Jump to content

இது குடும்பப்பிரச்சினை - நீ ததலையீடாதே

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

24ந்திகதி நல்லிரவு 23 மணி 30 நிமிடங்கள் இருக்கலாம். நல்ல குளிர். ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போய்விட்டு வெளியில் வந்து எனது வாகனத்தடிக்கு போய் மனைவி பிள்ளைகளை காருக்குள் ஏறும்படி சொல்லிக்கொண்டிருந்த எனக்கு தமிழில் யாரோ கதைக்கும் சத்தம் கேட்க திரும்பிப்பார்க்கின்றேன்.

2 ஆண்கள்

3 பிள்ளைகள் (5 வயது 3 வயது 2 வயது இருக்கலாம்.)

பிள்ளைகள் கையில்லாத ரீ சேட் மட்டும் அணிந்துள்ளனர். வேறு எதுவித உடுப்பும் இல்லை. காலில் சொக்சோ சப்பாத்தோ இல்லை. ஊ.... ஊ என நடுங்கி அழுதபடியுள்ளனர்.

நான் : அண்ணன்மார் பிள்ளையள் நடுங்கினம் வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு போங்கோ

அதில் ஒருவர் : அது என்ர பிள்ளை எனக்கு தெரியும் நீ உன்ரை வேலையைப்பார்த்துக்கொண்டு போ.

நான் : அண்ணை பாவம் பிள்ளையள். காலிலும் ஒன்றுமில்லை. நநடுங்கினம். வருத்தம் வரப்போகுது. வீட்டுக்குகுள்ள போங்கோ

அவர் என்னை நெருங்கி வருகிறார்.

அடுத்தவர் அண்ணை வாள் வைத்திருக்கிறார். கவனம். அத்துடன் மனைவியை இவர் வெட்டப்போகத்தான் அவா இந்தப்பக்கத்தால ஓடிட்டா.

கிட்டவந்தவர் : உம்முடைய வேலையைப்பார்த்துக்கொண்டு போகப்போறியளே இல்ல????

நான் : அண்ணை இப்பவும் என்ர வேலையைத்தான் பார்க்கிறன்.

அவர் : என்ர குடுடும்ப விடயத்தில் தலையிடுறது உங்கட பிரச்சினையே?

நான் : அண்ணை வீட்டுக்குள்ள இருந்தால் அது உங்கட பிரச்சினை உங்கட மனைவியோட நடக்கிறதும் உங்கட பிரச்சினை. ஆனால் இந்த குளிரில இந்த பச்சைப்பிள்ளையள நடுங்கவிட்டு நிற்கிறது பொதுப்பிரச்சினையண்ணை

அவர் : அப்போ பொலிசுக்கு அறிவிப்பீரே?

நான் : மகனைப்பார்த்து பொலிசுக்குகு அறிவி

அவர் : அண்ணை ஏன் தேவையற்ற விடயத்தில் மூக்கை நீட்டி எனது கோபத்துக்கு ஆளாகிறீர்கள். உங்க வேலையைப்பார்த்துக்கொண்டு போங்கோ

நான் : அண்ணை மீண்டும் மீண்டும் சொல்லுறன் பிள்ளைகளை வீட்டுக்குள்ள கொண்டு போங்கோ

அவர் எனதருகில் வருகிறார்

நான் மற்றவருக்கு கண்ணைக்காட்டுகிறேன். பிள்ளைகளை தாய் போன பக்கம் கொண்டு போகும்படி.

அவர் மெல்ல நகர்கிறார்.

இவர் என்னை நெருங்கி எனது கார் இலக்கத்தை பதிவு செய்கிறார்.

நான் .: அண்ணை என்ர வீட்டு விலாசம் வேணுமே நான் தாறன். அதுக்கேன் கார் இலக்கமெல்லாம் எழுதி மினக்கெடுவான்.

அவர் :: தன் ரீ சேட்டைக்களட்டுகிறார். பாரும் என்ர உடம்பெல்லாம் காயம். நான் தமிழருக்காக பட்ட காயங்கள்....

நான் ; இடை மறித்து அண்ணை நான் இங்க தமிழன் சிங்களவவன் பிரெஞ்சுக்காறன் என்று பேசவரல. மனிதனாகத்தான் கதைக்கிறன்.

