச் சுத்தி வளைச்சிட்டாளவை...லைற்றடிச்சுப் பாத்தா அது சாரைப் பாம்பு...அமாவாசை இருட்டுக்கை தவளை தேடி வந்திருக்கு...அடச்சனியனே உன்னைப்பாத்தா நான் கத்தினனான்...அநியாயமாப் பிடிபட்டுட்டனே...எனக்கு அவமானமும் அதேநேரம் சின்ராசண்ணையைப் பாக்கப் பயமாயும் இருந்துது...அவமானத்தைப் பாக்காமல் நடந்ததைச் சொல்லி சின்ராசண்ணையிட்டைச் சரண்டராயிட்டன்...அவளவையும் பயப்படாதையுங்கோ நாங்கள் இருக்கிறம் எண்டு என்னைச் சுத்தி நிண்டுகொண்டாளவை...அந்தப் பிரச்சினையிலும் எனக்கு அப்ப அவளவையோட இருட்டுக்கை நிக்கிறது கிழுகிழுப்பா இருந்திச்சு... கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கெண்டு சந்தோசமாயிருந்திச்சு..

என்னைத் துரத்தி வந்தவன் தூசணத்திலயும் என்ர "நான் அவனில்லை" எண்ட ஒப்பாரியிலையும் குரைக்கத் தொடங்கியிருந்த ஊர் நாயின்ர சத்தமெல்லாம் இப்பத்தான் அடங்கிப்போயிருந்தது..எனக்கு அப்பதான் என்கூட வந்த என்ர நண்பனின்ரையும் மோட்டார்பைக்கின்ரையும் ஞாபகம் வந்திச்சு...முறிகண்டித்துரை வீட்டுப்பக்கம் காது குடுத்துக் கேக்கிறன்...சனங்கள் சுத்தி நிண்டு கதைக்கிறது கேக்குது...எனக்கு என்னநடந்ததெண்டு அறியவேணும் எண்டு ரென்சனாக்கிடக்கு..தெம்பாக் கதைச்சுப்போட்டுப் போன சின்ராசண்ணையோ றோட்டுக்கு இறங்கிறார் இல்லை...மனிசன் பயத்தில தன்ர வீட்டுக் கேற்றோட நிண்டு டோச்சை சுத்திச் சுத்தி அடிச்சுப்பாக்குது...கொஞ்ச நேரத்தில ஆரோ ஒருத்தன் என்ர பேரை ஈனஸ்வரத்தில முனகியபடி றோட்டால வாறான்..ஆரெண்டு பாப்பம் எண்டு கேற்றடிக்கு வந்து சின்ராசண்ணைக்குப் பின்னாலை ஒளிஞ்சு நிண்டு பாத்தா என்னோட வந்த என்ர நண்பண் ஒரு கையால மோட்டார்பைக்கை உருட்டியபடி மற்றக் கையில என்ர ஒரு சோடி செருப்பையும் தூக்கிக் கொண்டு என்னை வேலியளுக்க தேடினபடி வந்துகொண்டிருந்தான்...ஆள் ஒரு சேதாரமும் இல்லாமல் முழுசா வந்திருந்தான்.எனக்கு அவனைத் தனியா விட்டிட்டு ஓடிவந்திட்டனே எண்டு கவலையாய் இருந்தது..ஒருமாதிரி அவனைச் சமாளிச்சுப் போட்டு என்ன மச்சான் நடந்தது எண்டு கேக்கத்தான் விளங்கிச்சு..வில்லங்கமான நேரத்தில வில்லங்கமான இடத்துக்கு கெட்லைட்டும் போடாமல் வந்து நாங்கள் வில்லங்கமா அகப்பட்டிருந்திருக்கிறம் எண்டு..

