Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்டு என்னும் காவிய நாயகன்

Featured Replies

போடுவோம் வாருங்கள்

வாசுதேவாவை கருணா போட்டான்

TNA ஐ கருணா போட்டான்

போராட்டத்தைக் கருணா போட்டான்

எல்லோரும் போட்டு மிஞ்சிய தமிழனை கடைசியாக

ராஜபக்சே போட்டான்

இனி நமக்கொரு காலம் வருமென்றால்

சொந்தமாகவே போட்டுக் கொல்லாமல்

சுயமாகவே வாழ்வோம் தமிழா

  • Replies 112
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1.சிங்கள இராணுவம் + மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து

2.இந்திய இராணுவம் + மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து

3.மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து.

4.முஸ்லீம் ஊர்காவல் படை மற்றும் ஜிகாத்.

5.விடுதலைப்புலிகள்.

இது தான் சரியான தகவலாக இருக்க முடியும்.ஒட்டுக்குழுக்கள் தாம் தமது சுயதேவைக்காக கொலை கொள்ளை வன்புணர்வு என்பவற்றை செய்தார்கள்.அத்தோடு அரச,இந்திய படைகளோடு சேர்ந்து புலிகளுக்கு ஆதரவானவர்களையும் ,புலிகளையும் தேடி தேடி அழித்தார்கள்.மக்களை பிடித்து கட்டாய இராணுவ சேவையிலும் ,பங்கர் வெட்டுதல் போன்ற கூலி வேலைகளுக்கும் பயன்படுத்தினர்.

ஒரு சிறு உதாரணம் நானும் ,பல மக்கள் கண் முன் நடந்தது இன்றும் என் கண் முன் நிழலாடுகிறது. யாழ்தேவியில் காட் ஆக வேலை செய்த ஒருவர் தீவிர கூட்டணி ஆதரவாளர் ஒரு காலத்தில்.பின்பு இயக்கங்கள் உருவான காலத்தில் முழு இயங்களுக்கும் தன்னாலான உதவிகளை செய்தவர்.எந்த இயக்கம் போனாலும் "எங்கடை பெடியள்"என கூறி தன்னாலான உதவிகளை செய்தவர்.மகன் புலிகளில் பின்னாளில் சேர்ந்தார்.ஒரு நாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ சேர்த்தவர்கள் வீட்டிலிருந்து கண்டி வீதிக்கு அழைத்து (கண்டி வீதியோடு தான் அவர் வீடு)உனக்கு தமிழீழமாடா வேணும் என்று கேட்டு தாறு மாறாக தாக்கினார்கள். மக்கள் சூழ்ந்து கொண்டார்கள்.தாக்குதல் குறையவில்லை.சிறிது நேரத்தில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அவரின் நெத்தியில் இரண்டு வெடி.சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே மரணமானார்.சுட்டவன் சொல்கிறார் தமிழீழம் கேட்டால் இது தானாம் நடக்கும் என்றார்.

அன்று சூழ்ந்த மக்களில் வயோதிப மாது சொன்னார் உவங்களுக்கு புலிகள் என்ன செய்தாலும் தகும் என.

  • கருத்துக்கள உறவுகள்

போடுவோம் வாருங்கள்

வாசுதேவாவை கருணா போட்டான்

TNA ஐ கருணா போட்டான்

போராட்டத்தைக் கருணா போட்டான்

எல்லோரும் போட்டு மிஞ்சிய தமிழனை கடைசியாக

ராஜபக்சே போட்டான்

இனி நமக்கொரு காலம் வருமென்றால்

சொந்தமாகவே போட்டுக் கொல்லாமல்

சுயமாகவே வாழ்வோம் தமிழா

அமெரிக்கன் ஊரெல்லாம்.. புகுந்து.. போட்டுத் தான்.. அவன் வெல்லுறான்.. நாங்கள் போடுறது தான் குற்றமா.. என்ன அமெரிக்கன் தன்னைப் போடுறதில்ல.. அடுத்தவனை போடுறான்.. நாங்கள்.. எங்களைப் போட்டுத் தள்ளிக்க வேண்டிய துர்ப்பாக்கியமே தவிர.. போடுறது ஒன்றும் இந்த உலகிற்கு புதிதல்லவே..!

போடுறதை சரியா போட்டிருந்தா.. நிறைய பிரச்சனைகளை அமெரிக்கா தீர்க்கிறது போலவும் தீர்த்திருக்கலாம்..!

சும்மா கருணாவை கட்டிப் பிடிச்சுக் கொண்டிருந்தாலும்.. அவன் காட்டிக் கொடுப்பதை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருந்திருப்பான். ஒருவேளை கருணாவை சரியான நேரத்தில போட்டிருந்தால்... ஒருவேளை கருணாவால் வந்த துரோகத்தையும் போட்டிருக்கலாம். போராட்டமும் வேறு பாதையில் போயிருக்கலாம். அது குறித்தும் யோசிக்கலாம்.. தானே..! இது குறித்து யோசிக்காமல் நாங்கள் இருப்பதால்.. போடுறவன் யோசிக்காமல் இருக்கப் போறதில்ல. போடுறவன் போட்டுக்கிட்டு தான் இருப்பான் என்பதையும் நாங்கள் உணர்ந்து தான் பயணிக்கனும்..! :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு உதாரணம் நானும் ,பல மக்கள் கண் முன் நடந்தது இன்றும் என் கண் முன் நிழலாடுகிறது. யாழ்தேவியில் காட் ஆக வேலை செய்த ஒருவர் தீவிர கூட்டணி ஆதரவாளர் ஒரு காலத்தில்.பின்பு இயக்கங்கள் உருவான காலத்தில் முழு இயங்களுக்கும் தன்னாலான உதவிகளை செய்தவர்.எந்த இயக்கம் போனாலும் "எங்கடை பெடியள்"என கூறி தன்னாலான உதவிகளை செய்தவர்.மகன் புலிகளில் பின்னாளில் சேர்ந்தார்.ஒரு நாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ சேர்த்தவர்கள் வீட்டிலிருந்து கண்டி வீதிக்கு அழைத்து (கண்டி வீதியோடு தான் அவர் வீடு)உனக்கு தமிழீழமாடா வேணும் என்று கேட்டு தாறு மாறாக தாக்கினார்கள். மக்கள் சூழ்ந்து கொண்டார்கள்.தாக்குதல் குறையவில்லை.சிறிது நேரத்தில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அவரின் நெத்தியில் இரண்டு வெடி.சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே மரணமானார்.சுட்டவன் சொல்கிறார் தமிழீழம் கேட்டால் இது தானாம் நடக்கும் என்றார்.