அவர் ; கோபம் வந்தவராய் உனக்கு சொன்னால் கேட்காது என்று கொஞ்சம் தள்ளி எதையோ எடுப்பதற்காக ஓடுகிறார். மீண்டும் வருகின்றார். பொக்கற்றுக்குள் ஏதோ இருப்பது தெரிகிறது.

அவர் (அதி உச்ச சத்தத்தில்): : நீர் போகப்போறீரோ இல்லையோ.

நான் பதில் சொல்லும் முன் எனது அக்கா மகன் எனதருகில் வந்து மாமா நீங்க காரில ஏறுங்க என்கிறான்.

நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த நான் ( அவரின் மூக்குக்கு நேரே கேயை வைத்து முகமெல்லாம் கோபம்கக்க ): என்னைப்பற்றி உனக்கு தெரியாது. பிள்ளையைப்பெத்தா மட்டும் காணாது. அதை நல்லபடியா வளர்க்கணும். அப்படி இல்லையென்றால் நான் வருவன் கேட்பன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வன் என்றவுடன் அடங்கிப்போனவர் போக வெளிக்கிடுகிறார்.

போறவரிடம் நான் : என்றாவது ஒரு நாள் நான் செய்தது சரி என்று உனக்கு தெரியும். இல்லையென்றாலும் உன் பிள்ளை அதை உனக்கு ஒரு நாள் ஞாபகப்படுத்துவான். அவன் என்னை ஞாபகம் வைத்திருப்பான் என்றவாறு புறப்படுகின்றேன்.

குறிப்பு : நீங்கள் அந்த இடத்திலிருந்தால் என்ன செய்வீர்கள்???

Posted

துணிந்து அசராமல் ஒருவரின் முகத்துக்கு முன் உண்மையை சொன்னால் ஒருவர் வேண்டா வெறுப்பாகவேனும் ஏற்றுக் கொண்டு அடங்கி போவர் என்பதுக்கு இந்தச் சம்பவமும் எடுத்துக் காட்டு

உங்கள் நிலமையில் நான் இருந்திருந்தால் இப்படி பொறுமையாக நடந்து இருக்க மாட்டன். அடி கொடுத்து அடி வாங்கிக் கொண்டு வந்து இருப்பன்

மற்றது,

நீங்கள் எழுதிய விதம், எழுத்து நடை நன்றாக இருக்கு,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கையெல்லாம் விறுவிறுத்தது ஐயா

ஆனால் எனது நோக்கம் கெட்டு வேறு விதமாக ஆகிவிடுமே...

எனது குடும்பத்துக்கும் ஆச்சரியம்தான் நான் இவ்வளவு பொறுமையாக பேசியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் என்றால் தமிழில் கதைக்கினம் எண்டாலே அங்காலப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் போயிட்டிருந்திருப்பன். ஏன்னா தமிழ் ஆக்கள் சொல்லிக் கேட்கக் கூடிய ஆக்களில்ல. எல்லாரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற பேர்வழிகள்.

ஆக முத்திப் போயிருந்தால்.. தமிழோ.. என்னமோ.. ஒரு குற்றம் நிகழ்த்தப்பட போகிறது என்றால் காவல்துறைக்கு அறிவிச்சிட்டு பேசாமல் போயிருப்பன்.

விசுகு அண்ணரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. சில இடத்தில் துணிச்சலை விட விவேகம் இருக்கனும். அவன் கத்தியோட.. கன்னோட வர நாங்கள் சும்மா வெறும் கையோட நிண்டு ஒன்றும் செய்ய இயலாது. அந்த இடத்தில் பலத்தை விட புத்தியை பாவிப்பது நன்று. மேற்குநாடுகளில் நாங்கள் புத்தியை பாவிப்பதே சிறப்பு.

நேற்றைய தினம் கூட வெள்ளையர்களால் ஒரு இந்திய மாணவன் மன்செஸ்ரர் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஒரு சிறிய விவாதமே இதற்கு காரணம். :icon_idea:

A second teenager has been arrested in connection with the shooting of a 23-year-old student from India in an "unprovoked attack" in Salford.

http://www.bbc.co.uk/news/uk-england-manchester-16337361

Posted

குரங்குக்கு புத்தி சொல்லப் போய் தன கூட்டை இழந்த தூக்கணாம் குருவியின் கதைதான் ஞாபகம் வருகிறது.