நடந்தது இதுதான்...முறிகண்டித்துரைக்கு ஒருமகள் இருக்கிறாள்...ஒரே ஒருத்திதான்..வேறயாரும் இல்லை...பழைய படங்களில வாற நதியா(இப்ப புதுப்படங்களிலும் வாறா போல) மாதிரிக் களையாய் இருப்பாள்...அவளை ஆரோ ஒரு பெடியன் லவ்வி இருக்கிறான்...அது தெரிஞ்சு ரென்சனான முறிகண்டித்துரை மகளுக்கு அவசரம் அவசரமாக லண்டனில சொந்தக்காறப் பெடியனுக்குப் பேசி முற்றாக்கியிருக்கிறார்...அடுத்த நாள் கலியாணம்..இதை அறிஞ்ச அந்த லவ்வி சினிமாப் படங்களில வாற கீரோ மாதிரி ஆக்களைச் சேத்துக்கொண்டு பெட்டையைத்தூக்க அண்டைக்குப் பகல் வந்திருக்கிறான்...வந்தவங்கள் ஒரு காரிலை இல்லை ஆட்டோவிலை வந்திருக்கலாம்...அதை விட்டிட்டு எல்லாரும் மோட்டார்பைக்கில வந்து துலைச்சிருக்கிறாங்கள்..முறிகண்டித்துரை வீட்டு றோட்டாலை சுத்திச்சுத்தி வந்து நோட்டம் விட்டிருக்கிறாங்கள்...முறிகண்டித்துரை பெட்டையை வீட்டுக்கை வைச்சுப் பூட்டிப்போட்டு வெளியில ஒரு கோடாலியோட காவலிருந்திருக்கு...எவனாவது உள்ள வந்தா தறிக்கிறதெண்டு...பகல் பெட்டையைத் தூக்கேலாமல்ப் போக நாளைக்கு விடியிறதுக்குள்ளை பெட்டையைத் தூக்கிறதாச் சவால் விட்டிட்டுப்போயிருக்கிறாங்கள் வந்தவங்கள்...பயந்துபோன முறிகண்டித்துரை தன்ர இனசனங்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு தடிதண்டுகளோட காவலிருந்திருக்கு...அவங்கள் வாறதுக்கு முன்னம் கெட்லைட் இல்லாமல் நடுச்சாமத்திலைநாங்கள் வந்திருக்கிறம்...மிச்சக்கதை உங்களுக்குத் தெரியும்தான...

முறிகண்டித்துரை மாதிரி இல்லாமல் முறிகண்டித்துரையின்ர இனசனம் தெளிவா இருந்தபடியால்தான் என்ர நண்பண் தப்பியிருக்கிறான்...பின்னால இருந்து அவசரப்பட்டு நான் இறங்கி ஓட பெரும் ஆத்திரத்தில இருந்த முறிகண்டித்துரை நினைச்சிருக்கு நான் தான் லவ் பண்ணுற பெடியன் எண்டு..இருட்டு வேறு ஆளைஆள்த்தெரியா அமாவாசை இருட்டு.. அதுதான் அந்தாள் ஆள்த்தெரியாமல் என்னைத்துரத்தியிருக்கு...முறிகண்டித்துரை என்னைத்துரத்திக்கொண்டு ஓடிவர என்ர நண்பனை முறிகண்டித்துரையின்ர இனசனம் சுத்திவளைச்சிருக்கு..நல்லவேளை அவங்கள் இவன்ரை முகத்துக்கு டோச் அடிச்சுப் பாத்திருக்கிறாங்கள்...பாத்தா ஊர்ப்பொடியன்...அதுதான் அவன் தப்பின கதை..இல்லாவிட்டால் அடிக்கடி படங்களிலை துணியாலமூடி அடிவாங்குகிற வடிவேலு காமடிபோல ஆகியிருக்கும் என் நண்பன் நிலை..