அன்று சூழ்ந்த மக்களில் வயோதிப மாது சொன்னார் உவங்களுக்கு புலிகள் என்ன செய்தாலும் தகும் என.

இதேபோல் இன்னொரு சம்பவம். சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் நடந்தது. அவர் ஒரு அதிபரின் மகன். குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை. அவரை புலி என்று தவறாக அடையாளம் கண்டு கொண்ட ஈபி ஒட்டுக்குழுவினர்.. இந்தியப் படைகளோடு வந்து அவர்களின் வீட்டை சுற்றி வளைத்து.. வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனை.. வீதிக்கு இழுத்து வந்து.. சொந்த தாய் தகப்பன் சகோதரிகள் கதறி அழ அழச் சுட்டுக் கொன்றார்கள். அதன் பிறகு ஆகாயத்தை நோக்கி சுட்டு மக்களையும் விரட்டி விட்டுச் சென்றனர். அந்தச் சம்பவ அதிர்ச்சியில் பெற்றோரும் பின்னர் இறந்து போனதாக அறிந்தேன். உண்மையில்.. கந்தன் கருணை படுகொலையை.. வெலிகடையோடு ஒப்பிட்டு.. ஒருவர் இங்கு எழுதிய போது.. இரத்தம் கொதித்தது. கந்தன் கருணையில் பலியானவங்க எத்தனை போரை போட்டு தள்ளின ஆக்களோ யார் அறிவார். குற்றம் செய்யாத ஒருவனை கொலை செய்ய அருணாவுக்கோ.. எவருக்குமோ மனம் வராது. அருணா ஆத்திரப்பட்டிருக்கிறான் என்றால்.. அதன் பின்னணியில் உள்ளதை எவரும் ஆராய மாட்டினம். ஆனால்... ஒட்டுக்குழுக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கூலிக் கொலை.. பிழைப்பு..! உயிர் வாழ எதிரியிடம் நற்பெயர் வாங்கி அரசியல் செய்ய அவசியம். புலிகள் அப்படி ஈனப்பிழைப்புக்காக சொந்த மக்களைக் காட்டிக் கொடுத்து.. கொன்றது கிடையாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கு சொந்தர‌க்கார‌ர் கூட‌ப் போல் இருக்கிறது நிறைய உறவுகளை பல் வேறு நேரங்களில் இழந்திருக்கிறார்...கந்தன் கருணை படுகொலையை தூக்கி பிடிக்க கூடாது என்டால் ஏன் நீங்கள் மட்டும் ரெலோ,புளோட் செய்ததை தூக்கி பிடித்து இப்பவும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறீங்கள்? ஏதோ அந்த நேர‌த்தில அவர்களது தலைமையின்ட‌ பிழையால் ஏதோ தவறு செய்து விட்டார்கள் என மன்னிக்கலாம் தானே?...இங்கு மற்ற இயக்கங்கள் செய்தது சரியா/பிழையா என விவாதிக்கவில்லை நாங்கள் நேசிப்பவர்கள் செய்தது சரியா/பிழையா என்று தான் விவாதிக்கிறோம்

அருணாவிற்கு கோபம் வந்தால் கொலை செய்யலாம் என்டால் நெல்லியடியில் 13 ஆமி செத்தவுட‌ன் கோபத்தில் சிங்களவன் 83ம் ஆண்டு இனப் படுகொலை செய்தது சரியா?

  • தொடங்கியவர்

சரித்திரமே தலைகீழாகப் போய்விட்டது ரதி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அருணாவிற்கு கோபம் வந்தால் கொலை செய்யலாம் என்டால் நெல்லியடியில் 13 ஆமி செத்தவுட‌ன் கோபத்தில் சிங்களவன் 83ம் ஆண்டு இனப் படுகொலை செய்தது சரியா?

உங்களுக்கு அடியும் புரிவதில்லை... நுனியும் புரிவதில்லை. உங்களுக்கு இப்படியான விடயங்களில் பதில் சொல்வதில் பயனும் இல்லை. இருந்தாலும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

திருநெல்வேலியில் (நெல்லியடியில் அல்ல..!) 13 சிங்கள ஆமிக்காரன்..( ஆக்கிரமிப்பாளன்) போராளிகளால் ஆக்கிரமிப்பிடத்தில் வைத்துக் கொல்லப்பட்டமை என்பது அவனின் ஆக்கிரமிப்பு அட்டூழியங்களுக்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பு. அவனுக்கு ஆத்திரம் என்றால் போராளிகளை கண்டுபிடித்து தாக்கி இருக்க வேண்டும்.. அல்லது நீதியின் முன் நிறுத்தி இருக்க வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் அதுவும் தாக்குதல் எல்லையில் இருந்து பல கிலோமீற்றர்கள் தள்ளி வாழ்ந்த அவனின் ஆளுகைக்குள் வாழ்ந்த மக்கள் மீது.. இனக்கலவரத்தை தூண்டிவிட்டு.. மக்களைக் கொன்றது இன அழிப்பே அன்றி.. அது பழிவாங்கல் அல்ல..!