முன்பென்றால் காதைப் பொத்திக் கொடுத்திருப்பேன். மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய், பட்ட அனுபவங்களிலிருந்து இப்பெல்லாம் 'துட்டனைக் கண்டால் தூர விலகு' எனும் இராசதந்திர நகர்வுகள்தான்.

உங்களுக்கு ஏதும் நடந்திருந்தால் உங்களை நம்பி இருப்பவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்பட்டிருக்கும்.

Posted

நான் என்றால் தமிழில் கதைக்கினம் எண்டாலே அங்காலப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் போயிட்டிருந்திருப்பன். ஏன்னா தமிழ் ஆக்கள் சொல்லிக் கேட்கக் கூடிய ஆக்களில்ல. எல்லாரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற பேர்வழிகள்.

அப்போ யாழ்கொம்மில நீங்க எழுதும் அறிவுரைகள் யாருகாக? :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்போ யாழ்கொம்மில நீங்க எழுதும் அறிவுரைகள் யாருகாக? :icon_idea::rolleyes:

யாழில எழுதுறதுகளை யாராவது கேட்டு நடக்கினம் என்று நம்புறீங்க. ஐயோ ஐயோ..! ரெம்ப அப்பாவியா இருக்கீங்களே..!

நாங்க எழுதிறது கேட்டு நடப்பினம் என்பதற்காக அல்ல.. ஒரு செய்தியாக என்றாலும் எங்க எண்ணங்கள் இந்தச் சமூகத்தில் பதியப்படனும் என்பதற்காகவே..! எண்ணங்கள் எமக்குள்ளேயே மரித்துப் போவதிலும்.. இது பறுவாயில்லை என்பது தான் யதார்த்தம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை.அப்படி நடந்தால் காவல் துறைக்கு ஒரு கோல் அவளவுதான்.

Posted

விசுகு அண்ணா,

விவகாரமில்லாமல் முடிந்ததில் மகிழ்ச்சி.. :rolleyes:

ஆனால் நீங்கள் காவல்துறைக்கு அறிவித்திருக்க வேணும்..! :( இன்று போன அந்த ஆள் நாளையும் பிள்ளைகளைக் குளிரில் விட்டு வதைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? :unsure:

Posted

உடனடியாக காவல்துறை தான்.பிள்ளைகளிலேயே குளிரில் காய விட்டவர் மற்றவரின் ஆலோசனையை கேட்பார் என நான் நினைக்கவில்லை.

என்றாலும் விசுகு அண்ணா உங்களின் விசப்பரீட்சை பாராட்டத்தக்கது. இனிமேல் வாயை கொடுக்காதீர்கள்.இப்படி பல கிறுக்குகள் அலைந்த வண்ணமே உள்ளார்கள்.

மேற்கு நாடுகளில் சட்டத்தை நாம் கையில் எடுப்பதை யாருமே விரும்புவதில்லை.காவல் துறை அதற்காக தானே உள்ளார்கள்.மேலும் குழந்தைகள் விடயம் என்றால் காவல்துறை எப்படி மிக கடுமையாக கையாளுவார்கள் என்பது நீங்கள் அறியாததா??

reason for edit: spelling :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகர், வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சு விடுகிற வேலை நீங்கள் பார்த்தது!

நல்ல வேளை, நீங்கள் முழுத் துண்டாக இருக்கிறது!

இப்படியானவர்கள் குடித்து இருக்கக் கூடும். அவர்கள் மனநிலையை, அவர்களால் கட்டுப் படுத்த முடியாமல் இருக்கலாம்!

முதலில் நீங்கள் சுட்டிக் காட்டியது தவறல்ல. உங்களுக்குள் இருக்கும், மனிதம், தந்தை என்ற உணர்வுகளின் வெளிப்பாடு அது!

ஆனால் தொடர்ந்திருக்கக் கூடாது! உங்கள் மொபைலில் போலீசுக்கு அறிவித்திருப்பதே சரி போல எனக்குப் படுகின்றது!

