ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142612 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை …
-
- 34 replies
- 3.4k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர். நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் அவர் அமெரிக்காவுக்கே அழத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந…
-
- 34 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர். அதன் பின்னர் 29.12.2018…
-
- 34 replies
- 5.4k views
-
-
இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2013 - 16:53 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/11/sambandanonindiachogm_131107_sambandanindiachogm_au_bb.mp3 'காமன்வெல்த் மாநாடு-- இந்தியா வந்தாலும் அது இலங்கையின் செயல்பாட்டை அங்கீகரிப்பதாகாது'- இரா.சம்பந்தன் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாக யாரும் கருத முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ…
-
- 34 replies
- 2k views
-
-
-
சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்…
-
- 34 replies
- 5.4k views
-
-
சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் - சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு By DIGITAL DESK 5 01 FEB, 2023 | 06:45 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும். அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும். ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கு மகாசங்கத்தினர் கட…
-
- 34 replies
- 2.7k views
- 1 follower
-
-
நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும் மலேசிய நிருபர் புதன்கிழமை, மார்ச் 24, 2010 மே 31 - ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த …
-
- 34 replies
- 2.6k views
-
-
எழுவைதீவில் இருந்து வந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று வலம்புரி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டது. கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலம்புரி - சங்குநாதத்தில் வெளிவந்த ஆலடி மாநாட்டில்; எழுவைதீவு முருகமூர்த்தி வித்தி யாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு மாற்றுகின்ற முயற்சியில் தீவகத்தில் உள்ள கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தமைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி, வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்த மேற்படி கத்தோலிக்க மதம் சார்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழு வலம்புரி அலு வலகத்தையும் வலம்புரி அலு வலக உத்தியோகத்தர்களையும் சாடும் நோக்குடன் உள் நுழைந்ததுடன், கத்தோலிக்க மதத்திற்க…
-
- 34 replies
- 2.9k views
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம் என இந்து சமய மதகுருமார் தெரிவித்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய இந்து சமய மதகுருமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்கள், யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அமைச்சரை போன்று வேறு எந்த தரப்பினரும் இதுவரை செய்ததும் இல்லை எதிர்காலத்தில் செய்யப் போவதும் இல்லை. இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந…
-
- 34 replies
- 3.6k views
-
-
வெளிநாட்டுப் பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடவுச் சீட்டுடையவர்கள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது. பாதுகாப்பு அமைச்சிடம் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. நாட்டில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலை காரணமாக இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடிய அவசியம் கிடையாது என பாதுகாப:பு அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடையவர்கள் வடக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு பொருட்கள் எடுத்துச் செல்வது தொடர்பில் நிலவி வந்…
-
- 34 replies
- 2k views
-
-
உலகின் ஏனைய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் கவனம் செலுத்துவதற்கு முன்பாக சொந்த நாட்டிலேயே நிகழும் அத்தகைய வன்முறைகள் குறித்து அக்கறை காட்டட்டும் என சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 34 replies
- 3.4k views
-
-
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள் 4 Views சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே காணலாம். https://www.ilakku.org/?p=39574
-
- 34 replies
- 3.9k views
-
-
சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்[Wednesday 2015-08-19 19:00] கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருகப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று மதியம் யாழ் ஊடக மையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - நடந்து முடிந்த தேர்லில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க…
-
- 33 replies
- 2k views
-
-
ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு! மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்…
-
- 33 replies
- 4.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து த…
-
- 33 replies
- 3.9k views
- 1 follower
-
-
-எஸ்.கே.பிரசாத் இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் வருகை தந்துள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன. http://tamil.dailymirror.lk/--main/78429-2013-08-11-08-58-26.html
-
- 33 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 33 replies
- 3.9k views
-
-
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்தார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்…
-
- 33 replies
- 7.9k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம். Madawala News 8 hrs ago கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம் ********************** தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை ச…
-
- 33 replies
- 2.2k views
-
-
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.புதுடெல்லியில் அமைந்துள்ள ராட்சரபதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நிலவி வரும் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110101/language/ta-IN/article.aspx
-
- 33 replies
- 1.8k views
-
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெ…
-
-
- 33 replies
- 1.9k views
-
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்! adminJanuary 28, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2025/210421/
-
-
- 33 replies
- 1.6k views
- 3 followers
-
-
13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவாலன ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமைய வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் இலங்கை தமிழர் விவகாரத்தில் காண்பித்து வரும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் பொருத்தமற்றது என்பதனை மோடி புரிந்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மாதிரியில் இலங்கையில் அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் வட மாகாணச…
-
- 33 replies
- 1.4k views
-
-
ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்…
-
-
- 33 replies
- 3k views
- 1 follower
-