1972.. 1987 களில் ஜே வி யினர் சிங்களப் படைகளை.. அரசியல்வாதிகளை கொன்ற போதும்.. அவர்களை பயங்கரவாதிகள் என்று யாரும் சொல்லவில்லை. சிங்களவர்களே அவர்களை கிளர்ச்சிக்காரர்கள் என்று தான் அழைத்தனர். அதேபோல்.. சிங்களப் படைகள் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொன்ற போது.. அது இனப்படுகொலையாக இனங்காட்டப்படவில்லை. மாறாக மனித உரிமை மீறல்களாக இனங்காணப்பட்டன. காரணம்.. அது சொந்த இனத்துக்குள் நிகழ்ந்த முரண்பாடு. ஆனால் சிங்களவர்கள் சிறுபான்மையினரான தமிழர்களின் வாழ்வுரிமையை பறித்து.. அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து.. நின்று கொண்டு அவர்களை கொன்றொழிப்பது என்பதும்.. தேசத்துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் ஒன்றாக தெரிகிறது என்றால்.. அது வேறுபாட்டை உணர முடியாது நிற்கும் மனங்களுக்கு அல்லது எதிரிகளுக்கு துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்காக மட்டுமே இருக்க முடியும்.

கந்தன் கருணை சம்பவத்தில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் அல்ல. பல்வேறு தேசத்துரோக கும்பல்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிற்கு அக்கும்பல்களை விட்டு விலகச் சொல்லி பகிரங்க அழைப்புக்களும்.. பிரத்தியேக அழைப்புக்களும் போன பின்னும் அவற்றோடு ஒட்டி இருந்து.. மக்கள் விரோத போராட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால்.. கைதாகி இருந்தவர்கள். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதில் போதிய நீதித்தன்மை.. இல்லாத நிலை.. கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் அது படுகொலையாக இன அழிப்பாக சித்தரிக்கப்பட முடியாதது. ஆனால் ஒட்டுக்குழுக்கள் செய்தவை அதுவல்ல. அவர்கள் புலிகள் என்று சுதந்திரப் போராளிகளை மட்டும் வேட்டையாடவில்லை... அப்பாவி மக்களையும் கொன்று குவித்தார்கள். சித்திரவதை செய்தார்கள். தடைமுகாம்களில் நின்று.. மக்களை காட்டிக் கொடுத்தார்கள். போராட்டத்திற்கு உதவி நின்ற மக்களைப் பழிவாங்கினார்கள். காரணம்.. தமக்கு எதிரிகளிடம் இருந்து நல்ல பெயரும்.. பாதுகாப்பும்.. வாழ்வும்.. அரசியலும்.. வேணும் என்பதற்காக அன்றி.. போராட்டத்தினை மக்களை அழிவில் இருந்து காக்க அல்ல..!

கருணா போன்ற துரோகிகளுக்கு இன்றும் ஆதரவளிக்கும் உங்களைப் போன்றோர் இந்த வேறுபாடுகளை சரியாக உள்வாங்கிக் கொள்வது அவசியம்..! அதற்காகவே இதனை இங்கு எழுதி இருக்கிறேன். :icon_idea:

Edited by nedukkalapoovan

அருணாவிற்கு கோபம் வந்தால் கொலை செய்யலாம் என்டால் நெல்லியடியில் 13 ஆமி செத்தவுட‌ன் கோபத்தில் சிங்களவன் 83ம் ஆண்டு இனப் படுகொலை செய்தது சரியா?

1956, 1958, 1977 ஆண்டுகளிலும் அதற்கு பின்னரும் இன்றும் படுகொலைகள் நடக்கின்றன. இவை எல்லாம் தொடரும் சிங்கள இன அழிப்பின் அங்கங்களே.

இன்னொரு ஆயுதப்போராட்த்திற்கு வழி சமைக்காது ஒரு நியாயமான அரசியல் தீர்வை வென்றெடுக்கவேண்டும்.

முதலில் பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி மில்லரும்,நெல்லியடியும் எப்போதும் என் ஞாபகத்தில் இருக்கும்...நீங்கள் மட்டும் தான் தேசியவாதி என பீத்தினது போதும் "நண்பன்" பட விசயத்திலேயே உங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதே...நான் என்ன கருத்து எழுதினாலும் உங்களால் பதில் கருத்து எழுத முடியா விட்டால் உடனே கருணாவை இழுப்பது உங்கள் பழக்கம்...நான் வெளியில் தேசியவாதி மாதிரி எழுதிக் கொண்டு பின்னுக்கு வேறு விதமாக நடிப்பதில்லை.

நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்த 13 ஆமி செத்தவுடன் அதற்கு காரணமானவர்களை தேடி பிடித்து தான் ஆமி சுட்டியிருக்க வேண்டும் அது நியாயம் அதே நியாயத்தை அருணாவும்/கிட்டண்ணாவும் கடைப்பிடித்திருக்கலாம்...தங்களது தாக்குதலுக்கு யார் காரணமானவர்களோ அவர்களை தேடி பிடித்து பழி வாங்கியிருக்கலாம்...க.க படுகொலையில் பொது மக்கள் செத்தார்களா இல்லையா என்பது பற்றி உங்கள் தோழர் மருதங்கேணியிடம் கேளுங்கோ சொல்லுவார்...என்னுடைய கருத்து தேவையில்லாமல் கொலையை யார் செய்தாலும் அது என்னுடைய அப்பாவாக இருந்தாலும் அது பிழை,பிழை தான்.