அவர்களை விட, நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மிகவம் தேவையானவர்!

Posted

விசுகு அண்ணா உங்களின் மனிதாபிமானத்திற்குப் பாராட்டுக்கள், இருப்பினும் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பதன் மூலமே அவர்களின் எதிர் கால நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கணவன் மனைவி பிரச்சனையில் பாவம் அந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தார்கள்? நீங்கள் கூறியது போல் அந்தக் குழந்தைகள் அந்த நிகழ்வினை மறக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வர்ணனை நல்ல ஒரு நாடகம் பார்த்த மாதிரி

இருந்தது விசுகு அண்ணா.

எதுக்கும் கொஞ்ச நாட்கள் அவதானமாக இருக்கவும்.

பெற்றோரின் சில்லெடுப்பில் இப்படி ஆயிரமாயிரம்

குழந்தைகள் நடுவீதியில் நிற்கின்றனர்.

Posted

விசுகு அண்ணா உங்களின் மனிதாபிமானத்திற்குப் பாராட்டுக்கள், இருப்பினும் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பதன் மூலமே அவர்களின் எதிர் கால நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கணவன் மனைவி பிரச்சனையில் பாவம் அந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தார்கள்? நீங்கள் கூறியது போல் அந்தக் குழந்தைகள் அந்த நிகழ்வினை மறக்க மாட்டார்கள்.

தயவு செய்து இப்படியான கட்டத்தில் காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்ககூடாது.அப்படி கொடுப்பதால் இவர்கள் எந்த சமயத்திலும் இணையமுடியாது.தகப்பன் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டால் பிள்ளையின் பிற்காலம் பாதிக்கும்.உதாரணத்திற்கு இவரின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதே கேள்விக்குறி?இதேபோலத்தான் மட்டையில் மாட்டுப்பட்ட குடும்பங்களின் நிலை.ஆகவே முடிந்தளவு சமாளித்திருக்கிறார்

அவற்றை உணர்ந்தல்லவா ஒரு தகப்பன் நடந்து கொள்ள வேண்டும்? விசுகு அண்ணா குறிப்பிட்டது போல் நாடு இரவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளை குளிர் தாங்காத உடுப்போடு வீட்டுக்கு வெளியில் வைத்து அந்தக் குழந்தைகளின் மனநிலையை காயப்படுத்துபவர் ஒரு நல்ல தந்தையாக இருப்பது சந்தேகமே.. பிள்ளைகளின் பிற்காலம் பாதிக்கும் என்று நினைத்திருந்தால் அவரை அப்படியான ஒரு சூழ்நிலையில் விசுகு அண்ணா பார்த்து இருக்க மாட்டார்.

கணவன் மனைவிக்குள் தினமும் பிரச்சனை வருவது யாவரும் அறிந்ததே... ஆனால் அவை தாம் பெற்ற குழந்தைகளைப் பாதிக்காதது போல் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

சில பேர் தாங்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டுத் தப்புவதற்காக இப்படியான செண்டிமெண்ட் கதைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துணிந்து நின்ற விசுகு அண்ணா கொஞ்சம் மனிதம் இருந்த மற்றையவரால் (அல்லது தமிழன் என்ற இரக்கமோ தெரியவில்லை) விட்டுவைக்கப்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகின்றது. இந்த அசட்டுத் துணிவு மோசமான விளைவுகளைத் தந்திருந்தால்...

கடுங்குளிருக்குள் பிள்ளைகளை பாதணிகள்கூட இன்றி வெளியில் நிறுத்தியவரை சட்டத்தின் முன்னர் நிறுத்துவதுதான் அப்பிள்ளைகளுக்கு நல்லது. அறிவுரை கேட்டு சடுதியாகத் திருந்தக்கூடியவர்கள் என்பதெல்லாம் நடமுறையில் சரிவராது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயவு செய்து இப்படியான கட்டத்தில் காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்ககூடாது.அப்படி கொடுப்பதால் இவர்கள் எந்த சமயத்திலும் இணையமுடியாது.தகப்பன் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டால் பிள்ளையின் பிற்காலம் பாதிக்கும்.உதாரணத்திற்கு இவரின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதே கேள்விக்குறி?இதேபோலத்தான் மட்டையில் மாட்டுப்பட்ட குடும்பங்களின் நிலை.ஆகவே முடிந்தளவு சமாளித்திருக்கிறார்