நண்பன் சொல்லி முடிக்கிறான்...எனக்கு என்னைச் சுத்தி நிக்கிற அஞ்சு பெட்டையள் மட்டும்தான் கண்ணுக்குத்தெரியுறாளவை..இப்ப எனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருகிது...வேலியிலை தடி ஒண்டை முறிச்செடுத்துக்கொண்டு என்னை விடுங்கோ உவனை ஒரு கை பாக்கிறன் றோட்டாலை போறவாறவங்களோட உவனுக்கென்ன சொறிச்சேட்டை எண்டு அடம்பிடிக்கிறன்...ஆனால் மனதுக்குள்ள ஆரேனும் மறிக்கவேணும் எண்டு நேந்துகொண்டிருக்கிறன்....நினைச்ச மாதிரி சின்ராசண்ணையின்ர பெட்டையள் என்னை மறிச்சிட்டாளவை...அந்த சமபவத்திற்க்குப் பிறகு வெக்கத்திலை நான் சின்ராசண்ணை வீட்டு றோட்டுப்பக்கம் தலைகாட்டுறதில்லை...ஏலுமானவரை அவளவை அஞ்சுபேற்றை கண்ணிலும் படாமல் ஒளிச்சுத்திரிஞ்சன்..சபதம் விட்டிட்டுப் போனவங்கள் கடைசிவரை வரவும் இல்லை பெட்டையைத்தூக்கவும் இல்லை...அநியாயமாய் நாங்கள்தான் இடையிலை அகப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டது... முறிகண்டித்துரை அடுத்த நாள் சொன்னமாதிரி மகளுக்கு கலியாணவீடு நடத்திவைச்சு இப்ப நிம்மதியா இருக்கு..அதுக்குப் பிறகு முறிகண்டித்துரைமேல இருந்த கடுப்பில, அந்த வயதில் எங்களுக்கிருந்த இருந்த ரத்தச் சூட்டில நானும் நணபனும் முறிகண்டித்துரைக்கு இருட்டுக்கை மண்டையை உடைக்கிறதெண்டு கன நாள் தேடித் திரிஞ்சனாங்கள்...ஆனால் முறிகண்டித்துரைக்கு விசயம் தெரிஞ்சு ஆள் இரவில வெளியில வாறதில்லை...பிறகு காலப்போக்கில கோபம் எல்லாம் ஆறிப்போக அநதச் சம்பவத்தையும் மறந்து போனம்... (அதுசரி அந்த அஞ்சு பெட்டையள்ளை ஏதாவது பிறகு அகப்பட்டதா எண்டுதான கேக்குறியள்..?அதுதான் இல்லை..அவளவையள் லண்டன்,கனடா,அவுஸ்த்திறேலியா எண்டு ஆளுக்கொரு நாடாப்பாத்துக் கலியாணம் கட்டிச் செற்றிலாகிட்டாளவை...நானும் விக்கிரமாதித்தன் மாதிரிச் சளைக்காமல் வேற ஏதேனும் மாமரம் அகப்படுமோ எண்டு தேடித்திரியுறன் கல்லெறிய... )

உங்கள் பன்முகப்பட்ட எழுத்து ஆழுமைக்கு இது ஒரு உரைகல் . அதாவது , உங்களால் நகைச் (சு) சுவைக்கும் படியும் எழுதமுடியும் என்பதை எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள் . உங்கள் எழுத்துக்கள் மேலும் வீரியம் பெற மனமார்ந்த வாழ்துக்கள் சுபேஸ் :) :) :) :) 3.

Link to comment
Share on other sites

ஐந்துக்கும் கண்ணை விட்டதால் தான் ஒண்டும் கிடைக்கவில்லை.துரோணரிடம் வில் வித்தை கற்கவில்லை போலிருக்கு .

நல்ல கதை .தொடருங்கள்.

நண்பரொருவர் பெண்பார்க்கும் புரோக்கரிடம் சீதனம் ,படிப்பு பற்றி அக்கறையில்ல பிள்ளை வடிவாக இருந்த காணும் என்று பெண் பார்க்க சொன்னவர் .

புறோக்கர் சொன்னார் "உங்களை மாதிரி பிள்ளையும் கொஞ்சம் அப்படி இப்படி பார்க்கும் தானே என்று "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ் நல்ல கலகலப்பான எழுத்து பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நல்லாருக்கு.

ஒன்று பிழைத்தாலும் மற்றதாவது அம்பிடும் என்று பிளான் போட்டு, கடைசியில் ஒன்றுமே கிடைக்காதவர்கள் பலர்.

இதெல்லாம் வாழ்க்கையில் ஜகஜம்தானே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் மனதை நெகிழப்பண்ணும் விதத்தில் எழுதிக்கொண்டிருந்த சுபேஸ் கலகலப்பாக எழுதி கலாய்த்துள்ளதால், சாத்திரிக்குக் கலக்கம் பிடித்தாலும் பிடிக்கும்!

நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!