அருணாவும்,கிட்டண்ணாவும் நாட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்கள் அதை நாம் அதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது அதற்காக அவர்கள் செய்த பிழையை நியாயப்படுத்தவும் முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி மில்லரும்,நெல்லியடியும் எப்போதும் என் ஞாபகத்தில் இருக்கும்...நீங்கள் மட்டும் தான் தேசியவாதி என பீத்தினது போதும் "நண்பன்" பட விசயத்திலேயே உங்கள் குட்டு வெளிப்பட்டு விட்டதே...நான் என்ன கருத்து எழுதினாலும் உங்களால் பதில் கருத்து எழுத முடியா விட்டால் உடனே கருணாவை இழுப்பது உங்கள் பழக்கம்...நான் வெளியில் தேசியவாதி மாதிரி எழுதிக் கொண்டு பின்னுக்கு வேறு விதமாக நடிப்பதில்லை.

அருணாவும்,கிட்டண்ணாவும் நாட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்கள் அதை நாம் அதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது அதற்காக அவர்கள் செய்த பிழையை நியாயப்படுத்தவும் முடியாது

அங்க ஒரு குட்டும் இல்ல கொட்டும் இல்ல. நீங்கள் கற்பனை பண்ணியது போல் நான் படத்தை தியேட்டரில் பார்க்கவில்லை. அந்த வகையில் நீங்கள் அநாவசியமாக அதை அங்கு எழுதியதை வேண்டும் என்று தான் புறக்கணித்தேன். மீண்டும் மீண்டும் வந்து அதை குறிப்பிட்டதால்.. உங்கள் கற்பனை தவறு என்று உணர்த்தி இருக்கிறேன். பின்பும்.. அதனை இன்னொரு தலைப்புக்குள் கொண்டு வந்து செருகி..குட்டு.. கிட்டு என்று நிற்கிறீர்கள். அது உங்கள் பிரச்சனை.

இப்போ விடயத்திற்கு வருவோம். நாம் போராட்டம் சம்பந்தப்பட்ட நியாயங்களை கதைப்பதால் நீங்கள் எங்களை தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களே தவிர.. நாம் ஒன்றும் தேசியவாதிகள் கிடையாது. எமது இனத்தின் அரசியல்.. சுதந்திர வாழ்வை நேசிப்பவர்கள். அவ்வளவும் தான்.

மேலும்.. கிட்டுவும் அருணாவும் தவறு செய்தவர்கள் என்பதனை நீங்கள் எந்த நீதி விசாரணை மூலம் கண்டறிந்து அவர்கள் செய்தது தவறுதான் என்று சொல்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா..??! அதேபோல்.. கந்தன் கருணை சம்பவத்தில் பலியான அனைவரும்.. விரல் சூப்பும்... குழந்தைகள் தான் என்பதை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் முன் வைக்கிறீர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள்.. எந்த வித துரோக.. மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடாதவர்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்து கொண்டு.. நீங்கள் கிட்டு மாமா மீதும் அருணா மீதும் குற்றம் சுமத்துகிறீர்கள்.

விடுதலைப்புலிகளே.. அருணா மீதான நடவடிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் சொல்லவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளால்.. விசாரிக்கப்பட்டு.. துரோகி என்று சொல்லி தூக்கி எறியப்பட்ட ஒருவனை.. நீங்கள் பகிரங்கமாக இங்கு ஆதரித்து நின்றதையே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதனை முதலில் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அப்புறம் விடயம் தெரிந்தால் மட்டும் கருத்தைச் சொல்லுங்கள். மருதங்கேணி வந்து பதில் சொல்லுவார் என்று அவரை இதற்குள் இழுத்து விடும் வேலைகள் வேண்டாம். அவருக்கு கருத்தெழுதனும் என்று தெரிந்தால்.. அவர் எழுதுவார். நீங்கள் சொல்லாமலேயே..! :):icon_idea:

ஒரு சிலருக்கு எதை எதனுடன் ஒப்பிடுவது என்று தெரியவில்லை!

கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா கிட்டு என்று எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. கிட்டுவிற்கு கால் போனதை அறிந்ததும் மாற்று இயக்கங்களில் சந்தேகமானவர்களை புலிகள் அமைப்பினர் கைது செய்து கந்தன் கருணை முகாமில் அடைத்து வைத்தனர் அப்பொழுது அங்கு வந்த அருணாவே காவலில் நின்றிருந்த ஒரு போராளியின் துப்பாக்கியை பறித்து அனைவரையும் சுட்டுக்கொன்றார். இச்சம்பவம் கிட்டுவிற்கே பின்னர்தான் தெரியும். அதற்கான தண்டனையாக அருணா இயக்கத்திலிருந்து விலத்திவைக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை கொடுக்கவேண்டும் என சிலர் பிரபாகரனிடம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் அருணா இந்திய படைகளால் கொல்லப்பட்டார்.

இதில் கிட்டுவின் பங்கு என்ன நிழலி

இதுவே உண்மை!

கிட்டுவின் கண்டிப்பு, கடுமை, நேர்மை சிலருக்கு பிட்டிக்காததால் அவர் மீது சேறு வீச ஒரு சிலர் உள்ளனர்!

ரதிக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும் .