இப்படிக் குடும்பம் குலையும் என்று பார்த்தால் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தைகள் குளிரிலும் மனைவி மரணபயத்தோடும் வாழ வேண்டியது தான். மிக நல்ல ஆலோசனை சொன்னீர்கள் அய்யா! அது சரி தகப்பன் கிரிமினல் குற்றம் செய்தால் மகனுக்கு மருத்துவம் படிக்கக் கிடைக்காது என்பது நம்பக் கூடிய ஒரு மேற்கு நாட்டு நடைமுறை போலத் தெரியவில்லையே? எங்கே கேள்விப் பட்டீர்கள் இந்தப் புதுமையான "தேச வழமை" ச் சட்டத்தை?

கனடாவில் இருக்கிறது.BACK ROUND CHEAKUP FOR CLEARANCEபார்க்கும் போது இவையாவும் வெளியே வரும்,எனக்கு தெரிந்தவரின் மகள் இங்கு படிக்க முடியாமல் பிரான்சில் படித்தவர்.மீண்டும் வேலை செய்ய வந்த போது வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் (LICENCE) வழங்க மறுத்துவிட்டனர்.தற்போது அவர் ஆபிரிக்காவில் வேலை செய்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் என்றால் தமிழில் கதைக்கினம் எண்டாலே அங்காலப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் போயிட்டிருந்திருப்பன். ஏன்னா தமிழ் ஆக்கள் சொல்லிக் கேட்கக் கூடிய ஆக்களில்ல. எல்லாரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற பேர்வழிகள்.

ஆக முத்திப் போயிருந்தால்.. தமிழோ.. என்னமோ.. ஒரு குற்றம் நிகழ்த்தப்பட போகிறது என்றால் காவல்துறைக்கு அறிவிச்சிட்டு பேசாமல் போயிருப்பன்.

விசுகு அண்ணரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. சில இடத்தில் துணிச்சலை விட விவேகம் இருக்கனும். அவன் கத்தியோட.. கன்னோட வர நாங்கள் சும்மா வெறும் கையோட நிண்டு ஒன்றும் செய்ய இயலாது. அந்த இடத்தில் பலத்தை விட புத்தியை பாவிப்பது நன்று. மேற்குநாடுகளில் நாங்கள் புத்தியை பாவிப்பதே சிறப்பு.

நேற்றைய தினம் கூட வெள்ளையர்களால் ஒரு இந்திய மாணவன் மன்செஸ்ரர் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஒரு சிறிய விவாதமே இதற்கு காரணம். ய்

நன்றி தம்பி கருத்துக்கு

ஆனால் நாமெல்லாம் பிரபாகரனின் தம்பிகள் என்பது உதைக்குது.

தீமையைக்கண்டால் தட்டிக்கேட்கணும்.

சொல்லில் அல்ல செயலில்???

குரங்குக்கு புத்தி சொல்லப் போய் தன கூட்டை இழந்த தூக்கணாம் குருவியின் கதைதான் ஞாபகம் வருகிறது.

முன்பென்றால் காதைப் பொத்திக் கொடுத்திருப்பேன். மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய், பட்ட அனுபவங்களிலிருந்து இப்பெல்லாம் 'துட்டனைக் கண்டால் தூர விலகு' எனும் இராசதந்திர நகர்வுகள்தான்.

உங்களுக்கு ஏதும் நடந்திருந்தால் உங்களை நம்பி இருப்பவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்பட்டிருக்கும்.

தங்களைப்போன்றவர்களின் இது போன்ற கருத்துக்களை பல இடங்களில் பார்த்ததும் மிகவும் கவலைப்படுவேன். என் இனத்துக்காக போராடப்புறப்பட்டவர்களின் மனங்கள் இப்படி ஆகிவிட்டதே என்று.

எமது தோல்விகளுக்கு இதுவே காரணம்.

மற்ற அனைவருமே காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும் என்பதையே கூறியுள்ளீர்கள்.