Link to comment
Share on other sites

சுபேஸ்............ சபாஷ்! இதுவெல்லோ...... கலகலப்பு! அருமையான கதை ...! ரசித்தேன்... சிரித்தேன்! இதைமாதிரி ஒரு சம்பவம் .. என் வாழ்விலும் நடந்தது. ஆனால்... ஒரு காதல் கடிதம் வாங்கிறதுக்கு எடுத்த றிஸ்க் அது. இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.அதை ஞாபகப் படுத்தியது தங்கள் கதை. :)

அது சரி..... கொஞ்சம் முன்னமே பிரான்ஸ் வந்திருந்தால், அஞ்சில ஒண்டாவது பிரான்ஸ்சில இருந்திருக்கும்! :lol: :wub:

பாராட்டுக்கள் சுபேஸ்! 4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகைச்சுவை பதிவாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுகள் அத்தோடு யாழ் களத்தில் உள்ள சில பேருக்கு இருட்டடி கொடுக்க எனக்கு விருப்பம் அதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் சுபேஸ் . ^_^ .கிருபன் சொன்னது போலை எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உடையார்,குட்டி,இசைக்கலைஞன்,சுவி,கோமகன்,அர்ஜுன்,சகாறா அக்கா,தப்பிலி,கிருபன்,கவிதை,ரதி,சாத்த்ரி அண்ணை வாசிச்சு சிரிச்சதிற்க்கு... :D

,

இதைவிட மோசமா நடத்திருக்கு எனக்கு :lol::D

ஓ... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol::D மனம்விட்டுச் சிரித்தேன், பகிர்விற்கு நன்றி...

மனம் விட்டுச் சிரித்தால் நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழலாம்...சிரிப்பு மனிதர்களின் மனங்களில் படிந்திருக்கும் சோகம்களை துடைத்துவிட்டு பளபளக்கும் வெள்ளிப்பாத்திரம் போல் மனதை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது...

:lol: :lol: :lol:

முதல் பச்சை என்னுடையது..! :wub:

நன்றி சிரிப்பு மன்னா.. :D

இரண்டாவது ஹி ... ஹி !

உப்பிடி மொட்டையாய்ச் சொன்னா என்னமாதிரி..? நான் சாக் ஆயிட்டன்...சின்ராசண்ணையின்ர அஞ்சில ரண்டாவதாக்கும் எண்டு... :lol:

உங்கள் பன்முகப்பட்ட எழுத்து ஆழுமைக்கு இது ஒரு உரைகல் . அதாவது , உங்களால் நகைச் (சு) சுவைக்கும் படியும் எழுதமுடியும் என்பதை எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள் . உங்கள் எழுத்துக்கள் மேலும் வீரியம் பெற மனமார்ந்த வாழ்துக்கள் சுபேஸ் 3.

நன்றி கோமகன் அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரொருவர் பெண்பார்க்கும் புரோக்கரிடம் சீதனம் ,படிப்பு பற்றி அக்கறையில்ல பிள்ளை வடிவாக இருந்த காணும் என்று பெண் பார்க்க சொன்னவர் .

புறோக்கர் சொன்னார் "உங்களை மாதிரி பிள்ளையும் கொஞ்சம் அப்படி இப்படி பார்க்கும் தானே என்று "

அண்ணை என்னைய வைச்சுக் காமடி கீமடி ஏதும் பண்ணலைத்தான...?... :lol:

சுபாஸ் நல்ல கலகலப்பான எழுத்து பாராட்டுக்கள்

நன்றி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இப்படி

அடிக்கடி இருட்டடி நடக்கும். :lol: :lol:

வாழ்த்துகள் சுபேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பிழைத்தாலும் மற்றதாவது அம்பிடும் என்று பிளான் போட்டு, கடைசியில் ஒன்றுமே கிடைக்காதவர்கள் பலர்.

இதெல்லாம் வாழ்க்கையில் ஜகஜம்தானே. :D

அண்ணா! இந்தக் கடைசி வரி உங்கட நெஞ்சுக்குள்ள இருந்து வருகுது போலக்கிடக்கு...... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் மனதை நெகிழப்பண்ணும் விதத்தில் எழுதிக்கொண்டிருந்த சுபேஸ் கலகலப்பாக எழுதி கலாய்த்துள்ளதால், சாத்திரிக்குக் கலக்கம் பிடித்தாலும் பிடிக்கும்!