விடுதலை போராட்டம் என்ற பெயரில் தாங்கள் எதுவும் செய்யலாம் என்ற மனநிலைக்கு புலிகளும் புலம்பெயர் புலிகளும் வந்ததால் தான் எங்கும் அழிந்தனர் .நீங்கள் யாரையா மற்றவனை போராடவேண்டாம் அல்லது மற்றவன் போராடும் விதம் பிழையென சொல்வதற்கு? உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார் ? கடைசி ராஜபக்சா என்றாலும் தேர்தலில் நின்று மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்தவன் .அவன் சிங்களவனை வழிநடத்துகின்றான் இலங்கைக்கே அவன் தான் ஜனாதிபதி .

ஒரு துவக்கை தூக்கிவிட்டு மற்றவன் வாயை மூடச்சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு ?

கவிதைக்கு நன்றி தப்பிலி .நான் ஒட்டு மொத்த துவக்கு தூக்கியவர்களின் மேல்தான் எப்போதும் விமர்சனம் வைக்கின்றேன் .இதில் நாங்கள் மாத்திரம் திறம் என்று சொல்ல எவனுக்கும் அருகதையில்லை .

புலம் பெயர்ந்து அண்டி பிழைப்பவன் எதுவும் சொல்வான் எதுவும் செய்வான்.அவனுக்கு தேவை தான் பிழைப்பு .

மேலே அன்பு என்பவர் இணைத்த இணைப்பு கூட புளோட்டில் இருந்த நேசன் இப்போ தமிழரங்கத்தில் எழுதுவதே.இன்றும் அவரை தொடர்ந்து எழுதும்படி ஊக்கிவித்தே வருகின்றோம் . புளொட்டின் ஊத்தைகளை எழுதவேண்டாம் என பலர் சொன்னபோதும் நடந்த அநியாயங்கள் அனைத்து மக்களும் அறிய வேண்டுமென்று அவரை தொடர்ந்து ஊக்கபடுத்தியே வருகின்றோம்

நீங்களும் துவக்குத் தூக்கிய ஆள்தானே? அன்று தூக்கியபோது அது சரி என்றீர்கள்..! இன்று சரி இல்லை என்கிறீர்கள்..! நிச்சயத்தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற உங்கள் பேச்சுக்கள் எடுபடுமா? :rolleyes:

நாளைக்கு துவக்குத் தூக்கியது சரிதான் என்று வாதாட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? :rolleyes:

நாசமாய் போக. :icon_mrgreen: இதை தானே நாங்களும் உங்களை கேட்கிறோம். புளட்டில் (ஆயுதம் தூக்கியவர்கள்) எப்படி புலிகள் பிழை, புலம் பெயர்ந்தவர்கள் பிழை என விமர்சிக்க முடியும். யார் அந்த உரிமையை உங்களுக்கு தந்தது?. அப்படியே நீங்களே உரிமையை எடுப்பதானால் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்தவைகளை பட்டியலிடுங்கள்.நாங்கள் அதாவது பொதுமக்கள் நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை பட்டியலிடுகிறோம்.

உங்களின் கோட்டை என்று மார்தட்டிய வவுனியாவில் கூட உங்களால் வெற்றி பெற முடியவில்லை.உங்களில் மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு.அந்தளவுக்கு மக்களை வதைத்துள்ளீர்கள். இதனை மூடி மறைக்க புலிகளை விமர்சனம் செய்கிறோம் என்று தயவு செய்து உங்களை போன்றவர்கள் முயற்சிக்காதீர்கள்.

இன்னுமா இந்த திரி போய்க்கொண்டு இருக்கு,,,,,,,,,,,,,,!! பேஷ் பேஷ்....

"என் கடன் பணி செய்து கிடப்பதே"

..அப்படியே ரதிக்கு ஒரு பச்சையும்.............

நீங்களும் துவக்குத் தூக்கிய ஆள்தானே? அன்று தூக்கியபோது அது சரி என்றீர்கள்..! இன்று சரி இல்லை என்கிறீர்கள்..! நிச்சயத்தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற உங்கள் பேச்சுக்கள் எடுபடுமா? :rolleyes:

நாளைக்கு துவக்குத் தூக்கியது சரிதான் என்று வாதாட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? :rolleyes:

துவக்கு தூக்கியது பிழை என யார் சொன்னது ? எதிரியை நோக்கி நீட்ட வேண்டிய துப்பாக்கி எம்மை நோக்கி நீண்டதைத் தான் பிழை என்கின்றோம் .(இயக்கங்களுக்கிடையிலும் இயக்கங்களுக்குள்ளேயும் ).

இன்றும் நான் நம்புகின்றேன் எமக்கிடையில் பிரிவு வந்திருக்காவிட்டால் கடைசி வரையும் சிங்களவன் வென்றிருக்க மாட்டான் .

முகிலின் (முகில் வண்ணன்) குடும்பம் திருமலை பிரதான வீதியில் வசித்து வந்தார்கள். அப்பா சவுண்ட் சிஸ்டம் வாடகைக்கு விடுபவர். வறிய‌வர்கள். நிறையப் பிள்ளைகள். முகில் மூத்தவன். ஒரு நாள் இரவு சிங்கள ஊர்காவல் படை அவர்கள் கதவை தட்ட முகிலின் அப்பா திறக்க அவர்கள் அவரை ஷொட்கண்ணால் அதே இடத்திலேயே சுட்டுக் கொல்லுகிறார்கள்.

நகுலனின் அப்பா அரசாங்க உத்தியோகத்தர். நகுலன் மிகவும் மென்மையானவன். முகிலும் நகுலனும் திருமலையில் இரத்த ஆறு ஓடும்போது டெலோவில் இணைகிறார்கள்.