எனது மூத்தமகனிடம் காவல்துறைக்கு அறிவிக்கச்சொன்னேன். அவன் தயக்கம் காட்டினான். காரணம் இங்கு காவல்துறையில் இது போன்ற முறைப்பாடுகளைச்செய்பவர்களை அவர்கள் அலைக்கழிக்கும் நிலையுள்ளது. அத்துடன் அவர்கள் வரமுன் விபரீதம் நடந்துவிட்டால் நாமும் உள்ளே போகவேண்டிவரும் என்ற நிலை.

நானும் மீண்டும் மகனை வற்புறுத்தவில்லை.

காரணம் பிள்ளைகள் தாயிடம் போய்விட்டார்கள்.

அடிப்படையில் இது ஒரு கொலைக்குறறம்

அதாவது உயிருக்கு பயந்து தப்பி ஓடிய மனைவியை வரவழைப்பதற்காகவே இவர் நித்திரையாககக்கிடடந்த பிள்ளைகளை அப்படியே தூக்கிக்கொண்டுவந்து குளிரில் பணயம் வைக்கிறார். தாய் பிள்ளைகளின் நிலை கண்டு இரங்கி வருவார் என்று.

அந்தவகையில் இது காவல்துறைக்குப்போனால் வாழ்நாள் பூராகவும் இவருக்கு இனி பிள்ளைகளைச்சந்திக்க சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள். எவருக்குமே கெடுதல் செய்யும் நோக்கம் எனக்கில்லை.

அத்துடன் இந்த குடும்பச்சிக்கல்களில் தலையிட்ட பெரும் அனுபவம் எனக்குண்டு. இடியப்ப சிக்கல்களை எடுத்து தீர்த்துவிடலாம். ஆனால் இது சவ்வு மாதிரி இழுபட்டுக்கொண்டேயிருக்கும். மனைவியே வந்துது என்ர மனுசனை திருத்த நீ யார் என்றும் கேட்கலாம். உன்ர வேலையைப்பார் என்றும் சொல்லலாம். எனக்குத்தேவை பிள்ளைகள் தாயிடம் அல்லது அந்த இடத்தைவிட்டு போவது. அதன் பின் அடுத்தநாள் அவர்கள் தங்களுக்குள் முடிவெடுப்பதுதான் சிறந்தது.

எல்லாம் முடிய ஒரு அரை மணித்தியாலம் அந்த இடத்தை சுற்றி திரிந்து அன்றிரவு இனி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்ற பின்பே வீடு திரும்பினேன். அதுவரை எனது மனைவியும் காரை வீட்டுக்கு திருப்ப அனுமதிக்கவில்லை.

அத்துடன் எனது பாதுதுகாப்புக்குறித்து அச்சம் தெரிவித்த உறவுகளுக்கு நன்றிகள்.

Posted

கனடாவில் இருக்கிறது.BACK ROUND CHEAKUP FOR CLEARANCEபார்க்கும் போது இவையாவும் வெளியே வரும்,எனக்கு தெரிந்தவரின் மகள் இங்கு படிக்க முடியாமல் பிரான்சில் படித்தவர்.மீண்டும் வேலை செய்ய வந்த போது வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் (LICENCE) வழங்க மறுத்துவிட்டனர்.தற்போது அவர் ஆபிரிக்காவில் வேலை செய்கிறார்

நீலப்பறவை,

அந்தப் பிள்ளைகள் முதலில் ஒழுங்காகப் படித்து முன்னுக்கு வரமுடியுமா? பிறகு மருத்துவத்தைப் பற்றிப் பார்க்கலாம்..!

இவரைப் பற்றிக் காவல்துறைக்கு அறிவித்தால், எடுத்த மாத்திரத்தில் இவர் சிறைக்குப் போகமாட்டார்..! இவருக்கு வழங்கப்படும் எச்சரிக்கையே இவரை வழிக்குக் கொண்டு வரலாம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாழில எழுதுறதுகளை யாராவது கேட்டு நடக்கினம் என்று நம்புறீங்க. ஐயோ ஐயோ..! ரெம்ப அப்பாவியா இருக்கீங்களே..!