நானும் ஒரு இருட்டடி பற்றிய கதை ஒன்றைக் எழுதிக் குறையில் வைத்திருக்கின்றேன்.. ஆனால் அது அடிவாங்கியதைப் பற்றியதல்ல!

நன்றி கிருபன் அண்ணா! சாத்திரியார் உதுக்கெல்லாம் பயப்பிடுற ஆள்க் கிடையாது எண்டு நினைக்கிறன்...சாத்திரியார் எழுதுற மாதிரி எழுதுறதெண்டால் இஞ்ச பரிஸில நான் கவச வாகனத்திலதான் திரிய வேணும்... :o:lol:

சுபேஸ்............ சபாஷ்! இதுவெல்லோ...... கலகலப்பு! அருமையான கதை ...! ரசித்தேன்... சிரித்தேன்! இதைமாதிரி ஒரு சம்பவம் .. என் வாழ்விலும் நடந்தது. ஆனால்... ஒரு காதல் கடிதம் வாங்கிறதுக்கு எடுத்த றிஸ்க் அது. இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.அதை ஞாபகப் படுத்தியது தங்கள் கதை. :)

அது சரி..... கொஞ்சம் முன்னமே பிரான்ஸ் வந்திருந்தால், அஞ்சில ஒண்டாவது பிரான்ஸ்சில இருந்திருக்கும்! :lol: :wub:

பாராட்டுக்கள் சுபேஸ்! 4

நன்றி நண்பா...

அட விடுங்க கவிதை...நான் இப்ப ஊரைச்சுத்தும் காத்து... :icon_idea:

யாழ் களத்தில் உள்ள சில பேருக்கு இருட்டடி கொடுக்க எனக்கு விருப்பம் அதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

உங்கட லிஸ்ற்றுக்க நான் இல்லைத்தான...? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ் . ^_^ .கிருபன் சொன்னது போலை எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு :lol: :lol:

நன்றி சிறி அண்ணை...

பொய் சொன்னா நாளைக்கு பீஸா போடுறவன் வரமாட்டான் கடைக்கு...பிறகு நீங்கள்தான் தடியைப் பிடிச்சுக்கொண்டு ஒவனுக்க வேகவேணும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ் . ^_^ .கிருபன் சொன்னது போலை எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு :lol: :lol:

சாத்ஸ் நான் வாசித்த உடனேயே நினைத்தேன் சாத்திரியின் தலையில் இடி விழுந்து விட்டது என்று அதை வெளிக்காட்டி ஏன் சாத்திரியின் நிம்மதியைக் கெடுப்பான் என்று இருந்து விட்டேன்.. இந்த கிருமி உண்மையிலேயே உங்களைக் கலவரப்படுத்திவிட்டார்தான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இப்படி

அடிக்கடி இருட்டடி நடக்கும். :lol: :lol:

வாழ்த்துகள் சுபேஸ்

நன்றி வாத்தியார்...

அப்ப உங்கட ஊரிலையும் நிறைய முறிகண்டித்துரையள் இருக்கினம்போல... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதையோட்டம், சுபேஸ்! நன்றாக இருக்கின்றது!

அதென்ன அந்த வயதுக்குரிய இரத்தச் சூடு?