ஒருநாள் முகில் என் அப்பாவிடம் வந்து, "நாங்கள் என்னவோ நினைத்துக் கொண்டு இங்கு ( யாழ்) வந்தோம். டெலோ ஒரு கொள்ளைக் கோஷ்டி. என் கடைசித் தங்கையும் சாமத்தியப் பட்டு விட்டாள். நாங்கள் டெலோவை விட்டு விலகப் போகிறோம். திருமலையில் நிலமை எப்படி ?" என்று அழுதான்.

இது நடந்து ஒருமாதம் ஆகியிருக்கும். திண்ணைவேலிச் சந்தை சையிக்கிள் பார்க்கில் நின்ற இருவரை உயிருடன் எரிப்பதில் இருந்த ஆரம்பிக்கின்றது டெலோ மீதான தாக்குதல்.

உயிருடன் எரிந்தது முகிலும் , நகுலனும்.

டெலோவின் தலமை அறிவுபூர்வமானதும் இல்லை; சிந்திக்கிற வல்லமையும் இல்லை; ஊர் காடைச் சண்டித்தனம் தான் அவர்களின் வழி; அழிந்த்தது ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தான். :(

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கு சொந்தர‌க்கார‌ர் கூட‌ப் போல் இருக்கிறது நிறைய உறவுகளை பல் வேறு நேரங்களில் இழந்திருக்கிறார்...கந்தன் கருணை படுகொலையை தூக்கி பிடிக்க கூடாது என்டால் ஏன் நீங்கள் மட்டும் ரெலோ,புளோட் செய்ததை தூக்கி பிடித்து இப்பவும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறீங்கள்? ஏதோ அந்த நேர‌த்தில அவர்களது தலைமையின்ட‌ பிழையால் ஏதோ தவறு செய்து விட்டார்கள் என மன்னிக்கலாம் தானே?...இங்கு மற்ற இயக்கங்கள் செய்தது சரியா/பிழையா என விவாதிக்கவில்லை நாங்கள் நேசிப்பவர்கள் செய்தது சரியா/பிழையா என்று தான் விவாதிக்கிறோம்

அருணாவிற்கு கோபம் வந்தால் கொலை செய்யலாம் என்டால் நெல்லியடியில் 13 ஆமி செத்தவுட‌ன் கோபத்தில் சிங்களவன் 83ம் ஆண்டு இனப் படுகொலை செய்தது சரியா?

தமிழ் ஈழ கனவோடு எவன் விழுந்திருந்தாலும் அவனது கல்லறைகளில் எமது தலைகள் தானாகவே குனியும். எனது பெயரிலேயே எனது ஊர்தான் உள்ளது இந்த ஊரை அறிந்தவர்களுக்கு தெரியும் எமது தொடக்க காலம் எது என்றும் நாம் எந்த இயக்கத்தை சார்ந்து இருந்தோம் என்றும்.

முடிந்தவைகளை வைத்து புராணம் எழுதி ஆவதற்கு ஏதும் இல்லை............. முடிந்து போனைவைகள் அனுபவமாக மட்டுமே இருக்கும்.

பின்பு பேய்களோடும் பிசாசுகளோடும் சேர்ந்து தமிழரை அழித்த புல்லுருவிகளை ஆதரிப்பதென்றால் எமக்கு புத்தியில் ஏதும் குறை இருக்க வேண்டும் முன்னோர் செய்த புண்ணியம் இன்னும் அப்படி எது இல்லை.

பின்னாளில் தமிழுக்கு காவல் காக்க புலிகளே இருந்தார்கள் கொண்ட இலட்சியத்தில் மற்றம் இன்றி அவர்களே பயணித்தார்கள். தமிழனக்கு விடுதலை என்றால் அது புலிகளால் மட்டுமே என்பது நிதர்சனமாக இருந்தபோது. இல்லை உலகம் தட்டை என்று அடம் பிடிக்க எனக்கு தெரிந்திருக்கவில்லை.

எங்கே உங்களுக்கு பிடித்தவர் எனக்கு பிடித்தவர் என்று யாரும் இல்லை...... ஊருக்கு உழைத்தவர் ஊரை கெடுத்தவர் என்பதுதான் உண்டு. அதை ஊரில் இருந்து நேரிலே பார்த்த எமக்கு மற்றவர்கள் சொல்லி தெரிய ஏதும் இல்லை என்பது என்னுடைய தாழ்ந்த கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புக்கள், அழிவுகள், இரத்த வெள்ளங்கள்!

இவற்றில் எதுவுமே எம்மை, இதுவரை மாற்றிவிடவில்லை என்பதையே இந்த வாதங்கள் காட்டுகின்றன!

நான், எனது, என்ற ஆணவமே அனைத்துப் பதிவுகளிலும் எதிரொலிக்கின்றது!

புலிகள் தவறு செய்யவில்லை என்று ஒரு சாரார் வாதிக்க, மற்ற இயக்கங்கள் தவறு செய்யவில்லை என்று இன்னொரு சாரார் வாதிக்க, எங்கள் ஆணவம் வெளிப்படுகின்றதே தவிர, உண்மை தெளிவாக என்றுமே வெளிவரப் போவதில்லை! சாட்சிகளும் உயிருடன் இல்லை!

இவற்றை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, நடந்துபோனது 'சரித்திரம்' என மறந்துவிட்டு, இந்தச்சண்டைகளால் ;மத்தளமாகிப்' போய்விட்ட எம் உறவுகளுக்காக, எம்மால் முடிந்தால் ஏதாவது செய்வோம்!