நாங்க எழுதிறது கேட்டு நடப்பினம் என்பதற்காக அல்ல.. ஒரு செய்தியாக என்றாலும் எங்க எண்ணங்கள் இந்தச் சமூகத்தில் பதியப்படனும் என்பதற்காகவே..! எண்ணங்கள் எமக்குள்ளேயே மரித்துப் போவதிலும்.. இது பறுவாயில்லை என்பது தான் யதார்த்தம்..! :):icon_idea:

நெடுக்ஸ் அண்ணாக்கு ஒரு பச்சை. இது தான் எப்பவும் எனது நிலைப்பாடு..

எங்க கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்றே தவிர கேட்பார்கள் என்று நினைத்து அல்ல. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீலப்பறவை சொல்லும் காரணம் எனக்கு இன்னும் நம்ப இயலாமல் இருக்கிறது. ஒரு தகப்பனின் வன்முறையினால் பிள்ளை பாதிக்கப் பட்ட நிலையில் அந்தப் பிள்ளையின் எதிர்காலத்தை தகப்பனின் வன்முறைக்காகப் பலியிடுவார்கள் என்பது எனக்கு நம்ப முடியவில்லை. அப்படி இருந்தால் (இந்த கேஸ் விசயத்தில்) மேலதிக அப்பீல் மூலமோ அல்லது சட்டத்தை மாற்ற முயற்சிப்பது மூலமோ தீர்வு தேட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இதுவும், மேலே விசுகு காவல்துறையை அழைக்காமைக்குக் கூறிய காரணங்களும் வீட்டு வன்முறை எங்கள் சமூகத்தில் வெளிவராமல் தொடர வழி வகுக்கின்றன. ஊரில் சமூகத்திற்குப் பயந்து கொடுமை செய்யும் தகப்பனைக் காப்பாற்றும் நடைமுறை.புலத்திலோ காவல் துறையின் பக்கம் போகப் பயந்து கொடுமைக்கார அப்பனைக் காப்பற்றி வைத்திருக்கும் நடைமுறை. இந்த அப்பாக்கள் அதிர்ஷ்ட சாலிகள். ஆனால் காலப்போக்கில் "கௌரவக் கொலை" செய்யும் குடும்பத்தினரைக் காப்பாற்றும் பாகிஸ்தான் குடியேறிகளை தமிழர்கள் மிஞ்சி விடப்போகிறோம்!

Posted

நீலப்பறவை சொல்வது போன்ற கருத்துக்கள் ,அதைவிடவும் எம்மவர் பலர் நாம் என்றுமே கேட்டறியாத சட்டங்கள் ,விதிகள் எல்லாம் சொல்வார்கள் நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை ,யாருக்கும் நடந்ததோ தெரியாது .

நானென்றால் அங்கும் இங்கும் துள்ளி எழும்பி நாலு போடு போட்டிருப்பேன் .அவர் படம் பார்த்து வளர்ந்த ரசிகர்கள் அவர் மாதிரி செய்யாவிட்டால் பிறகு இருந்தென்ன செத்தென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் கேள்விபட்டு இருக்கிறேன் .......ஒருதடவை போலிஸ் சம்பந்தமான சிக்கல்களில் உங்கள்பெயர் பதியப்பட்டால் அது உங்கள் முன்னேற்றதுக்கு தடைக்கல்.....சிலவிடயங்க்ளுக்கு பொலிஸ் கிளியரன்ஸ் (சான்றுப்பத்திரம் ) கேட்பார்கள் . நிரந்தர அனுமதி குடியுரிமை போன்றவை பாதிக்கப் படும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகண்ணாவின் தலைப்பையும்,எழுத்தையும் பார்த்து நான் பயந்து விட்டேன்[யாழில் தான் யாருக்கோ பேச்சு விழுதாக்கும் :D ]..நான் என்டால் அந்தாள் நல்ல வெறியில் இருந்தால்[அப்பத் தான் அந்தாளால் திருப்பி அடிக்க முடியாது :lol: ] சப்பாத்தைக் கழட்டி இரண்டு கொடுத்திருப்பன் இல்லா விட்டால் பொலீசுக்கு போயிருப்பன் ...கோழைகள் மாதிரி விட்டுட்டுப் போகாமல் நின்ட விசுகு அண்ணாவிற்கு பாராட்டுகள் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.