இரத்தம் எப்பவுமே ஒரு சூடு தான், என்று விஞ்ஞானம் சொல்லுது!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சும்மா அந்த மாதிரி கலக்குது ...வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம். https://www.virakesari.lk/article/198148
    • பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேர் என மொத்தம் 120 பேர் இதில் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.   'விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதி' பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, இந்நிகழ்வில் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர் அந்தத் தருணத்தில் இதுகுறித்து பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்" என்று தெரிவித்தார். 738 மாணவ, மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோல 12 கோவில்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பாட உள்ளதாகவும் அவர் கூறினார். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டிருந்த இந்த கந்த சஷ்டி பாராயண நிகழ்வின் வீடியோவை மேற்கோள்காட்டி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், பாராட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், விரைவிலேயே தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் இயக்கங்களிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. நவம்பர் ஐந்தாம் தேதி வெளியான திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ இதழான விடுதலையின் முதல் பக்கத்திலேயே இதனைக் கண்டித்து செய்தி வெளியானது. "தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத் தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல. திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா?" என அந்நாளிதழ் கேள்வி எழுப்பியிருந்தது. பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, 'மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்' என்று தெரிவித்தார் அமைச்சர் சேகர் பாபு ‘திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது’ அதேபோல, மே 17 இயக்கமும் இதனைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டது. "கந்த சஷ்டி பாராயணம் என்ற தொடர் ஆன்மீக நிகழ்வை முன்னெடுப்பதும், அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பதும், திராவிடத்தின் வழிவந்த - 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும்.” “மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல" என அந்த இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.   திமுகவின் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 விரைவிலேயே தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதனை எதிர்க்க ஆரம்பித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார் இதனைக் கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு.” “கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை" என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச் சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 இதற்கிடையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னை ராயப்பட்டையில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாகத் திரண்டு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இப்படி எதிர்ப்புகள் வந்தபோதும், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் ஆறாம் தேதி மாணவியரை வைத்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றிருக்கிறது. வட பழனியில் நடந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 50 பேர் என மொத்தம் 119 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.   பட மூலாதாரம்,@DRAVIDARKAZAGAM படக்குறிப்பு, சேகர் பாபுவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய போராட்டம் அனைத்துலக முருகன் மாநாடும் விமர்சனங்களும் தி.மு.க. அரசு 2021இல் பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக பி.கே. சேகர் பாபு பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் பணிகள் வேகமெடுத்தன. வெகு சீக்கிரத்திலேயே அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நியமனம் செய்தார். மேலும், நூற்றுக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்வது, ஆன்மீக நூல்களை வெளியிடுவது என விறுவிறுப்பாகச் செயல்பட்டார் சேகர் பாபு. ஆனால், விரைவிலேயே இவரது நடவடிக்கைகள் மீது விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, அனைத்துலகமுருகன் மாநாடு நடத்த முடிவுசெய்தபோது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த மாநாட்டிற்கு தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்துவரும் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்தை அழைத்ததும், அதில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. குறிப்பாக, 8வது மற்றும் 12வது தீர்மானங்கள் விமர்சனத்தை எதிர்கொண்டன. எட்டாவது தீர்மானமாக, 'கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’ என்றும் 12வது தீர்மானமாக ‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, "இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் - இதற்குமேல் விளக்கத் தேவையில்லை" என்று குறிப்பிட்டார். தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தத் தருணத்தில் இதற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தி.மு.கவின் தரப்பில் இருந்து அப்போது பதில் ஏதும் வரவில்லை. சேகர் பாபு இவற்றையெல்லாம் தானாகச் செய்யவில்லையெனக் கருதுவதாகச் சொல்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி. "அறநிலையத் துறை நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மீது தனக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறார் சேகர் பாபு. அறநிலையத் துறை அரசின் அங்கம். அப்படியிருக்கும் போது சேகர் பாபு தன் விருப்பப்படி எப்படிச் செயல்படுகிறார் என்பது புரியவில்லை. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.” என்கிறார் கொளத்தூர் மணி. தொடர்ந்து பேசிய அவர், “அறநிலையத் துறை செய்வது சரியென்றால், பள்ளிகளில் சென்று இதேபோலப் பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப் போட்டது ஏன்? இதையெல்லாம் அவர் தானாகச் செய்வதாகத் தோன்றவில்லை" என்று கூறினார்.   அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன? பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்கவில்லை கந்த சஷ்டி பாராயணம் தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பிபிசி கேட்டபோது, "இதை ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. கடந்த ஆண்டும் வடபழனி, கந்தகோட்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் இதேபோன்ற பாராயணம் நடந்தது. இதை ஏன் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறீர்கள்?" என்கிறார் சேகர் பாபு. தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கவில்லை. கூட்டணிக் கட்சியினரே இது குறித்து விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, "ஆன்மீகம் தொடர்பாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கிறோம். அதில் கவனம் செலுத்துங்கள்" என்று மட்டும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1lge5z7415o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.