இந்தக்களம் ஒரு கருத்துக்களம் என்பதை, நான் மறுக்கவில்லை!

உங்கள் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தையும் மறுக்கவில்லை!

ஆனால்.இந்த நதிமூலத்தையும், ரிஷி மூலத்தையும் தேடிக்கண்டு பிடிப்பதால், எதனை அடைந்துவிட நினைக்கின்றோமேன்று எனக்குப் புரியவில்லை!

எனது எண்ணம் தவறெனில், மன்னிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு தூக்கியது பிழை என யார் சொன்னது ? எதிரியை நோக்கி நீட்ட வேண்டிய துப்பாக்கி எம்மை நோக்கி நீண்டதைத் தான் பிழை என்கின்றோம் .(இயக்கங்களுக்கிடையிலும் இயக்கங்களுக்குள்ளேயும் ).

இன்றும் நான் நம்புகின்றேன் எமக்கிடையில் பிரிவு வந்திருக்காவிட்டால் கடைசி வரையும் சிங்களவன் வென்றிருக்க மாட்டான் .

இன்றும் நான் நம்புகின்றேன்

தங்களை இரந்து கேட்கின்றேன்.

எங்களைக்காட்டிக்கொடுக்காமல்

எதிரிக்கு துணைபோகாமல்

வெளிநாடுகளுக்கு எம்மைப்பற்றி தூற்றாமல்

ஒதுங்கியிருப்பீர்களானால்....

நாம் புலிகளுடன் சேர்ந்து வென்றிருப்போம்

இன்றும் வெல்லுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு தூக்கியது பிழை என யார் சொன்னது ? எதிரியை நோக்கி நீட்ட வேண்டிய துப்பாக்கி எம்மை நோக்கி நீண்டதைத் தான் பிழை என்கின்றோம் .(இயக்கங்களுக்கிடையிலும் இயக்கங்களுக்குள்ளேயும் ).

இன்றும் நான் நம்புகின்றேன் எமக்கிடையில் பிரிவு வந்திருக்காவிட்டால் கடைசி வரையும் சிங்களவன் வென்றிருக்க மாட்டான் .

எதிரியிலும் விட இழிவான வேலைகளை நீங்கள் செய்ய தொடங்கிய போதுதான் உங்களுக்கு எதிராக துப்பாக்கி திரும்பியது.

துப்பாக்கியை புலிகள் எதற்காக துக்கினார்களோ அதற்காகவே இறுதிவரை அதை சுமந்தார்கள்.

(இடையில் வந்கோரதித்திலே போய் புலியில சேர்ந்து தமது சொந்த புத்தியை சிலது காட்ட அந்த பலியை அவர்கள் சுமக்க நேரிட்டது)

தமிழ் மண்ணுக்கும் மாந்தருக்கும் வில்லங்கம் விளைவித்தவர்களை புலிகள் சுட்டு வீதிகளில் எறிந்தார்கள். அவர்கள் எந்த பெரிய அரக்காராக இருந்தாலும் தமது உயிரை துச்சம் என நினைத்து முகாமுக்குள் போகுந்தார்கள் துவம்சம் செய்தார்கள் தாயக மண்ணை மீட்டர்கள்.

ரதிக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும் .

விடுதலை போராட்டம் என்ற பெயரில் தாங்கள் எதுவும் செய்யலாம் என்ற மனநிலைக்கு புலிகளும் புலம்பெயர் புலிகளும் வந்ததால் தான் எங்கும் அழிந்தனர் .நீங்கள் யாரையா மற்றவனை போராடவேண்டாம் அல்லது மற்றவன் போராடும் விதம் பிழையென சொல்வதற்கு? உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார் ? கடைசி ராஜபக்சா என்றாலும் தேர்தலில் நின்று மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்தவன் .அவன் சிங்களவனை வழிநடத்துகின்றான் இலங்கைக்கே அவன் தான் ஜனாதிபதி .

ஒரு துவக்கை தூக்கிவிட்டு மற்றவன் வாயை மூடச்சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு ?

கவிதைக்கு நன்றி தப்பிலி .நான் ஒட்டு மொத்த துவக்கு தூக்கியவர்களின் மேல்தான் எப்போதும் விமர்சனம் வைக்கின்றேன் .இதில் நாங்கள் மாத்திரம் திறம் என்று சொல்ல எவனுக்கும் அருகதையில்லை .

புலம் பெயர்ந்து அண்டி பிழைப்பவன் எதுவும் சொல்வான் எதுவும் செய்வான்.அவனுக்கு தேவை தான் பிழைப்பு .

மேலே அன்பு என்பவர் இணைத்த இணைப்பு கூட புளோட்டில் இருந்த நேசன் இப்போ தமிழரங்கத்தில் எழுதுவதே.இன்றும் அவரை தொடர்ந்து எழுதும்படி ஊக்கிவித்தே வருகின்றோம் . புளொட்டின் ஊத்தைகளை எழுதவேண்டாம் என பலர் சொன்னபோதும் நடந்த அநியாயங்கள் அனைத்து மக்களும் அறிய வேண்டுமென்று அவரை தொடர்ந்து ஊக்கபடுத்தியே வருகின்றோம்

நன்றிசொல்லிதான் தீரவேண்டும்.

நீங்கள் அந்த பரம்பரைதானே................

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலை தொடர்பாக 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டி தமிழரங்கம் இணையத்திலிருந்து.

kanthankarunai.png

இதுவே ஒரு வந்கோரத்து அடிச்ச துண்டு.............

அதிலே 39 பேர்தான் இறந்து போனார்கள் ஆறுபேர் புளொட் அதில் இருவர் சுழிபுரம் படுகொலையில் பங்கு கொண்டவர்கள். மற்றவர்கள் ஈபி அதில் 21 பேர் மயிலிட்டியில் வைத்து படகு ஏறும்போது கைது செய்யபட்டவர்கள் அவர்கள் பட்பனாபவோடு நெருக்கமானவர்கள் என்று புலிகள் நம்பினார்கள் ஆனால் அநேகமானவர்கள் சும்மா அப்பாவிகள் பத்மநாபவையே பார்த்திராதவர்கள்.

இவர்களுக்கு ஓவரு ஆண்டும் ஈபி ஒரு துண்டு அடிக்கும் அதில் 39 தோழர்கள் என்று இருக்கும். இந்த வெங்காயம் இந்த 60 எங்கு எடுத்துதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ கனவோடு எவன் விழுந்திருந்தாலும் அவனது கல்லறைகளில் எமது தலைகள் தானாகவே குனியும். எனது பெயரிலேயே எனது ஊர்தான் உள்ளது இந்த ஊரை அறிந்தவர்களுக்கு தெரியும் எமது தொடக்க காலம் எது என்றும் நாம் எந்த இயக்கத்தை சார்ந்து இருந்தோம் என்றும்.

முடிந்தவைகளை வைத்து புராணம் எழுதி ஆவதற்கு ஏதும் இல்லை............. முடிந்து போனைவைகள் அனுபவமாக மட்டுமே இருக்கும்.

பின்பு பேய்களோடும் பிசாசுகளோடும் சேர்ந்து தமிழரை அழித்த புல்லுருவிகளை ஆதரிப்பதென்றால் எமக்கு புத்தியில் ஏதும் குறை இருக்க வேண்டும் முன்னோர் செய்த புண்ணியம் இன்னும் அப்படி எது இல்லை.

பின்னாளில் தமிழுக்கு காவல் காக்க புலிகளே இருந்தார்கள் கொண்ட இலட்சியத்தில் மற்றம் இன்றி அவர்களே பயணித்தார்கள். தமிழனக்கு விடுதலை என்றால் அது புலிகளால் மட்டுமே என்பது நிதர்சனமாக இருந்தபோது. இல்லை உலகம் தட்டை என்று அடம் பிடிக்க எனக்கு தெரிந்திருக்கவில்லை.

எங்கே உங்களுக்கு பிடித்தவர் எனக்கு பிடித்தவர் என்று யாரும் இல்லை...... ஊருக்கு உழைத்தவர் ஊரை கெடுத்தவர் என்பதுதான் உண்டு. அதை ஊரில் இருந்து நேரிலே பார்த்த எமக்கு மற்றவர்கள் சொல்லி தெரிய ஏதும் இல்லை என்பது என்னுடைய தாழ்ந்த கருத்தாகும்.

மருதங்கேணி எனக்கும் ஜீவன் அன்புவின் காலத்தில் இருந்தே உங்களின் பகுதியில் எப்படியான ஆதரவைகொண்டிருந்தார்கள் விடுதலை புலிகள் அமைப்புக்கு எப்படியான ஆதரவை அந்தபகுதி மக்கள் வழங்கினார்கள் என்பது நன்கு தெரியும்.

உங்களின் கருத்துக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

Edited by தமிழரசு

அமெரிக்கன் ஊரெல்லாம்.. புகுந்து.. போட்டுத் தான்.. அவன் வெல்லுறான்.. நாங்கள் போடுறது தான் குற்றமா.. என்ன அமெரிக்கன் தன்னைப் போடுறதில்ல.. அடுத்தவனை போடுறான்.. நாங்கள்.. எங்களைப் போட்டுத் தள்ளிக்க வேண்டிய துர்ப்பாக்கியமே தவிர.. போடுறது ஒன்றும் இந்த உலகிற்கு புதிதல்லவே..!

அமெரிக்காவிடம் ஆள் வலுவும் ஆயுதப் பலமும் உண்டு. நாங்கள் வெறும் சிறுபான்மை.

சனத்தொகையில் கிட்டத்தட்ட 8 வீதமாக இருந்த நாங்கள் 88 வீதமான பெரும்பான்மை இனத்துடன் போராடப் போனோம். எல்லோருடைய குறிக்கோளும் ஒன்றே. தீவகங்கள் உட்பட பருத்தித்துறையிலிருந்து பான்மை மட்டும் வாழும் தமிழர்களுக்கு ஒரு சுதந்திரமான தாயகம். ஒரு குறிக்கோளை அடைய ஏன் 32 இயக்கங்கள். அப்படித்தான் பல பிரிவுகள் இருந்தாலும், அவர்களுக்குள் ஏன் குத்து வெட்டு.

போராடப் போனவர்களின் தொகை குறைவு. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தவுடனேயே பலர் வெளிநாடுகளுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இருக்கிற கொஞ்சப் போராளிகளும் ஒருவரை ஒருவர் போட்டு ஆள் பலத்தைக் குறைத்துக்கொண்டால் எதிரியுடன் சண்டை பிடிப்பது யார்.

எங்கட பிள்ளை (போராட்டம்) பிழையான வழியில் போகுதென்றால், நாங்கள்தான் ஆரம்பித்திலேயே கண்டிக்க வேண்டும். அதையா நாங்கள் செய்தம். இயக்கங்களுக்குள் உள்ள குத்து வேட்டுக்கள் வெளிப்படையாகத் தெரிந்த பின்பும் ஏதொ 'புட்போல் மட்ச்' பார்க்கிற சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்ப பலனை அனுபவிக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.